மருமகள் – ஒரு பக்க கதை

 

பக்கத்தில் இருக்கிற ஸ்கூலுக்குப் போய் குழந்தை ஸ்வேதாவுக்கு சாப்பாட்டை ஊட்டி விட்டு வராம சாப்பாட்டை கொடுத்து அனுப்பி விடுகிறாள்.

அப்படி டி.வி. சீரியல் முக்கியமா என்ன? ஹாலில் உட்கார்ந்து டி.வி. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த மருமகள் அனிதாவை பார்த்து கோபம் வந்தது மாமியார் காமாட்சிக்கு.

அனிதா நீ விட்டில தான் இருக்கிறியா? குழந்தைக்கு லஞ்ச் எடுத்துட்டு போயிருப்பேன்னு நினைச்சேன். ஏம்மா போகல… தற்செயலாக வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டு சுமதி.

அனிதாவிடம் கேட்பது காமாட்சியின் காதுகளிலும் விழுந்தது.

ஏதோ நமக்கு பக்கத்துல ஸ்கூல் இருக்குதுன்னு நான் போய் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடலாம். ஆனா தூரத்திலயிருந்து வர்ற குழந்தைகளும், பெத்தவங்க ரெண்டு பேருமே வேலைக்கு போறவங்களோட குழந்தைகளும் அவகூடத்தானே சாப்பிடுதுங்க. அந்த குழந்தைக்கு நம்ம ஸ்வேதா குட்டியை பார்த்து ஏங்கிட கூடாதுன்னுதான் இப்போ நான் போறதில்லை..

சுமதியிடம் சொல்லிக்கொண்டிருந்த மருமகள் அனிதாவின் நல்ல மனதை புரிந்து கொண்டவளாய் காமாட்சி நெகிழ்ந்தாள்.

- கீர்த்தி (ஜூன் 2011)
 

தொடர்புடைய சிறுகதைகள்
வார்த்தைகள் என்னை மொய்த்தபடியிருந்தன. கூர்மையாய், மொன்னையாய், தட்டையாய், குறுகலாய், நெட்டையாய், தடிமனாய் பல வடிவங்களில் பல்வேறு திசைகளிலிருந்து தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தன. கணவரிடமிருந்தும், பிள்ளைகளிடமிருந்தும், கடைக்காரனிடம் பேரம் பேசும் போதும் வெளிப்பட்ட வார்த்தைகள், தொலைக்காட்சி நாடகத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தெருவில் மீன் விற்றுக் ...
மேலும் கதையை படிக்க...
சரியான பாதை!
""பானு... அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?'' மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு கேட்டான் சிவா. ரிமோட்டை அமுக்கி, "டிவி'யை ஊமையாக்கி, இவன் புறமாய் திரும்பினாள் பானு... ""அனுப்பிடுங்க... ஆனா, இன்னொரு ஆள் கிடைக்கற வரை, நிச்சயமா ...
மேலும் கதையை படிக்க...
மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள். பந்து ஆகாயத்தை நோக்கி அடிக்கப்பட்டது! மாரிமுத்து டீ ஆத்துவதை கூட நிறுத்திவிட்டு, டீக்கடை டிவி- யில் மூச்சடைத்துப் பார்க்க பந்து பவுண்டரிக்கு அருகில் இறங்கி, அங்கு நின்றிருந்த அவனது ...
மேலும் கதையை படிக்க...
மருத்துவமனைக் கட்டிலில் கிழிந்த துணிபோல் கிடக்கும் நண்பன் குருவைப் பார்க்க பார்க்க வெற்றிவேலுக்கு சங்கடமாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த குருவின் அம்மா எந்த உணர்ச்சியுமில்லாமல் மகனையே வெறித்துக் கொண்டிருந்தாள். அழுது அழுது அவள் கண்கள் வெளுத்துப் போயிருந்தன. குரு எப்படி துறு துறுவென ...
மேலும் கதையை படிக்க...
'அப்பா… எந்த விசேஷத்தைச் சொன்னாலும் அதை ஞாயிற்றுக்கிழமை வச்சிக்கலாம்ன்னு சொல்றீங்க…இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்பப்பா விடப் போறீங்க…?’ கோபத்தோடு செல்வி கேட்க… “என்னம்மா பண்றது… என் உத்தியோகம் அப்படி. லீவே கிடைக்கிறதில்லை. இன்னும் இரண்டு வருஷம் பொறு. ரிடையர் ஆயிடறேன். அதுக்குமேல நீங்க எந்தக் கிழமைல ...
மேலும் கதையை படிக்க...
வார்த்தைகள்
சரியான பாதை!
கேட்ச் – ஒரு பக்க கதை
இறுதி ஊர்வலம்
கிழமை – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)