திருமதி சண்டாளி

6
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,357 
 

சபாபதி- இந்திராவின் இல்லற இன்பத்தில், ஒருவழியாகப் புத்திரப் பாக்கியம் கிட்டியது. ஆனால்,என்ன காரணம் என்று தெரியவில்லை, இனி தாம்பத்ய உறவுக்கே தகுதியில்லை என்ற அவந்ம்பிக்கையில், முதலில் பிறந்த தலச்சம் பிள்ளைக்கு, ‘செல்லம்மாள்’ என்று பெய ரை மகிழ்ச்சியோடுதான் சூட்டினார்கள்.

இளமைக் காலத்தில் நடை, நடனங்களில் நளினம் செய்த இடை, நோக்கிய விழிகளையெல்லாம், ஈர்க்காமல் போனதில்லை. ஒருநாள் ஒய்யாரமாக ஒப்பனை செய்து கொண்டவள், அரும்பையூர் வீதிகளில், பாவாடை பரவும் அளவுக்கு நடந்து சென்றாள். அவ்வளவு அங்கலாய்ப்பு இருந்தது அந்த நடையில்.. திண்ணை ஒன்றில், நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருந்த , விடலைப் பையன் ஒருவன்,’செல்லம்மா, செல்லம்மா, நீ யாரு வீட்டு கிண்ணம்மா’ என நக்கலாகப் பாட, நண்பர்கள் சிரித்தார்கள். ஆக்கங்கெட்ட கூதரைகளுக்கு இப்படியொரு ரகளை என்று முனகியபடியே, திரும்பிப் பார்க்காமல் சென்றாள்.

“நூலிடையுடன் கட்டு செட்டாக இருப்பாள்” என்ற வர்ணனை வார்த்தைகள், அவள் விசயத்தில் சில ஆண்டுகள் மட்டுமே மருவாமல் இருந்தன. ஆண்டுகள் மட்டும்தான் கழிந்து கொண்டிருந்ததே தவிர, அந்த உருவம், உருண்டு திரண்டு வர்ணிப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தன. நளினமான இடை, இடுப்புக்கு கீழே உள்ள பெருந்தொடையைச், சமன் செய்யும் அளவுக்கு வீங்கிப் போயிருந்தன. அவளைப் பார்த்து மெச்சிய அப்பா சபாபதியே, மகளின் உருவத்தை நினைத்து, கொஞ்சம் மனத் தாங்கலுக்கு உள்ளானார்.

இப்படித்தான் ஒருநாள் படிக்கிறாளா, இல்லையா என்று, ஒரு பரிசோதனையில் இறங்கிய அவர், ‘பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டாம்’ என, படிப்பை நிறுத்தி விட்டார். ஏனென்றால் பள்ளியிலிருந்து திரும்பக் கொண்டு வந்த, அவளுடைய லஞ்ச் பாக்ஸ் போலவே, எழுதுவதற்காக எடுத்துச் சென்ற நோட்டுக்களும் காலியாக இருந்தன. அப்போது, கணவருக்கு அருகில் வந்து அமர்ந்த இந்திராவிடம், இது பற்றி பேசினார்.

‘என்னடி உம்புள்ளெ சாப்டத்தான் ஸ்கூலுக்குப் போனாளா..? எடுத்துப்போன நோட்புக்கெல்லாம் காலியாக் கெடக்கு’

‘அவ சுத்தபத்தமா ஆளுங்க, சோத்துச் சட்டியெ எப்டி கொண்டுவாரா பாருங்க, அதே மாதிரி நோட்டையும் வீணாக்காம கொண்டு வரணும்னு நெனப்பா போல, இது போதாதா ,அவ சாமர்த்தியத்தை மெச்ச..’ இதுக்குப் போயீ…’ என்று இழுத்தாள் இந்திரா.

‘சரி பள்ளிக்கூடத்துக்கு போக வேணாம்னு நிறுத்துனது உனக்கு சந்தோசந்தானே..?

‘எனக்கு இஷ்டமில்லேங்க.. அவள, டாக்டருக்கு படிக்க வெக்கலாமுன்னு நெனைச்சேன், அதான் ஏமாந்திருவாளோன்னு பய்ந்து மனசு பதைக்கிது..’

‘அதுக்கு ஒரு வழியிருக்கு, அவளை சோதனை எலி மாதிரி யூஸ் பண்ணி டாக்டருங்க கத்துக்கிடுவாங்க, முதல்ல, இவளுக்கு கல்யாணத்தை முடிக்கப் பாப்போம்’

‘..இப்பத்தானெ பதினஞ்சு வயசாகுது, சின்னத்துக்கு என்ன தெரியும்..?’

‘உடனே முடிக்கலேன்னா,படிப்பு வராதது மாதிரி, மாப்ளையும் வர மாட்டங்க, ஏன்னா நாளுக்கு நாள் வீங்கிட்டுப் போறா பாத்தியா..’

‘சரி முடிசசிடலாம் , நம்ம சொந்தக்காரப் பையன் கனகராஜை நாளைக்குப் போய்க் கேட்டுப் பாப்போம்..? என்று எழுந்த இந்திராவிடம் ‘ அந்தப் பய என்ன வேலை பாக்குறான் என்றார் சபாபதி.

‘வயர்மேனா இருக்குறாராம், ஒரு நாளைக்கு ஆறு போஸ்ட்மரமாவது ஏறுவாராம்..’

‘சரி அந்தப்பய ஒத்து வருவாம்போலத் தெரியிது, கேட்டு முடிச்சிடலாம்..’ என்று மனைவியின் யோசனையில சிலிர்த்துப்போன சபாபதி, இந்திரா முகத்தைப் பார்த்து கொஞ்சம் சிரித்து வைத்தார்.

விடிந்தது, வீட்டு வேலைகளை முடித்து கொண்ட இந்திரா, சமையலறைப் பொறுப்பை , இளைய மகளிடம் ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டாள். டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த இருவரும், பன்னிரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து, கனகராஜ் ஊரை அடைந்தனர். கனகராஜ் உறவினர்களிடம் பேசி, திருமணத்தை கனகச்சிதமாக முடிவு செய்தார்கள்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில், ஆனி மாதம் திருமணம் நடைபற்றது. மாப்பிள்ளை, உயரத்தில் அவளை விஞ்சியிருப்பினும், உடல் பருமனில், ‘ நாங்க என்ன எளச்சவங்களா’ என்பதுபோல, இந்திரா மகள் எஞ்சியிருந்தாள். அவர்களது தாம்பத்ய உறவில், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறந்தன். இப்போது இரண்டாவது மகள் வெண்ணிலாவுக்கு, அதேபோன்று சொந்தத்திலேயே மணம் முடித்தார்கள். மணவீட்டுக்கு வந்தவர்கள் செல்லம்மாளிடம் சிலேடையாக சில யோசனையைச் சொன்னார்கள். இது தவிர பேசிப் பழக கூடியவர்களும், சில உத்திகளை காதில் போட்டு வைத்தார்கள்.

இரண்டு பேரும் இந்திராவின் மகளாக இருந்தாலும், அனுபவப் படிப்பில் ஊறிப் போயிருந்த செல்லம்மாளுக்கு, காதில் வாங்கிய யோசனைகளும், உத்திகளும் உதவிக்கு வந்தன. இரண்டுமுறை கர்ப்பம் தரித்த வெண்ணிலாவுக்கு, கரு காணாமல் போனது. இதைக் கணவனிடம் சொல்லி விளங்க வைக்க முடியாது என்பதால், மனைவியும், மைத்துனியும் மறைத்து விட்டார்கள். ஏனென்றால் பல் துலக்குகிறானோ இல்லையோ, தூங்கி எழுந்தவுடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடும் ஜென்மம் அவன்.

புத்திரப்பேறு இல்லையே என, மனதிற்குள்ளேயே புழுங்கிய வெண்ணிலாவின் கணவன், தாம்பத்ய உறவில் நம்பிக்கை இழந்து விட்டான். நண்பர்கள் அவனை, ஒம்போது என்று கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். இதனால், மனைவியின் முகத்தில் விழிக்கவே அஞ்சி ஒதுங்கியிருந்தான். இந்த விவகாரம், இருவருக்கிடையே அவ்வப்போது மனக்கசப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், நேரம் வாய்க்கும் போதெல்லாம், கணவன் வீட்டிற்குச் செல்லும் வெண்ணிலா, உறவு அறுந்து விடக்கூடாதே என்று, சின்ன மாமியார், நாத்தனார்களிடம் குழைந்து கொண்டிருந்தாள்.

பல நாட்களாகப் பொத்தி வைத்திருந்த சூன்யம்,, பூதாகரமாக வெடிக்காமல் இருக்கவும், பங்காளிச் சொத்தை சேதாரமில்லாம் சுருட்டவும், ஒரு முடிவுக்கு வந்தாள் செல்லம்மாள். சகோதரியின் கணவர் வீட்டிலேயே, மகளுக்குத் திருமணம் செய்தாள். திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் , குளத்தில் குளிக்கச் சென்றாள்.அப்போது அங்கு துவைத்துக் கொண்டிருந்த நன்னியம்மாள், ‘மாமன் ஊதாரியா இருந்தாலும், மகளுக்கு பெருச்சாளி மாதிரி மாப்புளையப் புடிச்சுட்டேடி’ என்றாள்.

‘மகளைக் கட்டிக் குடுக்கிறதுக்குள்ளெ, எவ்வளவு போராட்டம்னு எனக்குத்தான் தெரியும், ஏதோ ஒரு வழியா முடிஞ்சது’ அடுத்து நடக்கப்போறது சரியா இருந்தா, ஏம்புள்ளைக்கி ஒரு பாதகமும் இருக்காது, பாக்கலாம் ‘என்றாள் செல்லம்மாள்.

‘உந்தங்கச்சி சொத்தைத் தானே சொல்றே, அது உங்களுக்குத்தான் கிடைக்கும், அவ புழுப்பூச்சி இல்லாத மொட்டை முண்டைடி, அவளுக்கு எப்டி குடுப்பாங்க..?’ அந்தளவுக்கு கூறுகெட்ட பயலுகளா, உங்க ஆளுங்க’

‘இல்லை, அவ புருசன நெனைச்சாத்தான் பயமா இருக்கு..’

‘அடிப்போடி போக்கத்த சிறுக்கி, அதெல்லாம் பயப்பட வேணான்டி, அவனுக்கு வாயிருக்கு, ஆனா பேச்சு இல்லையே. இப்படி வாய்ச்சிருக்கும்போது, ஒனக்குச் சொல்லி வேற கொடுக்கணுமாக்கும்..?’ நீயும் உந்தக்கச்சியும் ஊரையே ஏமாத்துவீங்க, இதுலெ அந்தப்பய எம்மாத்திரம்.. அதுலெ நடிப்பு வேற நடிக்கிறே… என்று, முகத்தை நெளித்தபடி, நன்னியம்மாள் கரையேறி வீட்டை நோக்கி நடந்தாள்.

காலம் கடந்து கொண்டிருந்தது. நன்னியம்மாள் சொன்ன வார்த்தைகள் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பில் செல்லம்மாள் இருந்தாள். அவ்வப்போது காபி, சாப்பாடு என வாய் நனைக்க வரும் தாய்மாமன்கள், சொத்து விசயத்தைப் பேசினார்கள். வீட்டு வேலையை விட்டு, பேசும் இடத்திலேயே காதுகளை கழற்றிப் போட்டிருந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளை விஞ்சும் அளவுக்கு, எழுதி வாங்கத் துடிக்கும் மருமகனால், ஏக குஷி செல்லம்மாவுக்கு. இது இல்லாவிட்டால் இன்னொரு வாய்ப்பைக் கண்டு பிடித்தாள். இதையும் வெற்றிகரமாக முடிக்க, ஆழ்ந்த யோசனையில் சமையலறை வாசலில் உட்கார்ந்திருந்தாள்.

அப்போது குறுக்கிட்ட அவளது வாழாவெட்டித் தம்பி, ‘முதல் கோணல்தான் முற்றும் கோணல். நீ முதலலே ஜெயிச்சிட்டே.. பயப்படாதே எல்லாம் நல்லபடியா நடக்கும், நீ நெனக்கிற மாதிரி, உன்னோட சின்னாத்தா மகளும் ஊருக்கு வந்துட்டா’ என்றான்.

சகோதரனின் வார்த்தையைப் கேட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், ஸ்பெஷல் சட்னி ஒன்றைத் தயாரித்து, தோசை சுடத் தொடங்கினாள். தோசைத் தட்டில் ஊற்றிய மாவு, ‘ யாருக்கிட்டேயும் சொல்லிடாதே’ என்பதுபோல, ‘உஸ்ஸ்ஸ்…’ என்று சப்தம் எழுப்பியது. கனவுகளோடு, வெகுநேரம் சிலையாகிப்போன செல்லம்மாவால், அடித்தோசை கருகி, அவளை உஷார்படுத்தியது.

Print Friendly, PDF & Email

6 thoughts on “திருமதி சண்டாளி

  1. நான் அங்கன்வாடியில் வேலை பா்ர்க்கிறேன். எனது துறையில் சேர்ந்த சில நாட்களிலேயே, ஒருவர்மீது லபுகார் வந்தது. அதிகாரிகள் விசாரித்தார்கள். இவரை ஊஸ்டிங் செய்ய முடிவு செய்தபோது, ஒரு அமைச்சரின் கொழுந்தியா என்று கூறினார். அவர்கள் நாங்களும் சொந்தம் என்றார்கள். இறுதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நன்றி. அவரிடம் இந்தக் கதையைக்காட்டி தெரிந்து கொள்ள உள்ளேன்.

    சாந்தி பிரபாகர்

  2. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் போது. எப்பவுமே இதைப்பற்றிதான் பேசினார்கள். இந்த கதையை படித்த பின் தான் தெரிகிறது. எல்லா இடத்திலும் இப்படி இருக்கும் என்று. சிறுகதைக்கு நன்றி.

  3. சின்றுகதைகள்தளம் எனக்கு ரொம்ப ப்ரியம். திருவாடானை ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, ஒருவர் வருவார். ஏதோ ஒரு கோவிலுக்கு அருகே சொந்த ஊர் இருப்பதாக கூறும், அவர் வீட்டிலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுவருவதாக, அவரது உறவினர் கூறினார்.
    அந்த நபரது பெயர், வள்ளிநிலா என்று நினைக்கிறேன்.
    எங்களிடம் எதுவும் பேச மாட்டார், அதிகாரி ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். மாதததில் இரண்டு நாட்கள் ,கோவிலுக்குச் செல்வ தாக கூறிவிட்டுப் போவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்தபோது, அவருடைய தப்பை மறைப்பதற்காக, தங்கச்சியின் கணவரைப் பற்றியே பேசுவார்.

  4. இது போன்ற சண‌டாளிகள் எல‌லா இடத்திலும் இருக‌கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கூட நடந்துள்ளது. நான் ராமேஸ்வரத்தில் லாட‌ஜில‌ வேலை பார‌க்கிறேன‌. அங‌கு வந‌து தங‌கிய ஒரு ஜோடியின‌ சிசிடிவி பதிவுகளை இப்போது ய கேட்டு தொல்லை செய‌தார‌கள். 10வருசததிற‌கு முன‌ நடந‌தது. இதுபோன‌ந பிரச்சினைதான் நிகழ‌ந‌துளளது எனப‌ புரிகிறது. இன்னும் சில நாட‌களில‌ கொடுத்து விடுவேன். என‌ கண‌ணைத‌ திறந‌து விட்டது இந்‌தக‌ கதை. Thanks

  5. இவர்களைப் போன்ற குடும்பங்களைப் பார்த்துள்ளேன். தகவல்களைக் கேட்டுள்ளேன். நான் பணியாற்றும் அங்கன்வாடியில் கூட, இவளப் போன்ற ஒருத்தி இருக்கிறாள். எனது அதிகாரி சொல்லியே இந்தக்கதையைப் படித்தேன். நன்றாக உள்ளது. சிறுகதை தளத்துக்கு நன்றி.

    கல்பனா
    சிவகங்கை

  6. கிராமப்புறங்களில் இப்போது நடந்து வருகிற ஒன்றுதான் இந்த சண்டாளி என்ற சிறுகதை. எழுத்து வடிவம் த த்ரூபமாக காட்சிகளைக் கண்முன் கொண்டு வருகிறது. நான் அழகிரிசாமி, ஜெயக்காந்தன் கதைகளைப் படித்ததுண்டு. அவர்களைப் போலவே எதற்கும் அஞ்சாமல் இந்தக் கதையை வடிமைத்துத் தந்துள்ளார். நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *