கேளிக்கைகளில் குருநாதர் கலந்து கொள்ளலாமா?

 

சீடனுக்கு வந்த சந்தேகம்

பேரரசர் புஷ்யமித்திரரது திக்விஜயம் பெரும் வெற்றியில் முடிவடைந்ததையட்டி, தலைநகர் விழாக் கோலம் கொண்டது. நகரெங்கும் மாவிலைத் தோரணங்கள்… வாழைப் பந்தல்கள்… வண்ண அலங்காரங்கள் என கோலாகலமாகக் காட்சியளித்தது. குறுநில மன்னர்கள், மாமுனிவர்கள், கலைஞர்கள் மற்றும் சாஸ்திர மேதைகள் பலரும் தலைநகரில் குழுமி இருந்தனர்.

கேளிக்கைகளில்வெற்றி விழாவுக்கு மகரிஷி பதஞ்சலியையும் அழைத்திருந்தார் புஷ்யமித்திரர். பதஞ்சலியின் தலைமையில் வெகு சிறப்பாக யாகம் நடைபெற்றது.

விழாவின் முத்தாய்ப்பாகக் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அழகிகளும் நடன மங்கையரும் பங்கு கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் மனக் கிளர்ச்சியை தூண்டுவன. புலனடக்கத் துடன் வாழும் முனிவர்களும் மகரிஷிகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள். எனினும் பேரரசரது வேண்டுகோளை நிராகரிக்க முடியாததால், தன் சீடர்களுடன் கலை நிகழ்ச்சிகளை காணச் சென்றார் பதஞ்சலி. நடன மங்கையரது சிருங்கார நடனங்களைக் கடைசிவரை இருந்து ரசித்தார்.

வேத சாஸ்திரங்களில் கரை கண்டவரும் தவநெறி களுக்கு உதாரணமானவருமான மகரிஷி பதஞ்சலியின் இந்தச் செயல், அவரின் பிரதான சீடனான சைத்திரனுக்கு வெறுப்பை உண்டு பண்ணியது.

விழா முடிந்து அனைவரும் ஆசிரமத்துக்குத் திரும் பினர். சைத்திரன் மட்டும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந் தான். குருவுக்குப் பணிவிடை செய்வது, உபதேசம் கேட்பது என்று எதிலும் பிடிப்பில்லாமல் போனது. அவனின் எண்ணமெல்லாம், கேளிக்கை நிகழ்ச்சியில் குருநாதர் கலந்து கொண்டது பற்றியே இருந்தது.

ஒரு நாள், புலனடக்கம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் பதஞ்சலி மகரிஷி.

சீடர்களுள் ஒருவனாக அமர்ந்து உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த சைத்திரனின் மனம் குமுறியது. குருநாதரது உபதேசம், ஏற்கெனவே கொழுந்துவிட்டு எரிந்த ‘கோபாக்னி’யில் நெய் ஊற்றுவது போலிருந்தது.

சட்டென்று எழுந்த அவன், ‘‘குருதேவா… ஒரு சந்தேகம்!’’ என்றான்.

அவனைப் புன்னகையுடன் ஏறிட்ட பதஞ்சலி, ‘‘கேள் சைத்திரா!’’ என்றார்.

‘‘குருதேவா… மனதில் கிளர்ச்சியைத் தூண்டும் நடன கேளிக்கைகளில் பங்கு கொள்வது, புலனடக்கத்துக்கு உறுதுணையாகுமா அல்லது ஊறு செய்யுமா?’’

சைத்திரனின் இந்தக் கேள்வியை பதஞ்சலி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பண்பட்ட அவரது துறவு உள்ளம், நடன நிகழ்ச்சி முடிந்த மறுகணமே அதை மறந்து விட்டது!

வியப்புடன் அவனை ஏறிட்டார் பதஞ்சலி. ‘‘சைத்திரா… என்ன ஆயிற்று உனக்கு. ஏன் இந்த சந்தேகம்?’’

‘‘மன்னியுங்கள் குருதேவா. அரசவையில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சிக்குச் சென்று வந்த பிறகு எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது!’’

பதஞ்சலிக்கு இப்போது அனைத்தும் புரிந்தது. எனினும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், ‘‘கேளிக்கை நிகழ்ச்சிக்கும் உனது சந்தேகத்துக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்.

‘‘சொல்கிறேன்… பெரும் தவசீலரும், புலனடக்கத்துக்கு உதாரணமானவருமான தாங்கள், பேரரசர் நடத்திய கலை நிகழ்ச்சியில் உற்சாகமாகப் பங்கு கொண்டது, ஏன்? இது புலனடக்கத்தைக் குலைக்கும் செயல் அல்லவா?’’ என்று படபடப்புடன் பேசி முடித்தான் சைத்திரன்.

புன்னகையுடன் அவனை ஏறிட்ட மகரிஷி பதஞ்சலி தொடர்ந்தார்: ‘‘நல்ல கேள்வி. இதன் மூலம், புலனடக்கத்தின் உட்கருத்து மற்றும் நியதிகள் குறித்து அனைத்து சீடர்களுக்கும் தெளிவுபடுத்த நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறாய்… நன்று!

நமக்குள் இருக்கும் ஆத்மா, அழிவில்லாதது. அது, புற உலகில் நடப்பவற்றை அனுபவிக்கவும், ஆராயவும் உரிமை பெற்றது. அந்த ஆத்ம உணர்வு தூய்மையானது. தீய சிந்தனைக்கு அடிமையாகாமல், அதைத் தன்வயப் படுத்துவதே, ஆத்மானுபவம் ஆகும்.

மோகனக் கலை நிகழ்ச்சிகளைக் காண்பதால், மனம் கிளர்ச்சியுறும், புலனடக்கத்துக்குக் குந்தகம் விளையும் என்றெல்லாம் அஞ்சி, அவற்றை வெறுத்து ஒதுக்குவதோ, ரசிக்காமல் இருப்பதோ கூடாது. அது கோழைத்தனம்.

மாறாக, மனக் கட்டுப்பாட்டுக்கு சோதனை ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் போன்ற அனுபவங்களை எதிர் கொண்டாலும், அவற்றில் உழன்று மனக் கிளர்ச்சிகளுக்கு அடிமை ஆகாமல், சமநோக்குடன் செயல்படுபவனே புலனடக்கத்துக்கு உதாரணமானவன். இப்போது புரிந்ததா சைத்திரா?’’

சைத்திரனின் கண்களில் நீர் பெருகியது. நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தன் குருநாதரின் பாதங்களைப் பற்றி வணங்கினான். இப்போது அவன் உள்ளத்தில் தெளிவு பிறந்திருந்தது.

- டிசம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!
பிரம்மதேசத்தின் மன்னர், நீதிநெறி தவறாதவர். அறம் உரைக்கும் அமைச்சர்கள் மற்றும் ஞானவான் களான ஆன்றோர்கள் பலரது வழிகாட்டுதலுடன் செம்மையாக ஆட்சி புரிந்த மன்னருக்கு, நீண்ட காலமாக ஒரு சந்தேகம். 'வனத்தில் வசிக்கும் தவ சீலர்களான மகரிஷி கள், தனது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்கள்!' ...
மேலும் கதையை படிக்க...
மதிவாணியின் மறுபிறவி!
தூய்மையான கங்கை ஆறு. அதிகாலைப் பொழுது. பறவைகளது குரல். கரையில், பசுக் கன்றுகள், தாய்ப் பசுக்களை அழைக்கும் ஒலி. பதில் குரல் கொடுக்கும் பசுக்கள். இந்தச் சூழலில், இறைவனை தியானித்தபடி இடுப்பளவு நீரில் நின்ற கௌதம முனிவர், கதிரவனை நோக்கிக் கரம் ...
மேலும் கதையை படிக்க...
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரத்தை நாத பிரம்ம «க்ஷத்திரம் என்பார்கள். பண்டரிபுரத்தில் பஜனை செய்யும் பக்தர்களது இசைக் கருவிகளில் இருந்து கிளம்பும் நாதமே அதை மெய்ப்பிக்கும். புண்டரீகன் என்ற பக்தனின் பிரார்த்தனையில் மகிழ்ந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு செங்கல்லின் மேல் நின்று ஸ்ரீபாண்டுரங்கனாக& ...
மேலும் கதையை படிக்க...
"இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சுட்டு டம்பளரை குடுங்கோ .மளமளன்னு அலம்பி வெச்சுட்டு கிளம்பணும் .ஏற்கெனவே, சுமி ரெண்டு தடவை ஃபோன் பண்ணி 'இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்டுட்டா..ஆமா" பரபரப்புடன் பேசிய பானுமதியை கிண்டலுடன் ஏறிட்டார் பரசுராமன். "சரிதான்.இதோ, இங்கே இருக்கற வேளச்சேரிக்கு போக இத்தனை ஆர்ப்பாட்டமா ...
மேலும் கதையை படிக்க...
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான ...
மேலும் கதையை படிக்க...
தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!
ஏழை மற்றும் எளியவர்களிடம் கருணை கொண்டு தான& தர்மங்கள் வழங்குவதில் பேர் பெற்றவர் பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தருமர். இதனால் அவர் மனதில், ‘தர்மம் செய்வதில் தனக்கு இணை யாருமே இல்லை!’ என்கிற கர்வம் படியத் தொடங்கியது. தருமரின் உள்ளத்தில் படிந்த இந்தக் ...
மேலும் கதையை படிக்க...
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே... எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். ‘‘கேளுங்கள் மன்னா!’’ ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர். ‘‘தாங்கள் நல்லதோர் ...
மேலும் கதையை படிக்க...
‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
முத்கலர், சிறந்த தவசீலர். ஞானி. பண்பும் பகுத்தறிவும் மிகுந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவரது குடிலுக்கு, துர்வாச முனிவர் வருகை தந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர் முத்கலரின் குடும்பத்தார். துர்வாசரிடம், ''ஸ்வாமி, தாங்கள் இன்று இங்கு தங்கி, உணவருந்திச் ...
மேலும் கதையை படிக்க...
முனிவருக்கு ஏன் தண்டனை?
யோகத்தில் ஆழ்ந்திருந்தார் மாண்டவ்ய முனிவர். அப்போது அந்த வனத்துக்கு வந்த படை வீரர்கள் சிலர், முனிவரை நெருங்கினர். அவர்களின் தலைவன், ''முனிவரே... கொள்ளைக்காரர்கள் சிலர், இந்த வழியாக வந்தார்களா?'' என்று கேட்டான். முனிவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எரிச்சலுற்ற படைத் தலைவன், ''முனிவரே, ...
மேலும் கதையை படிக்க...
இந்த சிறுவனா குற்றவாளி?
மன்னனைத் தடுமாற வைத்த வழக்கு. அரியணையில் அமர்ந்திருந்தான் மன்னன். சபை கூடி இருந்தது. வாதிகளாக, அந்தணர்கள் ஒருபுறம். பிரதிவாதியாக எட்டு வயதுச் சிறுவன் மறு புறம். சிறுவனைக் கண்ட மன்னன் யோசனையில் ஆழ்ந்தான்... ‘மழலை மாறா முகத்துடன் விளங்கும் இந்தச் சிறுவனா ...
மேலும் கதையை படிக்க...
ஆத்மாவை அறிய முயன்ற அரசன்!
மதிவாணியின் மறுபிறவி!
பாதுஷாவின் சந்தேகம்… பாவாவின் சஞ்சலம்!
ராதா கல்யாண வைபோகமே…
கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!
தங்கக் கிண்ணத்தை வீசி எறியுங்கள்!
துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!
‘சொர்க்கமா..? வேண்டவே வேண்டாம்!’
முனிவருக்கு ஏன் தண்டனை?
இந்த சிறுவனா குற்றவாளி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)