அவள் ஒரு அதிசயப் பிறவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 1,974 
 

(திரு.பொன் குலேந்திரன் அவர்கள் அக்டோபர் 11, 2023 அன்று இயற்கை எய்தினார். அவரது குடும்பத்தினருக்கு சிறுகதைகள்.காம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!)

“சதீஷ் உனக்கு என்னுடன் வேலை செய்யும் அஞ்சலியைத் தெரியுமா”?

“தெரியாதே .நான் ஒருபோதும் அவளை சந்திக்க வில்லை .ஏன் அப்படி என்ன விசேஷம் அவளிடம் ரவி “?

“உனக்கு தெரியுமா அவள் நாளை நடக்கப் போவதை இன்றே சொல்லிவிடுவாரள் ஏதோ அவ்வளவு தீர்க்க தரிசனக்காரி அவள்”.

“என்ன தீர்க்கதரிசனம் என்று சொல்லு ரவி”.

என் அலுவ்க்தில் வேலை ச செய்பவர்களில் அவள் மிகவும் அமைதியானவள். தானும் தன் வேலையும் என்று இருப்பவள். எங்களுடன் கலந்து உணவு உண்ணமாட்டாள். அவளை மதிப்பு குறைவாக எடை போட்டு விட்டேன்.

அன்று ஒரு நாள் எனக்கு அஞ்சலி சொன்னாள் ரவி உமக்கு நாளை நல்ல செய்தி வரப்போகிறது”

என்ன செய்தி என்று அவளை கேட்டேன்.

அதுக்கு அவள் என்ன பதில் சொன்னாள்”?

“புரோமோஷன் கடிதம்”.

அதுக்கு நான் சொன்னேன் அது நடக்காத காரியம் . என்னிலும் பார்க்க சீனயர்கள் நேர்காணலுக்கு வந்தர்கள் “

அவள் பதில் சொல்லாமல் போய்விட்டாள்

“பின் என்ன நடந்தது புரமோஷன் கடிதம் வந்ததா உனக்கு” சுரேஷ் கேட்டான்.

“எனக்கு உதவி மனேஜராக பதவி உயர்வு கிடைத்து கடிதம் எனக்கு வந்தது .என்னால நம்ப முடியவில்லை சுரேஷ்”.

“அது எப்படி “?

“நிறுரவனத்தின் வருட முடிவு கணக்கில் மிக பெரிய தவறை கண்டு பிடித்து நிருவனத்துக்கு பல லட்சம் ஆதாயம் தேடி கொடுத்தே காரணம் என நான் விசாரித்ததில் அறிந்தேன்”.

“அவளுக்கு சிலவேளை முன்பே உன்னுடைய உயர் அதிகாரி சொல்லி இருபபார் உன் புரமோஷன் பற்றி?”

“இருக்கவே முடியாது. அவளுக்கு அவரை தெரியாது”

“ரவி நீ என்ன உண்மையைத் தானா சொல்லுகிறாய், என்னால் நம்பமுடியவில்லை?”

“இது போன்றுதான் இதற்கு முன்பு எங்களுடன் வேலை செய்யும் கணேசுக்கு ஒரு நாள் சொன்னாள் அவனுக்கு அதிர்ஷ்டம் வறப் போகிறது என்று”

“என்ன சொல்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை என்ன அஞ்சலி எப்படி தெரியும் கணேசுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று” நான் ஆவலுடன் கேட்டேன்,

“அது என்னால் சொல்ல முடியாது நிச்சயம் வரும்:” என்றாள்.

“கணேசுக்கு அதிர்ஷ்டம் வந்ததா” சுரேஷ் ரவியை கேட்டான்.

“அஞ்சலிசொன்ன மாதிரி வந்தது . கணேஷின் பணக்கார ஆச்சி இறந்து போனாரள். அவளுடைய மிகுதி சொத்துக்களில் ஒரு பங்கு அவனுக்கு கிடைத்தது என்பதை நம்ப முடியவில்லை,

ரவி ஓவிய சம்பவங்களை வைத்து எப்படி அஞ்சலியை பற்றி சொல்ல முடியும்.

அப்படி சொல்லாதே சுரேஷ் தங்கள் சீனியர் மேனேஜர் மாதவன் திடீரென்று ஒரு நாள் வரவில்லை அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சலி சொன்னாளாம் சேர் நீங்கள் நடக்கும் போது கவனம் என்று

அவள் சொன்ன மாதிரியே அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டார்.

அப்படியா பெரியார் சொன்னார்.

எங்கள் ஆபீசை கூட்டிப் பெருக்க வரும் குப்பம்மாவிற்கு ஒரு நாள்அஞ்சலலி சொன்னாள் குப்பம்மா உன் கணவன் இனி கூலி வேலை செய்யத் தேவையில்லை . அவள் சொன்னபோது நான் கேட்டுக் கொண்டு இருந்தேன்.

குப்பமமாமவுகு புரியவில்லை அஞ்சலி என்ன சொல்லுகிறாள்.

இரண்டு நாட்களுக்குப்பின் குப்பம் சந்தோசமான சந்தோசமாக அலுவலகத்துக்கு வந்து அஞ்சலியை கையெடுத்துக் கும்பிட்டாள்.

காரணம் விசாரித்ததில் தெரிய வந்தது குப்பம்மா புருஷன் கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் அவனுக்கு பதது லட்சம் பணம் விழுந்ததாக.

“அதிசயமாகத்தான் இருக்கிறது நான் பார்த்திருக்கிறேன் சிலருக்கு காலத்தில் முன்கூட்டி செல்லக்கூடிய திறமை இருக்கிறது என்று ஏன் ஐன்ஸ்டீன் ட இதைப்பற்றி சொல்லி இருக்கின்றார் நேர சார்புக் கொள்கையில் அந்த திறமை அவளுக்கு வந்துவிட்டது போல எனக்குத் தெரிகிறது” சுரேஷ் சொன்னான்

“அது எனக்கு தெரியாது உன் விஞ்ஞான விளக்கங்கள் ஏதோ இவைகள் நடந்தது உண்மை சுரேஷ் “, ரவி சொன்னான்.

“ரவி எனக்கு அவளை சந்திக்க வேண்டும் போல் இருக்கிறது ,எனக்கு அவளை அறிமுகப் படுத்துவாயயா”?

“அவள் சம்மதித்தாள் மட்டுமே . நீ ஒரு நாள் என் ஆபீசுக்கு வா அவளை அறிமுகப்படுத்துகிறேன் என்றான் ரவி.

“சரி ஒரு நாளைக்கு அவளின் சம்மதம் பெற்று என்னை அறிமுகப்படுத்து நான் அவருடன் பேசிப் பார்க்கிறேன்:

“ஒன்று மட்டும் சொல்கிறேன் சுரேஷ், அவளை குறுக்கு விசரணை செய்யா’தே அவள் அதிகம் பேச மாட்டாள் உன்னை சில வினாடிகள் உற்றுப்பார்ப்பாள் , அதன் பின் தன் மனதில் வந்ததை சில வார்த்தைகளில் சொல்லுவாள்”.

ஓஹோ அவருடைய பார்வை மூலம் பிறர் மனதை அறிகிறாள் போலும். எதுக்கும் நாளை நீ அவளை எனக்கு அறிமுகப்படுத்து ரவி”.

அடுத்தநாள் ரவி அஞ்சலியை சுரேஷ்க்கு அறிமுகப்படுத்தினான்.

அஞ்சலி நான் சொன்னேனே என் நண்பன் சுரேஷ் என்று இவன்தான் அவன் , என்னுடன் கூட படித்தவன் பாவம் படித்த காலத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை அந்த விரகத்தில் இருக்கிறான்”.

அஞ்சலி அவனை உற்றுப்பார்த்தாள்.

சுரேஷ் சொன்னான் “அஞ்சலி ரவி சொல்வதை நீ நம் நம்பாதே நான் எப்போ நான் காதலித்த பெண்ணை மறந்துவிட்டேன் அவள் எங்கு இருக்கிறாரோ எனக்கு தெரியாது இனி அவளைப் பற்றி நான் ஏன் யோசிக்க வேண்டும்”?.

அவனை உற்றுப் பார்த்துவிட்டு அஞ்சலி சொன்னாள்.

“சுரேஷ் நீர் உண்மைதான் பேசுகிறீரா? அவள் உம் மனதை விட்டு அவள் போய்விட்டாள் என்று நீர் சொல்வது உண்மையா”?

அதுக்கு சுரேஷ் “ஆமாம் அவள் எப்பவோ என் மனதை விட்டு போய்விட்டாள். இது நடந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது”

“அப்படியா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் . ஒரு கிழமையில் உமது காதலி திரும்பி உம்மிடம் வருவாள் அப்படி அவள் வந்தால் நீர் அவளைத் திருமணம் செய்து கொள்வீரா:”? என்று கேட்டால் அஞ்சலி

“நீர் என்ன சொல்லுகிறீர் அஞ்சலி. நடக்க முடியாத ஒன்றைச் சொல்லுகிறீர் அவள் இந்த ஊரிலே எங்கே இருக்கிறாளோ எனக்கு தெரியாது”.

“சுரேஷ் எது நடக்க இருகிறதோ அது நடக்கும் நீர் அதை தடுக்க முடியாது “என்று சொல்லிவிட்டு சிரித்தாள் அஞ்சலி.

சுரேஷ் ரவியின் முகத்தைப் பார்த்தான்.

சுரேஷ் நான் முன்பு சொன்னேனே உனக்கு அஞ்சலி சொல்வது நடந்தால் அதை பார்த்தாவது இனிமேல் இவளை நம்பு“.

***

அஞ்சலி சொன்னது சுரேஷ் மனதை திரும்பவும் சிந்திக்க வைத்த தன் பழைய காதலி மைதிலி பற்றி . அவளை சுரேஷ் விரும்பினான். அவளும் சுரேஷ விரும்பினாள். பல வருட காதல்

ஆனால் இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அதோடு அவள் பணக்கார பெண் அவளுக்கு பல இடங்கள் வரன்பார்த்தார்கள் இது சுரேஷ்சுக்கு தெரியும் ,அதனால் அவளுக்கு அவன் பலதடவை கள் சொல்லியிருக்கிறான்”மைதிலி உன்னை நான் காதலிக்கிறேன்.

நீ என்னை விரும்புகிறாய் எங்கள் காதல் கைகூடுமா தெரியாது . எங்கள் விதி படி நடக்கும்“.

அவன் சொன்னது போல் மைதிலியின் தந்தைக்கு தன் மகள் வேறு சாதி ஒருவனை கா தலிகிறாள் என்ற விஷயம் தெரியவந்தது மகளைக் கூட்டிக்கொண்டு பிற நாட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவளின் பிரிவு சுரேஷ்சை வாட்டியது ஆனால் என்ன செய்ய முடியும் , மைதிலி எங்கே இருக்கிறார் என்று சுரேசுக்கு தெரியவில்லை.

***

அஞ்சலியை சந்தித்து மூன்று நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் சுரேஷுக்கு வந்தது.

அதை வாசித்து பார்த்தான்.அவனால் நம்ப முடியவில்லை.

சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாகவும் தனது பெற்றோர் ஆக்சிடெண்டில் இறந்து விட்டதாகவும் தனக்கு திருமணம் ஆக முன்பே அந்த சம்பவம் நடந்தது என்றும், அதனால் திரும்பவும் தான் சொந்த ஊருக்கு திரும்பி விட்டதாகவும் இப்போது தான் ஒரு சுதந்திர பறவை என்று தான் சுரேஷ் திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் மைதிலி எழுதி இருந்தாள்.

சுரேஷ்அந்தக் கடிதத்தில் எழுதி இருந்ததை நம்பவில்லை அந்த கடிதத்தில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் மைதிலியுடன் மகிழ்வுடன் தொடர்பு கொண்டு சுரேஷ் பேசினான் இ இருவரும் சந்தித்தார்கள்

இந்த சந்திப்பின் பின்,

“ரவி நீ சொன்னது உண்மைதான் அஞ்சலியிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருக்கின்றது அவள் சொன்ன மாதிரி என் காதலி மைதிலி என்னிடம் திரும்பி வந்து விட்டாள்”. என்று சுரேஷ் ரவிக்கு விவரத்தைச் சொ’ன்னான்.

“பார்த்தாயா சுரேஷ் இன்னொன்று உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.

“என்ன அஞ்சலியை பற்றியா?”.

“ஆமாம் அவளைப் பற்றி தான்”.

“என்ன சொல்லு வேறு எவருக்காவது அவளை நீ அறிமுகப்படுத்திய”

“ஆமாம் ஆமாம் சுரேஷ் , சில நாட்களுக்கு முன் நான் என் மனைவியுடன் கோவிலுக்கு போய் இருந்தேன் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் வேண்டி. நாங்கள் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை பல பரிசோதனைகள் செய்து விட்டோம் போகாத கோவில்கள் இல்லை”

“இப்பொழுது நடந்ததைச் சொல் ரவி”

“அந்தக் கோவிலில் உள் வீதியில் ஒரு மூலையில் அமர்ந்தவாறே அஞ்சலி தியானம் செய்துகொண்டிருந்தாள்”

“என்ன சொல்லுகிறாய் தியானம் செய்துகொண்டிருந்தாளா?”

“ஆமாம் அவளைக் கண்டவுடன் என் மனைவிக்கு அவளை சுட்டிக்காட்டிச் சொன்னேன் அவளுக்குள் உள்ள ஒரு திறமை பற்றி. என் மனைவி அதை நம்பவில்லை”.

“பிறகு என்ன நடந்தது என்று சொல்”.

“கோவிலைச் சுற்றி மனைவியுடன் கும்பிட்டு வந்த போது அஞ்சலி கண்விழித்து எங்களை கண்டாள்.

அவள் உடனே என் மனைவியை சுட்டிக்காட்டி சொன்னாள்” இவ உங்களுடைய மனைவி அகிலா தானே?

அவள்’ சொன்னது எனக்கு அதிசயமாக இருந்தது எப்படி இவளுக்கு என்னுடைய மனைவியின் பெயர் தெரியும்?. இது தான் அஞ்சலி முதல் தடவை என் மனவியை சந்திக்கிறாள் .

“ஆமாம் அஞ்சலி இவள் என் மனைவி அகிலா நாங்கள் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது”

“அதுக்குத்தான் குழந்தை வரம் தேடி இந்த கோயிலுக்கு வந்தீர்களா?”

என்னால் அவள் சொன்னதை நம்ப முடியவில்லை என்ன சக்தி அஞ்சலி கொண்டிருக்கிறாள் என்று நான் நினைத்தபோது.

என் மனைவி சொன்னாள்” ஆமாம் அஞ்சலி நாங்கள் குழந்தை வரம் கேட்டு கோவிலுக்கு வந்தோம்”.

அஞ்சலி என் மனவியை உற்று பார்த்து விட்டு சில வினாடிகளில் சொன்னாள்.

“ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் உங்களுக்கு இரு வரங்கள் கிடைக்கும்”.

ரவிக்கும் அகிலாவுக்கும் அவள் சொன்னது புரியவில்லை.

வீடு திரும்பியவுடன் அஞ்சலி சொன்னது அடிக்கடி ராவியின் மனதுக்குள் வந்து கொண்டே போனது.

சில நாட்களுக்கு பின் அகிலா தலை சுற்றுகிறது என்று சொல்லி சத்தி எடுக்கத் தொடங்கினாள்.

ரவி அவளை டாக்டரிடம் கூட்டி சென்றான் . டக்டர் பரிசோதித்து விட்டு சொன்னார்.

“கங்கிராஜுலேசன் ரவி உம்முடைய மனைவி கருவுற்று இருக்கிறாள்”.

அதைக் கேட்டதும் விக்கு அஞ்சலி சொன்னது தான் நினைவுக்கு வந்தது ஆனால் அவள் இரு வரம் என்று சொன்னாலே அவள் எதை சொன்னாள் என்று அவனுக்கு புரியவில்லை.

ரவி உடனே டாக்டரிடம் கேட்டான்”டாக்டர் ஆண் குழந்தையா பெண் குழந்தையா எங்களுக்குக் கிடைக்கும் என்று பரிசோதித்து ஸ்கேன் செய்து சொல்ல முடியுமா?”

“அல்ட்ராசவுண்ட் உங்கள் குழந்தையின் படத்தை உருவாக்குவதால், அது உங்கள் குழந்தையின் பாலினத்தையும் வெளிப்படுத்தலாம். ஆனால் பாலினம் 14 வாரங்களுக்கு முன்பே அல்ட்ராசவுண்ட் மூலம் தீர்மானிக்கப்படலாம். முடியுமே கருவுற்று 4 மாதத்துக்கு பின் வாருங்கள், அதனால் ஒரு கிழமை’க்கு பின்’ , உங்கள் மமனை’வி கருவுற்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது”.

ஒரு கிழமைக்கு பின் அகிலாவை டாக்டர் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சொன்னார்.

“கங்கிராஜுலேசன் ரவி உம் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இருக்கின்றது ஒரு ஆண் மற்றொரு பெண் இது அருமையிலும் அருமை”, டாக்டர சொன்னார்,

ரவியால நம்ப முடியவில்லை அவன் அகிலாவின் முகத்தை பார்த்தான்.

அகிளாஉடனே சொன்னாரள்”ரவி அவசியம் நான் அஞ்சலியை நான் பார்க்க வேண்டும் அவளுக்குள் தெய்வம் இருக்கிறது“.

ரவி சொன்னான் .” அகிளா அவளின் சம்மதம் அவசியம் . அவள் சம்மதித்தால் அவளுடன் தொடர்பு கொண்டு நாங்கள் இருவரும் சந்திப்போம்“.

அடுத்த நாள் அவளுக்கு போன் ரவி அஞ்சலியை ஆபிசில் சந்தித்து பண்ணினேன்.

அஞ்சலிக்கு தன் மனைவி கருவுற்றிருப்பதை பற்றி சொன்னான். அதோடு ஸ்கேன் செய்து பார்த்தபோது ஆண்-பெண் ஆகியவற்றை குழந்தைகள் என்பதையும் டாக்டர் சொன்னதாக சொன்னான்.

“அப்படியா சந்தோசம்” என்றாள் அமைதியாக அஞ்சலி.

“என் மனைவி அகிளா உன்னை சந்தித்து உனக்கு ஏதாவது ஒரு பரிசு தர வேண்டும் என்று சொல்கிறாள் சந்திக்க உன் சம்மதம் தேவை அஞ்சளி”என்றான் பக்தியுடன் ரவி.

“எனக்கு ஒரு பரிசு ஒன்றும் வேண்டாம் ஏதோ என் மனதில் பட்டது சொல்லிவிட்டேன் அவ்வளவுதான் அவளைப் பார்த்ததும் அது சொல்ல வேண்டும் போலிருந்தது என்றாள் அஞ்சலி.

“எதுக்கும் அஞ்சலி நாளை உன்னை வந்து சந்திக்க முடியுமா “?என்று கேட்டான் ரவி.

“நாளை நான் இருப்பனோ எனக்ககே தெரியாது” என்றாள் அஞ்சலி.

“என்ன சொல்லுகிறாய் அஞ்சலி” என்று கேட்டான் ரவி.

அவள் பதில் சொல்லாமல் போய்விட்டாள்.

ஏமாற்றத்துடன் திரும்பி நடந்ததை தன் மனைவிக்கு சொன்னான் ரவி.

“திரும்பவும் நாளை அவளுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள் நாம் அவசியம் அவளைப் பார்த்து அவளுடன் நான் பேச வேண்டும் நன்றி தெரிவிக்க வேண்டும் “என்றாள் அகிலா.

அதனால் வேலைக்குச் சென்று மறு நாள் அவளை சந்தித்து நேரிடையாக கேட்க முடிவெடுத்தான் ரவி

***

மறு நாள் ரவி வேலைக்குச் சென்றவுடன் அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

அவனுடைய மனேஜர் அவனைத் தன்னுடைய ரூமுக்கு அழைத்தார்.

ரூமுக்குள் சென்ற ரவி அவர் சோகத்துடன் இருப்பதை கண்டு.

“என்ன சேர் என்ன நடந்தது”? என்று கேட்டான் ரவி.

அதுக்கு அவர் சொன்னார் “உனக்கு தெரியாதா ரவி நேற்று பின்னேரம் அஞ்சலி கோவிலுக்கு சென்றபோது அங்கு தியயான நிலையில் அவளின் உயிர் பிரிந்து விட்டது , போலீஸ் விசாரணை செய்கிறது .”

இந்த செய்தி ரவி அந்த செய்தியை எதிர்பார்க்கவில்லை. ரவியால் மனேஜர் சொன்னதை நம்ப முடியவில்லை உடனே யோசித்தார் அஞ்சலி சொன்ன வார்த்தைகளை அவனுக்கு இப்போது புரிந்தது அவளுக்கு தன் மரணம் என்று ஏற்கனவே தெரிந்து விட்டது என்று.

போலீசுக்கு ந.ங்கள் போன் செய்து சொலுங்கள் சேர் அவள் தியானத்தின் போது அஞ்ச. லி சமாதியாகி விட்டாள், விசாரணை தேவை இல்லை என்று. அவள் அனாதை இல்தஇல்லத்தில் வாளர்ந்து படித்து எங்கள் நிறுவன்\ந்தில் வேலை செய்தவள். தனித்து வாழ்ந்தவள்“.

“எனக்கு எல்லாம் அவளை பற்றி எல்லாம் தெரியும் . அவள் எனக்கு ஓ ரு தெய்வம் மாதிரி” மனேஜர் சொன்னார் .

ரவி உனக்கு தெரியாது பல மாதங்களுக்கு முன் என் மனைவி மாரபு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாள்.

அவளுக்கு ஷேர் நாட்கள் மட்டுமே டாக்டர்கள் கொடுத்திருந்தார்கள் அப்போது ஒருநாள் அஞ்சல் எனக்கு சொன்னாள் சார் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் உங்கள் மனைவி நீண்ட காலம் வாழ்வார் என்று.

அஞ்சலிசொன்ன மாதிரி அவளுடைய மார்புப் புற்றுநோயில் இருந்து குணமடைந்து இப்போது நலமாக இருக்கிறாள்”

“அப்படியா சார் இது எனக்கு தெரியாமல் போய்விட்டது அஞ்சலி ஒரு தெய்வம்” என்றான் ரவி.

மனேஜர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

ரவி உடனே தன் மனைவிக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னாள். அகிளா விம்மி அழுவது அவனுக்கு டெலிபோனில் கேட்டது.

அகிலா அழுகையை நிறுத்தியபின் ரவி சொன்னான் “இங்கே பார்அகிலா சிலர் பிறருக்கு நடக்கப்போவதை சொல்லுவார்கள் ஆனால் தங்களுக்கு நடக்கப்போவதை அவர்களுக்கு தெரியாது ஆனால் அஞ்சலி அப்படி இல்லை அவளுக்கு தனக்கு மரணம் வரும் என்பதை தெரிந்து வைத்து தான் அப்படி எங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறாள்.

அதுக்கு அகிலா சொன்னாள்.

“அஞ்சலிக்கு அந்த அபூர்வ சக்தி அவவுடோய தியானத்தினால் ஏற்பட்டது. அவளுக்குள் குண்டலினி சக்தி வளர்ந்துவிட்டது நான் கேள்விப்பட்டேன் இப்படி உள்ளவர்கள் நீண்டகாலம் வாழ மாட்டார்கள் என்று அது போல் நடந்து விட்டது “

ரவி பதில் சொல்லவில்லை அஞ்சலியை நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வந்தது அவளுக்கு. அஞ்லி மனதுக்குள் செய்தான்.

அகிலா சொன்னாள்”அத்தான் நான் ஒரு’ முடிவு எடுது விட்டேன்”.

“என்ன முடிவு அகிலா”?.

“எங்களுக்கு கிடைக்கப் போகும் பெண் குழந்தைக்கு அஞ்சலி என்று பெயர் வைப்பது என்று, என்ன சொல்லுகிறீர்கள்?”.

“நல்ல முடிவு அகிலா”, ரவி சொன்னான்.

தூரத்தில் கோவில் மணி ஓசை கேட்டது.

-யாவும் புனைவு-

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *