கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 20, 2021
பார்வையிட்டோர்: 5,781 
 

கதிரவனுக்கு காய்ச்சல் போலிருக்கிறது. காலையில் இருந்தே மேக ஜமுக்காளத்தில் அவள் முடங்கிக் கிடந்தான். பகலா இரவா என்று சந்தேகப்படும் அளவுக்கு வானம் இருண்டிருந்தது. சில்லென்ற காற்று இழையோடி மனதுக்குக் குளுமையைச் சேர்த்தது. ஆனால் புவானவுக்கோ?

அந்த ஏழு வருடங்களில் எத்தனையோ நடந்து முடிந்துவிட்டன. சமுதாயத்தின் கண்ணடியும் சொல்லடியும் புவனாவின் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தி மறையாத ஒரு வடுவாகவே மாறிவிட்டது. அந்த காரில் மட்டும் அவள் தொடர்ந்து இருந்திருந்தால் இந்நேரம் அவள் குடும்பமே புதைக்கப்பட்டு அந்த இடத்தில் புல் பூண்டுகள் முளைத்து காடாகியிருக்கும். நடந்து போனதை நினைத்துப் பெருமூச்செறிந்தாள் புவனா.

பொற்செல்வி தாயின் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். இந்தக் குழந்தைதான் அந்தச் சம்பவத்தினால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு விட்டாள். பள்ளிக்குச் செல்லும் போதும் வகுப்பறையில் இருக்கும் போதும் சக மாணவ மாணவிகளின் கிண்டலும் கேலியும் அவளை எத்தளை ரணப்படுத்தி விட்டது. அவள் அடைந்த அவமானம் கொஞ்சமா?

“மம்மி ஸ்கூல்ல எல்லோரும் என்னைக் கிண்டலும் கேலியும் பண்றாங்க….. எனக்கு ரொம்ப ஷேமா இருக்கு. இனிமே நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன் போ…..” என்று சொல்லி அவள் கண்களைக் கசக்கிய போது புவனா ரொம்பவே துடித்துப் போனாள். குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கலங்கிப் போனாள். அதற்குப் பிறகுதான் அந்த ஊரை விட்டுக் கிளம்புவது என்ற முடிவிற்கு வந்தாள்.

மாமனார், மாமியார் என்ன சொல்வார்களோ என்ற கவலை வேறு அவளுக்கு, அவர்களை அனாதைகளாக விட்டு விட்டு குழந்தை பொற்செல்வியை மட்டும் சுட்டிக்கொண்டு கிளம்பிவிட அவளுக்கு மனம் இடம் தரவில்லை . காரணம் அவர்கள் அவளுக்கு மாமனார், மாமியாராக இருக்கவில்லை. பெற்ற மகளைப் போல் அவளிடம் பாசம் பொழிந்தனர்.

ஊரை விட்டுச் செல்லும் யோசனையை அவர்களிடம் புவனா தெரிவித்த போது அதற்காக அவர்கள் காத்திருந்தது போல் உடனே சரியென்று சொல்லிவிட்டனர்.

“ஆமாம் புவனா… நீ எடுத்த இந்த முடிவு மிகவும் சரியானது. இடத்தை மாற்றுவோம். இங்கேயே இருந்தால் ஊரார் நாவில் நாம் கேலிப் பேச்சாக இருக்க வேண்டியது தான்”.

மாமனாரும், மாமியாரும் தன்னுடன் அரை விட்டு வர முடிவெடுத்த போது புவனா சந்தோஷப்பட்டாள். கட்டின புருஷன் சரியாக இருந்தால்போதும். மற்றவர்களைப் பற்றிக் கவலையில்லை என்பது புவனாவைப் பொறுத்தவரையில் நேர் எதிர், மாமனாரும் மாமியாரும் மட்டும் அப்போது இல்லாதிருந்தால் அவள் உடைந்துதான் போயிருப்பாள்.

தோட்டத்தில் வளர்ந்திருந்த அந்த ரோஜா மலர்களையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா. அழகானதற்கு எப்போதுமே ஆபத்துத்தானோ என்று முணுமுணுத்தாள்.

இந்த மலர்களைப் பார்ப்பதில் – மெல்லத் தொட்டு ஆனந்தமடைவதில் எவ்வளவு சந்தோஷம்! ஆனால் சிலர் இதையும் கசக்கி முகர்ந்து காலடியில் போட்டு நசுக்கி சர்வ நாசம் செய்து விடுகிறார்களே… எள்ன ஜென்மங்கள்…. சி…..

அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாவம் எத்தனை சின்னப் பெண்…மழலை மாறாத பருவம். தொட்டுத் தூக்க, பேசிச் சிரித்து ஆனந்தமடைய வேண்டிய மலராத மொட்டல்லவா அது….

பாவி.. எப்படித்தான் அந்த மொட்டை நாசம் செய்ய அவனுக்கு மனம் வந்ததோ… வெறி பிடித்த மிருகம்….

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்களே அப்படிப்பட்ட அந்தக் குழந்தையை….

நினைக்க நினைக்க புவனாவுக்கு நெஞ்செல்லாம் எரிந்தது. நெருப்பை யள்ளித் தலையில் கொட்டியது போல் துடிதுடித்துப் போனாள்.

சாதாரணமாக ஒரு குழந்தையை மெல்ல அதட்டினாலே அழுதுவிடும். அந்த அழுகையைப் பார்க்கும்போதே நமக்கு உள்ளமெல்லாம் வலிக்கும். அப்படிப்பட்ட ஒரு குழந்தையை…. துடிக்கத் துடிக்க… அடப்பாவி.. நீயும் ஒரு மனிதன்தானா….?

புவனா எதை மறக்க நினைக்கிறாளோ அதுவே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளைச் சித்ரவதை செய்தது.

பேப்பர்களில் எல்லாம் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவன் மட்டும் நல்லவனாக இருந்திருந்தால்… செய்த குற்றத்தை, இல்லை, இல்லை அந்த மகா பெரிய பாவத்தை நினைத்து நினைத்துச் சிறையிலேயே சாப்பிடாமல் கொள்ளாமல் எப்பொழுதோ உயிரை விட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் உயிரோடு இருக்கிறானே… என்ன ஜன்மம் அது!

அதைவிடக் கேவலம்.. அவன் மீது கருணை காட்ட வேண்டுமாம்… இள திபதிக்கு கருணை மனு வேறு விண்ணப்பித்திருக்கிறானாம். பற்றி எரிகிறது உடம்பெல்லாம்.

கண்களை இறுக மூடிக் கொண்டாள் புவனா. அவளுக்கு எதுவுமே பிடிக்கவில்லை .

படித்துக் கொண்டிருந்த பொற்செல்வி புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பாட்டியிடம் சென்று படுத்துக்கொண்டாள்.

புவனா மட்டும் படிப்பறிவு இல்லாதவளாக இருந்திருந்தால் அந்தச் சமயத்தில் அவள் நிலைகுலைந்துதான் போயிருக்க வேண்டும். படித்த படிப்பு அவளுக்குக் கைகொடுத்தது. தன் சொந்தக் கால்களில் நிற்க வைக்க அவளுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. அந்த நேரத்தில் அவளுக்கிருந்த ஒரே சொத்து அவள் படித்த பட்டப்படிப்புதான்………

திடீரென்று அவள் நினைவுகள் தடைப்பட்டன. யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்க, எழுந்து போய் கதவைத் திறந்தாள். வெளியில் நின்றவர்களைப் பார்த்தபோது தீயை மிதித்தது போல் திடுக்கிட்டுப் போனாள் புவனா, இவர்களுக்கெப்படி தனது இருப்பிடம்….? |

எங்கே வந்தீர்கள்? ஏன் வந்தீர்கள்? என்று எதுவுமே கேட்கவில்லை அவள். உள்ளே வாருங்கள் என்றும் அவள் கூப்பிடவில்லை . அவர்களாகவே உள்ளே வந்து அமர்ந்தார்கள். புவளா எதுவுமே பேசவில்லை. பல நிமிடங்கள் மௌனமாக கரைந்து கொண்டிருந்தன. வந்தவர்கள் அந்த அமைதியைக் கலைக்கத் தொடங்கினர். அவர்கள் நான்கு பேரும் அவள் கணவனின் நெருங்கிய நண்பர்கள். கட்சிக்காரர்கள். பரபரப்பாகப் பேசப்படுபவர்கள்.

‘மேடம்.. உங்க கவலை எங்களுக்குக் தெரியாமல் இல்ல… இதெல்லாம் நடக்கணும்னு வதி. யாரை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம். வாறது வந்துதானே தீரும்….. அதை மாத்தறதுக்கு நாம யாரு….?”

வந்தவர்கள் ஆறுதல் சொல்வதாக நினைத்து தத்துவம் பேசினார்கள். செய்ததை செய்துவிட்டு விதியின் பேரில் குற்றம் சுமத்துவது வேடிக்கையாகிவிட்டது இவர்களுக்கு…..

புவனா வாயைத் திறக்கவே இல்லை .

” பப்படர் வே பார்த்திருப்பீங்க… அதான் உங்க புருஷனுக்கு மரண தண்டனை முடிவாயிடுத்து. ஜனாதிபதிக்கு கருணை காட்ட மனு போட்டிருக்கான். ஆனா அது மட்டும் போதாது, நீங்க நினைச்சா அவன் உயிரைக் காப்பாத்த முடியும்.”

வந்தவர்கள் பேச்சை இடையில் நிறுத்தி புவனாவை ஏறிட்ட னர்.

அவள் என்னவென்று இப்போதும் கேட்கவில்லை. மௌளமாகவே இருந்தாள். அவர்களாகவே கூறினார்கள்.

“ஒரு பெண் குழந்தையை வச்சுக்கிட்டு நீங்க தன்னந்தனியா எப்படிக் காலம் தள்ள முடியும்? உங்களை நம்பி உங்க மாமனார் மாமியார் வேறே இருக்காங்க. உங்களுக்கும் சின்ன வயசு. ஆண் துணையில்லாம இந்த உலகத்தில் எப்படிக் காலம் தள்ள முடியும்? அதனால…” இப்போதுதான் புவனா வாயைத் திறந்தாள். “எங்களைப் பற்றி உங்க யாருக்கும் கலலையே வேண்டாம். சொல்ல வந்ததைச் சொல்லுங்க…”

வந்தவர்கள் புவனாவைத் தீர்க்கமாகப் பார்த்தார்கள்.

‘என்னதான் உங்க புருஷன் கருணை மனு கோரியிருந்தாலும் உங்கள் கைப்பட நீங்களும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதுங்க. அவனை நம்பி நீங்களும் ஒரு பெண் குழந்தையும் அவனுடைய தாய் தகப்பனும் இருப்பதை உருக்கமாக எழுதுங்க. அவனுக்குக் கருணை கிடைக்காத பட்சத்தில் ஒரு குடும்பமே நிர்கதியாய் நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதை விளக்கமாக எழுதுங்க, நான்கு உயிர்கள் கருணை காட்டப்படாத பட்சத்தில் பலியாகும் என்பதை எடுத்துக் காட்டுங்க. நிச்சயம் உங்க கணவனுக்கு கருணை காட்டப்படும்” என்றனர்.

புவனா எதுவும் பேசவில்லை. நெஞ்சிலே வைராக்கியம் நிறையவே கொண்டாள்.

வந்தவர்கள் அவளுக்கு ஒரு சில ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டுக் கிளம்பினர்.

அன்று இரவெல்லாம் புவனா உறக்கமின்றித் தவித்தாள். இமைக் கதவுகள் கண்களை மூடமாட்டேன் என்று சத்தியாக்கிரகம் செய்தன….

அன்று புவனாவுக்குக் கல்யாண நாள். பத்து வருடங்கள் முடிந்து பதினோறாவது ஆண்டின் இனிய துவக்கம். கோயிலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் பார்த்து.

திபு திபு வென்று இரண்டு போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தனர். “எங்கேம்மா உன் புருஷன்…. கூப்பிடு….” புவனா ரொம்பவும் மிரண்டு போனாள். “ஏன் என்னாச்சு…. அவரென்ன தப்புப் பண்ணார்…’ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு போலீஸ்காரர் மாடிக்குச் சென்று புவனாவின் கணவன் கணேசனைத் தரதரவென்று இழுத்து வந்தார். கையில் கை விலங்கு மாட்டப்பட்டது.

கணேசன் கத்தினாள். “என்னை ஏன் அரெஸ்ட் பண்றீங்க… நான் ஒரு தப்பும் பண்ணிலியே…”

“என்னது…. நீ தப்புப் பண்ண லியா….? அதான் அரே சொல்லுதே? நடய்யா ஸ்டேவனுக்கு…. கேள்வியா கேக்கிறே…..”

தரதரவென்று கணேசனை இழுத்துக் கொண்டுபோய் வேனில் ஏற்றிச் சென்றனர் போலிஸார்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் சாட்டம் கூடிவிட்டது. பலரும் பலவிதமாகப் பேசினர். காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. புவளாவிற்கு மயக்கமே வந்து விட்டது. |

“என்னவாம்? கணேசன் என்ன தப்புப் பண்ணினாள்? ஏன் அவனைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போகுது?”

“அதையேன் கேக்கிறே? நம்ம கோவிந்தசாமியோட சின்ன பொண்ணு பத்மினியை இவள்”.

“எள்ளது? அது சின்னக் குழந்தையாச்சே.. ஏழு வயசுதானே இருக்கும். அடப்பாவி… இவனுக்கேன் புத்தி இப்படிப் போச்சு…..” பலரும் பலவிதமாகப் பேசினர். “அதுமட்டுமில்லே… அந்தக் குழந்தையைக் கொன்னு போட்டுட்டானாம்…” “நல்ல குடும்பம்டா சாமி… இது…”

காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் துடிதுடித்தாள். அவமானத்தால் கனிக் குறுகிப் போனாள் புவனா.

“போதும்! இங்கிருந்து எல்லாரும் பொங்க!” என்றபடி குலுங்கிக் குலுங்கி அழுதாள். அழுது அழுது கண்கள் வீங்கிச் சிவந்தன. அவள் அழுவதைப் பார்த்து குழந்தை பொற்செவ்வியும் அவள் மடியில் விழுந்து அலறினாள்.

வயதான காலத்தில் அவளது மாமனார் மாமியார் இப்படி ஒரு இழுக்கை மகன் ஏற்படுத்தி விட்டானே என்று அவமானத்தால் குன்றிப் போயினர்……

புவனா சட்டென்று எழுந்தாள். பேப்பரும் பேனாவும் எடுத்தாள். வந்தவர்கள் கூறியது போல் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதத் தொடங்கினாள்.

“மேன்மை தங்கிய பாரதத்தின் முதல் குடிமகனுக்கு புவனா என்கன்ற ஓர் அபலைப் பெண் எழுதுவது,

ஏழு வயதுச் சிறுமி பத்மினியைக் கற்பழித்துக் கொலையும் செய்த குற்றத்திற்காக அடுத்த வாரம் மரணதண்டனைக்கு ஆளாகும் கணேசனின் மனைவி (இப்படிச் சொல்வதற்கு எனது மனமும் நாவும் கூசுகின்றன) நான். எனது கணவனுக்குக் கருணை காட்ட வேண்டுமென்று நான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதவில்லை. மாறாக எனக்கும் எனது மகளுக்கும், எனது மாமனார் மாமியாருக்கும் கருணை காட்ட வேண்டுமென்று இதன் மூலம் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வெறி பிடித்த கொடுமையான சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சமுதாயத்தில் நாங்கள் பட்ட அவமானமும் இன்னல்களும் போதும்… போதும். இனியும் நான் அவரை, மன்னிக்கவும் அவனை என் கணவனாகவும், என் குழந்தை தனது தகப்பனாக வும், எனது மாமனார் மாமியார் தனது மகனாகவும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. மிருகத்தை விட கேவலமாய் இழிசெயல் செய்த ஒருவனை நாங்கள் எப்படி ஒரு மனிதனாக மதிக்க முடியும்? எப்படி மனமு வந்து ஒன்றாக வாழ முடியும்? சமுதாயத்தில் நாங்கள் நாங்களாகவே தலை நிமிர்ந்து வாழ விரும்புகின்றோம். அதனால் எங்களுக்குத் தாங்கள் கருணை காட்ட வேண்டும்.

இன்னொன்றையும் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கொடுமைகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இது நடந்து ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வியர்வை காயும் முன் தொழிலாளிக்கு அவன் உழைத்ததற்கான கூலியைக் கொடுத்துவிட வேண்டும் என்பது போல ஒரு குற்றவாளிக்கும் அவன் செய்த குற்றக்கற்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டுவிட வேண்டும். இது போன்று பாலியல் பலாத்காரம் செய்தவர்களை ஊரார் முன் நிறுத்தி மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும்.

அந்த ஏழு வயதுச் சிறுமி பத்மிளியைச் சிறிது கண் மூடி நினைத்துப் பாருங்கள். ஒரு இளம்நாற்று ஒரு வெறி பிடித்த மிருகத்தால் முற்றிலும் மேயப்பட்டு சர்வ நாசம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தை என்ள பாடு பட்டிருப்பாள்..?

தனக்குக் கருணை காட்ட வேண்டுமென்று அந்த மிருகமும் தங்களுக்கு கருணை மனு கோரியிருப்பதாக அறிந்தேன். தன்மானமுள்ள எந்தத் தமிழனும் இப்படிப் படுபாதகம் செய்துவிட்டு கொஞ் சமும் கூச்சநாச்சமின்றி கருணை காட்டவேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டான். தயவுசெய்து…. தயவுசெய்து அந்த மிருகத்திற்கு கருணை காட்டி எங்களை தண்டித்து விடாதர்கள். பாவம் செய்தவன் அவன். நண்டளை எங்களுக்கு வேண்டாம். இந்தச் சமுதாயத்தில் நாங்கள் தலை நிமிர்ந்து வாழ எங்களுக்குக் கருணை காட்டுங்கள். இப்படிக்கு அபலை புவனா. எழுதிய கடிதத்தை உறையில் போட்டு ஒட்டினாள். நாளை எழுந்ததும் முதல் வேலையாக அதனைத் தபாலில் சேர்த்துவிடத் தீர்மானித்தாள். இப்போது அவளுக்கு உறக்கம் வந்தது. மனதில் பாரமும் குறைந்தது. புவனா நாளை புதிதாகப் பிறக்கப் போகிறாள்.

– அக்டோபர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *