கல்லூரி காலங்களில் உருகி உருகி காதலித்த வெள்ளை தேவதை மஞ்சுளாவை மீண்டும் தன் மனைவி கமலாவின் ஆபீசில் சக தோழியாக பார்த்தபோது வார்தையற்று திகைத்து நின்றான் ரமேஷ்.

மஞ்சுளாவின் ஈரம் படிந்த கண்களின் ஏக்கமும் காந்தமும் மின்னல் பொழுதில் அவரகளது கடந்த கால காதல் வாழ்க்கையை மீட்டு எடுத்தது.
இருவர் இடையே மீண்டும் ஒரு கதகதப்பும் இனம் புரியாத காதல் எனர்ஜியும் காம பட்டாம்பூச்சியாக சிலிர்த்து எழுந்தது.
ஆபீசில் வரவேற்பாளராக பணி புரிந்த கமலாவிற்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நோயால் தம்பதிக்கு இடையே விழுந்த இடைவெளி இன்னும் சற்று விரிந்தது.
ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது என்று முடிவெடுத்து கமலாவை கொலை செய்துவிடும்படி பேட்டை ரவுடி கபாலியிடம் அட்வான்ஸ் கொடுத்து ஆபீஸ் வாசலில் அமர்ந்து இருக்கும் கமலாவை சுட்டு விடும் படி ஏற்பாடும் செய்து விட்டான் ரமேஷ்.
கொலையுதிர் நாளும் வந்தது.
“பெண் பாவம் பொல்லாதது” என்பதால் கபாலி மூச்சு முட்டக் குடித்துவிட்டு கமலாவின் ஆபீஸ் வந்து தள்ளாடியபடி கமலாவை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பினான்.
எதிர்பார்த்தது போலவே சற்று நேரம் கழித்து ரமேஷ் போன் ஒலித்தது.”எங்கள் ஆபீசில் கொலை” என்று பெண் குரல் அலறியது! பாத்ரூம் வந்ததால் என் சீட்டில் மஞ்சுளாவை அமரச் செய்துவிட்டு டாய்லெட் சென்றேன் என்று அலறியது கமலாவின் குரல்!
My heartiest thanks and gratitude for publishing my story for the first time! After having worked in several countries and several states of India, for nearly 45 years, the experience I had acquired in observing countless human beings motivates me to become a writer!