எது உன்னுதோ அது என்னுது! – ஒரு பக்க கதை

 

“அன்புள்ள சுதா, நலம். நீ நலமா? நேற்று உன் கணவரை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தேன். யாரோ ஒரு பெண்ணுடன் உரசிக் கொண்டு போனார். விசாரித்து வை’. உன் தோழி ரமா.

அன்புள்ள ரமா, நீ குறிப்பிட்ட பெண் யாரோ அல்ல. என் தங்கைதான். எனக்கு உடல்நலம் சரியில்லாததால் அனுப்பி வைத்தேன். நீ என் திருமணத்திற்கு வராததால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உன் தோழி சுதா.

அன்புள்ள சுதா, நலம், நேற்று உன் கணவரை உங்கள் வீட்டு வேலைக்காரியுடன் தியேட்டரில் பார்த்தேன். உஷார். உன் தோழி ரமா.

அன்புள்ள ரமா, அந்த வேலைக்காரி என் கணவரை குழந்தையிலிருந்து எடுத்து வளர்த்தவள். வயது வித்தியாசம் கூட உனக்கு தெரியவில்லையா? உன் தோழி சுதா.

அன்புள்ள சுதா, உன் கணவரை ஒரு பெண்ணுடன் புடவைக் கடையில் பார்த்தேன். என்ன உரசல், என்ன இளிப்பு! அப்பாவியாக இருக்காதே!
உன் தோழி ரமா.

அன்புள்ள ரமா, உன் கடிதங்களை கணவரிடம் காண்பித்தேன். அவர் உனக்காக பச்சாதாபப்பட்டார். என்னைப் பெண் பார்க்க வருமுன் உன்னைத்தான் பெண் பார்த்தாராம்.

அவர் உன்னை நிராகரித்ததன் காரணம் இப்போது புரிந்ததா? வேண்டாம் விபரீத விளையாட்டு! உன் தோழி சுதா.

- எல்.மகாதேவன் (ஜனவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
வெளிச்சம் வருவதற்கு முன்னே உள்ளுள் ஓர் அழைப்பு மணி எழுப்பி விட்டது.. உள் செயல் பாட்டை கட்டு படுத்த முடியுமா? அது நம்மையும் மீறியல்லவா பயணம் செய்து கொண்டிருக்கிறது... ஏதோ ஒரு துள்ளல், ஒரு தவிப்பு... சிறு வெளிச்சம் வந்தால்கூட போதும்.. ...
மேலும் கதையை படிக்க...
இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலையில் அந்த வீதியில் ஒவ்வொரு வீடாக ஏறி கதவு மணியை அந்தச் சிறுமி அடித்தாள். அதே வீதியில் வசிக்கும் அவளுக்கு வயது 12 - 13 தான் இருக்கும். முகம் நிறைய ...
மேலும் கதையை படிக்க...
'ராத்தோவ்' பாடசாலையிலிருந்து உற்சாகமாய் கூவிக்கொண்டே ஓடிவருகிறாள் ப்ராவ்தா. அவள் வந்த வேகத்தில் பாடசாலைப் புத்தகப்பை குசினிக்குள் கிடந்த பழைய மேசையிலும் காலில் அணிந்திருந்த வெள்ளைச் சப்பாத்துக்கள் கதவு மூலையிலும் வீசியெறியப்பட்டன. 'டே! என்ன பொட்ட இப்பிடி ஓடி வாறா? இன்னும் ஒனக்குச் சின்னப் பொட்டையண்ட ...
மேலும் கதையை படிக்க...
அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் இருந்து இளஞ்சோடிகள் காதல்லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்தக் குழுகுழுப்பிலோ, மகிழ்வலைகளிலோ என் மனம் குதூகலிக்க மறுத்தது. இந்து என் ...
மேலும் கதையை படிக்க...
"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத ...
மேலும் கதையை படிக்க...
கானல் சுவர்
குற்றம் கழிக்கவேண்டும்
சுற்றுலா….!
சங்கிலித் துண்டங்கள்
மரி என்கிற ஆட்டுக்குட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)