மனம் தூய்மையானால் உலகமே தூய்மைதான்!

 

இந்த உலகம் நன்மையானதா, தீமையானதா?’

- தருமர், துரியோதனன் ஆகிய இருவருக்கும் எழுந்த சந்தேகம் இது! தங்கள் சந்தேகத்துக்கு தீர்வு தேடி இருவரும் கிருஷ்ணரை சந்திக்கப் புறப்பட்டனர்.

மனம் தூய்மையானால்இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்ட கிருஷ்ணருக்கு மகிழ்ச்சி. உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தார்.

தங்களது சந்தேகம் குறித்து கிருஷ்ணரிடம் தெரிவித்தனர். உடனே, ”ஆஹா… இருவரது சிந்தனையும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி! உங்கள் கேள்விக்கான பதிலை நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் உங்களுக்கு ஒரு சோதனை!” என்றார் கிருஷ்ணர்.

இருவரும், ‘என்ன அது?’ என்பது போல், பகவானை ஆர்வத்துடன் கவனித்தனர்.

முதலில் தருமரிடம், ”தருமா! இந்த பரந்த உலகில் தீயவன் ஒருவனையும், நல்லவன் ஒருவனையும் அழைத்து வா!” என்றார் பகவான்.

”ஆகட்டும் கிருஷ்ணா!” என்ற தருமர் அங்கிருந்து புறப்பட்டார். அடுத்து, துரியோதனனிடமும் அதே விஷயத்தைக் கூறி அனுப்பி வைத்தார் பரந்தாமன்.

சில நாட்கள் கழித்து இருவர் மட்டும் தனித்துத் திரும்பி வந்தனர். அவர்களிடம் கிருஷ்ணர் கேட்டார்: ”என்னாயிற்று… நான் குறிப்பிட்ட நபர்களை அழைத்து வரவில்லையா?”

உடனே துரியோதனன், ”கிருஷ்ணா, பல நாட்கள் தேடிப் பார்த்தும் ஒரு நல்லவர்கூட அகப்படவில்லை. உலகில் எல்லோரும் தீயவரே! எனவே, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தீயவராகக் கருதி அழைத்து வர விரும்பவில்லை!” என்றான்.

ஆச்சரியத்துடன் புருவம் நெறித்த கிருஷ்ணர், தருமரிடம் ”உனக்குக் கூடவா நல்லவர் அகப்படவில்லை?” என்று கேட்டார்.

”நான் தேடிய வகையில் உலகில் தீயவர் என்று எவருமே இல்லை. எனவே, தீயவர் ஒருவரை அழைத்து வர இயலவில்லை. தவிர, எல்லோருமே நல்லவர்கள் எனும்போது, குறிப்பிட்ட ஒருவரை மட்டும் எப்படி அழைத்து வருவது? எனவே அதுவும் இயலவில்லை!” என்றான்.

இருவரும் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணர், ”இந்த உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி, தன் முன் எந்த உருவம் இருக்கிறதோ, அதை அப்படியே பிரதிபலிக்கும். இந்த உலகமும் அப்படியே… நல்ல மனம் கொண்டவனுக்கு நன்மையானதாகவும், தீய மனம் படைத்தவனுக்கு தீமைகள் நிறைந்ததாகவும் தோன்றும். நமது மனதை எந்த அளவுக்கு, தூய்மையாக- செம்மைப்படுத்தி வைத்திருக்கிறோமோ… அந்த அளவுக்கு, இந்த உலகமும் தூய்மையானதாக இருக்கும். எனவே, மனதை செம்மைப்படுத்துங்கள்!” என்று கூறி முடித்தார் கீதையின் நாயகன்.

- ஆர்.ஆர். பூபதி, கன்னிவாடி (ஆகஸ்ட் 2008) 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திர மஹிமை’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) குடிலுக்கு வெளியே மழை முற்றிலுமாக நின்றிருந்தது. அந்த வயதான பெண்மணி தன் கைப்பையில் இருந்து தோசை போன்ற பெரிய மொபைலை எடுத்து குதிரை வண்டிக்காரனை வரச்சொல்லி போன் செய்தாள். “அவன் ...
மேலும் கதையை படிக்க...
கெளசிக கோத்திரம் வந்த கதை!
இந்திரனுக்கு சமமான புத்திரன் ஒருவன் தனக்குப் பிறக்க வேண் டும்' என்பதற்காக தவம் இருந்தான் சாம்பன் என்ற மன்னன். சாம்பனின் தவ வலிமையைக் கண்டு இந்திரனே அவன் முன் தோன்றி, ''நானே உனக்கு மகனாகப் பிறப்பேன்'' என்று கூறினான். அதன்படி சாம்பனின் மனைவிக்கு, ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர். “அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினாதொடுத்தார் சிவபெருமான். “மக்கள் மனநிறைவுடன் வாழ்வதே இக்காலத்தில் புதுமைதானே தந்தையே.” “கார்த்திகேயா, எங்கே உமது வாகனம்?” ஐயமுடன் வினவினார் விநாயகர். “அதையேன் கேட்கிறீர்கள் தமையனே, ஜூரோங் ...
மேலும் கதையை படிக்க...
அண்ணி, என் மகள் கிரேனாப்புக்கு என்ன குறைச்சல்? பி.ஏ. பட்டதாரி. ஒத்தைக்கு ஒரு மகள். அவள் சின்ன வயதில் நீங்க உங்கள் அண்ணன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கிளி மாதிரி இருக்கிற எங்கள் அண்ணன் மகள் கிரேனாப்பு தான் என் மகன் ...
மேலும் கதையை படிக்க...
ஹொய்சள தேசத்தில் திருமண் அணிபவர்கள் யாருமில்லை என்பதால், அப்போது ஸ்ரீராமானுஜருக்கு அது ஒரு பெரும் பிரச்னையாகிவிட்டது. தேசத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் திருமண் வேண்டும், அதுவும் தினமும் வேண்டும். என்ன செய்யலாம்? ஸ்ரீராமானுஜர் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்தார்... அன்றிரவு அவருக்கு ஓர் கனவு ...
மேலும் கதையை படிக்க...
கதை வடிவில் உபதேசிப்பது புராண சம்பிரதாயம். இந்த வழிமுறையில் ஞானம் சுவைபட அளிக்கப்படுகிறது. இதயத்தில் பதிந்து போகிறது. வாழ்க்கையைத் தன்மயமாக்குகிறது. 'ஜென்ம சாபல்யம்' கிடைக்கிறது. ஒவ்வொரு புராணக் கதையிலும் செய்திகளும் குறிப்புகளும் சேர்ந்து கதாபாத்திரங்களாக நம்மோடு உரையாடுகின்றன; நிகழ்ச்சிகளாக நம்மைச் சுத்தப்படுத்துகின்றன. இக்கதைகள் எல்லாம், ...
மேலும் கதையை படிக்க...
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே... எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். ‘‘கேளுங்கள் மன்னா!’’ ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர். ‘‘தாங்கள் நல்லதோர் ...
மேலும் கதையை படிக்க...
கைலாயத்தில் சந்தோஷமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும் பரமசிவத்தின் வாயில் ஒரு புன்முறுவல் தெரிந்ததைப் பார்த்தாள் பார்வதி. ’என்னிடத்தில் சொல்லாமல் என்ன காரணத்திற்க்காக இவர் புன்முறுவல் செய்கிறார்.என்னிடமும் சொல்லக்கூடாதா. என்னிடம் சொன்னால் நானும் சந்தோஷப் படுவேனே’ என்று நினைத்து தன் ...
மேலும் கதையை படிக்க...
சாதுவாக மாறிய ராட்சசன்
புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள். ஓர் ஆசாமியைக் கொன்றதும் எண்ணிக் கைக்காக, அவரது விரலை வெட்டிக் கழுத்து மாலையில் கோத்துக் கொள்வான். அப்படி, 999 விரல்கள் அவனது ...
மேலும் கதையை படிக்க...
பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், "யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?" என்று கோபமாகக் கேட்டான். மலாக்கி ஒரு திராட்சைத் தோட்டக் காரன். ...
மேலும் கதையை படிக்க...
காயத்ரி அஷரங்கள்
கெளசிக கோத்திரம் வந்த கதை!
பூலோக சொர்க்கம்
முறை மாப்பிள்ளை
திருமண்
தெரிந்த கதையில் பொதிந்த ரகசியம் – பக்தியின் வடிவம் துருவன்
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
பரமனை சோதித்த பார்வதி
சாதுவாக மாறிய ராட்சசன்
குணமாக்கும் அன்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)