அர்த்தநாரியும் அவசரக் குடுக்கையும்.!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,137 
 
 

கடவுள் எத்தனையோ வடிவங்கள் எடுத்திருந்தாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பிடிக்குது. அப்படித்தான் சுப்ரமணிக்கு சிவனின் அர்த்தநாரி வடிவம் என்றால் அத்தனை இஷ்டம். கேட்டால், ஆணும் பெண்ணும் சமம்னு சொன்னதும்…, ரெண்டும் பாதிக்குப் பாதிக்குப் பாதி என்று சொன்னதும் அந்த பரமசிவம்தானே?!’ என்பான். இந்த வேதாந்தம் இறைவனுக்குச் சரி இல்லறத்துக்குச் சரியா?! அங்கதானே உதைக்குது?!

ஓண்ணுமில்லே! எதாவது விசேஷம்னா துணி எடுக்கறோம். துணி எவ்வளவு ரேட் வருதோ அதே ரேட்டை அப்படியே அச்சு பிசகாம தையல் கூலியாக் கேக்கறான் டைலர்!. பெயிண்ட் அடிக்க மெட்டீரியல் வாங்கினா, பெயிண்ட் கூலியைப் மெட்டீரியலுக்கு சமமாக் கேக்கிறான் சண்டாளன்!. அர்த்தநாரித்துவம் அடப்பாவிகளா இதுலயுமா?

பிளம்மிங்க் மெட்டீரியல் வாங்கினா பிட்டிங்க் சார்ஜஸ் ஈக்வெலா வருது. கேட்டா ‘சார், டீ பதினைஞ்சு ரூபா சார் என்னதான் பண்றதுங்கறான்?!’ கேக்கப் பாவமாத்தான் இருக்கு! துணிவாங்கீட்டு தச்சுப் போடாம இருக்க முடியுமா? ஆடையில்லா மனிதன் அரை மனிதன் சரி. ஆடையின்றிப் பிறந்தோமே ஆசை இன்றிப் பிறந்தோமா?

எதுக்குப்பிரச்சனை? ரெடிமேட் வாங்கலாம்னா… பேண்டுக்கு சட்டை சிக்கமாட்டேங்குது! சேலைக்கு ஜாக்கெட் பிட் சிக்கவே மாட்டேங்குது. ஜாக்கெட் பிட் நூறு ரூபான்னா, ஸ்டிச்சிங்க் ஜார்ஜ் இருநூற்று ஐம்பது நானூற்றைம்பது?!. ஜன்னல் வைக்க ஃபிரில் வைக்கன்னு பிரிச்சு மேஞ்சிடுறாங்க. சரி! இதுக்கு என்ன பண்ணலாம்?

திருச்செங்கோட்டுல மட்டும்தான் அர்த்தநாரி. ஒரு எடம்தான். பாதிக்குப் பாதி. ஜார்ஜஸ் பாதிக்குப்பாதி வந்தாலும் ஒரு தடவைதானே? அப்படீன்னு தையலையும் பெயிண்டிங்கையும் பிளம்மிங்ககையும் மன்னிப்போம்!. ஒருதடவை கொடுப்பதை உவந்து கொடுப்போம்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *