குட்டிப் பிசாசு 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 26,796 
 

Ayiram Sontham Nammai Thedi Varum. Aanaal Thedinalum Kidaikatha Orey Sontham Nalla ‘NANBARGAL’ I am very lucky for your ‘friendship’ Kutty Pisasu : 13/8/2011/ 10/34 Pm.

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும், மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே… அச்சம் கலைந்தேன், ஆசையினை நீ அணைத்தாய்! ஆடை கலைந்தேன். வெட்கத்தை நீ அணைத்தாய்! கண்ட திருக்கோலம் கனவாக மறைத்தாலும்… கடைசியிலே அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி… உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்.

பழனிச்சாமி மிதமான போதையில் வீட்டில் படுக்கை மீது கிடந்தான். செல்போனிலிருந்து இரு காதுகளுக்கும் ஹெட்போன் ஒயர் சென்றிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அரவிந்தசாமி கவிதை படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் ‘பீப் பீப், பீப் பீப், எஸ்.எம்.எஸ்.’ என்று குழந்தையின் குரல் ஒன்று சப்தமாய் அவன் காதில் கவிதைக்கு இடையே நுழைந்தது. சாமத்துல நிம்மதியா ஒரு பாட்டுக் கேக்க விடறானுகளா இந்த கம்பெனிக்காரனுக.. Only for youம்பானுக! எனக்கு மட்டும்தானாமா! மத்தவிங்களுக்கு கிடையாதாமா! 72 ரூவாய்க்கி ரீ சார்ஜ் போட்டுட்டோம்னா 72 ரூவாய்க்கிம் கத்திக்கலாம். Only for you. இன்னிக்கு மட்டும்தான் இந்த ஆப்பர்ம்பாங்க! சலிப்பாய் ஆடியோ பிளேயரை விட்டு வெளிவந்து எஸ்.எம்.எஸ்.ஸைத் திறந்து படித்தான் பழனிச்சாமி!

வந்தது பார் கடுப்பு. அடக் கருமம் பிடிச்சவளே! என்னோட நட்பு கிடைச்சது உனக்கு லக்காடி? என்ன நினைப்புல சாமத்துல எனக்கு மெசேஜ் விட்டே! மப்பும் கொறஞ்சு போச்சு! கடையும் சாத்தியிருப்பானுக! புளியமரம் கெழடு தட்டிப் போனாலும் புளிப்பு மட்டும் குறையாதாமாங்கறாப்டி. வயசு 27 ஆயிட்டாலும் உன்னோட லொள்ளுக் குசும்பு மட்டும் போகவே இல்லடி பிசாசு! பாட்டுக் கேட்கிற மூடும் போச்சென செல்போனை அணைத்து டேபிளில் வைத்துவிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து தலையணையைக் கட்டிக் கொண்டான்.

பத்து நாட்களுக்கும் முன்பாக மதிய நேரத்தில், “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். உன்னை விரும்பினேன் உயிரே” என்று இவன் செல்போன் பாடி அழைத்தது. எடுத்தவன் மனுஷ்ய புத்திரன் ஸ்டைலில் “ஹல்லோவ்.. சொல்லுங்க..” என்று இழுத்தாற்போல் கேட்டான். “ஓ! என் நெம்பர் கூடத் தெரியலையா!” என்று கீதாதான் பேசினாள் நீண்ட காலம் கழித்து! “சொல்லுடி” என்றான் இவன். இனி எத்தனை காலம் பேசாமல் இருந்தோம் என்பதை அவளே சொல் வாள் என்று நினைத்தான். அப் படியேதான் சொன்னாள், இரண்டரை வருடம் என்று! “இது என்ன புது நெம்பராடி?” என்றதற்கு, “இதுதான் எப்பவும் இருக்கிறது. நிஜம்மா குட்டிப்பிசாசுன்னு என் பேர் வரலை! ” என்றாள். “ஆனா நீங்க பேச மாட்டிங்க. கட் பண்ணிடுவீங்கன்னு நினைச்சுட்டேதான் பண்ணினேன்” என்றாள்.

“நான் ஏன்டி கட் பண்ணுறேன். அதும் நீ கூப்பிட்டு! ஆமாம், நமக்குள்ள என்ன சண்டையின்னு இத்தனை நாள் பேசாமல் இருந்தே!”

“என்ன சண்டையின்னே தெரியலை?”

“எனக்குத் தெரியும். . நான் புத்தகத்துல எழுதிட் டேன்.”

“புத்தகத்துல என்னைப் பத்தி முழுசா எழுதிட்டா எல்லாம் முடிஞ்சு போயிடும். அதனாலதான் எழுதாம இருக்கேன்னு சொல்லி இருக்கீங்க! எழுதிட்டீங்க!”

“ம். சண்டை என்ன தெரியுமா. . . நட்பா பழகுறதுன்னா பேசிக்கலாம்னு நீ சொன்னே. கூடப் படுத்துக்கிட்டவளை எப்படி இனி தோழியா பார்த்துப் பழக முடியும். முடியாதுன்னு சொல்லிட்டேன்.”

“நான் அப்படி சொன்னனா? ரெண்டு மூணு தடவை உங்க சம்சாரத்தோட நீங்க வண்டியில போறப்ப பார்த்தேன்.”

“வயிறு எரிஞ்சுதா!”

“இல்ல. சங்கடமா இருந்துச்சு. உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பார்த்துட்டாவே எனக்கு . . . எப்படி சொல்றதுன்னு தெரியல. சங்கடமா இருக்கும். ஆமா, புது வண்டி வாங்கியிருக்கீங்க. சொல்லவே இல்ல! மொதல்ல என்ன சொன்னீங்க. வண்டி எடுத்தா என்னைத்தான ஃபர்ஸ்ட்டு உட்கார வச்சு ஓட்டு வேன்னு.”

“வண்டி எடுத்து ஒன்னரை வருசம் ஆச்சுடி.

பதினைஞ்சாயிரம் கிலோ மீட்டர் ஓடியாச்சு.”

“என்னைக் கூப்பிட்டுப் பேசணும்னு தோணவே இல்லையா?”

“எப்பாச்சிம் நினைச்சுக்குவேன்டி. பேசிடுவனோன்னு தான் உன் நெம்பரை டெலிட் பண்ணிட்டேன். ஆனா நீ நல்ல குண்டாயிட்டேடி. இப்போத்தான் சூப்பரா அழகா இருக்கேடி. அதும் நைட்டில ஓடியாந்து கட்டிக்கலாங்ற மாதிரி.”

“இப்ப கொஞ்சம் பரவாயில்ல. இன்னும் குண்டா இருந்தேன் ஆறு மாசம் முன்னாடி.”

“அப்போ கடைசியா பேசுறப்ப ஆறு மாசத்துல எதிர்பார்க்கலாம்னு சொன்னே! உன்னைக் கூட்டிட்டு இப்போ சுத்துறானே அந்த சுதாகர். அவனையாச்சும் நீ கட்டியிருக்கலாம்டி!”

“அவனையா! அவன் ஒரு ஆளு!”

“ஏய்! உங்க அம்மா கூட என்.ஜி.ஜி.யோ காலனிக்காரனைத்தான் எம்புள்ள கட்டிக்குவான்னு பேசுச்சாம்ல. சொன்னாங்க!”

“அது லொள்ளு பேசுறவங்களுக்குத் திருப்பி சொல்லியிருக்கும்.”

“பின்ன எதுக்குடி அவனோட வண்டில ஏறிட்டுப் போறே! ஊருக்குள்ள பேரைக் கெடுத்துக்கறே?”

“எனக்கு ஒடம்பு சரியில்லைன்னா ஒரு போனைப் போட்டா உடனே வந்துடுவான். கூடவே நிற்பான்.”

“அவனையும் என்னைப் பண்ணினாப்ல டார்ச்சர் குடுப்பியே! தாங்குறானா!”

“ம்… என்னடி செல்லம், சாரி செல்லம்னு வழிவான்.”

“உனக்கு பொச்சு அட்டாரிக்கு ஏறிக்குமே! முலை புடிக்கிறானா?”

“என்ன கேட்டீங்க?”

“இல்ல, பஸ் ஸ்டாப் திண்டுல உட்கார்ந்திருந்தியாம். சர்ர்னு வந்து வண்டிய நிப்பாட்டினவன் மளார்னு ஸ்டாண்டு போட்டுட்டு வந்து ரெண்டையும் லப்புனு புடிச்சு கசக்கினானாமே. ரோட்ல ஆள் வர்றது கூட தெரியாம என்னடி இது! பார்த்த ஆள் சொல்லுச்சு.”

“இப்படி எல்லாம் பேசினா எவளாச்சும் பொண்ணு உங்ககூட பேசுவாளா?”

“நான் அப்படித்தான் பேசுவேன்.”

“ஐய்யோ, நீங்க ரொம்ப மாறிட்டீங்ளாட்ட இருக்குதே! முன்னெல்லாம் இப்படிப் பேச மாட்டிங்க!”

“ஆமான்டி மாறிட்டேன். ஒரே மாதிரியா இருக்கணுமா?”

“சரிங்க, நாளைக்கும் கூப்பிடறேன். ஓ.கே.பை!”

“ஏய்! இருடி. இப்ப எதுக்கு பை சொன்னே?”

“எல்லாம் பேசிட்டு யாருக்கும் சொல்லிப் பழக்க மாயிடிச்சு.”

பழனிச்சாமி காலையில் எட்டு மணி போல குட்டிப்பிசாசிற்கு ரிங் விட்டு கட் செய்தான். அது இப்படித்தான் இப்படி மாறிப் போயிருந்தது. இதையும் கீதாவே சொன்னாள். ‘முன்ன எல்லாம் நான்தான் ரிங் விட்டு மிஸ்டு கால் குடுப்பேன். இப்ப என்னடான்னா நீங்க குடுக்கறிங்க’ என்று. அதற்கும் இவன் விளக்கம் சொன்னான். ‘செல்லுல, நெட்டுல போய் பையனுக்கு கேம்ஸ் ஏத்தி வச்சேன்டி. காசு போட்டா போதும். தேங்க்ஸ் ஃபார் யூசிங் கேம்ஸுன்னு மெரேஜ் வருது. பார்த்தா பைசாவை ஸ்வாகா பண்ணிடறாங்க. காசே போடறதில்லடி’ என்றான். அப்போது அவள் அழைப்பு வந்தது.

“என்னது, இன்னிக்குக் காத்தாலயே மிஸ்டு கால்!”

“விசயம் இருக்கு கீதாஞ்சலி.”

“என்னது, இன்னொருக்கா சொல்லுங்க. யப்பா. இத்தனை வருசத்துல இப்போத்தான் மொதமொதலா என் பேரைச் சொல்றீங்க. எப்பவும் ஏய்யி, டீய்யி, கிறுக்கின்னுதான கூப்பிடுவீங்க! சொல்லுங்க.”

“கரெக்ட்டா கேட்டுக்க. ஒரு பொண்ணும் பையனும் ரொம்ப நட்பா இருக்காங்க. கேட்கறியா கீதாஞ்சலி?”

“சொல்லுங்க. கேட்டுட்டுதான் இருக்கேன்.”

“நட்போட இருக்காங்ளா. அசந்தர்ப்பவசமா, ஒரு தடவை ரெண்டு பேரும் வாய்ப்பு கெடைச்சதால தப்பு பண்ணிக்கறாங்க. இது வந்து சரியா? தப்பா? அவங்க வந்து ப்ரண்ட்ஸ்.”

“தப்பு.”

“தெரியுதில்லடி எருமெ. பின்ன என்ன மசுத்துக்குடி எனக்கு சாமத்து மெசேஜ் விட்டே? என்ன, என் நட்பு கிடைக்க இவ கொடுத்து வச்சிருக்கோணுமாமா!”

“நான் எங்கே விட்டேன்.”

“எனக்கு வந்தக்காட்டித்தாண்டி காலையில கூப்பிடறேன்.”

“ஐய்யோ. சாரி சாரி. மொத்தமா ஐம்பது நெம்பருக்கு அனுப்பினேன். உங்களுக்கும் வந்திடுச்சாட்ட! சரி, உங்க செல்லுல நெட் போட்டிருக்கீங்ளா, எனக்கும் பழக்கி விட்டீங்கன்னா… நானும் போட்டுக்குவேன்ல.”

“நீ எதைப் பார்க்குறதுக்கு பழக்கி உடச் சொல்றீன்னு தெரியுது. என் கிட்ட டிவி.டி. தட்டு இருக்கு. அதுலயும் செல்லுல இருக்குறதுகதான் இருக்கு. வயிறு ரொம்ப பார்த்துக்க.”

“ஐய்யே. தட்டெல்லாம் வேண்டாம். ரெண்டு பேர் ஊருக்குள்ளார அந்தத் தட்டு வச்சுட்டு என்கிட்ட வந்து சித்த நேரம் போடுன்னாளுக. ஐய்யோ என்னோட ப்ளேயர்ல அதைப் போட மாட்டேனுட்டேன். சரி, ப்ளேயரை குடு. அவங்க வீட்டுல போய் பார்த்துட்டு வந்து தர்றதா கேட்டாளுக. தரமாட்டேனுட்டேன்.”

“ஏய் பாவம்டி! இப்படி நீ பாவத்தை தேடிக்காதடி.”

“பின்ன என்னோட டி.வி.டி. தான் அந்தப் படம் பார்க்க கிடைச்சுதா!”

“ஏன்டி. ஊர்க்காரிக செல்லுல படம் வச்சிட்டு பார்த்துட்டு கிக்கிக்கீன்னு சிரிச்சுட்டு திரியறாளுகளாமா! பாருக்கா அவனுக்கு எத்தாச்சோடு. . . வேனுக்குள்ளாரையே மாட்டுறான்னெல்லாம் பேசிட்டு இருக்காளுகளாமா! யாரு இவளுகளுக்குப் படம் ஏத்திவிடற புண்ணியவான்?”

“நானும்தான் என்னோட செல்லுல மதனா ட்ரஸ் இல்லாம ஆட்டம் போடறது, ஈங்கூர் பள்ளிக்கூடப் பொண்ணு பையன் கூட இருக்கறது எல்லாம் வச்சிருந்தேன். பார்த்துட்டு டெலிட் பண்ணிடுவேன்.”

“ஊர்க்காரிக எல்லாரும் ரொம்ப அட்வான்ஸா போயிட்டீங்கடி.”

“நீங்க இன்னும் சுந்தரி கிட்ட போயிட்டிருக்கீங்ளா? கலைஞர் இலவச வீடு கட்டீட்டு இருக்கா. ஹலோ, என்ன பேச்சு நின்னு போச்சு?”

“இல்ல உன் புத்தி இன்னும் அப்படியேதான்டி இருக்குது. அதெ கொரங்குப் புத்தி. மறந்து தொலைச்ச கருமங்களை எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு டென்சன் பண்றேடி. இப்பவும் சொல்றேன். நான் போனது நிஜம்தான். ஆனா அது எப்பவோ. . . இன்னொருக்கா சுந்தரி, வாணின்னு இது மாதிரி பேசுறாப்ல இருந்தா உன்னோட பேசுறது கடைசியா இருக்கும். சரி, பத்து நாளா பேசிட்டு இருக்கியே, என்னைப் பார்க்கணும்னு தோணலை?”

“தோணுது. ஆனா எங்க பார்க்குறது?”

“வழக்கமா சென்னிமலை காட்டுலதான்.”

“அங்கெல்லாம் இப்போ போக முடியாது. தெரியாதா உங்களுக்கு?

ஊர்க்காரிக ஆடுகளை உள்ளார ஓட்டுறதில்ல, விறகுக்குப் போறதில்ல. நான் ஒருக்கா விறகுக்குப் போய் கார்டு, வாச்சர்கிட்ட மாட்டிட்டேன். ஐநூறு ரூவா மொய் எழுதிட்டாங்க. கரட்டுல எங்க காசு தர்றது? வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அந்த வாச்சரு ரெண்டு தடவை வந்தான் காசுக்கு. இன்னொருக்கா வந்தீன்னா கையைப் புடிச்சு இழுத் தான்னு சத்தம் போடுவேன்னு கத்தினேன். வர்றதில்ல. கரட்டுல சுத்தீட்டே இருக்காங்க. உங்களோட என்னைப் பார்த்துட்டான்னா! வம்பே வேண்டாம்.”

“போடி, இப்படி ஒரு ஊர்ல இருந்துட்டு பார்க்க முடியல்லைன்னுட்டு. ஆனா நீ குண்டா அழகா வேறஆயிட்டியேடி. முந்தா நேத்து அன்னமார் தியேட்டர்கிட்ட திண்டுல நான் வர்றப்ப ஒரு பொண்ணு உட்கார்ந்து பேசிட்டு இருந்துச்சு செல்போன்ல.”

“ம். சொல்லுங்க.”

“எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா! குண்டுப்பொண்ணு. அதும் நைட்டி போட்டுட்டு. . . ஜம்முன்னு.”

“இருப்பா இருப்பா!”

“அங்க எங்கடி உட்கார்ந்திருந்தே ஈவ்னிங்ல?”

“பாலுக்குப் போயிருந்தேன். போன் வந்துது, பேசிட்டிருந்தேன்.”

“சாந்தாமணி படிச்சுட்டியா?”

“நூறு பக்கம் படிச்சதோட சரி.”

“ஜான்ஸி கூட சைக்கிள்ல போறதெல்லாம் படிச்சுட்டியா?”

“அதெல்லாம் முடிஞ்சுது. இப்ப என்ன புத்தகத்துக்கு அவசரமா?”

“இன்னொரு தோழி படிக்க வேணும்னா. என்கிட்ட இருந்ததே அந்த ஒரு பிரதிதான். இருந்த பிரதிகளை வெளியூர்ல இருந்து வந்த பணக்காரப் பிச்சைக்காரங்க குடுன்னு எடுத்துட்டுப் போயிட்டாங்க.”

“அது எனக்கே குடுத்துட்டதால்ல நெனச்சுட்டு படிச்சாப் போவுதுன்னு விட்டுட்டேன். டைம் வேணும்ல! சரி, 180 படம் நல்லா இருக்கு. தட்டு தர்றேன்னு சொன்னீங்கள்ல. . .”

“உனக்குத்தான் டைம் இல்லைல்ல! 180 பார்க்க மட்டும் டைம் இருக்காடி?”

“எனக்கு வேண்டாம். இனி நீங்க எந்தப் படமும் தர வேண்டாம். அந்த புக்கு வேணுமா?”

“ஏய். . . நீ பாட்டுக்குப் படிச்சுட்டு வீட்டுல உன் சூட்கேஸ்ல வச்சிருப்பே. உன் அக்கா படிச்சாலும் பிரச்சினை. யார் ஊருக்குள்ளார அந்தப் புத்தகம் படிச்சாலும் துன்பம்டி. வேற புக்கா இருந்தா வச்சுக்கோன்னு சொல்லிடுவேன். சரி விடு, நான் உயிர்மையில இன்னும் அஞ்சு பிரதி கேட்டு வாங்கிக்கறேன். ஆமா, அட்டை போட்டுக் குடுத்தனே. உங்கொம்மா பார்க்கலைல்ல?”

“க்கும். அட்டையைப் பிரிச்சு வீசிட்டு எங்கம்மா என்னன்னு பார்த்துட்டு இது ஏதுடின்னுது. சுகந்தி அக்காட்ட இருந்துச்சு. சீமெண்ணெய் வாங்குறப்ப என்கிட்ட குடுத்துச்சு. . . ரேசன் கடையில, நான் பையில போட்டுட்டு மறந்துட்டு வந்துட்டேன்னு சொல்லிட்டேன். உங்க போட்டோ பார்த்துட்டு ஒன்னும் சொல்லலை… படிச்சுட்டே குடு போன்னுடுது.”

“ஆனா ரீல் ஓட்டுறதை மட்டும் நீ நிறுத்தவே இல்லடி.”

“சரி, ஈவ்னிங் கூப்பிடறேன். ஓ.கே.பை.”

“ஏன்டி கிறுக்கி. பை சொல்லாதடின்னு எத்தனை வாட்டி சொல்றது. . .”

“மறந்து மறந்து போயிடுது. அப்படியே பழக்க மாயிடுது.”

“ஹல்ல்லோவ்வ். சொல்ல்ல்லுங்ங்ங்க!”

“என்னடி நீயும் மனுஷ்ய புத்திரனாட்டவே பேசுறே?”

“அது யாரு? நீங்க பேசிப் பேசி எனக்கும் பழக்கமாயிட்டுது. யார் கூப்பிட்டாலும். ஹல்லோவ்வ்னுதான் ஆரம்பிக்கிறதே! சரி விடுங்க.. நான் உங்களுக்கு யாரு? வப்பாட்டிதானே!”

“என்னடி ஈவனிங்ல சண்டை போட்டுக்கலாம். ஒரு வருஷம் கழிச்சு பேசிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா? ரமணர்தான் கேட்டுட்டே இருந்தாரு. நான் யாரு? யாருன்னு! நான் எப்படி சொல்வேன் அப்படி?”

“சொல்லுங்க, உங்களுக்கு நான் யாரு?”

“நீ எனக்குத் தோழி கிடையாது. தெரிஞ்சவளும் கிடை யாது. நான் ஆசைப்பட்டவ, நான் விரும்பினவ. உன்மேல வச்ச காதல் இன்னும் மனசுக்குள்ள அப்படியேதான் இருக்கு. அது எங்கீம் போகலை. உன்னோட நினைப்பு அழியணும்னா நான் செத்துட்டா அழிஞ்சுடும்.”

“அப்புறம் ஏன் கூப்பிடலை! நானா கூப்பிட்டதாலதான பேசுனீங்க.”

“இதென்ன வம்புடி? பேசலைன்னா என் காதல் காணாமப் போயிடுமா? உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கலைடி. அது வந்து உன் கிறுக்குத்தனத்தாலதான். சண்டையப் போட்டுட்டு மூணு மாசம் பத்து நாள், நாலு மாசம் இருபது நாள்னு கணக்கு சொல்றவ நீ!”

“கட்டியிருந்தாலும் நாம பிரிஞ்சிருப்போம்.”

“தெரியுதில்ல. எதுக்கு நான் யாருன்னு கேள்வி உனக்கு? சரி, நீ யாருடி எனக்கு?”

“ம். உங்க மொதல் பொண்டாட்டி… போதுமா!”

“அப்படின்னா இன்னைக்கு நைட் உன்னைப் பார்க்கணும்டி. உன் மடியில படுக்கணும்.”

“நெனைச்ச உடனே முடியுமா. எங்கம்மா ஊருக்குப் போகட்டும். சொல்றேன்.”

“நான் சொல்லட்டா. எனக்கு ராசியே கிடையாது. உனக்கும் கிடையாது. சரி, உன் பர்த்டே சுடிதார் நல்லா இருக்கா?”

“உங்க செலக்சன். நீங்க வாங்கிக் குடுத்தது! நல்லா இருக்கு. சரி இன்னிக்கி சினிமா போலாமா?”

“நான் வரலை.”

“ஹலோ, எங்கேடி இருக்கே?”

“காங்கயம் ரோட்டுல என் ஆட்டுக்குட்டி தங்கங்களை மேய்ச்சுட்டு இருக்கேன்.”

“நான் வரவா?”

“ஒன்னும் வேண்டாம். நம்ம ஊர்க்காரிக மூணு பேர் ஆடு இங்கதான் மேய்க்கறாங்க.”

“அவிங்களைக் கொன்னு போடலாம்டி.”

“நான் கூப்பிட்டு எப்பவும் நீங்க வரலைன்னு சொன்னதே இல்லை தெரியுமா!”

“அதுக்குத்தான் என்னை வரவேண்டாங்றியா, நான் வராததுக்குக் காரணம் இருக்குடி. அன்னைக்கு சுடிதார் எடுக்க பெருந்துறை கூட்டிட்டுப் போனேன். ஒரு ரெண்டு மணி நேரம் இருந்திருப்பியா! உடனே கொண்டு வந்து இறக்கி விட்டுட்டேன். போயிட்டே! பின்னால எனக்கு எவ்ளோ சிரமம் தெரியுமா! முன்ன அடிக்கடி போனதால தெரியல. இப்போ சங்கடம்டி. நீ கிட்டயே இருந்துட்டு இருக்கணும்னு தோணுதடி. நீ வான்னு இப்போ கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன். எனக்கு இனி பகல் ஆகாது. சரியா பேசக்கூட முடியாது.”

“அப்போ வெளிய என் கூட வரமாட்டிங்க!”

“வருவேன். அன்னைக்கு மாதிரி ஆறு மணிக்கு சென்னிமலையில கொண்டுவந்து இறக்கி விடமாட்டேன். எட்டு மணிக்குத்தான்.”

“அப்படின்னா நான் வரலை.”

“விட்டுரு!”

“மாறிட்டீங்க!”

“ஆமாம். சரி, நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா?”

“ஐய்யோ. சரீஈஈஈ. காதே போச்சு. நான் வச்சுடறேன்”

காங்கயம் சாலையில் மராம்பாளையம் பிரிவு தாண்டி கீதாவைப் பிடித்தான் பழனிச்சாமி. ஆமை ஊர்வதுபோல டி.வி.எஸ்.ஸில் இடதுபுற சாலையில் ஊர்ந்து வந்தவள் இவனைக் கண்டதும் தடுமாறி ப்ரேக் பிடித்து புளியமர நிழலில் நிப்பாட்டிய முறையில் நிஜமாகவே பயமான அந்தப் புதுப்பழக்கம் தெரிந்தது! சிவன் மலையில் மாமா வீட்டில் நின்ற இவள் டி.வி.எஸ்.ஸை எடுத்துக்கொண்டு சென்னிமலை வருவதாகவும், ஏற்கனவே ஒருமுறை கீழே விழுந்ததால் பயமாக இருப்பதாகவும் கீதா போனில் சொன்னதால் இவனும் வர்ரேன் இருடி என்று வந்துவிட்டான்.

“நான்தான் வந்துடறேன்னு சொன்னேன்ல. எதுக்கு வராட்டி?”

“முதல்ல ஸ்டேண்டு போட்டு நிறுத்துடி. அப்படியே ரெண்டு நாயம் பேசிட்டுப் போலாம்னு வந்தேன். சுடிதார்ல நீ குண்டா தெரியலடி.”

“நீங்க என் மெமரி கார்டுல பதிவு பண்ணிக் குடுத்த பாட்டுகள் எல்லாம் சூப்பர். உங்களுக்கும் துளி ரசனை இருக்குது! ஆமா, அந்தப் படம் ஒரு படம் கூட ஏத்துலிய?”

“அடுத்தவங்க செய்யுறதை நாம ஏன் பார்க்கணும்? என்ன அப்படி பாக்குறே?”

“ஆனா முன்ன எல்லாம் இப்படிப் பேசமாட்டிங்க. இரண்டரை வருசத்துல எத்தனை பேரைப் பார்த்தீங்ளோ!”

“ஒரே ஒருத்தி. அவளும் திருப்பூரு. அதும் நான் செய்யலை. அவளே செஞ்சுட்டா! நம்புறியா! ஒரே ஒரு வாட்டிதான். வெட்கமோ என்ன எழவோ. . . பேசுறதில்ல அவ. நானும் துன்பம் பண்றதில்ல.”

“நம்புறேன். இருங்க போன் வருது. ஹலோ! டேய் லூசு. நான் எப்போ கூப்பிட்டேன். நீ எப்போ கிளம்புறே? ஒன்னும் வர வேண்டாம் நீ. நான் சென்னிமலைகிட்டே வந்துட்டேன்.”

” யாருடி போன்ல?”

” சுதாகர்தான். வண்டி எடுத்துட்டு வரப் போறேன்னு சொன்னேன். அப்போ இதோ வர்றேன்னான். இப்ப வர்றானாமா! “சரி உங்க பர்த்டேக்கு என்ன வேணும்?”

“நீதான் வேணும்! நான் எதுக்கடி ஆசைப்பட்டிருக்கேன். ஒரு கீச்செயின் கேட்டேன். அதை வாங்கிக் குடுக்கவே ஒரு வருசம் பண்ணினே. என்னடி போனை கட் பண்ணிட்டே இருக்கே? பேசு!”

“ஹலோ.. அட லூசு. நான்தான் வந்துட்டேன்னு சொன்னன்ல, சரி நீ போனை வை! நான் கிளம்புறேன்ங்க.. அந்த லூசு வந்துட்டு இருக்குது.”

“போயிட்டே இரு!”

“நீங்க?”

“என்னைப் பத்தி என்ன. நீ போடி!” என்றதும் அவள் டி.வி.எஸ்.ஸைக் கிளப்பிக் கொண்டு செல்லவும் இவனுக்கு மண்டை ஏனோ சுழல்வது போலிருந்தது. யார் வந்தாலும் போனாலும் மயிரு என்று நிற்பவள் செல்வது இவனுக்குப் புதிதாக இருந்தது! ‘என்ன மசுத்துக்குடா இந்தக் கிறுக்கியப் பார்க்க வண்டி எடுத்துட்டு வந்தே பழனிச்சாமி’ என்று இவனையே கேட்டுக் கொண்டான்.

‘‘ஹலோவ்! என்ன பேச்சையே காணம் . . .”

“என்ன பேசுறது? அதான் அவன் வர்றான்னதும் பயந்தடிச்சுட்டு நீ கிளம்பிட்டியே! என்னைப் புதுசா இருக்கீங்கன்னு சொல்லிட்டு நீதான்டி இப்போ மாறிட்டே! கீதான்னா யாருன்னு எனக்குத் தெரியும். நீ கீதா இல்லடி! நீ பயந்தாம்பேடி கீதா.”

“என்ன பண்றது என் நிலைமை அப்படி. உடம்பு சரியில்லைன்னா போன் பண்ணினதும் வர்றான். கூடவே ஹாஸ்பிடல்ல நிற்பான். பணம் கேட்ட உடனே குடுப்பான். உங்களோட பார்த்தான்னா. . .”

“போடி மயிறுன்னுட்டு போயிடுவான். இப்படி எல்லாம் பயந்துட்டு நீ இருக்கிற அளவுக்கு அவன் உன்னை வச்சிருக்கான்ல. சூப்பர்டி. சரியான ஆள்கிட்டதான் இருக்கே! இனிவந்து அவனா? நானாங்ற கேள்வி வருது எனக்கு! நீ கல்யாணம் பண்ணியிருந்தீன்னா எனக்கு நோ ப்ராப்ளம். ஆனா அதையும் நீ செய்யலையே! உன்னோட தோழி தேவிகூட அங்க இங்கேன்னு யார்கூட வேணாலும் சுத்தினாடி. ஆனா கல்யாணம் செஞ்சுட்டு இப்போ அவளுக்குக் கொழந்தை. அதுக்குக் கூட மூணு வருஷமும் ஆச்சு.”

“பழையபடியே நீங்க என்கிட்ட பழகணும்.”

“எப்படி என்னால பழக முடியும். உன்னை என் வண்டியில உட்கார வச்சு கூட்டிட்டுப் போவேன். அவன் எங்காச்சும் பார்ப்பான். இல்லே யாராச்சும் அவனுக்குச் சொல்வாங்க! பிரச்சினை உனக்கு வரும். நீ போன்ல என்கிட்ட பேசியே திருப்தின்னு இருப்பே! எனக்கு போன்ல எப்படிப் பேசுறதுன்னே தெரியாது. பேசிட்டே இருந்தீன்னா கிட்டே வச்சுப் பார்க்கணும்னு எனக்கு ஆசை வந்துட்டே இருக்கும். சும்மா இருந்தேன்டி. இரண்டரை வருஷமாச்சு பேசின்னு என்னைக் கூப்பிட்டு பேசி நோக அடிக்கிறியேடி! சரி, எப்போ பார்க்கலாம்?”

“எங்கம்மா எங்காச்சும் போகணும்ல! ஏய்! ஏய்! தள்ளுடி. இந்த ஆட்டுக்குட்டி பாருங்க. முகத்தைக் கடிக்க வருது.. போடி.”

“சரியா சொல்லுடி. முகத்தைக் கடிக்க வருதா… பால் குடிக்க வருதா? மங்காத்தா படம் பெருந்துறை தேவிசித்ராவுல ஓடுதாம். வரவா? முன்னாடி டேங்க் கவர்ல ஒரு குட்டியை நான் வச்சுக்கறேன். இன்னும் ஒன்னை நீ மடியில பிடிச்சுக்க. பால்கனி டிக்கெட் நாலு எடுத்துட்டுப் போய் உட்காரவச்சு, சினிமாஸ்கோப்ல ஆட்டுக்குட்டிகளுக்கு அஜித் படம் காமிப்போம்.”

“இங்க இதுக தொல்லைன்னா வீட்டுல மீனா தொல்லை. அவ நைட்டு எம்பக்கத்துல படுத்துதான் தூங்குவா. கொர்ர்ர்ர்னு!”

“மீனாவா? அவ எவடி புதுசா?”

“பூனையச் சொன்னேன்.”

“ஹலோவ்! என்னது நைட் ஒன்பது மணிக்குக் கூப்பிடறீங்க?”

“காலையில இருந்து உன் போனை எதிர்பார்த்தேன்டி!”

“நான் இன்னிக்கு திருப்பூர் போயிருந்தேன்! பிஸி!”

“சாப்டாச்சா?”

“ம், சப்பாத்தி… ம் குருமா! நீங்க என்ன தண்ணியடிச்சுட்ட மாதிரி தெரியுதே!”

“ஏன் வாசம் அடிக்குதா? பரவாயில்லயே செல்போன்ல கூட வாசம் போகுதே. உன்னாலதான்டி சரக்கு குடிச்சேன்.”

“நான் என்ன பண்ணேன்? என்னாலயா?”

‘‘நிஜமாவே தெரியலையா! சரி, காலண்டரைப் பாரு!”

“ஹா! தேதி இருபத்திஏழு. சாரி, நெஜமாவே மறந்துட்டேன். என்னோட பர்த்டேக்குப் பின்னாடின்னு நினைச்சுட்டு இருந்தேன். சாரி.”

“எப்பவுமே பெர்த்டே நான் வாழ்க்கைல கொண்டாடினதே இல்லடி. நீ எல்லாம் கொண்டாடுடறதைப் பார்த்துத்தான் ஆசைப்பட்டேன். பேரெழில்குமரன்னு கோயமுத்தூர் கொழந்தை பையனுக்கு என் பர்த்டே தெரியும்! அவனும் ஒரு வாழ்த்து சொல்லலை.”

“சரி விடுங்க. திங்கள்கிழமை முழுதும் உங்க கூடவே இருக்கேன். கொண்டாடிட்டா போவுது!”

“போடி இவளே! தீபாவளி அன்னைக்குத்தான் பட்டாஸ் வெடிக்கணும். முடிஞ்சதுக்குப் பின்னாடி என்னடி வெடி?”

“ஹல்லோவ்! முக்கியமான போன் வருது, கட் பண்ணுன்னு சொன்னீங்க. அந்த முக்கியமானதையே பேச வேண்டிதுதான? எப்டி இருந்துச்சு தெரியுமா? என்னை விட முக்கியமானது எது உங்களுக்கு?”

“இதுக்குப் பதில் சொல்ல முடியாது கீதா. சின்னப்பிள்ளையாட்டவே பேசிட்டு இருக்கே நீ!”

“ஒரு விஷயம் இருக்கு. சொன்னா நீங்க தப்பா எதாச்சும் நினைச்சுக்குவீங்களோன்னும் இருக்கு.”

“ஆரம்பிச்சுட்டீல்ல! சொல்லிடு.”

“சிவன்மலை சித்தி இருக்கில்ல. அதுமோட பொண்ணு!”

“என்னடி இழுத்து இழுத்துச் சொல்றே?”

“என்னோட தங்கச்சிதான்! வக்கீலுக்குப் படிச்சிட்டு இருக்கிற பையனோட பழக்கமாயிடுச்சு. இங்க கொண்டு வந்து சித்தி உட்டுட்டு நீதான் சாமி இதைச் சரி பண்ணிடணும்னு விட்டுட்டுப் போயிடுச்சு.”

“என்னடி சரி பண்ணனும்? தங்கச்சிங்றே! வக்கீலுங்றே!”

“ஆறேழு நாள் தள்ளிப் போயிடுச்சாமா! நான் போய் மெடிக்கல்ல நின்னு எப்படி வாங்குறது?”

“நான் போய் வாங்கித்தரணும்! அடி, இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டு மூணு நாலு வருசம் ஆயிடுச்சுடி! மெடிக்கல்ல நான் போய் கேட்டா மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்ளா’ ன்னு கேட்பாப்லயே!” அதும்மில்லாம இது பாவம்டி! ரப்பர் கீது போட்டுத் தொலைய வேண்டிதுதான. மாத்திரை ரொம்ப கடுசா இருக்கும்டி. ஆமா, அவளுக்கு எத்தனை வயசு?”

“பதினாலு!”

“தாங்குவாளாடி? வேற எதாச்சும் ஆயிடிச்சுன்னா கம்பி எண்ணப் போகோணும்.”

“அதெல்லாம் தின்னுட்டு செனப் பன்னியாட்ட இருக்கா!”

“இந்த மாதிரி ஆயிடிச்சுச்சுன்னு அவளே அவன்கிட்ட பேசவேண்டிதுதான! அவனே வாங்கிக் குடுப் பான்லே!”

“அவன் ஊர்லயே ஆகாவழியாமா! கோயமுத்தூர்ல இப்ப படிச்சுட்டு இருக்கான்.”

“இந்தப் பொது சேவையெல்லாம் உனக்கெதுக்குடி?இதெல்லாம் சின்னப் பிரச்சினைன்னு நினைச்சுட்டியா?”

“தங்கச்சியாச்சே! எதாச்சும் பயந்துட்டு செஞ்சுக்கிட்டாள்னா?”

“ஆமா, உன் புத்தி உன்னை உட்டு எங்க போகும். உன்னையாட்டமேதான் அவளும் இருப்பாள்னு நினைக்கிறியா?”

“இத பாருங்க. கிண்டல் வேண்டாம். எப்படியாச்சும் சாமின்னு சித்தி இங்க கொண்டு வந்து உட்டுட்டு போயிடுது.”

“சரி ஐநூறு ரூவா ஆகும்.”

“எத்தனை ஆனாலும் பரவாயில்ல!”

“எத்தனை நாள் சொன்னே?”

“ஏழு நாள்.”

“கரெக்ட்டா தெரியுமா? சரி, எப்படியும் பதினைஞ்சு நாள் ஆயிருக்கும். ஒண்ணரை மாசம்டி கணக்கு! நாளைக்கு வாங்கிட்டு வந்து தர்றேன். என்கிட்ட காசு இல்ல.”

“ம். சரிங்க!”

“ஹல்லோவ்! அந்த பாக்கெட்டை ஒடச்சேன். நீங்க சொன்ன மாதிரி தனியா ஒன்னும் நாலு ஜோடியாவும் இருக்கு.”

“அது மிசோபிரஸ்டால் மாத்திரைடி. ஒன்னை, நைட் சாப்பிடறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால போட்டுக்கச் சொல்லு! ரெண்டை, நாளைக் காலையில வெறும் வயித்துல போடணும்.”

“சின்ன பாக்கெட்ல சக்கரை மாதிரி கவர்ல இருக்குதே. க்ளாஸ்ல துளி போட்டுத் தண்ணி ஊத்தினேன். வெடிக்குது!”

“அது படிகாரக்கல்லுடி. மாத்திரை கெட்டுப் போகாம இருக்கிறதுக்கு வச்சிருக்கிறது. அதைக் குடிச்சு வச்சுர வேண்டாம்.”

“ஹல்லோவ்! என்னோட பெர்த்டே வாழ்த்து மெசேஜ் வந்துதாடி?”

“ஓ பார்த்துட்டேன். 27 வயசுக் கிழவிக்கு வாழ்த்துன்னு அனுப்பி இருக்கீங்க! லொள்ளு!”

“எதோ ஒன்னு! வந்துச்சா இல்லையா?”

“வந்துச்சு. வந்துச்சு! நீங்க எடுத்துக் குடுத்த ட்ரஸ்தான் போட்டிருக்கேன்.”

“எங்கே இருக்கே? கோவில்லயா? இந்த வருடமாச்சிம் கடவுளே… எனக்கொரு புருசனைக் கொடுன்னு வேண்டிக்கடி!”

“எதுக்கு அவன் லைப்பும் நாசமாகறதுக்கா? என்னை யாரு கட்டிக்குவா? என்கிட்ட என்ன இருக்கு? குறைஞ்ச பட்சம் ஆறு எழு பவுன் நகை இல்லாம இந்தக் காலத்துல எவன் கட்டிப்பான்? எல்லாரும் கேட்கறாங்கன்னு நீங்களும் கல்யாணம்னுட்டு! எனக்குக் கல்யாணம் பிடிக்கலே.”

“என்னடி ஹாரன் சப்தம் கேட்குது. எவன் உன்னுதை அடிக்கிறான்?”

“லொள்ளு. ஈரோட்டுல இருக்கேன். நான், அம்மா, அக்கா வந்தான் வென்றான் படம் பார்க்க!”

“மறுபடியும் ஹாரன் சப்தம் கேட்குதடி?”

“கேட்கும் கேட்கும்.”

“கேக் எல்லாருக்கும் குடுத்தியா? எனக்கு வேற கையில எடுத்து வாயில போட்டு கேக் திங்கத் தெரியாதே!”

“எனக்கும்தான் தெரியாது. ஊட்டி விட்டால்தான். சரி, ஒண்ணு கேட்பேன்…”

“மறுபடியுமா? கேளு கேளு!”

“மாத்திரை வாங்கிக் குடுத்தீங்க. சரி ஆயிடிச்சு. . . எனக்கா இருக்குமோன்னு துளி கூடவா நீங்க சந்தேகப் படலை.”

“நீ கேட்டே, நான் வாங்கிக் குடுத்தேன். அதை உன் தங்கச்சிக்குக் குடுத்தியா? பக்கத்து வீட்டுக்காரிக்குக் குடுத்தியா? அதைப்பத்தி எனக்கென்ன?”

“எப்படி இவ்ளோ தெளிவா பேசுறீங்க! இருக்கீங்க!”

“நான் அப்படித்தான். சரி, எப்போ பார்க்கலாம்?”

“பார்க்கலாம். சான்ஸ் கிடைக்குறப்ப சொல்றேன், சரி, ஈவ்னிங் கூப்பிடறேன்.”

“இருடி… ஒரே நிமிசம் அடுத்த வருசம் உன் பிறந்த நாள் வரைக்கும்”

“சொல்லுங்க”

“அஞ்சு படம் பார்க்கலாம், அஞ்சு தடவை நைட் மீட் பண்ணலாம். 1000 கிஸ் பண்ணலாம். இன்னிக்கி ஈவ்னிங் சான்ஸ் கிடைச்சா ஒரு அஞ்சு கிஸ் பண்ணிட்டம்னா மிச்சம் 995 தான் . . . போதுமா? இல்ல ரெண்டாயிரம் பண்ணிடலாமா!”

“அது ஏன் அஞ்சு படம்?”

“அதுக்கும் மேல பார்த்தோம்னா சண்டை போட்டுக்குவோம்.”

“ஹல்லோவ்! பழனிச்சாமியா?”

“ஆமாம், சொல்லுங்க. பழனிச்சாமிதான்.”

“நான் ஈரோடு பிரதீப் பேசுறேன் பழனி. உங்க கதை படிச்சேன். அது உங்களுக்கு வேண்டாம் பழனி. அணில் கடிச்ச பழமா இருந்தா சாப்பிடலாம். இது பன்னி கடிச்ச பழம். கேளுங்க. . . உங்களுக்கு ரொம்ப ஆசையா. . . வீட்டுல மனைவியைக் கூப்பிட்டு பகல்ல கூட ஒன்னு எடுத்துக்கங்க. தயவுசெஞ்சு கேளுங்க. . . நான் உங்க அண்ணன்மாதிரி. வீட்டுல ஒரு கடப்பாறை வச்சிருக்கீங்க. பெரியசாமி வந்து கேட்கறாரு. இந்த மாதிரி பந்தல் போட குழி தோண்ட வேணும்னு. . . குடுக்கறீங்க. அடுத்த நாள் சின்னச்சாமி வந்து கடப்பாறையைக் கேட்கறாரு. இந்த மாதிரி வீட்டுல செப்டிக் டேங்க் அடச்சிக்கிச்சு. குத்தீட்டும் தர்றேன்னு… நீங்க குடுத்துடுவீங்ளா? இரும்பு கடப்பாறையைக் குடுக்கவே யோசிப்பீங்ளா, மாட்டீங்ளா? உங்ககிட்ட இருக்கிறது தோல் கடப்பாறை! உயிருள்ள கடப்பாறை! பத்திரமா வச்சிருக்கணுமா இல்லையா! தப்பா நினைச்சுக்காதீங்க!”

“இல்லங்க!”

“ஹல்லோவ்! என்ன உங்க போனும் பிஸி பிஸின்னே சொல்லுதே!”

“இல்லடி. நண்பர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.”

“எனக்கு ஏனோ என் லைப்பை நெனச்சா ஒரே சங்கடமா இருக்கு. எத்தனை நாளைக்குத்தான் தாங்கிக்கறது. எங்கம்மா ரெண்டு நாள் நல்லா இருக்குது. மூணாவது நாள் சண்டை கட்டுது! ஒரே தலைவலி எனக்கு!”

“அதுக்குத்தான் ஈரோட்டுல கண்ணாடி போட்டதா சொன்னியே!”

“என்னேரமுமா போடுவாங்க? வீட்டுல இருக்கப்ப போடுவேன். அது ஃப்ரேமும் சரியில்ல! நாளைக்கு ஈரோடு போலாமா? கூட்டிட்டுப் போறீங்ளா? ரொம்ப வலியா இருக்கு!”

“ஊருக்குள்ள எல்லோரும் கைஆள் வச்சிருக்காளுகன்னு சொன்னே! உன்னோட கை ஆள் சுதாகர் என்ன ஆனான்?”

“வேலையில இருக்கிறவனை ஏன் தொந்தரவு செய்யாட்டி!”

“இப்ப உங்களால வரமுடியுமா? முடியாதா?”

“என்னையும் கை ஆள்னு இன்னொரு இடத்துல நீ சொல்றதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்!”

“உங்களைச் சொல்வேனா!”

“சரி, நான் என்னவா நினைச்சிட்டு வண்டி எடுத்துட்டு வர்றது? உனக்கு ஃப்ரண்டுன்னா? ஊட்டுக் காரன்னா?”

“நீங்க எப்படியும் வரவேண்டாம். உங்களை நான் எப்பவும் கூப்பிடலை. பின்ன எப்போ பார்த்தாலும் அவனை வச்சுட்டே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்? என்னோட பேசப் பிடிக்கலைன்னா சொல்லுங்க. பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனை வச்சுடுங்க!”

“ஏய்! மராம்பாளையத்துக்குகிட்ட தனியா நின்னேன்டி. அவன் வர்றான், நான் போறேன்னு வண்டிய எடுத்துட்டுப் போயிட்டேடி. அதே நேரத்துல நான் செத்துப் போயிட்டேன்டி.”

“இப்ப என்ன உங்களைக் கட்டிக்கோணுங்கறீங்ளா?”

“ஏய் வாடி! இதுக்கெல்லாம் எனக்கென்னடி பயம்! வா, பொட்டி ஒண்ணு தூக்கிட்டு ரெண்டு துணிமணியைப் போட்டுட்டு வாடி. நாம ஓடிப்போலாம்!”

“பின்ன, அவன் மூணாயிரம் அஞ்சாயிரம் கேட்டால் உடனே எப்படியாச்சும் பொறட்டிக் கொண்டு வந்து குடுக்கறான். இப்போ டாக்டர்கிட்ட போறதுக்காக மோதிரத்தையும், கம்மலையும் அடமானம் வச்சிருக்கேன். அதையும் அவன்தான் இனி வந்து எடுத்துக் குடுப்பான். நீங்க குடுப்பீங்ளா அஞ்சாயிரம்! உங்ககிட்ட இருக்கா?”

“அப்போ காசுதான் மனுசனை நிர்ணயம் பண்ணுது இல்லையாடி. காசு இருந்தாப் போதும் அப்படித்தான! என்னோட வாழ்க்கைல முதல் முதலா இப்போதான்டி… உன் வாயில கேட்ட பின்னாடி தான்டி அதோட அருமை தெரியுது!”

“நான் நீங்களும் சத்தம் போட்டுப் பேசுனீங்களேங்கறதுக்காகச் சொன்னேன்!”

“என்னோட காதுக்குள்ளார ஒரு பொண்ணோட சத்தம் அஞ்சாயிரம், மூணாயிரம் குடுப்பியா, குடுப்பியான்னே கேட்குதுடி. என் அம்மா, என் பொண்டாட்டி காசோட அருமையைப் பத்தி தேங்க்ஸ்டி! உன்னால நான் காதலைக் கத்துக்கிட்டேன், வெறுப்பைக் கத்துக்கிட்டேன், ஏமாத்துறதை சொன்னப்பகூட எனக்கு மண்டைல ஏறலடி! கத்துக்கிட்டேன், புள்ளைங்களைப் பத்தி கத்துக்கிட்டேன். எல்லாத்தையும் விட இப்போ கத்துக் குடுத்தே பார்! இதுதான்டி பெருசு. ரொம்ப தேங்க்ஸ்டி!”

“எங்கம்மா வருது. நாளைக்கிக் கூப்பிடறேன்.”

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *