ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 3,407 
 
 

அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29

ரமா தன் வேலையில் மிகவும் கவனமாக இருந்து வந்துக் கொண்டு மேலிடத்தில் நல்ல பேர் வாங்கிக் கொண்டு வந்தாள்.

ரெண்டு வருஷம் ஓடி விட்டது.

திடீரென்று ஓரு நாள் ‘ரமாவுக்கு டெல்லிக்கு மாற்றலாகி விட்டது’ என்று ஒரு ஆர்டர் வந்தது.

ரமாவுக்கு ஆச்சரியம் தாங்க வில்லை.

’இந்த ஆர்டர் உண்மைதானா,இல்லே நாம ஏதாவது கனவு கண்ணுண்டு வரோமா’ன்னு என்று நினைத்து தன்னைக் கிள்ளிப் பார்த்தாள்.அவளுக்கு வலித்தது.

கடவுளுக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,அந்த ‘லெட்டரை’ ஒரு பத்து தடவை மறுபடியும், மறுபடியும் படித்துக் கொண்டு இருந்தாள்.

தன் வேலையில் மீதி இருந்த எல்லா வேலைகலையும் ‘கட’ ‘கட’ என்று முடித்து விட்டு,மந்திரி யை பார்க்க ‘பர்மிஷன்’ கேட்டு காத்துக் கொண்டு இருந்தாள்.

மந்திரி உள்ளே வரச் சொன்னவுடன் ரமா,தனக்கு டெல்லிக்கு மாற்றல் ஆகி இருக்கும் ‘போஸ் டிங்க் ஆர்டரை’ சந்தோஷமாகக் காட்டினாள்.

அவர் ரமாவைப் பர்த்து “ ’கங்கிராட்ஸ்’ ரமா மேடம்.நீங்க உங்க பாக்கி வேலைகளை எல்லாம் முடிச்சிவிட்டு, உங்க ‘ரிலீவர்’ உங்க ‘போஸ்டு’க்கு சேர வந்ததும்,அவா¢டம் உங்க உத்யோகத்தை பற்றி ன எல்லா சமாசாரங்களையும் விவரமா சொல்லி விட்டு உங்க வேலையை அவருக்கு ‘ஹாண்ட் ஓவர்’ பண்ணுங்க” என்று சொல்லி அனுப்பினார்.

ரமா தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ரெடியாக இருந்தாள்.தன்னுடைய இடத்துக்கு ‘போஸ்டிங்க்’ஆகி இருந்த பெண்மணி வந்ததும்,அவா¢டம் தன் உத்யோகத்தை பற்றின எல்லா சமாசார ங்களையும் விவரமாக சொல்லி விட்டு,வேலையை அவா¢டம் ‘ஹாண்ட் ஓவர்’ பண்ணினாள் ரமா.

பிறகு இருவரும் மந்திரியைப் போய் பார்த்தார்கள்.புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தவரைப் பற்றி,அவரைப் பற்றின எல்லா விவரமும் கேட்டுக் கொண்டு,ரமாவைப் பார்த்து ‘பெஸ்ட் விஷஸ்’ பார் யுவர் நியூ ஜாப் மேடம் ரமா.டேக் கேர்’ “என்று சொல்லி ரமாவின் கையைப் பிடித்து குலுக்கி சொன்னா ர் மந்திரி.பிறகு புதிதாக சேர்ந்தவா¢டம் “ ‘யூ மே ஸ்டார்ட் யுவர் வர்க் ப்ரம் டுடே மேடம்” என்று சொல் லி விட்டு இருவரையும் வெளியே அனுப்பினார் மந்திரி.

ரமா தான் இருந்த பங்களாவை காலி பண்ணி விட்டு,தன்னுடைய ‘டிரஸ்களையும்’ நகைகளை யும் ரெண்டு ‘சூட் கேஸில் பாக்’ பண்ணிக் கொண்டு டெல்லிக்கு வந்து சேர்ந்தாள்.

டெல்லியில் ‘ஹெல்த் மினிஸ்டர்’‘ஆபீஸில்’ ஒரு செகரட்டரி’யாக வேலைக்கு சேர வந்த ரமா ‘சீப் செகரட்டரி’யே பார்த்து அவா¢டம் தன் ‘போஸ்டிங்க் ஆர்டரை’ காட்டினாள்.
உடனே அந்த சீப் செகரட்டரி ரமாவைப் பார்த்து “ ‘வெல் கம் மேடம் ரமா.ப்லீஸ் டு ஹாவ் யூ ஆஸ் மை அஸிஸ்டண்ட்.டேக் யுவர் சீட்’ “என்று சொல்லி ரமாவை உட்காரச் சொன்னார்.கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்து விட்டு ரமாவை அவளுடைய ‘சீட்’டுக்குப் போய் வேலையை கவனி க்கச் சொன்னார்.ரமா தன்னுடைய ‘சீட்’டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டு தன் ‘செக்ஷனில்’ இருந்தவர்களிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

ரமா தன் ரூமை விட்டு கிளம்பிப் போனதும்,ரமாவின் ‘பயோ டேட்டாவை’ பார்த்த ‘சீப் ‘செக கரட்டரி’ கீதா கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள்.

ரமா அன்று சாயங்காலமே ‘கெஸ்ட் ஹவுஸ¤க்’கு தன் ரெண்டு ‘சூட் கேஸ்’களையும் வைத்து விட்டு ‘செட்டில்’ ஆனாள்.

ரமா ஒரு வாரம் ‘கெஸ்ட் ஹவுஸில்’ இருந்தாள்.

பழைய ‘செகரட்டரி’ பங்களாவை காலி பண்ணி விட்டு போனவுடன்,அந்த பங்களா பூராவும் ‘பெயிண்ட்’ அடித்து,சில சில்லறை வேலைகளை செய்து முடித்தார் அரசாங்க ‘கன்ட்ராகடர்’.

பங்களா ரெடி ஆகி விட்டது என்று கேள்விப் பட்ட ரமா அந்த ‘செகரட்டரி பங்களாவுக்கு’தன் ரெண்டு சூட் கேஸ்களுடன் குடி வந்தாள்.அந்த பங்களாவிலே ஒரு சமையல் காரனும்,ஒரு வேலக்கார ணும்,ஒரு பெரிய தோட்டமும்,அந்தத் தோட்டத்தை கவனித்து வர ஒரு தோட்டக்காரனும் இருந்தான்.

‘நமக்கு இத்தனை வசதிகள் இருக்குபோது நம்ம அப்பா, அம்மா நம்ம கூட இல்லையே.அவா ரெண்டு பேரும் இப்போ உயிரோட இருந்தா எவ்வளவு சந்தோஷப்படுவா” என்று நினைக்கும் போது அவளுக்கு அழுகையே வந்து விட்டது.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

ரமா அந்த சமையல் காரிடம் தனக்கு வேண்டிய சமையலைச் சொல்லி சமைத்துப் போட சொன் னாள்.அந்த சமையல் காரரும் ரமாவுக்குப் பிடித்த மாதிரி சமைத்துப் போட்டுக் கொண்டு வந்தார்,

திங்கட் கிழமை ரமா வேலைக்கு வந்ததும்,செகரட்டரி கீதா ரமாவை தன் ரூமுக்குக் கூப்பிட்டு “மேடம் ரமா,நீங்கோ என் ரூமை விட்டுக் கிளம்பிப் போனதும்,நான் உங்க ‘பயோ டேட்டாவை’ப் பாத் தேன்.நானும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவ தான்.நானும் ஒரு பிராமண ஜாதி பொண்ணு தான்.இனிமே நீங்க என் கிட்டே தாராளமா தமிழிலே பேசலாம்” என்று சொன்னதும் ரமா எழுது நின்றுக் கொண்டு “ரொம்ப தாங்ஸ் மேடம்.இந்த ஏழு வருஷமா நான் எல்லார் கிட்டேயும் ஹிந்தியிலே தான் பேசிண்டு வந்தேன். உங்க கிட்ட தமிழிலே பேசறதே ஒரு பாக்கியமா நினைக்கிறேன்” என்று சொன்னாள்.

கீதா மேடம் ரமாவை உட்காரச் சொன்னாள்.”எனக்கும் உங்க கிட்டே தமிழிலே பேசறது ரொம்ப பிடிச்சு இருக்கு”என்று சொல்லி விட்டு நிறைய நேரம் ஆபீஸ் விஷயங்களை எல்லாம் பேசி வந்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும்”ரமா,நான் உங்களே கேக்கறேனேன்னு என்னை தப்பா எடுத்துகாதீங்கோ.நீங்கோ IAS உங்க இருபத்தி எட்டாவது வயசிலே ‘பாஸ்’ பண்ணி இருக்கேளே.’நார்மலா’ எல் லாரும் ஒரு இருபத்தி ஐஞ்சு வயசுக்குளேயே IAS பாஸ் பண்ணிடுவாளே.அந்த மாதிரி நீங்கோ ‘பாஸ்’ பண்ணி இருந்தா உங்க வயசுக்கு நீங்கோ எப்பவோ ஒரு ‘சீப் செகரட்டரி’ஆகி இருக்கணுமே.நீங்கோ ரெண்டு ‘அடெம்ப்ட்’ ‘பெயிலாகி’,மூனாவது ‘அடெம்ட்டிலே தான் IAS பாஸ் பண்ணேளா.இல்லெ வேறே ஏதாவது காரணம் இருக்கா,ஏன் இவ்வளவு ‘லேட்டான’ வயசிலே IAS ‘பாஸ்’ பண்ணீ இருக் கேள்” என்று கேட்டதும் ரமாவின் கண்களில் கண்ணிர் முட்டியது.
ரமா தன் ‘ஹாண்ட் பாக்கில்’ இருந்த கை குட்டையை எடுத்துத் துடைத்துக் கொண்டு இருந் ததைப் பார்த்த கீதா மேடம் உடனே “சாரி ரமா மேடம்.நீங்கோ ஒரு தமிழ் பிராமண ஜாதியை சேர்ந்த ஒரு பெண்மணி என்கிறதாலே சுவாதீனமா தொ¢யாம கேட்டுட்டேன்.நீங்கோ அழறதேப் பாத்தா என க்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.என்னே மன்னிச்சிடுங்கோ” என்று சொல்லி மன்னிப்பு கேட்டாள்

“மேடம்,நீங்கோ என் கிட்டே மன்னிப்பு எல்லாம் கேக்கவே வேண்டாம்.நான் உங்க ‘அஸிஸ்டெ ண்ட்’.நீங்கோ கேட்டதிலே ஒன்னும் தப்பு இல்லே.அதுக்கு காரணம் இருக்கு” என்று சொல்லி விட்டு மீண்டும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ரமா.

கொஞ்ச நேரம் ஆனதும் ”மேடம்,நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவ தான்.நான் B.Com, ‘M.Com ரெண்டிலும் முழு ‘ஸ்காலர்ஷிப்’ வாங்கி படிச்சு வந்து,’ஸ்டேட் பஸ்ட்டா பாஸ் பண் னேன்” என்று சொல்லி முடிக்கவில்லை,கீதா “க்ரேட் ரமா, நீங்கோ அவ்வளவு ‘இண்டெலிஜென்ட்டா. கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று எழுந்து ரமாவின் கைகளைக் குலுக்கினாள் கீதா.

நான் என் அம்மா அப்பா கிட்டே நான் ‘சிவில் சர்சிஸஸ் பரிக்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆக ரொம்ப ஆசைப் படறேன்ன்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சு வந்தேன்.என் அம்மாவும் அப்பாவும் எவ்வ ளவோ சொல்லியும் கேக்காம,என் அக்கா ஆத்தே விட்டு ஓடிப் போய் ஒரு கிருஸ்தவப் பையனைக் கல்யாணம் பண்ணீடுட்டா” என்று சொல்லி மீண்டும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ரமா.

”என் அம்மாவும் அப்பாவும் என்னேப் பாத்து ‘ரமா ஒரு IAS மாப்பிள்ளைக்கு உன்னே கல்யா ணம் பண்ணிக் குடுக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அந்த அளவுக்கு நம்ம கிட்டே பண வசதி இல்லேன்னு சொல்லிட்டா.கூடவே என் அக்காவோட ‘ஸ்டிக்மா’ வேறே இருந்தது எங்க ஆத்லே.நீ கல்யாணம் பண்ணிக்க உன் சம்மதத்தை தயவு செஞ்சு சொல்லு’ன்னு ரொம்ப ‘கம்பெல் பண்ணினா ’…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கீதாவுக்கு ‘போன்’ வரவே ரமாவைப் பார்த்து கையைக் காட்டி விட்டு ‘போனில்’ பேசினாள்.

கீதா ‘போனில்’ பேசி முடிந்ததும் ரமா தொடர்ந்தாள்.”வேறே வழி இல்லாம நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிச்சு என் அம்மா அப்பாவைப் பாத்து ‘என்னே பிடிச்சு இருக்கும் பையன் கிட் டே கல்யாணம் ஆன பிற்பாடு என்னே ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுத ‘அலவ்’ பண்ணுவளான்னு கேட்டு,அவர் ஒத்துண்டார்ன்னா நான் அவரே கல்யாணம் பண்ணிப்பேன்’என்று சொன்னதும் என் அம்மா அப்பா சந்தோஷமா ஒத்துண்டா.என்னே ‘பொண்ணு பாத்து’ ‘பிடிச்சு இருக்குன்னு சொன்ன நாலு பையங்க கிட்டே கேட்டேன்.அவா நாலு பேரும் மறுத்துட்டா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமா “அப்புறமா ‘நெட்’லெ என் அப்பா ஒரு பையனைப் பாத்து எனக் கும் என் அம்மாவுக்கும் பிடிச்சு இருக்கா என்று கேட்டவுடன் நாங்க சம்மந்திசோம்.30 வயது ஆகி, MBA ‘பாஸ்’ பண்ணி விட்டு ஒரு பெரிய கம்பனிலே மானேஜரா இருந்து சுரேஷோட அப்பா அம்மா வுக்கு ‘போன்லே என்னைப் பத்தி எல்லா விவரமும் சொல்லி ‘பொண்னு பாக்க’வரச் சொன்னார். சுரேஷ், அவன் அம்மா,அப்பா மூனு பேரும் ‘ஏர்’லே வந்து என்னைப் ‘பொண்ணு பாத்து’ பிடிச்சு இரு க்குன்னு சொன்னா.அப்புறமா நான் சுரேஷோட தனியா கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்தேன். அப்போ நான் அவரைப் பாத்து ‘கல்யாணம் ஆன பிற்பாடு என்னே ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுத ‘அலவ்’ பண்ணுவேளா’ன்னு கேட்டேன்.அதற்கு அவர் ‘நான் ‘அலவ்’ பண்ணி,எனக்கு உறுதுணையா இருந்து வந்து,எல்லா ‘ஹெல்ப்பும்’ பண்றேன்’ன்னு சொன்னார்.நான் ‘ரூமை’வெளியே வந்து என் அம் மா அப்பா கிட்டே’என்னே ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுத ‘அலவ்’ பண்ணுவேன்.கூடவே எனக்கு உறுதுணையா இருந்துண்டு வந்து எல்லா ‘ஹெல்ப்பும்’ பண்றேன்’ன்னு சொன்னார்’ என்று சந்தோ ஷமாகச் சொன்னேன்”என்று சொல்லி கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்.பிறகு எனக்கு ‘நான் ஆசைப் பட்டா மாதிரி ஒரு ஆத்துக்காரர் கிடைச்சு இருக்காரே’ன்னு நினைச்சு ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

ரமா மீண்டும் தொடர்ந்தாள்.“கல்யாண பேச்சின் போது என் அப்பா என் அக்கா பத்தின ‘சமா சாரத்தே’ சொன்னார்.உடனே பையனோட மாமியார் ‘எங்களுக்கு அதே பத்தி கவலே இல்லே.ரமா வை என் பையனுக்கு கல்யாணம் பண்ண எங்களுக்கு சம்மதம்ன்னு சொல்லிட்டு,ரமாவுக்கு வைரத் தோடு,வைர மூக்குத்தி போட்டு கூடவே பதினைஞ்சு சவரனுக்கு நகைகளையும் போடச் சொன்னார்” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள்.

கீதா ‘என்னடா இவ மௌனமா இருக்காளே’ என்று யோஜனை பண்ணி கொண்டு இருந்தாள்

ரமா தொடர்ந்தாள்.”ரமா கேட்டதுக்கு மாப்பிளைப் பையன் ஒத்துக் கொண்டு இருக்கார் என்று சந்தோஷப் பட்டு,பையனுடைய அம்மா கேட்டவைரத்தொடு,வைர மூக்குத்தி,பதினைஞ்சு சவரனுக்கு நகைகள் எல்லாம் போட்டு விட்டு,அவர் சக்திக்கு மேலே கல்யாணத்துக்கு செலவு பண்ணார் என் அப்பா.கல்யாணம் முடிஞ்சதும் எல்லாருக்கும் குடுக்க பணம் போறலே.உடனே என் அப்பா அவரு டைய ‘பெஸ்ட் ப்ரெண்ட்’ கிட்டே ஒரு லக்ஷ ரூபாய் கடன் வாங்கி மாணேஜ் பண்ணினார்” என்று சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள் ரமா.

கொஞ்ச நேரம் ஆனதும் “கல்யாணம் ஆன பிற்பாடு நானும்,என் அம்மா,அப்பாவும், என் மாமி யார்,மாமனார்,ஆத்துக்காரர் எல்லோரும் டெல்லிக்கு வந்தோம்.என் ‘புக்ககம்’ ஒரு பெரிய பங்களா. அந்த பங்களாலே ஒன்னு இருந்து ஒன்னு இல்லாம இல்லே.என் அம்மா அப்பா ரொம்ப சந்தோஷப் பட்டு ரெண்டு நாள் என்னோட இருந்தா.என் மாமியார் சொன்னதும் என் அம்மா அப்பா ஒத்துண்டா. அதன் படி என் மாமியார் ஒரு வாத்தியாரை வச்சுண்டு என் ‘சாந்தி முஹ¥ர்த்த பன்ஷனே’ நன்னா பண்ணா” என்று சொல்லி தன் தலை¨த் தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தாள்..

’புக்ககம் ஒரு பங்களா.எனக்கு ‘சாந்தி மூஹூர்த்தம்’ ஆயிடுத்துன்னு சொல்றா.ஆனா ஏன் தன் தலையை தொங்கப் போட்டு கொண்டு இருக்கா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள் கீதா.

“என் ஆத்துக்காரர் ‘ரூம்’லே நான் நுழைஞ்சதும் அவர் என்னே பாத்து ‘ரமா,நான் MBA இல்லே வெறுமனே ஒரு BA தான்.நான் ஒரு தனியார் கம்ப¨னிலே ஒரு ‘க்லார்க்’ ஆகத்’தான் வேலே பாத்து ண்டு வறேன்.இந்த பங்களா எங்களோடது இல்லே.என் பணக்கார மாமாவோடது.என் அம்மா தன் தம்பியோட பணத்லே தான் இந்த ‘பந்தா’ எல்லாம் பண்ணிண்டு வந்து இருக்கா.எங்க வீடு ஒரு சின்ன ஒரு ‘பெட் ரூம்’ ‘ப்லாட்’ தான்.நானும் என் அப்பாவும் என் அம்மவே எதித்துண்டு ஒன்னும் பண்ண முடியாது’ என்று சொன்னதும் நான் ஆடிப் போயிட்டேன்.உடனே நான் அவரேப் பாத்து ‘இன்னிக்கு நாம ‘சாந்தி முஹ¥ர்த்தம்’ பண்ணிக்க வேணான்னு சொல்லிட்டு,தரையிலே ஒரு ‘பெட் ஷீட்டே போட்டுண்டு படுத்துண்டேன்.அவர் ஒன்னும் சொல்லலே.அவர் ‘பெட்’மேலே படுத்துண்டு தூங்கினார்” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தாள்.
ரமா சொன்னதைக் கேட்டு கீதா மிகவும் வருத்தப் பட்டாள்.

“காத்தாலே எழுந்ததும் நான் என் ‘புக்காத்தின்’ ‘உண்மை சமாசாரத்தே’என் அம்மா அப்பா கிட் டே சொலலே.நான் சந்தோஷமா இருப்பதைப் போல நடிச்சேன்.அவாளும் நான் சந்தோஷமா இருக் கேன்னு நினைச்சுண்டு அடுத்த நாளே சென்னைக்குக் கிளமபிப் போயிட்டா.என் ஆத்துக்காரரும் ,என் மாமனாரும் ரொம்ப நல்லவான்னு எனக்குப் போக போகத் தொ¢ஞ்சது.என் மாமியார் என்னேப் பாத்து ‘ரமா வேலேக்குப் போய் சம்பாதிச்சு வரணும்’ன்னு மிரட்டிண்டு இருந்தா.எனக்கு ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதணும்ன்னு ஆசையா இருந்தது.அப்புறமா அதே சொல்லிக்கலமான்னு நினை ச்சு,என் மாமியார் சொன்னது போல ஒத்துண்டு வேலேக்கு ‘அப்ளை’ பண்ணீண்டு இருத்தேன்”
என்று சொல்லி நிறுத்தினாள்.

ரமா ‘எப்படி நம்ம கதயே மேலே சொல்றது’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

‘சரி,இவ்வளவையும் சொல்லிட்டோம்.மீதியேயும் சொல்லிடலாம்’ என்று நினைத்தாள் ரமா.

“என் போறாத வேளே நான் ‘பாமிலிவே’லெ வந்துட்டேன்” என்று சொல்லி வெட்கப் பட்டாள்.

கீதா ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தாள்.

’என்னடா இது.ஒரு சினிமாலே வர கதை போல இருக்கே ரமாவோட வாழ்க்கை கதை’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

“நான் என் அப்பா அம்மா ஆத்துக்கு வந்து பிரசவத்தை பாத்துண்டேன்.எனக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பொறந்தது.அந்த குழந்தைக்கு மூனு மாசம் ஆனதும் நான் குழந்தையை எடுத்து ண்டு டெல்லிக்கு என் புக்ககத்துக்கு வந்தேன்.குழந்தைக்கு ஒரு வயசு ஆனதும் என் மாமியார் என் குழந்தைக்கு ‘ஆயுஷ் ஹோமம்’ பண்ணினார்.நான் அதுக்கு அப்புறமா என் புக்காத்லே மூனு மாசம் தான் இருந்தேன்.எனக்கு ‘சிவில் சர்விஸஸ் எழுத இன்னும் ஒரு ‘அடெம்ப்ட்’ தான் இருந்தது” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நான் என் மனசே கல்லாக்கிண்டு ஒரு ‘லெட்டரெ’ எழுதி வச்சேன்.அந்த லெட்டர்லே‘எனக்கு ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி ஒரு கலெக்டர் ஆகணும்ன்னு ரொம்ப ஆசை.என்னே ‘பொண்ணு பாக்க’ வந்தப்ப ‘அவர்’ கிட்டே கேட்டேன்.அவர் நான் சொல்றதே ஒத்துண்டு எனக்கு எல்லா ‘ஹெல் ப்பும்’ பண்றேன்னு சொன்னார்.’அவர்’ ஒத்துண்டதாலே தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச் சேன்.ஆனா ‘அவராலே’ எனக்கு எந்த ‘ஹெல்ப்பும்’ பண்ண முடியலே.இனிமே நான் ‘என் வழியே’ப் பாத்துக்கப் போறேன்.யாரும் என்னே தேட வேணாம்’ என்று எழுதி வச்சுட்டு,என் மாமனாரும் மாமி யாரும் மத்தியானம் தூங்கிண்டு இருந்தப்ப,நான் என் புக்காத்தே விட்டு கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன்” என்று சொல்லி விட்டு நிறுத்தினாள்.

கீதா ரமாவின் ¨தா¢யத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

“என் அம்மா அப்பா என்னே ரொம்ப கோச்சுண்டா.நான் அவா கிட்டே மன்னிப்பு கேட்டுண் டேன்.அவா கிட்டே ‘நான் இந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதி ‘பாஸ்’ பண்ணிட்டு,ஒரு கலெக்டர் ஆயி,என் குடும்பத்தோடு சந்தோஷமா போய் இருந்து வருவேன்’ன்னு சொன்னதும் அவ ரெண்டு பேரும் சந்தோஷப் பட்டா.நான் உடனே ‘சிவில் சர்விஸஸ் கோச்சிங்க் க்லாஸ்’ சேந்து படிச்சு,அந்த வருஷமே நான் ‘பாஸ்’ஆயி,டேராடூன் ‘ட்ரெனிங்க்’ நல்ல விதமா படிச்சி முடிச்சதும்,எனக்கு ஹா¢யா ணாவிலே ஒரு ‘சப் கலெக்டர் போஸ்டிங்க்’ குடுத்தா.நான் அந்த வேலைலே சேந்தேன்.அப்புறமா படிப் படியா ஒசந்து இந்த வேலேக்கு வந்து இருக்கேன்” என்று சொல்லி ஒரு பெரு மூச்சு விட்டாள் ரமா.

உடனே கீதா எழுந்து நின்றுக் கொண்டு “ரமா உனக்கு எத்தனை ‘பர்சிவியரன்ஸ்’.நிஜமா பத்தா யிரத்லே, ஏன் லக்ஷத்லே ஒருத்தருக்குக்த் தான் இவ்வளவு ‘பர்சிவியரன்ஸ்’ இருக்கும்.’யூ ஆர் சிம்ப்லி டூ க்ரேட்’ நாங்க எல்லாம் எங்க அம்மா அப்பா ஆத்லே செல்லமா வளந்துண்டு வந்தப்ப,இந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ பாஸ் பண்ணி IAS பாஸ் பண்ணினோம்.அது ஒன்னும் பெரிய விஷயமே இல்லே. ஆனா நீ ஒரு கல்யாணத்தே பண்ணிண்டு,ஒரு குழந்தேயே பெத்துண்டு,அப்புறமா அந்த குழந்தை யும்,உன் ஆத்துக்காரரையும் விட்டுட்டு,நீ சென்னைக்கு வந்து, ‘சிவில் சர்விஸஸ் கோச்சிங்க் க்லாஸ் லே’ சேந்து, உனக்கு இருந்த ஒரே ஒரு ‘அடெம்ப்ட்லே’ அந்த பரிக்ஷயை ‘பாஸ்’பண்ணி இருக்கே.நீ சொல்றதே கேக்கும் போது என் உடம்பு எல்லாம் புல்லா¢ச்சுது.உன்னுடைய ‘பர்சிவியரன்ஸை’ புகழ என் கிட்டே வாத்தைகளே இல்லே ரமா” என்று சொல்லி,ரமாவின் கைகளை பிடித்துக் கொண்டு குலுக்கினாள்.

உடனே ரமாவும் எழுந்து நின்றுக் கொண்டு கீதாவுக்கு தன் நன்றியைச் சொன்னாள்.

இந்த நேரம் பார்த்து அவர்களுக்கு ‘காபி’ வரவே அதை வாங்கி ரெண்டு பேரும் குடித்தார்கள்.

“மாடம்.என் மனசிலே ஒரு ஆசை இருக்கு. இன்னும் ஒரு வாரம் ஆனதும் நான் இருந்த ‘ப்லா ட்டுக்கு’ப் போய் என் மாமியார்,மாமனார், ஆத்துக்காரர் மூனு பேர் கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுட்டு, என் குடும்பத்தோடு இருந்து வரணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்” என்று சொன்னதும் கீதா ரமா வைப் பார்த்து “நீ அதே நிச்சியமா பண்ணு ரமா.உன் கிட்டே தான் காரும் டிரைவரும் இருக்கே.அப்படி அவா மூனு பேரும் உன்னே மன்னிச்சு,நீ பழையபடி உன் குடும்பத்தோடு சேந்து இருந்தா, அதேப் பாத்து சந்தோஷப் படற முதல் மனுஷி நானா தான் இருப்பேன்.அந்த ‘குட் நியூஸே’ நீ வந்து எனக்கு சொன்னா, நான் உனக்கு ஒரு கிலோ லட்டு வாங்கித் தறேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.
ரமா கீதா மேடத்தை ‘தாங்க்’ பண்ணி விட்டு தன் சீட்டுக்கு வந்தாள்.

தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணினாள்.

’கீதா மேடம் சொன்னா மாதிரி நடந்தா என்னே விட சந்தோஷப் படப் போறவா யார் இருக்கப் போறா’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள் ரமா.
புதிய வேலையில் முழு கவனம் செலுத்தி தன் மேலிடத்தில் நல்ல பேர் வாங்கிக் கொண்டு வந் தாள் ரமா.

கீதா மேடத்துக்கு ரமாவின் வேலைகள் ரொம்ப பிடித்து இருந்தது.

’ரமா அவளுக்கு எல்லா வேலையையும் சரியான நேரத்தில் செய்து முடித்து, எல்லோருடைய பாராட்டல்களையும் வாங்கி வந்தாள்.

ரமா ‘செகரட்டரி’ வேலையில் சேர்ந்து ரெண்டு வாரம் ஆயிற்று.

‘இப்போ தான் நாம டெல்லிக்கு வந்துட்டோமே.ஏன் ஒரு நாள் நாம அந்த பழைய ‘ப்லாட்டு’ க்குப் போய்,ஆத்துக்காரரையும் மாமனார்,மாமியார்,குழந்தை கிரண் எல்லோரையும் பாத்துட்டு வரக் கூடாது.அப்படி பாத்துட்டு,அவா எல்லோரையும்,நாம இருக்கிற இந்த பங்களாவுக்கு’ அழைச்சுண்டு வந்து சந்தோஷமா வச்சுண்டு வரக் கூடாது’ என்று ஆசைப் பட்டாள்.

அவளுக்கு இனிமேல் தன் ஆசையை அடக்க முடியவில்லை.

தன் கணவரையும்,மகனையும்,மாமனாரையும்,மாமியாரையும் பார்க்கத் துடித்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.ரமாவுக்கு ஆஸீஸ் லீவு.இருந்தாலும் தன் கார் டிரைவரை தன் பங்க ளாவுக்கு வரச் சொல்லி இருந்தாள்.
ரமா பங்களாவிலே ‘டிபன்’ ‘காபி’ சாப்பீட்டு விட்டு கார் டிரைவர் வருவதற்கு காத்துக் கொ ண்டு இருந்தாள்.கார் டிரைவர் வந்ததும் ரமா காரில் ஏறிக் கொண்டு டிரைவரைப் பார்த்து தான் வசித்து வந்த ‘ப்லாட்’ இருந்த தெருவுக்குப் போகச் சொன்னாள்.

அந்த தெரு வந்ததும் ரமா டிரைவரைப் பார்த்து “நீங்க காரை மெல்ல ஓட்டிக் கிட்டுப் போங்க. நான் இங்கே ஒரு வீட்டைத் தேடணும்” என்று ஹிந்தியில் சொன்னாள்.டிரைவரும் ரமா சொன்னது போல காரை மெல்ல ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டு இருந்தான்.

ரமா மனது பயத்தால் ‘திக்’ ‘திக்’ என்று அடித்துக் கொண்டு இருந்தது.

தான் வசித்து வந்த வீட்டு வந்ததும் ரமா கார் டிரைவரைப் பார்த்து “காரை கொஞ்சம் ஓறமா நிறு த்துங்க.நான் இந்த கட்டிடத்திலே ரெண்டாவது மாடிக்குப் போகணும்”என்று சொன்னதும் அந்த கார் டிரைவர் “மாடம்,இந்த தெருவு ரொம்ப சின்னது.நான் காரை இங்கே ‘பார்க்’ பண்ணா,எதிரே வர வண் டிங்க போக ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால்லே நான் காரை மெயின் ரோடிலே ‘பார்க்’ பண்றேன். உங்க வேலை முடிஞ்சதும்,நீங்க எனக்கு ஒரு ‘மிஸ்’ கால் குடுங்க,நான் மறுபடியும் இங்கே வறேன்” என்று சொல்லி விட்டு ரமாவை இறக்கி விட்டு விட்டு மெயின் ரோடுக்குப் போய் காரை ‘பார்க்’ பண்ணனான்.

ரமா மெல்ல படி ஏறி இரண்டாவது மாடிக்கு வந்தாள்.

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.அந்த ‘ப்லாட்’ பூட்டி இருந்தது.

’இந்த ‘பாலாட்லே’தானே நாம இருந்துண்டு வந்தோம்.ஆனா இந்த ‘பலாட்’ பூட்டி இருக்கே. ஒரு வேளே ‘அவர்’ நாம போன பிற்பாடு,வேறே ‘ப்லாட்’டுக்கு போய் விட்டு இருப்பாரோ.இல்லே ஞா யித்து கிழமை ஆச்சேன்னு எல்லாரும் வெளியே எங்காவது போய் இருப்பாளோ’ என்று நினைத்தாள்.

அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.

ரமா வருத்தப் பட்டுக் கொண்டே மெல்ல கீழே இறங்கி வந்து கார் டிரைவருக்கு ‘போன்’ பண் ணினாள்.
கார் வந்ததும் அதில் ஏறி தன் பங்களாவுக்கு வந்தாள்.’சரி,நாம ஒரு வார நாள்ளே அந்த ‘ப்லா ட்டு’க்கு வந்துப் பாக்கலாம்.அன்னைக்கு மாமனார்,மாமியார் நிச்சியமா ஆத்லே இருந்துண்டு வருவா’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.

திங்கட் கிழமை ரமா ஏதோ வேலையாக ‘சீப் செகரட்டரியை’ப் பார்த்தப் போனாள்.

தன் கணவன் இருந்த வீடு பூட்டி இருந்த துக்கம்,அவள் முகத்தில் ஒரு வாட்டத்தைக் காட்டிக் கொண்டு இருந்தது.

ரமா முகத்தில் ஒரு வாட்டத்தைப் பார்த்த கீதா “ஏன் ரமா ஏதோ ‘வா£டா’ இருக்கே” என்று கேட் டதும் ரமா நடந்த விஷயத்தை எல்லாம் விவரமாகச் சொன்னாள்.உடனே கீதா “கவலைப் படாதே ரமா. நேத்து ‘சண்டேவாக’ இருந்ததாலே அவா எல்லாம் வெளீயே போய் இருப்பா.நீ வார நாள்ளே ஒரு தட வைப் போய் பாறேன்.அவா நிச்சியமா உனக்குக் கிடைப்பா ரமா” என்று ஆறுதல் சொன்னாள்.

“ஆமாம் மாடம்,நான் வார நாள்ளே ஒரு நாள் போய் பாக்கறேன்.உங்க வாக்கு பலிக்கணும் எனக்கு அவா கிடைக்கணும்.நான் அவா கூட சந்தோஷமா இருந்துண்டு வரணும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

உடனே கீதா மேடம் ”ரமா.நீ கவலையே படாதே.உனக்கு உன் ஆத்து மனுஷா எல்லாரும் நிச்சி யமா கிடைப்பா.நீயும் அவா கூட சந்தோஷமா இருந்து வருவே” என்று சொன்னதும் ரமா கீதா மேடத்தை ‘தாங்க்’ பண்ணினாள்.

அன்று வியாழக்கிழமை.மணி நாலு இருக்கும்.

ரமா முக்கியமான மூனு ‘பைலை’ தன் கையிலெ எடுத்துக் கொண்டு தன் ‘பாஸ்’ ரூமுக்குப் போனாள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,ரமா தான் கொண்டுப் போன மூனு ‘பைலில்’ ‘பாஸி’ன் கை எழுத்தை வாங்கிக் கொண்டு “மேடம்,எனக்கு நாளைக்கு காத்தாலே ஒரு அரை நாள் லீவு வேணும்.நான் அந்த தெருவுக்கு மறுபடியும் பாக்கறேன்” என்று சொன்ணாள்.

உடனே கீதா மேடம் “ரமா,நீங்க லீவு எடுத்துகோ.ஆனா ஞாபகம் இருக்கட்டும்.நாளைக்கு மத் தியானம் மூனு மணிக்கு மந்திரி நம்ம எல்லோரையும் ஒரு முக்கியமான ‘மீட்டிங்குக்கு’ வரச் சொல்லி இருக்கார்.நாம அதுக்கு ரெடி பண்ணனும்.அதனால்லே,நீ எவ்வளவு சீக்கிரமா வேலைக்கு வர முடியு மோ,அத்தனை சீக்கிரமா வேலைக்கு வந்துடு” என்று சொன்னதும்,“மேடம் எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு.நான் எவ்வளவு சீக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ‘ஆபீஸ்’க்கு வந்துடறேன்” என்று சொல்லி விட்டு சந்தோஷமாக ‘பாஸ் ரூமை’ விட்டு தன் ‘ரூமு’க்கு வந்தாள்.

தன் சீட்டுக்கு வந்து அடுத்த நாள் மந்திரியின் மத்தியான மூனு மணி ‘மீட்டிங்க்’குக்கு வேண் டிய எல்லா ‘பைல்’ களையும் ஏழு மணி வரை ‘ஆபிஸி’ல் இருந்து ரெடி பண்ணிவிட்டு தன் பங்க ளாவுக்கு வந்தாள்.

கார் டிரைவர் ஒன்பது மணிக்கு வந்ததும் ரமா காரில் ஏறிக் கொண்டு கார் டிரைவரைப் பார்த்து “ஹா¢ஷ்,ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ‘சன்டே’ நாம போனோமே,அந்த தெருவுக்குப் போங்க” என் று சொன்னதும்,டிரைவர் ரமா சொன்ன இடத்துக்குப் ஓட்டிக் கொண்டுப் போனான்.

கார் தான் வசித்து வந்த தெருவில் நுழைந்ததும் ரமா அந்த தெருவைப் பார்த்தாள்.

தான் வசித்து வந்த ‘ப்லாட்டு’க்கு ஒரு ஐந்து வீடுகளுக்கு அப்புறமாக இருந்த ஒரு வீட்டில் இருந்து சுரேஷ் தன் பழைய ஸ்கூட்டரை தள்ளி கொண்டு வாசலுக்கு வந்துக் கொண்டு இருந்தான். அவன் பின்னாலே ஒரு பையன் ‘ஸ்கூல் யூனிபார்ம்’ போட்டு கொண்டு,தோளில் ‘ஸ்கூல்’ பையோடு வந்தான்.

இதைப் பார்த்த ரமா ‘அவர் நாம இருந்து வந்த ‘ப்லாட்டை’ காலி பண்ணிட்டார் போல இருக் கே.இப்போ இந்த வீட்லே இருந்து வெளியே வறாரே.முன்னே வச்சுக் கொண்டு இருந்த பழைய ‘ஸ்கூ ட்டரை’யே இன்னும் வச்சுண்டு இருக்காரே.பின்னாலே ‘ஸ்கூட்டர்லே’ ஏறினப் பையன்,இவ்வளவு வளந்து இருக்கானே.இவன் என் வயித்லே பொறந்த பையன் கிரணா’ என்று எண்ணும் போது அவள் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.உடனே ரமா கார் டிரைவரைப் பார்த்து “ஹா¢ஷ்,காரை கொஞ்சம் நிறுத்து” என்று சொன்னதும் டிரைவர் காரை நிறுத்தினான்.

பத்து முறை உதைத்து ‘ஸ்கூட்டரை’ ‘ஸ்டார்ட்’ பண்ணினான் சுரேஷ்.அந்தப் பையன் ‘ஸ்கூல்’ பையுடன் ‘ஸ்கூட்டர்’ பின்னால் ஏறிக் கொண்டான்.ரமா டிரைவரை பார்த்து சுரேஷ் போய்க் கொண்டு இருந்த ‘ஸ்கூட்டரை’ப் பின் தொடரச் சொன்னாள்.டிரைவரும் ரமா சொன்ன ‘ஸ்கூட்டரை’ பின் தொ டர்ந்து போனான்.

அதே தெருக் கோடியில் இருந்த ‘கான்வென்ட் ஸ்கூலின்’ வாசலின் முன்னால் ’ஸ்கூட்டரை’ நிறுத்தி விட்டு,கிரணை இறக்கி விட்டான் சுரேஷ்.அவன் தலை மறையும் வரை ‘பை’ ,’பை’, காட்டிக் கொண்டிருந்தான் கிரண்.அப்பா போன பிறகு கிரண் தன் நண்பனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *