கம்பரா? வம்பரா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,509 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆந்தையூர் என்னும் ஊரிலே அம்பர்கிழான் என் னும் பெயருடைய ஓர் இளைஞன் இருந்தான். அம்பர் கிழான் வம்பு மொழிகளைப் பேசுவதில் வல்லவன். எவ் விடத்திற்குப் போனாலும் யாரைக் கண்டாலும் ஏதே னும் குறும்பு மொழிகளைப் பேசிக்கொண்டே இருப் பான். அதனால் அவனுக்குப் பலரிடமிருந்து வசவுரை களும் சமயம் நேர்ந்தால் அடியும் கிடைக்கும். அம்பர் கிழான் அவைகளை ஒரு பொருட்படுத்தமாட்டான். ஒருகால் ஆந்தையூருக்கு ஓர் அறிஞர் வந்தார். அவர் இராமாயணச் சொற்பொழிவு செய்வதிலே மிகவும் சிறந்தவர். ஊரார்கள் அந்த அறிஞரைக் கொண்டு ஒரு சொற்பொழிவு செய்யுமாறு செய்தனர். அன்று அவர் பேசியது அனுமான் இலங்கையில் தீமூட்டி யதைப் பற்றியதாகும்.

மக்கள் புலவருடைய சொற்பொழிவிலே திளைத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அம்பர்கிழான் சும்மா இருக்கவில்லை. அவனும் அறிஞருடைய சொற்பொழிவில் மகிழ்ந்தானாயினும் தன்னுடைய மதிப்புரையை, ‘இவர் கம்பரா? வம்பரா?’ என்னும் சொல் மூலமாக வெளிப்படுத்தினான்.

அம்பர்கிழானுடைய உரை சிலருக்குச் சினத்தை உண்டு பண்ணியது. அவர்களுள் முன்சினக்காரர் ஒருவர் இருந்தார். அவர் அம்பர்கிழானுடைய கன் னத்திலே ஐந்தாறு அறைகள் கொடுத்து விட்டார். பக்கத்திலிருந்தவர்கள் அறை கொடுப்பதைத் தடுக்க வில்லை. ‘வாயாடிப் பையலுக்கு வேண்டும் நன்றாக!’

‘அடங்கா மாட்டுக்கு மூங்கில் தடிராசன்’ என்று சொல்லிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்கள்.

அடியுண்ட அம்பர்கிழான் மிகுந்த வருத்தமடைந் தான். அது முதல் மனம்போனவாறு இழிமொழிகள் பேசுவதை நிறுத்திக்கொண்டான். நன்மொழிகள் தான் எந்த இடத்தினும் எல்லோரானும் போற்றப் பெறுமே யல்லாமல், இழிமொழிகள் போற்றப்பெற மாட்டா. இழிமொழிகளால் துன்பந்தான் உண்டாகும். ஆகையால், எவரும் சிறுமையான மொழிகளைப் பேசுதல் கூடாது.

“நொய்ய வுரையேல்” (இ-ள்.) நொய்ய – பயனற்ற சிறுமொழிகளை, உரையேல் – நீ பேசாதே .

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *