ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 4,021 
 

அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16

பீட்டர் தன் ஆயா கூட வளர்ந்துக் கொண்டு வந்தான்.

‘தான் ஆசையாக மணந்து வந்த மோ¢ தன்னை விட்டு போன பிறகு, ஜானுக்கு தனியாக வாழ்ந் து வரவே பிடிக்கவில்லை.அவன் மனம் ஒடிந்து தான் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தான்.ஜானின் அம்மாவும்,மோ¢யின் பெற்றோர்களும் ஜானைப் பார்த்து “ஜான்,மோ¢ கர்த்தர் கிட்டே போய் சேந்துட்டா.ஆனா,நீயும்,பீட்டரும் ரொம்ப வருஷம் இந்த உலகத்லே வாழ்ந்து வறணும்.அதுக்கு பணம் வேணும்.நீ மெல்ல உன் மனசே தேத்தி கிட்டு வேலைக்குப் போய் வா” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.
அவர்கள் மூவரும் சொன்னதைக் கேட்ட ஜான் தன் துக்கத்தை மெல்ல மறந்து விட்டு, மறுபடி யும் வேலைக்குப் போய் சம்பாதித்து வந்தான்.
மோ¢ ஞாபகமாகவே இருந்து வந்த ஜான் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஜான் அம்மா அவனை பலமுறை வற்புருத்து வந்தாள்.ஆனால் ஜான் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தன் வாழக்கையை ஒரு துறவியைப் போல வாழ்ந்து வந்தான்.ஜான் பிடிவாதத்தை பார் த்த அவன் அம்மா அதற்கு பிறகு ஜானை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தவே இல்லை.

ஐந்து வயது ஆனதும் ஜான் பீட்டரை அருகில் இருந்த பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத் தான்.

பீட்டருக்கு அவர்கள் குடும்பத்தில் சாப்பிட்டு வந்த எந்த ‘நான் வெஜ்’ ஐயிட்டமும் பிடிக்கவில் லை.அவன் வெறுமனே காய்கறிகளை மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டு வந்தான்.இதைப் பார்த்த ஜான் அவன் அம்மாவிடம் ”என்னம்மா பீட்டர் ஒரு ‘நான் வெஜ் ஐயிட்டமும்’ சாப்பிடாம,வெறுமனே காய் கறிகளை மட்டும் சாப்பிடறான்.நாம என்ன ஐயர் ஜாதிக்காரங்களா,வெறுமனே காய்கறி மட்டும் சாப்பிட்டு வர” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

உடனே ஜானின் அம்மா “நான் பல தடவை சொல்லியும் அவன் எனக்கு ‘எந்த ‘நான் வெஜ் ஐயிட்டமும்’சாப்பிட பிடிக்கலேன்னு பிடிவாதம் பிடிச்சு வறான்.நான் என்ன செய்யட்டும் சொல்லு” என்று சொல்லி விட்டு “ஜான்,ஒரு வேளை பீட்டர் இதுக்கு முன் ஜென்மத்திலே ஒரு ஐயர் வீட்லே பொறந்த பையனா இருப்பான்னு எனக்குத் தோணுது” என்று கிண்டலாக பதில் சொன்னாள்.

ஜானும் அவன் அம்மாவும் பீட்டரை வற்புறுத்த வில்லை.ஜானின் அம்மா பீட்டர் ஆசைப் பட்ட காய் கறிகளை அவனுக்குத் தனியாக சமைத்து சாப்பிடக் கொடுத்து வந்தார்ள்.
பீட்டர் ‘ட்வெல்த்’ ‘பாஸ்’ செய்தான்.

ஜான் ஒரு நாள் தன் அம்மாவையும்,பீட்டரையும் தன் அருகில் அழைத்து “எனக்கு நான் வேலை செஞ்சுக் கிட்டு வந்தது போதும்ன்னு தோனுது.நான் என் வேலையை பீட்டருக்கு வாங்கிக் குடுத்து விட்டு,சர்ச்சில் சேந்து ‘கர்த்தருக்கு’ சேவை செஞ்சு வரலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னான்.

உடனே ஜானின் அம்மா “ஜான்,உனக்கு சர்ச்சில் சேந்து ‘கர்த்தருக்கு’ சேவை செஞ்சு வரலாம் ன்னு ஆசையா இருந்தா அதை சந்தோஷமா பண்ணி வா.உன் மன அமைதி தான் இந்த வயசிலெ ரொம்ப முக்கியம்.பீட்டர் சம்பாதிச்சு வரட்டும்.அந்த பணம் நமப மூனு பேருக்கும் போதும்” என்று சொ ல்லி ஜானை ‘சர்ச்சில்’ சேரச் சொன்னாள்.

ஜான் மனது சந்தோஷப் பட்டது.அவன் ‘சர்ச்சில்’ சேர்ந்து’ கர்த்தருக்கு’ சேவை செய்து வர ஆசைப் பட்டான்.ஜான் அடுத்த நாளே தான் எடுத்த முடிவை சர்ச்சுக்குப் போய் ‘பாதர் சுபீரியரை’ சந்திச்சு சொன்னான்.அவர் ஜான் எடுத்த முடிவை பாராட்டி அவனுக்கு சர்ச்சிலே ஒரு ‘சூப்பர்வைஸர்’ வேலை தருவதாக சொன்னார்.

ஜான் அவன் வேலை செய்து வந்த ‘க்ரேஸ் சூப்ப்ர்மார்கெட்’ மானேஜரை சந்தித்து, தான் எடு த்து இருக்கும் முடிவை சொல்லி விட்டு,அவரை தன் மகன் பீட்டருக்கு ஒரு வேலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.அந்த மானேஜர் பீட்டருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்து விட்டு, ஜானைப் பார்த்து “ஜான்,நீங்க எடுத்து இருக்கும் முடிவை நான் ரொம்ப பாறாட்டறேன்.நீங்க ‘சர்ச்சில்’ வேலை செஞ்சு வருவது எனக்கு ரொம்ப சந்தோஷத்தே குடுக்குது.உங்க ‘சர்ச்’ வாழக்கைக்கு என் பா¢ புரண வாழ்த்துக்கள்.நீங்க ‘சர்ச்சிலே’ சந்தோஷமா வேலே செஞ்சுக் கிட்டு வாங்க” என்று சொல்லி ஜானை அனுப்பினார் அந்த மானேஜர்.

அடுத்த நாளில் இருந்து ஜான் ‘சர்ச்சிலும், பீட்டர் ‘க்ரேஸ் சூப்ப்ர்மார்கெட்டிலும்’ வேலை செய்து வர ஆரம்பித்தார்கள்.

அடுத்த நாள் காலையில் மங்களமும் ராமநாதனும் ‘நாம என்ன செஞ்சா சுதா மறுபடியும் அந்த ‘சூப்பர் மார்கெட்டுக்கு’ ப் போய் அந்த கிருஸ்தவ பையனை சந்திக்காம இருப்பா’ என்று யோஜ னைப் பண்ணீனார்கள்.

மங்களம் தன் கணவரைப் பார்த்து “நாம அவ அந்த ‘சுப்பர் மார்கெட்’வேலைக்கு போட்டுக்கற ‘யூனிபார்ம்’ பாட்ஜ்’எல்லாத்தையும் துர ஏறிஞ்சுடலாம்.அவ வச்சுண்டு இருகிற ‘செல் போனையும்’ துர எறிஞ்சிடலாம்.அப்படி பண்ணா சுதா அந்த வேலைக்குப் போக முடியாது.அந்த கிருஸ்தவ பைய னையும் பாக்க முடியாது.அவன் கூட பேச முடியாது.அவனாலும் சுதா கிட்டே பேச முடியாது.என்ன சொல்றேள்” என்று கேட்டாள்.

மணைவி சொன்ன ஐடியா ராமநாதனுக்கு பிடித்து இருக்கவே அவர் “சரி மங்களம், நீ அப்படி யே பண்ணு.எப்படியாவது சுதா அந்த கிருஸ்தவ பையனை மறுபடியும் சந்திக்காம இருந்தா போறும். கொஞ்ச நாள் போனா சுதா அந்த பையனை மறந்து விடுவா.அதுக்குள்ளே நாம ஒரு நல்ல பிராமணப் பையனா பாத்து அவ கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணீடலாம்” என்று சொன்னார்.

அடுத்த நாள் மங்களம் சுதாவைப் பார்த்து ”நீ வேலைக்குப் போனாத் தானே அந்த கிருஸ்தவ பையனை சந்திக்க முடியும்.நீ வேலைக்கே போக வேணாம்.ஆத்லேயே இருந்து வா.நாங்க கூடிய சீக் கிரமா ஒரு நல்ல பிராமண பையனாப் பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறோம்”என்று சொல்லி அவள் ‘க்ரேஸ் சூப்பர் மார்க்கெட்’ ‘யூனிபாரம்’,அந்த கடை ‘பாட்ஜ்’,அவ ‘செல் போன்’ எல்லாவற் றையும் எடுத்து வாசலில் இருந்த குப்பைத் தொட்டியில் ஏறிந்து விட்டாள்.

ராமசாமி “நீ பண்ணது தான் ரொம்ப ‘கரெக்ட்’மங்களம்.அந்த கிருஸ்தவ கடை ‘யூனிபாரமும்’ கடை ‘பாட்ஜ்ஜும் ‘இல்லாட்டா அவ அந்த கடை வேலைக்குப் போக முடியாது.நீ சொன்னா மாதிரி யே நாம ஒரு நல்ல பிராமணப் பையனா சீக்கிரமா பாத்து அவளுக்கு கல்யாணத்தே பண்ணி வச்சுட் டா,சுதா அந்த கிருஸ்தவ பையணை மறந்துட்டு, கல்யாணம் பண்ணிண்ட பிராமண பையனோடு குடியும் குடித்தனமுமா இருந்து வருவா” என்று சந்தோஷமாக சொன்னார்.

அப்பா அம்மா பண்ணீனதைப் பார்த்த சுதா திடுக்கிட்டுப் போனாள்.சுதா வாசலுக்கு ஓடிப் போய் பார்த்தாள்.

அதற்குள்ளே யாரோ ரெண்டு பிச்சைக்காரரகள் அந்த யூனிபாரத்தை எடுத்து போய் விட்டா ர்கள்.அம்மா வீசி எறிந்த ‘செல் போன்’ துண்டு துண்டாக சிதறிக் கிடந்தது.
வெறுப்புடன் வீட்டிற்குள் வந்தாள் சுதா.

”அம்மா,என்னைக் கேக்காம, நீங்கோ ஏன் என் கடை ‘யூனிபாரத்தையும்’ கடை ‘பாட்ஜ்ஜை யும்’,என் ‘செல் போனை’யும் வாசல்லே வீசி எறிஞ்சுட்டேள். நான் ஆத்லே சும்மா இருந்துண்டு என்ன பண்ணப் போறேன்.வேலைக்குப் போற ஒரு வயசு பொண்ணை இப்படி ஆத்லே எத்தனை நாளைக்கு சும்மா இருந்து வரச் சொல்லப் போறேள்.நான் பீட்ட ரைத் தவிர வேறே யாரையும் கல்யா ணம் பண்ணிக்க மாட்டேன்.நான் ஒன்னும் சாப்பிட மாட்டேன் இந்த ஆத்லே” என்று கத்தினாள்.

ராமநாதனும் மங்களமும்,ராமசமியும்விமலாவும் கவலைப் படவில்லை.

அடுத்த நாளில் இருந்து ராமநாதனும் மங்களமும் சுதாவுக்கு ஒரு நல்ல பிராமண பையனா தேடி வந்தார்கள்.மங்களமும் விமலாவும் சுதா வெளியே போகாமல் பார்த்துக் கொண்டு வந்தார்கள். சுதா அம்மா,பாட்டி,கொடுத்த எதையும் சாப்பிடாமல் பிடிவாதமாய் பட்டினியாய் இருந்து வந்தாள்.

ரெண்டு நாள் ஆயிற்று.

சுதா வேலைக்கு வராத இந்த ரெண்டு நாளே பீட்டருக்கு ‘நரக வேதனை யாக’ இருந்தது. ஒவ் வொரு நிமிஷமும் ‘சுதா ஏன் வேலைக்கு வரலே.அவளுக்கு உடம்பு ஏதாச்சும் சரி இல்லாம இருக்கு மா’ என்று கவலைப் பட்டுக் கொண்டு வந்தான்.பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ‘செல் போனில்’ சுதாவை கூப்பிட்டு வந்தான்.ஆனால் சுதா ‘செல் போனில்’ இருந்து ஒரு பதிலும் வரவில்லை.

பத்து தடவை போன் பண்ணிப் பார்த்து விட்டு ‘ஏன் சுதா ‘செல் போன்லே’ பேச மாட்டேங்க றா’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.அவனுக்கு கடையில் வேலை செய்யவே இஷடம் இல்லை. பல்லைக் கடித்துக் கொண்டு வேலை செய்து வந்தான்.

இரவு வீட்டுக்கு வரும் பீட்டர் முன்னம் போல சந்தோஷமாக இல்லாமல் ஏதோ பறி கொடு த்தவன் போல் இருந்தான்.இதை கவனித்த ஜானின் அம்மா பீட்டரைப் பார்த்து “பீட்டர் நீ முன்னே எல்லாம் சந்தோஷமா இருந்தது போல இல்லாமல் கொஞ்ச நாள்ளா ஏதோ பறி கொடுத்தவன் போல இருந்து வறயே.என்ன சமாசாரம்.ஆயா கிட்டே சொல்லுப்பா” என்று அவன் தலையைத் தடவிக் கொ ண்டே கேட்டாள்.

ஜானும் “ஆமாம்மா, நானும் இதை கவனிச்சேன். என்ன சமாசாரம் பீட்டர் சொல்லுப்பா” என்று கேட்டார்

பீட்டருக்கு அழுகையே வந்து விட்டது.

பீட்டர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “அப்பா, ஆயா,நான் என் கடையிலே வேலை செஞ்சு வர சுதான்னு ஒரு பொண்ணே காதலிக்கறேன். அவளும் என்னை உயிருக்கு உயிரா காதலிக் கறா.சுதா ஒரு வாரமா வேலைக்கு வறலே.சுதா ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணு.அவ நான் படிச்ச பள்ளீ கூடத்லே தான் படிச்சிக் கிட்டு இருந்தா.அப்போ பிடிச்சே எனக்கு சுதவை நல்லா தொ¢யும்.நானும் அவளும் நிறைய தடவை சாயங்காலம் ‘காபி’ குடிச்சிட்டு பேசிக் கிட்டு இருந்தோம்.அவ ‘டெந்த் பாஸ்’ பண்ணிட்டு வேலை தேடி கிட்டு இருந்தா.ஒரு நாளைக்கு அவ எங்க கடைலே ‘கூல் டிரிங்க்ஸ்’ குடிக்க வந்தா.அவ என்னேப் பாத்து ‘பீட்டர் நான் ஒரு வேலை தேடிக் கிட்டு இருக்கே’ன்னு சொன் னா.நான் தான் கடை முதலாளி கிட்டே சுதாவுக்கு ஒரு வேலை வாங்கிக் குடுத்தேன்.நான் அவ பேர் லே உயிரா இருக்கேன்.கல்யாணம் கட்டிக் கிட்டா நான் சுதாவைத் தான் கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசை படறேன்.என்ன காரணமோ தொ¢யலே.சுதா ரெண்டு நாளா வேலைக்கே வரலே.அவ ளுக்கு உடம்பு ஏதாச்சும் சரி இல்லையோ என்னவோ”என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னான்.

உடனே ஜானின் அம்மா “என்ன பீட்டர்,அந்தப் பொண்ணு ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணுன்னு சொல்றே,அவங்க நம்ம ஜாதி பையனை கல்லாணம் கட்ட மாடாங்களேப்பா.அந்த பொண்ணு அவங்க வூட்லே உங்க காதலை சொல்லி இருப்பா.அவங்க அம்மா அப்பா அவளை வேலைக்குப் போகக் கூடாதுன்னு சொல்லி விட்டு இருப்பாங்க.அதான் அந்த பொண்ணு வேலைக்கு வராம இருக்கான்னு எனக்குத் தோணுது” என்று சொன்னாள்.

பீட்டர் சொன்னதை கேட்ட ஜான் யோஜனைப் பண்ணீனான்.

”என்ன பீட்டர்,நீ படிக்கும் போதே உனக்கு சுதாவை நல்லாத் தொ¢யும்ன்னு சொல்றே.அவங்க ஐயர் ஜாதிகாரங்கன்னு நல்லா தொ¢ஞ்சு இருந்தும் ஏம்ப்பா அவளை காதலிக்க ஆரம்பிச்சே.நம்ம கடை யிலே நிறைய கிருஸ்தவ பொண்ணுங்க வேலை செஞ்சு வறாங்களே.அவங்கள்ளே உனக்குப் பிடிச்ச ஒரு நல்ல பொண்ணாப் பாத்து நீ காதலிக்க கூடாதா” என்று வருத்ததுடன் கேட்டார்.

கொஞ்ச நேரம் போனதும் ஜானின் அம்மா “ஜான்,உன் கல்யாண வாழக்கை தான் பீட்டர் பொற ந்தவுடனே சோகமா முடிஞ்சி,அப்புறமா நீ கல்யாண ஆசையே இல்லாம ஒரு தனி மரமா வாழ்ந்துக் கிட்டு இருக்கே.உனக்கு விருப்பம் இல்லாம இருந்ததாலே,நானும் உன்னே இன்னொரு கல்யாணம் கட்டிக்கன்னு தொந்தரவு பண்ணலே.பீட்டர் கல்யாண வாழக்கையாவது அவன் இஷ்டப் பட்டா மாதிரி நல்ல அமைஞ்சு,அவன் குழந்தைங்களே பெத்துக் கிட்டு சந்தோஷமா இருந்து வரணும்ன்னு நான் தினமும் ‘கர்த்தரை’ வேண்டிக் கிட்டு வரும் போது,அவன் சந்தோஷமா இல்லாம வருத்தமா இருந்துக் கிட்டு வரானே” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண் டாள்.

பீட்டர் தன் ஆயா அப்பாவைப் பார்த்து “நீங்க எப்படியாவது எனக்கு சுதாவை கல்யாணம் கட்டிக் குடுக்க உதவ முடியுமா.சுதா இல்லாம என்னா வாழவே முடியாது.நான் அந்த அளவுக்கு சுதா வை மனசார காதலிக்கறேன்.எனக்கு வேறே எந்த பொண்ணையும் பாக்க பிடிக்கலே.நான் கல்யாணம் கட்டிக் கிட்டா சுதாவைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்” என்று சொல்லி அவன் ஆயா கைகளையும் அப்பாவின் கைகளையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

ரெண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தொ¢யாமல கஷ்டப் பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ஜானின் அம்மா “ஜான், பீட்டர் அந்த ஐயர் பொண்ணு சுதா வீட்டு விலாசத்தே தொ¢ஞ்சுக் கிட்டு வரட்டும்.நாம் ரெண்டு பேரும் அந்த ஐயர் பொண்ணு சுதா வீட்டுக்குப் போய் அவங்க அம்மா அப்பா கிட்டே பீட்டர் காதலைச் சொல்லி, சுதாவை பீட்டருக்கு கல்லாணம் பண்ணிக் குடுக்கச் சொல்லி கேட்டுப் பாப்போமே.நீ என்ன சொல்றே.உனக்கு வேறே ஏதாச்சும் ஒரு ‘ஐடியா’ இருக்கா”என்று கேட்டாள்.

உடனே பீட்டர் “ரொம்ப ‘தாங்கஸ்’ ஆயா.நீங்க ரெண்டு பேரும் எனக்கு இந்த உதவியே கொ ஞ்சம் செய்யுங்க ‘ப்ளீஸ்’ ”என்று கெஞ்சினான்.

ஜான் “அம்மா நீங்க சொல்றது தான் ‘கரெக்ட் ஐடியா’.அப்படியே செய்யலாம்” என்று சொல்லி விட்டு பீட்டரைப் பார்த்து “பீட்டர், நீ அந்த சுதா விட்டு விலாசத்தே கடையிலே இருந்து தொ¢ஞ்சுக் கிட்டு வா.ஆயா சொன்னாப் போல நாம மூனு பேரும் சுதா விட்டுக்குப் போய், உங்க ரெண்டு பேர் காதலையும் சொல்லி விட்டு கல்யாணம் பண்ணீக் குடுக்க கெஞ்சிக் கேப்போம்” என்று சொன்னார்.

உடனே பீட்டர் சந்தோஷமாக “ரொம்ப ‘தாங்க்ஸ்’ப்பா.நான் இன்னைக்கே கடைக்குப் போய் சுதா வீட்டு விலாசத்தே தொ¢ஞ்சுக் கிட்டு வந்து உங்க கிட்டே சொல்றேன்” என்று சொன்னான்.

சுதா ஒரு வேளை கூட ஒன்னும் சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்து வந்தாள்.

இதைப் பார்த்ததும் மங்களத்துக்கும், விமலாவுக்கும்,ராமசாமிக்கும் மிகவும் வருத்தமாய் இருந் தது.அவர்களுக்கு என்ன பண்ணுவது என்று தொ¢யவில்லை.மூனு பேரும் சுதாவை கெஞ்சி சாப்பிட சொல்லி வந்தார்கள்.ஆனால் சுதா பிடிவாதமாக இருந்து வந்தாள்.அவள் வெறுமனே அடிக்கடி தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு வந்தாள்.

அன்று கடைக்கு வேலைக்கு வந்த பீட்டர் சுதா வேலைக்கு சேர வந்த போது அவள் கொடுத்த ‘அப்லிகேஷனை’ ‘ஆபீஸி’ல் இருந்து கேட்டு, சுதா வீட்டு விலசத்தை ஒரு காகிதத்தில் எழுதிக் கொ ண்டான்.அன்று இரவு வீட்டு வந்ததும் பீட்டர் அதன் அப்பாவையும் ஆயாவையும் பார்த்து “நான் சுதாவோட வீட்டு விலாசத்தே எழுதிக் கிட்டு வந்து இருக்கேன்” என்று சந்தோஷமாக சொன்னான்.

ஜானின் அம்மா “ஜான்,நாம மூனு பேரும் இந்த ஞாயித்துக் கிழமை அந்த பொண்ணு சுதா வூட்டுக்குப் போய் அவங்க ரெண்டு பேருடைய காதலையும் சொல்லி,அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணீ வக்க சொல்லலாம்.நீ ‘பாதர் சுபீரியர்’ கிட்டே ஒரு அரை நாள் லீவு சொல்லி ட்டு வா” என்று சொன்னதும் ஜான் “சரிம்மா, நான் ஞாயித்துக் கிழமை அரை நாள் லீவு கேட்டுக் கிட்டு வறேன்” என்று சொன்னதும் பீட்டர் ரெண்டு பேரையும் ‘தாங்க்’ பண்ணீனான்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

’இந்த ஞாயித்துக் கிழமை நாம சுதாவை பாக்கலாம்.நாமும் அவங்க அம்மா அப்பா கிட்டே நம்ம காதலை சொல்லி சுதாவை கல்யாணம் கட்டிக் குடுக்க கேகலாம்’ என்று எண்ணி,சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தான்

ஞாயிற்றுக் கிழமை அன்று ஜானும்,அவன் அம்மாவும்,பீட்டரும் நன்றாக ‘ட்ரஸ்’ பண்ணிக் கொண்டு ‘கர்த்தரை’ நன்றாக வேண்டிக் கொண்டு சுதா வீட்டு விலாசத்திற்கு வந்து, வாசலில் இருந்த ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்கள்.

அப்போது தான் ராமநாதன் குளித்து விட்டு,நேற்றியில் பட்டை பட்டையாக விபூதியை இட்டுக் கொண்டு சுவாமி மந்திரம் சொல்ல பூஜை ரூமுக்குப் போய்க் கொண்டு இருந்தார்.விமலா சமையலை செய்துக் கொண்டு இருந்தாள்.மங்களம் காய்களை நறுக்கிக் கொண்டு இருந்தாள்.ரமா தன் பாடங்க ளை படித்துக் கொண்டு இருந்தாள்.வழக்கம் போல ராமசாமி அன்றைய ‘ஹிண்டு’ பேப்பரைப் படித் துக் கொண்டு இருந்தார்.

வீட்டு ‘காலிங்க் பெல்’ அடிக்கவே காய்களை நறுக்குவதை விட்டு விட்டு மங்களம் எழுத்துப் போய் வாசல் கதவைத் திறந்தாள்.

வாசலில் ஒரு பொ¢யவர் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு கழுத்தில் ஒரு பொ¢ய சிலுவை மாட்டிக் கொண்டு இருந்தார்.அவர் பக்கத்தில் ஒரு வயதான அம்மா ஒரு வெள்ளை புடவை கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.அந்த வயதான அம்மா பக்கத்தில் நல்ல வெளுப்பான ஒரு இளைஞன் நின்றுக் கொண்டு இருந்தான்.அவன் பார்க்க ரொம்ப அழகாக இருந்தான்.

மூனு பேரையும் ஆச்சரியமாகப் பார்த்த மங்களம்” நீங்க எல்லாம் யாரு.எதுக்கு எங்க ஆத்துக்கு வந்து இருக்கேள்.விலாசம் தப்பா வந்து இருக்கேளா” என்று கேட்டாள்.உடனே அந்த வயதான அம்மா “நாங்க சரியான விலசத்துக்குத் தான் வந்து இருக்கோம்.நாங்க கொஞ்சம் உள்ளே வரலாமா”என்று கேட்டு சிரித்தாள்.

மங்களத்துக்கு என்ன பண்ணுவது என்று தொ¢யாமல் முழித்துக் கொண்டு இருக்கும் போது ராமநாதன் பூஜை ‘ரூமில்’ இருந்து வெளியே வந்து “யாரு வந்து இருக்கா மங்களம்” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார்.

அவரும் அந்த மூனு பேரையும் ஆச்சரியமாகப் பார்த்து விட்டு “இது என் வீடு.நீங்க விலாசம் தவறாக வந்து இருக்கேள் போல இருக்கு.உங்களுக்கு யார் வேணும்” என்று கேட்டு முடிக்கவில்லை, ஜான் “சார்,நாங்க சரியான விலாசத்துக்குத் தான் வந்து இருக்கோம்.நாங்க கொஞ்சம் உள்ளே வரலா மா” என்று மறுபடியும் கேட்டதும் ராமநாதன் வேறே வழி இல்லாமல் “சரி உள்ளே வாங்கோ” என்று சொல்லி அவர் களை வீட்டுக்கு உள்ளே வரச் சொல்லி அவர்கள் மூனு பேருக்கும் சேரைப் போட்டார்.

வீட்டுக்குள்ளே வந்த பீட்டரைப் பார்த்ததும் சுதா ஒடி வந்து “என் அம்மா நம்ம கடை ‘யூனி பாரத்தையும்’,கடை ‘பாட்ஜ்ஜையும்’ என் செல் போனையும் வாசல்லே ஏறிஞ்சுட்டா.அதான் என்னாலே உங்க கூட பேசக் கூட முடியலே” என்று மிகவும் மெல்லிய குரலில் சொன்னதும்,மங்கள த்துக்கும் ராமநாதனுக்கும் வந்தவர்கள் ‘ யார்’ என்று நன்றாகப் புரிந்து விட்டது.

’என்னடா,அந்த கிருஸ்தவ பையன் பீட்டர் அவா ஆத்து மணுஷாளை இங்கே நம்மாத்துக்கே அழைசுண்டு வந்து இருக்கானே’ என்று மங்களமும் ராமநாதனும் கவலைப் பட்டார்கள்.

அந்த வயதான அம்மா தான் முதலில் பேசினாள்.”சார்,என் பேர் ரோஸி.என் கணவர் எனக்கு ஜான் பொறந்ததும் என்னை விவாக ரத்து பண்ணி விட்டு வேறே ஒரு பெண்ணை கல்லாணம் கட்டிக் கிட்டு போயிட்டார்.அன்றில் இருந்து நான் ஒரு ‘நர்ஸாக’ வேலை செஞ்சு வந்து ஜானை படிக்க வச்சு, அவன் படிப்பு முடிஞ்சதும் ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்லே’ வேலைக்கு சேத்துட்டு, நான் செஞ்சி வந்த ‘நர்ஸ்’ வேலையை விட்டுட்டு வீட்டிலேயே இருந்து வறேன்.என் பையன் ஜான் மோ¢ என்கிற பெண் ணை காதலிச்சு அவளை கல்யாணம் பண்ணிக் கிட்டான்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் இருமிக் கொண்டு இருந்தாள்.

பொறுமையை இழந்த ராமநாதன் “உங்க ஆத்து கதை எல்லாம் ஏன் எங்க கிட்டே சொல்லிண்டு இருக்கேள்.உங்களுக்கு என்ன வேணும்.அதே முதல்லே சொல்லுங்கோ” என்று அவசரப் படுத்தினார்.

“சார்,அதுக்கு அப்புறமா நான் சொல்றேன்.பீட்டரை பிரசவம் பாத்த டாகடர் என் மணைவி மோ¢ க்கு நிறைய மயக்க மருத்தைக் கொடுத்ததாலே,அவ மயக்கம் தெளியாம செத்துப் போயிட்டா.அந்த துக்கத்லே நான் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்காம ஒரு சன்னியாசி போல் வாழ்ந்து கிட்டு வறேன். பீட்டர் ‘டெந்த் பாஸ்’ பண்ணின உடனே நான் வேலை செஞ்சுக் கிட்டு வந்து இருந்த வேலையை பீட்டருக்கு வாங்கிக் குடுத்துட்டு,நான் ஒரு ‘சர்ச்சி’லே சேந்து,’கர்த்தருக்கு’ சேவை பண்ணிக் கிட்டு வறேன்” என்று சொல்லி தன் கழுத்திலே தொங்கிக் கொண்டு இருந்த சிலுவையை எடுத்து கண்ணில் ஒத்திக் கொண்டார்.

ராமநாதனுக்கு பொறுமை எல்லையை மீறி விட்டது.

அவர் உடனே” நீங்க ரெண்டு பேரும் என்னவோ மாத்தி ,மாத்தி உங்க கதையை சொல்லிண்டு இருக்கேளே.நாங்க யாரும் உங்களே உங்க கதையை சொல்லுங்கோன்னு கேக்கலையே.நீங்க சொல்ல வந்த விஷயதே சீக்கிரமா சொல்லுங்கோ” என்று கொஞ்சம் உரக்கக் கத்தினார்.

சிலுவை கண்களில் ஒத்திக் கொண்ட பிறகு சிலுவையை மெதுவாக தொங்க விட்டு விட்டு “நான் இப்ப விஷயத்துக்கு வறேன் சார்.கொஞ்சம் கோவப் படாம கேளுங்க.என் பையன் பீட்டர் உங்க பொண்ணு சுதாவை மனசார காதலிக்கிறான்.உங்க பொண்ணு சுதாவும் என் பையன் பீட்டரை மன சார காதலிக்கறா.இந்த சின்ன காதலர்களை தயவு செஞ்சி பிரிச்சி வச்சிடாதீங்க.கொஞ்சம் தயவு செஞ்சி அவங்க கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் குடுங்க.என் பையன் வாழ்க்கையாவது நல்லா அமைஞ்சு,அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து கிட்டு வரட்டும்” என்று சொல்லி தன் கண் களில் வழிந்த கண்னீரைத் துடைத்துக் கொண்டார் ஜான்.

ராமநாதன் “என் பொண்ணு சந்தோஷ வாழ்க்கையை பத்தி, நீங்க ஒன்னும் கவலைப் பட வேணாம்.நானும்,அவ அம்மாவும் அதுக்கு எல்லா ஏற்பாடு பண்ணுவோம்.இதெ சொல்ல தான் நீங்க மூனு பேரும் எங்காத்துக்கு வந்தேளா.நீங்க மூனு பேரும் உடனே கிளம்பிப் போங்க” என்று அவர்க ளை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அவர்கள் அருகில் வந்து கையை காட்டி வெளீயே போகச் சொன்னார்.

ஜானுக்கும் அவன் அம்மாவுக்கும் என்று பண்ணுவது என்று தொ¢யவில்லை.இருவரும் மிகவும் பயந்து விட்டார்கள்.பயந்துக் கொண்டே எழுந்து நின்றுக் கொண்டு இருந்தார்கள்.
உடனே மங்களம்” நீங்க யாரு எங்க ஆத்துக்கு வந்து, எங்க பொண்ணோட சந்தோஷத்துக்கு வழி சொல்றது.பாக்க வயசிலே பொ¢யவாளா இருக்கேள்.உங்களுக்கே தொ¢ய வேணாமா.எங்க பொண் ணு ஒரு நல்ல ‘சிரேஷ்டமான’ குடும்பத்லே பொறந்த ஒரு பிராமணப் பொண்னு.நீங்களோ கிருஸ்தவ ஜாதியே சேந்தவா.எப்படி ஒரு பிராமணப் பொண்ணுக்கும், ஒரு கிருஸ்தவ பையனுக்கும் கல்யாணம் பண்ணி வக்கிறது.உங்க சாப்படே வேறே.எங்க சாப்பாடே வேறே.எப்படி என் பொண்ணு உங்க பைய னோட சந்தோஷமா வாழ்ந்துண்டு வர முடியும்.உங்க பையன் அவன் ஒரு பிராமண பொண்ணே காத லிக்கறேன்னு உங்க கிட்டே சொல்லலையா.சொல்லி இருந்தா,உடனே நீங்க ரெண்டு பேரும் அவன் கிட்டே ‘இந்த காதல் சரியே இல்லே.நீ ஒரு கிருஸ்தவ பொண்ணே காதலி.நாங்க அந்த பொண்ணே உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறோம்’ன்னு சொல்லாம,எங்காத்துக்கு வந்து எங்க பொண்ணே உங்க பையனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கோன்னு கேக்கறேளே.இது சரியா.நீங்களே சொல்லு ங்கோ” என்று கோவமாகக் கேட்டாள்.

”ஏன் மங்களம் அதெல்லாம் அவா கிட்டே சொல்லிண்டு இருக்கே.அவாளுக்கு அவா பையன் ஒரு பிராமண பொண்ணே காலிக்கறேன்னு சொன்னா என்ன,சொல்லாட்டா என்ன.நீங்க மூனு பேரும் உடனே எழுந்து வெளியே போங்க” என்று மறுபடியும் கத்தினார் ராமநாதன்.

ஜானுக்கும் அவன் அம்மாவுக்கும் ரொம்ப அவமானமாக இருந்தது.இருந்தாலும் பீட்டா¢ன் சந்தோஷத்துக்காக பொறுத்துக் கொண்டு இருந்தார்கள்.

பீட்டர் எழுந்து நின்றுக் கொண்டு “சார்,எனக்கு சுதாவை பள்ளிக் கூடத்லே படிக்கும் போது இருந்தே நல்லா தொ¢யும்.நானும் சுதாவும் பள்ளிகூடம் படிக்கிற நாள்ளே ஒன்னா ‘காபி’ சாப்பிட்டு வந்து இருக்கோம்.நான் ஒரு கிருஸ்தவ ஜாதியிலே பொறந்து இருந்தாலும்,நானும் உங்களே போலத் தான் காய்கறிகள் சாப்பிட்டு கிட்டு வறேன்.நான் ‘நான் வெஜ்’ சாப்பாடே இது நாள் வரைக்கும் சாப்பி ட்டதே இல்லே.இந்த விஷயம் சுதாவுக்கு நல்லா தொ¢யும்…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சுதா ஓடி வந்து “ஆமாம்மா,இதை இவர் ஒரு நாள் ‘காபி’ சாப்பிடும் போது எனக்கு சொல்லி இருக்கார்” என்று சொன்னாள்.

உடனே மங்களம் கோவம் வந்தவளாக” சுதா,உனக்கு பியித்தியமா பிடிச்சு இருக்கு.அவன் ‘நான் காய்கறி தான் பொறந்ததில் இருந்து சாப்பிட்டு வறேன்.’நான் வெஜ் சாப்பிட றதே இல்லே’ன்னு சொன்னா,உடனே உன்னே அவனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்தறதா என்ன.அவன் என்ன நம்ம ஜாதிப் பையனா.அவன் கிருஸ்தவ ஜாதியே சேந்தவன்.என்னமோ நீயும் அவன் பள்ளிக் கூடத்லே உன் கிட்டே சொன்னதே முடியாம சொல்லிண்டு வந்து இங்கே நிக்கறே.உள்ளே போ” என்று சொல்லி சுதாவை தூர தள்ளினான்.

ஏற்கெனவே வீக்காக இருந்து சுதா மங்களம் பிடித்து தள்ளினதில் கீழே விழுந்து விட்டாள்.

உடனே பீட்டர் ஓடி வந்து சுதாவை மெல்ல தூக்கி உட்கார வைத்தான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ராமசாமியும் விமலாவும்.

அவர்களுக்கு வந்தவர்கள் பேசினது,பிள்ளை ராமநாதன் பேசினது,மங்களம் பேசினது,அப்பு றமா சுதா பேசினது, ஒன்றும் பிடிக்கவில்லை.

இப்போது பீட்டர் சுதாவை தூக்கி உட்கார வைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் ராம சாமிக்கு கோவம் வந்தது.

அவர் உடனே “இது என்னடா கஷ்டம்.நம்மாத்லே எதுக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் வர ணும்.சுதா ஒரு நல்ல பிராமண பொண்ணா இருந்து வரக் கூடாதோ.என்ன வேண்டி இருக்கு இந்த ’காதல்’‘கத்திரிக்கா’,இந்த கூத்து எல்லாம்” என்று கத்தினார்.

கொஞ்ச நேரம் கழித்து பீட்டர் சுதாவை மெல்ல கீழே விட்டு விட்டு “சார்,நான் உங்க பொண் ணே காலம் பூராவும் கண் கலங்காம வச்சுக் கிட்டு வருவேன்.என்னை கொஞ்சம் நம்புங்க சார்” என்று சொல்லி ராமநாதன் காலைப் பிடிக்கப் போனான்.

ராமநாதன் தன் காலை பின்னுக்கு இழுத்துக் கொண்டு “நீ என்ன சொன்னாலும் நான் கேக்கப் போறது இல்லே.நாங்க ஒரு கிருஸ்தவ பையனுக்கு எங்க பொண்ணை ஒரு காலம் கல்யாணம் பண்ணி க் குடுக்க மாட்டோம்.இது நடக்காத காரியம்.நீங்க மூனு பேரும் உடனே கிளம்பிப் போகலாம்” என்று மறுபடியும் கத்தினார்.

மூன்று பேரும் என்ன செய்வது என்று தொ¢யாமல் தவித்தார்கள்.

உடனே ரோஸி “வா பீட்டர்,இப்படி நம்மை மூனு பேரையும் உதாசீனம் பண்ற ஒரு குடும்பத்லே இருக்கிற பொண்ணை நீ கல்யாணமே கட்டிக்க வேணாம்.போகலாம் வா” என்று சொல்லி பீட்டரை அழைத்தாள்.

”இல்லே ஆயா.நான் கல்யாணம் கட்டிக் கிட்டா சுதாவைத் தான் கல்யாணம் கட்டிக்கப் போ றேன்.அப்படி அவங்க சுதாவை எனக்கு கல்யாணம் கட்டி குடுக்காம இருந்தா,அந்த ஏக்கத்லே நான் தற்கொலை பண்ணி கிடப் போறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “அவசரப் படாதேள்.நீங்கோ தற்கொலை எல்லாம் பண்ணிக்காம இருங்கோ.நான் எப்படியாவது இவா கிட்ட நம்ம காத லை சொல்லி கல்யாணத்துக்கு ‘பர்மிஷன்’ வாங்கிண்டு, உங்களே நிச்சியமா கல்யாணம் பண்ணிக்கறேன்.நம்ம கல்யாணத்தே இவா யாராலேயும் தடுக்க முடியாது.அது வரைக்கும் நீங்கோ பொறுமையா இருந்துண்டு வாங்கோ.அவசரப் பட்டு ஒன்னும் பண்ணிக்காதேள்” என்று சுதா மெல்லிய குரலில் கெஞ்சினாள்.சுதா சொன்னத்தை கேட்டு பீட்டர் மிகவும் சந்தோஷப் பட்டு “ சரி,சுதா.நான் ஒன்னும் பண்ணிக்க மாட்டேன்.நீ கவலைப்படாம இருந்து வா”என்று சொல்லி சுதாவுக்கு உறுதி அளித்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *