வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 4,926 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

சபேசன் ரொம்ப ஆசாரமானவர்.காலையிஉல் ஐந்து மணிக்கு அவர் எழுந்தால், மரதம் கொடுக்கும் ‘காபி’யைக் குடித்து விட்டு.உடனே ‘பாத் ரூமு’க்குப் போய் குளிக்கப் போய் விடுவார்.

குளித்து விட்டு வந்ததும் கொடியில் தொங்கும் வேஷ்டியை எடுத்து,அதை பஞ்ச கச்சமாகக் கட்டிக் கொண்டு வேஷ்டியின் பக்கத்திலே தொங்கிக் கொண்டு துண்டை எடுத்து தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு,சுவாமி ரூமுக்கு வந்து,விபூதி டப்பாவை எடுத்து தன் கையிலே போட்டுக் கொண்டு அதில் கொஞ்சம் ஜலத்தை விட்டு,நன்றாக குழைத்து தன் நெத்தியியில் இட்டுக் கொண்டு, கைகளிலும் மார்ப்பிலும் பட்டை பட்டையாக இட்டுக் கொண்டு,சுவாமி முன்னாலே ஒரு மணையைப் போட்டுக் கொண்டு மந்திரங்கள் எல்லாம் சொல்ல ஆரம்பிப்பார்.

கணவன் ‘பாத் ரூமை’ விட்டு வந்ததும் மரகதம் குளிக்கப் போய்,குளித்து விட்டு வந்து கொடியில் தொங்கிக் கொண்டு இருக்கும் ஒன்பது கஜம் புடவையை எடுத்து மடிசார் வைத்து கட்டிக் கொண்டு,வந்து என்னையும் என் எட்டு வயது தங்கையையும் எழுப்பி விடுவாள்.நாங்கள் எழுந்ததும் அவள் என் தங்கை ராதாவைப் பார்த்து “சீக்கிரமா பல்லே தேய்ச்சுண்டுட்டு,வந்து ‘காபி’யே குடிச்சு ட்டு வாசலே ஒரு கோலத்தே போடு” என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து” ராமா,நீயும் பல்லே தேய்ச்சுண்டுட்டு,’காபி’யே குடிச்சுட்டு உன் பாடங்களே படிக்க ஆரம்பி” என்று ‘ஆர்டர்’ கொடுத்து விட்டு சமையல் ரூமுக்குப் போவாள்.

சபேசன் ஒரு தனியார் கம்பனியிலே ஒரு உயர் நிலை கணக்கராக வேலை செய்து வந்தார். பூஜைகளை எல்லாம் முடித்து விட்டு,மணைவி செய்து இருந்த சமையலை சாப்பிட்டு விட்டு,அவள் ஒரு ‘டிபன் பாக்ஸில்’ கொடுக்கும் தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டு,அவர் கட்டி இருந்த பஞ்ச கச்ச வேஷ்டியுடனே ‘ஆபீஸ்’க்குக் கிளம்பிப் போவார்.

நானும் ராதாவும் குளித்து விட்டு அம்மா போடும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,அவள் ‘டிபன் பாக்ஸில்’ கொடுக்கும் தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டு பள்ளி கூடம் போவோம். வருடத்தில் எல்லா நாளும் மதியம் சாப்பிட தயிர் சாதம் தான்.என் அம்மா வேறே ஒன்னும் பண்ணித் தர மாட்டாள்.

என் அம்மா அப்பா ரெண்டு பேரும் ரொம்ப ஆசாரமானவர்கள்.என் அம்மா தினம் ஏதாவது ஒரு பூஜை பண்ணி வருவாள்.வெள்ளிக் கிழமைகளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் எல்லாம் பண்ணி விட்டு பன்னிரண்டு மணிக்குத் தான் சாப்பிடுவாள்.என் அம்மாவும் அப்பாவும் மடி,விழுப்பு,எச்சல் துப்பல் எல்லாம் கவனித்து வருவார்கள்.

என் அம்மாவும் அப்பாவும் தவறாமல் திங்கட் கிழமை சிவன் கோவிலுக்கும்,வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் வருவது வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

நானும் ராதாவும் அப்பா அம்மாவிடம் மடி,விழுப்பு,எச்சல் துப்பல் எல்லாம் சரியாக கவனிக்காம வந்து நிறைய திட்டு வாங்குவோம்.எனக்கு விவரம் தொ¢ந்த நாளில் இருந்து என் அப்பாவை பஞ்ச கச்ச வேஷ்டியிலும்,என் அம்மாவை ஒன்பது கஜம் மடிசார் புடவையிலும் தான் பார்த்து வந்து இருக் கேன்.அவர்கள் வேறு விதமான உடை அணிந்தே நான் பார்த்ததில்லை.

அவர்கள் இருவரும் ரொம்ப ஆசாரமாக வாழ்ந்துக் கொண்டு,எங்க ரெண்டு பேரையும் அவர்கள் வாழ்ந்து வருவது போலவே,நிறைய ஆசாரங்களை எல்லாம் சொல்லி வளர்த்து வந்தார்கள்.எங்களுக்கு பல தடவை பிடிக்காவிட்டாலும்,நாங்கள் இருவரும் முனு முனுத்துக் கொண்டே அவர்கள் சொல்வதை செய்து வந்துக் கொண்டு இருதோம்.

ஞாயிற்று கிழமைகளில் என் அப்பா எல்லா மந்திரங்கள் சொன்ன பிறகு,நிறைய நேரம் பூஜை களை எல்லாம் முடித்துக் கொண்டு வரும் போது சுவாமி ரூமை விட்டு வெளியே வரும் போது மணி பதினொன்று அடித்து விடும்.

அப்புறம் தான் அவர் மதிய உணவு சாப்பிட உட்காருவார்.ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கும் என் தங்கைக்கும் காலையிலே ஒரு ‘கப்’ ‘காபி’ சாப்பீட்ட பிறகு,பதினோறு மணி வரை பட்டினி தான்.எங்க ரெண்டு பேருக்கும் ‘பசி’ பெருங்குடலை தின்று விட்டு,சிறு குடலை தின்னக் காத்துக் கொண்டு இருக்கும்.

நாங்க மூனு பேரும் சாப்பிட்ட பிறகு,என் அம்மா சாப்படுவாள்.

ஒரு நாள் கூட எங்க ரெண்டு பேரையும் ஐந்தரை மணிக்கு மேலே தூங்க விட மாட்டாள்.ராதா என்னைப் பார்த்து ”என்னடா ராமு,இந்த அம்மா நம்மே ஒரு நாள் கூட ஐஞ்சரை மணிக்கு மேலே தூங்க விட மாட்டேன்கிறா” என்று முனு முனுத்துக் கொண்டே எழுந்துக் கொள்வாள்.உடனே நானும் அவளைப் பார்த்து “என்ன பண்றது ராதா.இந்த அம்மா ஒரு நாள் கூட நம்மே ஐஞ்சரை மணிக்கு மேலே தூங்க விடறது இல்லையே.இப்படி எழுப்பி விடறாளே” என்று சொல்லி என் வருத்தத்தை அவளிடம் சொல்லித் தீர்த்துக் கொள்வேன்.

இந்த தொந்தரவு போறாதது என் அம்மாவும் அப்பாவும் எல்லா விஷயங்களிலும் ரொம்ப கண்டிப்பு.’எந்த காரியத்தை பண்ணாலும் சரியாப் பண்ணனும்,ஒரு பொருளை எடுத்தா,அதை மறுபடியும் எடுத்த இடத்திலேயே வைக்கணும்,நேரத்திலே எல்லா காரியங்களையும் பண்ணனும்’ இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.எங்கள் வீட்டில் ‘மிலிட்டெரி கண்டிப்பு’தான்.இந்த கண்டிப்பில் தான் நானும் என் தங்கை ராதாவும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருந்து வந்தோம்.

எனக்கு பதினோரு வயது ஆன பிறகு ஒரு நாள் நான் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு என் அம்மவைப் பார்த்து “ஏம்மா,இப்படி எங்க ரெண்டு பேரையும் ஐஞ்சரை மணிக்கு எல்லாம் எழுப்பி விடறே.நாங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறோமே” என்று கேட்டதும் என் அம்மா “சூரியன் உதிக்கறதுள்குள்ளே நாம படுக்கையை விட்டு எழுந்துடணும்.சூரியன் உதிச்ச அப்புறமா துங்கக் கூடாது.அது உடம்புக்கு நல்லது இல்லே” என்று பதில் சொன்னாள்.

அதற்கு மேலே நான் என் அம்மாவை ஒன்றும் கேட்கவில்லை.

அந்த வருஷமே மாசி மாசத்தில் ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளில் என் அம்மா அப்பா எனக்கு உபநயனம் போட்டு விட்டு,ஒரு சின்ன வாத்தியாரை எங்க வீட்டுக்கு வரச் சொல்லி எனக்கு சந்தியா வந்தனம் பண்ணும் மந்திரங்களை காலையிலும் மாலையிலும் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு பண்ணி னார்கள்.

எனக்கு உபநயனம் போட்ட பிறகு காலையிலே என் அம்மா தொந்தரவு போய்,அந்த வாத்தியார் தொந்தரவு ஆரம்பித்து விட்டது.அவர் என் வீட்டிற்கு காலையிலே ஐந்தரை மணிக்கே வந்து விடுவார். அப்புறம் எனக்கும் என் தங்கைக்கும் தூக்கம் ஏது.இருவரும் எழுந்து விடுவோம்.

என் தங்கைக்கு ‘வயதுக்கு’வந்தவுடன் என் அம்மா அவளுக்கு ஆறு பாவாடையும்,ஆறு தாவணியையும்,உள்ளாடைகளையும் வாங்கிக் கொண்டு,அதைத் தான் போட்டுக் கொண்டு பள்ளீ கூடம் போய் வர வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.

என் தங்கை தன்னுடைய பள்ளித் தோழிகள் போட்டுக் கொண்டு வரும் விதவிதமான ‘டிரஸ்ஸை’ தானும் போட்டுக் கொள்ள ஆசைப் படுவதாக அம்மாவிடம் கேட்டால் அவள் உடனே “இதோ பார் ராதா,அந்த மாதிரி ‘உடம்பு’ தொ¢யற ‘டிரஸ்’எல்லாம் நாம போட்டுக்க கூடாது.இந்த பாவாடை தாவணி போட்டுண்டு பள்ளி கூடம் போய் வரணும்.தொ¢யறதா” என்று சொல்லி என் தங்கை ஆசைக்கு ஒரு முற்று புள்ளீ வைத்து விட்டாள்.

என் தங்கை ‘ப்லஸ் டூ’ பாஸ் பண்ணினதும்,அவள் படித்தது போதும்,சின்ன வயதாக இருக்கும் போதே ஒரு கல்யாணத்தை பண்ணீ வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி ராதாவிடம் சொன் னார்கள் என் பெற்றோர்கள்.ஆனால் ராதாவுக்கு B.Sc. படிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது.அவள் அந்த ஆசையை என் அம்மா அப்பா ரெண்டு பேர்கள் இடமும் சொன்னாள்.

ஆனால் என் அம்மா “ராதா,உனக்கு இப்பவே இருபத்தி ரெண்டு வயசாறது.நீ B.Sc.படிச்சு முடிக்கறதுக்குள்ளே, உனக்கு வயசு இருபத்தி அஞ்சோ,இருபத்தி ஆறோ ஆயிடும். ஒரு பொம்மணாட்டி குழந்தேயே இத்தனை வயசு வரைக்கும் ‘கன்னி கழியாம’ வச்சுண்டு இருக்கறது ரொம்ப தப்பு.உனக்கு ஒரு கல்யாணத்தே நாங்க பண்ணி வக்கறது உனக்கும் நல்லது இந்த குடும்ப த்துக்கும் நல்லது.நாங்க கூடிய சீக்கிரமா ஒரு நல்ல பையணாப் பாத்து கல்யாணத்தே பண்ணி வக்கி றோம்.நீ உங்க புக்காத்லே சந்தோஷமா இருந்துண்டு வந்து,சீக்கிரமா குழந்தகளேப் பெத்துக்கோ” என்று சொன்னாள்.

என் அப்பாவும் ராதாவைப் பார்த்து “அம்மா,சொன்னதே தான் நானும் சொல்லலாம்ன்னு இருந்தேன். B.Sc.படிச்சா,அப்புறமா M.Sc.படிக்கணும்ன்னு ஆசை வரும்.நீ ஓரளவு படிச்சு இருக்கே. அது போதும்.நாங்க ஒரு நல்ல குடும்பத்திலே ஒரு படிச்ச பையனாப் பாத்து ‘ஜாம்’ ‘ஜாம்’ன்னு கல்யாணம் பண்ணி வக்கிறோம்” என்று என் அம்மா சொன்னதை ஆமோதித்தார்.

ரெண்டு மாதம் ஆனதும் ஒரு நல்ல குடும்பத்தில் படித்து விட்டு ஒரு நல்ல வேலைக்குப் போய்க் கொண்டு இருக்கும் பையன் பெற்றோர்களிடம் ராதாவின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு, பையனின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு வந்து,ஒரு ஜோஸ்யா¢டம் ஜாதகப் பொருத்தம் பார்த்தார் என் அப்பா.

ரெண்டு ஜாதகங்களும் மிக நன்றாகப் பொருந்தி இருக்கவே,பையன் பெற்றோர்களிடம் ‘சீர்’’செனத்தி’ எல்லாம் பேசி முடித்து விட்டு,ஒரு முஹ¥ர்த்த நாளில் ராதாவின் கல்யாணத்தை பண்ணி முடித்தார்கள் என் பெற்றோர்கள்.

‘புக்ககம்’ போவதற்கு முன்னால் தங்கை என்னிடம் ரகசியமாக “ராமு,இவா ‘மிலிட்டெரி கண்டிப்பில் இருந்துண்டு மேலே படிச்சுண்டு வறதே விட,நான் ஒரு கல்யாணம் பண்ணிண்டதே நல்லது.என் ‘புக்காத்திகாவது’ நான் என் ஆத்துக்காரரோடு நான் கொஞ்சம் ‘ப்¡£யா’ இருந்துண்டு வரலாம்.எனக்கு இவா கல்யாணம் பண்ணி வச்சதே ஒரு வரப் பிரசாதமா நான் நினைச்சுக்கறேன்” என்று தன் கண்ணே சிமிட்டி சொன்னாள்.

உடனே நான் “ராதா,நீ ஒரு பொண் குழந்தை.இந்த கல்யாணம் பண்ணிக்கறதாலே உனக்கு இவா கிட்டே இருந்து ‘விடுதலை’க் கிடைச்சுட்டது.ஆனா நான் ஒரு புருஷப் பையனா பொறந்துட்டே னே.நான் இவா கூடத் தானே இருந்துண்டு வரணும்.எனக்குன்னு ஒரு கடமை இருக்கே ராதா” என்று சொல்லும் போது துக்கம் என் தொண்டையை அடைத்தது.

”உன் கஷ்டம் எனக்கு நன்னாப் புரியது ராமு.நீ நம்ம அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளையாச்சே. நீ அவாளே தனியா தவிக்க விட்டுட்டு எங்கேயும் போக முடியாதே.அவா கூடத் தானே உன் காலம் பூராவும் இருந்துண்டு வரணும்” என்று சொல்லி வருத்தப் பட்டாள் ராதா.

நான் B.SC. ‘பாஸ்’ பண்ணிவேன்..எனக்கு மேலே படிக்க அதிக ஆசை இல்லாததால்,நான் என் அப்பாவைப் பார்த்து “அப்பா எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.நான் ஒரு வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னதும் அவர் உடனே “அப்படியா ராமு.நீ கவலைப் படாதே. நான் என் முதலாளிக் கிட்டே உனக்கு ஒரு வேலை தரச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு அடுத்த நாளே தன் முதலாளி கிட்டே பேசி,அவர் ‘ஆபீஸிலே’யே ஒரு கீழ் நிலை கணக்கர் வேலை யை வாங்கிக் கொடுத்தார்.

நான் வேலைக்கு சேர ஒரு நல்ல நாள் பார்த்தார் என் அப்பா.அந்த நல்ல நாளில் இருந்து நான் என் அப்பாவுடன் ஒன்றாக அந்த தனியார் ‘ஆபீஸ்’க்கு வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தோம்.

நான் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடம்ஆகியது.

எனக்கு வயது இருபத்தி எட்டு ஆகி விடவே,என் அம்மாவும் அப்பாவும் எங்கள் உறவிலேயே, எங்கள் குடும்ப சூழ் நிலைக்கு ஏற்ப ஜாதகப் பா¢வர்த்தணை பண்ணி,சாரதா என்னும் ஒரு பெண்னை நிச்சியம் பண்ணினார்கள்.சாரதா B.Com.படித்து விட்டு ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்து வந்தாள்.

ஒரு நல்ல முஹுர்த்த நாளில் எனக்குக் சாரதாவுக்கும் கல்யாணம் நடந்தது.

அந்த கல்யாணத்திற்கு ராதாவும்,அவள் கணவரும்.ரெண்டு குழந்தைகளும்,அவள் மாமனாரும் மாமியாரும் வந்து இருந்தார்கள்.எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.ராதா ஒரு சூரிதார் கம்மீஸ் ‘டிரஸ்’ போட்டுக் கொண்டு வந்து இருந்தாள்.அவள் கணவரும்,அவர் அப்பாவும் நல்ல சில்க் ஜிப்பாவையும்,அதற்கு ஏற்ப ஒரு சில்க் பைஜாமாவையும் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.ராதாவின் மாமியார் ஒரு ஆறு கஜம் பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள்.

நான் ராதாவைப் தனியாகப் பார்த்து ரகசியமாக “என்ன ராதா,உங்க புக்காத்லே உன்னே எல்லா ‘டிரஸ்ஸையும்’ போட்டுக்க ‘அலவ்’ பண்ணீ இருக்காப் போல இருக்கே.உன் ஆத்துக்காரரும்,அவர் அப்பாவும் நல்ல சில்க் ஜிப்பாவும்,சில்க் பைஜாமாவும் போட்டுண்டு வந்து இருக்கா.உன் மாமியார் ஆறு கஜம் பட்டுப் புடவை தான் கட்டிண்டு வந்து இருக்கா” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

ராதா சந்தோஷமாக சிரித்துக் கொண்டு “ஆமாம் ராமு,என்னை எல்லா ‘டிரஸ்’ஸூம் போட்டுக் கொள்ள அவா ‘அலவ்’ பண்ணி இருக்கா.நம்மாத்திலே இருந்தா மாதிரி எந்த கெடு பிடியும் இல்லே எங்க புக்காத்லே.நான் இந்த் ஆத்லே ரொம்ப ‘ப்ரீயா’ இருந்துண்டு வறேன்” என்று சொன்னாள்.

கல்யாணம் முடிந்தததும் சாரதா அவள் அம்மா,அப்பா,அண்ணா, மன்னி தங்கை சுதா எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள்.

சாரதா கல்யாணத்திற்கு ஒரு வாரம் லீவு போட்டு இருந்தாள்.நான் ரெண்டு நாள் லீவு தான் போட்டு இருந்தேன்.எனக்கு ரெண்டு நாள் லீவு முடிந்தவுடன் நான் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டேன்.சாரதா வீட்டில் என் அம்மாவோடு இருந்து வந்தாள்.

அடுத்த நாளே எனக்கும் சாரதாவுக்கும் ஒரு நல்ல முஹ¥ர்த்ததில் ‘சாந்தி முஹ¥ர்த்தம்’ நடந்து முடிந்தது.சாரதாவின் அம்மாவும் அப்பாவும் அந்த விழாவுக்கு வந்து இருந்தார்கள்.

என் அம்மாவும்,அப்பாவும் ராதாவிடமும் என்னிடமும் எங்கள் வீட்டு ஆசாரங்களை சொல்லி பண்ண வைத்தது போல சாரதாவிடமும் சொல்லி பண்னச் சொன்னார்கள்.சாரதா அவள் வீட்டில் இருந்த போது என் அம்மா அப்பா சொல்லி வந்த ஒரு ‘கண்டிஷனையும்’ கேட்டதே இல்லை.அவள் ஆடிப் போய் விட்டாள்.

அன்று இரவு படுத்துக் கொண்டவுடன் சாரதா அழுதுக் கொண்டே” உங்க அம்மாவும், அப்பா வும் என்னேப் பாத்து இந்த ஆத்லே இப்படி தான் இருக்கணும்.எப்படி வேணுமானாலும் இருக்கக் கூடாது ன்னு எல்லாம் ‘கண்டிஷன’ போடறாளே.எங்க ஆத்லே எனக்கு உங்க அம்மா அப்பா சொல்றா மாதிரி எல்லாம் இருந்து பழக்கமே இல்லையே.சுத்த ‘மிலிட்டெரி ரூலா’ இருக்கே.நான் என்ன பண்ண ட்டும் சொல்லுங்கோ“ என்று கேட்டாள்.

எனக்கு கொஞ்ச நேரம் என்ன பதில் சொல்வது என்றே தொ¢யவில்லை. நான் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.சாரதா விடாமல் “நான் அழுதுண்டு கேக்கறேன்.நீங்கோ என்னடா ன்னா ஒன்னும் பதில் சொல்லாம,என்னவோ ஒரு கோட்டயே பிடிக்கறா மாதிரி யோஜனை பண்ணிண் டு இருக்கேள்” என்று என்னை உலுக்கிய பிறகு நான் என் நிலைக்கு வந்தேன்.

நான் சாரதாவைப் பார்த்து “ஆமாம் சாரதா,என் அம்மாவும் அப்பாவும் இப்படித் தான் நிறைய ‘கண்டிஷன்ங்க’ எல்லாம் போடுவா.எனக்கு அவா ‘கண்டிஷன்ங்க’ எல்லாம் பழக்கம் ஆயிடுத்து.நீயும் அதே எல்லாத்தையும் மெல்ல மெல்ல பழகிண்டு வர ‘ட்ரை’ பண்ணு” என்று சொன்னதும் அவளுக்கு த் தூக்கி வாரி போட்டது.

அவள் உடனே “நீங்களும் என் கிட்டே ‘அவா சொல்ற ‘கண்டிஷன்ங்க’ எல்லாத்தையும் மெல்ல மெல்ல பழகிண்டு வா’ன்னு சொல்றேளே.நான் உங்க கிட்டே எனக்கு எங்க ஆத்லே அந்த ‘கண்டிஷன்ங்க’ பழக்கமே இல்லேன்னு சொல்லிண்டு இருக்கேன்.உங்க காதிலே நான் சொல்றது விழலயா.இல்லே விழாத மாதிரி நடிக்கறேளா” என்று கத்தினாள்.நான் பொறுமையாக சாரதாவிடம் “சாரதா,கோவப் படாதே.எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ளே சரியாய் போயிடும்.இப்போ தூங்கலாம். எனக்கு ரொம்ப தூக்கம் வறது” என்று சொன்னதும் சாரதா ஒரு வழியாக தன் மனதைத் தேற்றிக் கொண்டு படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்துக் கொண்டே அவள் அப்பா அம்மாவுக்கு ‘போன்’பண்ணி என் வீட்டில் நடந்த எல்லாவற்ரையும் விவரமாக அழுதாள்.அவள் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஏதோ சமாதானம் சொல்லவே சாரதா “சரிம்மா நான் அவரே விட்டு சரி பண்ணச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘போனை கட்’ பண்ணினாள்.

ரெண்டு நாள் தான் ஆகி இருக்கும்.ஒரு நாள் சாயங்காலம் என் அம்மா சாரதாவைப் பார்த்து “சாரதா,நீ வேலைக்கு எல்லாம் போக வேணாம்.அவா புருஷா ரெண்டு பேரும் வேளைக்குப் போய் வரட்டும்.நீ எனக்கு துணையா ஆத்லே இருந்துண்டு வா” என்று சொன்னாள்.அம்மா சொன்னதைக் கேட்டு நான் திடுக்கிட்டேன்.’என்னடா இது புது வம்பு.அம்மா சாரதாவை வேலைக்கு எல்லாம் போக வேணம்ன்னு சொல்றாளே.இதே கேட்டுட்டு சாரதா அம்மா சொன்னதேப் போல இருக்கப் போறாளா, இல்லே நான் வேலைக்குப் போவேன்னு பிடிவாதம் பிடிக்கப் போறாளா.அம்மாவுக்கும் சாரதாவுக்கும் வாக்கு வாதமும் சண்டையும் வறப் போறதா.பகவானே,இது என்ன சோதனை என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு நான் சாரதாவையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.நல்ல வேளை சாரதா ஒன்றும் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தாள்.

என் அம்மா சொல்லி முடிக்கவில்லை என் அப்பாவும் “ஆமாம்,மரகதம் சொல்றது ரொம்ப சரி.நீ இத்தனை வருஷமா வேலைக்குப் போய் வந்துண்டு இருக்கே.இப்போ உனக்குக் கல்யாணம் ஆயிடு த்து.நீ அவளோட ஆத்லேயே இருந்துண்டு வா” என்று சொல்லி என் அம்மா சொன்னதை ஆமோதி த்தார்.

‘கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகி இருக்கிறது.நாம இப்பவே மாமியார்,மாமனாராருடன் வாக்குவாதம் பண்ண வேண்டாம்’ என்று நினைத்து சாரதா தன் கண்ணில் துளித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்தாள்.நான் என் அம்மாவைப் பார்த்து “அம்மா சாரதா வேலை க்குப் போயிண்டு இருந்தவ.இப்போ திடீர்ன்னு நீங்கோ அவளே வேலேக்குப் போக வேணாம் சொல் றது சரி இல்லே.அவ வேலேக்குப் போய் வரட்டும்”என்று சொல்லி முடிக்கவில்லை என் அம்மா என்னைப் பார்த்து “ராமு,சாரதா இத்தனை வருஷமா வேலேக்குப் போய் வந்துண்டு இருந்தான்னு எனக்கு நன்னாத் தொ¢யும்.இப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து.அவ என் கூட இருந்து வந்து எனக்கு கூட மாட எல்லாம் உதவியையும் பண்ணி வரட்டும்.நீயும் அப்பாவும் சம்பாதிச்சுண்டு வறது நம்ம குடுமபத்துக்கு போறுமேடா” என்று சொல்லி நான் சொன்னதற்கு பதில் சொல்லி விட்டு தன் காரியத்தைக் கவனிக்கப் போய் விட்டாள்.

அன்று இரவு சாரதா அழுதுக் கொண்டே” என்ன இது உங்க அம்மா என்னே வேலேக்குப் போகக் கூடாதுன்னு சொல்றா.உங்க அப்பாவும் உங்க அம்மா சொன்னதுக்கு ‘ஜால்ரா’ போடறார். நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வாரம் தானே ஆகி இருக்கு.இப்போ பிடிச்சி நாம மாமியார் மாமனாரோ ட வாக்கு வாதம் பண்ணிக் கூடாதுன்னு நினைச்சுத் தான் நான் சும்மா இருந்தேன்.நான் பிடிவாதம் பிடிச்சு பதில் பேசினா நன்னா இருக்காது.நீங்கோ தான் எப்படியாவது மறுபடியும் உங்க அம்மா அப்பா கிட்டே சொல்லி என்னை வேலேக்கு அனுப்புங்கோ.நீங்கோ தானே என்னேக் கல்யாணம் பண்ணீ ண்டு இருக்கேள்” என்று சொன்னாள்.

உடனே நான் “சாரதா,நான் மறுபடியும் என் அம்மா அப்பா கிட்டே சொல்லிப் பாக்கறேன். ஆனா எனக்கு என்னவோ நான் சொல்றதே அவாக் கேப்பான்னு எனக்குத் தோணலே”என்று சொன்னதும் சாரதா “உங்க அம்மா அப்பா இப்படி சொல்வான்னு எனக்கு முன்னமே தொ¢ஞ்சு இருந்தா,நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சே இருக்க மாட்டேன்.எல்லாம் என் தலை விதி.நான் இந்த ‘கட்டுப் பெட்டி’க் குடும்பத்லே வந்து வசமா மாட்டிண்டு இருக்கேன்.நீங்களும் உங்க அம்மா அப்பா சொல்றதுக்கு சரியான பதில் சொல்லி என் ஆசையை நிறைவேத்தி வக்க உங்களுக்கு தைரியம் இல்லே.நான் என் கஷ்டத்தே யார் கிட்டே சொல்லி அழறது.என் அம்மா அப்பாவா இந்த ஆத்துக்கு வந்து என் ஆசையை உங்க அம்மா அப்பா கிட்டே சொல்ல முடியும் சொல்லுங்கோ.நான் உங்களேத் தானே கல்யாணம் பண்ணீண்டு இருக்கேன்”என்று மறுபடியும் சொல்லி என் சட்டையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள்.

நான் அவ கையை என் சட்டையில் எடுத்து விட்டு விட்டு “சாரதா,நீ கொஞ்ச நாள் பொறுத்து ண்டு இரு.நான் மெல்ல என் அம்மா அப்பா கிட்டே சொல்லி உன் ஆசையை பூர்த்தி பண்ண ட்ரை பண்றேன்.எனக்கு கொஞ்சம் அவகாசம் குடு” என்று சொன்னேன்.

சாரதா உடனே அவ அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி “என் மாமியாரும்,மாமனாரும் இன்னிக்கு மத்தியானம் என்னேப் பாத்து ‘நீ வேலேக்கு எல்லாம் போக வேணாம்.ஆத்லேயே இருந்து வான்னு சொல்றா.நான் இவர் கிட்டே ராத்திரி படுத்துண்டதுக்கு அப்புறமா மாமனார் மாமியார் சொன்னதே சொன்னதுக்கு இவர் என்னடான்னா ‘நான் சொன்னா அவா கேப்பான்னுத் தோணலே’ ன்னு சொல்லி இழுக்கறார்.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ” என்று அழுதுக் கொண்டே
கேட்டாள்.

கொஞ்ச நேரம் ‘போனில்’ பேசிக் கொண்டு இருந்த சாரதா போனை என் கிட்டேக் கொடுத்து “எங்க அப்பா உங்க கிட்டே பேசணும்ன்னு சொல்றா,இந்தாங்கோ நீங்கோ பேசுங்கோ” என்று சொல்லி ‘போனை’ என் கையிலே திணித்தாள்.நான் சாரதா கொடுத்த ‘போனை’ வாங்கிக் கொண்டு காதில் வைத்துக் கொண்டவுடன் என் மாமனார்” மாப்பிள்ளே சாரதா B.Com.’பஸ்ட் க்லாஸ்லே’ ‘பாஸ்’ பண்ண பொண்ணு.அவளே ஆத்லே சும்மா இருந்துண்டு வரச் சொல்றது சரியே இல்லே.நீங்கோ உங்க அம்மா அப்பா கிட்டே எப்படியாவது கொஞ்சம் சொல்லி அவளே வேலேக்கு அனுப்புங்கோ”என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னார்.

நான் அவா¢டம் “நான் சாரதா கிட்டேயே சொல்லி இருக்கேன்.கொஞ்ச நாள் போனவுடன் நான் என் அம்மா,அப்பா கிட்டே சொல்லி சாரதாவை வேலேக்கு அனுப்ப ‘ட்ரை’ பண்றேன்” என்று சொன்னதும் அவர் “ரொம்ப தாங்க்ஸ் மாப்பிள்ளே” என்று சொல்லி ‘போனை’ கட் பண்ணீனார்.

அப்போதில் இருந்தே எனக்கும் சாரதாவுக்கும் விரிசல் ஆரம்பித்து விட்டது.

அன்று வெள்ளீக் கிழமை.

சாரதா காபியைக் குடித்ததும் என் அம்மா சாரதாவைப் பார்த்து “சாரதா,இன்னிக்கு வெள்ளிக் கிழமை.ராமு ‘ஆபீஸ்’ போனவுடன்,நீ குளிச்சுட்டு ஒரு ஒன்பது கஜம் புடவையை மடிசார் வச்சு கட்டிண்டு வா.நான் லலிதா சஹஸ்ரனாம ஸ்லோகத்தை சொல்லி அம்பாளுக்கு பூஜைப் பண்ணப் போறேன்.நீயும் என் கூட உக்காந்துண்டு அந்த பூஜையை கத்துக்கோ.வெள்ளீக் கிழமைலே லலிதா சஹஸ்ரனாம பூஜை பண்ணா ரொம்ப விசேஷம்.உனக்குப் பொறக்கறக் குழந்தைகள் ரொம்ப லக்ஷ்ணமா,சுவாமி பக்தி நிறைஞ்சவாளா இருப்பா” என்று சொன்னதும் சாரதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் என்னை முறைத்துப் பார்த்தாள்.

நான் ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தேன்.’சரி இவரே நம்பினா ஒரு பிரயோஜனமும் இருக்காது’ என்று தீர்மானம் பண்ணி சாரதா என் அம்மாவைப் பார்த்து “எனக்கு இந்த மடிசார் எல்லாம் வச்சுக் கட்டிக்கத் தொ¢யாது.என் அம்மா தான் எனக்கு என் கல்யாணத்தின் போது கட்டி விட்டா” என்று சொல்லி முடிக்கவில்லை என் அம்மா “நன்னா இருக்கு நீ சொல்றது.நான் உனக்கு மடிசார் புடவை கட்டி விட உங்க அம்மாவே இப்போ போய் கூப்பிட முடியுமா என்ன.வா,நான் உனக்குக் நான் கத்துத் தறேன்”என்று சொன்னாள்.

என் அம்மா சொன்னதைக் கேட்ட சாரதா ‘இந்த மாமியார் இன்னிக்கு நான் மடிசர் புடவையை கட்டிக்காட்டா விட மாட்டா போல இருக்கு.’வா நான் உனக்குக் கத்து தறேன்னு வேறே கூப்பிடறா’ எப்படி நான் என் மாமியாரே எனக்கு மடிசார் புடவையை கட்டி விட ‘அலவ் பண்றது’என்று நினைத்து என் அம்மா அந்தப் பக்கம் போனவுடன் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு “அம்மா நானே மடிசார் வச்சு கட்டிக்க ‘ட்ரை’ பண்றேன்” என்று சொல்லி விட்டு ‘பெட் ரூமுக்கு’ப் போய் அவளுக்குத் தொ¢ந்தார் போல ஒரு ஒன்பது கஜ புடவையை மடிசார் வைத்து கட்டிக் கொண்டு வந்தாள்.

‘ஏதோ நாம சொன்னவுடனே பாவம் சாரதா மடிசார் புடவை கட்டிண்டு வந்தாளே’ என்று சந்தோஷப் படாம என் அம்மா சாரதாவைப் பார்த்து “நீ சரியாவே மடிசார் புடவைக் கட்டிக்கலே. அடுத்த வாரம் நான் சரியாக் கட்டி விடறேன்.இப்போ மணி ரொம்ப ஆயிடுத்து.வா பூஜைக்கு நாம உக்கா¡ரலாம்” என்று சொல்லி சாரதாவை அழைத்துக் கொண்டு ‘பூஜை ரூமு’க்கு போனாள் என் அம்மா.

அன்று இரவு நான் படுத்துக் கொண்டதும் சாரதா என்னைப் பார்த்து “நான் என்ன உங்க அம்மாவேப் போல வயசான மாமியா.மடிசார் புடவை எல்லாம் கட்டிண்டு லலிதா சஹஸ்ரனாம பூஜை எல்லாம் பணறதுக்கு.நமக்கு ‘சாந்தி முஹ¥ர்த்தம்’ முடிஞ்சு இன்னும் பத்து நாள் கூட ஆகலே. அதுக் குள்ளே உங்க அம்மா என்னடான்னா என்னேப் பாத்து ‘வெள்ளீக் கிழமைலே லலிதா சஹஸ்ரனாம பூஜை பண்ணா ரொம்ப விசேஷம்.உனக்குப் பொறக்கறக் குழந்தைகள் ரொம்ப லக்ஷ்ணமா,சுவாமி பக்தி நிறைஞ்சவாளா இருப்பான்னு சொல்றா.இந்த ஆத்துக்கு நான் உங்களே கல்யாணம் பண்ணீ ண்டு வந்தது,உங்க அம்மாவுக்கு துணையா இந்த மாதிரி ‘லலிதா சஹஸ்ரனாம பூஜை’ எல்லாம் பணறதுக்குத் தானா.இன்னிக்கு எல்லாம் இருந்தா எனக்கு இருபத்தி ஆறு வயசு கூட ஆகலே. எனக்கு சுவாமி ரூம்லே உக்காந்துண்டு லலிதா சஹஸ்ரனாம பூஜை’எல்லாம் பணற வயசா.நீங்களே எனக்கு சொல்லுங்கோ” என்று அழுதுக் கொண்டே கேட்டாள்.

என்னிடம் ஏதாவது பதில் இருந்தா தானே நான் சொல்ல முடியும்.

நான் ஒன்னும் சொல்லாமல் பேசாமல் இருந்தேன்.கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த சாரதா என்னைப் பார்த்து “உங்கக் கிட்டே இருந்து ஒரு பதிலும் வறாதுன்னு எனக்கு நன்னா தொ¢ஞ்சு இருக்கும் ஒரு பயித்தியக்காரிப் போல உங்க கிட்டே கேட்டேன் பாருங்கோ.என் புத்தியே ஒரு கிழிஞ்ச செருப்பாலே தான் அடிச்சுக்கணும்” என்று சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் நான் சாரதாவைப் பார்த்து “சாரு,நீ சொல்றது சரி.நான் ஒத்துக்கறேன். இல்லேன்னு சொல்லலே.நீ என் நிலைமையை கொஞ்ச யோஜனைப் பண்ணிப் பாரு.என் அம்மா உன்னைப் பாத்து ‘இன்னிக்கு வெள்ளி கிழமை.லலிதா சஹஸ்ரனாம மந்திரம் சொல்லி அம்பாளுக்கு பூஜை பண்ணனும்.என் கூட வா’ன்னு சொல்லி உன்னை கூப்பிட்டா,நான் எப்படி என் அம்மவேப் பாத்து சுவாமி பூஜைக்கு எல்லாம் சாரதாவே நீங்கோ கூப்பிடாதீங்கோ’ன்னு சொல்றது சொல்லு.என் அம்மாவோ உன் கிட்டே ‘உனக்குப் பொறக்கப் போற குழந்தைகள் குழந்தைகள் ரொம்ப லக்ஷ்ணமா, சுவாமி பக்தி நிறைஞ்சவாளா இருப்பா’ன்னு வேறே சொல்றா.நீ என் தர்ம சங்கடத்தே கொஞ்சம் புரிஞ்சுக்கோ சாரதா.அதனால் தான் நான் அப்போ ஒன்னும் சொல்லாம சும்மா இருந்தேன் ”என்று சொல்லும் போது என் குரல் தழுதழுத்தது.

சாரதா என்னைப் பார்த்து “எனக்கு உங்க தர்ம சங்கடம் நன்னா புரியறது.அது கூட புரியாத ஜடம் இல்லே நான்” என்று கோவமாகச் சொன்னாள்.நான் சாரதாவைப் பார்த்து “ சாரு,என் அம்மா உன்னே அடுத்த வாரமும் ஒன்பது கஜ மடிசார் புடவை கட்டிக்கோன்னு ‘கம்பெல்’ பண்ணுவா.நீ அதே சரியா கட்டிக்காட்டா ‘நீ சரியாவே கட்டிக்கலே.வா நான் உனக்கு கட்டி விடறேன்னு சொல்லி படுத்து வா.நான் உன்னை இந்த வார ஞாயித்துக் கிழமை உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு போறேன்.நீ உங்க அம்மா கிட்டே இந்த மடிசார் புடவை எப்படி கட்டிக்கறதுன்னு நன்னா கத்துக்கோ”என்று சொன்னேன்.

சாரதா கொஞ்சம் சமாதானம் ஆகி “ஆமாம்,அடுத்த வாரமும் உங்க அம்மா என்னே பூஜைக்குக் கூப்பிடுவா.மடிசார் கட்டிக்க ‘கம்பெல்’ பண்ணுவா.நான் சரியா கட்டிக்காட்டா,வா ‘நான் சரியாக் கட்டி விடறேன்னு படுத்துவா’.நீங்கோ சொன்னா மாதிரி என்னை இந்த ஞாயித்துக் கிழமை எங்க ஆத்து க்கு அழைச்சுண்டு போங்கோ.நான் என் அம்மா கிட்டே இந்த மடிசார் புடவையை எப்படி சரியா கட்டிக்கறதுன்னு கத்துண்டு வறேன்.இன்னும் என்ன எல்லாம் நான் கத்துக்கணுமோ இந்த ஆத்லே. இன்னும் என்ன என்ன கஷ்டம் எல்லாம் நான் இந்த ஆத்லே உங்க அம்மா கிட்டே பட்டுண்டு வரணுமோ” என்று வெறுப்புடன் கத்தினாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *