சாரல் பூத்த மனது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 6,920 
 
 

மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/

”எதுக்கு இப்ப இத்தனை நெல்லிக்காய்களப் போட்டு வாங்கி வச்சிருக்க, பேசாம தேவைக்கு மட்டும் எதுவும் வாங்குன்னு சொன்ன கேக்குறீயா, இப்பப்பாரு வேஸ்டாக்கெடக்குதில்ல, இது இனி திங்குறதுக்கு ஆகாது, தூக்கி குப்பையில போட வேண்டியதுதான், என்றான் மனைவியை நோக்கி வார்த்தையையும் பார்வையையும் நிறுத்தாமல்/

ஊதாக்கலரில் காட்டன் சேலை கட்டியிருந்தாள்,ஏன் இப்பிடி வயசான பெரிய வுங்க மாதிரி காட்டன் சேலைகளகட்டிக்கிட்டு,நல்லதா டிசைன் சேலைகள வாங்கி கட்ட வேண்டியதுதான,என இளைய மகன்சொல்லும் போது இவனை கை காட்டி விடுவாள் மனைவி,

”ஒங்கப்பாதாண்டாஇதுஒனக்குநல்லாயிருக்குன்னுவாங்கிக்குடுத்துஎன்னைய கட்டி பழக வச்சிட்டாரு ,இப்ப அதுல இருந்து மீள முடியல, ஆனாலும் இதுவும் நல்லாத்தான் இருக்கு,என்னையச்சொல்லுற நானும் ஒரு அம்மாவ பஜார்ல பாப்பேன்,நான் பாக்கும் போதெல்லாம் அவுங்க அம்பர் சேலையத் தான் கட்டியிருப்பாங்க,அததவிர்த்து வேற ஒரு பொடவை கட்டி நான் பாத்த தில்ல அவுங்கள,ஒரு நா காய் கறி வாங்கீட்டு இருக்கும் போது தற்செயலா திரும்பிப்பாத்தா அந்தம்மா ஏங் பக்கத்துல நின்னு காயி வாங்கீட்டு இருந்தாங்க,அப்பத்தான் கேட்டேன்,வீட்ல இது போல அம்பர் சேலையா பதினைஞ்சி சேலை வச்சிருக்காங்களாம், வேலைக்குப் போறாங்களாம், அதுனால தினசரி ஒண்ணுன்னு கட்டிக்க ரெண்டு வாரத்துக்கு தாங்குறது போல வச்சிருக்கேன் னாங்க,யெஞ்சுன ஒரு பொடவைய இது போல வெளியில பஜாருக்கு மார்க் கெட்டுக்கு வரும் போது கட்டிக்கிருவாங்களாம்,சொன்னாங்க,

மனம் விரும்பி கட்டிக்கொண்ட காதல் மனைவி,அன்பும் பிரியமும் மனம் கொண்ட காதலும் கைகோர்த்து உருக்கொண்ட வேளைகளில் உள்ளும் புறமு மாய் கசிந்து ஓடி அன்பு காட்டிய விழிகள் நான்கும் விழிகழண்டோடி தரை தொட்டு படர்ந்து பாவி என்னை அவளிடமும் அவளை என்னிடமுமாய் புடம் போட்டுக்காட்டி மனம் பாவ வைத்த நாட்களில் சூழ்க்கொண்ட எங்கள் காதல் மண்டபம் பார்த்து மாலை மாற்றி ஊர் அடைக்க சாப்பாடு போட்டு மாங்கல் யம்தந்துனானே என என் சித்தப்பா மாலை தாலி எடுத்துக்கொடுக்க நடந்த கல்யா ணத்தில் அடை கொண்ட மனைவி நீ என இவன் அவளிடம் சொல் கிற நிமிடங்களில் இன்னும் கண்களில் காதல் தெரிய காத்திருக்கிற மனைவி.

அவளுக்குபுடவை வாங்க வேண்டும் இன்றாவது என்கிற எண்ணம் சுமந்து வேகமாக வந்து கொண்டிருந்தான் ஒரு மழை நாளின் மாலையில் வேளை யாய்.

அலுவலக வேலையும் அது தந்து விடுகிற அலுப்பையும் மீறி இனிமை யான நினைவுகளும் நினைவுகள் முடியிடுகிற மனிதர்களின் நினைவுகளும் மனம் காத்திருந்த வேலையில் பிடிவாதம் காட்டி காலூன்றிய தூறல் கொஞ்சம் வழுத்து பெரு மழையாய் உருவெடுக்கிறது,

உருவெடுத்தலின் கை பிடித்துக்கொண்டே வந்து விடுகிறான் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்து/

இப்படித்தெரிந்திருந்தால்வண்டியை எடுக்கும் போதேகல்லிடைக் குறிச்சியில் எடுக்காமல் விட்டுருக்கலாம்,

அங்கே இருக்கிற தெரிந்த சைக்கிள் கடை ஒன்றில் காலையில் அலுவலகம் செல்லும் போது வண்டியை நிறுத்திவிட்டுச்செல்வான். மாலையில் வரும் போது எடுத்துக்கொண்டு வந்து விடுவான்,

முகம் தெரியாத இடங்களில் இப்படி ஒரு கடையை பழக்கம் கொண்டு அவர் களின் மனதில் வாஞ்சையுடன் கரம் போர்த்தி நம்பிக்கைக்கு ஆளாகி அங்கு வண்டியை நிறுத்துகிற அளவிற்கான பழக்கத்தை அன்பின் மனிதர் முத்துக் குமார் அண்ணந்தான் அம்பு குறியிட்டு ஆரம்பித்து வைத்தார்.

”எண்ணன்னே என்றால்”,,,தன்னிடம் இருக்கும் அன்பு பாசம் பிரியம் இன்னும் இன்னுமான இத்தியாதி இத்தியாதிகளை கழட்டி நம்மிடம் ஒட்ட வைத்து விடுகிற விசால உள்ளம்,

”பாத்ததும்மொகம்சொல்லீருமுண்ணே,இன்னாருஇப்பின்னு,அத வச்சி முடிவு பண்ணுறதுதா,அவுங்க வயசுக்கும்அனுபவத்துக்கும் எத்தனை பேரபாத்துருக்க மாட்டாங்க,,கடைக்காரரும் அதவச்சித்தான் ஒங்கள அங்க வண்டி நிப்பாட்ட அனுமதிச்சிருக்காரு,,,,”என்பார்,

”நான் சொல்ற சொல்லெல்லாம் பின்னாடிதான்,,,” என்பார்,

பட்டுப்படர்கிற விசாலங்களில் தட்டித்தெரிகின்ற அனைத்தையும் கொஞ்சம் வஞ்சைனையின்றி பகிர்ந்து கொள்கிற அன்பின் உள்ளம் நீடூடி வாழ்க/

சென்ற வாரத்தின் போதான ஒரு விடுமுறை நாளில் இவனும் மனைவியு மாய் புடவை எடுக்கப்போகலாம் என முடிவு கட்டி வைத்திருந்தார்கள்.

எங்கு போகலாம் ,எவ்வளவு விலைக்குள் வாங்கலாம் எனவெல்லாம் பேசி முடிவெடுத்து வைத்திருந்தார்கள்,’கோ ஆப் டெக்ஸில் இதுவரை சேலைகள் எடுத்ததில்லை,

காட்டன் சேலைகள்தான்,கைத்தறிதான் நன்றாக இருக்கும் என மனைவி சொல்லியிருந்தான்,இவனும் பஜார் செல்லும் போது பார்த்திருக்கிறான். கடைக்கு வெளியில் தொங்குகிற புடவைகளை /

அதில் தெரிகிற கோடுகளும் கட்டங்களும் டிசைன்களும் இவனை வெகுவாக கவர்ந்ததுண்டு, கட்டங்களிலும் கோடுகளிலும் டிசைன்களிலுமாய் அடைபட்டுத்தெரிகிற வாழ்க்கை பஜார் போய் பலசரக்கு வாங்கிக்கொண்டு அப்படியே புடவைக் கடைக்குப் போகலாம் எனத்தான் பேசி வைத்துக்கொண்டு கிளம்பினார்கள் இருவரும்,

இவர்கள் போன நேரம் பலசரக்கு வாங்கிவிட்டு புடவைக்கடைக்குப் போயிருந்திருந்தால் சரியாய் இருந்திருக்கும், ஆனால் செல்கிற வழியில் கொஞ்சம் பேச்சும் கவனமும் திசை மாற நேரே காப்பி ஷாப்பிற்கு போய் விட்டார்கள்.

அங்கே எங்களது கடை சிறப்பு என வாழைப்பூ வடை,மற்றும் எதோ பெயர் தெரியாத தின்பண்டம் ஒன்றும் இருந்தது, மனைவி காப்பி மட்டும் போதும் எனச்சொல்லி விட்டாள்.

இவன்தான் வாழைப்பூ வடைகள் இரண்டை சாப்பிட்டு விட்டு காப்பியை குடித்தான், காப்பி ஷாப்பை விட்டு நகரும் போதே மழை மேகம் தண்ணீராய் நின்று
கொண்டிருந்தது,சிலுசிலுவென லேசான காற்று வேறு, மழை வந்தாலும் வரலாம் இல்லை,வராமல் போனாலும் போகலாம் என நினைத்தவனாய் வேகம் காட்டி விரைகிறான் பலசரக்குக்கடை நோக்கி,

எவ்வளவு வேகமாய் சென்ற போதும் கூட இவர்களின் வேகத்திற்கு துரத்தி வந்த மழை பலசரக்குக்கடை வாசலில் வைத்து இவர்களை நனைத்து விடுகிறது,

அடம் கொண்ட மழை ஒரு மணி நேரமாய் பெய்து தீர்ப்பேன் என அடம் கொ ண்டு கொட்டியது,

கொட்டிய மழை நின்று போன போது புடவைக்கடைக்குச்செல்லும் பேச்சை ஒத்தி வைத்தார்கள் இருவரும்,

அந்த ஒத்தி வைப்பை இன்று தொடர வேண்டும், பெய்த மழை கொஞ்சம் வலிவிழந்துதான் தன்னை பூமியில் ஊன்றி நின்றி ருந்தது,

மனைவியையும் பிள்ளைகளையும் நோக்கிமட்டும்தான் இப்படியாய் பேசவும் பார்வையை அள்ளி வீசவும் முடிகிறது.

அலுவலகத்திலும் வெளியிலும் இன்ன பிற பொது இடங்களிலுமாய் இப்படி யெல்லாம் பேசி விட முடியவில்லை, அல்லது மறந்து போய்க்கூட பார்வை அள்ளி வீசி விட முடியவில்லை.

நேற்றைக்கு முன் தினம் என நினைக்கிறான்,பாய் கடையில் நின்று டீக்குடி த்துக் கொண்டிருந்தான்.வழக்கம் போல் நன்றாக இருந்த டீயின்லயிப்பிலும் நாவின் சுவையறும்புகளை தொட்டு உள்ளிறங்குகிற ஒவ்வொரு மிடரிலும் இருக்குற சுவையை ரசித்து குடித்துக் கொண்டிருக் கையில் இவனைப் போல் டீக்குடித்துக்கொண்டிருந்த ஒருவர்டீக்கிளாஸை வாங்கிக்கொண்டு இவன் நின்ற இடத்தைக்கடக்கையில் இவன் மீது லேசாய் உரசி டீயை சிந்தி விட்டார் கொஞ்சம்,

பொதுவாகவே இவன் கடைக்குப் போனால் டீக்கிளாஸை வாங்கிக் கொண்டு ஓரமாக நின்று குடித்துக்கொண்டிருப்பான்,

அந்த ஓரம் இவன் குடிக்கிற டீக்கும் இவனில் மிதந்து பட்டுப்படர்கிற எண்ண ங்களும் சின்னதாய் ஒரு கைகோர்ப்பைஏற்படுத்தி விட்டுச்செல்லும்.

“சரிதான் இன்னைக்கும் ஓரம்தானா, ஏன் அப்பிடி போயி உக்காருறீங்க இல் லை நின்னுக்கிறீங்க,அதுலையும் ஒரு கையில் டீக்கிளாஸ புடிச்சிக்கிட்டு கையக்கட்டிக்கிர்றீங்க,அதுபாக்குறதுக்கு ஒரு அப்பாவியான தோற்றத்த உண்டு பண்ணீருது ஒங்களுக்கு/,

“ஏன் அப்பிடி இருக்கணுமுன்னு கேக்குறேன்,ஒண்ணுக்கும் ஒதவாத விருதாப் பைலுகள நெஞ்சநிமித்திக்கிட்டு வந்து கடன் சொல்லி டீக் குடிச்சிட்டுப் போறான்,டீ யோட போனா மட்டும் நல்லதாப்பேச்சே கூடவே ரெண்டு வடைக ளை எடுத்துக் கடிச்சிக்கிருவான்,போகும் போது காசுதான தருவம் ,இப்ப என்ன ஊர விட்டு ஓடியா போகப் போறம், கணக்குல எழுதி வச்சிக்கங்கன்னு” நெஞ்ச நிமித்தி சொல்லீட்டுப் போவான்.

என்ன செய்ய பின்ன சரின்னுதான் போக வேண்டியிருக்கு, நேத்துப்பாருங்க ரொம்பநாளா இப்பிடிச்செய்யிற ஒருத்தன கொஞ்சம் கண்டிசனா பிடிச்சி குடு க்க வேண்டிய பழைய பாக்கிய கேட்டதுக்கு ஏங் குடும்பத்தையே வீதியில இழுத்துப் போட்டு சலம்பீட்டுப் போறான்.

கொஞ்சம்நஞ்சமில்ல,ஆயிரக்கணக்குலசேந்துருச்சி,பாதியாவதுகுடுடான்னு கேட்டதுக்குத்தான் இப்பிடி அசிங்கப்பட்டு நிக்க வேண்டியதா போச்சி, எனக்கும் சரி சட்டைய உரிஞ்சி போட்டுட்டு மல்லுக்கு நின்னுறலாமான்னு தோணி ச்சி, கூட இருந்தவுங்கதான் சரி வேணாம்,தொழில் பண்ணுற யெடம் இது, தொழில்கெட்டுப் போகும்.தவுரஅவனுக்குஇதுதான் ஜோலி, இங்க பண்ணுனது போலஇன்னொருயெடத்துலபோயி பண்ணுவான், அதுஇல்லைன்னாஇன்னொரு யெடம்,ரெண்டுயெடத்துல பணிஞ்சி போயிருவாங்க, ரெண்டுயெடத்துல செருப்
படிகெடைக்கும், அவனுக்கு எல்லாம் வாங்கீட்டு உதுத்துட்டு திரிவான், ஒனக்கு அப்பிடியில்ல, முணுக்குங்குறதுக்குள்ள மனசுக்கு போயிரும் பேச்சும் செய்கையும். தவிரதொழில்பண்ணுறஆளு,நீதான் கொஞ்சம் நாலும் பாத்து சூதானா ம இருக்கணும், சட்டைய கழட்டவும் கட்டிப்பிடிச்சி சண்ட போடவும் ரொம்ப நேரம் ஆயிறாது,அப்புறமா நீ கழட்டுன சட்டையப்போட ரொம்ப நாளு ஆகிப்போகும்,

அதுக்குள்ள நீ கட்டிக்காத்து வச்சிருக்குற ஒன்னோட பேரும் கடை ஏவாரமும் காத்துல போயிரும்.அப்புறம் விட்டத எட்டிப்பிடிக்க எவ்வள வு பெரிய கயிறு போட்டாலும் முடியாது பாத்துக்கன்னு சிலர் சொன்னதால நானும் விட்டுட்டேன்,கழுத ஆயிரம் ரூபாதான,வந்தா வரவுல வைப்போம் ,போனாயாருக்கோ தர்மம் பண்ணுனதா நெனைச்சிக்கிற வேண்டியது தா,,,எனச்சொன்ன கடைக்காரரை ஏறிட்ட இவன் எனக்கு இப்பிடி இருக்குறது பிடிச்சிருக்கு அதான் நிக்குறேன்,

”,அதுக்காக இப்பிடியெல்லாம் நின்னுக்கிட்டு கையைக் கட்டிக்கிட்டு டீக்குடிக்கக் கூடாதுன்னு நீங்க சட்டம் போட்டீங்கன்னா அதை மீறுவேன் நானு என கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்களோன்றின் நகர்வில் தான் இப்படி யாய் ஆகித்தெரிகிற காட்சியும் பதிவாகிறது,

இவனைக் கடந்தவரிடமிருந்து அலம்பி சிந்திய டீ இவனது சட்டையின் மேல் தெரித்து விட வெள்ளைச்சட்டையில் டீ சிந்திய கரை அழுத்தம் கொண்டு தெரிகிறதாய்,

ஏற்கனவே வீட்டில் கெடைக்குற வசவு போதாதென இது ஒன்றும் சேர்ந்து கொள்கிறதாய்/ நல்லா இருக்கு இன்னும் சின்னப்புள்ளைன்னு நெனைப்பு ஒங்களுக்கு, எப்பப்பாருங்க,சட்டையில டீக்கரையோட வந்தா எப்பிடி,,? இனி மே இந்தப் பக்கத்துல இருக்குற டீக்கடை எதிலயும் ஒங்களுக்கு டீக்குடுக்கக் கூடாதுன்னு ஸ்பெசலா சட்டம் போடச் சொல்லணும், அப்பத் தான் பேசாம இருப்பீங்க, என்ற மனைவியின் பேச்சு சட்டையில் பட்ட டீத்துளிகளின் கரை கள் ஞாபகபடுத்திச் சென்றதாய்/

டீயை சிந்தியவர் சாரி சொல்லா விட்டால் கூடப்பரவாயில்லை, இவனைப் பார்த்து ஓரமா நிக்கத்தெரியலையா என்றார் சற்றே முறைப்புடன்,/

அந்த முறைப்பும் பேச்சும் இவனை எரிச்சல் படுத்தி விட நெற்றி சுருக்கிய வனாய் நின்றவனை பார்த்த டீ மாஸ்டர் வேகமாய் வந்து கூட்டிக் கொ ண்டு போய் விட்டார் ஓரமாக.

ஓரத்திலும் ஓரமாக கூட்டிப்போனவர் இவனைக்கடந்து டீக்கிளாஸ் கொண்டு போனவரிடம் ஏதோ சொல்ல அவர் இவனிடம் வந்து ஸாரி சொன்னார்,

இவன் அதற்கு ”நீங்க டீய சிந்துனது கூட பரவாயில்ல,ஆனா ஒங்க பேச்சும் பார்வையும்தான் என்னைய கொஞ்சம் உசுப்பி விட்டுருச்சி,இனிமே அப்பிடி யெல்லாம் பண்ணாதீங்க,எப்பயுமே தேவையான யெடத்துல பயன்படுத்து றத விட்டுட்டு தேவையில்லாத யெடங்கள்ல நம்ம மொறப்புகளையும் கோபங்களையும் கொட்டிக்கிட்டு திரியிறோம்,,” என்ற இவனை ஏறிட்டவர் தலை குனிந்தவராய் போய் விட்டார்,

அன்றைக்கு பேசியதுதான் அவரிடம் முறைப்பாக,/ அதற்கப் புறமாய் எல்லாம் வீட்டில்தான்,சின்ன மகன்கொஞ்சம் பொறுத்துப் போவான்,மூத்த மகள் உடனுக்குடனாய் பொரிந்து விடுவாள்,

“அப்பா இதெல்லாம் அங்கிட்டு வச்சிக்கங்க, இன்னும் பத்தொன்பதாவது நூற்றாண்டுலயே இருக்காதீங்க, அப்பிடி ஒங்களால கட்டுப்படுத்த முடியலையா கோபத்த, அம்மாகிட்டவச்சிக்கங்கஅத,ஏன்னாநீங்க ரெண்டு பேரும் கண்ணோட கண் நோக்கி இதயம் புகுந்து ஒருத்தருக்கொருத்தர் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட ஆத்மார்த்தமானஜோடிக,அவுங்க வேணுமின்னாஒங்கபேச்சுக்குகட்டுப்பட்டு நிக்கலாம்,ஆனாநாங்க அப்பிடி எல்லாம் நிக்கணுமின்னு அவசியம் கெடையாது தெரிஞ்சிக் கங்க என்பாள்.

வாஸ்தவம்தானேஅவள்சொல்வதும்,தொடுக்கிற இடன்க்களை விட்டு மாற்று இடங்களில் விட்டால் அம்புக்கும் எய்பனுக்கும் காலமும் நேரமும் வீண்தா னே,,?

மூன்று திசைகளிலுமாய் முகம் காட்டி அமர்ந்திருந்த நெல்லிக்காய்கள் கொஞ்சம் முகம் வாடியும் பழுப்பு வர்ணம் கலந்தும்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *