பால்ய நண்பன் செல்வராஜைப் பார்த்து ஐந்து வருடமிருக்கும்.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்லூரியில் எனக்கு ரொம்ப நெருக்கம்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன்
முகவரிச் சீட்டைக் காட்டி ஒருவரிடம் விசாரித்தேன். பக்கத்துச் சந்தைக் காட்டினார்.நல்ல வேளை செல்வராஜ் வீட்டில் இருந்தான்.
ஆர்வத்தோடு வந்து கைகளைப் பற்றிக் கொண்டான். மிகவும் இளைத்திருந்தான்.
அந்தக் காலத்தில், ஹீரோ மாதிரி கம்பீரமாக இருப்பான்.
ஏண்டா இப்படி இளைத்துப் போய் விட்டாய்! – என்று வேதனையோடு கேட்டேன்.
தண்ணி அடிச்சு…அடிச்சு…உடம்பைக் கெடுத்துக்கிட்டார்…! தண்ணி அடிச்சாலே நெஞ்சு வலி வருது. இருந்தாலும் கேட்க மாட்டேன் என்கிறார்…”
அவன் மனைவி வருத்தத்தோடு சொன்னாள்.
”செல்வராஜ், ஏண்டா இப்படி மாறிட்டே? கேட்கவே வருத்தமா இருக்கு…தயவு செய்து இனிமேலாவது தண்ணி அடிப்பதை நிறுத்திடு…!”
”நான் தண்ணி அடிக்காம, பின் யார் அடிப்பது…? உன் வீடு மாதிரி இங்கு மோட்டாரா வச்சிருக்கு…பட்டனை அழுத்தினா தண்ணி கொட்டுதற்கு? அவ ஹார்ட் பேஷண்ட்…குழாயைப் பிடிச்சு இரண்டு அடி அடிச்சாலே, நெஞ்சைப் பிடிச்சுப்பா…அதனாலேதான் நானே அடிக்கிறேன்…
நீ விஷயம் புரியாம, அட்வைஸ் பண்ணாதே…!!
வெட்கமாகப் போய் விட்டது…!
– 29-8-12