கருக்கொண்ட மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 437 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் நான்கு 

கிராமங்களில் உள்ள துப்பாக்கிகள் அனைத்தும் பொலிசில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. மிகப் பயங்கரமான காட்டுப் பகுதிக்கு துவக்குகள் இல்லாமல் செல்ல முடியாத நிலை உரு வாகியிருந்தது. வனவிலங்குகள் வேறு ஆங்காங்கே வெள் ளாமையை நாசமாக்கிக் கொண்டிருந்தன. 

ஒரு மாதத்திற்கு முன் பயிர்களின் பாதுகாப்பு கருதி, விபர மாக விஸ்தரித்து, வெள்ளாமை வெட்டி முடியும் வரைக்கு மாவது, துவக்குகள் தம்வசமிருக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி விண்ணப்பித்திருந்தார்கள் விவசாயிகள். 

அதிஷ்டவசமாக நான்கு துப்பாக்கிகளை மட்டும் வைத் திருக்க அனுமதி கிடைத்தது. 

கிரி பண்டாவும் நண்பர்களும் மகிழ்ந்து போனார்கள். 

அவர்கள் ஹலீம்தீன் குறிப்பிட்டுள்ள அந்தப் பயங்கர காட் டுப் பகுதியின் நடுவே தேடுவாரற்று மனித சஞ்சாரத்திற்காகத் தேங்கிக்கிடக்கும் அந்த விவசாய நிலப் பரப்பைப் பார்வையிட ஆயத்தமானார்கள். 

‘இனவாதத்தை ஒழித்து, மானுட நேயத்துடன் வருபவர்கள் மட்டுந்தான் என்னைத் தீண்ட முடியும்’ என்று அந்த மண் சவால் விட்டது. 

‘குறுகிய நோக்கங்களோடு வந்தால், என் மீது வாழும் மிரு கங்களே உங்கள் மணங்களை மோப்பம் பிடித்து, உங்களுக்கு தண்டனை வழங்கும். ‘ என்று சொல்வது போல் இருந்தது. 

ஒரு புனிதமான திங்கட்கிழமை காலை மலர்ந்ததும் ஒருவர் பின் ஒருவராக வந்து கிரிபண்டாவின் திறந்தவெளி மண்ட பத்தில் சேரத் தொடங்கினார்கள். 

நேரம் போய்க் கொண்டிருந்தது. 

‘பத்துப்பேரில் இன்னும் குணத்திலக்காவைக் காணவில் லையே… எல்லோரது பார்வையும் சாலையில் லயித்துக் கொண்டி ருந்தது. 

ஒருவேளை சமரசிங்க அவனையும் குழப்பியிருப்பானோ தெரியவில்லை. எல்லோரது சந்தேகமும் வலுவடைந்து கொண் டிருந்தபோது, பொடி மாத்தயாவின் டிராக்டர் வண்டியின் கரகரத்த குரல் கேட்டது. குணத்திலக்காவும் பதினோராவது ஆளாக அவனது சோடி சமரசிங்காவும் வந்து கொண்டிருந் தார்கள். கிரிபண்டாவின் டிராக்டர் வேலை செய்து களைத்துப் போயிருந்ததால் சேர்விஸுக்கு’ போடப்பட்டிருந்தது. அத னால் தான் இந்த ஏற்பாடு. 

டிராக்டர் எதுவானாலும் அடர்ந்த காடுகளின் மேடு பள்ளங் களில் பக்குவமாகச் செலுத்தும் லாவகமும் திறமையும் குணத் திலக்காவுடையது. குணத்திலக்கா வராமல் சமாளிக்க முடியாது. அவன் வந்தால் நிச்சயம் சமரசிங்காவும் தொத்திக் கொள்வான். அது தவிர்க்க முடியாதது. 

“…எனவா வெலாவட்ட…” 

வேட்டைக்காரர்களின் முகங்களில் பரம திருப்தி.

அனைவரும் சுறுறுப்பாக ஆயத்தமானார்கள். 

கிரிபண்டா ஓர் அனுபவமுள்ள வேட்டைக்காரன். அறுபதி லும், வேட்டை என்றாலே போதும். எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்து விடுகிறதோ. ‘மணியன்’ வேட்டை என்றாலே உஜார்தான், என்று முஸ்லிம் கிராமவாசிகளின் பாராட்டைப் பெற்றவர். 

கிரிபண்டா அடிக்கடி ஒரு கதை சொல்வது வழக்கம். நாற்பது வருடங்களுக்கு முன் தனது இளமைப் பருவத்தில், அநுராதபுர பொலிஸில், ஒரு மலாய் பொலிஸ்காரருடன் தனக்கு சினேகம் இருந்ததாம். அவருடைய பெயர் உஸ்மான். அவர் வேட்டையில் ஒரு வேங்கை. வேட்டையில் பல நுணுக்கங்களை அந்தப் பொலிஸ் காரரிடமிருந்துதான் கற்றிருக்கிறான். 

இன்றைக்கும் வேட்டைக்கென்று நீட்டு நீட்டாக நான்கைந்து ‘பனை கருக்கை’ வெட்டியபோது உஸ்மான் பொலிஸ்காரரின் ஞாபகம் வந்தது. எத்தனையோ வருடங்களுக்கு முன் கிரி பண்டா அந்தப் பொலிஸ்காரரிடம், ‘என்னத்துக்கு ஐயா இந்தப் பனைக் கருக்கு?’ என்று நையாண்டியாகக் கேட்டபோது ‘கால மும் சந்தர்ப்பமும் வரும்போது நீங்கள் அறிவீர்கள்’ என்று சொன்ன ஆறாம் மாதத்தில் அந்த உண்மையை அனுபவமூல மாக அறிந்து வியப்புற்றான் கிரிபண்டா. 

அன்று கிரிபண்டாவும் மலாய்ப் பொலிஸ்காரரும் வேறு இருவரும், காட்டுவழியே துவக்குகளை ஏந்தியவண்ணம் சென்று கொண்டிருந்த போது பின்னால் ஒரு கரடி அவர்களைப் பின்தொடர்ந்திருக்கிறது. வேட்டைக்குச் செல்லும்போது முன்னால் மட்டும் பார்த்துக் கொண்டு போகக்கூடாது. ஆளுக் காள் மாறிமாறி எல்லாப் பக்கங்களிலும் அவர்களின் பார்வை யும், கவனமும் லயித்திருக்க வேண்டும் என்பது விதி. 

பொலிஸ்காரர் பின்னால் சாடையாகத் திரும்பிப் பார்த்து, நிலைமையைப் புரிந்து கொண்டார். பயமும் பதட்டமும் அடை யாமல், கழுத்தின் பின்புறத்தில் தொங்கும் பையில் பனைக்கருக்கு பத்திரமாக இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொண்டார். 

“நண்பர்களே, பின்னால் வந்து கொண்டிருக்கிறார். பதட்டப் படாமல் மெள்ளமாக எட்டி நடந்து பற்றைக்குள் பதுங்கிக் கொள்ளுங்க. முடிந்தால் மரத்தில் ஏறிக் கொள்ளுங்க. நான் பின்னடைந்து சமாளித்துக் கொள்வேன்….” என்றவர் பின்னால் கையைப் போட்டு, பனைக்கருக்கொன்றை இழுத்தெடுத்து, பின்புறம் திரும்பாமலே அதை ஒரு விசிறியைப் போல் ஆட்டிக் கொண்டே நடந்தார். ஆனால் அவருடைய அந்தப் பலப்பரீட் சைக்கு நேரம் இருக்கவில்லை. பின்னால் பற்றைக்குள் மறைந் திருந்த கிரிபண்டா, துவக்கு விசையை அழுத்தி விட்டான். வயிற்றில் ஒரு சூடு, தலையில் ஒரு சூடு. மறுகணம் கரடி தரையில் சாய்ந்தது. 

உஸ்மானுக்கு பொல்லாத கோபம் வந்து விட்டது. 

