கதையாசிரியர் தொகுப்பு: எஸ்.செல்வசுந்தரி

5 கதைகள் கிடைத்துள்ளன.

அடுக்கு மாலை

 

 பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு தடவை அடித்து விட்டு அது ஒய்ந்தது. மணி இரண்டாகி விட்டதா? ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது விடிய ஆரம்பித்து விடும். அதுவரைக்கும் இப்படித்தான் பாயில் புரண்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என மனது சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டது. வானத்தில் மேகம் மிதப்பது போல அவளது மனம் சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தது. சந்தோஷத்தில் தூக்கம் வராமல்


மழை

 

 அன்று காலை முதலே ரவியின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அடுத்த வாரம் அவனது அருமை தங்கை ராமலெட்சுமிக்கு கல்யாணம். தங்கைக்கு கல்யாணம் என்பது மட்டும் அவனது சந்தோஷத்திற்கு காரணமில்லை. இப்ப அவனை அப்பாவென்று கூப்பிட அவனுக்கும் ஒரு வாரிசு பொறந்திருக்கு… அவனையும் பார்க்க வேண்டும் என மனம் துடித்துக் கொண்டு இருந்தது. காலையில சம்பளம் வாங்கின கையோடு ஊருக்கு கிளம்பவேண்டும் என்று நினைத்துதான் சைட்டுக்கு வந்தான். ஆனால் இன்று கூலியாட்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டிய சூப்பர்வைசர்


யாத்திரை

 

 அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் தயார் செய்யும் போதோ, அன்று மாலை செய்திகளில் தான் தலைப்பு செய்தியாக மாறப்போவது தெரியாது தேவிக்கு. அப்துல்லாவிற்கு அரசாங்க வேலை. பத்து மணிக்கு அலுவலகம் போனால் போதும். அவர்கள் செல்வங்களான காவியன், இலக்கியா இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்ததால் காலை எட்டு மணிக்கே கிளம்பி விடுவார்கள். அலுவலக கேண்டினிலே மதியம் சாப்பாடு சாப்பிட்டு


கூட்டணிக் கட்சி

 

 தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல் கொசுக்கடியிலும், மூத்திர நாற்றத்திலும் தூங்க வேண்டாம். நாக்கை சாகடிக்கும் உப்பு சப்பில்லாத ஜெயில் சாப்பாட்டை சாப்பிட வேண்டாம். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறான். மறுநாள் அவனுக்கு விடுதலை என்பதை இன்று சாயங்காலம்தான் வார்டன் வந்து சொல்லிவிட்டுப் போனார். விடுதலை என்ற அந்த ஒற்றைச் சொல் ராமனுக்குள் பலவிதமான எண்ணங்களை எழுப்பி


வேஷம்

 

 வீட்டு நடையில் சலீம் காலடி எடுத்து வைக்கும் போது, நடையின் ஓசையின் மூலம் அவனது வருகையை தெரிந்து கொண்ட அவனது உம்மா பாத்திமா, “”டேய் சலீம்… நில் அங்கேயே… வீட்டுக்குள்ளே வராதே… உன்னை பெத்த என் வயித்துல பிரண்டைய வச்சுதான் கட்டணும். ஏண்டா என் வயித்துல வந்து பொறந்து, எங்க உயிரை வாங்குற. எங்களால இந்த தெருவுல தலை நிமிர்ந்து நடக்க முடியலைடா… நீ பண்ணிட்டு வந்திருக்கிற காரியத்துக்கு, நம்ம குடும்பத்தையே ஜமாஅத்தை விட்டு தள்ளி வச்சிருக்கணும்.