எந்நன்றி கொன்றார்க்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 208 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்த வீடு ஒரு பன்றிக்குடில் மாதிரி, பனை ஓலைகள், மகுடம் மாதிரி மேல் பரப்பை மறைத்தும், மறைக்காமலும், காற்றோடு போராடி அலுத்த சல்லடைகளை விழுப்புண்ணாக்கி, கன் இமைபோல் முடிமூடி ஆடிக் கொண்டிருந்தன முத்தையன் மாடுகளை அவிழ்த்து, தொட்டியில் ‘தன்னிர் காட்டிவிட்டு’, வைக்கோலை அளிக்குள் வைத்து, மாடுகளை மீண்டும் கட்டிவிட்டு நடையைக் கட்டினான்.

அந்தத் தெருவிலேயே, பெரிய வீடான இன்னொரு ஒலை வீட்டிற்குள், அவன் நுழைந்தபோது, அவன் பெரியப்பா முத்துப்புதியவன், நார்க் கட்டிலில் உட்கார்ந்து வேப்பங்குச்சியைப் பல்லில் குத்திக் கொண்டிருக்கையில், மூட்டைப் பூச்சிகள் அவர் முதுகைக் குத்தின முத்தையனின் வருகையை அங்கீகரித்ததுபோல், வேப்பங்குச்சியைக் கீழே எறிந்துவிட்டு வாயைத் துண்டால் துடைத்துவிட்டு அவனை உட்காரச் சொல்வது போல், ஊன்றிக் கொண்டிருந்த ஒரு கையை எடுத்து, மடியில் வைத்தார் முத்துப்புதியவன்.

முத்தையன் உட்கார்ந்து கொண்டே, “என்ன பெரியப்பா நான் சொன்னது” என்றான்.

“அது சரிப்பட்டு வராதுப்பா”

“ஏன் சரிப்படாது? போடு போடுன்னு போட்டே ஆகணும். நம்ம தம்பி சப் இன் ஸ்பெக்டர் பதவி ஏத்துக்கிட்டாள். இதைக் கொண்டாடாட்டா, எதைக் கொண்டாடறது? இப்போ, பேக்குப்பய பிள்ளைககூட பிறந்த நாளுன்னு கேக் வெட்றான் நீரு என்னடான்னா “

அதுக்கில்ல முத்தையா எதோ சின்னச்சாமி போலீஸ்ல சேந்துட்டான் இதை எதுக்குடா பெரிசு படுத்தனும்?”

முத்தையனுக்கு ஆத்திரம் வந்தது. “நீரு சும்மா கிடயும் சின்னப்பய அருமை எனக்குல்லா தெரியும் நீரு நாலு காடு கத்தியிருந்தா, இப்படிப் பேசியிருக்கமாட்டீர் பாவூர் சத்திரத்தில் ஒரு போலீஸ்காரன்…ஒருவன், நான் வண்டில அதிகமா பாரம் ஏத்திக்கிட்டுப் போனா ஒரு டியும், இரண்டு போண்டாவும் அபராதம் போடுவான் நேத்து என்னடான்னா, எனக்கு நெஸ்கட் காபி வாங்கித் தரான் நம்ம சின்னப்பய சின்ன எஜமான் ரூட் வேலையில் சேர்ந்துட்டாரேன்னு கேக்குறான்.

முத்துப்புதியவன், ஒரு தந்தைக்குரிய பெருமையில், கடித்த மூட்டைப் பூச்சியை நசுக்காமல் வெயிலில் துக்கிப் போட்டுக் கொண்டே, “வேண்டான்னு பாக்குறேன். அதோடு பணம் இல்ல. ” என்றார்.

“நம்மள, இந்த ஊர்க்காரப் பயல்க என்னபாடு படுத்தறாங்கன்னு உமக்குத் தெரியும் இனிமெ கிட்ட வருவாங்களா? இவங்க முன்னால எங்க சின்னப்பய பெரிய மனுஷனாயிட்டான்னு காட்டவேண்டாமா? நீரு பேருக்கு வந்து நின்னா போதும், பணத்தை நான் கவனிச்சுக்கிடுறேன் “

முத்தையன், பெரியய்யாவின் பதிலுக்குக் காத்திராமல், அங்கே கிடந்த கோடாலி’யை எடுத்துக் கொண்டு மரம் வெட்டப் போய்விட்டான் முத்துப்புதியவன், முத்தையன் பணம் செலவழிக்கப் போகிறானே என்று சங்கோஜப்படவில்லை ஏற்கனவே, சின்னப்பயல் என்ற செல்லப் பெயரைக் கொண்ட சின்னச்சாமி, பி. ஏ. படிப்பதற்காக, நிறையப் பணம் கொடுத்திருக்கிறான். அந்த உதவி சாகரத்தில், பெரியய்யாவின் சங்கோஜகாயம் கரைந்து போய்விட்டது.

அந்த ஊரில் முத்துப்புதியவனும், அவரது சொந்தக்காரர்களும் எளியவர்கள் ஆள் பலமும், பண பலமும் இல்லாத அவர்களை, பக்கத்துத் தெருக்களில் உள்ள காரை வீட்டுக்காரர்கள், ஒரு சின்னத் தகராறு வந்தாலும் போதும். கை வைத்துவிடுவார்கள் முத்துப்புதியவனையே எத்தனையோ தடவை அடித்திருக்கிறார்கள் முத்துப்புதியவன் திருப்பி அடிப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யமாட்டார் அந்த முயற்சியின் விளைவகள் அவருக்குத் தெரியும் சமாதான சக வாழ்வு’ வேண்டுமானால், நூறுக்கும் மேலான தடியன்களைச் சொக்காரர்களாகக் கொண்டவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்பது, அவருக்கு அடிகொடுத்த பாடம் இவர் வீட்டு ஆட்டுக்குட்டி, காரை வீட்டுக்காரன் ஆறுமுகம் வயலில் மேய்ந்தால், ஆறுமுகம் பெரியப்பா பேரன் வந்து, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டுபோய், சமையல் செய்து விடுவான் இப்படிச் செய்யலாமா என்று முத்துப்புதியவன் கேட்பதில்லை ‘ஆட்டைக் கொண்டு போய்த் தின்னதே தின்னான் நமக்கும் கொஞ்சம் கறி கொடுத்தி ருக்கலாமே என்றுதான் நினைத்துக் கொள்வார் இவர் வீட்டு வயலில், காரை வீட்டான் ஆடு மேய்ந்து, இவர் அதுமேல் ஒரு கல்லைப் போட்டால் போதும், காரை வீட்டுக்காரர்களின் வேலைக்காரர்கள் வந்து இவரை அடிப்பார்கள் இப்படி அடிபட்டு அடிபட்டு, உடம்பில் வைரம் பாய்ந்த முத்துப்புதியவன், ஊர்க்காரர்களைப் பகைக்காமல் அஞ்சி வாழ்வது பழக்கமாகிவிட்டது அப்போது சின்னப்பையனாக இருந்த முத்தையனிடம் ஆற்றாமையால் வெறுமையும் சினமும் மிஞ்சும், அதை அவன் மாடுகளின் முதுகில் காட்டுவான்.

முத்தையனுக்கு அப்போது முப்பது வயதிருக்கும் காரை வீட்டான் ஒருவன், நடுத்தெருவில், பெரியம்மாவை, புளியவிளாறால் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான் ஏதோ அவர்கள் தோட்டத்தில் ஒரு முருங்கைக்காயைப் பறித்துவிட்டாளாம். வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த முத்தையன், வண்டியிலிருந்து குதித்து, அடித்துக் கொண்டிருந்தவனை நாலு அறை போட்டுக் கீழே தள்ளி, தலையில் காலை வைத்துக் கொண்டான் இதைப் பார்த்த காரை வீட்டார்கள் முப்பது பேர் திரண்டு வந்தார்கள் வண்டியில் இருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு “ஏல, ஒரு அப்பனுக்குப் பிறந்தவங்கன்னா இங்க வாங்கடா” என்று கர்ஜித்த முத்தையனைக் ‘கை வைக்கப் பயந்து, விவகாரம் வைத்தார்கள் வயசுப் பயல் ஒருவன் மட்டும் சிலம்பு ஆடத் தெரிஞ்சவன் மாதிரி ஒரு கம்பைச் சுத்திக்கிட்டு வந்தான் முத்தையன் கோடாலிக் காம்பைப் பிடித்துக் கொண்டு அவனை நோக்கி ஓடியபோது, சென்னையில் சிலம்பு கற்ற அந்தச் சிலம்பன் வீட்டை நோக்கி ஓடினான்.

அன்றிலிருந்து முத்துப்புதியவன் வகையறாஆை காரை வீட்டார்கள் அடிப்பது கிடையாது இப்போது முத்தையனுக்கு நாற்பது வயதாகிவிட்டது வறுமையின் வெறுமையால் டி பி வந்து, பிறகு அது குணமானாலும் அவனின் அஞ்சாமைக் குணம் போய்விட்டது இதைத் தெரிந்தவர்கள் போல, மூன்று மாதத்துக்கு முன்னால் காரை வீட்டார்கள், முத்துப்புதியவனின் இளைய மகன் வேலுவை, விலாவில் இரண்டு இடி கொடுத்துவிட்டார்கள் முத்தையனின் ரத்தம் கொதித்தாலும், நாலு நாளில் அது ஆறிய சோறாகியது காரை வீட்டார்கள் பழையபடி வாலாட்டத் தொடங்கியபோது சின்னசாமிக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்ததில், முத்தையனுக்கு ஒரே மகிழ்ச்சி இனி ஒரு பயலும் வாலாட்ட மாட்டான் அவன் பெரியய்யா மகள்களும், சின்னையா மகள்களும் கெளரவத்தோடு நடக்கலாம் பெண் கேட்டு வருகிற வெளியூர்க்காரர்களை, “இந்த ஒலை வீட்டுப் பயல்க வீட்டிலேயா சம்பந்தம் வைக்கப் போறிய? பேசாம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்கய்யா” என்று கேவலமாகப் பேசிய காரை வீட்டார்களே, சின்னசாமிக்குப் பெண் கொடுக்கலாம் சீச்சீ இந்தப் பயல்க வீட்டிலேயா சம்பந்தம் வைக்கிறது? ஒரு நாளும் நடக்காது.

முத்தையன் இன்பக் கற்பனையில் திளைத்தவாறே, ஏற்கனவே சாகப் போவது போல் இருந்த வண்டி மாடுகளை முந்நூறு ரூபாய்க்கு விற்றான் தெரு முழுதும் பந்தல் தென்னை ஒலையால் ஜொலித்த பந்தலுக்குக் கீழே, சலவைத் தொழிலாளி கொடுத்த Gsణడు 0 ఉ கட்டினான் வாழை மரங்களை நட்டு உள்ளுர் நையாண்டி மேளக்காரனை ஒரு போடு போடச் சொன்னான் ஸ்பீக்கர் வைத்து. ஒரு ரிக்கார்ட் டான்சுக் காரியைக் கூட்டிக் கொண்டு வந்து ஆடச் சொன்னான் குடும்பத்தில் இப்போதுதான் இந்த மாதிரி ஒரு விழா நடப்பதில், முத்துப்புதியவனும் பெருமிதம் அடைந்தார். அண்ணன் பிள்ளையை விட, தென்னம் பிள்ளை மேல், என்யாங்க இந்தப் பயபிள்ளை தென்னை மரத்தை வித்துல்ல செலவளிக்கிறான்’ என்று முத்தையனின் மீது தனிப்பாசம் கொண்டார் முத்தையனின் மனைவி, இவன் இருக்கிற சொத்தை வித்து. செலவளிப்பதைக் கண்டு முணுமுணுத்தாள்.

காரைவீட்டார்கள், அழைக்காமல் வந்தார்கள் அவர்களுக் குள்ளேயே சண்டை வந்தால், சப்-இன் ஸ்பெக்டர் சின்னச்சாமியின் தயவு தேவை என்பது அவர்களுக்குத் தெரியும் அழையா விருந்தாளிகளைப் பார்த்ததும், முத்தையனின் உள்ளம் கொதித்தது. பெரியய்யாவிடம் போய், “பெரியய்யா, இந்த நாறப்பய மக்க வெக்கம் மானமில்லாம வந்திருக்கான் பாத்தீங்களா இவங்கள நீரு போகச் சொல்றீரா, நான் சொல்லட்டுமா?” என்றான் தன்னையும், பெண்டு பிள்ளைகளையும் அடித்த காரை வீட்டார்கள், விழாவுக்கு வந்திருப்பதை ஒரு பெரிய கெளரவமாக நினைத்துக் கொண்டிருந்த முத்துப்புதியவனுக்கு முத்தையன் சொன்னது எரிச்சலைக் கொடுத்தது.

“என்ன பெரியய்யா, இந்தப் பயல்கள தலையில கை வைச்சி வெளிய தள்ளப் போறேன்” என்று வந்திருந்தவர்களுக்குக் கேட்கும்படி, சற்று உரக்கவே கத்தினான் முத்தையன் “முப்பழி செஞ்சி முத்தத்துக்கு வந்தவனைக் கூட வெளில போகச் சொல்லக் கூடாதுடா” என்று முத்துப்புதியவன் சொல்லி, தம்பி மகனின் ரத்தத்தைக் குளிர்ச்சியாக்கினார் முத்தையனுக்கு விழா கையைக் கடித்தது அவன் எதிர்பார்த்த எஸ்டிமேட்டை விடப் பணம் அதிகமாகச் செலவானது இதைப் பெரியய்யாவிடமோ, மனைவியிடமோ சொல்லவில்லை.

சின்னசாமியின் புகழ், அந்தக் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்தது அவன் ஜீப்பில் வருவதும், போலீஸ்காரர்கள் அவனுக்குப் பாரா கொடுப்பதுமாகி, முத்துப்புதியவன் ஒரு பெரிய மனிதர் ஆனார் காரை வீட்டுக்காரர்களும், அந்த ஒலை வீட்டிற்குள் சதா காத்துக்கிடந்தார்கள் முத்தையன் மாடுகளை விற்றுவிட்டதால், குழி வெட்டுற அளவுக்கு இருந்த நிலத்தை, குத்தகைக்கு அடைத்து விட்டு, மரம் வெட்டும் தொழிலில் முழுமூச்சாக இறங்கினான். சில சமயம் அவனைத் தேடி, சில ஆட்கள் சிபார்சுக்கு வருவார்கள் “எங்க சின்னப்பயகிட்ட சொல்லி முடிச்சுடுறேன். ஏன்னா, உம்ம விவகாரத்தில் நியாயம் இருக்கு அவன் செய்யாமலா போவான்” என்று முத்தையன் அடித்துப் பேசுவான்.

இரண்டு வருடங்கள் ஓடின முத்தையன், தோட்டத்திற்கு இரண்டு இளநீர் பறிக்கப் போயிருந்தான் அவன் பெரியய்யா முத்துப்புதியவன் மகன் வேலு, நான்கு ஆட்களை அவமானமாகப் பேசிக் கொண்டிருந்தான் அந்த நால்வரும் முத்தையனைப் பார்த்ததும் “பாரு முத்தையா இந்தப் பயலை எங்க மரத்தில மூன்று தேங்காய் மொத்து இருந்தது இன்னைக்கு இல்லியேன்னு சொன்னோம் அதுக்கு என்னை எப்படித் திருடன்னு சொல்லலா முன்னு கண்டபடி பேசுறான்” என்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்தார்கள் முத்தையன், வேலுவைக் கோபத்தோடு பார்த்தான் வேலு, அதைப் பொருட்படுத்தாதது போல், “எவண்டா பயல், முப்பத்திரெண்டு பல்லும் கீழே விழுந்துடும்” என்று பேசிக் கொண்டே போக, ‘பாத்தியா முத்தையா அவன் பேசறதை உன் முகத்துக்காகப் பார்க்கிறோம் இல்லன்னா, இங்கேயே குழி வெட்டி மூடிடுவோம்” என்றான் நால்வரில் நல்லவன் ஒருவள்.

வேலு, “அட மானங்கெட்ட மக்களா எனக்காடா குழி வெட்டுவீங்க குழி?” என்று பொரிந்தான்.

முத்தையனுக்கு ஏக ஆத்திரம் வேலுவைப் பார்த்து, “கழுதைப்பயல, ஏன்டா கழுதை மாதிரி கத்தற? பேசாம வீட்டுக்குப் போடா” என்று உரிமையோடு கோபித்தான் வேலு ஒரு துள்ளுத் துள்ளினான் “எங்க இன் ஸ்பெக்டர் அண்ணனே இந்த மாதிரி கேட்க மாட்டாரு. இவரு யோக்கியரு வந்துட்டாரு” என்றான் அண்ணனைப் பார்த்து முத்தையன், காய்ப்பு விழுந்த கையால், லேசாக வேலுவின் தலையைத் தட்டி, “போடா வீட்டுக்கு” என்றான்.

வேலு ‘குதி குதி’ என்று குதித்தான் “கூலிக்குப் போற பயலே, என்னையாடா அடிச்சே? உன்ன என்ன பண்ணறேன்னு பாரு” என்று “ஒ” வென்று கத்திக் கொண்டு ஊரைப் பார்த்து ஓடினான் அவனைத் துரத்திக் கொண்டு பின்னால் ஓடப்போன முத்தையினை, அந்த நால்வரும் பிடித்துக் கொண்டார்கள்.

முத்தையனுக்குக் கோபத்தைவிட வருத்தமே அதிகம் அவன் வளர்த்த பிள்ளை, அவனையே ‘அடா புடா என்று சொல்கிறான் இந்த வேலுவை எத்தனை தடவை அடித்திருப்பான்! ஏன்? சின்னப் பயலைக்கூட எத்தனையோ தடவை அடித்திருக்கானே அவன் பெரியய்யா, “முத்தையா, இந்தப் பயல்க காலு தரையில் பாவாம நடக்கிறாங்க கொஞ்சம் மண்டையிலே தட்டி வைடா” என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் வரட்டும் பெரியய்யாவிடம் சொல்லி, அங்கேயே இந்த வேலுப்பய்ல இரண்டு போடு போடணும்.

முத்துப்புதியவன் வீட்டுக்குக் காலையில் முத்தையன் போனபோது, அவன் பெரியய்யா அவனின் வருகையை அங்கீகரிக்காததுபோல் வேப்பங்குச்சை எடுத்து. பல் தேய்க்கப் போனார் அவன் உட்காரக் கூடாது என்பது போல், மடியில் இருந்த கையை எடுத்து, கட்டிலில் ஊன்றினார்.

முத்தையன் எதையும் பொருட்படுத்தாதது போல் “பெரியய்யா, இந்த வேலுப் பயல் என்னைக் கூலிக்காரங்கிறான் என்னைச் சொன்னாலும் பரவாயில்லை நான் கூலிக்காரன்தான் துள்ளங் கூட்டம் ராமசாமியையும், அவரு தம்பிங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுறான்” என்றான்.

முத்துப்புதியவன், வேலுவைப் பார்த்துவிட்டு, முத்தையனைப் பார்த்தார் நீண்ட மெளனத்திற்குப் பிறகு, “அதுக்காக அவனை நீ கை வைக்கிறதா?” என்றார்.

முத்தையன் இந்தப் பதிலைத் தாங்கிக் கொள்ள முடியாதவன் போல்,” என்ன பெரியய்யா, நீரே இப்படிச் சொன்னா, நான் யாருகிட்ட சொல்றது? நான் இவனை லேசா தட்டாட்டா, அவங்க நாலுபேரும் இவனை உதைச் சிருப்பாங்க இவனை அடிச்சா, நான் பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா?” என்றான்.

“நீ பெரிய யோக்கியன் போய்யா எங்க அண்ணனை, எப்பப் பார்த்தாலும் சின்னப்பய சின்னப்பயன்னு கண்டவங்க கிட்டல்லாம் சொல்ற இதுக்கே உன் முதுகுத் தோலை உரிக்கணும்” என்றான் வேலு.

முத்தையன் பரிதாபமாகப் பெரியய்யாவைப் பார்த்தான் அவர், மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருந்தார் வேலு விடவில்லை “உனக்கு சூடு சுரனை இருந்தா எங்க வாசற்படி மிதிக்கக் கூடாது சப்-இன்ஸ்பெக்டர் தம்பியை அடிச்சிட்டானாமுன்னு ஊர்ல கேவலமா பேசறாங்க ஏய்யா நிக்கற? மரியாதையா போ” என்றான்.

முத்தையன், “ஏல நாங்க பெரிய ஆட்கள் பேசுறோம் நீ பேசினன்னா பல்லை உடைச்சுப்பிடுவேன்” என்றான்.

உடனே, “உன்னைப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டிருக்கே? மரியாதையா ஊர் ல ஒழுங்கா இருக்கனுமுன்னா ‘அடிப்பேன் பிடிப்பேன்’ என்கிறதை வைச்சுக்காதே” என்று வேலு சொன்னான்.

“பெரியய்யா, அவன் பேசறதைப் பார்த்தீங்களா” என்று முத்தையன் முறையிட, முத்துப்புதியவன், “அவன் பேசறது தப்பா இருந்தா நான் கண்டிச்சிருக்க மாட்டேனா? என் பிள்ளையை நீ எப்படிடா கை வைக்கலாம்?” என்றார் முத்தையனுக்குப் பூமி சுழன்றது ஏதோ புரியாத ஓர் உலகில், பொல்லாத பிராணிகளிடம் இருப்பதுபோல் ஒரு பிரமை, என்ன சொல்வது என்று தெரியாமல், அவன் தவித்துக் கொண்டிருந்த போது, வேலு குறுக்கிட்டு, “ஏல. நீ வேட்டி எதுக்குடா கட்டனும்? நல்ல மனுஷனுக்கு ஒரு சொல், நல்ல மாட்டுக்கு ஒரு அடி இன்னும் நிக்கிறியே” என்றான்.

முத்தையனின் அங்கமெல்லாம் கோபாவேசம் கொண்டது வேலுவைப் போய்த் தலையைப் பிடித்தான் பிறகு, “உன்னை எடுத்த பாசம் போகலடா வேற ஆளாக இருந்தால், இந்நேரம் குடலை உருவி தோள் மாலையாப் போட்டிருப்பேன்” என்று கத்த, முத்துப்புதியவன், “எங்க, என் மவனைத் தொடுடா பார்க்கலாம்” என்று கட்டிலிலிருந்து குதித்தெழுந்தார்.

“இந்தப் பய பிள்ளைகள மண்டையில தட்டுடா” என்று சொல்லும் பெரியய்யாவின் வார்த்தை, முத்தையனுக்கு மண்டையில் அடித்ததுபோல் இருந்தது எதுவும் பேசாமல் பொங்கிவந்த விம்மலை, துண்டை வாயில் வைத்து அடைத்துக் கொண்டே வெளியே போனான் இருக்கட்டும், சின்னப் பயகிட்ட சொல்லிக்கிடலாம் பாலைப் பார்க்கிறதா, பால் காய்ந்த பானையைப் பார்க்கிறதா?

நான்கு நாட்கள் கழித்து, சின்னப்பபலிடம் சொல்வதற்காக, முத்தையன் ஒரு எட்டு முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு, சட்டைக்கு மேலே ஒரு ‘மப்ளர்’ துண்டைப் போட்டுக் கொண்டு கிளம்பப் போனான் அப்போது நான்கு போலீஸ்காரர்கள், அவன் கையில் விலங்கை மாட்டினார்கள், முத்துப்புதியவனையும், அவர் மகன் வேலுவையும் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்தின்படி அவனைக் கைது செய்து தெருவில் நாயைப் போல் இழுத்துக் கொண்டு போனார்கள். முத்தையன் மனைவியால் ஒப்பாளி வைக்க முடியவில்லை துக்கப் பிரவாகம் அவள் இதயத்தை ஒரேயடியாக அழுத்தியதால் அழுகை நிவாரணம் அவளுக்குக் கிடைக்கவில்லை.

ஊரே வேடிக்கை பார்த்தது “நான் எங்க குடும்பம், எங்க குடும்ப முன்னு எப்போதும் பிரிச்சுப் பேசினேன் என் தம்பி அப்படிப் பேசக் கூடாதுன்னு, ரென்டு கைகளையும் சேர்த்து வச்சிட்டான். பரவாயில்லை. உடனே விலங்குமாட்டாம, அண்ணனை தள்ளலாமா, வேண்டாமான்னு நாலு நாளு யோசிச் சிருக்கான் டேய், வேடிக்கை பார்க்காதீங்கடா உங்கள ஒரே நாளுல தள்ளியிருப்பான் நான் என்கிறதினாலே நாலுநாள் யோசித்திருக்தான்.”

முத்தையன் புலம்பிக் கொண்டே திரும்பிப் பாராமல் நடந்தான். வேடிக்கை பார்த்த ஊரார், அந்தச் சிறிது நேர இரக்கத்தில், முத்தையனுக்காக வருத்தப்பட்டார்கள் ‘சின்னப்பயல்’ என்று அவன் செல்லமாக அழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, தன் * g。 ஊழியரான அந்த வட்டார சப்-இன்ஸ்பெக்டருக்கு டெலிபோனில் நன்றி சொன்னான்.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *