கெட்டுப்போன காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 2,103 
 
 

நண்பனை சந்திப்பதற்காக பஸ்ஸை எதிர்பார்த்துக்கொண்டு பஸ் தரிப்பிடத்தில் நீண்டநேரமாக காத்துக்கொண்டிருக்கிறேன் பஸ் வருவதற்கான சாத்தியக்கூறுகளை எதுவும்இல்லை இப்படித்தான் ஒரு அவசரத்திற்கு நான் எதிர்நோக்கும் குறிப்பிட்ட பஸ் பல முறை என்னை திறீவீலறில் போகவைத்திருக்கின்றது

கால்கள் வலி எடுத்த போதும் அமர்ந்துகொள்ள இடம் இல்லாதபடி தரிப்பிட ஆசணத்தை ஆர்ப்பரித்திருந்தார்கள் எனக்கு முன் வந்தவர்கள், அவர்கள் எல்லோரும் பஸ்ஸுக்காகத் தான் காத்திருக்கின்றார்களா என்று எவராலும் சரியாக கூறமுடியாது, உண்மையான பிரயாணி கால் வலிக்க காத்துக்கொண்டிருப்பான். சில இளசுகள் கதை அளந்துகொண்டும் தமது காதலுக்கு தீனிபோட்டுக்கொண்டும் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பார்கள்.

காலம் கெட்டுப்போய்விட்டது என்று யாரும் சும்மா சொல்லியிருக்கமாட்டார்கள். இப்போ இந்தநிமிடம் எனக்குப் பின்னால் காலம் கெட்டுக்கொண்டுதான் போய்க்கொண்டிருக்கிறது என்றால் நம்பவா போகிறீர்கள்…

“என் மீது நம்பிக்கை இல்லையா”

“அப்படி இல்லை அதெல்லாம் பிறகு பார்ப்பம்”

“பிறகு என்றால்..”

“கலியானத்திற்கு அப்புறம்”

“அதெல்லாம் முடியாது எனக்கு இப்போ வேனும்”

“முடியாது..”

“முடியாது என்றால் இன்றுதான் கடைசி, நான் இனி உன்னை சந்திக்கவேமாட்டேன்”

எனக்கு இந்த வசனங்களை வைத்து ஒரு சிறுகதையோ ஒரு நாடகமோ எழுதிவிடலாம்என்று தோண்றினாலும் இந்த இடத்தில் காலம் சென்றடைரக்டர் பாலச்சந்தர், அல்லது பாக்கியராஜ், அல்லதுபாரதிராஜா யாராவது ஒருவர் பஸ்ஸுக்காக காத்துக்கொண்டிருந்தால் வயது வந்தவர்களுக்கான ஒரு திரைப்படத்திற்கு நல்ல வசனம் கிடைத்து விட்டதோறனையில், முத்தக் காட்சிக்கு கமலஹாசனை போடுவதா அல்லது ஒரு புதுமுகத்தை போடுவதா என்றும் தலையை சொறியக்கூடும்.

வீட்டில்… மகனோ..மகளோ மாலைநேரவகுப்புக்கு போயிருப்பார்கள் இன்னும் பஸ் கிடைக்கவில்லை போலும் என்று பெற்றோர்கள் விஜேய் ரீவி யின் முன்னால் ஆறுமணி நாடகத்தின் அணுசரணை விளம்பரங்களை பார்த்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் இங்கு செல்வங்கள் திரைப்படதிற்கு ஒத்திகை பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று எவராவது சொன்னால் “நாங்கள் அப்படி பிள்ளை வளக்கவில்லை நீ உமது வேலையயைப்பார்” என்று சண்டைக்கு வரக்கூடும். ”அதோ பஸ் வந்துவிட்டது நான் போக வேண்டும் வீட்டில் தேடிக்கொண்டிருப்பார்கள் நாளைக்கு எல்லாம் தருவன்” அவள் வேண்டிக்கொண்டு நின்றாள். பஸ் உருமிக்கொண்டு வந்து நின்றது. அவன், அவளது கையை பற்றிக்கொண்டு நின்றான். “அண்ணே றைற்” நடத்துணர் அவர் காலத்து சினிமாப்பாடலின் வரிகளுக்கு புதிய வடிவில் இசையமைத்துக்கொண்டிருந்தார், பஸ் நகர ஆரம்பித்தது, தெரு விளக்குகள் எரிய அரம்பித்தன, அவள் சினுங்கிக்கொண்டு கீழே விழுந்த புத்தகத்தைகூட உணராதவளாய் அவனுக்குள் கட்டுண்டு நிண்றாள், அடுத்த பஸ்…வருவதென்றால்.. வீட்டில் பார்த்துக்கொண்ட்டிருக்கும் அந்த நாடகத்தின் தொடர்முடிவில், தொடரும் என்ற வாசகத்திற்கு பதிலாக “நாளை அவள் வருவாளா.” என்று அன்றைய நாடகத்தின் மாமி மருமகள் சண்டைகாட்சியை முடிக்கவேண்டும்.

“என்னங்க இன்னும் மகள் வரயில்ல இருளாயிற்று ஒருக்கா டவுன்வரை பார்த்திட்டு வாங்களன்”

“இன்று பஸ் லேட்போல சைக்கிலுக்கும் பெற்றோல் கம்மியாக கிடக்கு மீண்டும் பெற்றோல் வரிசைகள ஆரம்பித்திட்டாங்க சற்று பார்ப்போமே மகள் திறீவீலரிலாவது வந்து சேரும்”

வீட்டில்.. பெற்றோர்களுக்கு மகளும் வேண்டும் நாடகமும் வேண்டும் என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பார்கள்,ஆனால் இங்கு நடப்பதோ வேறு அவள் அவனுடன் திறீவீலறில் தொத்திக்கொண்டு போனதை நம்பவே மாட்டார்கள், இந்த அசிங்கத்தை யாரிடம் போய் சொல்வது இந்த சமுகத்தை எப்படி திருத்துவது சில வினாடிகள் அவர்கள் விட்டுச்சென்ற இடத்தில் அமர்ந்தவனாக சமுக சீர்திருத்தவாதி என்ற நினைப்புடன் வெளியே சுற்றும் முற்றும் நோட்டமிடுகின்றேன் ,நான் போக வேண்டிய பஸ் ஏறமுடியாத நெரிசலுடன் முன்னால் வந்து நிற்கின்றது ஒருமுறை பார்த்தால் மீண்டும்ஒரு முறை பார்க்கத்தூண்டும் அழகுடன் ,எனது கணிப்பில் இருபது வயதை எட்டியவளாக யாரோ அவள் யாரோ ஒருவனுடன் இறங்கிக்கொள்கிறாள் யாரோ அவன் “மீண்டும் நாளை” என்ற சைகையுடன் அவளை தனியே விட்டுவிட்டு எதிரேவந்த திறீவிலரில் மறைந்துபோகிறான்.

இனி நானும் முப்பது ரூபாய்க்குள் செல்லவேண்டிய பிரயாணத்தை முன்னூறு ரூபாய் கொடுத்தாவது திறீவீலரில் செல்லவேண்டியதுதான், செல்லவேண்டிய பாதைகள் தெரியாவிட்டால் ஜநூறோ அதற்கு மேலயோசெலுத்தவேண்டி இருக்கும்,அப்படித்தான் திறீவீலர் ஓட்டுணர்கள் அப்பாவிகளை கொள்ளையடிதுக்கொண்டிருக்கிறார்கள், ஒருமுறை கொழும்பிற்கு வந்த புதிதில் கையில் இருந்ததை எல்லாம் தொலைத்துவிட்டு நண்பர்களிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கடன் பட்டு ஊர்வந்து சேர்ந்திருக்கின்றேன்.

வாட்டசாட்டமான ஒரு இளைஞன் எனது யாரோ அவளின் முன்னால் மோட்டார்சைக்கிளை முறிக்கிக்கொண்டு அழைக்கின்றான் இப்போது யாரோ அவள் யாரோ ஒருத்தனுடன் தொத்திக்கொண்டு பறந்து செண்றுவிடுகிறாள் ,நான் சைக்கிளின் பின் வெளிச்சம் மறையும் மட்டும் பார்த்துக்கொண்டு நிற்கின்றேன்.

“உனக்கு என்ன தேவை இல்லாத வேலையெல்லாம் யார் யாரோடும் போகட்டுமே ஏன் வீணாக மற்றவர்களின் விடயத்தில் தலையிட்டு தலையை குளப்புகிறாய்” எனது மனசாட்சி உறுத்திக்கொண்டிருக்கிறது.

“எதுவென்றாலும் பறவாயில்லை அடுத்தவனின் பொருளில் ஆசைப்படக்கூடாது கடைசியில் உமக்கு அது அழிவைத்தான்கொண்டு வரும்”என்றோ ஒரு நாள் இஸ்லாம் பாட ஆசிரியர் கூறிய அந்த வார்த்தைகளுடன், இஸ்மாயில் சேர் நினைவில் வந்து போகிறார்.

பாடசாலை வாழ்க்கை என்பது எவராலும் மறக்கமுடியாத காலங்கள்தான் ஆசிரியர்கள் மறைந்தாலும் அவர்களின் சில அறிவுரைகள் காலம் முழுதும் வாழ்ந்துகொண்டே இருக்கும் சில தவறுகளின் போது அவர்களின் போதனைகள் முன்னால் வந்து எம்மை காப்பாற்றவும் கூடும்.

அது ஒரு நிலாக்காலம்தான் ஆனால் மிக மிக அண்மையில் சீருடைஅணிந்து வரும்படிஅறிவுரை கூறிய அதிபரை மாணவன் தாக்கிய சம்பவங்கள் ஊடகங்களில் பதிவாகி இருப்பது மிகவும் கண்டிக்கபடவேண்டியதும் எதிர்கால சந்ததிகளுக்காக தடுக்கப்படவேண்டியவைகள்.

”மச்சான் எங்கடா நிற்கிறாய் நான் வரவா..”.

நான் சந்திக்கவேண்டிய நண்பனின் கைபேசி அழைப்பு அது.

“தேவை இல்ல மச்சான் இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன்” ஒரு பொய்யை சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுகிறேன், இருந்தபோதும் நண்பனின் அந்த அழைப்பு இல்லாவிட்டால் இன்னும் பல அசிங்கங்களை தலையில் அள்ளிப்போடவேண்டி இருக்கும், திறீவீலரை அழைக்கப்போன என்னை ஒரு குரல்…வழிமறிக்கின்றது.

“எங்க போகப் போறிங்க“

“…”

“பக்கத்திலதான் ஹோட்டல் இருக்கு, பெரிசா தேவையில்ல”

“…ம்…எவ்வளவு..”

“ஜநூறு..” யாரோ அவளுடன் நான்.

பக்கதில் சற்று தள்ளி அமர்ந்திருந்த பிச்சைக்காரணிடம் யாரோ அவள் கேட்ட ஜநூறை கொடுத்துவிட்டு திறீவீலரில் ஏறிக்கொள்கிறேன்.

அவனது ஒருவேளை பசியாவது தீர்ந்துவிடட்டும் என்று கொடுத்துவிட்டு எதிரே வந்த திறீவீலரில் ஏறிக்கொள்கிறேன், ஒருவேளை என்னை அவள் ஆண்மை இல்லாதவன் என்றோ இந்தக் காலத்திலும் இப்படியானவனா என்றோ எப்படி என்றாலும் நினைத்துக்கொள்ளட்டும், திறீவீலருக்குள் இருந்தபடி அவளை நோட்டமிட்ட போது அவள் அந்த பிச்சைக்காரனுடன் கதைத்துகொண்டு நின்றாள்.

– 04/02/23, தமிழன் வாரஇதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *