விழுதுக்குள் வேர்

 

“டெய்லர் ப்ளவுஸ் தைச்சிருப்பான்…ஈவினிங் வரும் போது மறக்காம வாங்கிட்டு வந்திடுங்க!” டிபன் காரியரை நீட்டியபடியே சொன்னாள் சுசீலா.

“ஏண்டி இதையெல்லாம் என்கிட்ட சொல்றே!…ஆபீஸ் டென்ஷன்ல மறந்தாலும் மறந்துடுவேன்..” சலித்துக் கொண்டான் ஜெயபால்.

“அதெப்படி பொண்டாட்டி சொன்னது மட்டும் மறந்து போகுமா?..அப்ப யார் சொன்னா மறக்காது?” இடக்காய் கேள்வி கேட்டாள்.

“அய்யோ காலங் காத்தால எனக்கு இது தேவையா? சரி..வாங்கிட்டு வந்துடறேன்..ஆளை விடு!”

ஜெயபால் திரும்பி நடக்க, “டேய் கொஞ்சம் இருடா!” தாயின் குரல் கேட்டது.

நின்றான்.

தள்ளாட்டமாய் நடந்து வந்த அவனுடைய தாய், “டேய்..மூணு நாளா முதுகு வலி விட மாட்டேங்குதுடா..சாயந்திரம் வரும் போது ஒரு அயோடெக்ஸ் பாட்டில் வாங்கிட்டு வாடா!”

“ம்..ம்..” என்று சொல்லி விட்டு தன் பைக்கில் ஏறிப் பறந்தான்.

இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பினான் ஜெயபால்.

“ஹய்யா..அப்பா வந்தாச்சு” என்று கத்தியபடி வந்து கால்களைக் கட்டிக் கொண்ட ஆறு வயது மகன் பாபுவை, “ச்சூ..போடா அந்தப்பக்கம்” என விரட்டினான்.

ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு முடித்தவன் ஏதோவொரு புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கினான்.

“ப்ளவுஸ் வாங்கினீங்களா?” அருகில் வந்து சுசீலா மெல்லக் கேட்டாள்.

“ஓ…வாங்கிட்டு வந்திட்டேனே!” வேகமாய் ஒடிச் சென்று தன் பைக்கின் பாக்ஸிலிருந்து அதை எடுத்து வந்து கொடுத்தான்.

அப்போதுதான் சடாரென்று அம்மா கேட்ட அயோடெக்ஸ் ஞாபகம் வந்தது. “அடாடா..அம்மா கேட்ட அயோடெக்ஸ் மறந்திட்டேனே” தலையில் குட்டிக் கொண்டான்.

“அதுக்கென்ன பண்றது…மனுஷன் டென்ஷன்ல மறக்கறது சகஜம்தானே?… “மறந்துட்டேன்”ன்னு போய்ச் சொல்லுங்க!” சுசீலா ‘வெடுக்’கென்று சொன்னாள்.

“உஷ்…மெதுவாப் பேசுடி..அம்மா காதுல விழுந்திடப் போவுது!”

அப்போது அறை வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தான் ஜெயபால்.

பாபு நின்றிருந்தான். அவன் கையில் அயோடெக்ஸ் பாட்டில்.

“அட..ஏதுடா இது?” சுசீலா ஆச்சரியமாகக் கேட்க,

“நாந்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கற கடைல வாங்கினேன்…காலைல அப்பாகிட்ட நீ ப்ளவுஸ் வாங்கிட்டு வரச் சொன்னே…பாட்டி அயொடெக்ஸ் கேட்டாங்க!…அப்பவே எனக்குத் தெரியும்…அப்பா அயொடெக்ஸை மட்டும் மறந்திட்டு வந்திடுவாங்கன்னு…அதான் நான் சேர்த்து வெச்சிருந்த காசுல இதை வாங்கிட்டு வந்தேன்…அப்பா..இதை நீ வாங்கிட்டு வந்ததா சொல்லி பாட்டிகிட்டே குடுத்திடு…இல்லைன்னா பாட்டி ரொம்ப வருத்தப்படும்” என்றான் அந்த ஆறு வயது சிறுவன்.

உச்சந்தலை மயிரை யாரோ கொத்தாகப் பற்றி, முகத்தில் “பளார்..பளார்” என்று அறை விட்ட மாதிரி இருந்தது ஜெயபாலுக்கு. 

தொடர்புடைய சிறுகதைகள்
பஸ்ஸிலிருந்து கண்ணீருடன் இறங்கிய கண்ணன் பஸ் நகrந்ததும் 'ஹா..ஹா..” வென்று உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். 'டேய்... டேய்… என்னாச்சுடா உனக்கு? இப்பத்தான் பஸ்ல செல்போனை யாரோ அடிச்சிட்டதாச் சொல்லிக் கத்திக் களேபரம் பண்ணி… ஆர்ப்பாட்டம் பண்ணி அழுதே… இப்பக் கீழே ...
மேலும் கதையை படிக்க...
திரைப்படங்களில் கதாநாயகி மழையில் நனைந்தபடி ஓடிச் சென்று ஒரு குடிசையில் ஒதுங்குவதையம் குடிசைக்குள் அமர்ந்திருக்கும் கதாநாயகன் நனைந்த நிலையில் நிற்கும் அவளின் மேனியழகில் சொக்கிப் போய் காதல் வயப்பட்டு நெருங்கி வந்து அணைப்பதையும், அவளும் அவன் அணைப்பில் மயங்கிச் சாய்வதையும், பார்க்கும் ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவிடமிருந்து வந்த கடிதம் தாங்கி வந்த செய்தி என்னை விரட்டியடிக்க அடுத்த அரை மணி நேரத்தில் ரயில் ஏறினேன். ‘இப்பவும் உன் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையிலிருப்பதால் எவ்வளவு விரைவில் உன்னால் வர இயலுமோ அவ்வளவு விரைவில் வந்து உன் ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் ஆண்டாள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தேன். காய்கறிக்காரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் திரும்ப நினைத்தவன் எதேச்சையாக அந்தக் காய்கறிக்காரியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அசூசைப்பட்டேன். ‘ச்சை!…போயும் போயும் இவளிடமா காய் வாங்குகிறாள்?’ ‘ஆண்டாள்’ அழைத்தேன். ‘என்னங்க?….காபிதான் ...
மேலும் கதையை படிக்க...
'ஹூம்…வயசு அம்பத்தி நாலாச்சு….வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணுங்க ரெண்டு கல்யாணத்துக்கு நின்னுட்டிருக்குதுக… இந்தாளு என்னடான்னா இங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கான்... எல்லாம் காலக் கொடுமைப்பா” இது செக்சன் ஆபீசர் சீனிவாசன். 'அட... வேற ஆளா கெடைக்கலை… ஒரு ஜி.எம்… போயும் போயும் ஆபீஸைக் கூட்டிப் ...
மேலும் கதையை படிக்க...
போடா பைத்தியக்காரா…!
அது ஒரு வரம்
விதிக்குள் விதி
காய்கறிக்காரி
அந்தப் பெண்ணிடம் மட்டும்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)