“ஏன் சுட்டீங்க….. ? நான் திரும்பாம பின்புறத்தில் இந்தப் பனைக்கருக்கை ஆட்டிக் கொண்டு வந்தேன். கத்திபோல் கூர் மையாக இருக்கும் இந்தக் கருக்கை கரடி வந்து பற்றிக் கொண்ட தும் அதன் கைகள் வெட்டுப்பட்டு, இரத்தம் கசியும். இரத் தத்தைக் கண்டதும், பயந்து ஓடிவிடும் சுபாவமுடையது கரடி. இதுதான் அந்த ரகசியம். அதை நான் நிரூபித்துக் காட்ட ஒரு அருமையான சந்தர்ப்பம்… சே. நாசமாக்கி விட்டீங்களே. ‘ 

“அந்தக் கரடியை சுட்டு வீழ்த்துவதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும்…..அதனை உங்களுடன் மல்லுக் கட்டவிடுவது ஆபத்தானதல்லவா?” 

“அதெல்லாம் எனக்கு சிம்பள்… கிரிபண்டா, உங்களுக்கு மனசிலே பயம் இருக்கு. வேட்டைக்காரர்களுக்கு புயம் இருக்கக் கூடாது. சரி… சரி… இன்னொரு சந்தர்ப்பம் வரட்டும்….” என்று கோபம் தணிந்து உரத்துச் சிரித்தார். இச்சம்பவத்தை நினைவு கூர்ந்தாலே கிரிபண்டாவுக்கு வீரம் பிறந்துவிடும். 

வேட்டைக்குரிய சீருடையை தூசுதட்டி அணிந்து கொண்டான்.

காவிநிற கட்டைக் கழிசானும், அதே நிறத்தில் கனத்த சேட் டும். ஒரு நாள் முழுக்க துடைத்து எடுத்து வைத்திருந்த இரட்டைக் குழாய்த் துப்பாக்கியும் கொண்டு வந்தான். வேட்டைக்குப் போதுமான தோட்டாக்களையும் இரு கழிசான் பொக்கட்டுகளில் புகுத்தியாயிற்று. 

ஒரு பழைய சாக்குப் பையில் பாத்திரங்கள், அரிசி, காய்கறி கள், என்று சில நாட்களுக்குத் தேவையான சமையல் சாமான் கள், சீனி, தேயிலை என்று என்னென்னவோ….. போடப்பட் டிருந்தன. அவற்றையெல்லாம் கவனமாக சரிபார்த்து பொறுப் பேற்றான் சமரா கிழவன். 

அடர்ந்த காடுகளில் வேட்டையாடித் திரியும் போது, சமரா மிகவும் அற்புதமாகச் சமைத்து, தாமரை இலைகளில் பரிமாறும் போது, இல்லங்களில் சமைக்கும் வளையல் கைகள் நிச்சய மாகத் தோற்றுப் போகும். ஒரு சந்தர்ப்பத்தில் கிரிபண்டா இல்லத்தில் தனித்திருந்தபோது வந்து சேர்ந்த சமரா…. காலை யுணவுக்காக, குறுணல் அரிசிச் சோறும் காரமான தேங்காய்ச் சம்பலும் தயாரித்தான். கிரிபண்டாவை திக்குமுக்காடச் செய்தது அதன் உறைப்பல்ல. அலாதியான சுவைதான். 

அன்றிலிருந்து வேட்டைக்குப்போகும் போதெல்லாம் சமராதான் சமையல் பொறுப்பு. 

டிராக்டர் வந்து நின்றதும், துப்பாக்கிகள், சாமான் பொதி கள், ஆறு பட்டரி டோர்ச்லைட்டுகள் இத்தியாதி சாமான் தட்டு முட்டுகள் அடங்கிய சாக்குப் பைகளை ஏற்றினர். 

வந்தவர்கள் அனைவரும் தேநீர் அருந்தியவுடன் விடை பெற்றுக் கொண்டு டிராக்டரில் ஏறிக் கொண்டனர். 

அமரதாசவின் தாய் பிசோ, பியசீலி, யசவத்தி முதலியோர் வாசலில் குழுமி நின்று வழியனுப்பினர். வண்டி தனது இயற்கை ஒலியுடன் விடியற்காலையின் அமைதியைக் கெடுத்துக் கொண்டு, காட்டையும் மேட்டையும் பிளந்த வண்ணம், ஊர்ந்து கொண்டிருந்தது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஊருக்கு இருப்பது ஒன்றிரண்டு டிராக்டர் வண்டிகள் தாம். 

நாற்பத்தைந்து நிமிடங்களாக ஊர்ந்து கொண்டிருந்த வண்டி, முஸ்லிம் கிராமத்தினுட் சென்று பள்ளிவாசலுக்கு முன் நின்றது. சின்னஞ்சிறுசுகள் ‘ஓ’வென்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஓடி வந்து முற்றுகையிட்டனர். கிரிபண்டா குழுமி நின்ற சிறுவர் களில் யாரையோ மிகக் கூர்மையாக அவதானித்துவிட்டு- 

“சமது விதான ஒகட வாப்பாவ?” 

”ஓம்” 

“எங்கே போனது?” 

“வயலுக்கு…”

சிறிசுகளின் முகங்களிலும் கண்களிலும் எதுவிதமான அந்நிய மும் இருக்கவில்லை. அதற்கிடையில், டிராக்டர் சத்தத்தைக் கேட்டு, ஹலீம்தீனும், யாசீனும் ஓட்டமும் நடையுமாக வந்தனர். ”எல்லோருமா வீட்ட வாங்க. டிராக்டரை கடைக்கு முன் னால் மாமரத்தடியில் நிறுத்தினால் நல்லது.” 

அரசினர் தார் ரோட்டின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த வண் டியை முன்னால் எடுத்துச் சென்று குறிப்பிட்டகடை முன்றிலில் பாதுகாப்பாக நிறுத்தியதும் எல்லோரும் இறங்கி ஹலீம்தீனு டன் நடந்தனர். ஹலீம்தீனின் இல்லத்திற்கு, பள்ளிவாசலை அடுத்து உள்ள சிறுபாதையில் சிறிது நடக்க வேண்டியிருந்தது. பாதையைப் பெருப்பிக்கும் திட்டம் இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லையாம். கல் பதித்து தார் போட வேண்டும் என்பதற்காக பிற்போடப்பட்டிருக்கிறது. 

சிங்களக் கிராமத்திலிருந்து வந்த அனைவரையும் ஹலீம் தீனின் தகப்பன், அப்துல் மஜீத் இன்முகத்துடன் வரவேற்று அறிமுகப்படுத்தி, விறாந்தையில் போடப்பட்டிருந்த நாற்காலி களில் அமரச் செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் அப்துல் மஜீதும் கிரிபண்டாவும் மனம்விட்டுப் பேசி மகிழ்ந்தனர். அவர்களுக்குப் பேச வேண்டிய விடயங்கள் எவ்வளவோ இருந்தன. 

வேட்டைப் பிரியர்கள் காலையுணவுக்கு குரக்கன் பிட்டை யும் இறைச்சிக் கறியையும் சுவைத்து, பிறகு வாழைப்பழம் தேநீர்… சிகரட்…. என்று எல்லாவற்றையும் முடித்து விட்டு, 

“இன்று இரவு வரைக்கும், எனக்கு ஒன்றும் தின்ன வேண்டிய அவசியம் இல்லை….” என்று கிரிபண்டா பாராட்டினான். ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு மீண்டும் டிராக்டர் வண்டி, வேட் டைக்குப் புறப்பட்டது. பலரும் சிகரட் புகையை இழுத்து அனுபவித்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். 

“கேம ஹரி ரசய்….” என்று அவர்கள் மிகவும் திருப்தியடைந் திருந்தனர். 

தூரத்தே சமது வயலிலிருந்து வியர்க்க வியர்க்க வந்து கொண் டிருந்தான். கிரிபண்டா மிக்க ஆவலுடன், 

“என்ன சமது, நாங்க வந்து கன நேரம்” 

“எனக்கு ஒரு சின்ன வேல. சாப்பிட்டீங்களா?”

“ஓ. நல்ல சாப்பாடு”. 

“அப்ப… கிரிபண்டா நீங்க… போய் வெற்றியோட வாங்க… ஜயவேவா…” 

கிரிபண்டாவின் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது. தன் தகப்பன் லொக்கு பண்டார தலைவராய் இருந்தபோது சில்லறைக் காரணங்களுக்காக, வேரூன்றிய பகை தப்பபிப்பிராயங்களை கலைத்து கிராம ஒற்றுமையை நிலைநாட்ட முடியாமல் போய் விட்டது. ஆனால் கிரிபண்டா பொறுமையுடன் எடுத்துக் கொண்ட முயற்சியில் தன்மகன் அமரதாச பெரும்பங்காற்றி, எடுத்துக்கொண்ட கரிசனையில் இணக்கம் சுடர்விட்டிருந்தது. 

முன்பு முஸ்லிம் கிராமவாசிகளால் தடைபோடப்பட்டிருந்த குளக்காட்டுப் பிரதேசத்திற்குப் போகலாம்… என்ற அனுமதி ஒன்றே பல தடைக்கற்களையும் தளர்த்தி விட்டு புரிந்துணர்வை யும் இணக்கத்தையும் மலரச் செய்திருந்தது. 

“அந்தக் குளக்காட்டுப் பிரதேசத்தில இப்பொழுது இராக் காலங்களில் பன்றிகள் கூட்டமாக வருகுதாம்…. அதுதான் முஸ்லிம்கள் பின்வாங்கி விட்டார்கள்.” என்று சமரசிங்க கிளப்பிவிட்ட பிரச்சாரம் எடுபடவில்லை. 

“தேவையில்லாத பிரச்சாரங்களை பரப்பாம, மௌனம் சாதித்து விட்டா அவை காற்று வாக்கில் மிதந்து மடிந்து மறை ந்துவிடும்.ஆனால் நாம அவற்றைப் பெரிதாக தூக்கிப் பிடித்து எதிர்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்போமானா, அதற்கு நாம உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்… என்பது தான் உண்மை” என்று கிரிபண்டாதன் நீண்ட கால அனுபவம் மூலம் கூறிய மணிவாக்கை எல்லோரும் அங்கீகரித்தனர். எனவே சிங்கள கிராமவாசிகள் அச்சமின்றி, வேட்டைக்குப் போகவும் பொன்விளையும் பூமியான குளக்காட்டுப் பிரதேசத்தைப் பரிசீலனை செய்யவும் தீர்மானித்துப் புறப்பட்டு விட்டனர். 

ஏ.எல் பரீட்சை காரணமாக ஹலீம்தீனும், அமரதாசவும் நின்று விட்டார்கள். உண்மையில் அவர்களது ‘வேட்டை’ கிராமங்களின் ஒருமைப்பாடே. அதற்கான வழி வகைகளே….. 

சமரசிங்கவின் குத்தல் பேச்சுகளுக்கும் வானவெடிச் சிரிப்பு களுக்கும் பக்கவாத்தியங்கள் மெருகு ஊட்டவில்லை, என்பதை உணர்ந்து இப்பொழுது மிகவும் நிதானமாக ஒழுங்கில்லாத காட்டு வழிகளில் டிராக்டர் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும் குணத்திலக்க இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டான்; 

“சமரசிங்கா… குடிச்சிருந்தா தான், அப்படி தேவையில்லாம பேசுவான். குடிக்காம இருந்தா அவனைப் போல ஒரு நல்ல வனை தேடிப் பிடிக்க மாட்டீங்க…” 

கருக் கொண்ட மேகங்கள் 

அத்தியாயம் ஐந்து 

ஒரு பழைய நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான் கிரி பண்டா.

முஸ்லிம் கிராமத்தில் அப்துல் கரீம் ஒரு வேட்டைப் பிரியன். ஒருமுறை அவன் தன் நண்பர்களோடு குளக்காட்டுப் பிரதேசத் திற்கு வேட்டைக்குப் போயிருக்கிறான். ஆனால் அவன் மீண் டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை. உடன் சென்ற நண்பர்கள் கரீமைத் தேடிப்பார்த்து, மனம் சோர்ந்து கிராமத்திற்கு வந்து, அறிவித்துவிட்டு மீட்பு வேலைக்காக மீண்டும் ஆட்கள் திரட்டி குளக்காடு முழுதும் தேடிப் பார்த்தார்கள். 

‘மெஸ்ஸை’யிலிருந்து இறங்கி துவக்குடன் தனியே போன தாக மட்டும் நண்பர்கள் கூறினார்கள். 

அடுத்த நாள் குளக்கரையை அலசிப் பார்த்தபோது, சடலம் கரையில் மிதந்து கொண்டிருந்ததாம். 

“சிங்களவன் கொன்று போட்டிருப்பான்’ 

‘கரடியோடு போராடியிருப்பான்’ 

‘தண்ணீர் குடிக்க வந்த யானை மிதித்திருக்கும்’ 

‘துவக்கும் பக்கத்தில் போட்ட தோட்டாவுடன்தான் இருந்ததாம்’ மனிதனால் கொல்லப்படவில்லை என்று பிரேத பரிசோ தனை தெளிவாக எடுத்துக்காட்டியது. 

‘அப்ப பேய் பிசாசு அடித்திருக்க வேண்டும்’ என்றும் ஒரு அபிப்பிராயம் நிலவியது. 

“எனக்கு ‘லெனார்ட் வுல்ப்’ எழுதியது ஞாபகத்திற்கு வரு கிறது….” என்றான் குணத்திலக்கா. 

“என்னது…..?” 

“வழக்கமாக ஒரு வேட்டைக்காரன் மான் கொம்புகளை வேட்டையாடி நகரத்திலுள்ள வியாபாரிகளுக்கு விற்பான். இருந்தும் வேட்டைக்குச் செல்வதை மிகத் துச்சமாக எண்ணி யிருந்தான். அந்த முறை வேட்டைக்குச் சென்றவன் திரும்பவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு, காட்டில் யானை மிதித்து அவனுடைய எலும்புக்கூடு நொறுங்கிச் சிதறிக் கிடந்ததாம். 

செய்கிற தொழில் எதுவானாலும் அதற்கு நாம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை குணத்திலக்கா விவசாயிகள் உள் ளங்களில் நாசூக்காக புகுத்திவிட்டான். 

எப்படியோ அப்துல் கரீமின் மறைவுக்குப் பிறகு இன்று வரைக்கும் குளக்காட்டுப் பிரதேசத்துக்கு யாரும் வேட்டைக்குச் சென்றதில்லை. ஆனால் ஒரேயொரு முறை விவசாயத்தையும் ஒரு பாடமாகக் கற்கும் அஹ்மதுவுக்கு, மண் ஆராய்ச்சி செய்வ தற்கு, சில இடங்களிலிருந்து சிறிதளவு மண் தோண்டியெடுக்க வேண்டும். அஹ்மதுவும், சமது விதானையும், ஹலீம்தீனும் ஆபத்துகளையும் மீறிப் போயிருக்கிறார்கள். 

இப்பொழுது கிரிபண்டாவும் நண்பர்களும் முஸ்லிம் கிராம வாசிகளின் ஆசியுடனும் அநுமதியுடனும் போய்க் கொண்டி ருக்கிறார்கள். 

உச்சி வெய்யில் உச்சந்தலையை ‘சுள்’ என்று சுட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்து விட்டார்கள். 

