ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 5,956 
 
 

ஓநாய் வானத்தைப் பார்த்து ஊளையிட்டபோது நிலவு மேற்கு வானில் சரியத்தொடங்கியிருந்தது. போதை மயக்கத்தில் நிலவு ஓநாயின் கண்களுக்கு பல பிளவுகளுடன் ஒடிந்து தெரிந்தது. கன்னா பின்னா என்று ஊளையிட்டதில் அதற்கு தொண்டை வறண்டு போயிற்று.நீர் அருந்தாவிட்டால் தொண்டைக்குழியில் புண் வந்துவிடும் என்ற பயம் உண்டாகியதால் ஆற்றைப் பார்த்து போனது ஓனாய்.குளிர்ந்த தண்ணிரை முடரிட்டு குடித்து தாகம் அடங்க விரும்பி குணிந்த போது நீரில் விழுந்த விம்மம் ஓநாயின் கோரக் கண்களுக்கு விருந்தாக இருந்தது.

அழகிய ஆட்டுகுட்டி ……நீரில் முகம் புதைப்பதும் பின் தலையை அசைத்து நீர்த்திவலைகளை உதிர்த்து அதனை இரசிப்பதாகவும் விளையாடிகொடிருந்தது.

“ஏ ஆட்டுக்குட்டியே …!.நான் குடிக்கிற தண்ணியை ஏன் அழுக்காக்குகிறாய்?”…குழறலாய் பிசிருதட்டிய குரலுடன் இப்படி கத்திக் கேட்டது ஓநாய்.

இத்தனை நேரமும் ம்கிழ்ச்சியாக விளையாடிய ஆட்டுக்குட்டியைப் பயம் கௌவிக்கொண்டது,பற்கள் கிடுகிடுப்பதை மறைத்துக்கொண்டு அது ஓநாய்க்குப் பதில் சொல்லலாயிற்று.

“ஓநாயாரே,,,! நீர் குடித்தபின்னரே ஆற்றுத்தண்ணீர் என்னிடம் வருகிறது. நான் எப்படி உமது தண்ணீரை அழுக்காக்க முடியும்…? “

“ஆனால் நீ ஆறுமாதங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூராகப் பேசினாயே. அதற்று என்ன சொல்கிறாய்…” என்றது ஓநாய் குரூரமாய்ச் சிரித்தபடி.

“ஒநாயாரே ஆறு மாதஙளுகு முன்னர் நான் பிறக்கக் கூட இல்லை எவ்வாறு நான் உம்மைப்பற்றிப் பேசியிருக்க முடியும்.?”

“அப்படியாயின் உனது தந்தை என்னைப்பற்றி கீழாகப் பேசியதாக உன் மாமன் என்னிடம் சொன்னானே …என்ன மறந்து விட்டதா?. “

போன மாதம் ஆட்டுக்குட்டியின் மாமன் மலைமுகட்டில் இருந்த வெளியில் புல் மேய்ந்து கொண்டிருந்தது . அப்பொழுது ஓநாய் அங்கு வரவே பதறியடித்துக் கத்தியபடி அங்கிருந்து தப்பி ஓடியது. அந்தப்புல் வெளியில் வேறொரு பக்கத்தில் மேய்ந்து கொடிருந்த ஆட்டுக்குட்டியின் தந்தையே ஓநாயிடம் மாட்டிக்கொண்டது. மாமன் கத்தியதைச் சாக்காக வைத்து குட்டியின் தந்தையின் கழுத்தைக் கிழித்து அதனை உண்டது

ஓநாய். இந்தக் கோரச் சம்பவத்தை நினைத்தபோது ஆட்டுக் குட்டியின் ஈரக் குலை நடுங்கியது.

உண்மையைச் சொல்லி வாதாடும் துணிவு ஆட்டுக்குட்டிக்கு இல்லை .

“அதற்கான தண்டனையை நீர் எனது தந்தைக்கு வழங்கிவிட்டீரே…”என்று முணுமுணூத்தது, ஆட்டுக்குட்டி,

“அது சரி உனது முன்னோர்கள் எங்களை அழிக்கும்படி சாமியிடம் வேண்டிப் பூசை செய்தார்களாமே” என்று கூறியவாறு முன்னேறிவந்தது ஓநாய்.

ஓநாய் தன்னைக் கொல்லவதற்குக் காரணத்தை மட்டும் தேடுவது ஆட்டுக்குட்டிக்குப் புரிந்தது.

குட்டி அலமந்து வெருண்டோட முற்பட்டது.

சாரமற்ற காரணங்களை வாய் பிதற்ற காரியத்தில் கண்ணானது ஓநாய். ஓநாயின் காரணங்கள் பிரமாணமாய் வேதாகமத்தில் எழுத்துருப் பெறலாயின.ஆட்டுக்குட்டி பாவிகள் வரிசையில் வைக்கப்பட்டது.

– கிரேக்கமொழி மூலத்தின் (கி மு 15ஆம் ஆண்டு) தழுவல்

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *