கதையாசிரியர் தொகுப்பு: சு.சமுத்திரம்

56 கதைகள் கிடைத்துள்ளன.

அம்மாவைத் தேடி

 

 ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், மூன்று நோயாளிகள் மரண அவஸ்தை தாங்காமல் முனங்கிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தார்கள். டாக்டர்களுக்கு அவர்களின் முடிவின் முடிவு தெரியும். அவர்களுக்கும், தங்கள் அந்திம காலத்தின் அடையாளம் புரியும். ஸ்பெஷல் வார்டில் படுத்துக் கிடந்த மாஜி டெப்டி கலெக்டர் மயில்நாதன், தான் ஏழு வயதுச் சிறுவனாக இருக்கும்போது ஏற்பட்ட அவஸ்தை, இப்போது மீண்டும் வந்திருப்பதை உணர்ந்தார். அப்போது அவர் அம்மா அவரருகே கண்ணிர் சிந்த அமர்ந்து, உடம்பைப் பிடித்துவிட, அவர் அந்தப் பையன், அவள் மடியிலே


பனிப்போர்

 

 அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை. இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தூக்கத்தின் மீது ஒரு எரிச்சல், என்ன வந்தது எனக்கு? இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள் வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும் என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு


தாயாகிப் போன மகள்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த முதலாவது தவணை பெண் பார்க்கும் படலத்தி லேயே ஒருவேளை மணப்பெண்ணாக மாறக்கூடிய பவானியை, வழக்கப்படி எவரும் அலங்கரிக்கவில்லை . அவள் தன்னைத் தானே அலங்காரம் செய்யத் துவங்கினாள். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில், கன்னித்தன்மை கழியப் போகும் எல்லாப் பெண்களும் சிணுங்குவது போல் சிணுங்கி, நாணிக் கண் புதைக்கத்தான் செய்தாள் பவானி. “மாப்பிள்ளைப் பையனை எவ்வளவு நேரமாய் காக்க வைக்க உத்தேசமாம்!” என்று


பன்னாடை

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாழ்ந்து கெட்ட வயதான ஸ்ரீராமர் போல், அந்த பிர மாண்டமான பங்களாவை, பிரமிப்பு ஏதுமின்றி ஏறிட்டுப் பார்த்தார் கந்தய்யா. வில் மாதிரி வளைந்திருந்த தளை நார் , வலது தோளுக்கு வளையமாகி, இடுப்பைத் தொட்டது தென்னைம்பாளை யால் கட்டப்பட்ட கூம்புப் பெட்டி, இடது தோளில் அம்ப ராத் துணிப்போல தொங்கியது. இந்த பாளைச் சதையை இழுத்துப் பிடிப்பது மாதிரியான மூங்கில் எலும்புகள், இரண்


மௌனமாய் ஒரு தீர்ப்பு

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) உறுமிக்கொண்டும் இருமிக் கொண்டும் ஓடிய அந்த தகர டப்பா வேனை அந்த வெள்ளை அம்பாஸிடர் கார் முன்னால் ஓடிப் போய் நின்று வழிமறித்தது. நிற்க முடியாமல்கூட அந்த வேன் மோதி விடலாமே என்ற பயம்கூட சிறிதும் இல்லாமல் அநாவசியமாய் நிறுத்தப்பட்ட அந்த காரிலிருந்து ஆறடி உயர மனிதர் முதலில் வெளிப்பட்டார். ‘எவன்டா இவன்’ என்று கேட்கப்போன வாலிப டிரைவர். அந்த மனிதரைப் பார்த்


புதிய போதை

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த வீடு முழுவதையும் அசைவற்றதாய் ஆட்டிப் படைத்த நிசப்தம், பல கூக்குரல்களில் கலைந்து ஒப்பாரியாய் ஓலமிட்டது. கட்டிலில் கிடந்த கன்னையாவின் கைகால்கள், அங்கு மிங்குமாய் வெட்டின. ஆனாலும், வலக்கையை வலுக் கட்டாயமாக , லேசாய் முகம் சுழித்துத் தூக்கி, அங்குமிங்கு மாய் ஆட்டினார். கண்களை அவர் பக்கம் படரவிட்டு வாசல் படியில் நின்ற சொர்ணம்மா , அலறியடித்து அவர் பக்கம் ஓடி வந்தாள்.


சண்டைக் குமிழிகள்

 

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்னும் குட்டையாகவே இருக்கும் குட்டாம்பட்டியில், கூனிக்குறுகிய ‘வாழாத’ வடக்குத் தெருவில், தங்கம்மா – லிங்கம்மாவின் மகாயுத்தம், இதோ நடந்து கொண்டிருக்கிறது. மருந்துக்குக் கூட ஓடு போட்ட வீடோ அல்லது காரை’ வீடோ காணப்படாத இந்தத் தெருவில், உள்ள ஓலை வீடுகள் காற்றில் ஓலமிட்டு துடி துடித்தன. இந்தச் சந்துப் பகுதியில், இந்த மாதத்தில் தங்கம்மாவுக்கும் லி ங்கம்மாவுக்கும் இடையே நடைபெறும் மூன்றாவது மகாயுத்தமாகும்


தராசு

 

 கைத்தறி லுங்கியை , செம்மண் நிறத்துப் பேண்ட்டால் அகற்றிவிட்டு, பாடாவதி பனியனை வெளுத்துப்போன வெள்ளைச் சட்டையால் மறைத்துக் கொண்டு, ஒப்புக்குத் தலையை வாரியபடியே கண்ணாடியை வேண்டா வெறுப்பாய்ப் பார்த்த விசுவநாதனை, செந்தாமரையும் அவனை மாதிரியே பார்த்தாள். ஸ்டவ்வில் பூனை குத்துக் காலிட்டு உட்கார்ந்திருப்பதை சொல்லத்தான் போனாள். ஆனால் – அதற்குள், வீட்டிற்கு வெளியே நடுரோட்டில் டெப்டி டைரக்டரின் கார், கரடுமுரடாய்ச் சத்தம் போட்டபடியே நின்றது. காருக்குக் குறைச்சலில்லை. வழக்கமாய் வருவதுதான். ஆனால் அன்று ஏனோ, காரின் குரல்


டிராக்டர் தரிசனம்

 

 (1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எலெக்ஷனை நம்பிப் பணத்தைச் செலவளிக்கப்படாது…. எலெக்டிரிஸிட்டியை நம்பி இலையைப் போடப்படாது… இந்த ரெண்டையும் செய்தாலும் செய்யலாம்… ஆனால், வாடகை டிராக்டரை நம்பி வயலைக் காயப் போடாதேன்னு சொன்னேனே.. கேட்டியா….? கேட்டியா….?” வயலின் வரப்போரத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி தந்தை மருதமுத்து சொன்னது, மகன் கணபதியா பிள்ளையின் காதில், “கெட்டியா- கெட்டியா-” என்றேதான் கேட்டது. தந்தையைச் சத்தம் போடப் போனார். இயலவில்லை. அவர் முகத்தைப் பார்க்கக்


கோபுரம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நால்வரும், அந்த வீட்டில் உள்ளவர்களை மிருகங்களைப் போலக் கட்டிப் போட்டிருந்தார்கள். குடிசை வாசிகளுக்கு பங்களாவாகவும் பங்களாக்காரர்களுக்கு அவுட் ஹவுஸாகவும் தோன்றும் அந்த வீட்டின் பின்கதவின் அருகே போடப்பட்டிருந்த இரும்புக் கட்டிலோடு சேர்த்து கோமதி கட்டப்பட்டிருந்தாள். அவள் வாயில் தரையைத் துடைப்ப தற்காகப் பயன்படுத்தும் அழுக்குத் துணி அப்பிக் கிடந்தது. இரண்டு கைகளையும் எடுத்துக் கட்டில் கால்களில் கட்டிப் போட்டிருந்தார்கள். கண்களில் நீரூற்றாகி