கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 16,762 
 

மருமகளிடமும் மகனிடமும் விடைபெற்று சென்றனர் மீனாட்சியும் சுந்தரேசனும். பேரனும் பேத்தியும் வந்து கட்டிக் கொண்டார்கள். இதோட அடுத்த பொங்கலுக்குத்தான் வருவீங்களா பாட்டி.. சொல்லுங்க தாத்தா..அவர்கள் விழிகளில் கண்ணீர்.. இரண்டு மாதம் போனதே தெரியவில்லை. 

ஒரு வாரம் கழிந்தது. கீர்த்தி புலம்பினாள்..இதோ பாருங்க மளிகைக் கடைக்காரருக்கு இவ்வளவு ஆனதே இல்லை இதுவரை.. 

அது ஒண்ணுதான் உன் கண்ணுக்கு தெரியுது.. நேற்றே நான் முழு செலவும் கணக்கு பாத்துட்டேன் கீர்த்தி. Infact பெறும் தொகை மிச்சம் ஆயிருக்கு என்றான் சுரேஷ்.

என்னங்க ஒளர்றீங்க.. எப்படி மிச்சமாகும் கணக்குப்புலி..எனக்கு புரியல சொல்லுங்க. உங்க அப்பா அம்மாவ நான் ஒண்ணும் காசு அனுப்புங்கன்னு கேக்க மாட்டேன்..

ஒரு ரெண்டு பேர் எக்ஸ்ட்ரா வந்துட்டா செலவும் ரெட்டிப்பாயிடும்ங்கிறது உன்னோட மனக்கணக்கு. வீட்டுக் கணக்கை கரெக்டா பாத்கணும். கேளு.

கரன்ட் பில் கம்மியா தான் வந்திருக்கு. அப்பா அடிக்கடி எங்கெல்லாம் வேஸ்ட்டா ஃபேன் லைட் ஓடுதோ எரியுதோ ஆஃப் பண்ணி வெக்கறத நோட் பண்ணிருக்கியா. 

Fridge கூட நைட்ல ஆஃப் பண்ணிட்டு காலையில ஆன் பண்ணுவாங்க அம்மா. நான் கூட கேட்டேன். 24*7 ஓடணும் இல்லடா சுரேஷ். டெய்லி நைட் ஆஃப் பண்றதனால ஒண்ணும் ஆயிடாது. 

அயர்ன் கடைக்காரர் வீட்டுக்கு வந்து துணி எடுத்து இரண்டு மாசம் ஆச்சி. அப்பாவே க்ளீனா அயர்ன் பண்ணி மடிச்சி பீரோவில் அடுக்கி வைப்பாரு.

கீர்த்தி யோசிக்கத் தொடங்கினாள்..

சரி சொல்லு.. இந்த ரெண்டு மாசத்துல நாம எத்தனை முறை ஓட்டலுக்கு போயிருக்கோம். சுத்தமா இல்ல. 

பார்க் பீச்.. போனோமா. அப்பாவும் அம்மாவும் குழந்தைகளை engage பண்ணிகிட்டாங்க. நம்ம பசங்களும் எவ்வளோ ஹேப்பியா இருந்தாங்க தெரியுமா. 

ஆமாங்க ரெண்டு பேரும் நைட்டானா போதும், கதை சொல்லு கதை சொல்லு மம்மின்னு நச்சரிக்கிராங்க..

வேளா  வேளைக்கு நாக்குக்கு ருசியா எங்கம்மா சமைச்சி போட்டதால வயிற்றுக்கும் தொந்தரவு இல்லாம இருந்தது. இல்லேன்னா அடிக்கடி குழந்தைகளை கூட்டிக்கிட்டு vomit, decentry ன்னு child specialist doctor கிட்ட அலைவோமே.. இந்த இரண்டு மாசமா போனியா?

கூட்டி கழிச்சி பாரு. கணக்கு சரியா வரும். பணம் எஞ்சியிருக்கே ஒழிய கைய விட்ட மிஞ்சிப் போகல. 

ஆமாங்க.. நீங்க சொல்றது தாங்க சரி என்று நீண்ட யோசனையில் ஆழ்ந்தாள். சுரேஷ் டார்லிங் நான் ஒண்ணு சொல்லட்டுமா..

வேண்டாம் சொல்லாத. அவங்க கிராமத்த விட்டு வரமாட்டாங்க.

Print Friendly, PDF & Email

2 thoughts on “மனக்கணக்கு

    1. இருக்கும் வரை பெற்றவர்கள் ( மாமனார் /மாமியார் )அருமை பரஸ்பரம் இருவரும் புரிந்துகெள்வதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *