கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 8,003 
 
 

சேகர் சுத்த சைவம். முட்டை கூட தொடாத வர்கம். கல்யாணத்துக்கு சைவ குடும்பமா தேடித் தேடி அவனுக்குப் பெண் எடுத்தார்கள்.

ஒரு வருஷம் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் மூடி மறைத்த திருகுதாளம் ஒரு மகன் பிறந்ததும் துளிர்விடத்தொடங்கியது.

மகனுக்கு குருவாயூரில் ‘ஹரி’ என்று நாராயணன் நாமகர்ணம்சூட்டி , முடி காணிக்கை தந்து வீடு திரும்ப, விஸ்வரூபம் எடுத்தது மறைத்து வைத்துக் காத்த வீர சைவம்.

வீட்டுக்குள்தானே என்று சேகரும் பது மனைவியும் சேர்ந்து பாயில்டு எஃக்கை, அதான் ‘அவிச்ச முட்டையில்’ மகன் மூலம் தடம்புரள ஆரம்பித்தார்கள்.

அவிச்ச முட்டையை அடுக்களையில் தனியாய் அமர்ந்து நளினமாய் முட்டி முட்டி ஓடு உடைக்கும் மார்கத்தை ஹரிக்குக் கற்றுக் கொடுக்க , ஐந்தில் அது அழகாய் வளைந்ததில் அப்பா அம்மாவுக்கு அலாதி ஆனந்தம்.

ஒருநாள் தாத்தா பாட்டியோடு ஊரிலுள்ள ‘மயூரா மளிகைக் கடைக்கு’ப் போனார்கள் ஹரியோடு அப்பா அம்மா.

ரேக்கில் இருந்த மளிகைப் பொருட்களை எடுத்து தள்ளுவண்டியில் நிரப்பி அவர்கள் நகர்த்த கூடவே நடந்து வந்த, தளிர்நடை பயிலும் குட்டி ஹரிசடக்கென அடி ரேக்கிலிருந்த பச்சை முட்டை ஒன்றை குனிந்து தன் பிஞ்சுக்கையால் எடுத்தான். அவ்வளவுதான். ‘செத்தான்டா சேகர்!’ என்று பெத்தவள் பதறினாள்….!

அதை எங்கே பாயில்டு எஃகாக எண்ணி முட்டி முட்டி உடைத்துத் தங்களை குழந்தை கடையிலேயே காட்டிக் கொடுத்துவிடப்போகிறதோ என்று பதற, 

தாத்தா சொன்னார்,

‘ பார்த்துடா கொழந்தே அது பாயில்டு எஃகல்ல…,! பச்சை முட்டை !’ என்றதும், பாட்டி தன் பொக்கை வாய்காட்டிச் சிரித்தாள்.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *