நாளிதழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 10,072 
 

நெல்லை பிப் 7

நெல்லையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திய பெண்கள் ஆறு பேர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மகன் ஆகியோர் கைது

நெல்லை பாளை மார்க்கெட்டைச் சேர்ந்த அறிவாளன் மகன் கௌதம் ( 23 ) ஜனவரி மாதம் பாளை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பட்ட பிரபல நிறுவனங்களின் நேரடி வேலை வாய்ப்பு முகாம் என்ற விளம்பரத்தை கண்டு முகாம் நடக்கும் இடத்திற்க்குச் சென்று இன்டர்வியூவ் கலந்து உள்ளான் கௌதம்
பின் அவரை ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரை கூறி இன்டர்வியூவ் செய்த பெண் ஒருவர் இன்டர்வியூவில் செலக்ட் ஆகிவிட்டதாகவும் மாத சம்பளம் இறுபதாயிரம் எனவும் வேலை உறுதியாக ரூபாய் ஐந்தாயிரம் தரக்கோரியும் கேட்டுள்ளனர் மாத சம்பளத்தின் மோகத்தினால் பணத்தை தர சம்மதித்து மறுநாள் தாயிடமிருந்த தங்க சங்கிலியை அடகு வைத்து ஐந்தாயிரம் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார் ,

அந்த பெண்கள் திட்டமிட்டு கட்டிய பணம் திரும்ப தரப்படாது என எழுத்து பூர்வமாக கௌதமிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு போலி அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்து அனுப்பியுள்ளனர் மறுநாள் அனுப்பி வைத்த நிறுவனத்திற்க்குச் சென்று அப்பாய்மென்ட் ஆர்டரை காட்டியுள்ளார் நிறுவனத்தின் மேனேஜர் இந்த ஆர்டர் தங்களின் நிறுவனத்தில் இருந்து தரப்படவில்லை என்று கூறி இங்கு வேலைகள் எதற்க்காகவும் இன்டர்வியூவ் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்

உடனே கௌதம் முகாம் நடந்த இடத்திற்க்கு சென்று விசாரித்த போது இன்டர்வியூவ் செய்த பெண் தவறாக அங்கு அனுப்பியதாகவும் அந்த நிறுவனத்திற்க்கு போன மாதமே ஆட்களை வேலையில் அமர்த்தி விட்டதாகவும் இப்போது கௌதமை அனுப்பிய அந்த பெண் வேலையில் வருவதில்லை எனவும் இது தனியார் வேலைகள் வாங்கித் தரப்படும் கன்சல்டன்ஸி எனவும் அங்கு இருந்த வேறு இருப் பெண்கள் கூறியுள்ளனர்

பின் கோபம் அடைந்து கௌதம் கட்டியப் பணத்தை திரும்ப கேட்டுள்ளான் அதற்க்கு கட்டியப் பணம் திரும்ப தரப்படாது எனவும் அதற்க்கு பதில் இரண்டு நாட்களில் வேறு வேலை வாங்கித்தருவதாக சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்

இரண்டு நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டுள்ளான் கௌதம் அப்போது இன்னும் ஒரு வாரத்தில் வாங்கி தருவதாக் கூறியுள்ளார் ஒரு பெண்

வீட்டிற்க்கு பயந்து சொல்லாத கௌதமிடம் தாயும் தந்தையும் வேலையைப் பற்றி அடிக்கடி விசாரித்து உள்ளனர் அவர்களை நம்பச் செய்ய தினமும் வேலைக்குச் செல்வதுப் போல் சென்று ஊர் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான் கௌதம் ஒருவாரம் கழிந்து கன்சல்டன்ஸியை தொடர்பு கொண்ட போது கன்சல்டன்ஸியில் நிறுவனர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் வந்ததும் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்

அதைக் கேட்ட கௌதம் ஆத்திரம் அடைந்து நேரடியாக கன்சல்டன்ஸிக்குச் சென்றுள்ளான்
அங்கு சென்ற போது முதலில் இன்டர்வியூவ் செய்த பெண்னை கண்டு அதிர்ந்து அவர்கள் எமாற்றுவதை அறிந்துக் கொண்டு அங்கு இருந்த பெண்களிடம் பணத்தை திரும்ப கேட்டு அழுது பேராட்டம் செய்ய அவர்கள் சில ஆண்களை வரச் செய்து கௌதமை மிரட்டி அனுப்பியுள்ளனர்

எமார்ந்து மணமுடைந்த கௌதம். வீட்டில் சொல்ல பயந்து எதாவது வேலை செய்து எமார்ந்த பணத்தை சம்பாதித்து தாயின் செயினை மீட்டு விட வேண்டும் என எண்ணி தெரிந்த ஒருவரிடம் தின வேலைக்குச் சென்றுள்ளார் ,

இரண்டு நாட்கள் கழித்து இரவு வீட்டில் இருந்த கௌதமை போலீஸார் கைது செய்து பாளை மார்க்கெட் உதவி ஆய்வாளர் அபூர்வ ராஜ் காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளார்

அதிர்ந்துப் போன கௌதம் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று விசாரித்தப் போது கௌதம் ஒரு வேலை வாங்கித்தரும் கன்சல்டன்ஸியை வேலை வாங்கி தர தாமதம் ஆன காரணத்தினால் அடியாட்கள் எட்டு பேரை ஏவி அடித்து நொருக்கி அங்கு இருந்த பெண்களைத் தாக்கியதாக கூறினார் ,

காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட கௌதமிடம் பெற்றோரகள் சென்று விசாரிக்க அவன் முற்றிலும் மறுத்து நடந்தவற்றை எல்லாம் பெற்றோரிடம் கூறியுள்ளான்

கௌதம் கூறியதை பெற்றோர்கள் காவல் துணை ஆய்வாளரிடம் கூறிய போது அவர் இனி எதுவும் செய்ய முடியாது எப் ஐ ஆர் பதிவு செய்து விட்டதாக கூறி பெற்றோறை அனுப்பி வைத்துள்ளார்

மறுநாள் ஒரு வக்கீலிடம் அனுகி ஜாமினில் கொளதமை வெளியெடுத்து வீட்டிற்க்கு அழைத்துச் சென்று அவனிடம் ஆத்திரம் அடைந்துவுள்ளனர் பெற்றோர்கள்

பெற்றோரின் கோபம் காவல் நிலையம் சென்ற அவாமானம் ஏமாற்றம் அனைந்தையும் தாங்க முடியாமல் கௌதம் தற்கொலைக்கு எண்ணி திருச்செந்துார் செல்லும் இரயில் தண்டவாளப் பாதைக்குச் சென்று தற்கொலைச் செய்துக் கொண்டான்

கௌதம் தற்கொலைச் செய்துக் கொண்டதை அடுத்து அதைப்பற்றிய விரிவானச் செய்தி இதே நாளிதழில் வெளியானது

அதன் விளைவாக நேற்று பாளை மார்க்கெட் காவல் நிலையத்தில் அபூர்வ ராஜ் உதவி ஆய்வாளர் மகன் சின்னா (23) கெளதம் பெயரில் உள்ள புகார் சம்பந்தமாக சரண் அடைந்துள்ளார்

அவர் கூறிய வாக்கு மூலத்தில் சில வருடங்களாக படித்து வேலையில்லாமல் இருந்த போது பெரிய நிறுவனங்களின் நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடப்பதாகக் கூறி போலி அப்பாயின்மென்ட் கொடுத்து ரூபாய் ஐந்தாயிரம் பரித்துக் கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் எமார்ந்ததை பெற்றோர்களிடம் பயந்து கூறாமல் விரக்த்தி கோபத்தில் எட்டு பேர் கொண்ட குழுவை அனுப்பி தகராரில் ஈடுப்பட்டதாகவும் அதில் அப்பாவி கௌதம் மாட்டிக் கொண்டதாகவும் கூறினான்

இதை ஏற்றுக் கொண்ட ஆய்வாளர் தங்க துரை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கன்சல்டன்ஸி நடத்திக் கொண்டிருந்த லதா ( 29 ) உமா ( 42 ) மகாலஷ்மி ( 24 ) நிஷி (24) பரிதா ( 24 ) கல்பனா( 32 ) ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரனை நடத்தினார்

அதில் உமா கூறிய வாக்கு மூலத்தில் தாங்கள் ஆறு பேரும் கடந்த ஒரு எட்டு மாதமாக போலி வேலை வாய்ப்பு முகாம் நடத்திவருகிறோம் எனவும் ஆறு பேரில் ஒருவரை மெயினாக வைத்து இன்டர்வியூவ் நடத்தி கௌதம் சின்னாவை எமாற்றியது போல் எமாற்றி பணம் சம்பாதிப்போம் கன்சல்டன்ஸி தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னா வந்து பணத்தை திரும்ப கேட்ட போது கொடுக்க மறுத்ததோம் அவர் சிறிது வாதாடினார் பின் அமைதியாகச் சென்று விட்டார் அதன் மறுநாள் கௌதம் வந்து வாய்த்தகராரு செய்தது மட்டும் இன்றி இரண்டு மணி நேரம் யாரையும் வேலை செய்ய விடாமல் தடுத்து அழுது போராட்டம் செய்ததாகவும் அதன் மறுநாள் கன்சல்டன்ஸி தாக்கப்பட்டதால் கௌதம் தான் அதைச் செய்திருப்பார் என எண்ணி புகார் செய்ததாகவும் பெண்களிடம் தகரராரு செய்தார் என்ற புகாரில் மாட்டியதால் கௌதமின் எந்த பேச்சையும் காவளர்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் நடவெடிக்கை எடுத்து தண்டித்ததாகவும் பின் பெண்கள் கன்சல்டன்ஸி நடத்துவதால் யாரும் எளிதில் தகராரு செய்யமாட்டார்கள் எளிதில் கேட்ட பணத்தை தந்து விடுவார்கள் மற்றும் காவல் நிலையத்தில் புகார் செய்ய மாட்டார்கள் என்ற திட்டம் கொண்டே நடத்தி வருவதாகம் அன்று கௌதம் எங்களை தாக்கினார் என்பது நாங்கள் திட்டமட்டு இனைத்த பொய் என்றும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்

பணத்தின் மேல் கொண்ட பேராசையால் சிலர் இதைப் போன்றுப் போலி நிறுவனங்களை நடத்தி பலரின் வாழ்கையை அழித்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்க்குறியது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *