தப்பிக்க முடியாது…! – ஒரு பக்க கதை

 

சிவா கையில் லைசென்ஸும் இல்லை, ஹெல்மெட்டும் கொண்டு வரவில்லை. தூரத்தில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்தபடி இருந்தனர். பயம் உடலெங்கும் பற்றிக் கொண்டது.

டிராஃபிக் சார்ஜண்ட் ஒருவர் ரோட்டுக்கு முன்னேறி வந்து, சிவாவின் வண்டியை ஓரம் கட்டச் சொன்னார்.

எங்கிருந்து வர்றே.?

சார், குழந்தைக்கு உடம்பு சரியில்லை…

லைசன்ஸ் எங்கெ?

மருந்து வாங்க வந்த அவசரத்துல மறந்துட்டேன் சார்!

உண்மைதானே?

சத்யம் சார்..!

அவரிடமிருந்து விலகி, ‘அப்பாடா, எந்தஃப் பிரச்னையும் இல்லாம தப்பிச்சோம் என்ற நிம்மதிப் பெருமூச்சோடு நகரின் பிரபல செல்போன் கடையின் முன் வண்டியை நிறுத்தி, பின் பக்கமாய் போய் சுவரில் ஓட்டைப் போடத் துவங்கினான்.

செல்போன் கடைகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்க…கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் செல்போன் கடைக்கு உள்ளே காத்திருந்தனர்.

- ச.குணசேகரன் (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
பியர் கிண்ணத்தை மேசை மேல் வைத்தபடி திரும்பினான் ராம்குமார். அவனெதிரே அமர்ந்திருந்த அந்த மனிதரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. இந்த க்ளப்பில் இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லையே என்று புருவத்தை நெறித்தபோது அவர் புன்னகைத்தார். "ஐயாம் டாக்டர் மாயகிருஷ்ணன்.சைக்யாட்ரிஸ்ட்"என்றார்.கைகளை நீட்டினார்.அதைக் கேட்டதும் ...
மேலும் கதையை படிக்க...
இராணுவத்தில் மன நல மருத்துவராக பணி புரிந்து சலித்துப்போய் வெளி உலக மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய விரும்பி விருப்ப ஓய்வு பெற்று வெளி வந்த டாக்டர் கணேசுக்கு அரசாங்கத்தால் ஒரு இடம் சகாய விலைக்கு கிடைக்கப்பெற்று மருத்துவமனையை கட்டினார். இருந்தாலும் ...
மேலும் கதையை படிக்க...
மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாய் போய்க் கொண்டிருந்தான் விமல். வழியில் குழித்துறை ஸ்டாப்பில் பஸ்ஸுக்கு காத்துநின்ற ஒருவன் லிஃப்ட் கேட்டு வழி மறித்தான். விமலின் கால்கள் பிரேக்கை தொடாமலேயே அவனைக் கடந்து போனது. வீட்டில் வந்ததும் தனது மனைவியிடம் ...
மேலும் கதையை படிக்க...
”ஏய்யா சந்துரு…பத்து நாளைக்கு பெங்களூரு போயிட்டு வராலாமுன்னு நினைக்கிறேன்.” அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஜெராக்ஸ், பிரவுஸிங் சென்டர் என்று தொடங்கி, யாருடைய தலையீடும், எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பவர் அப்பா. ஓய்வு என்ற வார்த்தைக்கே ஓய்வு கொடுக்கணுமின்னு சொல்பவர் அப்பா. அவரா ஓய்வு ...
மேலும் கதையை படிக்க...
அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டது ஜெகனை உறுத்திற்று. மணியைப் பார்த்தான். பதினொன்று ஆகி இருந்தது . வீட்டில் ராதா வேலகைளை முடித்து விட்டு ஓய்வாகத்தான் இருப்பாள். போன் செய்து ‘சாரி டியர்’ என்று சொல்லி ...
மேலும் கதையை படிக்க...
கார் க்ரைம்
மறந்தவனின் திட்டம்
லிஃப்ட்! – ஒரு பக்க கதை
அப்பா – ஒரு பக்க கதை
எங்கே போனாள் ராதா..! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)