ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று முதல் நாள் கல்லூரி.
‘’அம்மா போய்ட்டு வரேன்’’ ,என்று சொல்லி எழுதாத புதுநோட் மட்டும் எடுத்துச் சென்றான்..
“டேய் நில்லுடா”……………. அம்மா வாசலில் வந்து திருநீறுயை தலையில் வைத்து விட்டு, “நல்லா படிக்கணும் அப்பா உன்ன வேலைக்கு தா போக்ச் சொன்னாறு, நா தா அவரச் சமாளிச்சு உன்ன அனுப்பி வைக்கிறேன். ஜாக்கரத, யார் வம்புதும்புக்கும் போகாத செரியா”.
‘’அம்மா போதும்மா இப்படியே பேசுன, காலேஜ்யே முடிஞ்சுறும், பாய் மா” என்று சொல்லி கிளம்பிறான்.
பஸ் ஏறுகிறான்.. அவன் ஏறன அடுத்த ஸ்டாப்த் தள்ளி இன்னொருவன் ஏறிகிறான். அவன் ஆர்ட்ஸ் காலேஜ் 1 தாங்கன்னுச் சொல்லி டிக்கட் வாங்குகிறான். வளவன் இதை கவனித்துக்கொண்டு, ‘’ஓ அப்போ, இவனும் அந்த காலேஜ் தா போல! ஆன சீனியார இருக்குமோ பேசலாமா! வேண்டாமா’’? என்ற யோசித்தப்படியே அமைதியாக இருக்கிறான்.
அவன் அருகில் இருந்த பெரியவர் எந்திரித்ததும் அவனுக்கு டீட் கிடைத்தது. வளவன் பதற்றத்தோடு பேசலாமா! வேண்டாமா? பேசலாமா! வேண்டாமா? என்று குழம்பியப்படி!!!
வளவன், “அண்ணா நீங்க எந்த காலெஜ்”?
அவன், “ஆர்ட்ஸ். நீங்க’’?
வளவன், “நானும் அதே காலேஜ். எந்த இயர் நீங்க?
அவன்,”நா 1ஸ்ட் இயர் தாங்க”
வளவன், “ஓ அப்பா நானும் தாங்க. எந்த குருப்”?
அவன், “பி.ஏ.தமிழ்”
வளவன், “ஐய்யோ நானும் அதாங்க சூப்பர்ங்க, கேட்க மறந்துட்டே உங்க பேர்”?
அவன், “பாரி”
வளவன், “என் பேரு வளவன்”
(இப்படியே பேசிக்கொண்டு அவங்க கல்லூரியை வந்தடைகிறார்கள்.)
கல்லூரி வாசல் வருகிறார்கள். முதல் அடி அப்படியே வலதுகால் வைத்து வாராங்க அப்போ திடீரென்று ஒரு சத்தம்………………….???!!!!
வளவனும், பாரியும் பயந்துவிடுகிறார்கள்.!!
கல்லூரி பெல் அது ..
உடனே அவங்க அலஞ்சு, வகுப்பைக் கண்டுப்பிடித்து போறாங்க. வளவனும் பாரியும் உள்ளே நடந்து வருகிறார்கள் அப்போ அங்க சில பெண்கள் நடுவில்,
நீல நிறம் சுடிதார் அவன் கண்ணில் பட்டு சென்றது. தேவதையை முதலில் நேரில் பார்த்தது போல, ஒரு மாயை காதல் பாடல் வரிகள் முனுமுனுக்க அள்ளி அதுவா வருகிறது. அவன் இங்கு இல்லாமல் எங்கோ சென்று விட்டான். எங்கோ பார்த்து மாறியும் இருக்கு பாக்காத மாறியும் இருக்கு அதற்குள் அவன் கண்னை விட்டு மறைய இருவரும் பெஞ்சில் அமர்ந்தன.
“ எனக்கு பித்து பிடித்தது போல இருக்க டா” என்று பாரி வளவனிடம் கூற,
இவையெல்லாம் பாரிக்கு நடந்தது.
ஆசிரியர் வருகிறார்.( அமைதி நிலவுகிறது).
தங்களை அறிமுகம் செய்து, தங்கள் திறமையும் காட்டச் சொல்கிறார். உடனே எல்லோரும் கவிதை, பேச்சு, பாடல் என பலவற்றை செய்யதனர்.
ஆனால் இவையாவும் கவனிக்காது அமர்ந்துருந்தான் பாரி. பிரம்ம புடிச்சதுபோல அந்த நீலநிறம் அவன் மனதை உறுத்தியது. அவன் அவள் பின்அழகையேப் பார்த்துக்கொண்டு இருந்தான் பார்ப்பாளா? மாட்டாளா? என்று இவன் கண் அவளை நோக்கியே இருந்தது.
அவன் நேரம் வந்தது… வளவன், “டேய் பாரி எந்திரின்னு” சொல்லி அவனை அனுப்பிகிறான். அவன் அவளைப் பார்த்தபடியே செல்கிறான். அங்கு அவன் அவள் கண்களைப் பார்த்து,,,
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”
என்று சொல்கிறான்.
அவளுக்கும் தெரியும் இவன், தனக்கு தான் இதை சொல்கிறான்.
தன்னை இவ்வளவு நேரம் ரசித்ததும் இவன் தான் என்று!!! புன்னகையுடன் தலைகுனிகிறாள்.
கரு: கல்லூரி முதல் நாட்களில் தற்போது நடைமுறையில் நடைபெறும் சம்பவம் தான். வளவனுக்கு அறிமுக நட்பும், பாரிக்கு முதல் காதலும்..