கண்ணீருடன் வந்து நின்றாள் ரஞ்சனி,அவளை அமைதியாக உட்கார வைத்த சுந்தரம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்,முதல் தண்ணீரை குடி என்றான் அவளும் வாங்கி மடமடவென்று குடித்து முடித்தாள்,சற்று நேரம் அமைதி நிலவியது மெதுவாக என்ன நடந்தது என்று கேட்டான்,அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது,முதல் அழுகையை நிறுத்து,கொஞ்சம் அதட்டலாகவே அவன் சொன்னான், அது வந்து என்று அவள் இழுத்தாள்… ‘என்ன நடந்தது என்று சொன்னால் தான்,எனக்கு தெரியும் என்றான் அவன் மீண்டும்,என்னை ஒருத்தன் பணம் கேட்டு மிரட்டுகிறான் என்றாள் ரஞ்சனி,ஏன் உன்னை பணம் மிரட்டுகிறான் என்றான் அவன் ஆச்சிரியமாக,நான் அவனை காதலித்து ஏமாற்றி விட்டதாக நினைக்கிறான் என்றாள் அவள்,இது என்ன புது கதை,எனக்கும் ஒன்றும் புரியவில்லை,நீ அப்படி யாரையாவது காதலித்தீயா?என்றான் சுந்தரம், ஆமாம் என்றாள் அவள்,அவன் அவளை ஒரு மாதிரி பார்ப்பது போல் அவளுக்கு தோன்றியது,இது எவ்வளவு நாட்களாக என்றான்,ஒரு வருடமாக என்றாள் அவள்,உனக்கு அறிவு இருக்கா,வரதனை திருமணம் செய்து,இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகியப் பிறகும் இப்போது போய் காதல் வலையில் வீழ்ந்து இருக்கீயே என்று கேட்கத் தோன்றியது அவனுக்கு,ஆனால் எதுவும் கேட்கவில்லை,நான் பார்த்து வளர்ந்தவள்,பிரச்சினை என்று வந்து நிற்கும் போது அவளை காயப் படுத்த அவன் விரும்பவில்லை.
அவன் யாரு, பெயர் என்ன என்று கேட்டான் சுந்தரம், அவன் பெயர் குமார், உங்களுக்கும் அவனை தெரியும் அவனுக்கும் உங்களை தெரியும் என்றதும்,எனக்கு எப்படி அவனை தெரியும் என்றான் சுந்தரம்,நீங்கள் நம் வீட்டுக்கு வந்துப் போய் கொண்டிருந்த நாட்களில் அவனும் வந்து இருக்கின்றான் என்றாள் ரஞ்சனி,சரி அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்றான் அவன்,அவன் பாடசாலை நாட்களில் என்னை காதலித்தவன் என்றதும்,சுந்தரத்திற்கு அவள் பொய் கூறுவது போல் இருந்தது,எனக்கு தெரியாமல் உனக்கு காதல் இருந்ததா என்றான்,ஆமாம் இருந்தது ஆனால் இவன் இல்லை வேறொருவன் என்றாள்,அவன் அமைதியாக இருந்தான்,உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தான் தெரியும்,உங்களை விட அந்த குமார் என்னைப் பற்றி நிறையவே தேடி பார்த்திருக்கான்,அவனுக்கு எனக்கு ஒரு காதலன் இருக்கின்றான்,அவன் அவ்வளவு நல்லவன் இல்லை என்பதையும் தெரிந்து வைத்திருந்தவன்.
எப்படியும் அவன் என்னை ஏமாற்றி விடுவான்,அவனுக்கு நான் கிடைப்பேன் என்ற நம்பிக்கையில், இதை எல்லாம் என்னிடம் சொல்லவும் முடியாமல் என் பின்னுக்கு காதல் என்று அழைந்தவன்,பல வருடங்களாக நம் வீட்டுக்கு வந்துப் போய் கொண்டிருந்த உங்களுக்கு என் காதலே தெரியாது என்று சொல்வது தான் ஆச்சிரியமாக இருக்கின்றது இதை எனக்கு நம்பவும் முடியாமல் இருக்கின்றது, பிறகு எதற்காக எனக்கு படம் எல்லாம் போட்டு காட்டுனீங்கள்? மாமா சொன்னால் கேட்க வேண்டும் என்ற மாதிரி ஒரு காதல் படம்,உடனே மாமா சொன்னதை கேட்டு அவள் திருந்தி விடுவாள்,நானும் அப்படி திருந்தி விடுவேன்,இத்தோடு என் கடமை முடிந்து விட்டது என்று எதையும் தேடி பார்க்காமல் விட்டு விட்டீங்களா,நான் ஒரு தப்பானவனை காதலிக்கப் போய்,என் வாழ்க்கையே வீணாகிவிட்டது என்பது உங்களுக்கு தெரிய வாய்பில்லை தான்,அப்போது நான் உங்களுக்கு தேவைப்படவில்லை,உங்களுக்கு உங்கள் மனைவியும்,அவர்கள் குடும்பமும் தானே பெரிதாக தெரிந்தார்கள்,கடந்து போனவற்றை எல்லாம் நீங்கள் மறந்து இருக்கலாம்,அப்படி எனக்கு எதையும் மறக்க முடியாதே,பாதிக்கப் பட்டவள் நான்,மனதில் படமாக ஓடியது அவளுக்கு,ம்…மேலும் சொல்லு என்றப் போது தான் சுய நினைவுக்கு வந்தாள் ரஞ்சனி.
அவன் மட்டும் தான் காதலித்தான்,நான் அவனை காதலிக்கவில்லை,பல தடவைகள் எனக்காக என் பின்னுக்கு வந்தவன்,நான் அவனை கணக்கெடுக்கவில்லை,பிறகு எப்படியோ என் தம்பியை நண்பனாக்கி கொண்டு என் வீட்டுக்கு வருவதற்கு ஆரம்பித்தான்,அப்போதும் எனக்கு அவன் மீது காதல் வரவில்லை என்று பெருமூச்சி விட்டாள் அவள்,உன் தம்பிக்கும் அறிவே இல்லை,பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டிற்கு யாரையும் அழைத்துக் வரக் கூடாது என்று தெரியாது,திறந்த வீட்டில் நாய் புகுந்த மாதிரி தான் உங்கள் வீட்டுக்கு கண்ட கண்ட பசங்கள் எல்லாம் வருவார்களே அந்த காலத்தில் என்றதும்,அவளுக்கு சுள்ளென்று தலைக்கு ஏறியது,நீங்கள் மட்டும் எப்படி நம் வீட்டுக்கு வந்தீங்கள்,என் மாமாவின் நண்பன் என்று வந்த நீங்கள்,பல சுகங்கள் உங்களுக்கு கிடைத்தது,தொடர்ந்து வர ஆரம்பித்தீங்கள் என்று வாய் மட்டும் வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்,ஆமாம் எனக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கின்றது மணிக்கணக்கில் உட்கார்ந்து,உன் அம்மாவிடம் கதை பேசுவானே அவன் தானே என்றான் சுந்தரம்,அப்போதும் அவன் மணிக்கணக்கில் கதை பேசி விட்டு சென்று விடுவான்,நீங்கள் இரண்டு நாட்கள் தங்கி விட்டு தானே போவீங்கள் என்று அடி மனது சொல்வதை அவள் பொருட்படுத்தவில்லை,ஆமாம் அவனே தான் என்றாள் ரஞ்சனி.
நீ தான் வரதனை காதலித்து திருமணம் செய்து கொண்டாயே,எனக்கு திருமண அழைப்பிதழை வைத்து,என்னை திருமணத்திற்கு வரக்கூடாது என்று,கூறி விட்டுப் போனாவர்கள் உன் குடும்பம்,அதை மறக்க முடியுமா என்று சிரித்தான் அவன்,ஆமாம் ஏன் உங்களை வர வேண்டாம் என்று சொன்னார்கள்,நீங்கள் முறையற்ற செயல்களை செய்ததால்,நான் அதை வரதனிடம் தெரியப் படுத்த வேண்டியிருந்தது,அதனால் வரதன் உங்களுடன் தொடர்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானமாக சொன்னதால்,அதையும் மீறி உங்களுக்கு திருமணம் பத்திரிக்கை என் வீட்டார் வைத்து,திருமணத்திற்கு வந்து விடாதீங்கள்,பிறகு பெரிய பிரச்சினையாகி விடும்,உங்களுக்கு கட்டாயம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்கின்றோம் என்று சொன்னார்கள்,அப்போது வரதனை விட நீங்கள் உயர்வாக தெரிந்தீங்கள் அவர்களுக்கு,அதே குடும்பம் இப்போது உங்களை தூக்கி எரிந்தும் இருக்கின்றார்கள்,இது எல்லாம் காலம் செய்யும் கொடுமை என்று கத்தி அழவேண்டும் போல் இருந்தது ரஞ்சனிக்கு,அடக்கி கொண்டாள்.
நான் காதலித்தவன் உறுப்படி இல்லை என்று காலம் கடந்து தான் எனக்கு தெரிந்தது,என் பின்னால் நாயாக அழைந்த குமாரை காதலிக்க எனக்கு மனம் வரவில்லை,பல குழப்பமான சூழ்நிலையில்,நான் இருக்கும் போது தான்,வரதன் தன் காதலை என்னிடம் கூறினார்,என் வீட்டாருக்கு அவரை பிடித்திருந்தது,நானும் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றாள் அவள்,பிறகு எப்படி குமாரிடம் உனக்கு தொடர்பு ஏற்பட்டது,அவனும் நீ இருக்கும் இடத்திலா இருக்கான் என்றான் சுந்தரம்,இல்லை அவன் வேறு ஊரில் வேலை செய்கிறான் என்றாள்,அவன் வேறு ஊரில் வேலை செய்கிறான் என்கின்றாய்,பிறகு எப்படி உங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றான் சுந்தரம்,அது ஸ்கைப்பில் என்றாள்.
உடனே அவன் போன்,ஸ்கைப்,ஐபேட்,கணினி இது எல்லாம் என்று வந்ததோ அன்றோடு பல குடும்பங்கள் நாசமாகி விட்டது என்றான்,அந்த காலத்தில் இப்படி எதுவும் இல்லாதப் போது மட்டும் நன்றாகவா இருந்தது,வந்து அவர்அவர் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு தானே போனார்கள் என்று நினைத்தவளுக்கு மனம் விரக்தியடைந்தது, எப்போது ஸ்கைப்பில் அவனை தொடர்ப்பு கொண்ட என்றான் சுந்தரம்,அது பெரிய கதை.
நாங்கள் நம்முடைய காணியை விற்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோமே அது உங்களுக்கும் தெரியும் தானே என்றாள்,ஆமாம் தெரியும்,உங்கள் காணியை விற்றப் பிறகு தான்,என்னை தூக்கி எரிந்து விட்டீங்களே,நான் பண சிக்கலில் இருக்கேன் என்று தெரிந்தும்,என்னிடம் தொடர்பு இருந்தால்,பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று என்னை ஒதுக்கி விட்டீங்களே என்றான் சுந்தரம்.
குடும்பம் செய்யும் வேலை தலைகுனிந்து நிற்க வேண்டியிருக்கு,நான் செய்த வேலையை விட,இது பரவாயில்லை என்று நினைத்தப் படியே குமார் நம் காணியை விற்று தருவதற்கு முயற்சி செய்தான்.
என்றாள்,நீங்கள் காணியை விற்கப் போவது அவனுக்கு எப்படி தெரியும் என்றான் சுந்தரம்,வரதன் உங்களை வெறுத்தப் போதும்,நான் உங்களை வெறுக்கவில்லையே, நீங்கள் நம் வீட்டுக்கு வரும் போது,நானும் சிலசமயம் வெளியூரில் வரதனை விட்டு விட்டு வந்து இருக்கும் போது எல்லாம் உங்களிடம் கதைத்துக் கொண்டு தானே இருந்தேன்,உங்களை தொடர்ப்பில் வைத்திருந்த என் குடும்பம்,குமாரையும் தொடர்பில் வைத்து இருந்தார்கள் இது எல்லாம் உங்களிடம் சொல்ல முடியுமா,அதை எல்லாம் மறைத்து,என் குடும்பம் குமாரிடம் தொடர்பில் இருந்தது என்று மென்னு விழுங்கினாள் ரஞ்சனி.
காணியை விற்று தருவதற்காக என்னையும் கதைக்க சொன்னார்கள்,நானும் இங்கு வந்து இருக்கும் போது அவனிடம் ஸ்கைப்பில் கதைத்தேன்,உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றான் சுந்தரம்,நீ கதைத்தால் அவன் காணியை விற்று தருவதற்கு முயற்சி செய்வான் என்றார்கள்,அதனால் அவனிடம் கதைத்தேன் என்றாள்,உன்னை காதலித்தவன் என்று உன் குடும்பத்திற்கு முன்பே தெரியுமா என்றான் சுந்தரம்,ஆமாம் தெரியும்,எனது திருமணத்திற்கு முதலே நம் வீட்டுக்கு வந்து அம்மா,அக்காவிடம் நான் ரஞ்சனிக்காக தான் இவ்வளவு நாட்களும் இங்கு வந்தேன் என்ற உண்மையெல்லாம் கூறிவிட்டு,இனி நான் இங்கு வரமாட்டேன் என்றும் கூறி இருக்கான்,பிறகு ஏன் அவனிடம் தொடர்ப்பில் இருந்தார்கள்,என்று கோபபட்டான் சுந்தரம்.
இதே கோபம் தானே அன்று வரதனும் பட்டார்,உங்களிடம் யாரும் இனி தொடர்ப்பில் இருக்கவே கூடாது என்று அதை யாருமே கேட்க்கவில்லையே,நானும் சிறிது நாட்கள் உங்களிடம் கதைக்காமல் இருந்தேன் வரதனுக்கு பயந்து,அதன் பிறகு அவருக்கு தெரியாமல் நானும் இது நாள் மட்டும் உங்களுடன் கதைத்துக் கொண்டு தானே இருக்கேன்,அதே போல் தான் இதுவும் என்று உங்களிடம் சொல்ல முடியுமா,குமார் நானும் காணியை விற்று தருவதற்கு முடிந்தளவு முயற்சி செய்கிறேன்,நீ ஊருக்கும் போனப் பிறகும் என்னுடன் ஸ்கைப்பில் கதை என்று கூறினான், நானும் அப்படி சகஜமாகத் தான் கதைக்க ஆரம்பித்தேன்.
காணி விற்று எவ்வளவு நாட்கள் என்றான் சுந்தரம்,ஆறு மாதங்கள் ஆகிவிட்டது,யாரு காணியை விற்று கொடுத்தது அவனா என்றான் சுந்தரம்,இல்லை அவனும் பல முயற்சி செய்து பார்த்தான் அவனுக்கும் முடியவில்லை,நாங்கள் வேறொருவரிடம் கூறி காணியை விற்று விட்டோம்,அவனுக்கு தெரியப் படுத்தவில்லை,அந்த கோபம் என்னை வைத்து பழி வாங்குகிறான் என்றாள் அவள்,அவனுக்கு ஒரு வார்த்தை கூறியிருக்கனும் தானே,ஏன் அவனிடம் மறைத்தீர்கள்,அவனுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவா என்றதும் அவளுக்கு அவமானமாக இருந்தது,அமைதியாக இருந்தாள்,சரி அதை விடு அது உங்கள் பிரச்சினை,நீயும் அவனிடம் கூறவில்லையா என்றான்,அவள் இல்லை அவனிடம் அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன் என்றாள்,ஏன் என்றான்,அவனின் மனைவிக்கு நாங்கள் இருவரும் மறுப்படியும் ஸ்கைப்பில் கதைப்பது தெரிய வந்து விட்டது,அவள் வீட்டை விட்டுப் போகும் அளவிற்கு பிரச்சினையாகிவிட்டது,அவளுக்கு முடியாதப் போது,என் அக்காவிற்கு போன் எடுத்து கூறியிருக்காள்,உங்கள் தங்கையை இனி இவருடன் கதைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று, உன் குடும்பத்திற்கு அவளை எப்படி பழக்கம் என்றான் சுந்தரம், அவளுக்கு குமார் எல்லாம் கூறியிருக்கான், நான் இப்படி ஒருத்தியை காதலித்தேன், அவளுக்காகவே அவள் வீட்டுக்கு போகவும் ஆர்ம்பித்தேன், அவளின் அம்மா என்னுடன் நன்றாக பழகுவார்கள்,இந்த கதையெல்லாம் கேட்டுத் தானே நானும் அவனிடம் மயங்கினேன்,இத்தனை வருடங்கள் கடந்தும் ஒருத்தனால் இவ்வளவு அன்பு செலுத்த முடியுமா?தன் மனைவியிடம் தனக்கு முன்னால் ஒரு காதல் இருந்தது என்பதை தைரியமாக கூறியிருக்கானே,சிலர் தங்கள் மனைவிடம் எல்லாம் மறைத்து,நான் உத்தமன் என்று தானே வாழ்க்கை நடத்துகிறார்கள்,அதை விட இவன் எவ்வளவு மேல் என்று அவனை நினைத்தது தான்,தப்பாக போய் விட்டது,அது தற்போது தானே புரிகின்றது என்று அவளே மனதில் நினைத்துக் கொண்டு,அவன் குடும்பத்துடன் நம் வீட்டுக்கு எல்லாம் வந்து போய் இருக்கான் என்றாள் அவள், உனக்கும் அவர்களை தெரியுமா என்றான் சுந்தரம்,நம் வீட்டுக்கு வந்திருந்தப் போது நான் இல்லை,அதற்கு முதல் ஒரு நாள் நாங்கள் குடும்பத்துடன் வெளியில் சென்று இருக்கும் போது,அவர்கள் குடும்பத்துடன் வந்து இருந்தார்கள் அப்போது எங்களை கண்டு கதைத்தார்கள் என்றாள் ரஞ்சனி,வரதனை அவனுக்கு தெரியுமா என்றான் சுந்தரம்,இல்லை இது வரை அவரை கண்டது இல்லை என்றாள்.
அந்த கோபத்தில் நீயும் அவனிடம் காணி விற்றதை கூறவில்லை,பிறகு எப்படி அவனுக்கு நீங்கள் காணி விற்றது தெரியவந்தது என்றான்,அடிக்கடி அவனுக்கு போன் பன்னிக் கொண்டிருந்த நம் குடும்பம் காணியை விற்றப் பிறகு அவனிடம் தொடர்பு கொள்ளவில்லை எனக்கு இது எல்லாம் தெரியாது,திடீரென்று ஒரு நாள் எனக்கு தகவல் அனுப்பி இருந்தான் காணியை விற்று விட்டீங்களா என்று,அவன் உள் நோக்கம் எதுவும் எனக்கு தெரியாமல் ஆமாம் என்று போட்டேன்,நமக்கு தான் உண்மைகளை மறைக்க தெரியாதே,அப்படி மறைத்து இருந்தால்,நானும் சந்தோஷமாக வாழ்ந்து இருப்பேனோ என்ற கேள்வி எழுந்தது அதன் பிறகு அடிக்கடி ஸ்கைப்பில் கதைக்க ஆரம்பித்தோம், முன்பை விட அதிகமாக அன்பு காட்டினான்,ஒரு வருடமாகவே காதல்
பிறகு அவனை நம்பி அதிகமாகவே பழகிவிட்டேன்,வரதனின் குறைகளை எல்லாம் சொல்வேன்,அவனும் அவர்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையெல்லாம் சொல்வான்,இருவரும் நிறைய விடயங்களை பற்றி கதைத்துக் கொள்வோம் என்றாள் ரஞ்சனி,செக்ஸ் விடயங்கள் எல்லாம் அலசி ஆராய்வீங்களோ என்றான் சுந்தரம்,அவளுக்கு சுருக்கென்றது,நீங்கள் பெரிய யோக்கியமோ,எதுவும் அறியாத பருவத்தில் கை வைத்தவர் என்று சொல்வதற்கு வாய் துடித்தது,இது அதற்கு நேரம் இல்லை,உதவி என்று வந்து,உங்கள் கால்களை தானே பிடித்திருக்கேன்,உங்களையே குத்தி காட்ட முடியுமா? என்று உள் மனம் விம்மியது,அவள் அமைதியாக இருந்தாள், ஸ்கைப்பில் அப்படி இப்படி ஏதாவது என்றான் அவன், அவள் முகம் வேர்த்தது,அப்போது படம் எடுத்து இருப்பான் ராஸ்கல் என்றான் சுந்தரம்,அவன் ஸ்கைப்பில் படம் தான் எடுத்து இருப்பான், நீங்கள் பக்கத்தில் படுத்தே கிடந்தவர் ஆச்சே,இப்போது அதை சொன்னால்,நான் எந்த தப்பான நோக்கத்துடன் உன்னுடன் பழகவில்லை,தற்செயலாக எல்லாம் நடந்தது என்று கூறி சமாளித்து விடுவீங்கள் என்று எனக்கும் தெரியும்.
நீங்கள் எப்போது இங்கு வந்தீங்கள்?என்றான் சுந்தரம்,வந்து நான்கு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது என்றாள்,வரதனும் வந்து இருக்காறா என்றான் அவன்,அவர் வரவில்லை,அவருக்கு லீவு இல்லை என்றாள்,குமார் உன்னை எங்கிருந்து மிரட்டுகிறான் என்றான்,தற்போது இங்கு வந்துள்ளான் என்றாள்,எங்கு இருக்கான் என்றான் சுந்தரம்,வெளியூரில் இருந்து வந்து இருக்கான்,பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறைக்கு நாங்களும் இங்கு வருவோம் என்று அவனுக்கு தெரியும்,அதனால் அவனும் இங்கு வந்து இருக்கான் என்றாள்,நீ தற்போது அவனிடம் தொடர்பில் இல்லையா?இங்கு வரும் மட்டும் அவனுடன் கதைத்துக் கொண்டு தானே இருந்த என்றான் சுந்தரம்,ஆமாம் நானாக தான் அவனுக்கு பணம் தருவதாக சொன்னேன் என்றாள்,ஏன் நீ அவனுக்கு பணம் கொடுப்பதாக சொன்னாய் என்றான் சுந்தரம்,அவன் வேறு வீடு மாற போவதாகவும்,அதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதாகவும் சொன்னான்,என்னிடம் இருக்கு நான் தருகின்றேன் என்று நானாக தான் சொன்னேன்,அவன் கேட்க்கவில்லை.
அவன் இடத்தில் அவ்வளவு மயக்கம் என்று சுந்தரம் மனதில் நினைத்துக் கொண்டே இதற்கு முதல் ஏதும் பணம் கொடுத்து உதவி இருக்கியா என்றான்,இல்லை பிறகு ஏன் பணம் கொடுக்கவில்லை என்றான் சுந்தரம்,இங்கு வந்து அம்மாவிடம் கேட்டு விட்டு கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு தான் வந்தேன், வந்தப் பிறகு உடனே அவனுடன் தொடர்பு படுத்திக்க முடியாமல் போய் விட்டது,அதற்கிடையில் அவனுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று நினைத்து, அவன் சுயரூபத்தை காட்டி விட்டான்,அக்காவிற்கு போனை போட்டு,நடந்ததை கூறி,நான் கேட்கும் பணத்தை தரும்படி மிரட்டி இருக்கான்,நான் இங்கு வந்ததில் இருந்து ஒரே பிரச்சினை,நம் வீட்டுக்கு போன் எடுத்து, அசிங்கமாக கதைக்கின்றான்,நான் கேட்க்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால்,ரஞ்சனி படம் எல்லாம் வரதனுக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகிறான் என்றாள்,அப்படி அவனிடம் உன் படம் என்ன இருக்கு? நீ எதுவும் அனுப்பி இருக்கீயா என்றான் சுந்தரம்,நான் எதுவும் அனுப்பவில்லை என்றாள் அவள்,அவனிடம் ஏதோ ஒன்று இருக்கப் போய் தானே உன்னை மிரட்டுகிறான் என்றான் அவன்.
எனக்கு என்னமோ அவனும் அவன் மனைவியும் சேர்ந்து தான் என்னிடம் பணம் கேட்ப்பதாக தெரிகின்றது,அவன் மனைவி என் அக்காவிற்கு போன் பன்னி,நான் பிள்ளைகளை விட்டு விட்டு போகப் போகிறேன் ஏதாவது செய்து கொள்ளட்டும் என்று அழுது இருக்காள்,அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்றான் இரண்டு பெண்குழந்தைகள் என்றாள்,உனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் போது, அவர்களின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காமல்,இரண்டு பேரும் சேர்ந்து பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கப் பார்த்தீங்களா என்று அவனுக்கு வாய் மட்டும் வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டான்,சரி தற்போது அவன் குடும்பத்துடன் தானே இருக்கிறான் என்றான் சுந்தரம்,இது எல்லாம் வரதனுக்கு தெரியுமா என்றான் நம் வீட்டுக்கு போன் எடுத்து இருக்கான் அந்த நேரத்தில் வரதன் வீட்டில் இல்லை,அதன் பிறகு எடுத்து எவ்வளவு சொன்னான் என்று தெரியவில்லை வரதன் எனக்கு போன் பன்னி குமார் என்று ஒருத்தன் போன் பன்னி உன்னைப் பற்றி தேவையில்லாமல் கதைக்கின்றான் என்று கேட்டார்,ஏதோ அவரை சமாளித்து வைத்தேன்,காணி விற்று பணம் கொடுக்கவில்லை என்பதறாகாக தற்போது மிரட்டுகிறான் என்று சொன்னேன்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை,நம் குடும்பத்திற்கும் தெரியவில்லை என்று அழுதாள் ரஞ்சனி,இனி அழுது வேலையில்லை,இனி என்ன செய்யலாம் என்று யோசிப்போம்,அவன் மனைவி பிள்ளகள் பெயர் எல்லாம் தெரியுமா உனக்கு என்றான் தெரியும் அவனுக்கு வேறு யாரும் இருக்கின்றார்களா என்றான் சுந்தரம்,ஆமாம் மூன்று தங்கைகள் இருக்கின்றார்கள்,நான் படித்த பாடசாலையில் தான் அவர்களும் படித்தார்கள் அவர்களை ஒரு முறை பாடசாலைக்கு பார்க்க வந்தப் போது தான் என்னை கண்டு இருக்கான்,அப்போது என் மீது ஏற்பட்ட காதல் என்றாள், அதை எல்லாம் இப்போது விடு என்றான் சுந்தரம்,உங்களுக்கு தான் நான் யாரிடம் கதைத்தாலும், யாரைப் பற்றி கதைத்தாலும் உங்களுக்கு பிடிக்காதே, உங்கள் பின்னுக்கே நான் இருக்கனும் என்று நினைத்தீங்கள்,அதற்கு ஏற்ற மாதிரி தான் நானும் இருந்தேன்,உங்களுக்கென்று ஒரு குடும்பம் வந்தப் பிறகு என்னை தூக்கி எரிந்து விட்டீங்கள் தானே,என்று நினைத்தப் போது அவளுக்கு கவலையாக இருந்தது
சரி நீ எதுவும் யோசிக்காதே,நான் பார்த்துக் கொள்கின்றேன்,அவன் உன்னை மிரட்டினால் நாங்களும் அவனை மிரட்டுவோம்,பிள்ளைகளை கடத்தி விடுவோம்,தங்கைகளை கடத்தி விடுவோம் என்று அப்படி ஏதாவது செய்து தான் அவனை மடக்க வேண்டும் என்றான் சுந்தரம் அப்போது தான் ரஞ்சனிக்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது,நானும் முடிந்தளவு கெஞ்சி பார்த்து விட்டேன் எதற்கும் அவன் அசைவதாக இல்லை என்றாள் ரஞ்சனி,நீ அவனிடம் எப்படி தொடர்பு கொண்ட மறுப்படியும் என்றான்,என் போனுக்கு சிம் காட் வாங்காமல் விட்டது தான் நான் செய்த மடத்தனம்,தம்பி,தம்பி மனைவி,அக்கா போனில் அவனிடம் கதைத்தது தான் தப்பாக போய் விட்டது,அவன் மறுப்படியும் எல்லோரிடமும் போன் எடுத்து என்னை அசிங்கமாக கதைத்து விட்டான்,அவர்களை பார்க்கும் போது அவமானமாக இருக்கின்றது என்றாள் ரஞ்சனி,சரி விடு என்றான் சுந்தரம்,நீ இங்கு வந்தது உன் குடும்பத்திற்கு தெரியுமா என்றான் அவன்,ஆமாம் எனக்கு வேறு வழியில்லை,உங்களுக்கு மட்டும் தான் எனக்கு உதவி செய்யலாம் என்று நம் குடும்பத்திற்கும் தெரியும் என்றாள்.
எதுவும் பிரச்சினை என்றால் மட்டும் தான்,உன் குடும்பத்திற்கு நான் நினைவுக்கு வருவேன் என்றான்,அவள் மனதில் தோன்றியது எத்தனை வருடம் உங்களை பழக்கம்,எனக்கு பத்து வயது இருக்கும் போது,மாமா முதல் முதல் உங்களை நம் வீட்டுக்கு அழைத்து வந்ததை மறக்க முடியுமா?என்னுடன் ஆபிஸில் வேலை செய்பவர்,என் நண்பர்,பெயர் சுந்தரம் என்று அறிமுகம் படுத்தி வைத்த அந்த நாள் இப்போதும் என் கண் முன்னுக்கு இருக்கே,அதில் இருந்து நீங்கள் அடிக்கடி வருவதற்கு ஆரம்பித்தீர்கள்,அதற்கு காரணம் என் அப்பா மனநோயாளி,அவர் அடிக்கடி பாதிக்கப் படும் போது எல்லாம்,என் மாமா வந்து பார்த்துக் கொள்வார்,அப்பாவை தனியாக அம்மாவிற்கு சமாளிக்க முடியாது,மாமாவிற்கு சிறிது காலம் வெளியில் வேலை என்பதால்,உங்களிடம் நம் குடும்பத்தி்ன் பிரச்சினைகளை எல்லாம் கூறி,அந்த பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்தார்,அம்மாவும் உங்களை சொந்த தம்பி போல் நடத்தினார்கள்,அவர்கள் உங்களை சுந்தரம் என்று அழைத்தார்கள்,நானும் உங்களை சுந்தரம் என்று தான் அழைத்தேன்,உன்னை விட வயதில் பெரியவர்களை அப்படி பெயர் சொல்லி அழைக்க கூடாது என்று நம் வீட்டில் எவ்வளவோ எடுத்து சொன்னார்கள்.
நான் கேட்ப்பதக இல்லை,நீங்களும் பரவாயில்லை அக்கா,அவள் சுந்தரம் என்று அழைத்து விட்டுப் போகட்டும்,சின்னப் பிள்ளை தானே என்று சொன்னதாலும்,எனக்கு நீங்கள் சுந்தரமே ஆகி போனீங்கள் இது நாள் மட்டும்,உங்களின் கலகலப்பான பேச்சி,எப்போதும் நம்மை சிரிக்க வைக்கும் உங்கள் குணம்,நம் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது,உங்கள் பேச்சில் மயங்கி போய்,உங்கள் வாயை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த எனக்கு,தற்போது இரண்டு குழந்தைகள்,காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது,நான் உங்களை மறக்கவில்லை என்றாள் ரஞ்சனி, நீ எப்படியோ தெரியவில்லை, நான் உன்னை ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்வேன் என்றான் அவன், உனக்கு தெரியாமல்,நீ சின்னதில் இருந்து சுந்தரத்தை காதலித்து இருக்க என்று குமார் பிடிவாதமாக சொன்னான்,நான் இல்லை என்று எவ்வளவோ மறுத்தும்,அவன் இல்லை,நீ சுந்தரத்தை காதலித்தனால் தான்,உன் முதல் காதலும் உனக்கு இல்லாமல் போனது,என்னையும் காதலிக்க முடியாமல் போனது என்று அடித்து சொன்னான்,அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது நான் உங்களை காதலித்து இருக்கேன் என்று.
இந்த உலகத்தில் நீங்கள் தான் எனக்கு எல்லாம் என்று நினைத்தேன்,உங்கள் அன்பு எனக்கு மட்டும் தான் என்று வாழ்ந்தும் இருக்கேன்,அதனால் பல விடயங்களை குடும்பத்தில் கூறாமல் விட்டும் விட்டேன்,நீங்கள் திருமணம் முடித்தப் பிறகு,எனக்கு பல குழப்பங்கள்,என்னுடைய சுந்தரம் இனி எனக்கு இல்லை என்று அப்போது தான் புரிந்தது.
அதன் பிறகும் நீங்கள் நம் வீட்டிற்கு வந்தப் போதும்,சில நடவடிக்கைகளை கண்டுக்காமல் விட்டு இருக்கேன்,என்னுடைய சுந்தரம் பரவாயில்லை என்ற நினைப்பு,அதை எல்லாம் போட்டு உடைத்த ஒரே ஆள் குமார்,நீ காதலித்து இருக்க,அதனால் தான் உனக்கு சுந்தரத்தின் செய்கை எல்லாம் தப்பாகவே தெரியவில்லை என்றான்,அது உண்மை என்று உங்களிடம் சொல்ல முடியாது,இந்த உலகத்தில் யாரை நம்புவது என்று எனக்கு புரியவே மாட்டேங்குது,அப்படி எல்லாம் பேசிய குமார் இன்று பணம் கேட்டு மிரட்டுகிறான்,எதுவும் வாய் திறக்காமல் எல்லாம் மறந்தோ,மறைத்தோ எனக்கு உதவி பன்னும் உங்களை நல்லவர் என்று ஏற்றுக் கொள்வதா என்று இப்போதும் புரிய மாட்டேங்குது எனக்கு,ஏன் இவ்வளவு அமைதி என்றான் சுந்தரம்,ஒன்றும் இல்லை என்றாள் அவள்,எப்போது மறுப்படியும் ஊருக்கு போறீங்கள்? வரதன் வந்து அழைத்துக் கொண்டு போவாரா என்றான் சுந்தரம்,இல்லை என்றால் அவள்,நீங்கள் தனியாக போவீங்களா என்றான் அவன்,நாங்கள் தனியாக போய் விடுவோம்,அவர் இங்கு தற்போதைக்கு வருவதாக இல்லை என்றாள்.
எதுவும் சாப்பிடுவோமா வெளியில் போய் என்றான்,எனக்கு பசியில்லை,பிள்ளைகள் யோசிப்பார்கள் நான் வீட்டில் இல்லை என்றால் நான் போகனும் என்று கூறி விட்டு,சுந்தரம் ஆபிஸை விட்டு வெளியில் வந்து விட்டாள் ரஞ்சனி,அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது,குமாரிடம் போன் பன்னி கதைப்பதற்கு வேகமாக டெலிபோன் பூத்துக்குப் போய் போன் பன்னி கதைத்தாள்,அப்போது அவன் அசிங்கமாக வாய்க்கு வந்தது எல்லாம் கதைத்தான்,நீ பணத்தாசை பிடித்தவள்,உன் புருஷன் சரியில்லை என்று என்னிடம் வந்தவள்,நான் இல்லை என்றால்,வேறு யாரையும் தேடிப் போய்,அவனையும் இப்படி தான் ஏமாத்துவ,உனக்கு அது தான் பழக்கமே,போனில் ஆள் பிடித்து,ஸ்கைப்பில் ஆட்டம் போடுவது உனக்கு பழக்கம் தானே,நீ உயிருடன் இருப்பதற்கு,ஏதாவது குளத்தில் போய் விழுந்து சாவு என்ற அந்த வார்த்தைகள் அவள் அடி மனதில் அப்படியே பதிந்துப் போனது,அழுவதை தவிர வேறு எந்த வார்த்தையும் அவள் வாயில் இருந்து வரவில்லை,போனை கட் பன்னி விட்டு,நடைப்பிணமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அதன் பிறகு அவன் போனில் மிரட்டிக் கொண்டு தான் இருந்தான்,சுந்தரத்திற்கு போன் பன்னி இன்னும் மிரட்டுவதாக சொன்னாள்,நான் பார்த்துக் கொள்கிறேன்,நீ ஏதும் அவனிடம் கதைப்பதற்கு யோசிக்க வேண்டாம் என்றான் சுந்தரம்,அவள் மெதுவாக ஒரு தரம் அவனிடம் போனில் கதைத்தேன் என்றாள் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை என்றான் கோபமாக என்ன சொன்னான் என்றான் சுந்தரம் அசிங்கமாக கதைக்கின்றான் என்று அழுதாள் அவள்,அழாதே நீ இந்த நேரம் தான் தைரியமாக இருக்கனும் என்று ஆறுதல் சொன்னான் அவன்,சிறுது சிறிதாக அவன் போன் பன்னி மிரட்டுவதை விட்டிருந்தான்,அப்படி இருந்தும் ரஞ்சனிக்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை,குடும்பத்தை பார்க்கும் போது அவமானமாக இருந்தது,யாரும் தம்பி அக்காவிற்கு போன் பன்னினாலும் ரஞ்சனிக்கு மனம் திக் திக்கென்று அடிக்கும் வரதன் பேசினால் அதைவிட பயமாக இருக்கும்.
அக்காவின் கணவரை பார்க்கும் போது அதைவிட குற்ற உணர்வாக இருந்தது,காரணம் குமார் பேஸ்புக்கில் தேவையில்லாமல் தகவல் அனுப்பியதை அவர் பார்த்து விட்டு அக்காவிடம் கூறியிருக்கார் அந்த பேஸ்புக் கணக்கையெல்லாம் மூடி கொடுத்தது அவர்,எப்போதுமே ரஞ்சனியிடம் அன்பாக மரியாதையாக இருக்கும் அக்காவின் கணவர் அவளின் கைகளை பிடித்து நான் உங்களுக்காக இருக்கேன், எதுவென்றாலும் என்னிடம் கூறுங்கள்,உங்களை எனக்கு எப்போதும் பிடிக்கும் என்று கூறி,கைகளில் முத்தம் வைக்கும் போது,ரச்ஞனி ஆடிப் போய் விட்டாள்,எல்லோரும் என்னை என்ன நினைக்கின்றார்கள்,நான் அவ்வளவு கேவலமாக போய் விட்டேனா என்ற கேள்வியும் எழுந்தது,இதை அக்காவிடம் கூற முடியாது,மெதுவாக தம்பி,அம்மாவிடம் கூறினாள்,அவர் உன் மீது பாசம் ஆறுதலுக்காக கூறியிருப்பார்,உனக்கு முத்தம் வைத்தது கூட கெட்ட எண்ணத்தில் இல்லை,அவர் அப்படி பட்டவர் இல்லை என்று அம்மா அவருக்கு சார்ப்பாக கதைத்தது ரஞ்சனிக்கு ஆச்சிரியமாக இருந்தது,தம்பி சிறிது கோபம் பட்டான் பிறகு அவனும் அமைதி ஆகிவிட்டான்,இது வெளியில் தெரிந்தால் குடும்பம் பாதிக்கப் படும் என்பதால்,ரஞ்சனி அமைதியாக இருந்து விடாடாள்,நாட்கள் வேகமாக போகவில்லை எப்போது ஊருக்கு வந்து சேருவோம் என்று ரஞ்சனி ஒவ்வொரு நாளும் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் வந்து சேர வேண்டிய நாளும் வந்தது,விமான நிலையத்திற்கு தம்பியும்,அக்காவின் கணவரும் வந்து வழியனுப்பி வைத்தார்கள்,தம்பி முகம் கொடுத்து கதைக்கவில்லை,பிள்ளைகளை அழைத்துக் கொண்டு,இனி எக் காரணம் கொண்டும் இங்கு வரக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வந்து சேர்ந்தாள் ரஞ்சனி,விமான நிலையத்திற்கு வந்திருந்த வரதனைப் பார்த்து துவண்டுப் போனாள் அவள்,மெலிந்து,தாடி வைத்து,முடி வெட்டாமல்,முகத்தில் எந்த சிரிப்பும் இல்லாமல் அடையாளம் மாறிப் போய் வித்தியாசமாக இருந்தார்,அனைவரும் வீடு போய் சேர்ந்தார்கள்,வீடு வெரிச்சோடி கிடந்தது வரதன் வீட்டை சுத்தம் செய்திருக்கவில்லை, பூஜை அறையில் விளக்கேற்றவும் இல்லை,எப்போதும் ஊருக்கு போய் வரும் போத,வீடு பளிச்சென்று சுத்தமாக இருக்கும்,இந்த முறை ஊருக்கு போய் வந்த ரஞ்சனிக்கு,வீட்டைப் பார்க்கும் போதே தெரிந்தது வரதனுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று,அவளுக்கும் வந்ததில் இருந்து எதுவும் செய்வதற்கு முடியவில்லை என்று படுத்தே கிடந்தாள்,ஜனவரி முதல் திகதி டாக்டரை போய் பார்த்தார்கள்,எப்போதும் வருடப் பிறப்பன்று கோயில் போவது வழக்கம்,இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது,சாதாரண ஜுரம் என்று டாக்டர் மருந்தை கொடுத்தனுப்பினார், பிள்ளைகளுக்கு பாடசாலை ஆரம்பித்து விட்டது,அவர்களும் போவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்,வரதன் இரண்டு நாட்கள் ஆபிஸ் போகவில்லை,பிள்ளைகள் வீட்டில் இல்லை,ரஞ்சனியை அழைத்த வரதன்,உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்டதும் அவள் தடுமாறிப் போனாள்,அவள் எதுவும் வாய் திறக்கவில்லை,குமார் எனக்கு போன் பன்னி உன்னைப் பற்றி அசிங்கமாக கதைக்கின்றான்,அவனுக்கு யார் வீட்டு நம்பர் கொடுத்தது என்றான்.
நான் தான் கொடுத்தேன் என்றாள்,உனக்கு அறிவு இருக்கா,யாருக்கும் வீட்டு போன் நம்பரையெல்லாம் கொடுப்பாங்களா என்றான்,அவ்வளவு நம்பிக்கை என்று மனதில் ஓடியது அவளுக்கு,காணி விற்று தருவதற்காக அவனை லவ் பன்னுனீயா என்றதும் அவளுக்கு அவமானமாக இருந்தது,இல்லை அவன் ஏற்கெனவே என்னை லவ் பன்னியவன் என்றாள்,பிறகு ஏன் என்னை லவ் பன்னி கட்டி தொலைத்த,அவனையே கட்டிட்டு போய் இருக்கலாமே என்றான்,அப்போது அவனை நான் லவ் பன்னவில்லை,இது எல்லாம் உங்களிடம் ஆரம்பத்தில் சொன்னேன் தானே என்றாள் ரஞ்சனி,ஏதாவது என்றால் நான் உண்மையெல்லாம் சொல்லி தானே கட்டினேன் என்று என்னை மடக்கி விடு,அந்த கதை எல்லாம் இப்போது தேவையில்லை,தற்போது குமாரை லவ் பன்னின தானே என்றான் ஆமாம் என்றாள்,அவள் உனக்கு நான் என்ன குறை வைத்தேன் என்று ஒரு அறை விட்டான் கண்ணம் சிவந்துப் போனது,கண்களில் கண்ணீர் கொட்டியது அவளுக்கு,நீங்கள் உறுப்படியாக இருந்தால்,நான் ஏன் அவனைப் போய் காதலிக்கிறேன் என்று வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டாள்,உனக்கு அசிங்கமாக இல்லை,இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா,அவர்கள் வாழ்க்கையை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீயா இந்த வயதில் உனக்கு சுகம் கேட்க்குது நான் உனக்கு பத்தவில்லை என்று கூறிக் கொண்டே அவள் மீது பலாத்காரமாக பாய்ந்தான் அவள் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை,என்னை விடுங்கள் என்று அவள் கத்தினாள்,அவன் கேட்ப்பதாக இல்லை அவனின் முரட்டுத் தனம் அப்போது தான் புரிந்தது.
கஷ்டப்பட்டு அவன் பிடியில் இருந்து விடுப்பட்டாள் ரஞ்சனி,வரதன் சட்டென்று எழுந்து போய் விட்டான்,முகம் வேர்த்து என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தாள் ரஞ்சனி,நான் உடம்பிற்கு ஆசைப்பட்டு,அவனை காதலித்ததாக என்னை தப்பாக புரிந்துக் கொண்டு,என்னிடம் இப்படி நடக்கின்றார்கள் என்பதை அவளாள் தாங்க முடியவில்லை,அழுது முடித்தாள்,பிள்ளைகள் வரும் நேரம் அவசரமாக எழுந்து போய் குளித்து விட்டு வந்தாள்,வரதனை பார்க்கவே பயமாக இருந்தது,அவன் முன்னறையில் உட்கார்ந்து இருந்தான்,ரஞ்சனி சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்,பிள்ளைகள் எப்போது வருவார்கள் என்றிருந்தது,சற்று நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள்,அதன் பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சே விடமுடிந்தது,வீட்டு போன் நம்பர்,ரஞ்சனி கைபேசியின் நம்பர் எல்லா வற்றையும் மாற்றி விட்டான் வரதன்,நாட்கள் சென்றன ரஞ்சனி வரதனிடம் கதைப்பதையே குறைத்துக் கொண்டாள்,முன்பும் அப்படி தான்,வரதன் கலகலப்பானவன் இல்லை,கேட்திற்கு பதில் மட்டும் தான்,அதை மீறி எதுவும் வாய் திறந்து கதைக்கவோ,சிரிக்கவோ மாட்டான்,எப்படி இப்படி ஒருத்தனை போய் கட்டினேன் என்று அடிக்கடி ரஞ்சனி அவளையே கேள்வி கேட்டுக் கொல்வாள்,எப்படி இப்படியான அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியதை அவளாள் தாங்கமுடியவில்லை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு நடைபிணமாக வாழ்ந்துக் கொண்டு இருந்தாள் ரஞ்சனி.