சந்திரவதனா செல்வகுமாரன்

 

சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு.ச.தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகள் பெற்றெடுத்த எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி யில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். 1986லிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
எழுத்துலக வாழ்வு

1975லிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவரது மனஓசை வலைப்பதிவு இவரின் சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளின் வெளிப்பாடாக விரிந்து கிடக்குமொரு தளம். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி நிற்பன இவரது ஆக்கங்கள்.

இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில் ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து மாதஇதழ், செம்பருத்தி (சஞ்சிகை), யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்), திண்ணை (இணைய இதழ்), அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன.

இணைய இதழ்கள்

2002 இல் இவர் ஆரம்பித்த மனஓசை இணையஇதழும், 2003 இல் இவர் ஆரம்பித்த மனஓசை வலைப்பூவும்(வலைப்பதிவு), பெண்கள் வலைப்பதிவும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வெளிவந்த நூல்கள்

மனஓசை சிறுகதைத் தொகுப்பு (ஆவணி 2007)

பதிப்பித்த நூல்கள்

தீட்சண்யம் – (கவிதைத்தொகுப்பு, 2009)
தொப்புள் கொடி – (நாவல், 2009)

வெளி இணைப்புகள்

1 thought on “சந்திரவதனா செல்வகுமாரன்

  1. வணக்கம்.
    தங்களை பற்றி இணையம் வழி அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி. நான் சிறுவருக்காக ௧௧ நூல்கள் ஏழுதி உள்ளேன். உங்க மெயில் தர இயலுமா.

    நன்றி

    கன்னிக்கோவில் ராஜா, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *