
சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அப்படியொரு கட்டாயம், சமூகத் தேவை எதுவுமே இல்லை. சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும் – சுந்தர ராமசாமி