ஆட்டுத் தலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 190 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்தக் கம்பெனியின் பிராஞ்ச் மானேஜர் தங்கசாமி தங்கமான மனிதர். அவர் பேசுவது. அவருக்கே கேட்காது. அந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார். சாந்த சொருபி, சன்மார்க்க சீலர், நேர்மையின் திலகம். காரில் இருந்து இறங்கியதும், தனது சூட்கேலை பியூன் எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார். ஊழியர்கள் காண்டின் போய்விட்டு, கண்ட கண்ட நேரத்திற்கு வந்தாலும்,’கண்டுக்க’ மாட்டார். கரெக்டாகப் பத்து மணிக்கு வந்து, கறாராக ஐந்து மணிக்குப் போய்விடுவார். இடியே விழுந்தாலும் இதில் மாற்றம் கிடையாது. ஊழியர்கள் எழுதி வைக்கும் பைல்களை, மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, கையெழுத்துப் போட்டுவிடுவார். சில சமயம் இல்லஸ்தரேட்டட் வீக்லியைப் பார்த்துக் கொண்டே, கையெழுத்துப் போடுவார். நேர்மைக்கு நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டு விடுவார். அதனால் நேரம் நிறைய இருந்தது. ஆகையால், தமிழ்ப்பத்திரிகைகளில் இருந்து, ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரை அவருக்கு அத்துபடி.

இந்தத் தங்கமான மனிதரிடம் பணிபுரிய தவம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, ஊழியர்கள் காண்டினில் தவம் கிடப்பார்கள். எத்தனையோ பழைய பெருச்சாளிகளையும், அவர்கள் கட்டிய வீடுகளின் மதிப்பு, வாங்குகிற சம்பளத்திற்கு ‘டிஸ்புரபோஷனேட்டாகவும் இருப்பதை அறிந்த, அறிவித்த ஊழியர்கள், வாடகை வீட்டில் வாழும் அவரை விநோதமாகப் பார்ப்பார்கள். டில்லியில் இருந்து வரும் ஆபீசர்களை, அவர் விமான நிலையத்தில் போய் எதிர்பார்த்து, அவர்கள் பின்னால் ஆட்டுக்குட்டி மாதிரி அவர் அமைதியாகப் போவார். ‘பிராப்ளம்’ இல்லாத கிளை அலுவலகத்தைப் பார்வையிடுவதில், காஞ்சிபுரத்துப் பட்டுப் புடவை பிரியர்களான தில்லி ஆபீசர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. மொத்தத்தில் அந்த அலுவலகம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

புயலுக்குப்பின் அமைதி ஏற்படுமோ என்னமோ, அங்கே நிலவிய அந்த அமைதிக்குப் பின் புயல் வீசத் தொடங்கியது. பண்டாரம், அங்கே அட்மினிஸ்டிரேட்டில் ஆபீசராக வந்து சேர்ந்தான். பம்பாயில் வேலை பார்த்து வந்த அவன், ஒரு நாள் அலுவலக விஷயமாக டாக்சியில் போவதாக வவுச்சர் போட்டான். அந்த வவுச்சரில் குறிப்பிடப்பட்ட டாக்சியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், ஒரு லாம்பரட்டா ஸ்கூட்டரின் நம்பர். இன்னொரு நாள் போட்ட வவுச்சரில், குறிப்பிடப்பட்ட ட்ாக்சியின் நம்பர், ஜெனரல்’ மானேஜரின் காரின் நம்பர். ஸ்கூட்டர் டாக்சியானதை மானேஜர் மன்னிக்கத் தயாராகத்தான் இருந்தார். ஆனால், தனது காரையே, அவன் டாக்சியாக்கியதும், அதனால் தன் பெயரும் அனாவசியமாக இழுக்கப்படும் என்பதை அறிந்த அவர், பண்டாரத்திடம் “ஜெயிலா? ராஜினாமாவா?” என்றார். மறு வார்த்தை பேசாமல் ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, பண்டாரம் சென்னைக்கு வந்தான். அவன் யோகம், இந்த வேலை உடனே கிடைத்து விட்டது.

பண்டாரம் பழைய பைல்களை நன்றாகப் படித்தாள். வெளியே வேலை பார்க்கும் ‘விற்பனை ஊழியர்களை அருமையாகக் கண்காணித்தான். அவர்கள் போட்ட வவுச்சர்களை’ செக் பண்ணினான். அவள் எதிர்பார்த்தபடியே, ஒரு போலீஸ்வானின் நம்பர். ஒரு ஹெவி லாரியின் நம்பர் முதலியவை டாக்சி நம்பர்களாகக் காட்டப் பட்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் வந்த போது அவர்களிடம் நாகுக்காக விசாரித்தாள். அவன் ஒருத்தன் மட்டும் அங்கே இல்லையானால், அவர்கள் வேலூருக்குப் போக வேண்டியிருக்கும் என்று விநயமாக எடுத்துரைத்தான். நேர்மைக்குத் தான் முதலிடம் கொடுப்பதாகவும், ஆத்ம நண்பர்களுக்கு, அதைவிட முதலிடம் கொடுப்பதாகவும் வாக்களித்தான். ஆத்ம நண்பர்கள் என்போர் ஐம்பது ரூபாய்க்கு மேல் ‘தள்ளுபவர்கள்’ என்றும் நட்புக்கு வியாக்கியானம் கொடுத்தான். ஆக, பண்டாரத்திற்கு நிறைய ஆத்ம நண்பர்கள் சேர்ந்தார்கள்.

ஒர் ஊழியர், ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கிளைக்கு மாற்றலாகி வந்தார். ரயிலில் இரண்டாவது வகுப்பில்தான் வந்தார். டி.எ.பில் போடும்போதும் இரண்டாவது வகுப்பு டிக்கெட்டுக்குரிய பணத்தைத்தான் எழுதினார் பண்டாரம் அவரை காண்டினுக்குக் கூட்டிக் கொண்டு போனாள்.

“என்ன ஸார் பிழைக்கத் தெரியாத ஆலா இருக்கிங்களே: பஸ்ட் கிளாஸில் வந்ததா போட்டால், குடியா முழுகி விடும்?”

“ஐயையோ.. அது தெரிஞ்சா. ஆபத்தாச்சே!”

ஆசாமி தெரிந்து விடுமே என்று தான் அஞ்சுகிறாரே தவிர, நாணயத்துக்காக அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பண்டாரம், அவருக்கு ‘உலக அறிவை’ப் போதித்தான். எவன் யோக்கியள்? கம்பெனிக்கு மாடாக, மனிதனாக உழைக்கிறவர் இரண்டாவது வகுப்பை, முதல் வகுப்பாகப் போட்டால், என்ன தப்பு? அந்த ஆசாமியும் பண்டாரத்திடம் மயங்கி, முதல் வகுப்பையே காட்டி விடுவதாகக் கூறினார். அன்று பண்டாரமே ஹோட்டல் பில்லுக்கு’ பணம் கொடுத்தான்.

ஒரு மாதம் கழித்து அவரிடம் அவன் பணம் கேட்டான். அவர் கையை விரித்தார். “பஸ்ட் கிளாஸ்ல நீங்க புறப்பட்ட தேதியில் யார் யாரெல்லாம் டிராவல் பண்ணினாங்கன்னு விசாரிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஆத்ம நண்பராச்சேண்னு சும்மா இருக்கேன்” என்றாள் பண்டாரம்.

அந்த ஆசாமி, இப்போது பண்டாரம் சாப்பிடுவதற்கும் சேர்த்து ‘பில்’ கொடுப்பது இல்லாமல், அவர் கொடுத்திருக்கும் இதர பணத்தை வைத்து அவர் குடும்பத்தோடு ஹைதராபாத்துக்கு பத்துத் தடவைக்கு மேல், பிளேனில் சவாரி செய்திருக்கலாம். என்றாலும் அவர் இப்போது அவனுக்கு ஆப்த நண்பர்.

கம்பெனியின் சேல்ஸ் ரேப்சென்டேட்டிவ் ஒருவன் விற்பனைக்குத் தமிழ்நாடு முழுவதும் டூர் போய்விட்டு, டி.எ.பில் போட்டிருந்தான். பில் பணம் ஐநூறு ரூபாய்க்கு மேல் தேறும். பண்டாரம் கை ஊறியது அந்த ரெப்ரசென்டேட்டிவ்வைப் பார்த்ததும் “ஜமாய் ராஜா உன் காட்ல மழை பெய்யுது. இந்த டுர்ல முந்நூறு ரூபாயாவது தேறியிருக்குமே? பரவாயில்ல, நீயும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும்” என்றான்.

விற்பனையாளன், டூரில் இருந்தபோது வயிற்றுவலியில் தவித்து, சரியாகச் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டவன் வந்ததும் வராததுமாகப் பண்டாரம் இப்படிப் பேசியது. அவனிடம் குணமாகிய வயிற்று வலி மீண்டும் எட்டிப் பார்த்தது. அந்த ஆத்திரத்தில், “என்ன மிஸ்டர் பண்டாரம், அவனவன் வயித்து வலியுல அவஸ்தப்பட்டு, நாயா அலைஞ்சிட்டு வரான். நீங்க, ஜோக் பன்றீங்க இந்த மாதிரி வேலையெல்லாம் நம்மகிட்ட வேண்டாம்” என்று பத்துப்பேர் முன்னிலையில் பகிரங்கமாகச் சவால் விட்டான்.

பண்டாரம், இந்த அவமானத்திற்குக் கூட, அதிகமாக வருத்தப்படவில்லை. கடைசியில் பயல், பணம் கொடுக்க மாட்டானோ? அவன் மூளை, கம்யூட்டராகியது. விற்பனையாளரின் டயரியையும், டுர் புரோக்ராமையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பிறகு நாற்காலியில் இருந்து கொண்டே குதித்தான்.

பண்டாரம், மானேஜருக்கு ஒரு ‘நோட்’ ‘புட்டப்’ பண்ணினான். ‘சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் சிவராமன், கம்பெனி வானுக்கு கோயம்புத்துர் பெட்ரோல் ஸ்டேஷனில், புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு பெட்ரோல் போட்டதாக பில் கொடுத்திருக்கிறான். ஆனால், அந்தப் புதன்கிழமை, மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்ததாக ‘டூர்’ டயரியில் எழுதியிருக்கிறான். அது எப்படி முடியும்? ஆகையால், சிவராமன், கம்பெனியை மோசடி செய்திருக்கிறான். அவன் டுர் போனானா அல்லது கோயம்புத்துரில் இருந்தானா? விற்பனை செய்யும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சிவராமன், பொறுப்பாக நடந்து கொள்ளாதது மட்டுமல்ல, கம்பெனிப் பணத்தை டுர் என்ற பெயரில் செலவழித்து மோசடி செய்திருக்கிறான். அவனுக்கு “உன்னை, ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது?” என்று கேட்கும் ஷோகாஸ் நோட்டீஸ்’ கொடுக்க வேண்டும். சிவராமன் போன்ற நேர்மையற்றவர்களைக் கம்பெனியில் வைத்திருப்பது தப்பாகும்!

பண்டாரம் எழுதிய நோட்டிஸ்ை மானேஜர் தங்கசாமி படித்துக் கொண்டிருந்தார். அவரின் ஸ்டெனோ அங்கே வந்தாள். தங்கசாமி “எஸ்” என்று இழுத்தார்.

“ஸார், நான் சொல்றதைத் தப்பா நினைக்காதீங்க. மிஸ்டர் பண்டாரத்திற்கும் சிவராமனுக்கும் தனிப்பட்ட விரோதம். அதனால்தான், பண்டாரம் அவர் உத்தியோகத்துக்கே உலை வைக்கிறார்.”

மானேஜர் ஸ்டெனோ மங்கையை ஒரே ஒரு வினாடி ஏறிட்டு நோக்கினார். பிறகு “மிஸ்டர் பண்டாரம், ஆபீஸ் ரூலைக் காட்டி மோசடின்னு கரெக்டா எழுதியிருக்கார். எனக்கு ரூல்ஸ்தான் முக்கியம். அவங்க தனிப்பட்ட விரோதத்தைப் பத்தியோ, கூட்டுறவு விரோதத்தைப் பத்தியோ எனக்குக் கவலையில்லை” என்றார்.

மங்கைக்கு மனசு கேட்கவில்லை அதுவும், ஆஜானுபாகான சிவராமன் மாட்டிக் கொள்வது, அவளுக்குத் தான் மாட்டிக் கொள்வது போல் தோன்றியது.

“ஸார், நம்ம அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபீசர் மிஸ்டர் பண்டாரம் எல்லார் கிட்டேயும் பிரசன்டேஜ் கேட்கிறார். சம்திங்’ கொடுக்காத ஆட்களைப் பத்தி, சம்திங்கா எழுதி வைத்து விடுகிறார். அவர் வாங்கி, உங்களுக்கும் பங்கு கொடுப்பதாக வேறு அவர் சொல்லிக்கிட்டு திரியுறார். ஆபீஸ் குட்டிச்சுவராய்ப் போச்க, அவருக்கிட்ட காசு கொடுக்காம ஒரு காரியமும் நடக்காது என்கிற நிலைமை வந்துட்டு.”

ஸ்டெனோ மங்கை, இன்னும் பேசிக் கொண்டே போயிருப்பாள். ஆனால், மானேஜர் அவளை விடவில்லை. “இது என்ன அக்கப் போராப் போச்சி. ரூல்ஸ்படி என்ன நடக்கனுமோ அது நடக்கும். பண்டாரத்துக்கும் மற்றவர்களுக்கும் ஆயிரம் இருக்கும். எனக்கென்ன வந்தது? நீங்க போகலாம்.”

மங்கை மருவித் தயங்கி வெளியேறினாள். அவள் வெளியேறவும், பண்டாரம் உடனே உள்ளே போகவும் சரியாக இருந்தது. அவளுக்கும் சிவராமனுக்கும் ஒரு வகையான ‘இது’ இருப்பது அவனுக்குத் தெரியும். அவள் ஏதாவது வத்தி வைத்திருப்பாள் ள்ன்று யூகித்துத்தான் அவன் உள்ளே போனான்.

மானேஜர், அவனைக் கோபமாகப் பார்த்தார்: “எனக்கு வேற பங்கு கொடுக்கிறதா சொல்றியாமே” என்று கேட்கவில்லை. கேட்கப் போனார். அதற்குள் பண்டாரம் முந்திக் கொண்டு “ஸார், இன்றைக்கு ‘மிர்ரர்’ பத்திரிகையில் சேக்ஷ்பியரின் ஹாம்லட்டைப் பற்றி ஒரு ‘ரிசர்ச்’ கட்டுரை வந்திருக்கு படித்தீங்களா?” என்றான். மானேஜர், நினைத்ததை மறந்து, மறந்ததை நினைத்தார்.

“ஆமாம், வீட்ல, ஒரு கிளான்ஸ் பார்த்தேன். ஆனால் கொண்டு வர மறந்துட்டேன்.”

“இதோ, நான் கொண்டு வந்திருக்கேன் ஸார்…”

மானேஜர் மிர்ரரைப் புரட்டினார். “லார்…சிவராமன் பைல்ல, கையெழுத்துப் போட்டிட்டிங்களா?” என்றான் பண்டாரம். மானேஜர், அவசர அவசரமாக கையெழுத்துப் போட்டுவிட்டு, மிர்ரரைப் புரட்டினார். பண்டாரம் அவசர அவசரமாக வந்து, டைப்பிஸ்டை டைப் அடிக்கச் சொன்னான்.

‘மெமோவைப்’ பார்த்ததும் சிவராமன் பயந்து விட்டான். அவனைப் போலீசில் ஒப்படைக்கப் போவதாகவும், பண்டாரம் பார் மானேஜர்’ கையெழுத்துப் போட்டு மிரட்டியிருந்தான். ஸ்டெனோ மங்கை அழுதே விட்டாள். சிவராமனுக்கு ஒரு வழியைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

ஒரு கூடை ஆப்பிள் பழத்துடன், நேராகப் பண்டாரம் வீட்டிற்குப் போய், அவன் காலின் முன்னால் குப்புற விழுந்தான். பண்டாரம், விழுந்தவனை நிறுத்தி ஆசீர்வாதம் செய்து கொண்டும், ஒரு ஆப்பிள் பழத்தைக் கடித்துத் தின்று கொண்டும் “நல்லா பழுத்திட்டு; அதனால்தான் டேஸ்டாக இருக்கு!” என்றான்.

“மிஸ்டர் பண்டாரம், நான் ஒரு அறிவு கெட்ட மடியன். நீங்கதான் என்னைக் காப்பாத்தணும். நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன்’ என்றான்.

பண்டாரம் அவனுக்கும் ‘உலக அறிவைப்’ போதித்தான்.

மறுநாள் பண்டாரம் சொன்னபடியே சிவராமன் ‘எக்ஸ்பிளனேஷன் எழுதிக் கொடுத்தான். கோயமுத்துரில் புதன் கிழமை மாலையில் பெட்ரோல் போட்டதும், கன்னியாகுமரியில் அதே நாள் மத்தியானம் அவன் போய்ச் சேர்ந்ததும் முரண்பாடானவை அல்ல. வானுக்கு, கோவையில், செவ்வாய்க்கிழமை இரவில் நோய் ஏற்பட்டதாம். உடனே டிரைவரிடம் வண்டியை ரிப்பேர் செய்து விட்டு, பெட்ரோலும் போட்டுக் கொண்டு வரும்படி சிவராமன் சொல்லி விட்டு, அன்று இரவோடு இரவாக கம்பெனியின் விற்பனை நலனைக் கருதி, நண்பரின் காரில் கள்ளியாகுமரி போய்விட்டானாம். கம்பெனிக்காக, இரவு கூட பாடுபடும் அவனை குறை கூறுவது. வேதனையைக் கொடுக்கிறதாம்!

சிவராமன் நீட்டிய காகிதத்தை வாங்கிக் கொண்டே “வெரிகுட் வெரிகுட்! ஆனால் ஒண்ணு, நீ கோயமுத்துர்ல வேனை ரிப்பேர் பார்த்ததுக்கு ஒரு ஒர்க்ஷாப்பின் லெட்டர் ‘பாட்ல ஒரு பில் போட்டுக் கொடுத் துடு, உனக்கும் ஸ்ரி, நமக்கும் அதுக்குரிய பணம் கிடைச்சிடும். மானேஜருக்கும், நீ யோக்கியன் என்கிறதுக்கு ஆதாரம் கிடைச்சிடும்” என்றான்.

“என் கிட்ட லெட்டர்பாட் இல்லியே ஸார்” (இப்போது மிஸ்டர் என்று கூப்பிட மாட்டான்).

“டோண்ட் ஒர்ரி. உன்னை மாதிரி ஆட்களைக் காப்பாத்துறதுக்குன்னே நான் பல பேர்ல, பல ஊருங்களைக் காட்டி லட்டர் பாட் வச்சிருக்கேன். நீயே ஒனர் மாதிரி கையெழுத்துப் போட்டுடு. அந்த டிரைவரையும் சரிக்கட்டிக்கோ அவனையும் கையெழுத்துப் போடச்சொல் அதுவே போதும்.”

“தேங்க் யு லார்! நீங்க இல்லாட்டி என் வேலை போயிருக்கும். கம்பியும் எண்ணியிருப்பேன்.”

பண்டாரத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

வான் டிரைவர் வாகிப்பமியான், முதலில் முடியாது என்றான். அவன் அப்படி முடியாது என்றால், தன் கதை முடிந்துவிடும் என்று சிவராமன் அழுது கொண்டே சொன்னதால், டிரைவருக்கு மனமிரங்கியது. அவனது – அதாவது ஒரு டிரைவரின் ஒரு அங்குலக் கையெழுத்தில் ஒரு சேல்ஸ்மேனின் எதிர்காலம் தொங்குகிறது என்பதை அறிந்ததும், அவன் போட்டே விட்டான்.

பண்டாரம், சிவராமனின் எக்ஸ்பிளனேஷனுக்குப் பரிந்துரை” கொடுத்தான். சிவராமன், வான் ரிப்பேரானாலும், அந்தச் சாக்கில் கோவையில் தங்காமல், கருமமே கண்ணாகி, நண்பனின் காரில் கன்னியாகுமரி போனான் என்றால், அவன் எவ்வளவு டிவோட்டட்’ ஊழியனாக இருப்பான்! சிவராமன் போன்ற ஊழியர்களினால், கம்பெனியே பெருமைப்படலாம்! சொல்லப் போனால், அந்த உண்மையான ஊழியன்மீது சந்தேகப் பட்டதற்காக, கம்பெனி வருத்தம் தெரிவிக்க வேண்டுமாக்கும்.

மானேஜர், பைலைப்படித்தார். முன்னால் அப்படியும் இப்போது இப்படியும் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்று அவர் சந்தேகப்படவில்லை. ‘இம்பிரிண்ட்’ பத்திரிகையில் ஒரு கண்ணும், பைலில் ஒரு கண்ணுமாக வைத்துக் கொண்டு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தில் கையெழுத்துப் போட்டதோடு அல்லாமல், வார்னிப்பேருக்காகச் சிவராமன் செலவழித்த இருநூறு ரூபாய் ‘பில்லையும்’ பாஸ் செய்தார்.

சிவராமன், பண்டாரத்திற்கு ஆப்தமாகி விட்டான்.

பண்டாரம் டிரைவர் வாகிப்பமியானை, இளக்காரமாகப் பார்த்தான். பார்த்தது மட்டுமல்ல. “என்ன மியான், இன்னைக்கு, டியூப் போட்டு எத்தனை லிட்டரை உறிஞ்சி எடுத்து வித்தே..மூணு லிட்டர் தேறியிருக்குமா?” என்றான்.

டிரைவருக்கு பெட்ரோல் மாதிரி பற்றி எரிந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டான். நான்கு நாள் கழித்து, ‘ஸார், என்னோட டி.ஏ. பில்லை பாஸ் பண்ணுங்க சிவராமன் பில்லை பாஸ் பண்ணிட்டிங்க என்னுத மீட்டும் வச்சிருக்கிங்க. நாளைக்கு ஆட்டுத்தலை வாங்கி சாப்பிடணுமுன்னு நினைக்கிறேன். தயவு பண்ணி இன்னைக்காவது பாஸ் பண்ணுங்க” என்றான்.

“ஆ.ஆட்டுத் தலையா? எவ்வளவு ருசியா இருக்கும்! மியான் எனக்கும் ஒரு தலை வாங்கித் தந்திடு.”

“நீங்க பாஸ் பண்ணுங்க. நான் வாங்கித் தாறேன்.”

“நீ வாங்கித் தா. நான் பாஸ் பன்னுறேன்”.

வாகிப்பமியான், பல்லைக் கடித்துக் கொண்டான். மானேஜரை அன்று சாயங்காலம் வீட்டில் டிராப்’ செய்யப் போகும்போது, “ஸார், நீங்க எவ்வளவு நேர்மையாக இருக்கிங்க ஆனால், பண்டாரம் என்கிட்ட ஆட்டுத்தலை கேக்கிறார். அது கொடுக்காட்டா டி.ஏ.வை பாஸ் பண்ண மாட்டாராம்” என்றான்.

மானேஜர் “அப்படியா?” என்று கேட்டுவிட்டு, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை எடுத்தார். வாகிப்பமியான் வருத்தப்பட்டான். ஒரு மானேஜர், ஊழியன் ஒருவன் சொல்லும் பிரச்சினையை ‘குத்துக்கல் மாதிரி உணர்ச்சி இல்லாமல் கேட்டுக் கொண்டு, கண்டுக்காமலா இருப்பது? டிரைவர் மனசைத் தேற்றிக் கொண்டான். மானேஜர் பெரிய ஆபீஸர். டிரைவர் கிட்ட கேட்டும் கேட்காதது மாதிரிதான் இருக்க்னும். நாளைக்கு பண்டாரத்தை விடுவிடுன்னு விடுவார்.

மானேஜர் விடுவிடுன்னு விடவில்லை. பண்டாரம், முன்னை விட மகிழ்ச்சியாகத்தான் இருந்தான். சாட்சியை விட சண்டைக்காரன் தேவலை என்பதை உணர்ந்த டிரைவர் பண்டாரத்திடம் போய் “ஸ்ர்.டி.ஏ, இன்னும் நான் ஆட்டுத்தலை வாங்கல” என்றான்.

“ஒன் வான் ரிப்பேர் சமாச்சாரம் இப்போ எனக்கு மட்டுந்தான் தெரியும். மானேஜருக்குத் தெரியணுமுன்னா, ஆட்டுத்தலை வந்துட்டா. உன் தலை தப்பும்” என்றான் பண்டாரம்.

டிரைவருக்கு வேறு வழியில்லை. மறுநாள், ஒரு ஆட்டுத் தலையுடன், டிரைவர் பண்டாரம் வீட்டிற்குப் போனான். அவனோடு, இன்னொரு அழுக்கு வேட்டி ஆசாமியும் போனார். பண்டாரம், ஆட்டுத்தலையை வாங்கிக் கொண்டே “ஏம்பா, ஆட்டுக்காலும் வாங்கிட்டு வரக்கூடர் து?. சூப் போட்டுக் குடிச்சா நெஞ்சு வலி போகுமாம்” என்றான்.

“அடுத்த டி.ஏ. பில்லுக்கு, ஆட்டுக்கால் தாறேன். ஸார். ஆட்டுத் தலையை வெட்டுறதுக்காக இவரைக் கூட்டி வந்தேன்”

“எப்படியோ! உனக்குப் பிழைக்கத் தெரிஞ்சா சரி…”

பண்டாரம், ஆட்டுத்தலையைப் புரட்டிப் பார்த்தான். பெரிய தலை, ருசியாக இருக்கும். “வாகிப்பமியான், ரெண்டு காதுலேயும் கலர் பென்சிலால் கோடு போட்டிருக்கே, எதுக்கு?” என்று கேள்வி கேட்டான் பண்டாரம்.

“அதுவா? ஸார் காலையிலேயே கசாப்புக் கடைக்குப் போனேன். அப்போ ஆடு கீடு வெட்டல. எங்க ஐயாவுக்கு, இந்த ஆட்டுத்தலைதான் வேணுமுன்னு சொல்லி உயிரோட நின்ன ஆட்டுக்காதில் கோடு போட்டுட்டு வந்தேன்; அது தான் இது”.

பண்டாரம், ஆட்டுத்தலையின் காதைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு, கிச்சனில் இருந்த அம்மாக்காரியிடம் கொடுக்கப் போனான். அப்போது அழுக்கு வேட்டி ஆசாமி “நில்’ என்று சொல்லிக் கொண்டே, ஒரு விசில் எடுத்து ஊதினார். நான்கைந்து பேர், சொல்லி வைத்தாற்போல் பல மூலைகளிலிருந்து ஓடிவந்து பண்டாரத்தை மறித்துக் கொண்டார்கள்.

வாகிப்பியான் சிரித்தான். டேய் பண்டாரம், என்னை என்ன சிவராமன்னு நினைச்சியா? நீ ஆட்டுத்தலை கேக்குற விவகாரத்த நம்ம மானேஜர் சரியா கேக்காததினால, நம்ம கம்பெனி மேல் ஆபீஸ்ருங்களுக்கு எழுதினேன். அவங்க, இந்த லோகல் போலீஸ் ஐயாவையும் கூட்டிக் கிட்டுப் போய். ஆட்டுத்தலையில் காதுல குறி போட்டாங்க. எனக்கு காது குத்தப் பார்த்தே கடைசியில ஆட்டுக்காதிலே குத்தி, உன் காதுலே.”

பண்டாரம், ஆட்டுத்தலையுடன், ஐந்தாறு பேர் புடைசூழ, கம்பெனி அலுவலகத்தில், மானேஜர் தங்க்சாமியின் முன்னால் ஆஜர் செய்யப்பட்டான். ஐந்தாறு பேரில் ஒருவரான கம்பெனி செகரட்டரியைப் பார்த்ததும் தங்கச்சாமி வெலவெலத்துப் போனார். செகரட்டரியை கெஞ்சும் பாவனையில் பார்த்துக் கொண்டே, ‘ஸார் என் ஆளுங்ககிட்ட வேணும்னா கேளுங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. நாள்..பிறத்தியார் சொத்துல ஒரு பைசாவுக்குக் கூட ஆசைப்பட்டது இல்லே.”

யூனிபாரத்தில் இருந்த போலீஸ்காரர் பேசினார் .

“மிஸ்டர் தங்கசாமி, எங்களுக்கு எல்லா விவரமும் தெரியும். நீங்க நேர்மையானவர் தான், சந்தேகமில்லை.ஆனால், ஸ்டெனோ, பண்டாரத்தைப் பற்றிச் சொல்லிய போதும் சரி, வாகிப்பமியான் சொல்லும்போதும் சரி. நீங்க பொறுப்புள்ள ஆபீசர் மாதிரி, விவகாரத்தை அக்கறையோடு விசாரிக்கல. ஒரு ஆபீசர் சட்டத்தின் எழுத்தை மட்டும் பார்க்கக் கூடாது. அதன் உணர்வையும் பார்க்கணும். எவனும் எக்கேடும் கெடட்டும். நாம் ஒழுங்கா இருந்தாச் சரி’ என்று பல நேர்மையான ஆபீசருங்க இருக்காங்க. இந்த மனப்பான்மை ஒருவிதமான சுயநலந்தான் வாங்குகிற சம்பளத்துக்குரிய பொறுப்பை தட்டிக் கழிக்கிற மாதிரி நடந்து கொள்ளும் போக்கும். ஒருவித லஞ்சந்தான். என்னைக் கேட்டால், இதுதான் பல லஞ்சங்களுக்கு வழிவகுக்கும் கரெப்ஷன்’. ஆட்டுத்தலை வாங்கின பண்டாரத்தைத் தண்டிக்க சட்டமிருக்கு. ஆனால் தலையை ஆட்டிக் கொண்டே நிலைமையை தலைக்குமேல் விட்ட, உங்கள மாதிரி நேர்மையான ஆட்களைத் தண்டிக்க சட்டம் இல்லை.”

கம்பெனி செகரட்டரி போலீஸ்காரர் பேச்சுக்குத் தலையாட்டினார்.

பண்டாரம், ஐந்தாறு பேரில் ஒருவர் தவிர, மற்றவர் சூழ வெளியே கொண்டுப்போகப்பட்டான்.

அவன் கையில், ஆட்டுத்தலை சிரித்துக் கொண்டிருந்தது!

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *