அந்தரப் பிழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 10,248 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்த மகாதேவர் கண் விழித்தார். அவர் பார்வை பூலோகத்தில் பாய்ந்தது. ஒருமுறை உடல் நடுங்கியது. வெள்ளிப் பனிவரையின் குளிரால் அல்ல! மண்ணுலகத்துக் காட்சி அவர் உள்ளத்தைத் தொட்டது. அவர் சமாதியில் ஆழ்ந்திருந்தாலும் அவரது பினைவு, சுடலைப் பொடி போல மக்கி விடவில்லை. அவருக்கு நன்றாக நினை விருந்தது – உலகம் முடிவுற, ஊழிக்காலம் இன்னும் வரவில்லை. வடவைக்கனல் சமுத்திர நடுவிலேதான் தங்கியிருந்தது. ஆனால், இது என்ன? உலகத்தில் அமைதியில்லை. தங்கள் சிருஷ்டியின் சிறந்த ஜந்துக்கள் என்று பூரிப்பு பெற்றார்களே மும்மூர்த்திகள்…அந்த மண்ணுலகப் பூச்சிகள் ஏன் இப்படிக் கொந்தளித்துக் கும்மாளி யீட் வேண்டும்…அவர் உள்ளச் சீற்றம் போல, கழுத்தில் கிடந்த நாகமும் சீறிய்து.

‘காக்கும் தொழிலை அந்தப் பகட்டுச் சாமி சரியாகச் செய்ய் வில்லை போல் தோன்றுகிறது. அவனுக்கு அதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது! ஆடம்பர அலங்காரங்கள் செய்து கொண்டு, அழகு பார்த்து மகிழ்வதுடன் அழகிகளைப் பார்க்க வும் தான் காலம் சரியாக இருக்கும்…சே, அவரவர் வேலையை அவர்கள் ஒழுங்காகச் செய்யா விட்டால்’ என்ன உலகம் ! என்ன சிருஷ்டி!

கோபமுற்ற சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கலாமா, வேண்டாமா என எண்ணினார். அந்த நினைப்பாலேயே நெற்றிக் கண் சிறிது நெருப்பு வீசியது! அக்கனலைப் பொறுக்காமல், கைலாச பர்வதத்தின் பனிக்கட்டிகள் உருகி ஓடத் தொடங்கின. வெயில் கொளுத்தலாயிற்று. கோடைகால ஆரம்பத்திலேயே அகோர மாக இருக்கிறதே என்று சுகவாசிகள் புலம்பலாயினர்.

‘சரிதான். இனி கடலில் வசிக்க வேண்டிய் சீசன். ஆதிசேடா, பைந்நாகக்குடையாய், படுக்கையாய், தோழனாய் உடன் வா’ என்று விஷ்ணு பகவான் கிளம்பினார். அப்பொழுது கூட அலங்காரம் செய்து கொள்ள மறக்க வில்லை!

அப்படி அழகு செய்து கொண்டு கண்ணாடியில் பார்த்து மகிழும்போது தான், சாம்ப மூர்த்தி ஆவேசமாக உள்ளே நுழைந்தார், ‘என்ன வோய், உலகம் போகிற போக்கைப் பார்த்தீராங் காணும்?” என்று கேட்டுக் கொண்டே. விஷ்ணுவின் நிலை கண்ட பரமேச்வரனுக்குக் கோபம் அதிகரித்தது. நீரோ கடவுளோ! கெட்ட கேடா ! காத்தல் தொழில் நடத்தும் லட்சணம்! ஹூம்’ என உறுமினார்.

ஸ்ரீமந் நாராயண மூர்த்தி மோகனப் புன்னகை புரிந் தார். ‘என்ன ஸ்வாமிகளே! ரொம்ப ஆத்திரப்படுகிறீர்களே! உலகம் போக வேண்டிய போக்கிலே தான் போகிறது’ என்ற வார்த்தைகள் அவர் உதட்டுக்கு குறு நகைது. ககை நெளிவுடன் கலந்தன.

‘மண்ணாப் போச்சு, போம்.’

மாயவன் சிரித்தார்! ‘அதுதானே கடவுளே உலக நிலை. உலகம் போக வேண்டிய நிலைமையும் கூட்!’ என்று சொல்லிக் கொண்டே, ‘லஷ்மி! வரசனைத் தைலம் எங்கே? சே, அதையே காணோமே’ என்று முணங்கினார்.

சிவனுக்கு அடங்காத கோபம் ‘வாசனையாவது மண்ணாவது? மண்ணுலகம்…’

‘மண்ணாத்தானே போகணும்! அப்புறம் என்ன?’

‘அது உண்மை. மண்ண லிருந்து நீ உண்டானாய்; மீண்டும் மண்ணேயாவாய் என்ற தத்துவப்படி…..’

புதிதாக எழுந்த குரல் இருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

‘அடடே ! கர்த்தரின் திருக்குமாரரா! வாரும் பிள்ளாய்!’ என்றார் விஷ்ணு.

‘வருக’ எனத் தலை அசைத்தார் சிவன்.

‘என்ன குமாரரே! உமது அருள் நோக்கு பொங்கிப் பாய்ந்த பூப்பிரதேசங்களின் நிலைமையைக் கவனித்தீரர்! ஏன் இப்படி!’

அவர்களுக்கு “ஐயோ! அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள்!’ என்று கண்ணீர் வடித்தார் ஏசுநாதர்.

‘குமாரரே, வருத்தற்க! கவலைப்பட வேண்டியவாகள…’

விஷ்ணு பேச்சை முடிக்க வில்லை. சிவன் சிறினார். நீர் தாங் கணும்! ரொம்ப அற்புதமாகப் பாதித்தீரே. போர்த்தா விளைவு களைப் பற்றிக் கவலைப்பட்ாதே எல்லாம் எனது அருள். நீ உன் கடமையைச் செய்’ என்று. அவர்கள் இஷ்டம்போல் கடவுளே கதி என்று பாரத்தை நம் தலையில் போட்டு விட்டு கந்தர் கோலம் பண்ணுகிறார்கள். நீர் என்னடான்னா சிங்காரம் செய்து சொகுசாக வாழ்கிறீர். அப்புறம் உலகம் எப்படி ஐய்ா உருப்ப டும்? என்று நான் கேட்கிறேன்.’

‘பாபிகளை ரட்சிக்க பரமண்டலத்திலே யுள்ள பிதர் மோட்சி சாம்ராஜ்யத்தை இங்கே இறக்குவார்; ஜனங்களே என்னை விசுவாசியுங்கள் என்று தொண்ட கிழியக் கத்தினேன்’ என்றார் ரட்சகர்’

“ஆமா, என்ன பிரயோஜனம்? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூடத் தான் சொன்னீர். ஆகவே ஒவ்வொருத்தனும் பலமாகத் திருப்பியாவது. ரெண்டு – கன்னத்திலும் அறைகிறான்!’ என்று அலுத்துக் கொண்டார் சிவன்.

‘சரி, இப்போ என்ன செய்ய வேணும் சுவாமிகளே’-இது விஷ்ணு .

‘சொல்வதென்ன! எமனுக்கு வேலையே இல்லையாம். இந்த மனித ஜந்துக்களே எமன்களாகி விட்டனவாம். அது காணாது என்று மிலிடெரி லாரி என என்னவோ. சிருஷ்டித்து எமன் வேலையைக் கெடுக்கும் எமனாக வரமளித்து உலாவவிட்டு விட்டதாம். இன்னும் என்னவோ அணு குண்டு அது இது என்று எவ்வளவேர் !’

‘நல்லதாப் போச்சு, சிவனாரே நீர் இன்னும் கொஞ்ச காலம் கண் மூடியிரும்…’

‘உலகம் மண் மூடிப் போகட்டும், என்பது உம் எண்ணமோ? அடக் காக்கும் பிரகிருதியே!’

‘நீர் என்ன வாழ்ந்தீர்! இல்லை, பிரம்மா தான் என்ன கிழித்து விட்டார்! சிருஷ்டி சிறப்பாக இருந்தால், உலகம் என்றோ உருப்பட்டிருக்குமே; அதில்லை. ஆகையால் அழிகிறது.

‘பிறர் கண்ணில் விழுந்துள்ள உத்திரத்தை-இல்லை, இல்லை! தூசியை இல்லை துரும்பை:..என்ன அனுவா..’

‘என்ன தவறு! என்ன கொலை!’ என்று சொல்லிக் கொண்டே முருகபிரான் வந்து சேர்ந்தார். ஏசு முனியைப் பார்த்து ‘ஐயா தமிழ் மொழியை நன்கு பயின்றிருக்கக் கூடாதா? அது தெரியாமல் மொழி பெயர்ப்பு வேலையில் ஏன் இடுபட்டீர்!’ என்றார்.

ஏசுமுளி அதைக் கேள்ாதவர் போலவே ‘இதோ வந்து விட்டது! பிறர் கண்ணில் கிடக்கும் அணுவை அகற்றும் முன்பு, உன் கண்ணில் கிடக்கும் தூசியை விலக்குக’ என்றார்.

‘இப்படி நீர் போதித்தீராக்கும்?’ என்று கேட்டார் கதிரேசன்.

‘ஆமாம். இப்போ இவர்கள் குறை கூறத் தொடங்கியதும் அது நினைவுக்கு வந்தது.’

‘நன்று, நன்று…சரி எந்தையே! அம்மை நும் வரவுக்காக அங்கு காத்திருக்கிறாள்’ என்று தமிழ்க் கடவுளான குமரப் பெருமான் திருவாய் மலர்ந்த ருள், சிவபெருமான் அவசரம் அவசரமாகக் கிளம்பினார். அதைக் கண்ட விஷ்ணுவுக்கு சிரிப்பு தாங்க முடிய வில்லை. சிவனார் முறைத்தார், ‘இப்ப என்ன கண்டீராம் இப்படிச் சிரிக்க’ என்று.

‘உலக நிலையின் காரணத்தை எண்ணியதும் சிரிப்பு வந்தது.’

ஏசு முனி ‘என்ன காரணம்?’ என்றார்.

‘எல்லாம் சக்தியின் லீலை!’

சிவனுக்குக் கோபம் வந்து விட்டது என்பதை அவரது கண் களே கூறின. ‘என்ன, என்னைக் கிண்டல் பண்ணுகிறீரா!’ என கர்ஜித்தார். மாய்வன் புன்னகையுடன் சொன்னார், ‘இல்லை ஐயா யாரை யார் கிண்டல் செய்ய முடியும்? பொதுவான விஷய மாயிற்றே!’

விளங்க வில்லை.

உலக மக்களின் மீது நம் தேவியாரின் கருணாகடாட்சம் அள் வுக்கு மீறி விட்டது. சரஸ்வதியின் அருள் நோக்கு அதிகம் பரவிய்தால், ஞானம் அதிகரித்து ஆராய்ச்சி விஞ்ஞானம் என் றெல்லாம் அகண்டு, அவையே நாசத்திற்கு ஏதுவாகி விட்டன. லக்ஷ்மி புன்னகை புரிந்தாள், செல்வம் சிதற. அது அழிவு வேலைக்கும், போட்டி, பொறுமை, போர் இவைகளுக்கும் உத அசின் நன, சிவ சிதியின் இருபையால் வெதி எற்பட்டு….’

‘ஓய், யாரிடம் பேசுகிறீர் என்பது நினைவி லிருக்கட்டும்’ என உறுமினார் பரமேஸ்வரன்.

‘தந்தையே வருக. இவர் பிரசங்கத்தைக் கேட்க நாம் என்ன அர்ஜுனனா! போவோம்’ என்று அவசரப் படுத்தினார் கார்த்தி கேய்ன். இருவரும் சென்றதும் விஷ்ணுவும் மறைந்தார்.

ஏசுநாதர் ‘என்ன பிழைப்பு! திரிசங்கு நிலை, மோட்ச சாம் ராஜ்யத்தை எப்போ பூமியில் இறக்கலாம்? ஒரு எழவும் புரிய் மாட்டேன் என்கிறதே!’ என முணங்கிக் கொண்டே நடந்தார். தம்மை மறந்த சிந்தனையில் ஊர்ந்ததால் திடீரென்று யாருடனோ முட்டிக்கொண்ட்தும் தான் நினைவு வந்தது. ஏறெடுத்துப் பார்த்தார்.

‘ஓ! புத்த முனியர்!…மன்னிக்க வேண்டும். மோட்ச சாம் ராஜ்ய நினைவாகவே நடந்தேன். அது தான்…’ ஏசுநாதர் தலையைச் சொரிந்தார்.

‘அன்பு, அன்பு, அன்பு’ என்று போதித்தவர், தம் தலைவலியைக் கூட கவனியாமல் ஏசுவின் தலையை அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுத்தார் ‘நான் சிந்தனையிலேயே லயித்து விட்டேன். ஒரு புதிர் விடுபடவே யில்லை.’

‘என்ன?’

‘அது தான்-என் சிஷ்ய்ன் ஆனந்தன் கூடக் கேட்டானே! என் மரணப் படுக்கையில் : ஸ்வாமி, இப்பொழுதாவது சொல் லுங்கள்? கடவுளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் இருக்கிறாரா? இல்லையா…?’

‘நீங்கள் என்ன பதில் சொன்னீர்களோ?”

‘மோனப் புன்னகைதான்!’

‘அதன் அர்த்தம்?’

‘எவ்வளவோ !’

‘சரி, இன்று தங்கள் கருத்து என்ன?’

‘எதைப் பற்றி?’

‘கடவுளைப் பற்றித் தான்!”

புத்த பகவான் தலை நிமிர்ந்து நோக்கினார். அன்பு நெளியும் புன்னகை புரிந்து, மௌனமாக முன்னேறினார். ‘இப்பவும் அந்தரத்திலே தானா முடிவு!’ என முண முணத்தார் ஏசு.

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *