“முரசும், சங்கமும், முழங்கும்படி மூவேந்தருடன் போரிட்டான், பறம்பு மலைத் தலைவன் பாரி வெற்றித்தார் பூண்டு வில்லேந்திய ஓரி கொல்லி மலையை ஆண்டான். காரி என்ற கருங்குதிரையைச் செலுத்திப் போர் வென்றான் மலையன். குதிரை மலைத் தலைவன் அதியமான். பேகன் பெரிய மலை நாட்டு மன்னன். மோசி பாடப்பட்டான். ஆய் தேடி வந்தவர் வறுமையை போக்கினான். அவர்கள் எழு பெரும் புரவலர்கள் மாய்ந்த பின்னரும், அவர்தம் மரபைக் காக்க வல்லோன் என்றுரைக்கும் மாண்புடைய குமணனே, உன்னை நான் நாடி வந்தேன், நின் புகழ் பாடி வந்தேன்” என்றான் பாணன்.
அப்பொழுது, பலாமரத்தில் இருந்த ஒரு குரங்கு, தான் பறித்த பலாப் பழத்தைக் காட்டி, மற்றொரு குரங்கை அழைத்தது.
குமணன் அதைப் பாணனுக்குக் காட்டிச் சிரித்தான்!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்