கதைத்தொகுப்பு: தினகரன் வாரமஞ்சரி

14 கதைகள் கிடைத்துள்ளன.

வாப்பா இல்லாத ஊரில்…

 

 நேற்று இரவு ஒன்பது மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டவன் காலை ஆறுமணிக்குத்தான் ஊர் வந்து சேர்ந்தான். வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்காவது வந்து சேர வேண்டிய பிரயானம் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத தடங்கல்களால் தாமதமாகிவிட்டது. வீட்டுக்கு வந்த அவனை தங்கையும் கணவரும் வரவேற்றார்கள், சுமார் பத்து வருடங்களின் பின் சொந்தநாட்டுக்கு வந்திருக்கின்றான்,போன புதிதில் வாப்பாவின் இழப்பால் நாட்டுக்கு வரமுடியாமலும் அங்கும் நிம்மதி இல்லாமலும் நாட்களை கடத்தி இருக்கின்றான், “கவலப்பட்டு என்ன செய்ய எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” “எல்லாம் நன்மைக்குத்தான்”


முள்ளை முள்ளால்…

 

 பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன் சம்சுதீன் தனது நண்பரான உதுமானைச் சந்திப்பதற்காக அவரது வீடு நோக்கி நடந்தார். நீலமும், பச்சையுமான கோடுகளுடன் கூடிய சாரனொன்றை உடுத்து, முடிகள் நிறைந்த சதைப்பிடிப்புள்ள வெற்று மார்புடன் ஆடுகளைக் காலைக்குள் சாய்த்துக் கொண்டிருந்த உதுமான் இவரைக் கண்டதும் முகமலர்ந்தார். பள்ளிக்குத் தொழ வருவீங்க எனப் பார்த்தன். காணல்ல. அதான் ஊட்டுக்கு வந்த ‘ என்றார் சம்சுதீன். காலைக்குள் நான்கைந்தும், வெளியே ஐந்தாறுமாக ஆடுகள் நின்றன. வெளியே நின்றவற்றை உள்ளுக்குள் ஏற்றுவதில்


தெரிவு அந்தரத்தில்…

 

 பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்று கொண்டு முன்னுக்குப் பார்க்கிறேன், எந்தநாளும் பார்க்கிற கட்டிடம் தான். இன்றைக்கி அது சென்ற மேரிஸ் முஸ்லிம் மகாவித்தியாலயமாகத் தெரிகிறது. அது ஒரு காலத்தில் அரசாங்கம் பொறுப்பெடுப்பதற்கு முன், ஒருபேர் போன ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை. ஆயிரக்கணக்கான வர்களைப் படிப்பிச்சி நல்ல வழிகளைக் காட்டி உருவாக்கிவிட்டு, எந்தவித பெருமையும் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது அது! அந்தக் காலத்தில நகரத்தின் இன்னொரு இடத்தில் இருந்த சென்ற் மேரிஸ் கொலேஜின் கொன்வென்ட்ல படிச்ச பிள்ளதான்


மௌன நாடகம்

 

 காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை ஒரே மூச்சில் படித்தாள்! உன் கடமையில் தவறும்போது மட்டும் வருத்தப்படு! முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை! “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. தத்துவம் சொல்வதைப்போல் நடந்தால் மனிதன் எங்கோ போயிடுவான். கலண்டரில் கடிந்து கொண்டவள் தாளைக் கிழித்துக் குப்பைக்கூடைக்குள் எறிந்தாள். பொங்கலுக்கு இன்னமும் ஐந்தே ஐந்து நாட்கள். தைபிறந்தால்


பக்கத்து வீடு

 

 “அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ்ட காவலா, பத்திரமா வந்து சேருங்கம்மா” மனமகிழ்வுடன் கூறியவாறே காதிலிருந்த டெலிபோன் றிசீவரைக் கீழே வைக்கிறார் அன்சார் ஹாஜியார். அவரின் மூத்த மகள் ஹம்தாவும், அவளின் கணவனும் பிள்ளைகளும், சுமார் ஆறு வருடங்களின் பின்பு இன்று அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருகிறார்கள். “புள்ளைங்க எயார்போட் வந்துட்டாங்களாங்க?” ஆவலாய்க் கேட்டாள் அவரின் அன்பு மனைவி ஸரீனா. “வந்துட்டாங்க ஸரீனா… சரி… நம்ம மகன் அப்ரார்தானே… எயார்போட் போன… புதுக்காரத்தானே கொண்டுபோயிருக்காரு?” மனைவியைப் பார்த்துக்கேட்டார் அன்ஸார் ஹாஜியார். “சுபஹூ தொழுதுட்டு,


சுபத்திராவிற்கு என்ன நடந்து விட்டது?

 

 அன்றைய அதிகாலைப்பொழுது வழக்கத்திலும் பார்க்க அழகாகவே புலர்ந்தது போலிருந்தது சுபத்திராவுக்கு. தூரத்துக் கோயிலிலிருந்து ண்ங்க்! ண்ங்க்! என்று மணியோசை காற்றோடு மெல்லியதாய்த் தவழ்ந்து வந்து யன்னல் திரைகளைச் சுண்டிச் சுருதி சேர்க்க முயன்றது. யன்னலினூடே வழுக்கியபடி விழுந்து சூரியன் முதலில் சுபத்திரா படுத்திருந்த கட்டிலின் கரையைத் தொட்டு அடுத்து அவளின்மீது ஏறித் தவழ எத்தனித்தவன்போல் ஊர்ந்து வந்தான். சுபத்திரா தன்னைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டாள். இன்றோடு நான்கு நாட்கள். இப்படியே வெளியுலகை நோக்குவதும் பகலில் தன்னைக் காண


புதிய பாதை

 

 காலை பத்து மணி! பத்தாம் திகதி. ஞாயிற்றுக்கிழமை…. தினத்தாள் கலண்டரின் தாளைக் கிழிப்பதற்காக நோட்டம் விட்ட அனிதா, அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகத்தை ஒரே மூச்சில் படித்தாள்! உன் கடமையில் தவறும்போது மட்டும் வருத்தப்படு! முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை. முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை! “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. தத்துவம் சொல்வதைப்போல் நடந்தால் மனிதன் எங்கோ போயிடுவான். கலண்டரில் கடிந்து கொண்டவள் தாளைக் கிழித்துக் குப்பைக்கூடைக்குள் எறிந்தாள். பொங்கலுக்கு இன்னமும் ஐந்தே ஐந்து நாட்கள். தைபிறந்தால்


மையத்து வீடு

 

 ஜனாஸாவைத் தூக்குங்க நேரமாச்சி பள்ளிக்குப் போக்குல்ல அஸருக்கு பாங்கு சொல்லவும் சரியா இருக்கும்” என்று ஜனாஸா வீட்டிலிருந்து அவசரப்படுத்தினார் மோதினார். இல்யாஸ் காக்கா என்றால் ஓட்டமாவடியில் தெரியாதவர்களே இல்லை. அந்தளவுக்கு மக்களிடையே அறிமுகமானவர் தான் இல்யாஸ் காக்கா. மரணவீடு, திருமணவீடு, வருத்தக்காரர் வீடு என்று எங்கு வேண்டுமானாலும் காக்காவைக் காணலாம். அதனால் இல்யாஸ் காக்கா ஊரில் எல்லோருக்கும் பரிச்சயமானவர். ஊரில் பெரியவர் முதல் சிறியவர் வரை இல்யாஸ் காக்கா என்றே அழைப்பர். காய்ச்சல் வந்து ஒரு கிழமையா


வேண்டாம் வெளிநாட்டு வேலை

 

 “ஏஜென்சிகாரர்கள் வந்திருக்கிறார்கள், நஸீராவை வெளிநாட்டுக்கு அனுப்ப. என்ன அநியாயம் இது இவங்க யாரையும் விட மாட்டாங்க போலிருக்கே” என அந்த ஊரிலுள்ள எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பின்தங்கிய பகுதியான அந்தக் கிராமம் ஏழை மக்களை அதிகமாகக் கொண்டது. அதனால் வருகின்ற ஏஜென்சி காரர்கள் எல்லோரும் அங்கேதான் செல்வார்கள். கல்வி அறிவு குறைந்த அந்த மக்களை ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி அங்குள்ள பெண்களை வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக அனுப்புவதற்காக அழைத்துப் போவார்கள். அதில் எத்தனையோ பேர் பல்வேறு


பகுத்தறிவுக்கு சவால்

 

 “என்னப்பா, எங்கட மூத்தவன நினைக்க கவலையாக வருகுது! அவனாலதான் எனக்கு வருத்தங்கள் கூடிக்கொண்டு வருகுது! எந்த வேலைக்கும் போறானில்ல! நாங்களாப் போய் சேர்த்துவிட்டாலும் அதில நிண்டு பிடிக்கிறானில்ல! குழப்பம் பண்ணிக் கொண்டு வந்து போடுறான்! சினேகிதர் மாரோட சேர்ந்து, சந்திவெளிய நிண்டு பேப்பிராக்குப் பார்க்கிறான்! அதுகும் பெட்டைகளோட சேட்டவிட்டதென்று இங்க முறைப்பாடு!…. என்ர பிள்ளையில ஒரு பிழையும் இல்ல! அவன் தங்கமான பிள்ளை!… எல்லாம் கிரகக் கோளாறால வந்த வினைதான்! நீங்க ஒருக்கா எங்கட வேலுப்பிள்ளை சாத்திரியாரிட்ட