கதையாசிரியர் தொகுப்பு: அழ.வள்ளியப்பா

24 கதைகள் கிடைத்துள்ளன.

பொன்னனின் சுதந்தரம்

 

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொன்னன் அப்போது ஐந்தாவது வகுப்பிலே படித்துக் கொண்டிருந்தான். வழக்கமாக, பொன்னன் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பான். ஆனால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி காலையில் எட்டு மணி ஆகியும் எழுந்திருக்கவில்லை. அவனுக்கு ஏதாவது காய்ச்சலா? இல்லை, தலை வலியா? அதெல்லாம் இல்லை. நன்றாகப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் அம்மா அவனை நாலைந்து தடவைகள்


மான்குட்டி

 

 (1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும். குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல் இலை தழைகளையெல்லாம் எப்படித் தின்பது, எங்கே எப்படித் தண்ணீர் குடிப்பது என்றெல்லாம் கற்றுக் கொடுக்கும். அந்தக் காட்டுக்கு அடிக்கடி வேட்டைக்காரர்கள் வரு வார்கள். அவர்கள் வரும் போது கூடவே வேட்டை நாய்களையும்


திரும்பி வந்த மான்குட்டி

 

 ஒரு காடு. அந்தக் காட்டிலே ஒரு மரத்தடியில் இரண்டு புள்ளி மான்கள் படுத்திருந்தன. அவற்றிலே ஒன்று அம்மா மான்; மற்றொன்று குட்டி மான். அம்மாமான் தன் குட்டியைப் பார்த்து, “நீ எப்போதும் என் கூடவே இருக்கணும். தனியாக எங்கேயும் போய்விடாதே!” என்றது. “ஏம்மா, தனியாகப் போகப்படாதா?” என்று கேட்டது குட்டிமான். திரும்பி வந்த மான் குட்டி “நல்லவேளையாக இந்தக் காட்டிலே சிங்கம், புலியெல்லாம் இல்லை. இருந்தால், நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும். ஆனாலும் வேட்டைக் காரர்களால் நமக்கு எந்த


முன்கோபி ராஜா

 

 வெங்காயபுரம் ராஜாவுக்கு எப்போதுமே முன் கோபம் அதிகம். அதனாலே அவரை எல்லோருமே ‘முன் கோபி ராஜா’, ‘முன்கோபி ராஜா’ என்றே அழைப்பார்கள். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எவருக்குமே தெரியவில்லை. ஆகை யால், நாமும் அவரை முன் கோபி ராஜா’ என்றே அழைப்போமா? சரி. முன்கோபம் மிக அதிகமாக இருந்தாலும், அவ ருக்கு மூளை மிகக் கொஞ்சமாகவே இருந்தது. அவருக்கு ஒரு மந்திரி இருந்தார். அவர் பெயர் அறிவொளி. பெயருக்கு ஏற்றபடி நல்ல அறிவாளி யாக


ரோஜாச்செடி

 

 பூம்புதூர் பெரிய பட்டணமும் அல்ல; சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான ஓர் ஊர். அந்த ஊரில் பாரதி சிறுவர் சங்கம்’ என்று ஒரு சங்கம் இருக்கிறது. அந்தச் சங்கம் சில சங்கங்களைப் போல் தூங்குமூஞ்சிச் சங்கமாக இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப் பாக வேலை செய்துகொண்டேயிருக்கும். அந்தச் சங்கத்தார் வருஷத்துக்கு ஒரு முறை புஷ்பக் காட்சி நடத்துவார்கள். அந்தக் காட்சியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் கலந்து கொள்வார்கள். கலந்து கொள்வதென்றால், சும்மா வந்து காட்சியைப் பார்த்துவிட்டுப் போவதில்லை. ஒவ்


வித்தைப் பாம்பு

 

 அணிந்துரை – சி.சுப்பிரமணியம் மொழி, நாகரிகம் , கலை முதலியவற்றில் பெரிதும் ஒற்றுமை யுடையவர்கள் தென் பகுதி மக்கள். சரித்திர காலத்திற்கு முன் பிருந்தே இவ்வொருமைப்பாடு வேரூன்றி இருந்தது. ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வொற்றுமை உணர்ச்சி குறைந்து போய்விட்டது. காலம் செய்த இவ்விடையூற்றை நீக்கி, தென் பகுதி மக்களிடையே ஒரு பகுதியினரின் கருத்துக்கள், மற்றப் பகுதியினருக் கும் பரவும் வகையில் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் பாடுபட்டு வரு வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 1955-இல்


நல்ல நண்பர்கள்

 

 (தமிழக அரசினர் பரிசு பெற்ற புத்தகம்) மாலை நேரம்: மணி நான்கு இருக்கும். வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் ! வீரன் அதன் அருகே சென்றது. மிகுந்த இரக்கத்துடன், “ஏன் தங்கச்சி அழுகிறாய் ! என்ன காரணம் ?’ என்று கேட்டது. ஒன்றுமில்லை, அண்ணா ! என் உயிர்


யமனை வென்றவள்

 

 இளவரசி சாவித்திரி அவளுடைய தந்தை முன் நின்று கொண்டிருந்தாள். மெல்லிய கொடி போல அவள் அழகாக இருந்தாலும், அவளது மனம் உறுதியாக இருந்தது. முகத் தில் பிடிவாதம் தெரிந்தது. இந்த மாதிரி சமயங்களில் அவ ளது தந்தை வளைந்து கொடுத்துவிடுவார். “தந்தையே, நினைவிருக்கிறதா? என் கணவரை நானே தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் சொன்னதுண்டா இல் லையா? இப்போது உங்கள் வார்த்தையை நீங்களே மீறலாமா?” ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார் மன்னர். அதற்குள் நல்ல வேளையாக நாரத முனிவர்


சோனாவின் பயணம்

 

 ஓர் அம்மா ஒட்டகமும் சோனா என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், சுட்டுப் பொசுக்கும் மஞ்சள் நிற மணல் பளபளத்தது. திடீரென்று சோனா நின்றது; மணலில் பாதங் களைப் புதைத்துக் கொண்டு, “என்னால் இனி கொஞ்சம் கூட நடக்க முடியாது. ஒரே தாகமாக இருக்கிறது. எனக்குத் தண்ணீர் வேண்டும்” என்று முணுமுணுத்தது. உடனே அம்மா ஒட்டகம் கீழே குனிந்து அதைப் பார்த்து, “கண்ணே


ஏழு நாள் எச்சரிக்கை

 

 அஸ்தினாபுரத்து அரசனின் பெயர் பரீட்சித்து. அவன் வேட்டையாடுவதிலே மிகவும் வல்லவன். வேட்டையாடும் போது உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் என்பதற்காக மட் டுமே அவன் வேட்டையாடுவதில்லை. காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் நலமாக, மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி வந்தான். ஒருநாள் அரசன் வேட்டையாடும் போது, ஒரு மான் மீது அம்பு எய்துவிட்டான். அடிதான் பட்டதே தவிர, அது இறந்துவிடவில்லை. வேட்டை விதிகளின்படி மிருகங்களைக் கொல்லலாமே தவிர, அவற்றை முடமாக்கக் கூடாது. ஒரு மிருகத்தைக் காயப்படுத்தி,