களைத்துப் போயிருந்த ‘டிராக்டர்’ வண்டியின் முரட்டுத் தனமான ஓசை நின்றதும், மயான அமைதி நிலவியது. டிராக் டரின் அவ்வோசை மிருகங்களுக்கு பெரிதும் அச்சமூட்டியிருக் குமோ, அவை பாதுகாப்பைத் தேடி ஓடி ஒளிந்திருக்க வேண் டும். மூத்த அனுபவசாலிகளான கிரிபண்டாவும், பிங்காமியும் நிதானமாக சிந்தித்து கருத்துத் தெரிவித்தார்கள். 

“இங்கு பேயுமில்லை பிசாசுமில்லை. மிருக ராச்சியம்தான் நடந்து கொண்டிருக்கு, மனிதர்கள் ஒன்றுபட்டு, கூட்டமாக வந்து காடுவெட்டத் தொடங்கி, தீ மூட்டிவிட்டால், மிருக சாம்ராச்சியம் தளர்ந்து போய் விடும்…..” 

டிராக்டர் ஓரிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, சாமான் சட்டி முட்டிகளுடன் இறங்கி நடந்தார்கள். 

இப்பொழுதுதான் எங்கோ தூரத்தில் ஒரு நரியின் ஊளை வரவேற்பு கூறிக்கொண்டிருந்தது. 

காலம் தாழ்த்தாது நண்பர்கள் தத்தம் பொறுப்புக்களில் ஈடுபட்டார்கள். 

முதியான்சவும். புஞ்சிராலவும் பொருத்தமான மரங்களைப் பார்த்து ‘மெஸ்ஸை’ கள் போட ஆயத்தமானார்கள். 

சமராவும், கீர்த்தியும் மதிய உணவு சமைக்க முனைவதற்கு முன் ‘கிரிகஹட்ட’ தயாரித்தார்கள். காலையில் ‘குரக்கன் பிட்டை சாப்பிட்டவர்களுக்கு பசி இருக்கவில்லை. இருந் தாலும் விரும்பியவர்கள் சாப்பிடட்டும். இராப் போசனத் திற்கும் சேர்த்துத்தானே சமைக்கிறார்கள். இல்லாவிட்டால் எவ்வளவுதான்லாந்தரை பற்றவைத்துக் கொண்டாலும் இரவில் சமைப்பது எல்லா வகையிலும், முடியாத விடயமாகும். எவ் வளவும் ‘கஹட்ட தயாரிக்கலாம். கருப்பட்டியுடன் சுவைத்தால் சுறுசுறுப்பாக இருக்கும். 

கிரிபண்டாவும், பிங்காமியும் தமது கூர்மையான பார்வையை நாலா வட்டத்திலும் சுழலவிட்டுக் கொண்டிருந்தார்கள். 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை. இயந்திரமானா ர்கள். டிராக்டரைச் செலுத்திக் கொண்டு வந்த குணத்திலக்க மட்டும் ‘மெஸ்ஸை’ வேலை முடிந்தவுடன் ஏறிப்படுத்துக் கொள்வதற்கு தருணம் பார்த்து, தூங்கி வழிந்து கொண்டிருந்தான். 

இராச்சாப்பாட்டிற்குப் பிறகு ஆளுக்காள் துப்பாக்கிகளுடன் உசாராகி, குளக்கரையில் நடந்து, பற்றைக்குள் மறைந்து, தண்ணீர் அருந்தவரும் குழுமாடுகளை எதிர்பார்த்து, கண் துஞ்சாது காத்திருப்பார்கள். 

மான் மரை என்று ஏதாவது அகப்பட்டுக் கொண்டால், ஆறுபட்டரி டோர்ச் லைட்டின் சக்திமிக்க ஒளிக்கதிர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒருகணம் ஸ்தம்பித்து தடுமாறும் போது துவக்கில் உள்ள தோட்டாக்கள் தொழிற்பட்டு விடும். 

பதினொரு பேரும் பாதுகாப்பாக இருந்து கொள்ள, இரண் டாள் உயரத்திற்கு மரங்களுக்குமேல் பரண்கள் அமைத்து விட்டனர். எல்லாரும் அவற்றிற்குள் புகுந்து இளைப்பாறத் தொடங்கினர். 

கிரிபண்டாவும், பிங்காமியும், புஞ்சிராலவும் ஆங்காங்கே, மரத்தடிகளிலிருந்து, மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 

புஞ்சிராலவுக்கு வனத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறா கத் தெரியும். கிரிபண்டாவின் அனுபவ அறிவுக்கு எட்டாத எத்தனையோ புதுமைகளை அவன் பிரமிப்புடன் எடுத்துரைத் தான். 

‘கவனிப்பாரற்றுக் கிடக்கும் இந்தக் குளத்தை திருத்திவிட் டால் எந்தப் பெரிய கோடையிலும், வற்றாத ஜீவ குளமாக இருக்கும்…” 

பூமியும் ‘இருவாட்டி’ மண்; மணலும் களிமண்ணும் கலந்த பசளை மண்… விவசாயத்திற்கு எங்கட பிராந்தியத்திலே இப்படி யான ஒரு மண் வளம் கிடைக்காது- ஹலீம்தீன் ஆக்கள் ஆராய்ச்சி செய்து எடுத்த முடிவுக்கு நூத்துக்கு நூறு புள்ளி போடலாம். 

அவர்கள் மூவரும் ஐம்பது வயது பிந்தியவர்கள். ஒரு பயங் கரமான காட்டுப் பகுதிக்கு, வேட்டைக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து நிராயுதபாணிகளாய் அந்தப் பகுதியை ஒரு சுற்று சுற்றிவரக் கிளம்பினார்கள். அந்தப் புதுமையான மண் வளம் அவர்களை அப்படி உணர்ச்சி வசப்படச் செய்திருந்தது. அந்த மண்ணுக்குத் தான் எவ்வளவு பெரிய சக்தி. 

மனித ஒற்றுமை இல்லாததால் அந்தக் குளத்தையும், பரந்த விஸ்தீரணமுள்ள காட்டையும் விலங்குகள் அல்லவா ஆட்சி செய்கின்றன. 

இந்த இயற்கையான குளமும் காடும் முஸ்லிம் கிராமவாசி களின் ‘மாய்மைக்கு உரியதா அல்லது சிங்கள கிராமவாசி களுக்கு சொந்தமா என்பதை கிராமசேவகர் முடிவு செய்யட்டும். ஆனால் இந்தக் குளத்தை மையமாக வைத்து இருசாராரும் தங்கம் விளையும் பூமியாக மாற்றமுடியும். 

அந்த மூன்று பெருந்தகைகளின் இரத்தோட்டங்களிலும் இம்மியளவாவது சுயநலம் கலந்திருக்கவில்லை. 

கிரிபண்டா ஒரு யோசனையை முன் வைத்தான். 

“…இங்கு மேட்டு நிலம், பள்ளத்து நிலம் என்று வித்தியாசம் இல்லாமல், ஒரே சீராக இருப்பதால் குளத்தை மையமாக வைத்து அளந்து இரு கூறாகப் பிரித்து, நாம் ஒரு பகுதியையும் அவர்கள் ஒரு பகுதியையும் எடுத்துக் கொண்டால்…. ? எப்படி யோசனை…?” 

“அருமையானது” என்றான் புஞ்சிரால. 

“நியாயமானதும் தான், ஏனென்டா இந்தப் புதையலைக் கண்டுபிடித்தவர்களே அவகதான்….. நாம் இரு சாராரும் கலந் துரையாடினால் இந்த விடயம்… மிக இலகுவாக முடியும்….” என்றான் பிங்காமி. 

“நம்பக்கத்திலும் சரி அவங்க பக்கத்திலும் சரி, காடு வெட்ட செலவழித்து பங்குதாரர்களாக வரும் எவருக்கும், கிராமசேவகர் மூலம் ஒரு நிரந்தர தீர்வு வரும் வரைக்கும், நிலம் எவருக்கும் சொந்தம் இல்லை என்பதை தெளிவுபடுத்தி, சில சட்ட திட்டங்கள் உருவாக்கி, ஓர் ஒப்பந்தம் சைச்சாத்திட்டுக் கொள்வது எல்லா வகையிலும் நல்லதல்லவா?” என்று முடித்தான் புஞ்சிரால. 

மிகவும் மகிழ்ந்து போன கிரிபண்டா கூறினான். 

“ஓவ்… ஓவ்.. ஏக்க ஹொந்த அதஹஸக்”

“… பின்னால் மீண்டும் சண்டை சச்சரவுகள் தலைதூக்காது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்…. எல்லாம் ஒரு சம்பிர தாயத்துக்குத் தானே…”

சிங்கள கிராமத்தின் மூன்று சிரேஷ்ட கிராமவாசிகளுக்கும் இது நியாயமாகப்பட்டது. 

“முதலில் கிராமமட்டத்தில் சபை கூடி ஆலோசித்து, பின்னர் இருசாராரும் இணைந்து பிரதிநிதிகள் குழு அமைத்து முடிவு எடுக்கலாந்தானே,” என்றான் கிரிபண்டா. 

பற்றைக்குள் ஒரு சலசலப்பு. 

அப்பொழுதுதான் அம்மூவரும் உணர்ந்தனர். 

“நாம் எவ்வளவு கவலையீனமாக, ஒரு துவக்குக் கூட எடுக் காம இப்படி இவ்வளவு தூரம் வந்து விட்டோமே… மற்ற வர்களுக்குக் கூட ஒரு வார்த்தை சொல்லவும் இல்ல… பரணுக்கு புறப்படுவதற்கு முன், கிளைகள் பரப்பிய ஒரு காட்டு மரத்தில் ஏறி பார்வையை சுழல விட்டார்கள். 

‘குரங்குக்கெளை’ யொன்று அவர்களைப் பார்த்து இளித்து மரத்துக்கு மரம் தாவியது. 

அவர்கள் அச்சம் நீங்கி, இறங்கி விரைவாக நடந்தனர். 

யார் எவர் எதைச் சொன்னாலும் இந்த சிங்கள முஸ்லிம் கிராமங்களை ஒன்றிணைத்து ஒரு விவசாயத்திட்டத்தை நடை முறைப்படுத்தத் தானே கிரிபண்டா முயன்று கொண்டிருக் கிறான். அதற்கு அமரதாசவும் ஹலீம்தீனும் எவ்வளவு பொருத்தமானவர்கள். 

புஞ்சிரால தெளிவாகக் கூறினான். 

இரு கிராமங்களும் இணைந்தால் புதிய சாலை அமைக்க லாம். சாலை அமைத்து மனித நடமாட்டம் பெருகினால் மிருகங்கள் எல்லாம் புதிய காட்டைத் தேடி ஓடிவிடும். குளத்தைக் கட்டித் திருத்தினால் வருடத்திற்கு இருமுறை மழையை எதிர் பார்க்காமல் விவசாயம் செய்ய முடியும். 

மூவரும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டே மிக்க விழிப்புடன் அரைவாசித் தூரம் நடந்து கொண்டிருந்த போது, குணத்திலகா துவக்குடன் எதிரே வந்து கொண்டிருந்தான். அவனைத் துவக்கு டன் கண்டதும் அவர்களது அச்சம் முழுமையாக நீங்கிவிட்டது. 

“வேட்டைக்கென்று வந்த பயங்கர காட்டிலே, துவக்கும் இல்லாமல் எங்க சுற்றித்திரிகிறீங்க?… நாங்கள் பயந்து போனோம்…. 

“துவக்கு இல்லாமல் கொடிய மிருகங்கள் வந்தாலும் எங்க ளால் தப்பித்துக் கொள்ள முடியும்….” என்று பிங்காமி வீரம் பேசினான். விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை. ஒரு துவக்கையாவது எடுத்துக் கொள்ள மறந்து விட்ட பலவீனத்தை அப்படியே புதைத்துவிட்டு, 

”குணே, வந்த விசயத்தில் அரைவாசி வெற்றி” என்றான் கிரிபண்டா குதூகலத்துடன். 

“உங்களுக்கு மண்ணாசையால் பைத்தியம் பிடித்து விட் டது…” என்றான் குணத்திலக்கா. 

”சரி குணே, எல்லா ஆசைகளையும் கிராமத்துக்குப் போய், விரிவாக கதைச்சி, முடிவு எடுப்பமே…. என்ன….?” 

அன்று மாலை ஆறு முப்பதுக்கே இராச்சாப்பாட்டை எல்லா ரும் சேர்ந்து சுவைத்த போது கிரிபண்டாவும் புஞ்சிராலவும் ஒரு பிரசங்கமே செய்துவிட்டார்கள். கூடி நின்ற அனைவரும் அவர்க ளுடைய முற்போக்கான கருத்துக்களில் ஊறி, அவற்றை ஆழ்ந்து ஆராய்ந்தார்கள். பெரும் வெற்றிதான். 

தொடர்ந்து மூன்று நாட்கள் அந்தக் குளக்காட்டுப் பிரதே சத்தை சுற்றி வளைத்து, மான் மரை குழுமாடுகள் படுகின்றனவா என்ற வீண் போகவில்லை. நான்காம் நாள் இரவு- 

இரண்டு மாடுகளும், ஒரு மானும் பட்டிருந்தன. கிரிபண்டன் ஒரு நோக்கத்தோடு மானின் காலுக்கு வைத்த குறிதப்ப வில்லை. அதை அப்படியே உயிரோடு பிடித்து விட்டான். பன்றிகள் புத்திசாலித்தனமாக காலை வாரி விட்டிருந்தன. கிரிபண்டன் உயிரோடு பிடித்த மானை பிங்காமியிடம் ஒப்படைத்தான்’ இதை பத்திரமாக கொண்டு வரணும் பிங்காமிக்கு அதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை. கிரிபண்டனைப் பார்த்து இலேசான புன்னகை புரிந்தான். 

இரண்டு பெரிய குழுமாடுகள் கிடைத்ததும் எல்லாரது முகங் களிலும் அலாதியான திருப்தியும் மகிழ்ச்சியும் உதயமாகி யிருந்தன. 

“நாங்க எப்ப திரும்பப் போற…?” 

“இது சமராவின் முக்கியமான கேள்வி, திரும்பிப் போவ தற்கும் தோட்டாக்கள் தேவை’ 

”சமரா உன் கேள்வியின் பொருள் புரிகிறது. சாப்பாட்டுச் சாமான்கள் தீர்ந்து விட்டன என்று சொல்லப் போறாய்….. சரியா…..? 

“நாளை காலைச் சாப்பாட்டுக்கு சமாளிக்கலாம்……” என்றான் கீர்த்தி. 

“நாளை காலை வரைக்கும் வேட்டையாடிய மிருகங்கள வைத்து, பார்த்துக் கொண்டிருக்க ஏலாது. இன்னும் ஒரு மணித்தி யாலத்திற்குள் பரண்களைப் பிரித்து ஏற்ற வேண்டிய எல்லா சாமான்களையும் மறந்து விடாமல் ஏற்றி விடுங்கள்…. 

பிங்காமி அந்த மானின் உடைந்த காலுக்கு மருந்திலைகளை இடித்துக் கட்டிக் கொண்டிருந்தான். சமரசிங்காவுக்குப் பிடிக்க வில்லை. 

“கிரிபண்டா காலுடைஞ்ச மானைக் கொண்டு போய் என்ன செய்யப் போற. பேசாமல் கொன்று அதையும் இறைச்சியாக்கி விடுவமா…?”

பிங்காமிக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. 

“நீ இதில தலையிடாம, உன்ட வேலையப் பார்…” என்று கத்தினான் பிங்காமி சிம்மக்குரலில் 

பாதி சாமான்களை டிராக்டரில் ஏற்றியாயிற்று, குணேயும் கீர்த்தியும் காவல் நிற்கிறார்கள். மிகுதி வேலைகளையும் முடி த்து வண்டிக்கு நடந்தார்கள். கடைசியாக கிரிபண்டம் பிங் காமியும், புஞ்சிராலவும் ஒரு சுற்று சுற்றிவிட்டு சரிபார்த்துக் கொண்டனர். மிகுதியான தோட்டாக்களை எண்ணி பத்திரப் படுத்திக் கொண்டனர். ‘ஒரு தோட்டா குறைகிறதே….” என்று கணக்குப் பார்த்த போது ‘டுமீல்’ என்று ஒரு சத்தம். ஒரு பெரிய காட்டு முயலை சுட்டுக்கொண்டு வந்தான் குணத்திலக்கா. எல்லாரும் சிரித்துவிட்டு அதையும் வண்டியில் போட்டனர். குணத்திலக்கா தனது கைவரிசையை டிராக்டரில் செலுத்து வதற்கு முன் தாழ்மையுடன் வேண்டினான். 

“…நாங்க இப்ப ஊர்திரும்பும் போது, வேட்டையாடப் போவ தில்லை. ஆகவே நான் கொண்டு வந்திருக்கிற ஆனை வெடிகளை ஆங்காங்கே காடுகளில் போட்டுக் கொண்டு போனாக்கரியம் மிருகங்கள் பயந்து இடம் பெயர வழி வகுக்குமல்லவா…?” 

“நல்லது தான், ஆனால் மிருகங்கள் எங்கள நோக்கி வந்து பயணத்தைக் குழப்பாம இருக்க வேணும்…” என்றான் கிரி பண்டா. 

“யானை வெடிக்கு யானையை விரட்டும் சக்தியுண்டா….?” இது கீர்த்தியின் கேள்வி. 

“வெடி வச்சித்தான் பாக்க வேணும்” 

“வெள்ளாமை வெட்டுவதற்கு முன் நெல்மணிகளை பறவை களிலிருந்தும் பன்றிகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வயல் காவலுக்கு போகிற போது பட்டாஸ் வெடி போடுறதுதான். ஆனால் காட்டு மிருகங்களுக்கு எவ்வளவு தூரம் சரிவருமோ தெரியாது….” என்றான் முதியான்ச அடக்கமாக. 

“சரி போட்டுப் பார்க்கட்டுமே, மிருகங்களுக்கு அச்சத்தை ட்டுவதும் நல்லதுதானே. குணேவின் ஆசையைக் கெடுப்பானேன்….?” இது நீண்ட அனுபவசாலியான கீர்த்தி. 

கிரிபண்டன் மலாய் பொலிஸ் உஸ்மானிடம் கற்றுக் கொண் டது போல… எதிர்காலத்தில் வேட்டைக்குப் போகும் இளைய வர்கள் கட்டாயம் ஆனைவெடியும், கொண்டு போகட்டுக்கும். உஸ்மானின் கண்டு பிடிப்பு பனைக்கருக்கு…. குணத்திலக்காவின் கண்டு பிடிப்பு ஆனைவெடி; நாளைய வாரிசுகள் பேசுவார்கள் தானே…” என்றான் முதியான்ச. முதலாவது யானைவெடியின் ஓசை காடெங்கும் பயங்கரமாக எதிரொலித்து ஓய்ந்தது. 

“கிரிபண்டாட்ட….” என்றான் புஞ்சிரால, ‘ஜயவேவா’ என்றனர் எல்லாரும். மிக்க ஆர்வத்துடன் பற்றைகளையும் புட்பூண்டுகளையும் அழித்துக் கொண்டு கிளம்பியது டிராக்டர் வண்டி. 

பாதை சமைத்துக் கொண்டு வந்த போது, பற்றைகளையும் மற்றையவைகளையும் வெட்டி ஊடறுத்துக் கொண்டு வர எவ்வளவோ சிரமம். ஆனால் வகுத்துக் கொண்டு வந்த அதே பாதையில் திரும்பிச் செல்லும் போது பயணம் மிகவும் இலகு வாகவும் இதமாகவும் இருந்தது. 

எல்லாரது மனங்களும் அப்படித்தான். ஆயினும் அவ்வெற் றிப்பாதையில் சிறு சிறு தடைக்கற்கள் அவர்களுக்கு ஒரு பொரு ட்டா?” எங்களுக்குரிய காட்டுப்பகுதியை சோனகனுக்கு தாரை வார்க்கப் போறீங்களா…” என்று சமரசிங்க முணுமுணுப்பது எவருக்கும் கேட்கவில்லை. அவன் வலது குதிகாலில் ஒரு காட்டு முள் ஏறி விண் விண்ணென்று வேதனையைத் தந்து கொண்டி ருந்தது. டிராக்டரின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தான். 

“நாங்கள் மிருகங்களோட போராடி காடுவெட்ட சோனகன் ‘சோக்கா’ கஷ்டமில்லாம விவசாயம் செய்யவா…? நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டன்….” என்ற சமரசிங்காவின் குளிசையை விழுங்கி, கூறிய குணத்திலக்காதான், இன்று படித்தவன் என்றபடியால் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து மனம் மாறி, முற்போக்கான திட்டத்திற்கு, யானை வெடி வைத்து வெற்றிக் கோஷம் போடுகிறான். 

சமரசிங்கா என்ன? அவனுடைய போதையும் இறங்க அதிக நாட்கள் செல்லாது. செல்லாவிட்டால்தான் என்ன. அவன் இனி கிராமத்தில் செல்லாக் காசுதானே. 

எப்படியோ வேட்டைக்குச் சென்ற டிராக்டர் வண்டி வெற்றி யுடன் ஐந்தாம் நாள் முஸ்லிம் கிராமத்தின் ஊடாகத் திரும்பிக் கொண்டிருந்த போது நள்ளிரவு பிந்தி வெகு நேரமாகி விட்டிருந் தது. அந்த அகால நேரத்தில் முஸ்லிம் கிராமத்தில் யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அவர்களது வண்டி பெரும் இரைச்சலுடன் இல்லாமல், மிக்க அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. 

அத்தியாயம் ஆறு 

கிரிபண்டன் கோஷ்டியினர் கிராமத்திற்குத் திரும்பி யதும் சூட்டோடு சூடாக வேட்டையாடிய மிருகங்களின் இறை ச்சியைக் கூறுபோட்டு பங்கு பிரிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. அந்தக் கருக்கலில் அவ்வேலையில் அவர்கள் ஈடுபட் டனர். வழக்கம் போல் தோட்டாக்களிலிருந்து உணவு பொருட் கள் வரைக்கும் செலவுகளைப் பகிர்ந்து கொண்டனர். டிராக்டர், டீசல் செலவு வேறு. 

இதுவரைக்கும் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டு, வட்டமாக இருந்தவர்கள், தத்தமது பங்குகளைப் பெற்றுக் கொண்டதும் – 

உதயமாகி விட்டிருந்தது. 

“எல்லாரும் வூட்ட போய் நித்திரை கொள்ளாம ஆற்றில் குளித்து, உடை மாத்திக் கொண்டு ஒன்பது மணிக்கு காலைச் சாப்பாட்டுக்கு வாங்க….” என்று கிரிபண்டன் அழைத்தான்.

பிங்காமியைத் தவிர எல்லாரும் கலைந்து விட்டிருந்தனர்.

“பிங்காமி …… மிருகங்கள அவர்களது மார்க்க சட்டப்படி (குறுபான்) வெட்டப்படாததால், முஸ்லிம் நண்பர்களுக்கு அன்பளிப்பு செய்ய முடியாது. அந்த மானையும், தேன் போத் தல்களையும் இன்றைக்கு அந்திபட ஹலீம்தீனுக்கு கொண்டு போகணும், மறக்காம அந்திக்கு வாங்க…. நம்மட டிராக்டர் வண்டியில போய் வருவோம்…” 

வேட்டைத்தலைவர் என்ற முறையில், சரியாக ஒன்பது மணி க்கு காலை உணவு தயாராக இருந்தது. வழக்கம் போல சோறும், ஒரு கறியும் அத்துடன் சுவையான சொதியும், அவ்வளவுதான். சாப்பிட்டு முடிந்ததும் கண்ணின் இமைகள் சுருங்க… உடம்பு தளர, வேட்டைக்குப் போய் வந்த அசதியில் ஒவ்வொருவராகக் கிளம்பினர். 

பொதுவாக வெள்ளாமை வெட்டி சூடு மிதிக்கிற வேலைகள் எல்லாம் பூர்த்தியடைந்து விட்டிருந்ததால் மிருகங்கள் வந்து வெள்ளாமையை நாசம் செய்யும் நிலை கடந்து விட்டிருந்தது. அதனால் கிரிபண்டனுக்கு ஒரு முக்கியமான வேலை காத்தி ருந்தது. அவர்கள் வாக்குறுதியளித்திருந்தபடி துவக்குகளை வந்து கேட்கும் முன்பே, மீண்டும் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அது; 

வேட்டைப்பிரியர்கள் அவ்விடத்தைவிட்டுக் கலையுமுன்னே கிராமத்திற்கு அந்த அறிவித்தல் முன் வைக்கப்பட்டிருந்தது. 

“… இந்தாங்க எல்லாருக்கும் ஞாபகப்படுத்துங்க… பொலிஸ் காரங்க கிராமத்திற்கு ஜீப்பில் வந்து அல்லோல கல்லோலப் படுத்த முந்தி வெள்ளாமையை பாதுகாக்க எடுத்த துவக்குகளை நாம் திருப்பிக் கொடுக்க வேணும்…. நாளை எல்லாரும் இங்க…. ஒன்பது மணிக்கு வந்தா வேன்ல போகலாம்….” 

வேட்டைக்குப் போய் வந்த பயண அனுபவங்கள், முக்கிய மாக குளக்காட்டுப் பிரதேச நிலம், மண்பரிசோதனை, எல்லை கள், இரு கிராமத்தவர்களும் எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண் டும்? இது தொடர்பாக விவசாயிகளினதும் கிராம சேவகரினதும் பங்களிப்புகள்… போன்ற முக்கிய விடயங்களைப் பற்றியெல் லாம் விரிவாக தந்தையிடமிருந்து துருவித்துருவி ஆராய்ந்து தரவுகளை பெற்றுக் கொண்டான் அமரதாச. 

“நாளைக்குப் பொலிசுக்குப் போய் வந்த பிறகு, மாலையில நீங்களும் பிங்காமியம் புஞ்சிராலவும் முஸ்லிம் கிராமத்திற்குப் போய், அப்துல்மஜீக், ஹலீம்தீன், சமது, யாசீன் போன்றவங்கள சந்தித்துப் பேசுங்க…. நீங்க போய் வந்த பொறகு, நான் எங்கட நிர்வாகக் குழு கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடுகளைச் செய்வேன். நாம் எமது தீர்மானங்களை ஸ்திரப்படுத்திக் கொண்டு, அவங்கட உத்தியோகபூர்வமான கலந்துரையாடலுக்குச் செல்ல வேணும். இதற்கிடையில் நான் கிராம சேவகரையும் முடிந்தால் ஹலீம் தீனையும் சந்தித்து ஆக்க பூர்வமான சில முடிவுகளைப் பற்றி பேச வேண்டியிருக்கு. சில புள்ளி விபரங்களை நாம் திரட்ட வேண்டியிருக்கு…

எமது ஏ. எல். சோதனை ஒகஸ்டில் நடைபெறும். எல்லா விடயங்களையும் நடைமுறைப்படுத்துவது ஓகஸ்டுக்குப் பிறகு தான். இப்பொழுது இது தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தை களையும்… சுதந்திரமான கருத்துப் பரிமாறல்களையும் வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு விடயங்களைப் பற்றியும் ஆராய்ந்து கருத்துக்கள் தெரிவிப்பதற்குப் போதிய அவகாசம் கிடக்கு. பின்னால் குளக்காட்டுப் பிரதேசம் எமது எல்லைக்கு உட்பட் டது. காடு வெட்டி விவசாயம் செய்ய ‘எமக்குத்தான்’ பூரண உரிமை இருக்கு என்று இரு கிராமத்தவர்களும் சட்டம் பேசவோ பிரச்சாரம் செய்து மீண்டும் கிராமங்களில் மலர்ந்துள்ள ஒரு மைப்பாட்டை சீர்குலைத்து சண்டை சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ கூடாது. 

இளைஞர்களின் வேகமும், உணர்ச்சியும் தான் எல்லாவற்றிற் கும் காரணம் என்ற பழி வரக்கூடாது. எல்லாவற்றையும் நாம் கட்டம் கட்டமாகவும் சரியாகவும் செய்து கொண்டு போனால் பிரச்சினைகளுக்கு இன்றும் நாளைய தலைமுறையினருக்கும் இடம் இருக்காது…

அமரதாசவின் உருக்கமான, நிதானமான விளக்கத்தைக் கேட்டு மகிழ்ந்து போன கிரிபண்டன் மகனின் கருத்துக்களை வலியுறுத்துவது போல்- 

”நாம் எமது விஷமிகளின் மீது ஒரு கண்ணாய் இருந்து கொள்ள வேண்டியதுதான்… அதற்காக அவர்களுடன் பிரச் சினைப்பட்டுக் கொள்ளக்கூடாது…” 

“நீங்கள் பயப்படுகிற மாதிரி ஒண்டும் நடக்காது. ஆங்கில அறிவு உள்ள குணத்திலக்காவைப் போல், வெகுவிரைவில் சமரசிங்கவையும், உக்குராலவையும் ‘ஜயவேவா’ கோசம் போட வைத்துவிடலாம். பொறுத்திருந்து பாருங்கள். இப்பொ ழுது எமது ஊர் பாடசாலையில் ஆங்கில ஆசிரியர் பதவிக்கு டம் இருக்கு. முதலில் தகைமையுள்ள அவனுக்கு அவ் வேலையை எடுத்துத் தந்துவிட்டால்… சில முக்கிய தடைக் கற்கள் இல்லாமல் போய் விடும்…..” 

“…எப்படியும் எதுவும் நடக்காது என்று இருந்துவிடக்கூடாது. எதுவும் எப்பவும் நடக்கலாம் என்றிருந்தால் நாமும் எதுவும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பரிகாரம் கண்டு கொண்டி ருப்போம். சிந்தித்து திட்டமிட்டு, மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் கருமமாற்றியதால் தான், சிங்கள முஸ்லிம் கிராமங்களில் ஒரு புரிந்துணர்வும் பலமடைந்து வருகிறது. 

“…அது உண்மைதான். சிங்கள முஸ்லிம் ஒருமைப்பாடு ன்று நேற்று அரும்பிவிட்ட தொன்றல்ல. அனுராதபுரத்தை சிங்கள மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்திலிருந்தே சிங்கள முஸ்லிம் நட்புறவு மேலோங்கியுள்ளது. சிங்கள மன்னர்களின் அரச சபையில் முஸ்லிம்கள் உயர் பதவிகள் வகித்துள்ளனர். 

“….ஹலீம்தீன் இவற்றையெல்லாம் ஆதாரபூர்வமாக அவ் வப்போது எடுத்துப் பேசும்போது கேட்பவர்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கின்றன. கேட்கக்கேட்க உடலும் உள்ளமும் புல்லரித்துப் போகின்றன…”

தந்தையினதும் மகனினதும் உரையாடலில் மூழ்கி, மெய் மறந்திருந்த பியசீலியும் பிசோவும், கடப்பல் திறக்கும் அரவம் கேட்டு எட்டிப் பார்த்தனர். 

பியசீலியின் தோழி யசவத்தி வந்து கொண்டிருந்தாள். 

அவளை வரவேற்பதற்காக பியசீலி கடப்பலை நோக்கி நடந்தாள். 

அமரதாச ஒரு கருத்தை மிகவும் வலியுறுத்துவதற்காக சற்று நேரம் மௌனமாகச் சிந்தித்தான். அதற்கிடையில் பியசீலி முதலியோர் மீண்டும் வந்து நாற்காலிகளில் அமர்ந்து கொண் டனர். மிக்க ஆர்வத்துடன்….. சிங்கள மொழியில் உரையாடல் தொடர்ந்தது. 

“யசவத்தி, புரிந்துணர்வு என்றால் என்ன. கியன்ட புலு வன்த…?” என்று கேட்டான் அமரதாச. 

அப்போது தான் வந்தமர்ந்த யசவத்தி பியசீலி மூலம் விட யங்களைக் கிரகித்துக் கொண்டு சொன்னாள்:- 

“…அரசியல் ரீதியாக இப்பொழுது இந்தச் சொல் கூடுதலாக அடிபடுகிறது. சிறுபான்மையினரின் நியாயமான உரிமைகளை பெரும்பான்மையினர் உண்மையில் உணர்ந்து கொள்வது… என்று நினைக்கிறேன்.” 

பிசோமெனிக்கா குறுக்கிட்டாள். 

“அப்ப பெரும்பான்மையினரின் உரிமைகளை சிறுபான்மை யினர் புரிந்து கொள்ளக் கூடாதா?” 

”அம்மா கேட்பதிலும் நியாயம் இருக்கு. இருசாராரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சரியா…. அமர?” என்று வினவி நின்றாள் பியசீலி. 

“நீங்கள் எல்லோரும் சொல்வதிலும் ஏதோ ஒரு நியாயம் இல்லாமல் இல்லை… நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால்… எங்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கு. முதலில் நாங்கள் அதனை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ் லிம்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. எங்கள் பிரதேசத்தில் தமிழ்க் கிராமங்கள் இல்லாவிட்டாலும் தமிழர்களுக்கு ஒரு வரலாறு… 

இப்படியே பறங்கியர், மலாயர் என்று ஒவ்வொரு இனத்தவ ருக்கும் வரலாறு இல்லாமல் இல்லை. இந்த நாட்டைப் பொறு த்த வரையில் அவற்றை நாம் படித்து உணர்ந்து கொள்ள வேண் டும். அதைத்தான் நான் புரிந்துணர்வு என்று நினைக்கிறேன். வெறுமனேசிங்கள மொழியை தமிழ் பேசும் இனத்தவரும் தமிழ் மொழியை சிங்கள மக்களும் ஓரளவு கற்றுக் கொள்வதால். மட்டும் புரிந்துணர்வு வந்து விடாது. படிப்பதோடு வரலாறு, கலை இலக்கிய கலாசார விடயங்களில் பரிச்சயமும் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் புரிந்துணர்வுக்கு அர்த்தம் தான் என்ன? 

இதுவரைக்கும் அமைதியாக இருந்து சகலவற்றையும் உள் வாங்கிக் கொண்டிருந்த கிரிபண்டா கேட்டான். 

“…அதிகம் படிப்பறிவு இல்லாத மூத்த தலைமுறையினரான நாங்கள் என்ன செய்வது…?” 

“…நீங்கள் எல்லாம் இயற்கையாகவே… ஒற்றுமையாக வாழ்ந்து காட்டிவிட்டீர்கள்…. உண்மையில் அப்படியான ஒரு பசுமையான காலம் மீண்டும் மலராதா என்பது தான் எங்கள் ஆதங்கம்…. எதிர்பார்ப்பு எல்லாம். நான் ஆராய்ந்து அறிந்த மட்டில் ஐம்பதுகளின் பிற்பகுதி வரைக்கும் மிக அற்புதம் என்று தான் சொல்ல வேண்டும்…. 

“…அதெல்லாம் சரி… நீங்களும் ஹலீம்தீனும் இந்த மண்ட பத்தில் அல்லது பாடசாலையிலாவது வாராந்தம் வகுப்புகள், சந்திப்புகள் கலந்துரையாடல்கள் வைக்க வேண்டும்…” என்றாள் பியசீலி 

“அது ஆக்கபூர்வமான அருமையான யோசனை…” என்று பாராட்டினாள் யசவத்தி. 

“…அமர, நான் பி.ஏ. பாஸ் பண்ணின பிறகு முஸ்லிம் கிராமத்து பாாடசாலையில் ஆசிரிய நியமனம் பெற்றுத் தந்தால் நிச்சயமாக நீங்கள் சொல்ற யோசனையை நான் நல்ல முறையில் செய்து காட்டுவேன்…” 

“அட அது பாராட்டப்பட வேண்டிய லட்சியம்…. ஹலீமுக் கும் அது விருப்பமாயிருக்கும். இவ்வளவு நேரம் பேசியது வீண்போகவில்லை. உனது உண்மையான எண்ணம் சாதகமாக வெளிப்பட்டு விட்டதே, வெற்றிதான்… உன் விருப்பம் நிறை வேறும்….” 

“ம்… அதுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்…” இது யசவத்தி. 

“…இங்க பாருங்க பிள்ளைகள். நாங்கள் சிங்களவர்களா யிருக்கலாம், அவர்கள் முஸ்லிம்களாய் இருக்கலாம். உண்மை யில்… நாங்கள் குக்கிராமங்களில் விவசாயிகள்…. என் தலை முறையினருக்கு கல்வி இல்லை. எங்களச் சுற்றி யானைக் காடுதான். மிக அநாகரிகமானவர்கள்தான்: கலர் அல்லது வெள்ளை சாரத்தை உடுத்தி… மேலால ஒரு முழுக்கை பெனி யன் அல்லது குறைந்த ரக சேர்ட்… அதுவும் ‘இஸ்திரிக்’ பண் ணப்பட்டிருக்காது. பாதங்களில் செருப்பு கூடக் கிடையாது… தோளில் துவாய்த்துண்டு, அழுக்காகவும் இருக்கும். கிரமமாக சவரம் செய்யப்படாத முகம். ஒழுங்காக வாரப்படாத தலை… இத்தியாதி கோலங்களுடன் தான் காட்சி தருவோம்…. ஆனால் பரம்பரையாக எங்களிடம் ஒன்று துல்லியமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதுதான் மனிதாபிமானமும் விருந்தோம் பலும். வயலிலுள்ள சேற்றையெல்லாம் வாரிப் பூசினாலும், அந்த மகத்தான மானுட நேயத்தை மங்கச் செய்யவோ மறைத்து விடவோ முடியாது….” என்று உணர்ச்சிவசப்பட்டான் கிரி பண்டா. 

அமரதாசவும் பியசீலியும், யசவத்தியும் அமைதியாகக் கேட் டுக் கொண்டிருந்தனர். பிசோ ஏதோ ஒரு வேலையாக எழுந்து உள்ளே சென்றாள். கிரிபண்டா தொடர்ந்து கூறினான். 

“…நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பத்து அங்கத்தவர்கள். எங்களுக்குள் சில்லறைக் காரணங்களுக்காக சண்டைகள் சச்சர வுகள் தப்பபிப்பிராயங்கள் வரும். அது இயற்கை. பகைமையும் தோன்றலாம். மறையலாம். ஆனால் அவை இனரீதியில் அல்ல என்பதை புதியதலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும். 

மறுநாள் காலை பொலிசுக்குப் போய் வந்த பிறகு மாலையில் தான் கிரிபண்டா, பிங்காமி, புஞ்சிரால ஆகிய மூவரும் அந்தக் கொழுத்த மானுடனும் கட்டித்தேன் போத்தல்களுடனும் முஸ்லிம் கிராமத்திற்குச் சென்றனர். அப்துல் மஜீத், ஹலீம்தீன், யாசீன், சமது, சேகு… என்று பலரையும் ஹலீம்தீனின் இல்லத்தில் சந்தித்தனர். 

வேட்டைப் பயண அனுபவங்களையும் எதிர்காலத் திட்டங் களையும் மிக்க ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அவர்களின் கலந்துரையாடல் தேனினும் இனிமையாக இருந்தது. 

– தொடரும்…

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *