கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 6,294 
 
 

(2017ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1. தீர்மானம்

நடுத்திட்டு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக சகுந்தலா பதவி ஏற்று சரியாக ஓராண்டாகிவிட்டது. கடந்த ஓராண்டாக இந்த கிராமத்துக்கு என்னென்ன செய்தோம் என்று பேசுவதற்கு கவுன்சிலர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினாள் தலைவி!

‘ரெண்டே ரெண்டு வேலையைத்தான் செஞ்சோம். ஒண்ணு நம்ம ஊர்ல இருக்கற பத்து தெருவுலயும் கண்ட இடத்துல குப்ப கொட்டாம் அங்கங்க குப்பத் தொட்டி வச்சி ஓரளவுக்கு தெருவ சுத்தப்படுத்தினோம்!’

‘ஏன்.. இதைவிட முக்கியமானது நம்ம ஊர்ல குடி தண்ணி பிரச்சினையைப் போக்க மேல்நிலைத்தண்ணி தொட்டி கட்டினோமே!’

‘ஏம்பா.. அதுதான் வேலையை பாதியிலேயே வுட்டுட்டமே.. தொட்டி கட்டிட்டோம். ஆனா கிணத்துலயிருந்து தண்ணீ ஏத்த மோட்டார் போடல. தண்ணிய தொட்டியில ஏத்தல… அப்புறம் குழாய் போட்டு தெருக்களுக்கு தண்ணி சப்ளை செய்யல!’

‘யோவ் அதுக்குத்தான் கெவுருமெண்டுக்கு மனு போட்டு பாத்தோம். ம்ஹூம். யாரும் எதுவும் செய்யல. நம்மகிட்டயும் பஞ்சாயத்துல பணம் இல்ல… என்ன பண்றது?’

‘தலைவரம்மா… உங்க வீட்டுக்காரரும் வார்டு மெம்பர் தான. அதோட அவருக்கு எம்.எல்.ஏ., மந்திரிகிட்ட செல்வாக்கு இருக்கு. ஏன் அவருகிட்ட சொன்னா இதெல்லாம் செய்ய மாட்டாரா?’

அதுவரையில் மெளனமாக இருந்த சகுந்தலா பேசத் தொடங்கினாள்.

‘எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க. ஏற்கனவே அவருக்கு என் மேல கோவம். எத செஞ்சாலும் நா அவரை கேட்டுத்தான் செய்யணுமாம். ரெண்டு மாசத்துக்கு முன்னால கூட மோட்டார் போட்டு பைப் கனெக்ஷன் குடுக்க எம்.எல்.ஏ.வையும், மந்திரியையும் பார்க்க போலாம்னு கூப்புட்டேன். நா உள்ளோட வரமாட்டேன்னு சொல்லிட்டாரு- அப்புறம் நானே போயி மனு குடுத்துட்டு வந்தேன். இதுவரைக்கும் எதுவும் செய்யல. அதனால் அவரு மூலமா இது நடக்கும்னு எனக்குத் தோணலை!..’

‘அப்ப என்னதான் பண்ணலாம்?’

‘அதுக்குத்தான் இந்த கூட்டத்த கூட்டினேன், நம்ம ஊரு ஏரிக்கரையில் அடர்த்தியா முள்வேலி மரங்க இருக்கு. அத ஏலம் வுட்டோம்னா கணிசமா பஞ்சாயத்துக்கு பணம் கிடைக்கும். அத வெச்சி மோட்டார் வாங்கி போடலாம். தெருக்களுக்கு பைப் கனெக்ஷன் குடுக்கலாம். வார்டு மெம்பருங்க என்ன சொல்றீங்க?’

‘ஆஹா! நல்ல ஐடியா.. உடனே ஏலம் வுடறதுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”

‘ரெண்டாம் வார்டு மெம்பர் அவசரப்படுறார். எரிக்கரையும், அதுல வர்ற மரமும் அரசாங்கத்து சொத்து. நாம நினைச்ச மாதிரி உடனே ஏலம் வுட முடியாது. மொதல்ல தீர்மானம் போட்டு அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் தகவல் அனுப்புவோம், கலெக்டர பார்ப்போம். உத்தரவு வாங்கனப்புறம் ஏலம் விடுவோம். என்ன சொல்றீங்க?’

‘அதுவும் கரீட்டுதான்!’

‘ஹாங்… இன்னொண்ணு… மூணு மாசத்துக்கு முன்னால நம்ம ஊரு ஆளுங்க சாராயத்த குடிச்சி டேஞ்சராகி அதுல நாலு பேர ஆஸ்பத்திரியில சேர்த்து பொழைக்க வச்சமே….’

‘ஆமாம்மா… அதுக்குத்தான் கலெக்டர், மந்திரிகிட்ட பஞ்சாயத்து சார்பா மனுகுடுத்து நம்ம ஊர்ல கெவுருமெண்டு சாராயக் கடய எடுத்துடச் சொன்னமே…’

‘கரெக்ட்.. அத பத்தி நேத்திக்கு ஆர்.டிஓ. தாசில்தார்கிட்ட பேசினேன். நம்ம ஊர்ல இருந்து சாராயக் கடய எடுத்துடச் சொல்லி ஆர்டர் போட்டுட்டாங்களாம். இந்த வாரத்துல உத்தரவு, கிடைச்சுடும். அப்புறம் நம்ம ஊர்ல எந்த சாராயக் கடயும் இருக்கக் கூடாது.’

‘அய் .. யய் .. யோ! பொயுதெல்லாம் உயைக்கறவங்களுக்கு உடம்பு நோவு போவணும்மா… கொஞ்சம் ராத்திரியில ஊத்தனாதான்… தூக்கம் வரும்.?”

“அத சாக்கு வெச்சி எல்லாரும் குடிக்கறாங்களே…. வீட்ல கஞ்சிக்கே காசு இல்லேங்கறாங்க, ஆனா சாராயம் குடிக்க மட்டும் எப்படி துட்டு வருது?” ”என்ன இருந்தாலும் தலைவரம்மா நீ பண்ணது

தப்பு…

“அது தப்பா இருந்தாலும் நா செய்வேன். நம்ம ஊர்ல சாராயக் கடையில எவ்ளோ சம்பாதிக்கறாங்க.. தெரியுமா? ஒரு நாளைக்கு சராசரியா ஆயிரம் ரூபா வசூல் பண்ணாலும் மாசத்துக்கு 30000 ரூபா கவர்மென்ட்டுக்கு வருமானம் போவது. எவ்ளோ பேர் உழைப்புல சம்பாதிச்ச பணாம்? நா தலைவரா இருக்கற வரைக்கும் நம்ம ஊர்ல சாராயக்கட நடத்த வுட மாட்டேன்!”

“சரிம்மா… இதுக்கு மேல நாங்க சொல்றதுக்கும் ஒண்ணும் இல்ல. குடிக்கற தண்ணிக்காவது வழி பண்ணுவோம்!

“நாளைக்கே தீர்மானத்த எழுதி குடுக்கறேன். கையெழுத்து போட்டுக் குடுங்க. உடனே நா போயி அதிகாரிகள பாத்து குடுத்து சொல்லிட்டுவரேன். சரியா? ம்… கூட்டம் இதோட முடிச்சுக்கலாம்!”

2. தண்டவாளம்

நடுத்திட்டு கிராமத்தின் மேட்டுத் தெருவில் பலராமன் வீடுதான் பெரிய வீடு, அந்தக் காலத்து சுத்துக்கட்டு வீடு. வீட்டின் முன்புறம் இரண்டு பக்கங்களிலும் இரண்டு நிண்ணைகள் இருக்கும். அதை ஒட்டினாற் போன்று ஒரு பக்கம் மகிழ மரமும், இன்னொரு பக்கம் மஞ்சள் அரளிச் செடியும் வளர்ந்து வீட்டுக்குள் நுழைகிற போதே ஒரு குளிர்ச்சியையும், பூக்களின் வாசத்தையும் கொண்டு ரம்மியமாக இருக்கும்!

திண்ணையைத் தாண்டின உடனே நடுவில் ஒரு வாசல் இருக்கும். அதன் நான்கு புறமும் சற்றே நீளமான தாழ்வாரங்கள். வடக்குப்பக்க தாழ்வாரத்தில் ஒரு பெரிய கூடம். நன்கு வேலைப்பாடு அமைந்த ஒரு ஊஞ்சல் அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. கூடத்தின் கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு பெரிய படுக்கை அறைகள். மேற்கிலுள்ள படுக்கை அறையில் ஏசி பொருத்தப்பட்டிருந்தது. கூடத்தின் தெற்குப் பகுதியில் பெரிய சமையலறையும், அதற்குப் பின்பு சற்றே இடைவெளிவிட்டு குளியலறையும் இருந்ததால் வீடு சற்றே பெரியதாக இருந்தது!

அந்த வீடு பலராமனின் தந்தையார் அந்தக் காலத்தில் மணியக்காரராக இருந்தவரே. பார்த்துப் பார்த்துக் கட்டியது. ஒரு குட்டி ஜமீன்தார் மாதிரியே வாழ்ந்தவர்.

அவ்வூருக்கு வரும் எந்த அதிகாரியும் அவரது வீட்டுக்குச் சென்றுதான் அவரைப் பார்க்க டுவண்டும்.

அவராகச் சென்று எந்த அதிகாரியையும் என் கிராமத்துக்கு இது வேணும்ஞு கேட்டதே கிடையாது. அந்தப் பெருமையோடு வாழ்ந்து மறைந்தவர்தான் பலராமனின் தந்தை!

ஆனால் அவரது குணநலன்களுக்கு நேர்மாறாக இருந்தவர்தான் பலராமன்!

நடுத்திட்டுப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு எந்த எதிர்ப்புமின்றி தலைவரானவன். ஐந்து வருடங்களும் தலைவராகவே வலம் வந்தான். ஆனால் கிராமத்துக்கு என்று எந்த வசதிகளும் செய்யவில்லை!

அவன் தந்தையார் காலத்திலிருந்த இரண்டு குதிரை வண்டிகளையும் விற்று விட்டான். புதியதாக ஒரு மோட்டார் சைக்கிளும், டாட்டா காரும் வாங்கி வைத்திருந்தான். எப்போது பார்த்தாலும் பக்கத்து டவுனுக்குச் சென்று விடுவான்.

கிளப்பில்தான் பெரும்பலான நேரத்தைச் செலவிடுவான். டவுளிலுள்ள பணக்காரர்கள் எம்.எல்.ஏ. மற்றும் மந்திரியுடன் நெருக்கம் வைத்திருந்தான்.

பகலெல்லாம் சீட்டாட்டமும், இரவானால் சீமைச் சரக்கு சாப்பிடுவதும் அவளது தினசரி வாழ்க்கையாயிற்று,

அதுவும் அவனுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் அவள் அவ்வாறு மாறிப் பேனான். தந்தையார் எதிரில் நின்றுகூட பேசாதவன், எதுவாக இருந்தாலும் அவனது அம்மா மூலம்தான் நடக்க வேண்டும்!

‘என்னங்க.. நம்ம பையன் பத்தாவதுதான் படிச்சாள். அவனுக்குப் போயி பி.ஏ. படிச்ச பொண்ணு பாத்துட்டு வந்திருக்கீங்களே… சரியா வருமா?’

‘ஏண்டி வராது? பலராமன் இருக்கானே… அவன் பேர்ல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. நம்ம குடும்ப பெருமையை காப்பாத்துவான்னு எனக்குத் தோணல. முப்பது ஏக்கர் நிலம், தோட்டம், துறவுள்னு சொத்து இருக்கு. இதயும் காபந்து பண்ணுவாளான்னும் தோணல். அதனால் நம்ம மாதிரியே வசதி இருந்தும், பி.ஏ. படிச்ச சகுந்தலாவ பேசி முடிச்சுட்டேன். நீயும் தான் பாத்தே, பொண்ணு நல்ல லட்சணமா இருக்கறாளே. அப்புறம் என்ன?’

‘படிப்பு வித்தியாசம்தான்!’

‘என்ன பெரிய படிப்பு? வாழ்க்கை வேற, படிப்பு வேற.. படிப்பு வாழற வாழ்க்கைக்குத் துணையா இருந்தா போதும்னு அன்னிக்கு பளிச்சினு போட்டு உடைச்சி வெளிப்படையா பேசனாளே.. அப்பவே நம்ம குடும்பத்துக்கு அவதான் சரியான மருமகள்னு முடிவு பண்ணோன். ஏன் உன் பையன பத்தி பயப்படறியா?’

“ம்ஹூம் …நா பயப்படறது பையனுக்காக இல்ல, நம்ம காலத்துக்குப் பிறகு அந்தப் பொண்ணு இவள்கிட்ட என்ன பாடுபடப் போறாளோன்னு தான் பயப்படறேன்!”

‘யேய்.. பயப்படாதடி.. படிச்ச பொண்ணு-, தைரியமா இருப்பா!’

இப்படித்தான் பலராமனின் திருமணத்தை நடத்திவிட்டு மூன்றே வருஷத்தில் அவனது தந்தையும் அடுத்த ஆண்டே அவனது தாயாரும் மேலுலகம் போய்ச் சேர்ந்து விட்டார்கள்!

கேட்பதற்கு ஆள் இல்லை. பலராமனின் ஆட்டம் களைகட்டத் தொடங்கியது. திருமணமான மூன்றாண்டு காலத்தில் பேரப் பிள்ளைகளைப் பார்க்க அவளது பெற்றோர்கள் எவ்வளவோ பேராசைப்பட்டார்கள். சகுந்தலாவுக்கும் ஆசைதான், குழந்தையைப் பெற்று மாமா, மாமிக்கு கொடுக்க, என்ன செய்வது ஆண்டவன் அவ்வளவு சீக்கிரம் கண் திறக்கவில்லையே!

‘ஏம்மா.. சகுந்தலா.. பேரனோ, பேத்தியோ எங்க மடியில ஒண்ணுக்கு போனாத்தான எங்களுக்கு சொர்க்கத்துல இடம் கிடைக்கும். நீ என்னா எங்களுக்கு அந்த பாக்கியத்த குடுக்க மாட்ட போல இருக்கே?’

‘என்னங்க…நீங்க? அவ மட்டும் மாட்டேன்னா சொன்னா? போன மாசம் கூட திருச்சிக்கு போயி பெரிய டாக்டர்கிட்ட எல்லாம் சோதனை பண்ணாங்களாம். எல்லாம் நல்லாத்தான் இருக்காம். எந்த குறையும் ரெண்டு பேர்கிட்டயும் இல்லியாம். என்னா பண்றது? நேரம் வர்ல..!’

‘ஆமாம் அதுக்குள்ள நமக்கே நாள் வந்துடும் போல இருக்குடி!’

‘சொம்மா இருங்க. பாவம் அவ காதுல இது கேட்டுடப் போவுது. ரொம்ப வருத்தப்படுவா!?’

மாமியார் சொன்னது போலவே சற்றே தொலைவில் இதைக் கேட்டுவிட்டு மிகவும் நொந்து போனாள். பாசமான மாமா, மாமியார்க்குக் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளையைத் தன்னால் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே என்று தனக்குள் அழுது கொண்டிருந்தாள்.

அந்த நிராசையுடனேயே அவர்கள் போய்ச் சேர்ந்து விட்டார்கள். முன்பாவது பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்று சற்று அச்சப்பட்டவன், அவர்களின் இறப்புக்குப் பின்பு எப்போது வீட்டுக்கு வருவான்? எப்போது வெளியே போவான்? அவனுக்கும் தெரியாது. மனைவி சகுந்தலாவுக்கும் தெரியாது.

விவசாய வேலையைக் கூட சகுந்தலாவே நேரில் சென்று கண்காணிக்க வேண்டியதாகிவிட்டது. வீட்டில் எப்போதுமே மூன்று வேலைக்காரர்கள் இருப்பார்கள். அதில் ஒருத்தி, சமையல், வீட்டு சுத்தம் பார்த்துக் கொள்ளும் பார்வதி, மற்ற இருவரும் தோட்டம், துறவு, விவசாயம் என்று சகுந்தலாவுக்குத் துணையாக இருப்பார்கள்.


அன்று பஞ்சாயத்துக் கூட்டம் முடிந்த பின்பு நேரே வீட்டுக்கு வந்தாள். பார்வதி காபி கொண்டு வந்து கொடுத்தாள். ஊஞ்சலில் அமர்ந்தவாறே காபியை உறிஞ்சிக் குடித்தாள். கணவர் இன்னும் வரவில்லை. இரவு எப்போது வருவாரோ… அதுவும் தெரியாது!

கூடக்கின் நடுவில் அவள் மாமனார், மாமியார் படம் பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

மூச்சுக்கு முப்பது முறை சகுந்தலா என்று வாய்

நிறைய கூப்பிடுவார் மாமனார்.

‘ஏன் மாமா?`

ம்.. ஒண்ணுமில்ல. பேரன் நெனப்பு!’

‘ஆமாம்.. அவ என்ன வச்சுகிட்டா இல்லங்கறா? சொம்மா இருங்க. அவள் தொந்தரவு பண்ணாதீங்க! நீ போம்மா! ஃபேன் போடறேன்.. ஊஞ்சல்லயே படுத்து தூங்குங்க. ஊரு புள்ளயார் கோயில்ல இன்னிக்கு ஆடிப்பூரம் வெச்சிருக்கார் குருக்கள். நானும், சகுந்தலாவும் வளையல், மஞ்சள், குங்குமம், சரடு செட்டு செட்டா ஒரு பிளாஸ்டிக் பையில் போடப் போறோம். நீ வா சகுந்தலா!’

நினைவுகளின் சோகத்தால் சகுந்தலா அந்த ஊஞ்சலிலேயே படுத்துக் கொண்டாள். அவள் வாழ்க்கை ரயில் தண்டவாளம் மாதிரி ஒட்டாமலே போகிறதே. ஏன் இப்படி நடக்கிறது? அவர் ஏன் இப்படி ஏனோ தானோவென்று நடந்து கொள்கிறார்? அதுவும் பஞ்சாயத்துத் தலைவியான பின்பு இன்னும் அவர்களுக்குள் இடைவெளி அதிகமாகிவிட்டதே. அது ஏன்? ஒரு வேளை இப்படியே போய்விடுமா அவளது வாழ்க்கை?

ஒரு குழந்தை இருந்தாலாவது கொஞ்சம் பிடிப்பு இருந்திருக்கும். அதுவும் தற்போது இல்லை. பஞ்சாயத்து தலைவியாக வேண்டும் என்று அவள் விரும்பியதும் இல்லை. அவளுக்கு அவள் கணவணால் நிணிக்கப்பட்டது.!

நினைத்து, நினைத்து ஊஞ்சலிலேயே தூங்கிப் பேனாள் சகுந்தலா!

3. வீடு வேறு அலுவவலகம் வேறு

ஆண்டவன் படைப்பில் அற்புத சிருஷ்டி பெண். அவளைவிட மென்மையும், மேன்மையும் நிறைந்த படைப்பு உலகில் வேறு எதுவும் இல்லை என்று சொன்னார் மகாத்மா!

ஒருவேளை சகுந்தலா போன்ற பெண்களைப் பார்த்துத்தான் அவ்வாறு கூறியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.!

அன்று இரவு காபியை மட்டும் குடித்துவிட்டுப் படுத்தவள்தான் சகுந்தலா. இரவு உணவு கூட சாப்பிட எழுந்திருக்கவில்லை. எண்ணச் சூழல்களால் ஊஞ் சலில் படுத்திருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்! சமையல்காரிக்கு நன்கு தெரியும். சகுந்தலா தூங்கிவிட்டால் எதற்கும் எழுப்பமாட்டாள் பார்வதி.

அன்று இரவு ஒரு மணிக்கு மேல்தான் பலராமன் டவுனிலிருந்து வந்திருக்க வேண்டும்! அவனும் அவளை எழுப்பாமல் நேராகப் படுக்கையறைக்குச் சென்று ஏ.ஸியைப் போட்டு படுத்து விட்டான். சகுந்தலாவை எழுப்பும் நிலையிலும் அவன் இல்லை!

மறுநாள் காலையிலேயே எழுந்த சகுந்தலா படுக்கை அறையில் எட்டிப் பார்த்தாள். அவள் கணவன் நன்கு தூங்கிக் கொண்டிருந்தான்!

சகுந்தலா நேராக குளியலறைக்குச் சென்று பல் தேய்த்து விட்டு மீண்டும் கூடத்திற்குவந்தாள்.

‘அம்மா காபி?’

பார்வதி கேட்டாள்.

‘ம்.. பார்வதி! ஐயா எப்ப வந்தார்?’

‘ஒரு மணி இருக்கும்!’

‘சரி, காபி குடு!’

பார்வதி கொடுத்த காபியை மெதுவாக உறிஞ்சிக் குடித்தாள். உடளே நாற்காலியில் அமர்ந்து ஊரின் ஏரிக்கரையில் வளர்ந்து கிடந்த முள்வேலி மரங்களை ஏலம் விடுவதற்கு அனுமதி வேண்டி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினாள். அதன் மூலம் கிடைக்கும் பணம் ஊரின் குடிதண்ணீர் வசதி செய்வதற்கே பயன்படும் என்று உறுதி மொழியும் கூறியிருந்தாள். அத்துடன் பஞ்சாயத்து தீர்மான நகலையும் எழுதி இணைத்தாள்.

பின்பு எழுந்து குளித்து முடித்துவிட்டு பளிச்சென்று குங்குமம், விபூதியை இட்டுக் கொண்டு சாமி படத்தையும், மாமனார், மாமியார் படத்தையும் ஒரு கணம் கும்பிட்டாள்!

வெள்ளை நிறத்தில் சின்னச் சின்னப் பூப்போட்ட சேலை. அரக்கு வண்ண பார்டர். அதே வண்ணத்தில் ஜாக்கெட். அவளின் கச்சிதமான உடல் அமைப்புக்கும், சிவந்த நிறத்திற்கும், முகத்தில் தவழ்ந்து கெண்டிருந்த இளஞ் சிரிப்புக்கும், கலைவாணியே உருவெடுத்து வந்தது போலிருந்தாள்!

‘அம்மா.. ஒரு நிமிஷம் அப்படியே இருங்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு, சுத்திப் போடறேன்!’ என்று சொல்லிக் கொண்டே நாலு மிளகாய் வற்றல்களை கொண்டு இடது கையால் திருஷ்டி சுத்தினாள் பார்வதி. அடுப்பில் போட்டபோது படபடவென்று பொரிந்தது.

‘எம்மாடி எவ்வளோ திருஷ்டி?’ பார்வதி வியந்து போனாள்.

‘என்ன பார்வதி ஐஸ் வைக்குற? உளக்கு என்ன வேணும்?’

’எம்மா.. எனக்கு என்னா குறைச்சல்? நீங்கதான் செய்யறதுக்கு இருக்கிங்களே!’

அப்போதுதான் பழனி வந்தான்.

‘அம்மா இன்னிக்கு நம்ம பூந்தோட்டத்துல 50 கிலோ சாமந்திப்பூதான் கிடைச்சது, டவுன் மார்க்கெட்டுக்கு அனுப்பிட்டேன். நேத்திக்கு கரும்புக்கு மொற தண்ணி வுட்டாச்சி. பத்து ஏக்கர்ல போட்ட நெல் பயிறு கொண்ட கதிரா இருக்கு. உரம் போடணும்… டவுன்ல சொல்லி 20 மூட்ட உரத்தை அனுப்பச் சொல்லிடவா?’

‘ம்.. பில்லோட உரத்த அனுப்பச் சொல்லிடு. வந்தவுடளே பணத்த குடுத்துடறேன்!”

அதற்குள் பலராமன் எழுந்து வெளியே வந்தாள்.

‘ஐயா வணக்கம்’.

‘ம்.. என்னடா?’

‘உரம் வாங்கணும்னு அம்மாகிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்!’

‘சரி.. சரி… மத்தியானம் நா டவுனுக்கு போறேன். அனுப்பி வைக்கறேன். நீ போயி வேலையைப் பாரு!’

பல் கூடத் தேய்க்காமல் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தான். பார்வதி கொடுத்த காபியை சகுந்தலாவே வாங்கிக் கொண்டு புருஷனின் முன்பு அமர்ந்து காபியைக் கொடுத்தாள்.

அவனும் என்ள.. ஏது என்று கேட்காமல் காபியை வாங்கி உறிஞ்சினான்.

‘உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!’

என்ன? என்பது போல தலை நிமிர்ந்து பார்த்தான்.

‘மாமா, மாமி செத்துட்டபிறகு ஒருநாள் கூட வீட்டுக்கு சரியா வாரகில்லயே ஏன்?’

‘ம்.. பிடிக்கல!’

‘எது பிடிக்க? வீடு புடிக்கலையா? இந்த ஊரு புடிக்கலையா? இல்ல என்னையே புடிக்கலையா?’

“எனக்கென்ன பயம்? உன்னத்தாள்!’

‘ஏன்னுநா தெரிஞ்சுக்கலாமா?’

“ம்.. கட்டாயம்! நீ யாரு? எம் பொண்டாட்டி, நா சொல்றத கேக்காம உன் இஷ்டத்துக்கு நடந்துக்கற’

‘எப்பலிருந்து கேக்கல?’

‘நீ பிரசிடெண்டா வந்த பிறகுதான்!’

‘நல்லா நினைச்சு பாருங்க. இந்த பதவிக்கு நா ஆசப்பட்டனா? இல்ல தலைவர் பதவி வேணும்னு உங்ககிட்ட அடம் புடிச்சனா? நீங்கதான், இந்த ஊர் தொகுதிய பொம்பளைக்குன்னு ஒதுக்கிட்டாங்க. என்னால் தலைவர் தேர்தல்ல போட்டி போட முடியாது. நீ இருன்னு சொன்னீங்க! அப்பவும் நா சொன்னேன். எனக்கு வேண்டாங்க. இந்த வீட்டையும் உங்களையும் பார்த்துக்கற பொறுப்பே போதுமுனு சொன்னேன்? அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. நீ நில்லுன்னு சொன்ளிங்க!’

‘சரி நிக்க வெச்சு ஜெயிக்க வைச்சனே.. அப்புறம் எதுக்கு திடீர்னு மாறின?’

‘ஏங்க இந்த வீட்டு மருமக அப்படிங்கற ஸ்தானத்துல உங்களை மீறி எதனா பேசனனர்? செஞ்சனா? இல்லியே! ஆனா தேர்தல்ல இந்த கிராம மக்கள் ஓட்டுப் போட்டு நிக்க வச்சாங்க. அவங்க எந்த நம்பிக்கையில் ஓட்டுப் போட்டு நிக்க வைச்சி ஜெயிக்க வைச்சாங்களோ… அப்பவே நா இந்த ஊருக்கு தலைவியாயிட்டேன். அவங்க நம்பிக்கைய காப்பாத்தறது தானே ஒரு தலைவியோட கடமை! அததான் நா செய்யறேன்’.

‘அப்போ.. ஊரு விவகாரத்துல நா சொல்றத கேட்க மாட்டே?’

‘நீங்க என்ன நினைக்கறீங்கன்னு பஞ்சாயத்து கூட்டத்துல வந்து சொல்லுங்க. வார்டு மெம்பாங்கற முறையில் நீங்க சொல்றது சரின்னு பட்டா கட்டாயம் ஏத்துக்குடுவன்! அது சரியில்லன்னா ஸாரி… என்னால் முடியாது!’

‘அதுக்கென்ன அர்த்தம்? புருஷன் சொல்றத பொண்டாட்டி கேக்க கூடாதுன்னுதான அர்த்தம்?’

‘புருஷன் சொல்றத கேக்கற பொண்டாட்டியா வீட்டுல இருக்கறளே… அப்புறம் என்னா?’

‘ஊரு விவகாரத்துல?’

‘அங்க நா உங்க பொண்டாட்டி இல்ல. பஞ் சாயத்துத் தலைவி. ஊருக்கு நல்லது செய்யணும்னு நீங்க வார்டு மெம்பர் என்ற முறையிலோ, ஊர்க்குடி என்ற பேர்லயோ சொல்லுங்க. நா கட்டாயம் செய்யறன்! இப்பகூட உங்ககிட்ட நா ஒரு உதவி கேக்கறேன். செய்யுங்களேன்.’

‘என்ன உதவி!’

‘ஊர்க்குடி தண்ணி பிரச்சினையைத் தீர்க்க ஏதோ எங்களால முடிஞ் அளவுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிய கட்டிட்டோம். உங்களுக்குத்தான் செல்வாக்கு இருக்கே… எம்.எல்.ஏ., மந்திரிய பாத்து மோட்டார் வாங்கி பைப் கனெக்ஷன் குடுத்து தண்ணி பஞ்சத்த போக்க உதவி செய்யக் கூடாதா?’

‘ம் இத நீ பஞ்சாயத்து தலைவியா கேக்கறியா? இல்ல என் பொண்டாட்டியா கேக்கறியா?’

‘வீட்டுலதான கேக்கறேன். உங்க பெண்டாட்டியாத்தாள் கேக்கறேன்!’

‘அப்படீன்னா.. என்னோட பதில் இதுதான். நீ எனக்கு பொண்டாட்டி. எது ஊருக்குச் செய்யணும், எத செய்யக் கூடாதுன்னு எனக்கு நீ உத்தரவு போடாத… போ.. போயி வேலையைப் பாரு. குளிச்சுட்டு வரேன் டிபன் குடு. டவுனுக்குப் போகணும்!’

அவ்வளவுதான். அதற்கு மேல் என்ன பேசினாலும் அவனிடம் எடுபடாது என்று தெரிந்து கொண்டவளாய் எழுந்து சமையலறைக்குச் சென்று விட்டாள் சகுந்தலா!

பலராமன் சொன்னபடியே குளித்து விட்டு வந்தான். டிபன் சாப்பிட்டான். சகுந்தலா தாள் பரிமாறினாள். சலவை செய்து வந்த உடையை எடுத்து அணிந்து கொண்டாள்.

‘கார் உனக்கு வேணுமா?’

‘ம்… ஆர்.டி.ஓ., கலெக்டர பாக்க போகணும்.’

‘சரி நா பைக் எடுத்துட்டு போறன். பழனி எவ்ளோ உரம் கேட்டான்?’

‘இருவது மூட்டை’

ம் டவுனுக்கு போயி அனுப்பறேன். பில்ல கிளியர் பண்ணி அனுப்பு!’ ‘சரிங்க… சாயங்காலமா அனுப்பச் சொல்லுங்க!”

‘சரி…!” அந்த ஒற்றைச் சொல்லுடன் பைக்கில் கிளம்பிச் சென்றான்.

4. வீம்புக்கு ஒரு வேலை

ஓரு மனிதனுக்கு வீம்பு என்று ஒன்று வந்துவிட்டால் எதைச் செய்யமாட்டான என்பது அவனுக்கும் தெரியாது. அவனுடன் இருப்பவர்களுக்கும் தெரியாது!

அப்படித்தான் பலராமன் தன் மனைவியிடம் ஏற்பட்டுவிட்ட வீம்புத்தனத்தால் தான் என்ன செய்கிறோம் என்று உணராமல் டவுனுக்கு வந்தவன் நேராக எம்.எல்.ஏ.வைப் பார்க்கப் போனான்..

அப்போது எம்.எல்.ஏ. போனில் யாருட்டுனா பேசிக் கொண்டிருந்தார். எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். மெல்லியதாக ஏ.ஸி ஓடிக் கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் அவன் முகம் மலர்ந்தது.

‘சரி ஸார்… பங்ஷனுக்கு ஏற்பாடு பண்ணிடறேன். ஸார் செலவா? டோண்ட் ஒர்ரி, நம்ம நடுத்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் பலராமன் இருக்கார். இதோ இங்கதான் என் எதிரில இருக்கார். பேசறீங்களா? ஜஸ்ட் எ மினிட் ஸார்!?’

டெலிபோனை உடனே பலராமனிடம் கொடுத்து, நம்ம மிளிஸ்டர் பேசறார்… பேசுங்க!’ என்றார் எம்.எல்.ஏ.

“அண்ணே வணக்கம்ணே. எம்.எல்.ஏ, கிட்ட டீடெய்லா சொல்லி இருக்கீங்களா… சரிண்ணே… நா கேட்டுக்கறேன். ஃபங்ஷன்தானே… நான் செய்யறண்ணே! அதுவும் எங்க ஊர்லயா? ரொம்ப சந்தோசம் அண்ணே! கட்டாயம் ஏற்பாடு பண்றேன். தேதி மட்டும் எப்பன்னு சொல்லுங்கண்ணே… ரெடி பண்ணிடறேன். சரிண்ணே… நா… எம்.எல்.ஏ.கிட்ட பேசிக்கறேன். தேங்ஸ் அண்ணே!”

போன் துண்டிக்கப்பட்டது.

“என்ன ஸார்…. மந்திரி எதுவோ… பங்ஷன் வைக்கணும்னு சொன்னார். டீடெய்ல்ஸ் உங்ககிட்ட கேட்டுக்கச் சொன்னார். சொல்லுங்க ஸார்… என்ன பங்ஷன்? எப்படி நடத்தணும்?”

“என்னா பலராமன்.. என்ன போயி ஸார், மோர்னு கூப்புடற? டே.. வாடா.. போடான்னு சொன்னது போக இப்ப என்னா ஸார்?”

‘ஏம்பா… என்ன இருந்தாலும் நீ எம்.எல்.ஏ நா வெறும் ஆளு. பஞ்சாயத்து தலைவரா கூட இல்லாதவன்.’

‘ஏன்யா நீ தான பஞ்சாயத்து தலைவரா இருக்கே?’

‘அட நீ வேற ஒண்ணு, அந்த வயித்தெரிச்சல ஏன் கேக்குற? சரி அத வுடு. மந்திரி என்னவோ பங்ஷன் நடத்தணும்னு சொன்னாரே…. அது என்னா?

‘அதுவா? நம்ம வட்டாரத்துல எந்த பங்ஷன்லயும் இது வரைக்கும் மந்திரி கலந்துக்கல. அதான் உங்க ஊர்ல வெச்சுக்கலாம்னு சொன்னேன். என்ன விழா நடத்தலாம்? நீதான் ஐடியா குடேன்!”

‘ம்…..நா ஏற்கனவே எங்க ஊருக்கு குடி தண்ணீர் வசதி பண்ணிக் குடுங்கன்னு உங்களுக்கும் மந்திரிக்கும் மனு குடுத்தேன். இது வரைக்கும் எந்த ஆக்ஷனும் எடுக்கல். அதனால…’

‘அதனால?’

‘உங்க எம்.எல்.ஏ ஃபண்டுல பணம் ஒதுக்கி எங்க ஊருக்கு ஏற்கனவே மேநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியிருக்கோம். மோட்டார் வாங்கி சேரிக்கும் பைப் கனெக்ஷன் குடுத்து, குடி நண்ணீர் வழங்குற திறப்பு விழாவ நம்ம ஊர்ல வெச்சுக்கிட்டா என்ன?’

‘அடடே… பிரமாதம். உடனே இத பத்தி கலெக்டாகிட்ட பேசறேன். சாங்ஷன் வாங்கறேன். எஸ்டிமேட் போட்டுக்குடு. நீயே கான்ட்ராக்ட் எடு… ஆள் வெச்சி வேலைய பத்தே நாள்ல முடிக்கற. அடுத்த மாதம் 20ஆம் தேதி மந்திரியை வைச்சு திறப்பு விழாவுக்கு ஏற்பாடு பண்றேன். சரியா?’

‘சரிப்பா… நான் காண்ட்ராக்ட் எடுக்க முடியாது. லைசன்ஸ் இல்ல. அதனால என் ஆளுக்கு சிபாரிசு பண்ணி, கொட்டேஷன் குடுக்கச் சொல்றேன். எஸ்டிமேட் எவ்ளோ போடலாம்?’

`உன் காண்ட்ராக்ட் ப்ரண்டு கிட்ட சொல்லு. எஸ்டிமேட் சார்ஜ்விட 50 பர்சன்ட் அதிகமா போடச் சொல்லு. விழா செலவுக்கு உதவும் சரியா?’

‘நாளைக்கே எஸ்டிமேட் ரெடி பண்ணி டெண்டர் போட்டு குடுக்கச் சொல்றேன். நீ கலெக்டர பார்த்து சாங்ஷன் வாங்கு, சரி வரட்டுமா?’

‘எங்க போற? நீயும் என்கூடவா. இப்பவே அந்த மனுவ எடுத்துட்டு போயி கலெக்டர் கிட்ட பேசலாம். அப்புறம் நேரா காஸ்மாபாலிட்டன் கிளப்புக்கு போயி தமாஷா கொஞ்சநேரம் விளையாடிட்டு அங்கேயே சாப்புட்டு இராத்திரிக்கு போலாம்!’

‘சாரிடா.. எங்கிட்ட கார் இல்லடா!’

‘டேய் என் கார் இருக்கு- வா போகலாம்! ஆமாம் இப்ப மட்டும் டா போட்டு பேசற?”

‘எப்ப கிளப்புக்கு போலாம்னு சொன்னியோ… அப்பவே நீ எம்.எல்.ஏ. இல்ல ப்ரண்டு… அதான்!’


கார் பத்தே நிமிடத்தில் கலெக்டர் பங்களாவில் நின்றது. வெயிட்டிங் ஹாலில் சற்றே உட்கார்ந்திருந்தார்கள்.

ப்யூன் எம்.எல்.ஏவைப் பார்த்தவுடன் பதறி அடித்துக் கொண்டு கலெக்டர் அறைக்குள் நுழைந்தான். அடுத்த விநாடியே எம்.எல்.ஏ. மற்றும் பலராமனை உள்ளே அனுப்பி வைத்தான்!

“ஸார்! என்னோட தொகுதி நிதியில் நடுத்திட்டு கிராமத்துக்கு குடிதண்ணீர் வசதி செஞ்சு குடுக்கணும், தண்ணி தொட்டி இருக்கு. மோட்டார் போடணும். பைப் கனெக்ஷன் குடுக்கணும். அடுத்த மாசம் 20ஆம் தேதி மந்திரிய வச்சி திறப்புவிழா பண்ணனும், டென்டர் நாளைக்கு வந்துடும். அதுக்குண்டான பணத்த சாங்ஷன் பண்ணணும்,

‘என்னது நடுத்திட்டு கிராமத்துக்கா?’

‘ஆமாம்!”

‘மத்தியானம்தான் அந்த ஊரு பிரசிடென்ட் தலைவர் சகுந்தலா வந்து இதே காரணத்த சொல்லி பணம் ஒதுக்க முடியுமா? இல்ல நமக்கு நாமே திட்டம், தன்னிறைவு திட்டம் இப்படி எதனா இருந்தா பணம் ஒதுக்கி குடிதண்ணீர் வசதி பண்ணிக் குடுங்கள்னு மனுவும், அப்படி முடியலன்னா ஊர் ஏரியில இருக்கற முள்ளுவேலி மரத்த ஏலம் விட அனுமதியும் கேட்டுட்டு போயிருக்காங்க. நல்லதா போயிட்டது. பஞ் சாயத்துல பணம் இல்ல. உங்க தொகுதி நிதியில டெண்டர் கேக்கற பணம் ஒதுக்குறேன். சீக்கிரமா முடிங்க. நாலும் மினிஸ்டர்கிட்ட பேசறேன். அட..டா.. என்னா ஒற்றுமை அந்தம்மாவுக்கும், மிஸ்டர் பலராமனுக்கும்? கணவன், மனைவின்னா இப்படித்தான் இருக்கணும். ஒரே காரணம். ஆனா சிபாரிசு வெவ்வேற.. இருந்தாலும் நல்ல விஷயம்தான். டோன்ட் ஒர்ரி ஸார். நீங்க டெண்டர் குடுங்க. உடளே ஏற்பாடு பண்றேன்.’

அதற்குள் காபி வந்தது. காபியைக் குடித்துவிட்டு தேங்க்ஸ் சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.

வண்டி நேராக காஸ்மாபாலிடன் கிளப்புக்குப் போனது. இருவரும் இறங்கியவுடனே எம்.எல்.ஏ. டிரைவரிடம் சொன்னார்.

‘வண்டிய விட்டுட்டு நீ வீட்டுக்கு போயிடு, நாங்க அப்புறமா வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போயிடறோம்… ம்.. நாளைக்கு காலையில் 9 மணிக்கு ஒரு ஸ்கூல் ஃபங்ஷன் போகணும். நீ வீட்டுக்கு வந்துடு’.

‘சரி ஸார். இந்தாங்க சாவி. நான் வர்றேன்.’

டிரைவர் வெளியேறினதும் எம்.எல்.ஏ. நண்பனிடம் சொன்னார்.

‘டே… கொஞ்சம் சாப்புட்டு சீட்டாட்டத்துல் கலந்துக்கலாம். வாடா!’

‘இன்னிக்கும் ஒரு மணிக்குத்தான் வீட்டுக்கு போகணுமா? சரி.. வா!”

சொல்லிக் கொண்டே தீர்த்தம் சாப்பிடுவதற்கென்றே அமைந்திருந்த தனி இடம் நோக்கிச் சென்றனர்.

5. வேலையும் விவாதமும்.

சாமுவேல் மோர்ஸ் என்பவர் ஒரு சிறந்த ஓவியர். ஒருமுறை தான் வரைந்த ஒரு அற்புதமான, அழகான பெண் உருவத்தை அந்த ஊரின் புகழ் பெற்ற டாக்டரிடம் காட்டினார்.

ஓவியம் எப்படி இருக்கிறது.. சொல்லுங்கள். டாக்டர் கொஞ்ச நேரம் அந்த பெண் ஓவியத்தை உற்று உற்றுப் பார்த்தார். திடீரென்று பதறியவாறே கத்தினார்.

‘அய்..யய்.யோ இந்த அழகான பெண்ணுக்கு மார்பகத்தில் புற்றுநோய் இருக்கிறது. உடனடியாக எனது மருத்துவமனையில் சேர்தது விடுங்கள்!’

ஓவியர் உட்பட கேட்ட அத்தனை பேரும் அதிர்ந்து போனார்கள்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது எனில் அவரவர்க்கு அவரது தொழில், கவனம் என்றுதான் தம் முழுமனதையும் அதில் ஈடுபடுத்துவார்கள் இலட்சியவாதிகள்,

பலராமனுக்கு சேரியில் குடிதண்ணீர் குழாய் அமைத்து மந்திரியை வைத்து திறப்பு விழா நடத்த வேண்டும். அத்துடன் ஏதாவது ஒரு வாரியத்திற்குத் தலைவர் பதவியை மந்திரியின் சிபாரிசுடன் வாங்கிவிட வேண்டும். அல்லது குறைந்த பட்சம் டவுனிலுள்ள பெரிய கோயிலுக்கு அறங்காவலர் பதவியாவது வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மூச்சாகக் குடி தண்ணீர் பைப் போடும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டான்!

சகுந்தலாவும் இதை அறியாமல் தினமும் தாசில்தார், ஆர்.டி.ஓ என்று போனில் தம் மனுவுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா? அல்லது முள்வேலி மரங்களை ஏலம்விட அனுமதி கிடைத்ததா? என்று விசாரித்துக் கொண்டே இருந்தாள்!

திடீரென்று ஒருநாள் ஊரை அடுத்த சேரியில் தெருக்களில் பள்ளம் தோண்டுகிறார்கள். பைப்புகள் வந்து இறங்குகின்றன என்று செய்தி கேட்டது சகுந்தலாவுக்கு. உடனே சகுந்தலா சற்று விஷயம் தெரிந்த, படித்த, ஐந்தாவது வார்டு கவுன்சிலர் ரங்கனையும் அழைத்துக் கொண்டு சேரிக்குச் சென்றாள்!

‘தா..பா.. நிறுத்துங்க. எதுக்கு இங்க பள்ளம் கோண்டறிங்க?’

‘தலைவரம்மா.. குடி தண்ணீர் கெடைக்கணும்னு பைப் போடப் போறம்’.

‘யாரு இதுக்கு காண்ட்ராக்டர்?’

‘அதோ கார்ல வர்றாரு பாரும்மா… உங்க வீட்டுக்காரரோட அவருதான்…..’

பலராமனும் காண்ட்ராக்டரும் வந்து இறங்கினர். காண்ட்ராக்டர் பஞ்சாயத்து தலைவியைப் பார்த்தவுடனே வணக்கம்மா என்று சொன்னார்.

‘ம்.. வணக்கம். என்னது தண்ணி பைப்பா புதைக்கப் போறீங்க? நேத்திக்குக் கூட ஆர்.டி.ஓ. வைக் கேட்டேனே, எதுவும் சாக்ஷன் ஆகலன்னு சொன்னாரே!’

‘இதுக்கு நா பதில் சொல்றேன். நா ஏற்கனவே இந்த வேலையைச் செய்யச் சொல்லி மனு கொடுத்திருந்தேன். எம்.எல்.ஏ. தொகுதி நிதியிலிருந்து பணம் ஒதுக்கச் சொல்லி சாங்ஷன் வாங்கினேன். காண்ட்ராக்டர் வேலையைச் செய்யறார்!’

‘சரி ஊருக்கும்தான பைப் லைன் புதைக்கப் போறாங்க?’

‘என்னது… ஊருக்கா? ம் ..ம் ஊருக்கும்தான். மொதல்ல சேரியில பைப் புதைச்சுட்டு மோட்டார் வாங்கி கனெக்ஷன் குடுக்கணும். உடனே ஊருக்கும் பைப் லைன் குடுக்க ஆரம்பிச்சுடுவாங்க’.

‘ரொம்ப சந்தோசம். சீக்கிரமா சேரிய முடிச்சுட்டு ஊருக்கும் வேலைய ஆரம்பிச்சுடுங்க. ரெண்டையும் சேத்து திறப்பு விழாவ வச்சுக்கலாம்!’

‘ம்… அப்புறம் என்ன…நீ போ… நா பாத்துட்டு வரேன்!”

பலராமன் சொன்னவுடனேயே சகுந்தலா வார்டு உறுப்பினருடன் வீட்டுக்கு திரும்பும் முன் சொன்னாள்.

‘இன்னிக்காவது வீட்டுக்கு சீக்கிரமா வாங்க. வீட்டுல சாப்பாடு செஞ்சு வைக்கறேன். நானும் உங்களுக்காக சாப்புடாம காத்துக்கிட்டிருப்பேன். என்ன வரட்டுங்களா!’

சகுந்தலா அங்கிருந்து வெளியேறியவுடன் காண்ட்ராக்டர் சற்றே பதறியவாறே சொன்னார்:

‘என்னண்ணே அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க. காண்ட்ராக்ட் எனக்கு குடுத்தது சேரிக்கு மட்டும் தான். இப்ப ஊருக்கும் சேர்த்து போடணும்னா இன்னும் அஞ்சு லட்சம் சாங்ஷன் பண்ணாத்தான் முடியும்ணே. பாத்து மல்ல வுட்டுடப் போறீங்க? மொதல்லயே அம்பது பர்சன்ட் வேற ஒதுக்கிட்டீங்க!’

‘ஏம்பா உனக்கு காண்ட்ராக்ட் குடுத்தது எதுக்கு?’

‘சேரிக்கு பைப் லைன் பிக்ஸ் பண்ணி மோட்டார் போட்டு தண்ணி கனெக்ஷன் குடுக்க மட்டும் தான்!’

‘அத மட்டும் செஞ்சுட்டுப் போ!’

‘பின்ன அம்மா இப்படி சொல்றாங்களே?’

‘சொன்னா என்னய்யா?’

‘என்னாண்ணே சொல்றது பஞ்சாயத்து தலைவி. உங்க வீட்டுக்கார அம்மா!’

‘இருக்கட்டும்யா. வேற எதனா கேட்டா எனக்கு எதுவும் தெரியாது. எம்.எல்.ஏ. வையும் என்னையும் கேட்டுக்கச் சொன்னாங்கன்னு சொல்லிடு.மிச்சத்த நா பாத்துக்கறேன். நீ தைரியமா வேல செய்யா!’

‘சரிண்ணே உங்க தைரியத்துல நான் வேல் செய்யறேன். அம்மாவுக்குன்னு தனிப்பட்ட செல்வாக்கு கலெக்டர்கிட்ட இருக்கு. அப்புறம் என் பொழப்பு நாறிடும்.’

‘யோவ் கலெக்டர் பெரிசா? மந்திரி பெரிசா?”

‘மந்திரி சொன்னா கலெக்டர் கேட்பாரு. ஆனா இந்த கலெக்டர் அப்படி இல்லியே! சட்டம்தான் முக்கியம்னு சொல்லுவாரே!’

‘இருக்கட்டும்யா. எல்லாம் மந்திரி சொல்லிதான் நடக்குது’.

‘சரியண்ணே!’

‘சரி நீ கூட இருந்து வேலையைப் பாரு. நா வீட்டுக்கு போறன்’.

சொல்லிவிட்டு பலரமன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் மனதில் அடுத்த திட்டம் பற்றி அசை போடத் தொடங்கினான்! எல்லோரும் போடும் திட்டம். எல்லா காலத்திலயும் நடந்திடுமா என்ன? கடைசியில் விதி போடும் திட்டக்கணக்குதானே ஜெயிக்கும்.

6. முடியாது என்றால்

அடுத்த இருவது நாட்களுக்குள் சேரிக்கு பைப் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு விட்டது.

தண்ணீர் மோட்டார் புதியதாக வாங்கி நீர்த்தேக்கத் தொட்டி அருகே ஒரு சிறிய அறை கட்டி பொருத்தப்பட்டது. கிணற்றுக்கு பைப் கனெக்ஷன் கொடுக்கப்பட்டு தண்ணீர் மேல் நீர்த் தேக்கத் தொட்டியில் கொட்டி டெலிவரி பைப் வழியே தண்ணீர் குழாய்களுக்கு வருகிறதா என்று பரிசோதனையும் செய்யப்பட்டு விட்டது.

அப்போது கூட சருந்தலா கேட்டாள்.

‘சேரிப் பக்கம் தான் முடிஞ்சி போயிடிச்சே.. ஊர்ல வேலைய ஆரம்பிக்கறது?’

பலராமன்தான் சொன்னாள்.

‘ம் உடனே வேலைய ஆரம்பிக்கணும். பணம் போதல. டெண்டர் வேற போடச் சொல்லி இருக்கோம். பணம் வந்ததும் வேலைய ஆரம்பிக்க வேண்டியதுதான்’

அப்போதும் பொறுமையாக இருந்தாள் சகுந்தலா! ஆனால் அடுத்த இரண்டாவது நாள் அமைச்சர் மேனிலை நீர்த் தேக்கத் தொட்டியை திறக்க நடுத்திட்டு வருகிறார் என்று பேப்பரிலும் போஸ்டரிலும் செய்திகள் வந்தபோது திடுக்கிட்டுப் போனாள்!

அவளது கணவன் பலராமன் அந்த ஏற்பாடுகளை ஓடி ஆடி கவனித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதற்கு பெரும் முயற்சி செய்தாள். இரண்டு நாட்கள் வீட்டிற்கே வரவில்லை. மூன்றாம் நாள் காலையில் வேக வேகமாகக் குளித்துவிட்டு கார் எடுக்கப் போனபோதுதான் கார் சாவி எங்கே இருக்கிறது என்று சகுந்தலாவைக் கேட்டான்.

‘எங்கிட்டதான் இருக்கு. ஒரு விஷயம் பேசணும்’.

‘அய் யய் யோ எனக்கு டைம் இல்ல. திறப்பு விழாவுக்கு இன்னும் மூணு நாள்தான் இருக்கு, நிறைய விஷயங்கள் கவனிக்கனும். எம்.எல்.ஏ வேற எதிர்பார்த்துகிட்டிருப்பார். சீக்கிரம். எதுவா இருந்தாலும் ராத்திரிக்கு வரேன். பேசலாமே?’

‘நானும் மூணு ராத்திரியா காத்துக்கிட்டுத்தான் இருந்தேன். உங்கள புடிக்க முடியலையே! இப்ப என் சந்தேகத்த தெளிவுபடுத்திட்டு நீங்க போலாம்!’

‘என்ன? என்ன சந்தேகம்?’

‘ஆமாம் என் கிட்ட என்ன சொன்னீங்க?’

‘ம் சொன்னேன் சொரக்காய்க்கு உப்பில்லன்னு!’

‘என்ன, ஜோக்கா? அத ரசிக்கிற நேரம் இப்ப இல்ல. என்கிட்ட எதுவுமே சொல்லாம நீங்க பாட்டுக்கினு எம்.எல்.ஏ. தொகுதி நிதி வாங்குனீங்க. சேரிக்கு தண்ணீர் குழாய் பதிச்சீங்க, மோட்டார் வாங்கி தண்ணீர் தொட்டியோட கனெக்ஷன் குடுத்தீங்க, ஒரு பஞ்சாயத்து தலைவர்ன்ற முறையில எங்கிட்ட எதுவும் பேசல?’

‘எதுக்கு சொல்லணும்- என் தனிப்பட்ட செல்வாக்கு தொகுதி நிதிய வாங்கினேன். சேரிக்கு குடி தண்ணி வசதி செஞ்சு குடுக்கறேன். மந்திரியும் திறப்பு விழாவுக்கு வர்றார். பஞ்சாயத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல!’

‘அந்த சேரியும் இந்த பஞ்சாயத்துலதான வருது!’

‘இருக்கலாம். அதுக்காக எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லி அனுமதி வாங்கணும்னு அவசியமில்ல’

‘சரி நல்ல காரியம்னு விட்டுட்டேன். ஊருக்கும் பைப் லைன் புதைச்சி தர்றதா வாக்கு குடுத்தீங்களே.. அத செய்யாம சேரிக்குன்னு மட்டும் குடிதண்ணி வசதி செஞ்சா போதுமா?’

‘சொன்னந்தான். ஆனா பணம் போதல. அடுத்த வருஷம் தொகுதி நிதிய கேட்டு வாங்கி செய்யலாம்!’

‘அப்போ கட்டாயம் சேரிக்கு மட்டும்தான் குடிதண்ணீர் வசதி செய்யப் போறீங்க.. ஊருக்கு இல்ல?’

‘அப்படித்தான் வெச்சுக்கோயேன்!’

‘இதுக்கு நா தகராறு பண்ணா?’

‘ஹ் ஹ் ஹா தகராறா? நீயா? எம்.எல்.ஏ. வர்றார். அமைச்சர் வர்றார். திறப்பு விழா நடக்கத்தான் போவுது. நீயும் அப்படி ஓரமா வந்து பாத்துட்டு போ! உன்னால் வேற எதுவும் செய்ய முடியாது! ஆஃப்டர் ஆல் நீ ஒரு பொம்பள. இந்த தலைவர் பதவி, நா உளக்கு போட்ட பிச்ச! வண்டி சாவிய குடு. நீ போ தின்னுட்டு தூங்குற வேலையை பாரு!’

சொல்லிக் கொண்டே அவள் கையிலிருந்த கார் சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு விசிலடித்துக் கொண்டே காரை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு போயேவிட்டான். அடுத்த இரண்டு நாட்களிலும் அவள் வீட்டை விட்டு எங்கும் போகவில்லை.

மூன்றாவது நாளின் காலையில்தான் சகுந்தலா எல்லா வார்டு மெம்பர்களையும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரச் சொன்னாள்.

‘இப்ப எதுக்காக உங்கள் அவசரமா வரச் சொன்னேன் தெரியுமா? ம் இன்னிக்கு சாயங்காலம் மந்திரி வர்றார்.’

‘குடி தண்ணீர் திறப்பு விழாவுக்கு அதான?’

‘அதான் வார்டு மெம்பர் மிஸ்டர் பலராமன் தன்னோட சொந்த செல்வாக்க பயன்படுத்தி எம்.எல்.ஏ தொகுதி நிதியிலிருந்து பணம் வாங்கி சேரிக்கு மட்டும் பைப் கனெக்ஷன் குடுத்தார். அப்பவே நா கேட்டேன். ஊருக்கும் சேத்து செய்யுங்க. நாங்களும் உதவி பண்றோம்னு. சரி பணம் இருக்கு. ஊருக்கும் சேர்த்து கனெக்ஷன் கொடுத்து குடி தண்ணீர் திறப்பு விழாவ மந்திரிய வச்சி நடத்திடுவோம்னு சொன்னார். நானும் நம்பிட்டேன். இப்பத்தான் தெரியுது அவரு செஞ் சது சேரிக்கு மட்டும்தான்னு. அங்க வசதி செஞ் சதுக்கு நாம வருத்தப்படல. குடிதண்ணீர்ங்கறது எல்லாருக்கும் உண்டான பிரச்சினை. அதனால் ஒண்ணா செய்யலாம்னு நினைச்சோம். இந்த விஷயத்துல இன்னிக்கு நா எடுக்கப் போற முடிவுக்கு நீங்க எல்லோரும் ஒத்துழைக்கணும். ஊர் மக்களையும் நமக்கு உதவியா இருக்கச் சொல்லணும். எப்படி மந்திரி வந்து குடிதண்ணீர் திறப்பு விழாவ நடத்தறார்னு பாக்கலாம்? நியாயம் கேப்போம். அதோட இன்னொரு சந்தோஷமான சமாச்சாரம், நேத்திக்குத்தான் பி.டபிள்யூ.டி மற்றும் கலெக்டர்கிட்ட இருந்து முள்வேலி மரத்த ஏலம்விட அனுமதி வந்திருக்கு. அதனால உடனடியா ஏலம் விடணும், கிடைக்கற பணத்த வெச்சி ஊருக்கும் குழாய் பதிப்போம். என்ன சொல்றீங்க?’

‘கரீட்டும்மா. பஞ்சாயத்துன்னா என்னவோ கிள்ளுக்கீரையா நினைச்சுக்கிட்டிருக்கிறார் உங்க வீட்டுக்காரர்.’

‘வீட்டுக்காரர். உறவு இங்கில்லை. அது வீட்டுலதான்!’

‘சரி தலைவரம்மா. நீ என்னா சொல்றியோ அதுபடியே செய்யறோம்’.

‘ஆறு மணிக்கு மந்திரி வர்றதா சொல்றாங்க. நாலு மணிக்கே இங்க பஞ்சாயத்து ரூமுக்கு வந்துடுங்க, முக்கியமா ஊரு ஜனங்க கொஞ்ச பேரையும் இங்க வந்துடச் சொல்லுங்க. சரியா? இப்ப கலைஞ்சி போலாம்!’


சரியாக நாலு மணிக்கே சருந்தலா, வார்டு மெம்பர்கள் மற்றும் ஊர் மக்களில் பலர் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்து விட்டார்கள்.

சகுந்தலா ஒரு பெரிய பூட்டு கொண்டு வந்து மோட்டார் பம்ப் ரூம் கதவைப் பூட்டி விட்டாள்.

‘என்ன.. எதுக்குன்னு தெரியாம வார்டுங்க கூட கொஞ்சம் முழிச்சாங்க!’

அப்போது பார்த்து சில அதிகாரிகளுடன் பலராமன் அங்கே வந்தான். பம்ப் ரூமில் பெரிய பூட்டு தொங்கியதைப் பார்த்தான். தான் பூட்டிய இன்னொரு பூட்டும் இருந்தது.

‘ஏய். யார்றாது மேல்பூட்டு போட்டது?’

‘ம் நாதான் போட்டேன்’

‘மந்திரி வாற நேரமாச்சி. சாவிய குடு. திறக்கணும். பூமால போடணும்!’

‘தரமாட்டேன்.’

‘ஏன்?’

‘சேரிக்கு மட்டும் பைப் கனெக்ஷன் குடுத்தா ஊரு என்ன பாவம் பண்ணிச்சி?’ தாசில்தார் சற்று முன்பு வந்தார்.

‘அம்மா நீங்க பஞ்சாயத்து தலைவர். இத நீங்களே செஞ்சிருக்கணும். அவரு செஞ்சிருக்கார். சாவிய குடுங்க.’

‘ஸார் நீங்க அரசாங்க ஊழியர். தயவு செய்து நா சொல்றத கேளுங்க. மேனிலைத் தொட்டிய கட்டுனது யார்?’

‘நீங்க தான்!’

‘நா இல்ல பஞ்சாயத்து தாள்! எத்தனை முறை சேரிக்கும் ஊருக்கும் சேர்த்து பைப் கனெக்ஷன் குடுக்கணும்னு உங்கிட்ட, கலெக்டர்கிட்ட, டி.ஆர்.ஓ கிட்ட சேர்மன் கிட்ட கேட்டேன். எம்.எல்.ஏ. கிட்ட கூட கேட்டேன். அப்பல்லாம் பணம் இல்லைன்னு சொல்லிட்டு இப்ப மட்டும் எப்படி வந்தது? சரி செய்யறதுதான் செஞ்சிங்க. ஊருக்கும் செர்த்து செஞ்சிருந்தா இன்னேரம் நாங்களும் இந்த விழாவ பெரிசா நடத்தி இருக்கலாம்ல? அத
விட்டுட்டு சேரிக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம்னு சொன்னா எப்படிங்க? தெளிவா சொல்றள். சேரிக்கு நாங்க எதிரி இல்ல. தொட்டிய கட்டினது பஞ்சாயத்து. ஊருக்கும் சேர்த்து பைப் கனெக்ஷன் குடுத்துட்டு அப்புறமா திறப்பு விழாவ நடத்திக்கலாம். இதுக்கு மேல என்ன. ஸாரி.. எங்கள கட்டாயப்படுத்த முடியாது. கலகம் பொறந்தாதான் நியாயம் பொறக்கும்னா.. எங்கள கலகக்காரர்கள்னு நிளைச்சி அரஸ்ட் பண்ணுங்க! இதே விழாவ அடுத்த மாசம் நடத்தறோம். ஊருக்கும் சேரிக்கும் சேர்த்து குடி தண்ணீர் வசதி பண்றோம். கட்டாயமா அழைக்கறோம். வாங்க! இப்ப நீங்க போகலாம்.’

‘என்ன ஸார்.. பொட்டச்சி ஒளர்றா… அதுக்குப் போயி யோசனை பண்றீங்க! டேய்… அந்த கல்ல எடுத்து பூட்டை உடையுங்கடா.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.’ அவ்வளவுதான்- தலைவியைத் தொடர்ந்து வார்டு, ஊர்மக்கள்னு அங்க ஒண்ணா திரண்டு உக்காந்துட்டாங்க.

`ஸார் போலீஸ் கூப்புடுங்க’.

ஸாரி ஸார். அவங்க சொல்றதலயும் நியாயம் இருக்கு. இது ஊர் பஞ்சாயத்து எடுக்குற முடிவு- ஓரளவுக்குத்தான் தலையிட முடியும். வேற மாதிரி செஞ்சிங்கன்னா, அடி, தடி, கலவரம்னு போயிடும். வேணாம் ஸார். ஒண்ணு செய்யுங்க. நீங்க மந்திரிக்கும் எம்.எல்.ஏ வுக்கும் போன் போட்டு பேசுங்க. மந்திரி என்ன சொல்றார்னு கேட்டு செய்யலாம்.’

அவ்வளவுதான் பலராமன் உடளே எம்.எல். ஏவைத் தொடர்பு கொண்டு பேசினான். சற்று நேரத்தில் மந்திரியுடனும் பேசினான். சில மணித்துளிகள் பேச்சு நீண்டது.

கடைசியில் ‘சரி ஸார்!’ என்று முடித்துக் கொண்டான்.

‘ஸார் ஃபங்ஷன கேன்சல் பண்ணச் சொல்லிவிட்டார். விஷயம் ஏற்கனவே மந்திரிக்கு போயிருக்கு, பரவாயில்ல விட்டுடுங்க!’

தொங்கிய தலையுடன் பலராமனும் தாசில்தாரும் சென்றனர்.

7. ஒன்றை நினைத்து

சிந்திப்பதானால் நிதானத்தோடு சிந்திக்க வேண்டும்! சகுந்தலா நிதானமாக சிந்தித்தாள்.

செயல்படும்போது உறுதியோடு செயல் பட வேண்டும். விளைவு: எதிர்விளைவு பற்றி சிந்தித்து உறுதியோடுதான் செயல்பட்டாள்.!

எதிர்ப்பதானால் திடமாக எதிர் கொள்ள வேண்டும். திடமாகவே எதிர்த்தாள். தாசில்தார் மட்டுமல்ல அவள் புருஷனே ஆச்சர்யப்படும் படி எதிர்த்தாள். சகுந்தலாவுக்குள் இப்படியொரு நெஞ்சுரமா? இவள் யார் அடையாளம் கொண்டவளாக இருக்கும்? வீட்டினுள் என் நலனைக் கவனிக்கிறாள். எதச் சொன்னாலும் எதிர்த்துச் சொல்லாமல் எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாள். அவள் கலையாக இருக்கிறாள். ரசித்தேன். கதையாக இருக்கிறாள்…. படித்தேன். காலியமாக இருக்கிறாள்.. ரசித்தேன்….. மனைவியாக இருக்கிறாள் மகிழ்ந்தேன்.

ஆனால் பஞ்சாயத்துக் தலைவி என்று வந்துவிட்டால் அவளுக்கு எப்படி ரௌத்திரம் வந்து விடுகிறது? எத்தனை முறை பஞ்சாயத்துக் கூட்டத்தில் என் பெயர் சொல்லி பேசினாளே? ஆனால் வீட்டில் எவ்வளவு நளினம், அன்பு, இன்பம் அத்தனையும் மொத்தமாகக் காட்டி விடுகிறாளே.. அவளை நாந்தான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ?

ஒருகணம் இப்படி சிந்தித்தாலும் தான் ஒரு ஆண் என்ற நினைப்பு வந்த போது அவனுக்குள் சர் ரென்று தலைக்கனம் ஏறி விடுகிறது.

விழா நடத்த முடியாமல் போனதால் அவனுக்குள் ஆத்திரம் தலைக்கேறி விட்டது. எம்.எல்.ஏ வும் மந்திரியும் கூட அவள் செய்தது சரி என்றும், இன்னும் பணம் ஒதுக்கச் சொல்லி, ஊருக்கும் செர்த்து செய்யாதது பலராமன் தவறு தான் என்றும் சகுந்தலாவுக்கு ஆதரவாகப் பேசியதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை!

அமைச்சர் சென்ற பிறகு எம்.எல்.ஏ வுடன் நேராக கிளப்புக்குச் சென்றான் பலராமன். எப்போதுமே அளவோடு குடிப்பவன்.. அன்றைய தினம் வயிறுமுட்ட குடித்தாள். என்னென்னவோ உளறினான். அவற்றில் வெளிப்பட்ட திட்டுக்களில் பெரும்பாலனவைகள் அவள் மனைவி சகுந்தலாவைப் பற்றித்தான்!

எம்.எல்.ஏ கூட சொல்லிப் பார்த்தார். ம்….. ஹூம் கேட்க அவன் மனது அவன் வசம் இல்லை.

அன்று இரவு அங்கேயே படுத்துறங்கிவிட்டான்! இரண்டு நாட்கள் அந்தக் கிராமத்திற்கு அவன் வரவே இல்லை. எத்தனையோ முறை சகுந்தலாவிடம் போன் வந்தாலும் வேண்டுமென்றே கத்திரித்து விட்டான்.

மூன்றாம் நாள் ஊருக்குள் சென்ற போதுதான் தெரிந்தது. முள்வேலி ஏலம் விடப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டே தண்ணீர் பைப்புகள் வாங்கப்பட்டன. தெருவுக்கு ஆறு ஆட்கள் பைப் புதைக்க பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்தவுடன் கோவம் இன்னும் தலைக்கேறியது. வீட்டுக்குப் போனவன் குளித்தாள். சாப்பிட்டான். சகுந்தலா உணவைப் பரிமாறிக் கொண்டே பேசினாள். ஆனால் எந்த பதிலையும் சொல்லாமல் இரண்டு செட் துணிகளை எடுத்து ஒரு சின்ன பையில் போட்டான். சமையல்காரியிடம்

‘நா வீட்டுக் வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். சொல்லிடு,’

சொல்லிக் கொண்டே காரில் ஏறிப் பறந்தான் பலராமன். சகுந்தலா ஒரு கணம் ஆடிப் போனாள்.

‘என்ன இது வேலைக்காரியிடம் சொன்ன செய்தியை குத்துக்கல்லாட்டம் வீட்டுக்காரியாக நா இருக்கறேன். எங்கிட்ட சொல்லிட்டுப் போகக் கூடாதா?’

அதற்கும் பதில் இல்லாமல் கார் தெருவைக் கடந்து சென்று விட்டது.


அன்று இரவு அவளுக்கு சிவராத்திரியானது. அதற்காக கண்களைக் கசக்கிக் கொண்டு அழவில்லை. யோசித்தாள். யோசித்தாள். தீர்க்கமாக யோசித்தாள். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போன்று விடியற்காலையில் தூங்கியும் போனாள்.

ஒரே வாரத்தில் கிராமத்தின் அத்தனை தெருக்களிலும் தண்ணீர் பைப் போடப்பட்டது.

ஊர்ஜனங்கள், சேரி ஜனங்கள் என்று அனைவரையும் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வரவழைத்தாள்.

ஊர்ல, பக்கத்து சேரி… தப்பு..தப்பு.. இனிமே நா மட்டுமல்ல யாருமே அப்படி சொல்லக்கூடாது. இது ஊருன்னா.. அத சிற்றூர்னு சொல்லணும். இனிமே எந்தத் திட்டம் செயல்படுத்தணும்னாலும் ரெண்டும் சேர்ந்துதான் செயல்படுத்தனும். இனிமே யார் தலைவரா வந்தாலும் அப்படித்தான் செய்ய வைக்கணும். இப்ப நம்ம ஊர்ல தண்ணி பைப் கனெக்ஷன் எல்லாத் தெருவுக்கும் போட்டாச்சி. மோட்டார் கனெக்ஷன் குடுத்து தண்ணி மேல் தொட்டிக்கு ஏத்தியாச்சி, இதுக்கு திறப்புவிழான்னு ஐயாயிரம், பத்தாயிரம் செலவு பண்ணாம், அரசியல்வாதிகள், அதிகாரிகள்னு நேரத்த விணாக்காம நாமே நிறப்பு விழாவ நடத்திடலாம். டெலிவரி பைப் கேட் வால்வ திறந்து குடிதண்ணீர் குழாய்களுக்கு வரவழைக்க நம்ம சிற்றூர் வார்டு கவுன்சிலர் பெரியவர் நாகப்பன் அவர்களை இங்கே அன்போடு அழைக்கிறேன். அவரே இந்த திறப்பு விழாவ நடத்திக் கொடுக்கணும்னு உங்க எல்லார் சார்பாகவும் கேட்டுக்கறேன். ஐயா வாங்க!’

எல்லோரும் கை தட்ட பெரியவர் நாகப்பன் வந்து கேட் வால்வைத் திறந்து வைத்து தண்ணீர் பைப்பில் வரச் செய்தார்.

மன நிறைவோடு அனைவரும் கலைந்து சென்றார்கள். தெருக்களில் எல்லாம் பெண்கள் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் மகிழ்ச்சியாக நின்றும், பேசியும், சிரித்தும் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.

சகுந்தலாவுக்கு ஒரு பக்கம் மனநிறைவு இருந்தாலும் மறுபக்கம் தம் குடும்ப வாழ்வு என்ற கூண்டு கலைந்து விடுமே என்ற பதற்றமும் இருந்து அவளை அலைக்கழித்தது.

சரியாக ஐந்தாம் நாள் பகலில் ஒரு பதிவுத் தபால் சகுந்தலா பெயருக்கு வந்ததுமே சற்றே ஆடிப் போய்விட்டாள்.

சற்றே பதற்றமடைந்திருந்தாலும் அதை சமையல்காரி பார்வதியிடம் காட்டிக் கொள்ளாமல் தபாலை கையெழுத்துப் போட்டு வாங்கினாள்.

அதை எடுத்துக் கொண்டு சாமி அறைக்கு முன்பு நின்று படித்தாள்.

படிக்கப் படிக்க அவள் முகம் வெளிறியது. படித்து முடித்ததும் அப்படியே கண் மூடி மௌனத்தில் ஆழ்ந்து அமர்ந்தாள். சாமி அறையில் உட்கார்ந்தவள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.

பின்பு தபாலை பூஜையறையில் வைத்து விட்டு எதையுமே காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போலவே

தனது வீட்டு வேலைகளை பார்வதிக்குத் துணையாக செய்து கொண்டிருந்தாள். பார்வதிக்கும் என்னவோ நடந்து கொண்டிருக்கிறது இந்த வீட்டில் என்ற அச்சம் நிலவியதால் சகுந்தலாவை அடிக்கடி பார்த்துப் பார்த்து கேள்வி கேட்பது போல பாவனை காட்டினாளே தவிர என்ன ஏது என்று வாய்விட்டுக் கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. காரணம் அவளுக்கு சொல்லக் கூடிய விஷயமாக இருந்தால் கட்டாயம் அம்மா சொல்லி இருப்பாள் என்பது அவளுக்கு நன்கு தெரியும்!

இரண்டொரு முறை பஞ்சாயத்து வார்டு மெம்பர்களை வரவழைத்துப் பேசினாள். அவர்களும் என்னவோ சொன்னார்கள். வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் என்றார்கள். ம்ஹூம் எதுவும் மனத்தில் பதிவதாக இல்லை.


சரியாக ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்தான் பலராமன். அவன் வந்து குளித்துவிட்டு சாப்பிடும்வரை சகுந்தலாவும் எதுவும் பேசவில்லை. அவன் ஏ.ஸியைப் போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தான். மெல்ல கதவைத் திறந்து கொண்டு சகுந்தலா உள்ளே வந்தாள்.

என்ன என்பது போல பார்த்தான்.

‘எம்..எம்.. பேர்ல கோவமா? கோவம் அதிகமாச்சினா என்ன ரெண்டு அடி அடிச்சிடுங்க. ஆனா வாழ்க்கையில அடிக்காதீங்க?’

அவனது கால்களை தன்மடி மீது தூக்கி வைத்து அழுத்திக் கொடுத்தாள். இருந்தாலும் வீம்பு குறையாமல் சொன்னான்.

‘விவாகரத்து நோட்டீஸ் வந்தத தான சொல்ற?’

‘அத பத்தி நா கவலையே படல!’

‘பின்ன?’

‘நீங்க என்ன விட்டு தூரமா விலகி, விலகி போறீங்க. நா உங்க மனைவியா இருக்கணும்னு ஆசப்படறேன்’.

‘அப்படி இருக்கணும்னு ஆசப்பட்டா நீ என்ன செஞ்சிருக்கணும்?’

‘செஞ்சுட்டேளே.. ‘ இந்தாங்க ஜெராக்ஸ் காப்பி! அதை வாங்கியவுடன் படித்துப் பார்த்தான்.

ஒரு கணம் விக்கித்து விட்டான். ‘நீயா?’

ஆமாம்.. பஞ்சாயத்து பதவியை தலைவர் ராஜினாமா செஞ்சுட்டேன். சம்பந்தப்பட்டவங்களுக்கு எல்லாம் தபால் அனுப்பிட்டேன்’.

‘இன்னும் மூணு வருஷ பதவிக்காலம் இருக்கே?’

‘ஆனா முப்பது வருஷ வாழ்க்கைக் காலம் இருக்கே! பஞ்சாயத்துத் தலைவர் பதவி மொத்தமே ஐந்து வருஷம்தான். ஆனா வாழ்க்கை இன்னும் முப்பது வருஷமோ அம்பது வருஷமோ…எது முக்கியம்? பஞ்சாயத்துக்கு தலைவர் பதவிக்கு நா இல்லேன்ன வேற யார் வந்தாலும் செய்வாங்க. ஆனா எனக்கு கிடைச்ச வாழ்க்கை.. யாருக்காகவும் விட்டுத்தர முடியாதே! என்னோட குடும்ப வாழ்க்கையா.. பஞ்சாயத்து தலைவர் பதவியா எது முக்கியம்னு நினைச்சேன். நல்லா தீர்க்கமா யோசிச்சேன். தலைவர் பதவிய ராஜினாமா செஞ்சுட்டேன். எனக்கு என் புருஷன் என் குடும்பம்தான் முக்கியம்!”

கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு அவன் கால்மேல் விழுந்தது.

திடுக்கிட்டு எழுந்தவன் ஒரு கணம் நிலைகுலைந்து போனான். என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே அவளைக் கட்டிப் பிடித்தான்.

“ஸாரி சக்கு ஸாரி. உன்ன புரிஞ்சுக்காம நோகடிச்சுட்டேன். என்ன மன்னிச்சுடு’

சொல்லிக் கொண்டு அவள் அன்புப் பிடியை இன்னும் இறுக்கினான்.

ஆலிங்கன சுகத்துடனே மேலும் சொன்னான்.

‘சக்கு ராஜினாமா வேண்டாம். நானே போயி கலெக்டர்கிட்ட பேசறேன். இன்னும் மூணுவருசத்துக்கு நீயே தலைவியா இரு’.

வேண்டாங்க ப்ளீஸ். ஒரு முறை நீங்க சொல்லித்தாள் பதவியில இருந்தேன். அதுக்கு விலையா என் குடும்ப வாழ்க்கையில் பலன இழந்துட்டேன். இனிமேலும் எனக்கு அந்த நெருக்கடி வேண்டாம். என்ன மன்னிச்சுடுங்க. அதோட நாளைக்கு டவுன்ல ஒரு நல்ல லேடி டாக்டர பாக்கணும். என்ன அழைச்சுக்கிட்டு போங்க!’

‘ஏன் என்ன செய்யுது சக்கு?’

‘என்னவோ தெரில மூணு நாளா உடம்பு ரொம்பவும் களைப்பா இருக்கு. தூக்கம் தூக்கமாவே வருது. சாப்பிடப் பிடிக்கல. அதாள் டாக்டர பாக்கணும்’.

பலராமனுக்கு ஏதோ பொறி தட்டி இருக்க வேண்டும். சகுந்தலாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டே தூங்கிப் போனான்.


மறுநாள் லேடிடாக்டர் உறுதிப்படுத்திச் சொல்லி விட்டார். ஆமாம் அவர்களது அன்பின் அடையாளமாக ஒரு வாரிசு வளருகிறது என்று.

அவர்களது மனப்பறவை வானில் வட்டமிடத் தொடங்கியது. மளம் செய்த சோதனை என்ன? மனம் செய்த மாயம் என்ன? மனம் செய்த செயலும் என்ன? மளம் செய்த பக்தி என்ன? மளம் குதித்த குதிப்பு என்ன? அந்த மளமே அவர்களது வாழ்க்கையின் பாதையோரப் பூக்களாகப் பரிணமித்தது. ஒன்றை நினைத்தது. ஒன்றை மறந்தது. ஒன்றே நிலைத்தது. அவர்களது நெஞ்சக் கூட்டில்! அதுதான் மழலைச் செல்வம்.

– அமுதசுரபி, ஊக்கப் பரிசு ரூ.5,000 பெறும் குறுநாவல், நவம்பர் 2017

Print Friendly, PDF & Email

1 thought on “ஒன்றை நினைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *