தைரிய லக்ஷ்மி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 1,608 
 
 

(1952ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1

உலகத்திலில்லாத விசித்திர குணம்படைத்த மேதாவி உன் மாமனார். மோரக்கட்டையைப் பாரு. கல்யாணத்திற்கு முன்பு ஒரு வார்த்தை. கல்யாணத்திற்குப் பின்பு ஒரு வார்த்தையா? 5 ஆயிரம் ரூபாய் வரதக்ஷிணை ரொக்கமாகக் கொடுப்பதாகச் சொன்னான். ஏதோ கல்யாண த்தில் அஸாத்ய செலவாகிவிடுவதால் இரண்டாயிரம்ரொக்கம் முதலில்கொடுப்ப தாயும் மூவாயிரம் ரூபாய் பிறகு பெண்ணைக் கொண்டுவிடும் போது கூடவே கொடுப்பதாயும் சொன்னான். போனால் போகிறது என்று விட்டுக்கொடுத்தேன். பஞ்சப்பயல். பழைய பல்லவியையே பாடி பல்லை இளித்துக் கடிதம் எழுதி யிருக்கிறான் பாரு. பெண்ணை நாம் சொல்லிய முகூர்த்தத்தில் கொண்டுவிட்டுவிடுகிறானாம். பணம் மட்டும் இன்னும் ஆறு மாதம்: ஒரு வருஷத்தில் கொடுக்கிறானாம். வேணுமானால் ப்ரோ-நோட்டு எழுதிக்கொடுக்கிறானாம்! முட்டாள் பயல், எத்தனை திமிருடன் இப்படி எழுதியிருக்கிறான் பாருடா? கண்டிப்பாய் அவன் கொழுப்பை அடக்கியே தீரப்போகிறேன். அன்று மூவாயிரம் ரூபாய் ரொக்கத்தைத் தவிர சீர்வகை களுடன் பெண்ணை அழைத்துவந்தால் வரலாமேயன்றி மற்ற படி வருவதில் உபயோகமில்லை ! என்று கண்டிப்பான கடிதம் எழுதிவிட்டேன். நீ கட்டாயம் என் வார்த்தைக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும். அசட்டுப் பிசட்டென்று ஏதா வது செய்துவைத்தா ல் தெரியும் சேதி! – என்று மிகவும் சாதுவான தன்மகன் வைத்யநாதனைப் பார்த்து அவன் பிதா பரமேச்வரன் கூறினார். 

வைத்யநாதன் இயற்கையிலேயே நல்ல அடக்கம், ஒழுக் கம், பெரியார்களிடம் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும் தூய குணம், பக்தி முதலிய சகல அம்சங்களும் பொருந்தியவன். தான் படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திலுள்ள நீதிகளின்படி கூடுமானவரையில் வழுவாமல் நடந்துவருகிற முறையை மேற் கொண்டவன். அடக்க ஒழுக்கமான பையனாக விருப்பினும் தனக்கு மனைவி வெகு ஜோராய் வரவேணும்; அவளுடன் அன் யோன்யமாய் வாழவேண்டும் – அவளை சிறந்த மேதாவியாகச் செய்து இன்புறவேண்டும். என்றெல்லாம் கனவுகண்டு எதிர் பார்ப்பான். ஏதோ கடவுள் அருளால் இவன் கனவு வாகியதுபோல் தற்கால நாகரீகப்படி S S L. C. பாஸ் செய்த ஒரு அழகான யுவதி கண் நிறைந்த எழிலும் சங்கீ தச் செல்வமும் ஒருங்கே அமையப் பெற்ற நந்தினி கிடைத்ததும் பரம த்ருப்தியடைந்துப் பூரித்தான். 

ஆனால் அந்தச் சந்தோஷம் அதிக நாள் நிலைக்க விடாமல் சிதறவடிக்கப் பாழும் பணத்திரை குறுக்கே மலை எரிமலையே தலைமீது போல் விழுந்துவிட்டதுபோன்றும் விழுந்ததுபோன்றதுமான வார்த்தைகளைக் கேட்டு மனது துடித்தது. இத்தனை காலமாகத் தன் பிதாவுக்கு எதிர்த்துப் பதில் பேசியறியாதவனாயினும் இன்று அவனையறியாது பேசி விடவே ஆத்திரம் துடிக்கின்றது. இயற்கையிலேயே தன் பிதா ருத்ரமூர்த்திபோன்றவர் என்பது நன்றாகத் தெரியும். தான் ஏதாவது சொல்விவிட்டால் வீண் ரஸாபாஸமாகி ஊர் சிரித்துவிடுமே! என்று அச்சம் வேறு பாதிக்கிறது. 

தகப்பனாரும் பிள்ளையும் இருக்கும் நிலைமையைக் கண்ட அவன் தாயாராகிய தங்கம்மாளுக்கு உள்ளூற பயம் நடுக்கு கிறது. அவள் மகா விவேகி, மானவதி, உறத்துப் பேசி யறிய மாட்டாள். யௌவன பால்யத்தின் ரோஷத்தினால் வைத்ய நாதன் ஏதாவது அசட்டுத்தனமாய்ப் பேசிவிடப் போகிறானே என்ற பயத்தால் மறைவாக நின்று மகனையே உற்று நோக்கி, “எதிர்த்துப் பேசாதே, சாந்தியை இழக்காதே, பொறுமையா யிரு. எல்லாம் சரியாகிவிடும். நான் எப்படியாவது வழி செய்கிறேன்” என்று ஜாடையினாலும் மெல்ல உதட்டை மட்டும் அசைத்தும் பேசி மகனுக்குத் தெரிவித்தாள். 

தாயின் அன்புக்கு அபாரமாகக் கட்டுப்பட்டவனாகை யினால் அந்த ஜாடையை அறிந்து நடுங்கினான். தாயாரின் வார்த்தைக்குக் கட்டுப்படுவதா? அல்லது தந்தையின் பிற் போக்கான செய்கைக்கு எதிர்த்துப் பேசுவதா? என்ன செய் வது? என்று பெரிய குழப்பம் உண்டாகிவிட்டது. தகப்ப னாரை மீறிக்கொண்டு தான் ஏதாவது செய்துவிட்டால் பிளவும் சண்டையும் தாயாருக்கும் தகப்பனாருக்குமே மனஸ்தாபமும் உண்டாகி பார்ப்பவர்கள் சிரிக்கும்படியாகிவிட்டால் என்ன செய்வது. அம்மாவுக்கு ரோஷமும் அதிகம், மான மும் மரியாதையும் அதிகம். அதோடு பலவீனப்பட்டு துர்பல மானவள். இந்த நிலைமையில் அவளுக்கு ஏதாவது அதிர்ச்சி உண்டாகிவிட்டால் என்னசெய்வது? என்று உட்கார்ந்த இடத் திலேயே அசையாமல் பலபல எண்ணங்களுடன் குழம்பித் தவித்தவாறு தகப்பனாருக்குப் பதில் பேசாமலிருப்பதைக் கண்ட அவர் பிதா பின்னும் கோபமே அடைந்து “என்னடா? ஏதோ பெரிய கோட்டையைப் பிடிப்பவன்போல் யோசனை செய்தவாறு பதில் பேசாதிருக்கிறாய் இங்கு பேசுகிறவன் மனி தன் பேசுவதாக எண்ணுகிறாயா! கழுதை கத்துவதாக நினைத்தாயா? டேய் ! இந்த மவுனத்திற்கும் யோசனைக்கும் காரணம் எனக்குத் தெரியுமடா, தெரியும். (இவன் எப்படி யாவது உளறிக்கொண்டு போகட்டும். நாம் ரகஸியமாய் மாம னார் வீட்டிற்குப்போய்விடுவேசம்!’ என்று சூழ்ச்சிசெய்கிறாயா? 

டேய்! இந்த உயிர் இந்த உடலில் இருக்கும் வரையில் அந்த காரியம் நடக்காதடா! நடக்காது. அம்மாதிரி நீ செய்தா யானால் உனக்கும் என க்கும் இதோடு கண்டிப்பாக விட்டுப் போயிற்று என்று எண்ணி விடடா! இதற்கெல்லாம் பல் இளிக்கும் பேர்வழி இந்தப் பரமேச்வரன் இல்லையடா? அதை முதலில் தெரிந்து கொள்ளு. பெற்றே றாரை த்வேஷித்துக் கொண்டும், அல்லது தானே. அந்தப் பணத்தைக்கொடுத்து அவர்கள் சீர்செய் ததுபோலும் பணம் கொடுத்ததுபோலும், அல்லது திருட்டுத் தனமாக மாயியார் வீட்டிற்குச் சென்று உறவாடி தகப்பனாராகிவிடுவதும், இதுபோல் எத்தனையோ விஷயங்களை நான் கதைகளில் படித்திருக்கிறேன். அம்மாதிரி ஏதாவது இங்கு கையாண்டால் தெரியும் சேதி. ஆமாம்! கண்டிப்பாக நான் சொல்கிறேன். நாணயமாய் அந்த மனிதன் சொல்லியபடி பணத்துடன் பெண்ணையும் சீரும் சிறப்புமாகக் கொண்டுவிடட்டும். பிறகு ஆக்ஷேபனையே இல்லை.  வீண் பூச்சிமிட்டல் மிறட்டாதே!” என்று கடுங்கோபத்துடன் கூறினான். 

வைத்யநாதன் தன்னைத்தான் எத்தனைக்கட்டுப்படுத்திக் கொண்டும் அவன் உள்ளத்தில் பொங்கும் ஆத்திரமும் கோப மும் அடங்காது பீறிக்கொண்டு வந்த வேகத்தில் ‘”அப்பா! நல்லது. ஒரு மகனுடைய சந்தோஷ வளர்ச்சிக்கு ஒரு பிதா எத்தனை பாத்யப்பட்டவர், எத்தனை அக்கரையும் அன்பும் கொண்டவர் என்பதை நன்றாகப் பாடம்கற்றுக்கொண்டேன். குடும்ப ஐக்யத்திற்கும் பிறர் பார்த்து மகிழ்ந்து பின்பற்றி நடக்கவேண்டிய உத்தம மார்க்கத்தில் ஒழுகுவதற்கும் நான் கடமைப்பட்டவன். ஆகையால் உங்களுடைய, முக்யமாய் என்னருமைத் தாயின், மனங்கோணாது நடக்கக் கங்கணங் கட்டிக்கொண்டவன் நான் என்பதை மறக்கவேண்டாமப்பா! தாங்கள் இந்த அனாவச்யமான கல்யாணத்தையே செய்யாமல் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். வீணான பாபம், பழி, பரிகாஸம், ஏச்சுப் பேச்சு, தலைகுனிவு முதலிய எத்தகைய அம்சத்திற்கும் இலக்காகாமல் ஒரே நிலையான சந்தோஷத்துடன் இருக்கலாம்… சரி நான் வருகிறேன். ரயி லுக்கு நேரமாகிவிட்டது” று துடிதுடிக்கக் றீவிட் டுத் தந்தைக்கு நமஸ்காரம் செய்துப்பின் தாயாரின்காலைத் தொட்டு வணங்கி, “அம்மா! நான் என்றும் உன் அன்பிற்கு கட்டுப்பட்டவன். அப்பாவை எதிர்த்து எதுவும் செய்துவிட மாட்டேன். குடும்ப கண்ணியத்தைச் சிதைத்துக்கொண்டு சந்தோஷமனுபவிப்பதானது நரகவேதனைக்கும் மேம்பட்டது என்பது எனக்குத் தெரியும். கதைகள் படிப்பதும், நாட கங்கள், சினிமாக்கள், பார்ப்பதும் மக்கள் புத்தி விசாலித்து நல்ல நீதி போதனையைக் கற்று வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டுச் சரியானமார்க்கத்தில் நடப்பதற்காகவே சிலசத்குண சீலர்கள், அனுபவஞானிகள் பக்திரஸம் இதயத்தில்தோய்ந்த உத்தமர்கள் எழுதுகிறார்களேயன்றி பிறர் கெட்டுப்போவ தற்காக எழுதவில்லை. 

ஆனால் கலியின் கோரதாண்டவத்தில் காஸ்திகத்தைப் பரப்பி ஆஸ்திகத்தை யழித்துஜாதிமத மகிமைகளை ஒழித்து, நீதி நியாயம், பழக்கவழக்கம், தர்மம் முதலிய உயர்ந்த லக்ஷ யங்களைத் தாக்கியும் உதவாக்கரை விஷயங்களை ப்ரசாரம் செய்தும் மதத்வேஷங்களைக் கிளப்பியும் வீணான கலகப்புரட்சி களைப் போதித்தும் மக்களின் அறிவைக் கெடுத்துக் குட்டிச் சுவரடிக்கும் முறையில் ஒருசிலர் புத்தகங்கள் எழுதியும் அந்தக் கொள்கைகளைத் திரைப்படமாக்கியும் அதீத உணர்ச்சியில் நாட்டைநாசம்செய்யவும் முன்வந்திருக்கிறார்கள், ஆனால் அவை களுக்கு இதயத்தில் இடங்கொடுக்கும் கோழை, அறிவிலி உன் மகனல்ல, உன்னுடைய பவித்திரமான உதிரத்தில் ஊறிய தனால் என்னிடம் மேல்குறித்த பேய்கள் கிட்டஅணுகாது நீகவலைப் படாதே : நான் வீண் புரட்சி செய்யும் கலாட்டா மனித னில்லை. போய் வருகிறேன்… அப்பா என்னை ஒரு பண்டமாக மதித்து விலை கூறி விற்கத்துணிந் து 5 ஆயிரத்துக்குப்பேசி விற்றுவிட்டார். இந்த விலைவார்த்தை முன்பே தெரிந்திருந்தால் கல்யாணத்திற்கே இசைந்திருக்கமாட்டேன். விற்ற பண்டத்தின் பா திக்ரயந்தான் வந்தது. மிச்சக்ரயமும் வந்த பிறகு அப்பாவின் இஷ்டப்படி நடக்கட்டும்! இந்த வாதக்ஷி ணைப் பேய் நம் நாட்டைவிட்டு என்று ஒழியப்போகிறதோ! அன்றுதான் நம்முடைய புனிதமான சமூகத்தில் உண்மை யான சந்தோஷம் நிலவி மக்களின் இதயங்கள் இன்பக்கடலில் உல்லாஸ பவனி வரும்! இதையொழிக்க எந்தத் தீவிரவாதியும் சட்டம் கொண்டு வரத்துணியவில்லை ! ஏன் ! தன் மகனையும் பெண்வீட்டாரிடம் விலை கூவி வ்யாபாரம்செய்வதற்குப் பங்கம் உண்டாகிவிடுமல்லவா.. 

என்று தாயாருடன் ஆத்திரமாகப் பேசும் மகனைக்கண்டு பரமசிவ வனுக்கு உண்மையில் முக்கண்ணமூர்த்தியைப்போன்று கோவம் வந்துவிட்டதால் வாயில் வந்தபடி தாறுமாறாகத் திட்டி விட்டு ஒரே ஓட்டமாகச் சென்றுவிட்டார்! பாவம் தங்கம் மாவுக்கு அபாரமான பயம் உண்டாகி நடுக்கலே எடுத்துக் கொண்டது. ‘அம்பீ ! ஏன் எத்தனை சொல்லியும் உன்னை அடக்கிக்கொள்ளாது பேசி விட்டாயே ! அப்பாவின்மூர்க்கத் தனமும் அசட்டுப் பிடிவா தமும் உனக்குத் தெரியாதா! நீயும் ஊருக்குப் போய்விடப் போகிறாய். உன் பிதாவின்முறைப்புக்கு என்னால் சமாளிக்கும் சக்தி ல்லையே ! என்னசெய்வேன். நீயாவது சற்று அடங்கிப்போகக் கூடாதா? என்று கண்ணீர் விடுவதைக் கண்ட வைத்தியநாதன் மனது உருகிவிட்டது, 

அம்மா! ஏதோ அறியாத்தனமாய்ச் சொல்லிவிட்டேன். உன்னைப்போல் அந்தப் பெண்ணைப் பெற்ற தாயும், பெண் ணும் கலங்குவார்களல்லவா! என்று நினைத்தபோது நான் சற்று தவறிவிட்டேன். மன்னித்துவிடு. அப்பாவை நானே சமாதானம் செய்து அழைத்து வந்துவிட்டுவிட்டுப்போகிறேன். சரிதானாம்மா என்று பணிவுடன் கூறியவாறு சொன்னான்.முன் றிதெய்வங்களை மனம்நோகவைப்பது பாவமா? முன்பின்ன யாது என்னை மாலையிட்டு என்னால் எத்தனையோ சந்தோஷத் தையடைய இரவுபகல் எதிர்பார்த்து ஏங்கும் நந்தினியின்மனத் தைநோகவைத்து அதனால் அவள்பெற்றோர்களும்கலங்கித்தவி க்கச்செய்வது பாதகமா? என்னதர்மசங்கடமான நிலைமையில் என் பிழைப்பு வந்துவிட்டது! என்று அவன் உள்ளம் துடித்தது. 

எனினும் முன்னறிதெய்வமாகிய தன் அன்னையின் மனஅமைதியைத் தான் முதலில் கவனிக்கவேண்டும் என்று தோன்றிய தால் உடனே தகப்பனார்சென்றுள்ளவிடத்திற்குஓடி அவரைச் சமாதானம் செய்துத் தேற்றி அழைத்துவந்து தன் தாயாரிடம் சேர்த்துவிட்டு அவன் ரயிலுக்குச் சென்றான். அவன் இதயத்தில் கவலை என்கிற மேகம் கப்பிக்கொண்டது. 

அத்தியாயம்-2

அவன் இதயத்தில் கவலை என்கிற மேகம் கப்பிக்கொண் டது. கண்களில் மழைபெய்வது போல் கண்ணீர் பெருக சுப்ரமணியன் கடிதத்துடன் மனைவியிடம் வந்து கடிதத்தைக் கொடுத்தான். நாகலக்ஷக்ஷ்மி கடிதத்தைப் படித்துவிட்டு கவலையே படவில்லை. 

உம்! இதென்ன ப்ரமாத அதிர்ச்சியா என்ன? இம்மாதிரி பதில் தான் வரும் என்பது நான் எதிர்பார்த்தவிஷயந் தான். எனக்கு இதனால் கவலையே இல்லை;நான் சமயம் வரும்போதெல் லாம் சொல்லிக் காட்டுவதைவிடப் போவதில்லை. இதே வர தக்ஷிணைவலையை நீங்களும் உங்கள் மூத்தமகன் விவாகஏரியில் வீசி வரதக்ஷிணை என்கிற பக்கா மீன்களைப் பிடித்த பேர்வழி தானே? நான் அப்போதும் இந்தப் பிசாசுவேண்டாம் என்று சொன்னது மறந்துவிட்டதா? அப்போது சற்றும் எதையும் லக்ஷியம் செய்யாது இறுமாந்திருந்த நிலைமையில் செல்வமும் சரீர முடுக்கும் ஒத்தாசை செய்தது. என் பேச்சு ஏறாமல் சமுத்திரத்தில் கரைத்த சர்க்கரையைப்போல் ஆகிவிட்டது. அந்த உணர்ச்சியை இப்போ து நினைத்துப்பார்க்கிறதுதானே? சமூகத்திலுள்ள ஊழல்களை சமூகத்தவர்கள்தான் சேர்ந்து களைந்தெறிய வேண்டுமேயன்றி மற்றவர்கள் வருவார்களா? கட்டுப்பாடாக வரதக்ஷிணை அரக்கனை ஒழிக்க வேண்டு மென்று கங்கணங் கட்டிக்கொண்டு உை உழைத்தால் ஒரு சிறி தாவது குறையாமலா போகும். நீங்கள் கூசாமல் 5 ஆயிரம் வாங்கியதுபோல் இப்போது கடைசீ பெண்ணுக்கும் கொடுத் துக் கடனைத் தீர்த்தால் பெண் சந்தோஷப்படுவாள், இல்லாவிட்டால்…. 

என்று முடிப்பதற்குள் வெகு தைரியமாய் இவர்களின் மூத்த மருமகள் அங்குவந்து மாமியாரை நோக்கி, “அம்மா! எங்க அப்பாவும் இப்படித்தான் தவித்துத் தண்ணீராய் உருகி எங்கள் வீட்டையே அடகுவைத்து ஆயிரம் ரூபாய் கடன்வாங்கி 5 ஆயிரம் உங்களுக்குக் கொடுத்துப் பின் மூவா யிரம் கல்யாணச் செலவு செய்தபிறகு மேலே மேலே ஏற்பட்ட செலவின் பயங்காச் சுழலில் வீடு கடனில் மூழ்கிப்போய்விட் டதை நீங்கள் அறிய வில்லை. இப்போது சந் தர்ப்பம் வரும்போது ‘சொல்லிக்காட்டவேண்டும் என்று சொல்கிறேன். அப்பாவின் கதியைக் கண்டு நான் என்ன தான் தவித்தேன் தெரியுமா? இந்த அவமானம் தாங்காதுதான அம்மாவும் அப்பாவும் உலகையேவிட்டு மறைந்தார்கள். என்று கண்ணீர்ப் பெருகச் சொல்விவிட்டுச் சடக்கென்று உள்ளே போய்விட்டாள். 

இதைக்கேட்ட சுப்ரமணியத்தின் மனம் பின்னும் பாகாய் உருகியது. முதலிலிருந்த நிலைமையும் முடுக்கும் இப்போது அடங்கிவிட்டதல்லவா! நான்கு பெண்களுக்கும் விவாகத்தைச்செய்து ஓட்டாண்டியாகிவிட்ட சமயம் மூத்த மகனின் கல்யாணம் ஒரு கறவை மாட்டைக் கறந்து உரிவதுபோல் சம்மந்திகளை உரிந்துவிட்டார். பிறகு பிள்ளைகளின் படிப்பு, மூத்த பெண்களின் மற்றபடியான செலவுகள் – எல்லாம் மனி தனை அடியோடு ஆட்டிவிட்டதால் நந்தினியின் கல்யாணம் எப்படியாவது முடிந்து அவளைக் கொண்டு தள்ளிவிட்டால் போதும் என்ற எண்ணத்துடன் தான் இருந்தார். “ஏதோ நல்ல இடம், உயர்ந்த குடும்பம், பெரிய படிப்பு, அழகான பிள்ளை-ஒரே பிள்ளை, நந்தினியை நன்றாக நடத்துவார்கள் என்றெல்லாம் கனவு கண்டு கடனை வாங்கியாவது கல்யாணத் தைச்செய்துவிடவேண்டும். இந்த வரன் தப்பினால் இம்மாதிரி கிடைக்காது என்கிற ஆசையால் துணிந்து இறங்கிவிட்டார். 

தனக்குள்ள சகல சொத்துக்களும் அடமானத்தின் சங்கிலியில் ஊசலாடும்போது துணிந்து யார் கடனைக்கொடுப் பார்கள்? கல்யாணத்தின்போது எப்படியோ நடந்துவிட் டது. இப்போது தானே திண்டாட்டம் அதிகமாகி வதைக் கிறது. தவித்துக்கொண்டே இருக்கையில் நந்தினி வந்தாள். அப்பா! கடிதத்தை அம்மா காட்டினாள்,நானும் பார்த்தேன். இதென்ன அசட்டுத்தனம்; எனக்காக நீங்கள் கண் கலங்க வேண்டாம். நான் ஒரு பிள்ளை என்று எண்ணிவிடுங்கள்; அவர்கள் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடுமை செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் உலகத்தில் எத்தனையோ பேர்கள் கல்யாணமே இல்லா திருக்கிறார்களே, அதுபோல் நானும் இருக் திருக்கலாம். இப்போதும் பாதகமில்லை. என்னை ஸ்காலர் ஷிப்பில் காலேஜில் சேர்க்க ஏற்பாடுசெய்து அனுப்பி விடுங்கள். அவர்களுக்கு மனது இரங்கிவந்து அழைக்கும் போது நான் போகிறேன். வீணாகக் குழம்பித் தவிக்கவேண்டாம். கடன் என்கிற கடவில் கரைகாணாது தவிப்பது போதும். இனி அவைகளை விற்றுக் கடன் தொல்லையைத் தீர்த்துக்கொண்டு சுகமாக வாழுங்கள்; வீணான யோசனை வேண்டாமப்பா. நான் செய்த பாவந்தான் உங்களை ஆட்டு கிறது. இப்போதுள்ள நிலைமையில் பிடிவாதமாய் என்னைக் கொண்டு விட்டுவிட்டு வந்தால் அது ரஸாபாஸமாக முடியும். திரும்பவும் அவர்கள் என்னைக் கால்பந்து ஆடுவதுபோல் இங்குக்கொண்டு தள்ளினால் என்ன செய்வது? அல்லது மக னிடம் என்னை அனுப்பாமல் வேலைக்காரிபோல் வைத்திருந்தால் உங்கள் மனம் சகிக்குமா? அது அழகா? ஊரர்தான் என்ன சொல்வார்கள். 

அல்லது பட்டிணத்தில் அவர் தனியாக இருக்குமிடத் திற்கு நீங்கள் கொண்டுவிட்டால்மட்டும் திருடன் வாழ்வது போல் திருட்டு வாழ்க்கைதானே வாழவேண்டும் ? அது இனிக்குமா! அதனால் அவருக்குத்தான் என்ன சந்தோஷம்? நான் சகலத்தையும் அலசிப்பார்த்துவிட்டுத்தானப்பா சொல் கிறேன். இனி இரண்டாங்கல்யாணத்திற்கு அவர்கள் துணிய முடியாது. சட்டம் அதற்கு வேலிபோட்டிருக்கிறது: ஆகை யால் பயப்படவேண்டாம்! அப்படி யாராவது ரகஸியமாய் விவாகம் செய்துவைக்கவும் பெண் கொடுக்கவும் முன்வந்தால் நானே நேரில் சென்று’ என்னை விளம்பரப்படுத்தி அதைத் தடைசெய்கிறேனப்பா! நான் இத்தனை நேரம் என் சினே கிதை சீதாவிடம்போய்ப் பேசிக்கொண்டிருந்தேன் ; அவள் பிதா எனக்கு ஸ்க்ாலர்ஷிப்பு வாங்கிக்கொடுப்பதாயும் தன்னா லான உதவி செய்வதாயும் சொன்னார். ஆனால் இந்த விஷ யங்கள் ஒன்றும் அவருக்குத் தெரியாது. நான் படிக்க ஆசைப்படுவதாக அவரிடம் கேட்டேன். நீங்கள் கவலையே படவேண்டாம். இக்கடிதத்திற்கு பதிலும் எழுதவேண்டாம்; நானும் இனி அவருக்கு எழுதப்போவதில்லை. என்ன நடக் கிறதோ பார்க்கலாம், நீங்கள் என் படிப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள். 

அப்பா! இந்த அனுபவத்திலிருந்தாவது இனி இருக்கும் பிள்ளைகளுக்கு வாதக்ஷிணை வாங்காது விவாகத்தைச்செய்து காட்டுங்கள். அந்தக் கொடிய பழக்கத்தைக் குழிதோண்டிப் புதைக்கக் கங்கணங்கட்டிக்கொண்டு ப்ரசாரம் செய்யுங்கள்” என்று படபடத்துக் கூறினாள். 

தன் மனைவி, மருமகள், மகள் மூவரும் இம்மாதிரி சுடச் சுடப் பேசுவார்கள் என்று இவர் சற்றும் எ எதிர்பார்க்கவில்லை யாதலால் இன்னது செய்வதென்று தோன்றாமல் விழிக்கிறார். பெண் சொல்கிறபடி பேசாதிருந்துவிடலாமா? அப்படி இருந் தால் ஊரார் என்னசொல்லுவார்கள்? ‘பெண்ணை வாழவிடா மல் இம்மாதிரி செய்வது அழகா?’ என்று ஏசமாட்டார்களா? ஒரு பெண் இம்மாதிரி வீட்டோடு இருப்பதால் மற்ற பிள்ளை களுக்கு மதிப்புடன் பெண் கொடுக்க வருவார்களா? மருமகப் பிள்ளைகள் தான் மதிப்பார்களா? என்கிற கலக்கம் உண்டாகி விட்டதால் ஒருவருக்கும் எத்தகைய பதிலும் சொல்ல முடியாமல் தடதடவென்று வெளியே சென்றார். ஒவ்வொரு வருடைய வார்த்தையும் அவருடைய செவியில் ஒலித்து இதயத்தைத் தாக்கியது. 

அத்தியாயம்-3

தடதடவென்று வெளியே சென்றான். ஒவ்வொருவரு டைய வார்த்தையும் அவன் செவியில் ஒலித்து இதயத்தைத் தாக்குகிறது. இதென்ன போராட்டமான வாழ்க்கை. தனி அறையில் இருந்தாலும் நிம்மதி இல்லை. சினிமாவுக்குச் சென்றாலும் அங்கும் கதையில் வரதக்ஷிணையின் கொடுமை யைப்பற்றிய இலந்தானா? அதில்வரும் ஒவ்வொரு கபரும் சுடச்சுடச் சொல்லும் வார்த்தைகள் என்னை நையாண்டி செய்துக் குத்திக் காட்டி ஏளனமாகச் சிரிப்பதுபோலல்லவா தோன்றுகிறது. சீச்சீ ! இந்தப் பேயின் தாண்டவத்தைச் சினிமாவில் பார்த்தால் என்ன? நாடகத்தில் பார்த்தால் என்ன? மக்களுக்குப் புத்திவரப்போகிறதா என்ன! இக்கொ டிய வரதக்ஷணை முன்பெல்லாம் ப்ராமணர்கள் சமூகத்தில் மாத்திரம் தா கண்டவம் செய்ததாகவும் மற்ற வகுப்பாரிடம் இல்லை என்றும் சொல்வதுண்டு. இப்போதா! அடேயப்பா! சர்வ ஜாதியிலும் புகுந்து அந்தப் பேய் எக்காளமிட்டு உருமு கிற கோராமை என்றுதான் மறையப்போகிறதோ? 

மாதங்கள் ஒடி மறைந்து ஒரு வருஷ காலமும் ஆகி விட்டது. என் வாழ்க்கைப் பாதையிலிருந்து ஒரு அடிகூட எடுத்துவைக்கும் மாறுதல் உண்டாகவில்லை. நான் ன் லீவுக்குப் போகாததால் அம்மாதான வருந்திக் கடிதம் எழுதியிருக் கிறாளேயன்றி அப்பா எத்தகைய சந்தடியும் இல்லாமலிருக் கிறார். நந்தினியும் அப்பாவின் அந்தக் கடிதத்திற்குப் பிறகு ஒரு கடிதங்கூட எழுதவில்லை. அவள் காலேஜில் சேர்ந்து படிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். சிலர், ‘வீட்டில் தண்டப் பொழுது போக்கும் நீ எங்களுக்கு ஒத்தாசைக்கு வந்திரு’ என்று உடன்பிறந்த சகோதரிகள் இளப்பமாகக் கூறுவதாக வும் அதனால் இவள் குன்றிவிட்டதாயும் சிலர் சொல்கிறார்கள். எது நிஜமோ? எது பொய்யோ! நிம்மதியற்ற மனத்திற்கு விமோசனந்தான் ஏது? என்று வைத்யநாதன் பாதிசினிமாவி லிருந்து எழுந்து தன் தனியறைக்கே வந்து சேர்ந்தான். 

அன்றைய மாலைப் பத்திரிகை அப்போதுதான் வந்தது. வழக்கப்படி பத்திரிகையைப் பிரித்தான். அதில் பலபல விஷ யங்களும் புகைப்படங்களும் இருந்தன. அவைகளில் ஒன்று வேஷங்களணிந்த சிலமாணவிகள் ஏதோநாடகம்நடித்தபோது எடுத்த புகைப்படமும் அதன் விவரமும் கீழே குறிப்பிடப் பட்டிருந்தது. 

மகாத்மாஜி கல்லூரியில் வருஷாந்திர விழா கவர்னர் தலைமையில் நடந்தது. அக்கல்லூரி மாணவி நந்தினிவைத்ய நாதன் என்கிற மாதரசி “வரதக்ஷிணை பூதம்” என்கிற கதையைத் தானே எழுதி தானே கதாநாயகி பாத்திரம் ஏந்தி நடித் தார்கள். அந்த நாடகத்தின் பாத்திரங்கள் மற்ற மாணவிகள். மத்தியில் இருப்பவர் கவர்னர் ஜோதராய். பக்கத்தில்இருப்பவர் கல்லூரி ப்ரின்ஸிபால். இந்த நாடகம் மிகவும் நன்றாயிருந்த தாகவும் வரதக்ஷிணை பூதம் உலகத்தையே உறிஞ்சு அழிக்க வந் திருக்கும் காளகோடி விஷத்திற்குச் சமமானது என்றும் அந்தக் கொடிய பூச்சி எப்படியோ நம் சமூகத்தில் புகுந்து விட்டதென்றும், அதை அடியோடுவிறட்டியடித்து அதற்கு முற்றுப் புள்ளிவைத்து சாவுமணி யடித்துவிடவேண்டும் என் றும் ஸ்ரீமதி நந்தினி வைத்யநாதன் ச்ருஷ்டித்த கதை மிகமிக ஸ்வாரஸ்யமாயிருந்ததோடு அவர் நடித்த நடிப்பு அபாரமாய் உணர்ச்சி ததும்ப காண்போர்களின் இதயத்தைத் தொட்டுக் கண்ணீரைக் கக்கவைத்து ஆட்டிவிட்டது என்றாலும் மிகை யாகாது. அந்தக் கதையில் சொல்லியபடி இக்கொடுமையை ஒழிக்க சட்டம் அவச்யம் கொண்டுவரவேண்டியது தான் என் பதை நான்கூட ஒப்புக்கொள்கிறேன். சீக்கிறத்தில் அம்மாதிரி யொரு நல்லகாரியத்தைப் பொதுமக்கள் ஒன்றுகூடிச் செய்யத் தூண்டி சட்டமாக்கப் பாடுபடவேண்டும் என்றும் கவர்னர் பேசினார்: காலேஜ் ப்ரின்ஸிபால் ஸ்ரீமதி சகுந்தலாதேவி நந்தினி வைத்யநாதனைப் பாராட்டிப் பேசி அவருக்கு மாலை சூட்டினார். 

என்று வரைந்திருந்ததைப் படிக்கப்படிக்க வைத்யநாத னின் கண்ணீர் கட்டுமீறி வழிந்தோடுகிறது. நந்தினி வைத்ய நாதன்/என்னபொறுமை! வேண்டாமென்று விலக்கிய என்னைத் திரஸ்கரித்துத் தள்ளிவிடாமல் தற்கால நாகரீகத்தையொட்டி என் பெயரைக் கூடசேர்த்துக்கொண்டிருக்கிறாளே? இதை அப்பா பார்த்தால் என்ன ஆட்டம் ஆடுவார்! என் பெயரை வைத்துக்கொண்டது ஒரு குற்றம்,நாடகம் எழுதினது இரண் டாம்குற்றம், அதில் அவள் நடித்தது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோலான குற்றம், அவள் காலேஜில் படிப்பது மன்னிக்கமுடியாத குற்றம். ஆக நான்கு குற்றங்களுக்கும் இப்போது நந்தினி ஆளாகிவிடுவாள் என்பதில் ஐயம் இல்லை. அடாடா! தன்னுடைய அனுபவத்தையே! தன்னுடைய- உணர்ச்சிகளையே கொட்டி எழுதியும் நடித்தும் சிறிது தணித் துக்கொண்டாளா! இந்தப் பத்திரிகையில் உள்ள இந்த விஷ யத்தை அப்பாவின் சினேகிதர்களும் பந்துக்களும் படித்தால் என்ன மதிப்பார்கள். அப்பாவின் அசட்டுக்குணம் எத்தனை தூரம் பாதிக்கப்பட்டு ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடமாகி விடும். அதனால் அவர் மனது இன்னும் எப்படித்தான் கோபமடையுமோ! தெரியவில்லையே? இதனால் என்ன அனர்த் தம் விளையுமோ! என்று வைத்தியநாதன் மனது தவிக்கிறான். 

நந்தினிக்கே கடிதமெழுதி அந்தக் கதையை எனக்கு அனுப்பும்படி கேட்டால், அனுப்புவாளா? ஊம். ஒருபோதும் அனுப்பமாட்டாள். அவளைக்கேட்பதால் என்னுடைய முட் டாள்தனந்தான் வெளியாகும்.. இதைவிட காலேஜ் ப்ரின்ஸ் பால் ஸ்ரீமதி சகுந்தலாவுக்குக் கடிதமெழுதினால் ஒருவேளை கிடைக்கலாமல்லவா! ஆம்! இப்படித்தான் செய்யவேண்டும். என்று தீர்மானித்து உடனே கடிதம் எழுதத் தொடங்கினான். 

மரியாதைமிக்க ப்ரின்ஸ்பால் அவர்களுக்கு 

நான் ஒரு காலேஜ் மாணவன். இன்று நேயன் என்கிற பத்ரிகையில் உங்கள் காலேஜ் வருஷ விழாவின் கொண்டாட்ட வைபவமும் புகைப்படமும் பார்த்தேன். வரதக்ஷிணை என்கிற பேயை விறட்டி யடிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டுள்ள கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். தங்கள் காலேஜில் நடை பெற்ற நாடகத்தைப்பற்றி நேசனில் படித்தபோது நாங் களும் அதே நாடகத்தைப் போட்டு ஒருகிளர்ச்சியும் புரட்சியும் உண்டாக்கி வரதக்ஷிணை வாங்கும் பிள்ளைவீட்டுக்காரர்க ளாகிய கொள்ளைக்காரர்களை ஒரு ஆட்டு ஆட்டி வைக்க மிக வும் ஆசைப்படுகிறோம். இத்தகைய உபயோகமான கதையை எழுதியும் நடித்தும் புகழ்பெற்ற உங்கள் சிறந்த மாணிக்கம் போன்ற மாணவியாகிய ஸ்ரீமதி நந்தினிவைத்யநாதன் அவர் களுக்கு எங்கள் சந்தோஷத்தையும் பாராட்டுதலையும் தெரி விக்கவும். அந்தக்கதை அச்சு ஏறாத கையெழுத்து ப்ரதியா யிருப்பினும் தேவலை, அதை தயவு செய்து அனுப்பினால் பார்த்து ஒரு காப்பி நாங்கள் எடுத்துக்கொண்டு உடனே திருப்பி அனுப்பிவிடுகிறோம். உங்கள் மாணவியிடம் இதற்கு அனுதியும் வாங்கியனுப்பவும். ஏதாவது நிபந்தனைகளோ, கட்டணம் செலுத்த வேண்டியதோ இருந்தால் அதையும் தெரிவிக்கவும்.தாராளமாக அப்படியே நடந்துக்கொள்வோம், 

இந்த உதவியைத் தாங்கள் செய்தால் என்றுமே மறக்கமாட் டோம். பாரதமாதா கல்லூரிக்கு மகாத்மாஜி கல்லூரி உதவுவது மிகமிகப் பொருத்தமானதாகும். 

உடனே அனுப்பவும். 

இங்ஙனம் 
வைதீச்வரன். 

என்று கடிதமெழுதி உடனே உரையிட்டு அனுப்பினான். இம்மாதிரி செய்வது சரியா ! இதனால் அப்பாவுக்குக் கோபம் அதிகமாகி என்ன நேருமோ என்ற பயமும் ஊடே சற்று வதைத்தது எனினும் தனது மனத்தில் பொங்கும் ஆத்திரம் தணிவதற்கு இது ஓர் வழியாகவே தோன்றியது. அவைகளை அனுப்பிய பிறகே மனத்தில் ஒரு நிம்மதி நிலவியயது. 

மறுபடியும் இன்னொரு பத்திரிகை விலை கொடுத்து வாங் கினான் அதில் நந்தினியின் உருவம் சிறிது வேஷத்தினால் மாறி இருப்பினும் மல்கோவா மாம்பழம் போன்ற கன்னங்க ளின் எடுப்பும் சண்பகப்புஷ்பம்போன்ற தீர்மையான மூக்கின் அழகும் கயல்விழிகளின் ப்ரகாசமும் சடக்கென்று தெரிந்து விட்டது. கல்யாணத்தன்று எடுத்த புகைப்படத்தையும் இந்த படத்திலிருக்கும் நந்தினியையும் ஒப்பிட்டுப் பார்த்தான். உடல் மெலிவின் வித்யாஸமும் முகத்தில் ஒரு விதமானசோக மும், ஏக்கம், கவலை, முதலிய ரேகைகள் படர்ந்திருப்பதும் வெகு நன்றாகத் தெரிந்தது. தண்ணீரில் வாழவேண்டியமீனைத் தரையில்போட்டதுபோலிருக்கும் பரிதாபத்தைக் காண உண்மையில் தன் பிதாவின்மீது வந்த கோபமும் அடங்காத வெறுப்பும் அவனைக் கட்டு மீறி நடக்கும்படிச் செய்து விடும் போன்ற பயமும் உண்டாகியது. பத்திரிகையைப் புரட்டிக் கொண்டே வந்தான். பத்திரிகைக்காரர்கள் எழுதும் செய்திச் சுருள்பத்தியில் அந்தநாடகத்தின் விமர்சனம்வந்திருப்பதைக் கண்டு பரமசந்தோஷத்துடன் அதைப்படிக்கலானாள். 

“மகாத்மாஜி காலேஜின் வருஷாந்திரவிழா மேன்மை தங்கிய கவர்னரவர்களின் தலைமையில் நடைபெற்றது… இக் காலேஜ் ஆரம்பித்து சுமார் பத்து வருஷங்களாகிறது. பத்து வருஷத்திற்குள்ளாக இக்காலேஜ் மிகமிக உயர்ந்த நிலைமையில் வ்ருத்தியாகிவருகிறது குறிப்பிடத்தக்கது. கல்லூரி போதனா முறையைத் தவிர கைத்தொழில் வளர்ச்சி சமூகசீர்திருத்த ஸேவை, மாண னவிகள் ஒன்றுகூடி சன்மார்க்கத்தில் ஐக்ய பாவத்துடன் பலதுறைகளிலும் முன்னேற்றமடையவும் தொண்டு புரிவதற்காகவும் மகாத்மாஜி ஸேவாசங்கம் என்ற ஒரு சங்கத்தை ஸ்தாபித்து அதைமிகமிகச் சிறந்த முறையில் நடத்திவருகிறார்கள். இவ்வருஷ விழாவன்று பொதுமக்கள் உள்ளங்களை உருக்கும் வண்ணம்“வர தக்ஷிணைப்பேய்” என்கிற நாடகத்தை நடத்தினார்கள். கதையை எழுதிய மாணவி ஸ்ரீமதி நந்தினி-வைத்யநாதன் அவர்களே கதாநாயகியாக நடித்து ஒருபெரும்புரட்சியை விளைவித்துவிட்டார்கள்.முக்ய மாய் கதையில் சில பாகங்களைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. 

கதாநாயகியாகிய இந்திரா என்பவள் வரதக்ஷிணையும் சீரும் சிறப்பும் போ தவில்லை என்கிற காரணத்தினால் தள்ளப் படுகிறாள். அவள் தானாகப் புக்ககம் சென்று மாமியார் மாமனார்காலில் விழுந்து தன்னை வேலைக்காரியாகவாவது ஏற் றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் காட்சி மனத்தை உருக் கியது. கணவனிடம் வந்து இவ்வடிமையைக் கைவிடலாமா? அக்கினி சாக்ஷியாகக்கைப்பற்றிய ப்ரமாணத்தை மீறலாமா? என்பிதாவின் நிலைமைக்கு மனமிரங்கி என்னை ஒருவேலைக்காரி போல் நடத்தக்கூடாதா ! பதியின் கடமை சதியைத் தவிக்க விடுவதுதானா? பணத்திற்கா நீங்கள் மாலை இட்டீர்கள்? மாலை யிட்ட பெண்ணுக்கு தயை காட்ட உங்கள் இதயத்தில் பசை யில்லையா? நான் இப்படித்தவிப்பதுதான் உங்கள் விருப்பமா; சமூ முகத்தின் பெருமை இதுதானா! இந்து தர்மத்தின் மகிமை இதுதானா! நாட்டின் லக்ஷயங்கள் இதுதானா’ நான் தற்கொலை புரிந்து கொண்டால் அந்த பாதகம் உங்கள் காலைச்சுற்றாதா! ஒரு பெண்ணை அக்கினிசாக்ஷியாகக் கைப்பிடித்ததன் அடை யாளம் அவளை அக்கினிபகவானுக்கு இறையாகச்செய்வது தான் வீரபுருஷர்களின் தீரச்செயலா! உங்கள் காதில் என் கதறல் கேட்கவில்லையா! இம்மாதிரி வரதக்ஷிணைப்பேயின் நிர்மூலத்தாண்டவத்தின் பரிபவத்தில் மனது கொதித்து உடைந்து சின்னபின்னமாய்ச் சிதறிப் போவ தன் விளைவால் அப்பெண்ணின் வாழ்வே பாழ்படுகிறது. சில இடங்களில் தகாத துன்மார்க்க வழிகளிலும் சென்று பாவியாகிறாள். இத் தகைய கதிக்குக்கொண்டுவந் தகணவனை – கொள்ளைக்கூட்டத் திற்கொப்பான பிள்ளைவீட்டுக்காரர்களை சமூகம் ‘ஒன்றுமே செய்வதில்லை. 

இத்தகைய சதிகாரர்களின் செய்கையினால் மனமுடைந்து நாசமாய்விடும் பெண்களைப் பாழும் சமூகம் ஏற் பதில்லை. ப்ரஷ்டம் செய்து வேடிக்கைப் பார்க்கிறது. பின்னும் ஏசிப்பேசி இளப்பமாக்கி மடியச்செய்கிறது. சண்டாளசமூ கத்தின் ஊழலை வளர்க்கும் புல்லுருவிகளைக் கண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை. நீதியும் இல்லை. பெரியமனிதர்கள் என்று பட்டம், பதவி, பணம் இவைகளுக்காகவே உயிர் வாழும் பொம்மைகளும் வருவதில்லை. இந்த அனியாயத்தைக் கேட் பாரில்லையா! இந்த அக்ரமத்தை அடக்குவாரில்லையா! கடவு ளுமா கண்மூடிக்கொண்டு மவுனம் சாதிக்கிறது… 

என்று இன்னும் ஏதேதோ வார்த்தைகளை ஆத்திரம் மீறிய உணர்ச்சியுடன் கடச்சுடசொல்லிநடித்த நந்தினிவைத்ய நாதனுக்கு முன்பு ஒரு தொழிலாளியான நாடகக்காரர்களும் வெட்கித்தலை குனியவேணும். கடைசீயில் நந்தினி, ”கொடிய வரதக்ஷிணைப்பேயே! எத்தனைக் குடும்பங்களில் நீ புகுந்து நாசச்தையும் க்ஷாமத்தையும் விளைவித்தும் இன்னும் உன் கொடிய பசி தணியவில்லையா! உன் ரௌத்திரத்தாண்டவத் தின் ஜதிஸ்வர அடைவுகள் முடியவில்லையா! இன்னும் சீற்றம் தணிந்து த்ருப்தி உண்டாகவில்லையா! இந்த உலகத்தில் இல் லாத பொல்லாத பெயர்களுடன் பில்லி சூன்யம் பேய் பிசாசு ஏவல் என்று உலாவும் கொடுமைகளை ஒட்டி த்வம்ஸம் செய்ய பல மந்திரவாதிகள் மூலை முடுக்குகளில் தோன்றி அவர்களே பெரிய ஆட்டம் ஆடவும், ஆட்டிவைக்கவும் சில பாவிகள் வேஷக்கார மந்திரவாதிகள் எத்தனையோ குடும்பங்களை இந்த வ்யாஜத்தின் மூலம் கெடுத்துக்குட்டிச்சுவரடிக்கவும், படிப்பே இல்லாத பட்டிக்காட்டு மூடஜனங்களை-ஏன் படித்த பட்டிண வாஸத்து ப்ரமுகர்களையும்கூட ஆட்டிவைக்கக்கிளம்பியிருக்கி றார்களே! உன்னைத் துலைத்துத்தலைமுழுகவும், உனக்குச் சாவுமணி யடித்துக் குழிதோண்டிப் புதைக்கவும் – உன்னை பூண்டோடு கிள்ளி எ றியவும் ஒரு மந்திரவாதியும் இல்லையா? உன்னுடைய கொடிய அரசாட்சி இருக்கும் வரையில் உலகம் உருப்படப்போவதில்லை. ஹதமாகிப்பொடிசூர்ணமாகி சூன்ய மாகி வரண்ட பாலை வனமாகி மடியத்தான் போகிறது. 

ஹே! வரதக்ஷிணைப்பேயே! கருப்புமார்கெட்டில் கொள் ளையடித்தவனும் லஞ்சம் வாங்கி பெரிய பணக்காரனாகியவனும் தரகுவ்யாபாரம் செய்பவனும் சூதாடி குதிரைப்பந்தயமாடி மோசடியில் ஜெயித்துப் பணம்சேர்த்த பாதகர்களும் செய் யும் அட்டகாஸத்தைக்கண்டு,க்ரா ராமாந்திரங்களில் உழுது பயிரிட்டு ஊணும் உடையும் வாழ்வுக்கான சகல சம்ரக்ஷணையும் செய்து கொள்ள ஆகாயத்தை எதிர்பார்த்துஏங்கும் ஏழைக் குடிமக்களையுமா நீ பிடித்து ஆட்டுகிறாய். 

மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் 5-6-ஆத்மாக்களை வைத்து ரக்ஷிக்கும் வகையின்றி, தற்காலம் புதிய கொள்ளை யாகிய வீட்டுக்கு அட்வான்ஸ் பணத்தைக்கொட்டித் துலைக்கக் கதியின்றி, அன்றாடம் காலக்ஷேபம் எப்படி ஆகப்போகிறது என்று கதிகலங்கித் தவிக்கும் குடும்பத்திலும் நீ புகுந்துகாசம் செய்கிறாய்!உன்னை ஒழித்துத் தலைக்கட்ட உலகில் யாருமே இல்லையா… என்போ போன்ற பாவிகள் கணவனால் விலக்கப்பட்ட அவமானத்துடன் தாய் வீட்டிலும் சிறுமைப்பட்டுச்சாகும் நிலைமை: ஊரிலும் மதிப்பில்லை, வாழாவெட்டி! வாழாவெட்டி என்கிற ஏச்சு: சுற்றத்தவர்கள் இகழ்வது. படித்துப்பயன் பெறப் பணமில்லை. சிபார்சு செய்ய மனிதரில்லை, மனிதரிருந் தால் மனமில்லை, உதவி செய்ய உற்றாரில்லை, எப்படியோ படித்து வருத்திக்குவந்தால் வேலை யில்லாத் திண்டாட்டம். போக்கிரிப்பாவிகளின் கண்வலைக்குத் தப்பமுடியாத பயங்கரம் அப்பப்ப! ஒன்றா இரண்டா! வெறிபிடித்தப் பேயே ! என் போன்ற இளநங்கைகளின் உயிரைப் பலி வாங்கிக்கொண்ட பிற காவது உன்னை ஒழித்து விடும் நல்ல காலம் உலகத்திற்கு வருமா! அப்போதும் வராதா!கட்டிய கணவனும் வரதக்ஷிணை வரதக்ஷிணை என்று இரவு பகல் கொள்ளிவாய்ப் பிசாசுபோல் பறக்கும் அற்பமதியுடையமாமனார் மாமியார் முதலிய எல்லோ ரும் அந்தப் பெண் மடிந்த சுகத்தை, சந்தோஷத்தை, வாழ்க் கையில் இன்பத்தை அடைந்து வாழட்டும். இதோ! இதோ! நான் பலியாகிறேன். வரதக்ஷிணைப்பேயே! என்னை விழுங்கி ஏப்பமிடு, இந்தச் சந்தோஷத்தை என் கணவனிடமும் என் மாமனாரிடமும் கூறிக் கும்மாளமிடு ” என்று ஒரே உணர்ச்சி வெள்ளத்துடன் ஆவேசம்வந் தவளைப்போலக்கூறிவிட்டுக்கத்தி யால் குத்திக்கொண்டு கீழேவிழுந்த காக்ஷி சபையிலுள்ள அத்தனைபேர்களின் நெஞ்சை உருக்கிக் கண்ணீரைக் கக்க வைத்துவிட்டது” 

என்றதைப் படிக்கும்போது, “ஹா… நந்தினி! நந்தினி.” என்று தன்னையறியாதுவாய் விட்டுக்கத்திவிட்டான். அவனால் பொறுக்கவேமுடியாத வேதனை செய்துவதைக்கிறது. உண்மை யிலேயே நந்தினிகுத்திக்கொண்டு இறந்திருப்பாளோ… என்கிற எண்ணம் தோன்றி வதைக்கிறது. தகப்பனார் மீது வரும் கோபம் உச்சநிலையை அடைந்து கண்களில் தீப்பொறிபறக் கிறது. இனி இம்மாதிரி பயந்து கொண்டு வாளாவிருப்பதில் பயனில்லை. எப்படியாவது ஊருக்குச் சென்று அப்பாவிடம் இவைகளைக் காட்டி, சண்டையிட்டு “மரியாதையாய் நீங்கள் அழைத்துவருகிறீர்களா! நான் போய் விடட்டுமா!” என்று பிடிவாதம் செய்து நந்தினியை அழைத்துவருவதே சரி.என்று திடமான ஸங்கல்பம் செய்துகொண்டான். அதே நினைவில் உள்ளத்தில் ஏதேதோ யோசனைகள் சுழன்றுப் போராடின. 

அத்தியாயம்-4

திடமான ஸங்கல்பம் செய்து கொண்டான்; அதே நினைவில் உள்ளத்தில் ஏதேதோ யோசனைகள் சுழன்றுப் போராடின. பைத்தியக்காரன், வைத்தியநாதனைப்போல் உதவாக்கரை மனிதன் வேறுயாரும் இருக்கமாட்டார்கள். நானே இந்தப் பத்திரிகையை அவனுக்குக் கொண்டு காட்டி அவனுக்குப் புத்தி கற்பிக்கலாம் என்றுதான் நினைக்கிறேன் என்று ஸதாநந்தன் எண்ணிக்கொண்டிருக்கையில் அவன் மனைவி அங்குவந்து,”என்ன அபாரமானயோசனை செய்கிறீர்” என்றாள். 

இதே நேயன்என்கிற பத்திரிகையை மனைவிக்குக் காட்டி, பயித்தியக்கார வைத்யநாதனைப்பாரு! அப்பாவின் அசட்டுப் பிடிவாதத்திற்கு இந்த அசடு அடங்கிக்கிடக்கிறது. பாவம் அவன் மனைவி பஸ்டுக்ளாஸ் கதை யொன்று எழுதி காலேஜில் தானே கவர்னரின் முன்பு நடித்துக்காட்டி எல்லோரையும் ப்ரமிக்க வைத்து விட்டாளாம் ! கதையின் முடிவைப்போல் அவள்முடிவும் ஆய்விட்டால் என்ன செய்வது? இந்த முட்டா ளிடம் போய் எப்படியாவது தகப்பனாரைச் சரிப்படுத்திக் கொண்டு நந்தினியை அழைத்துக் கொள்ளும்படிச் சொல்லி விட்டு வரப்போகிறேன்! என்று கூறிவிட்டுத் தடதடவென்று கிளம்பினான். 

வைத்தியநாதனிடம் வந்து, டேய் பழி! கதையைப்படித்து விட்டுத்தான் மூணாம் பேஸ்து வைத்தமாதிரி உட்கார்ந்திருக் றாயா ! பேஷ்: இனிமேல் கூடவா உனக்கு மனத் துணிய வில்லை! கிளம்புடா!வேணுமானால் நான் உன்னுடன் துணைக்கு வருகிறேன். உன் தகப்பனாரிடம் சக்கைபோடு போட்டுப் பேசி தடபுடல் பண்ணிவிடுகிறேன். அவரும் ஏதோ மரியாதைக் குக்கட்டுப்பட்டு நடந்தால் பார்ப்போம்: இல்லையேல் வாடா! ரண்டுபேருமாய் தீபாவளிக்கே அங்கு போய்விடலாம். தோழிமாப்பிள்ளையாய் நான் வருகிறேன். வேண்டுமானால் ‘என் மனைவி நீலாவையும் அழைத்து வருகிறேன். எழுந்து ஒரு முடிவுக்கு வாடா! நான் இனி உன்னை விடவேமாட்டேன். என்று வற்புறுத்திக் கூறினான். 

பாவம்! வைத்தியநாதனுக்கு அழுகை அழுகையாய் வரு கிறதேயன்றி என்ன பதில் சொல்வதென்றே தோன் றவில்லை. “ஸதாநந்தா! என்னுடைய மனது இப்போது ஒருநிலைகொள்ள வில்லை. ஏதோ பயித்தியம் பிடித்தது போலிருக்கிறது. என் னைத்தனிமையில் விட்டுவிடு. நாளை தினம் பேசலாம். தயவு செய்து போய்வா! கான் இப்படி சொல்கிறேனே என்று நினைக்காதே. எனக்குப்பேசவே பிடிக்கவில்லை” என்று தழ தழத்தகுரலில் கூறினான். 

ஸதாநந்:-போடா! அசடே! நீ வெறும் கட்டுப்பெட்டி பயந்தாங்கொள்ளி. உங்கப்பாவுக்கு நீ செய்யவேண்டிய மரியாதைகளைத் தவறாது செய்யக்கடமைப்பட்டிருக்கிறது உயர்ந்த நோக்கந்தான்; இம்மரதிரி ஒரு பேராசைச் செய்கைக்கு நீ ஏண்டா கட்டுப்படவேணும்! முதலில் மனஸ்தாபந்தான் வரும்; பிறகு சரியாகிவிடுகிறது! இப்போது நேராக உன் மாமி யார் வீட்டிற்கே போகலாம்வா! நானும் வருகிறேன்…. இல்லை என்றால் இன்னொருகாரியம் செய்யலாம்: அதாவது உனக்கு ஏதோ விஷ ஜுரம் கண்டு படுத்திருக்கிறதாயும் உடனே வரவேணும் என்றும் உன் தகப்பனாருக்கு ஒரு கடிபுடி தந்தி கொடுத்துவிடட்டுமா? நாளையே கதறிக்கொண்டு ஓடி வந்து விடுவார், பிறகு நான் பேசிச் சரிப்படுத்திவிடுகிறேன். என்றான். 

அப்பா!போதும் போதும் உன் யோசனை, எங்கப்பாவா இதற்கெல்லாம் மசிகிறவர்! அவர்முன்பே கதைகளில் வருவது போல் அப்படி இப்படி என்றுபலபலவித உதாரணங்களைக்கூறி என்னை எச்சரித்திருக்கிறார். நீ தந்தியடித்தால் அதையவர் லக்ஷயமே செய்யமாட்டார், அதுமட்டுமா! இந்தப்பத்திரிகை விஷயம் எப்படியாவது தெரிந்துவிடும்: அதைக் கொண்டு விப ரீத அனர்த்தத்தை உண்டாக்கி அமளி துமளி செய்துத் தாண்டவமாடுவார். முக்யமாய் என்தாயார் மிகவும் பலவீனப் பட்டவள்: நோயாளி என்றால் மிகையாகாது என்னைப்பற்றி நீ சொல்லியபடி தந்தியடித்ததைப் பார்த்தால் அது பெருந் தீ யாகி அவள் அதற்கு இரையாகிவிடுவாள்! எது எப்படியாவது ஆகட்டும்: என் தாயார் எனக்கு உயிருடன் இருந்தால்போதும். இன்றில்லை என்றாலும் காளை இந்த விஷயத்தில் விமோசனத் தைக் காணலாம், என் அருமை அன்னையைக் காணமுடியுமா? ஏற்கெனவே என் தாயார் எனக்கு ஒரு கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறாள் தெரியுமா! தான இறந்துவிட்டால் எனக்கு நல்லகாலம் பிறக்குமாம்: “எப்போதும் பங்காளிகளோ தாயாதி களோ யாராயிருந்தாலும் சண்டை செய்து பிரிந்திருந்தால் ஒருசெட்டி கெருப்புடனாவது ஒருசெட்டிபருப்புடனாவது ஒன்று சேருவார்கள், என்று பழமொழி சொல்வார்கள்; அதுபோல் என்னுடைய மறைவுக்குப் பிறகாவது என்காரியத்திற்கு என் கண்மணி நந்தினி வந்து சேரட்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்’ என்று எழுதினாள், நான் பலமாகக்கண்டித்து அம் மாதிரி நீ ஏதாவது செய்தால் நான் உடனே இறந்துவிடுவேன். நந்தினி கதி அதோகதியாகிவிடும்! என்று பயமுறுட்டிக் கடிதம் எழுதினேன். தெரிந்ததா? அம்மாதிரி நீ எதுவும் செய்து விடாதே; நீ இப்போது என்னைத் தனிமையில் விட்டுச் செல்லு. நான் நாளை சந்திக்கிறேன். அதற்குள் என் மனத்தையே நான் திடம் செய்துகொண்டு என்னசெய்யலாம் என்று தீர்மானிக்கிறேன்” என்று கண்டிப்பாகக் கூறினான். அதன் பிறகு ஸதாநந்தன் சென்றுவிட்டான். 

தனியே விடப்பட்ட வைத்யநாதன் ஏதேதோ எண்ணி பலமான யோசனைகள் செய்துக் குழம்புகிறான். இவனுடைய ரகஸியம் தெரிந்தவர்கள் ஏதோ துக்கம் விசாரிக்க வருவது போல் ஒருவர் மாற்றி ஒருவர் இதே விஷயத்தைக் கூறிக் கொண்டு வந்து பேசுவது இவனுக்கு ஒருபுறம் வெறுப்பாயும் எரிச்சலாயுமிருந்ததால் தான் வீட்டிலேயே இல்லாமல் எங்கா வது சற்று போய் வரலாம் என்று எண்ணிக் கடல்கரையை நோக்கிச் சென்றுவிட்டான். 

இவனுடைய சினேகிதர்கள் அனேகர் தம்தம் மனைவிகளு டனும் மக்களுடனும் கடற்கரையில் தம் தம்போக்காக அமர்ந்து ஆகந்தமாய்ப் பேசியும் சிரித்தும் மகிழ்ந்தும் குதூகலமாக விருப்பதைக்காண வைத்தியநாதனுக்கு துக்கம் துக்கமாய் வருகிறது. இருந்தாலும் இம்மாதிரி ஸந்தோஷமாயிருக்க வேண்டிய நிலைமையில் இதென்ன ஒண்டிக்கட்டை வாழ்வு. அதிலும் நந்தினியை அவதிப்படச் செய்துவிட்டு நான் இங்கு தவிக்கும் தவிப்பு ஒரு வாழ்வா! பாவம் நந்தினி என்ன நினைப்பாள்? அவள் கதையில் எழுதி இருப்பது போல் நானும் பாலைவன நெஞ்சுடைய வஞ்சகன் என்றுதானே எண் ணியிருப்பாள். நான் அப்படி இல்லை. அவளை சதா என்னிதய பீடத்தில் வைத்து இன்புற்றுக் கண்ணீர் வடிக்கிறேன் என் பதை அவளிடம் யார் தெரிவிப்பார்கள்? என் விதி இப்படியா ஆகவேணும்? என்னுடைய மனக்கோட்டைகள் இப்படியா தவிடுபொடியாகவேண்டும்? நான்யாருக்கென்று பயப்படுவது. சீச்சீ! பணப்பேயின் பேராசைக்கு அடிமையாகிய என் பிதா வின் காலம் வரையில் எங்கள்வாழ்க்கையின் இன்பத்திற்கு முட்டுக்கட்டைதான்: அது என் விதி! என்று தனக்குள் குமுருகிறான். 

நந்தினிக்கு ஒரு கடிதம் எழுதிவிடட்டுமா? என்று நினைக் கிறான். ஆனால் நந்தினி அதை மதிக்காமல் அவமதித்துவிட் டால் என்ன செய்வது? அல்லது அவள் தகப்பனாருக்கு என் பிதாவின் மீ துள்ள வஞ்சத்தினால் இக்கடிதத்தையே எங்கப்பா வுக்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வது? இன்னும் பெரிய அனர்த்தமாகவன்றோ ஆய்விடும். என்று குழம்பிக்கொ கொண்டிருக் கையில் வைத்யநாதனின் உறவினர் ஒரு கிழவர் அந்தஊரிலிருப் பவர் கடற்கரையில் உலாவவருகையில் மெனக்கிட்டு வைத்திய தனிடம் வந்து உட்கார்ந்துகொண்டு, “என்னடா செய்தி! உன்னைப்பார்ப்பதற்கு உன் விடுதிக்குப்போனேன். கதவு பூட்டியிருந்தது. சாயங்காலவேளை கடற்கரைக்குத்தான் வந் திருப்பாய் என்றுவந்தேன். ஏண்டா! வைத்தா? இன்று பத்திரி கையில் பார்த்தாயா? இதென்னடா வெட்கக் கேடு. உன் தகப்பனாரின் மரியாதை என்ன? அந்தஸ்து என்ன? அவரி டம் சொல்லியபடி வரதக்ஷிணை பாக்கியிருப்பதை மரியாதை யாய்க் கொடுத்துப் பெண்ணைக் கொண்டுவிடாமல் இதென்ன டாக் கூத்தும் கும்மாளமும்? பெண்ணை நாடகத்தில் நடிக்க உங்கப்பாவின் மானத்தை வைத்து ஊர் சிரிக்கச்செய்து வாங்கிவிட்டானடா உன் மாமனார்!. நீ பார்த்தாயா? அதைப் பார்த்ததும் எனக்கு ரத்தங் கொதித்துவிட்டது. என்னு இந்த அலட்சியத்தைத் தாளாமல் ஓடிவந்தேன். 

என்று சொல்வதைக்கேட்டு வைத்யநாதனுக்குச் சற்றுக் கூட பிடிக்கவில்லை. கிழவன்மீது எரிச்சலாக இருக்கிறது. விஷயம் தெரிந்ததாகப் பேசினாலும் கிழம் விடப்போவதில்லை. எதிர்த்துப் பேசினாலும் விடமாட்டார் என்னசெய்து துலைப்பது. எனக்கு எந்த விஷயமும் தெரியாதுபோலவே பேசி விறட்டிவிடுவதுதான் சரி என்று தனக்குள் முடிவுகட்டிக் கொண்டு, என்ன தாதா விஷயம்? நீங்கள்சொல்வது ஒன்றுமே புரியவில்லையே! நான் எந்தபேப்பரும் பார்க்கவில்லை. எனக்குப் புத்தகங்கள் படிக்கவே பொழுது போதவில்லை. பேப்பர் படிப்புக்கு எனக்கு நேரமேது தாதா! என்று ஒரு போடு போட்டான். 

கிழவர்:- இதென்ன பேச்சுடா வைத்தி! இன்று பத்திரி கையில் நான் பார்த்துக்கலங்குவதுபோல் நமது உற்றார் உற வினர்கள் எத்தனை பேர்கள் இதைப்பார்த்திருப்பார்கள். என்ன நினைப்பார்கள். உனக்குத்தான் இவைகளைப்பற்றி தெரியவேண்டாமா? உன் பிதாவுக்கு வரும் மான அவமானம் உனக்கில்லையா? நீ அவச்யம் அந்தப் பத்திரிகையை வாங்கிப் படித்துப் பார்த்து சரியானபடி உன் மாமனார்மீதும் அந்தத் துஷ்டப் பெண் நந்தினியின் மீதும் நடவடிக்கை எடுத்துத் தானாக வேண்டும். வெட்கங்கெட்டுப்போய் நந்தினி வைத்ய நாதன் என்று கொட்டை கொட்டையாய்ப் பெயரைப் போட் டுக்கொண்டு கூத்தாடி இருக்கிறாளடா! வேஷத்துடன் புகைப் படம் வேறு வந்து அவமானம் தாங்காமல் தலைகுனியும்படிக் குச் செய்கிறது. வரதக்ஷிணை பூதமாம், பிசாசாம். அது மட்டுமா? அந்தக் கதையில் சில கட்டத்தை இந்தப் பெரிய மேதாவி எழுதிவிட்டதைப் பேப்பர்க்காரன் ப்ரமாதமாய்ச் சிலாகித்தும் கொண்டாடியும் ஒரு பக்கம் பூராவும் எழுதி இருக்கிறான், மடையன். இம்மாதிரி செய்தது தவறு என்று பத்திரிக்கைக்காரன் கண்டிக்க மூளை இல்லையா ?…என்று ஏதேதோ அவர் சொல்லிக்கொண்டே போவதை வைத்ய நாதன் லக்ஷக்ஷ்யமும் பண்ணவில்லை. காதில் வாங்கவும் இல்லை. இதுவேறு கிழவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. “ஏண்டா! வைத்தீ! நானென்ன பயித்தியக்காரன் என்று நினைத்துவிட்டாயா? உனக்கு மான அவமானமில்லையா? நாலுபேர் நாக்கை வளைத்துப் பேசுவதைக் கேட்டால்எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருக்கிறதடா? இதோ பார் வைத்தீ! உன்னையும் உன் பிதாவையும் அந்த தடிச் சிருக்கியும் அவள் தகப்பனும் செய்துள்ள அவமரி யாதை, இளப்பம், இதற்குச் சரியான ப்ராயச்சித்தம் செய்து தண்டித்தால்தான் கொழுப்பு அடங்கும்”. 

வைத்:- ப்ராயச்சித்தமா? அதென்ன தாதா? வாத்தி யாரை யழைத்து ஓமம் வளர்த்தி. 

கிழ:- போடா! முட்டாளே! நான் சொல்வதெல்லாம் உனக்கு ஏளனமாயிருக்கிறதோ? வேணுமென்று இம்மரதிரி செய்தவர்களுக்கு நீ சொல்வதுபோல், வாத்தியாரை அழை த்து ஓமம் வளர்த்தி ஒரு பெண்ணை மறுவிவாகம் செய்து கொண்டு கல்யாண தம்பதிகளின் புகைப்படத்தை இதே பத்ரி கையில் ஜம்மென்று வெளியிட்டுவிட்டால் அதைப் பார்த்த உடனே அந்த இருவரும் புழுகுபோல் துடிதுடி என்று துடிப் பார்கள். அது தான் சரியான ப்ராயச்சித்தம், தெரிந்ததா?

இதைக் கேட்கக்கேட்க கிழவரின் மிகவும் குறுகிய மனோ பாவத்தையும் மூளைகெட்டத த்தையும் கண்டு வெறுப்பும் பரி தாபமும்கொண்டு பெருமூச்சுவிட்டான். இத்தகைய பாவிகள் உலகத்திலிருப்பதனால்தான் இந்தப்பாழும் வர தக்ஷி ணைப் பிசாசு சாச்வதமாக உட்கார்ந்து ஆளையே அழுத்திக் குடும்பத்தையே ஆட்டுகிறது. இருக்கட்டும். இந்த மனுஷ்ய னுடைய போக்கு இன்னும் எவ்வளவுதூரம் போகிறது, பார்க் கலாம்! என்று எண்ணியவனாய், தாதா! நீங்கள் மிகவும் தீர்க்கதரிசனமாய்ப் பேசுகிறீர்கள். ஒரு பெண் இருக்கை யில் பெண்மேல் பெண்ணாக யார் தாதா கொடுக்க மனம் துணிந்து முன்வருவார்கள். அந்தப் பெண்ணுக்கும் வா தக்ஷிணையினால் இதேகதி ஏற்பட்டுவிடுமோ என்று பயப்பட மாட்டார்களா?… சட்டம் திட்டம் ஒன்றுமில்லையா? 

என்று முடிப்பதற்குள், பலேபேஷ்! வைத்தீ! அப்படி வழிக்கு வா! பெண்மேல் பெண்கொடுப்பது என்றால் உன் விஷயத்தில் கசப்பா? புளிப்பா? நானு நீ என்று துள்ளிக் குதித்துப் போட்டியிட்டுக்கொண்டு வரமாட்டார்களா?அவ்வளவு தூரம் போவானேன். என் பெண்ணே இருக் கிறாள். என் பேத்தி இருக்கிறாள். என் தங்கையின் பெண் இருக்கிறாள்;சுமார் 20 வய துக்குமேல் பட்ட எத்தனை பெண்கள் நமக்குள்ளேயே இருக்கிறார்கள் தெரியுமா? இரண்டாங் கல்யாணத்திற்கு வரதக்ஷிணையாவது போரதக்ஷிணையாவது? அந்த கட்டம் முதல்கல்யாணத்துடன் முடிந்துபோயி இரண்டாங் கல்யாணத்திற்குப் பெண் கிடைத்தால் போதும் என்று வலை வீசுவார்கள்; சிலருக்கு உடனே அகப்பட்டுவிடும். சிலருக்கு அகப்படாத கொடுமையினால் இவர்கள் பெண் வீட்டாருக்கு வரதக்ஷிணை கொடுத்துப்பெண்ணைவாங்குவார்கள் தெரியுமா? அந்த பயம் இனி இல்லையப்பா…என்ன சொல்லுகிறாய்? நான் இன்றே உன் பிதாவிடம்போய்… 

தாதா தாதா! அடேடே! உங்கள் அவஸரத்தைப் பார்த்தால் கடற்கரையிலேயே உப்புஜலத்தை தாரைவார்த் துக் கல்யாணத்தைக்கூட முடித்துவிட்டுப் போய்விடுவீர்கள் போலிருக்கிறதே. பொறுங்கள் தாதா! கிணற்று நீரை வெள் ளமா கொண்டுபோய்விடும். நானே முதலில் உங்கள் வீட்டி விருக்கும் சப்த கன்னிகைகளையும் பார்த்துவிட்டு யார்வேண் டுமோ என்னிஷ்டப்படி தேர்ந்தெடுத்து சுயம்வரம்போல் சொல்லிவிடுகிறேன். ஆனால் ஒன்று, நீர் சொல்வதுபோல் வரதக்ஷிணை இல்லாமல் கல்யாணம் நான் செய்துகொள்வதாக உத்தேசம் இல்லை. முதல் கல்யாணத்திற்கு 5 ஆயிரம் பேரம் பேசியதால் இரண்டாங் கல்யாண த்திற்குள் இன்னும் நான் சற்று படிப்பிலும், அந்தஸ்த்திலும் உயர்ந்து நன்றாக வளர்ந் தும் இருப்பதால் 7 ஆயிரம் கொடுத்தால் உடனே நாளையே கல்யாணத்தை முடித்துவிடலாம். தந்தியிலும் ஏரோப்ளே னிலுமாகச் செய்தியைப்பரப்பி மனிதர்களை வரவழைத்து விடலாம். என்ன சொல்கிறீர்? எங்கே பணம்? எடும்… 

என்றதைக் கேட்டு கிழவர் திடுக்கிட்டார். எனினும் சமாளித்துக்கொண்டு ஏண்டா ? என்னை அடிமுட்டாள், மடயன், உலக விவகாரம்தெரியாத அப்பாவி என்றெல்லாம் எண்ணிக்கொண்டு பேசுகிறாயா; இந்த மகாதேவனை அப்படி நினைத்துவிடாதேப்பா! முதல் மனைவி தவறிவிட்டு இரண் டாங் கல்யாணம் செய்பவனுக்கே வரதக்ஷிணை கிடையாதாம்; முதல் மனைவியைத் தள்ளிவைத்துச் செய்கிறவனுக்கு வா தக்ஷிணையாம்; அதிலும் 7 ஆயிரம் ரூபாயா! பேஷ்! பேஷ்! யாராவது கேட்டால் சிரிப்பார்கள்- குழந்தைத் தனமாகப் பேசாதேடா? விஷயம் பெரிது. தீர்க்காலோசனை செய்து சொல்லு. நாளைக்கு வருகிறேன். என்றார். 

அதேசமயம் மற்றொரு உறவினர் வந்தார். கிழவரும் னும் பேசுவதைப் பார்த்து ஒருமாதிரி நகைத்துக்கொண்டே. ஒகோ தாதாவா! நான் நினைத்தேன்: வைத்தியிடம்தான் நீங்கள் போயிருப்பீர்களென்று எனக்குத் தெரியும். நான் நினைத்தது சரியாகிவிட்டது. என்ன தாதா ! பத்திரிகை விஷயமாகத்தானே….. பெண்பார்த்து முடித்தாகிவிட்டதா! அடேடே! நினைவில்லாமல் சொல்லிவிட்டேன். உம்முடைய சொந்தத்திலேயே ஊரப்பட்ட பெண்கள் இருப்பதால் கவலை இல்லை தாதா! என்னடா! வைத்தீ! என்ன சமாசாரம்! தாதா விடம் ஏதாவது வழி ஏற்பாடு செய்து கொண்டாயா! நானும் பத்ரிகை படித்துவிட்டுதான் வந்தேன் – என்று சொல்லியபடி அவனும் உட்கார்ந்தான். 

வைத்தியநாதனுக்கு, இதென்னடா தலைவேதனை இவன் வேறு வந்து சட்டமாக உட்கார்ந்து விட்டான்! என்றுவெறுப் பாகவே இருக்கிறது. எதையும் சொல்லவோ முடியவில்லையே என்று எண்ணியபடியே, ஓ! நீயும் பத்ரிகையைப் படித்து விட்டுத்தான் வந்தாயா! சந்தோஷம்; தாதா சகல ஏற்பாடும் செய்துவிட்டார்; என்னையேநான் தாதாவிடம் விலைபேசினேன். அதாவது ஏழுஆயிரம் ரூபாய்உண்டானால் இப்போதே தாதா வின் பெண்ணையே மணப்பதாகச் சொல்லிவிட்டேன். நீதான் சொல்லுப்பா! முதல் கல்யாணத்திற்கு 5ஆயிரம் விலைபோன நான்இரண்டாங்கல்யாணத்திற்கு இன்னும் உயர்ந்த ஸ்திதிக்கு வந்துவிட்டதால் 7 ஆயிரம் ஏன் வாங்கக்கூடாது! என்றான் 

வந்தவன் பெரிதாகச் சிரித்தபடி,சபாஷ் சபாஷ்! வைத் தீ! சரியான மதிப்பு! சரியான நியாயமான விலை! தாதா! நானும் கூடவிருந்து காரியத்தை முடித்துவிடுகிறேன். ஏற்பாடுசெய்து விடுங்கள் : தாதா ! ஆனால் சட்டம் மட்டும் இந்தக் கல்யாணத் திற்கு இடம் கொடுக்குமோ கொடுக்காதோ…? என்றான். 

கிழவருக்குக் கோபம் அஸாத்யமாய் வந்துவிட்டது… டேய்! நீங்கள் ஏதோ விளையாடுகிறீர்கள்! எனக்குக் கோபம் வந்துவிட்டால் பிறகு நீங்கள் வருந்திப்பயனில்லை.ஏதோநம்ம பந்துக்களாயிற்றே என்று நான் வலுவில் வந்தால் இப்படியா ஆட்டமாடுகிறீர்கள். ஒரு பெண் கிடைத்தால் போதும் என்று எங்களிடம் கெஞ்சிக் கேட்கும் காலம் வருண்டா வரும்! என்று சொல்லிக்கொண்டே எழுந்துபோய் விட்டார். அப் பாடா! ஒரு தலைவேதனை விட்டது: தொணதொணவென்று அறித்துக்கொட்டிவிடும். எங்கு எந்தப் பெண்மீதுபடாப்பழி யைப் போட்டு தள்ளி வைக்கலாம்? எந்த பிள்ளைக்கு மறுமண மாகத் தன் குடும்பத்திலுள்ள சரக்கையே வரதக்ஷிணை தொல்லை இன்றித் தள்ளிவிடலாம்! என்று இதே எண்ணந்தான் இக் கிழவருக்கு: இவருடைய நான்கு பெண்ணையும் இப்படிப்பட்ட ஆளையே பார்த்து இரண்டாந்தாரமும் மூன்றாந்தாரமுமாகக் கொடுத்திருக்கிறார்: இன்னும் உள்ளவர்களுக்கும் வலை வீசுகி றார் பாவம்…டேய். வைத்தீ! உங்கப்பாவின் முட்டாள் தனமும் உன்னுடைய பயந்தாங்கொள்ளித்தனமும் சுத்தமாய் நன்றா யில்லை. இன்று பேப்பரில் பார்த்ததும் மெத்த சந்தோஷமே உண்டாகியது. என்மனைவி கூட நந்தினியின் சாமர்த்தியத் தைப்புகழ்ந்து பாராட்டினாள்.இனிமேலாவது உங்கப்பாவுக்கு புத்தி வருமா!” என்றாள் என்மனைவி. அதுதான் இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் பகை அதிகமாகி நாளையே உனக்கோர் பாணம் போன்ற கடிதமே வந்தாலும் வ வரும் என்று நினைக்கிறேன். நீ இத்தனைநாள் இப்படி பயந்துபயந்து நடந்தது போதும். இனியும் அந்தப்பெண்ணைப்பாழடிக்காதே! நான் உன்னுடன் கூடவருகிறேன். நாம் இருவரும் நேரே உன் மாமனார் வீட்டிற்குப்போவோம்; விவகாரங்களை ஒரு விதமாக முடித்துக்கொண்டு வரலாம். இதை உன் பிதாவுக்கு நான் பக்குவமாகச் சொல்லி சரிப்படுத்துகிறேன் என்னடா மவுனம்? இந்த ட்ராமாவின்முடிவை நீ கவனித்தாயா? அந்தமுடிவுக்கு தானும் தயாராய்த்துணிந்திருப்பதையே அந்தக் கதைக்காட்டு கிறது: இந்த ரகஸியத்தை உணராது எருமை மாடுபோலிருப் பது அழகா? என்று உண்மை அன்பும் ஆதரவுடனும் பேசினான். வைத்தியநாதனுக்கு என்னபதில் சொல்வதென்றேதெரியாமல் ஒரு விதபடபடப்பும் உள்ளுக்குள் பொங்கிவரும் துக்கமும் ஒன்று கூடி பதுமைபோலாக்கின. 

அத்தியாயம்-5

என்னபதில் சொல்வதென்றே தெரியாமல் ஒருவித பட படப்பும் உள்ளுக்குள் பொங்கிவரும் துக்கமும் ஒன்று கூடி பதுமை போலாக்கின. பதில் பேசாமல் நிற்கும் நந்தினியைக் கண்ட ப்ரின்ஸ்பால் சகுந்தலாதேவி மிகவும் அன்புடன் பேசத் தொடங்கி, நந்தினீ! இதென்னம்மா மவுனம்: ஏன் கண்ணீர் விடுகிறாய்! நேற்றுகூட யாரோ ஒருவர் உன்னுடைய நாடகத் தைக் கேட்டபோது சந்தோஷமாக இசைந் தாயே ! இப் போது ஏன் பதிலே சொல்லவில்லை? இந்தக் கடிதம் எழுதி யிருப்பவர் உனக்குத் தெரியுமா! என்று அன்புடன் கேட்டாள். 

நந்தினி ஒரு திறமைவாய்ந்த ப்ரகாசமான புத்திசாலி யான மாணவி என்பதுமட்டும் தெரியுமேயன்றி அவளுடைய வாழ்க்கைவரலாறு தெரிவதற்கு அவகாசமும் இல்லை; ப்ரமேய மும் இல்லை. ஆதலால்தான் வைத்யநாதனின் கடிதத்தையும் நந்தினியிடம் கொடுத்து பர்மிஷன்கொடுக்கிறாயா! என்று கேட் டாள். இந்த நாடகம் நடந்த பிறகு பல பள்ளிக்கூடங்களிலி ருந்தும் காலேஜ்களிலிருந்தும் இந்த நாடகம் தங்களுக்கு வேணும் என்றும், கன்றுயிருந்ததைப்பாராட்டியும் பலபேர் கடிதம் எழுதியிருந் தார்கள். இதை நந்தினிக்குக் காட்டி சகுந்தலாதேவி மகிழ்வாள். அதேபோல்தான் வைத்யநாத னின் கடிதத்தையும் காட்டினாள். 

நந்தினிக்குக் கல்யாணமாகி சில மாதங்கள் வரையில் வைத்தியிடமிருந்து அன்புக்கடிதங்கள், ப்ரேமை நிறைந்த மலர்வாசகங்கள் ததும்பும் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. நந்தினியும் அதற்குப்பதில் எழுதிவந்தாள். ஆகையால் வைத் தியநாதனின் கடிதத்தைப் பார்த்ததும் பழையநினைவுகள் அலைபோல் இதயத்தில் மோத,குபீரென்று கண்ணீர் வழிந்து தடைகட்டிய நாகம்போல் நிற்கச் செய்துவிட்டதன் மர்மம் சகுந்தலாதேவிக்கு எப்படித் தெரியும் ? 

தன்னைப்பற்றி பிரின்ஸ்பால் என்னநினைப்பாளோ? தான் ஹாஸ்டலில் இருப்பவளாதலால் தப்பபிப்ராயமாக நினைத்து விட்டால் என்னசெய்வது என்ற பயமும் நந்தினிக்குத் தோன் றியதால், “தாயே! இக்கடிதம் எழுதியவர் வேறுயாருமில்லை. ன் னுடைய கணவர்தான்; பெயரை மறைத்துக்கொண்டு வைத்யநாதன் என்பதற்குப் பதில் வை வைதீச்வரன் என்று எழுதியிருக்கிறார். அந்த எழுத்தைப் பார்த்ததுமே எனக் குப் பழைய நினைவுகள் வந்துவிட்டது. அதனால்… 

சகுந்தலா இடைமறித்து, என்ன!என்ன!இவர் உன் கண வரா! கணவர் எழுதியிருந்தால் அதற்குச் சந்தோஷப்பட வேண்டுமேயன்றி துக்கப்படுவானேன்! உனக்கு விவாகமாகி இருப்பதுமட்டும் உன் பெயருடன் வைத்யநாதன் என்று சேர்ந்திருப்பதால் தெரியுமேயன்றி மற்ற விஷயம் தெரியாது. நந்தினி! உன் கணவர் ஏன்……? 

நந்:-தாயே! அதை மிகச் சுருக்கமாகச் சொல்லவேண்டு மானால், இந்த வரதக்ஷிணை நாடகத்தின் முக்ய ஸாராம்சம் பூராவும் என் சுய சரிதைதான். அதையே நான் கற்பனை யுடன் சேர்த்து எழுதி என்னாத்திரம் தீர நடித்தேன்.இதற்கு பத்ரிகையில் இத்தனை ப்ரதானம்கொடுத்துப் போடுவார்கள். என்று நான் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. ஏதோ காலேஜ் ஹாலுடன் இது மறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன்… 

சகுந்த:- நந்தினீ ! வரதக்ஷிணைக் கொடுமைக்காகவா உன்னைத் தள்ளியிருக்கிறார்கள். உன் கணவனும் கூடவே உடந்தையா! அல்லது மாமனார் மாமியார் மட்டுந்தானோ?… அதான் உன்னுடையநடிப்புஉச்சஸ்தாயியில் நிர்த்தனம் செய் து காண்போர் உள்ளங்களைத் துளாவி உணர்ச்சிவயப்படுத்தி விட்டது…நந்தினீ; இதற்காகவா நீ அழுகிறாய்,அசடே; இது வும் உனக்கு ஒரு நல்லதற்குத்தான் என்றுநினைத்துக்கொள்ளு. இதே நாடகத்தின் தகவல்பூராவும் உன் கணவன் பத்திரிகை யில் படித்திருப்பது நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால் இக்கதையைக் கேட்டிருக்கிறான். நீ இதற்கு உத்திரவு கொடுத்து விடு; நான் உன் கணவன்தான் அவன் என்பதை யறியாதவள் போல் சுடச்சுட ஒருபொதுவான கடிதமும் எழுதி அ னுப்பிவிடுகிறேன். அந்த நாடகத்தை அவன் காலேஜில் நடிக்கட்டும். அந்த விஷயம் உன் மாமனாருக்குத் தெரிந்து மனம் குழம்பி வெட்கித்தலை குனியட்டும்! பிறகாவது உனக்கு விமோசனம் உண்டாகுமல்லவா!… 

நந்தி:- அம்மணீ! நீங்கள் சொல்கிறபடி நன்மைகள் எது வும் உண்டாகாது. இந்தக்கதையை நான் எழுதியது குற்றம், நடித்தது பெருங் குற்றம், இதுபோல் பல குற்றங்களைக்கண்டு பிடித்துப் பின்னும் வேதனைக்கு இலக்காக்கி என்னை வருத்து வார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால், தன் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு ஏன் இவர் கடிதமெழுத வேண்டும்? அதனால் உள்ளுக்குள் ஏதோவிஷயத்தை மறைத்து எழுதியிருக்கிறார். அவருக்கு நாடகத்தை அனுப்பாமலேயே இருந்துவிட்டால் என்ன என்று கூட நினைக்கிறேன்… 

சகு:- சேச்சே! அது சரியில்லை நந்தினீ! நாம் இன்னும் எத்தனையோ பேர்களுக்கு அனுப்ப இசைந் திருப்பதுபோல் இவருக்கும் அனுப்புவது தான் சரி; இதற்குமேல் என்ன நடக் கிறதோ பார்க்கலாமே! ஏன் உனக்கு இஷ்டமில்லையா? 

நந்தி:- தாயே! என்னை இரும்புள்ளத்துடன் விலக்கி வேடிக்கைப்பார்க்கும் அவருக்கு நான் ஆகாது என்றபோது என்னுடைய நாடகம் மட்டும் ஆகுமா! அதைத்தான் நான் நினைக்கிறேன். எனக்குக் கடிதத்தின் விஷயம் சந்தேகமாகவே இருக்கிறது. என்னை என்ன தொல்லைகள் ஆட்டி வைத்தாலும் வைக்கட்டும். என் பெற்றோர்களுடைய உள்ளமும் உடலும் சல்லடைக்கண்ணாகத் துளைத்து ரணமாகிக் கிடக்கிற பரிதாபம் போதும்! இதைக்கொண்டு அவர்களையொன்றும் செய்யாதிருக் தால்போதும்; அதுதான் எனக்குக் கவலையாயிருக்கிறது. 

சகு:- உன்னைப்பற்றி ஒரு சிறிது விஷயம் தெரிந்த பிறகு மேலும் அறிய ஆவலாக இருக்கிறது, உன் னுடன் பிறந் தவர்கள் எத்தனைபேர்கள்! உன் பிதாவுக்கு என்ன உத்யோகம்…… 

நந்தி:- அம்மணீ! 5 பெண்பிறந்தால் அரசனும் ஆண்டியாவான்! என்பது பழமொழி. அரசனே ஆண்டியாகும்படி யான நிலைமை வந்துவிடுமெனின், சாதாரண மனிதனுக்குப் பிறந்துவிட்டால் என்ன செய்வது சொல்லுங்கள். என் சகோதரிகளுக்குக் கல்யாணத்தைச் செய்ததில் முக்கால்ஏழை யான என்பிதா நான்கு பிள்ளைகளைப் படிக்க வைத்ததிலும் என் விவாகத்தைச் செய்ததிலும்முழு ஏழையாய்-ஏன்கடன் கார ராய், மதிப்பற்ற மனிதராய் ஆகிவிட்டார். சொல்பசெல்வமும் கரைந்தது- ஏதோ உத்யோகமும் சிறியது தான். வருவாயிக்கு மிஞ்சிய பெரிய செலவு-… இது துவெல்லாம் போதாமல் அவரு டன் கூடப் பிறந்த சகோதரிகளின் தொல்லை வேறு. உம்… இவைகளைச் சொல்லிக்கொண்டு போனால் முடிவே இல்லை! என் புக்ககத்தினர் செய்த கலாட்டாவில் எப்படியாவது மூவாயி ரம் ரூபாயைச்சேகரித்துக்கொடுத்து என்னை அனுப்பிவைப்ப தற்காக என் பிதா தன் மதிப்பு மரியாதை, முதலியவைகளை விட்டுவிட்டு என் சகோதரிகளிடம் போய் மனம் கூசியபடி உதவி கோரினார். 

என்னே உல்கம்! என் பிதாவே ஆதியில் கல்லமுறையில் இருக்கையில் செய்து போட்ட நகைகளையாவதுகொடுத்து தவ வேண்டும்; ஒரு பெண்ணின் வாழ்வுமலர் வாடிஉதிர்ந்துபோகி றது; அதைப் பரிமளம் மிக்க மலராக்கவேண்டும்! என்று கேட் டாராம். அக்காவின் புருஷர்கள் மறுப்பது சகஜம். அக்காவே மறுத்துவிட்டதோடு, இந்த நிலைமையில் இந்த நகைகளை நீ எப்படியப்பா மீட்டுக்கொடுக்கமுடியும்,இனி வயதான நிலைமை யில் உங்களால் எப்படியப்பா சமாளிக்க ஆகும். பேசாமலிருந் தால் கொஞ்சநாள் போனால் தானே வந்து கூப்பிடுவார்கள். நீங்கள் வீணாகக் கவலைப்படாதீர்கள்! என்று சொல்லிவிட்டார் களாம். உடன் பிறந்த தங்கையின் வாழ்வைவிட அவர்களு டைய தங்க நகைகள் தான் ப்ரதானமாகத் தோன்றியது… 

சகு:–அடாடா! இப்படியா சொன்னார்கள்! கேட்கக்கதை போலிருக்கிறதே! என்னுடைய மாமன் பெண்ணுக்குக் கல் யாணம் செய்ய கையில் பணமில்லாது தவிப்பதைக் கண்டு நான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துக்கல்யாணம் செய்யும்படிக் குச் சொன்னேன்…. 

நந்:- தாயே! உலகத்தில் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பது பேருக்கு கடும்பாறையைப்போன்ற உள்ளந் தரனி ருக்கிறது; தயாளகுணம் எங்கோ ஒரு சிலரிடம் தான் காணப் படுகிறது; அந்த முறையில் தாங்கள் ஒருவர்… என் சகோதரி யின் புருஷன்,‘“அந்த மாப்பிள்ளைக்குப் புதிதாகக் கொடுப்ப தற்காக இந்த மாப்பிள்ளைகளுக்குக் கொடுத்ததை வாங்கிக் கொண்டுபோக வந்தீர்களா! ஏதோ செய்ததுபோதும் என்று பயித்தியக்காரத்தனமாக நாங்கள் இருந்ததுபோல் யாரிருப் பார்கள் ?” என்று தாங்கள் கூட சமயம் வந்தால் கேட்கலாம் என்கிற நிலைமையில் இருப்பவர்கள் என்பதை விளக்கிப் பேசி என் தந்தையின்மனத்தை அளிந்த புண்ணாக்கிவிட்டார்கள்: என்னுடைய க்ஷேமத்தைக் கோரி தன்னுடைய பந்துக்கள் ஒவ்வொருவரிடமும் போய்க் கேட்டுவிட்டார். இம்மாதிரி யாரிட மும் போகவேண்டாம் என்று நான் எத்தனையோ சொல்லியும் கேட்காமல் அவமானப்பட்டு மனங்குமுறிவிட்ட பிறகு தான் என் வேண்டுகோளின்படி இங்குக் கொண்டு சேர்த்தார். 

சகு:-ஐயோ பாவம்! எப்படியாவது உன்னை வாழவைக் கப்பாடுபட்டுப்பார்த்துவிட்டார்… போகட்டும். உனக்கும் ஒன் றும் முழுகிப்போகவில்லை. நீ படித்து முடித்ததும் நானே சிபார்சு செய்து நல்ல வேலைவாங்கித்தருகிறேன். நீ உன் பெற் றோரைக் காப்பாற்றலாம். இக்கடிதத்திற்கு என்ன பதில்எழுது வது சொல்லு. 

நந்:-அம்மணீ! என்னை மன்னிக்கவேண்டுகிறேன். நந் தினி கொடுக்கமறுக்கிறாள் என்றே எழுதிவிடுங்கள். உங்களுக்கே இன்னும் எப்படிதோன்றுகிறதோ அப்படி எழுதுங்கள் 

சகு:- நந்தினி! இந்த விஷயத்தில் நான் உன்னுடைய க்ஷேமத்தைக் கோரியும் உன் காலேஜ் ப்ரின்ஸ்பால் என்கிற முறையிலும் சொல்கிறேன்: இந்த சமயம் இதையனுப்புவது தான் நல்லது என்று தோன்றுவதால் நான் உறுதியாகச் சொல்கிறேன். இதை அனுப்புவதுதான் உசிதம்; நீ மறுக்காதே. 

நந்:- தாயே! அப்படியானால் இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; இதை என் கை எழுத்தினாலேயே பூராவும் எழு தித்தருகிறேன். அனுப்பிவிடுங்கள். கடவுள் விட்டவழியாகட் டும், என்றாள். அதற்கு ஒப்புக்கொண்ட சகுந் தலர நந்தினியை தேற்றியும் தட்டிக் கொடுத்தும் சமாதானப்படுத்தினாள். அவளையறியாத ஒரு பெருமூச்சு வந்தது. 

அத்தியாயம்-6

தேற்றியும் தட்டிக் கொடுத்தும் சமாதானப்படுத்தினாள். அவளை யறியாத ஒரு பெருமூச்சு வந்தது. இதைக் கண்ட சுப்ரமணியம், நாகலக்ஷ்க்ஷ்மீ! நீ என்னமோ என்னைத் தட்டிக் கொடுத்து தாஜாபண்ணுவதில் உபயோகமில்லை. அந்தப் பெண் இம்மா மாதிரி துடுக்காக நடந்துகொண்டது ஏதோ பெரிய விபரீதத்திற்குத்தான் வழியாகிவிட்டது என்று எனக்குத் தோன்றுகிறதேயன்றி நல்லதாக முடியும் என்று மனத்தில் படவே இல்லை நான் இப்போதே அந்த ஊருக்குப்போய் ஹாஸ்டல் தலைவியையும் காலேஜ்ப்ரின்ஸ்பாலையும் கண்டு பேசி நந்தினியைக்கண்டித்துவிட்டு தான் வரப்போகிறேன். எனக்கு இன்னொரு சந்தேகங்கூடத் தோன்றுகிறது. அதாவது நந்தி னிக்கு இத்தனை உணர்ச்சியுடனும் அழகான வசீகரமான பதங்களுடனும் கதை எழுதத்தெரியுமா என்ன! அல்லது நடிக் கத்தெரியுமா! இரண்டும் அவளுக்கு எப்படி வந்தது என்று எனக்குப்பெரிய சந்தேகமாகவே இருக்கிறது. அதோடு உடம் பில் கொஞ்சமும் பயமே இல்லாமல் நந்தினி வைத்தியநாதன் என்று நாகரீகமுறையில் பெயரைத் துணிச்சலாகப் போட்டுக் கொண்டு கவர்னர் முன்னிலையில்தான் கூத்தாடிபோல்நடித்து இப்படிச்செய்வதென்றால் அதுபிறருடைய போதனையும் சூழ்ச் சியுந்தானிருக்கவேண்டும்!உறத்த குரலில் பேசியறியாத பெண் ணுக்கு கண்களில் நீரைக்கக்கவைக்கும்படி சுடச்சுட எப்படி எழுதவும் பேசவும் தெரியும்? இம்மாதிரி செய்துவிட்டதால் பெத்த பிதாவாகிய என் மனமே கோபமடைகிறதென்றால் அவர்களும் இந்த அலங்கோலத்தைப் பாராதிருப்பார்களா? நாடகக்காரி எங்களுக்கு வேண்டாம் என்று சட்டமாகச் சொல்லிவிட்டால் என்றுமே விமோசனமில்லாத வாழாவெட்டி என்கிற போர்வைக்குள்ளல்லவா அவள் உலாவ நேரும். இதை யோசிக்கவேண்டாமா! என்று கத்துகிறார். 

இவைகளைக் கேட்டுக்கொண்டேவந்த மருமகள் சிரித்தபடி மாமா! உறத்துப் பேசத்தெரியாதவளுக்கு உணர்ச்சியுடன் பேசவருமா! எழுதவருமா? என்று கேட்கிறீர்கள். சில மாத காலமாய் நேசி என்கிற பத்திரிகையில் உத்திரா என்கிற பெயருடன் ஒருத்தி எழுதியிருந்த கதைகளை நீங்கள் வெகு ஸ்வாரஸ்யமாய்ப் படித்துப் புகழ்ந்து பேசிவருகிறீர்களே ! அது யாருடைய கதை தெரியுமா ! தெரிந்தால் நந்தினிக்குக் கிடைத்த பெயர்தான் எனக்கும் கிடைக்கும். இக்காலத்தில் புனைப்பெயர் தாண்டவம் தான் பெரிதாக இருக்கிறதே. அதைப்போல் நானும் எனது நக்ஷத்திரத்தின் பெயரை வைத்துக்கொண்டு தானே எழுதிவருகிறேன். ஏதோ பத்தி ராதிபர் கொடுக்கும் சன்மானத்தினால் நம் குடும்பத்தின் சிலவுக்கு சற்று சகாயமாயிருக்கிறது. இதை நீங்கள் இனி யாவது நம்புகிறீர்களா… 

என்று மருமகள்சொல்வதைக்கேட்டதும் சுப்ரமண்யமும் நாகலக்ஷ்மியும் ப்ரமித்துப்போனார்கள். நாகலக்ஷமி மருமக ளைச்சேர்த்துக் கட்டியணைத்து முத்தமிட்டாள்… என்னுடைய சந்தோஷம் கரைபுரண்டுபோகிறது. உணர்ச்சியும், வேகமும் ததும்பும் கதைகளை எழுதிய உன்னைக்கூட அப்பா சந்தேகிப் பாரோ என்னவோ ! உள்ளத்தில் பொங்கிவரும் அனுபவம், பார்க்கும் அனுபவம், கேட்டும்படித்தும் முதலிய எத்தனையோ விதத்தில் மனிதர்களின் மூளை விசாலத்தை அடைகிறது. எந்த வித்தையிலாகட்டும், பிறக்கும்போதே தேர்ச்சிபெற்று அனுபவத்துடன் பிறந்துவிடுகிறார்களா! இதென்ன பேச்சு? நந்தினி நீர்பூத்த நெருப்புப்போன்று சகல உ உணர்ச்சிகளையும் தன்னிதயத்திலேயேவைத்து மூடி இருப்பவள். எப்படியும் தள்ளிவைத்தது வைத்தாகிவிட்டது; இனி சேர்த்துக்கொள் ளாவிட்டால் புதியமோசம் ஒன்றுமில்லை. தனது உணர்ச்சியை – தன்னிதயக்கொதிப்பை – அந்த முட்டாள்களும் ஊரும் நாடும் நன்கறியட்டும். இனியாவது வரதக்ஷிணைக் கொடுமை யின் பயங்கரத்தை யாராவது ஒருவரேனும் உணர்ந்துபயந்து அந்தப் பேயை ஓட்டித் தலைமுழுகட்டும் என்று அதீதமான போக்கில் மனதுடைந்துபோய்தான் துணிந்து எழுதியிருக் கிறாள். வைத்தியநாதன் என்கிற பெயரைவைத்துக்கொள் ளக்கூடாது என்று எந்தச் சட்டத்தினாலும் அவளைக் கட்டுப் படுத்த முடியாது. தாராளமாய் அக்கினி சாக்ஷியாய்ப் பலர் அறிய பெற்ற உரிமையைக் கையாள அவளுக்கென்ன பயம். ஏன் பின்னடையவேண்டும். அவள்செய்தது மிகவும்போற்றத் தக்கது என்று நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய பெண்ணும், நாட்டுப்பெண்ணும் சிறந்த எழுத்தாள திலகங்க ளாகி ப்ரகாசிக்கப்போவதைப்பற்றி நான் பரம சந்தோஷ மடைந்து பூரிக்கிறேன். உலகத்தில் செல்வ நிலைமைக்கு தரித்திரம் தாண்டவமாடுகிறதேயன்றி கற்பனை ஊற்றுச் சுரக்கும் அழியாத செல்வத்திற்கும் அனுபவ செல்வத்திற்கும் பஞ்சமில்லாது பகவான் வைத்து ரக்ஷிக்கட்டும்! என்று உத் ஸாகமேலீட்டால் சொல்லும்போது தபால்காரன் ஒரு கடி தத்தைக்கொடுத்தான். அது நாகலக்ஷக்ஷ்மியின் பேருக்கு இருந்த தால் அவளே உடைத்துப் படிக்கவாரம்பித்தாள். 

அம்மாவுக்கு நந்தினி நமஸ்காரம். உபயகுசலம். 

நான் இக்கடிதம் எழுதுவதற்கு முன்பே விஷயமறிந்து என்னை அப்பாத்திட்டிக்கொண்டு இருக்கலாம்… ஒருக்கால் நீயும் அவருடன் சேர்ந்து திட்டினாலும் திட்டலாம்… முன்ன றிதெய் வங்களின் திட்டுக்களை நான் ஆசீர்வாத மொழிகளாக எண்ணி மகிழ்கிறேன். என்னுள்ளத்தில் பொங்கிக் கொந்தளிக்கும் உணர்ச்சியின் வேகம் ஆத்திரத்தின் அனல் ஏக்கத்தின் எதி ரொலி எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த நாடகமாய் என்னை யறியாத உத்ஸாகத்துடன் உருவாகி நடிப்புக் கலையிலும் ஒரு படிக்கட்டு உயர்த்திவிட்டது. என் மனமறிய இது குற்றமல்ல என்பது என் துணிபு. என்னைக் கைவிட்டுவிட்டபி றகு இனி எனக்கு அவர்களைப் பற்றிக்கவலையும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. எனக்குப் பிழைக்க பகவான் வழி வகுத்துக்கொடுக்க இந்த நூதன முறையைக் கொடுத்திருப்பதாக நான் சந்தே ஷப்படுகிறேன். இந்த சம்பவத்தின்மூலம் மற்றொரு புதிய நல்ல சமாசாரமும் சந்தோஷச்செய்தியும் உங்களுக்குத் தெரிவிப்பதற்காகவே இதை எழுதுகிறேன். 

அதாவது எனக்கு நந்தினிவைத்யநாதன் என்றபெயரைப் போட்டுக்கொள்ளும் உரிமையை அக்கினி சாக்ஷியாய் இரண் டாயிரம் ரூபாயும் சீரும்சிறப்பும் கொடுத்து கல்யாணமென்கிற கடையில் வாங்கினீர்களே ! அதே மனிதர் என் கதையைத் தங்கள் காலேஜில் நடிக்கவேண்டும் என்று என்னுடைய ப்ரின் ஸிபாலுக்கு எழுதிக் கேட்டிருக்கிறார்: இது நன்மைக்கோ! தீமைக்கோதெரியாது; என்ப்ரின்ஸ்பால் கட்டாயம்கொடுக்கும் படிசொல்லியதால் ஒப்புக்கொண்டேன்; இனிமேல் தான்அனுப் பப்போகிறேன். இது முக்யமான விஷயமல்ல;எனினும் எழு தக்கடமைப்பட்டிருக்கிறேன். 

நிற்க, என்னுடைய அந்தக் கதையைப் பாராட்டிப் பல பேர்கள் என்னுடைய தலைவிக்குக் கடிதங்கள் எழுதியிருக் கிறார்கள். அதைத் தவிர ஒரு சினிமாக்காரர் இதேகதையைப் படமாகப் பிடிக்கவேணுமாம்; 5 ஆயிரம்ரூபாய் எழுதியவருக் கும் 5ஆயிரம்ரூபாய் எங்கள் காலேஜ்-இலவசச்சம்பள நிதிக்கும் என்கொடையாகவும் கொடுப்பதாக நேரில் வந்து என் ப்ரின்ஸ் பாவிடம் கேட்கிறார்கள். “இம்மாதிரி ஒரு அதிர்ஷ்டத்தை தானாக வலியவரும்போது நீ தடுக்காதே! ஒப்புக்கொள்ளு என்று ப்ரின்ஸ்பால்சொல்கிறார். வற்புறுத்துகிறார். ஆகையால் நான் இது விஷயமாய் யோசனையே செய்யப்போவதில்லை. அப்பாவின் கஷ்டத்திற்கு இந்த மகத்தான உதவியைக் கொடு த்துள்ள பகவானை இதய பூர்வமாக வணங்கி ஒப்புக்கொண்டு விட்டேன். இந்தப் பணத்தை நான் என் மாமனாரின் பேரா சைக்குக் கொடுப்பதற்கு இசையப்போவதில்லை. இது விஷயத் தில் நீங்களும் வற்புறுத்தவேண்டாம். அந்தக் கதையின் மூலம் என்காலேஜுக்கும் என்முன்னறிதெய்வங்களுக்கும் உதவி கிடைத்ததே, அதுவே போதும்! நிலங்கள் சில வீணாகக் கட னில் மூழ்கிவிட்டதை நினைத்து நினைத்து நான் கண்ணீர் விடு வது கொஞ்சநஞ்சமல்ல. அதை மீட்டுக்கொண்டால் நமக்குச் சாப்பாட்டிற்குச்சற்றும் கஷ்டமின்றி தானியலக்ஷக்ஷ்மி தாண்டவ மாடுவாள். ஆகையால் அப்படியே செய்யும்படிக்கோருகிறேன். என் ப்ரின்ஸ்பால் அந்தப் பணத்தை அனுப்புவார்கள். எல்லோருக்கும் என் வந்தனங்கள் தெரிவிக்கவும். 

இங்ஙனம் நந்தினி 

இதைப் படிக்கையில் நாகலக்ஷ்மியின் கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகிய து. கடிதத்தை உறக்கவே படித்ததால் சுப்ரமணியம் கேட்டு வியப்புக் கடலாடி ஆனந்த பாஷ்பத் தைப் பெருக்கினார் என்றால் மிகையாகாது. 

அத்தியாயம்-7

வியப்புக்கடலாடி ஆனந்த பாஷ்பத்தைப் பெருக்கினார் என்றால் மிகையாகாது.வைத்தியநா தன் குடியிருக்கும் வீட்டுக் காரராகிய வடிவேலு தன் மகனும் மருமகளும் புதிய இன்ப வாழ்க்கையில் இனிப்புடன் இறங்கி இருப்பதால் அவர்களின் ஆனந்தமே ஒரு தனித்த வசீகரம் பொருந்தியதாகக்கருதி இந்த ஆனந்தத்தைக் கண்ணாரக் கண்டு அனுபவிப்பதற்கே பேராவல் கொண்டு லீவும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். 

இந்த விஷயத்தை வைத்தியநாதன் தினம்தினம் பார்த் துப் பெருமூச்சுவிட்டுத் தனக்குள் ஏங்கித் தன் தலைவிதியை நொந்துகொள்வான். அன்றும் பீச்சிலிருந்து கேரே வீட் டிற்கு வந்தான். வீட்டுக்காரரின் மருமகள் ப்ரம்மானந்தமாக வீணைவாசித்துப் பாடுகிறாள். அவர் மகன் கஞ்சீரா வாசிக் கிறான். வீட்டுக்காரர் இந்த கானாம்ருதத்தை உண்டு களிவெறி கொண்டு சபாஷ் போடுவதோடு தன் மனைவியைப்பார்த்து பேரானந்தமடைகின்ற காட்சியை மாடியிலுள்ள தன் தனி விடுதியின் ஜன்னலால் பார்த்து ஏங்கி நின்றான். ”நந்தினிக்கும் உயர்ந் தசங்கீதம் வரும். அப்பா இப்படித் தானும் அனுபவிக் காமல் என்னையும் அனுபவிக்கவிடாமல் வரதக்ஷிணை என்கிற வேலியைப் போட்டுவிட்டாரே, என்ன- செய்வேன். “சீச்சீ! அப்பாவாவது, அம்மாவாவது! இனிமேல் நான் தாமதிக்கப் போவதே இல்லை. வெகுவெகு ஆழமாக யோசனைசெய்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். எங்கள் பந்துவான ராமு வையும் சினேகிதனையும் கூட அழைத்துச்சென்று நந்தினியை அழைத்துக்கொண்டு வருவதே சரி! நாளைக்காலையில் அவர் களைச் சந்தித்து உடனே இருக்கும் ரயிலுக்குப் புறப்பட்டுவிடு வதே சரி! இந்தத் துணிச்சலான தீர்மானத்தை உடனே அப்பாவுக்கு எழுதிப்போட்டு மறுகாரியம் செய்கிறேன். என் னுடைய இன்ப வாழ்க்கையில் குறுக்கிட்டு நாசம்செய்வதை இனி நான் சகிக்கப்போவதில்லை. நாளையே நந்தினிக்கு வேண் டிய சில ஆடையாபரணங்களை வாங்கிக்கொண்டுபோய் வரு வதேசரி!” என்று முடிவுகட்டிவிட்டான். 

அந்தக் கொடிய இரவு பொழுது நீண்டமலைபோல் வளரு வதாகவே அவனுக்குத் தோன்றியது. தகப்பனாருக்குத் தன் மனத்தில் தோன்றியபடியே கடிதத்தை எழுதி உரையிவிட்டு தயாராக வைத்தான். எப்போது பொழுதுவிடியும், நாளைய தினம் நந்தினியைக் கண்டுகளிக்கும் நேரம் எப்போது வரும் என்று ஏங்கியபடியே படுக்கையில் புரளுகிறான். தூக்கமே வரவில்லை. மூன்றுமணிக்குமேல் அவனையறியாமல் சற்று அயர் ந்து தூங்கி விட்டான். 

எப்போதுமே வைத்தியநாதன் காலையில் சற்று தாமத மாகத்தான் எழுந்திருப்பான். இரவு வெகு நேரம் படிப்பத னால் இந்த வழக்கம் சிறியவய துமுதல் உண்டாகியிருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் அந்த விதிக்கு விலக்காக 5-30 மணி க்கே எழுந்துவிட்டான்; உள்ளத்தில் இரண்டுவிதஉணர்ச்சிகள் போராடுகின் ன்றன. தகப்பனாரை விரோதித்துக்கொண்டு நீ இப்படிகிளம்பலாமா? என்று ஒன்று கூறுகிறது. தகப்ப னார் செய்வது மகத்தான குற்றம். அக்குற்றத்திற்கு உடந்தை யாய் இது பரியந்தம் இருந்ததுபோதும்;முட்டாள் தனமாக இனியும் நடக்காதே: இளந்தளிர் போன்ற நந்தினியின் உள் ளம் அளிந்த புண்ணாகி விட்டதை இத்தனை நாள் உணரவில்லை என்றாலும் அவளுடைய நாடகத்தின் முடிவைக்கண்ட பிறகா வது உணர்ந்து அவளை அக்னி சாக்ஷியாகக் காப்பாற்றுவதா கக் கூறிய ப்ரமாணத்தை நிறைவேற்று. இல்லாவிடில் அவள் உயிர்போய்விடும்; அந்தக் கொலைபாதகம் உன்னைப் பிறட்டி யடிக்கும். ஜாக்ரதை, முன்வைத்த காலைப் பின் வைக்காதே. என்று எச்சரிக்கின்றது னொருபுறம்…சற்று குழம்பிய பின் இரண்டாவது தீர்மானமே வெற்றிபெற்றது. 

அவ்வளவுதான்: மனத்தில் எங்கு மில்லாத ஒரு சந்தோ ஷப்புயலடித்து மயக்கியது. நந்தினி! நந்தினி! இன்னும் சில மணி நேரத்தில் உன்னிடம் நான் மன்னிப்புக்கோருவேன். என்னை நீ கட்டாயம் மன்னித்து விடுவாய்… என்று தனக்குள் எண்ணியவாறு கதவைத்திறந்தான். என்ன ஆச்சரியம். சாந் தமே உருக்கொண்டு சந்திரவதனத்தில் புன்னகை பூத்துக் குலுங்க, கண்களில் ப்ரேமையின் ஜ்வாலை வீச நந்தினி கையில் ஒரு தட்டில் தாம்பூலம் முதலிய மங்களகரமான வஸ் துக்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அவைகளை வைத்திய நாதனின் காலடியிலேயே வைத்துவிட்டு, பாதங்களையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆநந்தக் கண்ணீரால் பாதங்களை நீராட்டிப் பின் எழுந்து காங் குவித்து ச்ருங்காரப்பதுமையோ ! ஸௌந்தர்ய தேவதையோ! என்று ஐயுரும்படி நின்றாள்.

தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை. ப்ரமிப்பும் திகைப்பும் ஆநந்தமும் ஒருங்கே அடைந்து… என்ன! இது… நான் தூங்கி எழுந்துவிட்டேனே…..கனவு காண்பதாக…… கனவா…என்று தடுமாறுவதைக்கண்ட அவன் பிதா பரமேச் வரன் பின்னேயே உள்ளே வந்து, செல்வா! கனவு கண்ட நாட்கள் கடலில் கரைந்தது. உங்களுடைய இன்பவாழ்க்கைக்கு நான் போட்டிருந்த முள்வேலி எரிந்து சாம்பலாகி விட்டது; நீ காண்பது உன்கண்ணான கண்மணி நந்தினி வைத்ய நாதன் தான். சிறந்த எழுத்தாளர்களின் ஜாபிதாவில் இடம்பெறக் கூடிய தைரியலக்ஷ்மி தான். கற்பனாலங்கார உலகில் சஞ்சரித்துப் பிறரைமகிழ்விக்கும் சிறந்தமேதைதான்: என்போன்ற மூடர்களைத் திருத்தி நல்வழிப்படச்செய்யும் நாரீமணிதான்; வைத்தீ! நான் புனர்ஜன்மம் எடுத்து விட்டேன். முதலில் நீ நந்தினியை ஏற்றுக் கொள்ளு! என்று சொல்வதை அவனால் நம்பவே முடியவில்லை. சற்று ப்ரமித்து நின்றபின் … அப்பா! இந்தக் காக்ஷிகள் கனவல்லவா! உண்மையானதா!. அப்படி யானால் என்னை நீங்கள் இவளுடைய பிதாவுக்கு விற்றவிலை யில் இன்னும் மூவாயிரம் ரூபாய் பாக்கிவரவேணுமே. வந்து விட்டதா? தாயார் எங்கே… 

என்று வெடுக்கென கேட்டபோது நந்தினி களுக்கென சிரித்து விட்டாள். அவன் தாயார் உண்மையான பேராநந்தத்துடன் உள்ளே வந்து, அம்பீ! அம்மா எங்கே என்று  நீ கேட்ட பிறகு தான் நான் வரவேணும் என்று வெளிப்புறத் திலேயே நின்றேன்; இத்தகைய பேராநந்தத்தைக் காணத் தான் என்னுள்ளம் இரவுபகல் துடித்தது: துடித்துத் தாபத் தினால் வருந்திய என்னிதயத்தில் இப்போதுதான் இன்பத் தென்றல் வீசுகின்றது… 

கல்யாணத்தைவ்யாஜமாகவைத்து வரதக்ஷிணை என்கிற பெயரில் சந்தைசகடையில் தான் பெற்ற மகன்களை விற்கும் பெற்றோர்களுக்கு நந்தினி சரியான சவுக்கடி கொடுத்ததற்காக கங்கராஜுலேஷன்ஸ்… அம்மா! மூவாயிரம் ரூபாய் வந்தாயிற்றா? அதைத் தொட்டபிறகல்லவா நந்தினி யின் கையைத் தொடலாம் என்று குரும்பாகக் கூறினான். 

தம்பீ! ஏதோ போனது போகட்டும்: அவர்தான் அப்படி அசட்டுத்தனமாகச் செய்துவிட்டார் என்றால் நீயும் அதைப் புண்ணில் கோலிடுவதுபோல் கிளறிக் குத்திக்காட்டாதே! கடவுளின் மாயாவிலாஸத்தின்மகிமையையாராலறியக்கூடும்? எப்படித்தான் ஆச்சரியமாய் உங்கப்பாவின் மனத்தை மாற்றி னார் தெரியுமா? நந்தினி காலேஜில் படிப்பதே எங்களுக்குத் தெரியாது;அப்பா தனது சொந்த முக்யமான காரியமாய் பொன்னிநகரத்திற்குச் சென்றார். அந்த ஊரிலுள்ள ப்ரபஸை தரிடம்தான் அப்பா சென்றதால் அவர் வீட்டில் தங்கினார். ‘இங்கு மகாத்மாஜி காலேஜ் என்று ஒன்று ப்ரத்யேகமாய் பெண்களுக்காக நடக்கிறது. அதற்கு நானும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறேன். இன்று அதன் வருஷவிழா நடக்கிறது. கவர்னர் தலைமை வகிக்கிறார்; நான்அவச்யம் போகவேணும். நீரும் கூடவந்தால் கவர்ன ருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்” என்று சொன்னாராம். 

கவர்னரைப் பார்க்கும் மோகத்தில் அவருடன் கூடவே இவரும் சென்றார். அங்கு நிகழ்ச்சி நிரலைக் கையில் கொடுத் ததும் அதில் நந்தினி வைத்தியநாதன் என்ற பெயரைப் பார்த்ததுதான் தாமதம். திருடனுக்குத் தேள்கொட்டியது போலாகிவிட்டதாம். நாடகம் என்பது சாமான்யமாகவா நடந்ததாம். கண்ணீரை மழைபோல் பொழியச் செய்ததில் இவரும் ஒருவராகிவிட்டாராம். சுடச்சுட வசனங்களும் அபார மான நடிப்பின் உச்சஸ்தாயியையும் காணக்காண அவர் உள் ளம் பட்ட வேதனை சொல்லமுடியவில்லையாம். 

கவர்னர்முதல் பலர்பேசிய பேச்சில் நாடகத்தின் அத்புத விஷயத்தைக் கொண்டாடியும் வரதக்ஷிணை வாங்கும் புண்ய வான்களைத் திட்டியும் பேசிய பேச்சுகள் பின்னும் இதயத் தைச் சல்லடைக்கண்ணாகத் துளைத்துவிட்டதாம். அவர் சடக் கெனமாறி புனர்ஜென்மம் எடுத்துவிட்டார். 

காரியத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வக்தார்;எதே தோ ஏற்பாடுகளைச்செய்தார். என்னையும் கூட்டிக்கொண்டு நேரே காலேஜுக்கேசென்று பிரின்ஸ்பால் முதலியவர்களிடம் உத்திரவு பெற்றுநந்தினியேபாமிக்கும்படி அவளிடம் மன்னிப் பும் பெற்று இரவு வண்டியில் புறப்பட்டு வந்துசேர்ந்தோம். உனக்குப் புதுமணம் வீசவும் எதிர்பாராத இன்ப ன்பத்தைக் கொடுக்கவும் முன்னறிவிப்பின்றி வந்து, இதோ உன்னிடம் உன்சரக்கைச் சேர்த்துவிட்டோம். சரிதானே தம்பீ ! நந்தினி பெற்றோர்களுக்கும் கடிதம் அப்பாவே எழுதியிருக்கிறார்.அவர் களும் அனேகமாய் இங்குவந்து விடுவார்கள் என்று மெஷின் போல் கூறிய விஷயங்களைக் கேட்கக்கேட்க வைத்திய நாத னின் இதயத்தில் அமுதக்கடலே பாய்ந்துவிட்டது போலா கியது. பெற்றோரை வணங்கினான். 

தன் பெற்றோர்கள் இருப்பதையும் மறந்து நந்தினியின் மலர்க்கரங்களை அப்படியே பற்றிக்கொண்டு, தைரியலக்ஷக்ஷ்மியே கற்பனைக்கரசியே ! என் பெற்றோர்களையும் என்னையும் மன் னித்துவிட்டாயா! என்று ஆவேசத்துடன் கேட்டான்: மாதரசியின் கண்களில் மலர்கள் உதிர்வதுபோல் ஆனந்த முத்துக்கள் இவன்கையில் உதிர்ந்து சரணாகதி செய்தது. இந்தக் காட்சியைக்கண்டு பூரிப்பதைவிட நித்யகல்யாண வைபவசுகம் அவன் பெற்றோர்க்கு வேறு என்ன இருக்கிறது! மங்களம்.

சுபம். 

– தைரிய லக்ஷ்மி (நாவல்), வை.மு.கோ. 106வது நாவல், முதல் பதிப்பு: 1-12-52, ஜகன்மோகினி பிரஸ், திருவல்லிக்கேணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *