கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீரஞ்சனி

12 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்றே வேறே

 

 சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள். கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள்


சில்வண்டு

 

 நூல் வெளியீடு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எங்களின் காருக்குள் புயல் வீசியது. சுனாமி வேகமாக அடித்து என்னை மூச்சுத் திணறச் செய்தது. வீட்டுக்குள் போனதும், மீதிப் புத்தகங்களுடான அந்த காட்போட் பெட்டியும் அதனுள் இருந்த புத்தகங்களும் சுதர்சன் எறிந்த வீச்சிலிருந்த அந்த வெறுப்பையும் ஆத்திரத்தையும் உள்வாங்கி, அவற்றின் வடிவத்தை இழந்து போயின. தென்றலின் இனிய வருடல் பட்டது போல இலேசாகப் பறந்த என் மனசுக்குள், கற்களை வாரி வீசி விட்டது போல அங்கங்கே கீறல் பட்டுப்


நீயே நிழலென்று

 

 தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும்


பேசப்படாத மௌனம்

 

 என்ர நெஞ்சில தலைவைச்சுப்படுத்திருந்த சுமி இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள். ஒரு கையால அவளின்ர தலையக் கோதினபடியும், மற்றக் கையால அவளை அணைச்சபடியும் அவளருகில நான் படுத்திருந்தன். எனக்கும் அழுகைவந்தது. மனசு படபடத்தது. திரைச்சீலைகள் அங்குமிங்குமா ஆடிக்கொண்டிருந்துது. “சொறி குட்டி, அம்மா அடிச்சிருக்கக்கூடாது, கத்தியிருக்கக்கூடாது… சொறியடா கண்ணா, இனி அம்மா இப்பிடியெல்லாம் செய்யமாட்டன்… அழாதையடா குஞ்சு…” மிகக் கனிவுடனும் குற்றவுணர்வுடனும் திரும்பவும் சொன்னன். “எனக்குச் சரியாய் தண்ணி விடாய்ச்சதம்மா. அதுதான் பைப்பைக் கண்டோனை …” “ஓமடா, எனக்கு விளங்குது. ஆனா


புதர் மண்டியிருந்த மன வீடு

 

 கதை கேட்க:https://www.youtube.com/watch?v=Kt7nRv6CLvs ஒரு மீற்றர் இடைவெளியில், கால் கடுக்க அரை மணி நேரமாக் காத்திருந்து வாங்கி வந்திருந்த பொருள்கள் அவளின் குளிரூட்டியை வண்ண வண்ண நிறங்களில் அலங்கரித்திருந்தன. கடையில் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க நேர்ந்தபோதல்லாம், காந்தத்தின் ஒத்த முனைகள் ஒன்றையொன்று தள்ளிவிட்டது போல ஆளுக்கு ஆள் விலகியோடியதையும், ஏதோ ஒரு கள்ள வேலை செய்கிற மாதிரி அக்கம் பக்கம் பார்த்துப் பார்த்துப் பொருள்களைக் கூடையில் போட்டதையும் அவை அவளுக்கு நினைவூட்டின. “ம்ம், ஆளுக்காள் அவையவைக்குப் பிடிச்ச திரையளோடை


நெறிமுறைப் பிறழ்வா?

 

 அன்று ஒரு நாள், நானும் என் மகளுமாய் ஒரு றெஸ்ரோரண்டுக்குச் சென்றிருந்த போது, எதிர்ப்பட்ட குளிரிலிருந்து எனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக, தனக்கென ஆசைப்பட்டு வாங்கிய அந்த ஸ்கார்ஃபை அவள் எனக்குத் தந்திருந்தாள். பின்னர் சாப்பிடும்போது என் முன்னால் இருந்து என் மேல் அந்த ஸ்கார்ஃபை ரசித்தவள், ”யூ லுக் குட் வித் தற் ஸ்கார்ஃப். யு கீப் இற்” என்று அதை எனக்கு அன்பளிப்பாகத் தந்திருந்தாள். தொடரும் நினைவுகளை இடைமறித்தது, அந்தக் கவுன்சிலரின் குரல். அமைதியான அந்த


உள்ளங்கால் புல் அழுகை

 

 “மை நேம் ஸ் றோசி, வட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்டு விட்டு அவ என்னைப் பாக்கிறா. எனக்கு அவவைப் பாத்த உடனை, எங்கடை ரீச்சர் மிசிஸ் ஜோன் ஸ்கூலுக்கு ஒரு நாள் வராமல் நிண்ட போது, வந்த அந்தச் சப்பிளை ரீச்சர் தான் ஞாபகத்துக்கு வந்தா. அந்த ரீச்சரின்ரை குரல் மாதிரி அவவின்ரை குரலும் கடுகடுப்பாக இருந்தது. அந்தச் சப்பிளை ரீச்சரை எனக்குப் பிடிக்கவேயில்லை. அம்மாவுக்கு அதைப் பற்றிச் சொல்லி ஒரு நாள் அழுத போது,


தடம் மாறும் தாற்பரியம்

 

 அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது. “பாரபட்சமின்றி இருக்க வேணும்; வெறும் குரலைக் கொடுக்கிறது தான் எங்கடை வேலை; மற்றும்படி எந்தக் கலந்துரையாடலிலும் நாம் ஒரு பங்காளர் இல்லை” என்றெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்கான வகுப்புக்களில் திரும்பத்திரும்பச் சொல்லி மனதில் பதிக்கப்பட்டிருந்தாலும்கூட, சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் மனசை மிகவும் இம்சைப்படுத்தி விடுவதற்கு, நானும் ஒரு தாயாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான். வரவேற்பறையினுள்


இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

 

 “ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண வீட்டிலிருந்த இரண்டு பேர் கதைத்துக் கொண்டிருந்த போது இடையில் புகுந்து “திரும்பக் கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நிண்டவனை மனம் மாத்திச் சம்மதிக்க வைச்சது நான் தான்.” எண்டு பெரிய பெருமையாய்ச் சொல்லிக்கொள்கிறா மாமி. எனக்கு அவர்களின் கதையைக் கேட்க எரிச்சல் எரிச்சலாய் வருகிறது. அம்மாவை விபத்தில் இழந்த போது ஏற்பட்ட ரணத்தை விட அப்பாவும்


ஓரங்க நாடகம்

 

 ‘ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?’ இது சுதன். அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னும் சிலரும் ‘ஒம் ரீச்சர், நாங்கள் நாடகம் செய்து கனநாளாச்சு. நாடகம் செய்வோம்,’ என வேண்டுகோள் விடுக்கிறார்கள். காலையில் தமிழ் வகுப்புக்கு வந்ததும் அன்று படிக்க வேண்டிய விடயம் பற்றிக் கலந்துரையாடுவோம். பின் அது சம்பந்தமான சில வாசிப்பும் எழுத்தும் கலந்த பயிற்சிகளை மாணவர்கள் செய்வார்கள். நிறைவாக வகுப்பு முடிய முன் இருக்கும் 30 நிமிடங்களுக்கு தமிழில் கதைக்கும் ஏதாவது ஒரு குழு