வெளவால் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 56,630 
 
 

சில ஆண்டுகள் டிவி காட்சிகளில் தனது வீர, தீர செயல்களால் சிறுவர்களினதும் வயது வந்தவர்கனினதும் பாராட்டைப் பெற்ற வெளவால் மனிதன் ஹரி நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தான் .

ஒரே மக்கள் கூட்டத்தின் குரல்கள் “ஒழிப்போம் ஒழிப்போம் வெளவால்களை ஒழிப்போம் . கொரோனா வைரசை எமக்கு தந்த வெளவால்களை ஒழிப்போம், நிறுத்துவோம் நிறுத்துவோம் . வெளவால்களை நாம் உண்பதை நிறுத்துவோம்”

முகமூடியையும் ஆடையையும் களையாமல் படுத்த வெளவால் மனிதன் ஹரியை வெளவால் மனிதனின் தாய் லூசி எழுப்பினாள்.

“தம்பி எழும்படா எழும்படா எங்கள் இனம் அழியப்போகுது இந்த மனித இனம் எம் இனத்தை சுவைத்து உண்டு விட்டு, இப்போ கொரோனா வைரசை உருவாக்கியது எம் இனம் என்று எம்மேல் குற்றம் சாட்டுகிறது”.

“எம்மை பாராட்டியவர்கள் என் திடீர் என்று இப்படி மாறி விட்டார்கள் அம்மா “

“ஆமாடா தம்பி நீ வெளவால் மனிதனாக நடித்து பல உயிர்களை காப்பாற்றியவன் என்று உன்னை பாராட்டியவர்ககள் ஏராளம் . உன் உடை போன்ற உடைளை அதிக விலை கொடுத்து கடையில் வாங்கி , அணிந்து, உன்னைப் போல் நடித்தவர்கள் இந்த மனிதர்கள். எங்கள் இனத்தை சுட்டு உண்டார்கள். இப்போ எங்கிருந்தோ வந்த கொரோனாவைரஸ் எங்கள் உடம்பில் இருந்து வந்தது என்றும் ,எங்கள் இனத்தின் மேல் நாங்கள் பயங்கர வாதிகள் என்று எம்மேல் குற்றம் “ அதியன் சாட்டுகிறார்கள் இந்த மனிதர்கள் “.

“ அதேன் அம்மா எங்கள் இனத்தை இந்த தேசத்தில் வெறுக்க ஆரம்பித்தனர் “?

:”உனக்குத் தெரியுமா தம்பி சீனாவில், வெளவால்கள் பாரம்பரியமாக நல்ல அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப் பட்ட இனம் என்று . தாம் மகிழ்ச்சியாக இருக்க எம்மை உண்டார்கள் .உலகளவில் எம் இனத்தில் 1400 க்கும் மேற்பட்ட இனம் உண்டு , துரதிர்ஷ்டவசமாக, (COVID-19) என்ற கொரோனா வைரஸ் நோய் எம் இனத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற ஆதராம் அற்ற வதந்திகள் இலங்கையில் அரசியல் காரணத்துக்கு தோன்றிய வததிகள் போலடா தம்பி., அதுவல்லாமல் COVID-19 பரவியதால், சீனாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் அல்லது அதற்கு அருகில் உறங்கும் வௌவால்களை வெளியேற்றுமாறு கோரத் தொடங்கியுள்ளனர்

“ அம்மா எமது இனம் சுற்றுச்சூழல் அமைப்புக்கு பல முக்கியமான உதவிகளை வழங்குகின்றன. நாங்கள் உயிரியல் மற்றும் பொருளாதார-பூச்சிக்கொல்லிகள் . அதோடு பல முக்கியமான தாவரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை மற்றும் விதை பரவலுக்கு உதவுகிறோம் ஆரோக்கியமான வயதான எம்மை , புற்றுநோய் தடுப்பு, நோய் பாதுகாப்பு, பயோமிமடிக் பொறியியல், சுற்றுச்சூழல் அமைப்பு செயல்பாடு மற்றும் தகவமைப்பு பரிணாமம் பற்றிய ஆய்வுகளுக்கும் பாவிக்கிறாரகள் . எமக்கு பறக்கும் மனிதன் போன்ற தோற்றம் பார்வை உள்ளது . மனிதனை மனிதன் உண்டது போல் எம்மை சுட்டு திண்டார்கள் அது யார் குற்றம் எம் குற்றம் அல்லவே வெளவால்கள் பற்றிய எதிர்மறையான தாக்கங்கள் கொண்டு வதந்திகளை நம்பி வாழும் மனிதர்களுக்கு பொது அறிவியல் கல்வி அவசியம் தேவை . அது அவர்களின் பாதுகாப்பிற்கு அவசியமானது. அதோடு இன்றியமையாதது.” வெளவால் மனிதன் ஹரி சொன்னான்.

“ தம்பி நாங்கள் குட்டி போட்டு பால்கொடுப்பதால் , எம்மை பறவை இனத்தில் சேர்க்க முடியாது. மேலும் பாலூட்டிகளின் காதுமடல் வெளிப்புறத்தில் இருக்கும் இந்த பண்பும் நாங்கள் பாலூட்டிகள் என்பதை நிரூபிக்கிறது.

எங்களுக்கு மனிதனை போல் கண் உண்டு. இருந்தாலும் எங்களுகு கண் பார்வைத்திறன் தேவையில்லை. நாங்கள் “சவுண்டு ரேஞ்சிங்” என்ற ஒலி அலை முறையை பாவித்து இருளில் மோதிக் கொள்ளாமல் எம் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறோம் . இதற்கு அல்ட்ரா சவுண்ட் ( Ultra Sound) என்ற ஒலி அலைகள் உதவுகின்றன. மனி தர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை மட்டுமே உணர முடியும். அல்ட்ராசவுண்ட் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மீயொலி சாதனங்கள் பொருட்களைக் கண்டறிந்து தூரத்தை அளவிடப் பயன்படுகின்றன. அல்ட்ராசவுண்ட் இமேஜிங் (Ultra sound imaging )அல்லது சோனோகிராபி ( Sonograph)yபெரும்பாலும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புகள் மற்றும் கட்டமைப்புகளின் சோதனையற்ற சோதனையில், கண்ணுக்குத் தெரியாத குறைபாடுகளைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை ரீதியாக, அல்ட்ராசவுண்ட் ரசாயன செயல்முறைகளை சுத்தம் செய்ய, கலக்க மற்றும் துரிதப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

எமது தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஹெர்ட்ஸ் அளவில் ஒலி உண்டாகிறது. இது எமக்கு கடவுள் தந்த கொடை தம்பி . இதை மனிதன் பிரதி எடுத்து தனது மருத்துவ பாவனனைக்கு பாவிக்கிறான் என்னிடம் இருந்து பல பயன்களை பெற்றுக் கொண்டு இப்போ எங்கள் இனத்தை இந்த உலகில் இல்லாமல் அழிக்கப் பார்க்கிறான் . இதில் எதோ ஒரு சர்வதேச அரசியல் கலந்து இருக்குதடா தம்பி “

“ஏன் அம்மா அப்படி சொல்கிறீர்கள் “

” எடேய் தம்பி எங்கள் இனம் உலகம் பூராவும் வாழ்கிறது . அதேன் சீனாவில் இந்த வைரஸ் ஆரம்பித்தது?. அவர்கள் பாம்பு .தவளை , குரங்கு.. பூனை. நாய் என்று கண்டதும் கடையதும் உண்பது உண்மை அதனால் வேறு விலக்குகளில் இருந்தும் ஏன் இந்த வைரஸ் தோன்றி இருக்க கூடாது. இலங்கையில் காட்டுக்கு துவக்கோடு போய் எம்மை புறா. மான் . காட்டுப் பன்றி, உடும்பு போன்றவற்றை சுடுவது போல் சுட்டுக் கொண்டு வந்து சாப்பிடுவதை பற்றி கேள்வி பட்டிருக்கிறன் . அது பொருளாதரம் பின் தங்கிய தேசங்களுக்கும் பொருளதாரம் விருத்தி அடைந்த மேற்கத்திய நாடுகளுக்கும் அந்த கொரோனா வைரஸ் பரவி இருக்கு தம்பி” வெளவால் மனிதனின் அம்மா சொன்னாள்

“ இப்ப புரியுது அம்மா. இது சிக்கலான சர்வதேச அரசியல் பனிப் போர் என்று . அமெரிக்கஜனாதிபதி சொல்லுகிறார் இது சீன வைரஸ் என்று . ஒருத்கரும் இது வரை வௌவால் வைரஸ் என்று சொல்லவில்லை . சர்வதேச அரசியளலுக்கும் இந்த வைரசுக்கும் ஒரு தொடர்பு அவசியம் இருக்க வேண்டும். பல தேசங்களின்பொருளாதாரத்தையும். மக்களின் உயிர்களை வெகுவாக பாதித்து விட்டது இந்த கொரோனா வைரஸ் . இந்த வைரஸ் ஒரு உயிரியல் ஆயுதமாக உரு எடுத்துள்ளது என நான் நினைக்கிறேன் இது ஆணு ஆயுதத்தை விட மோசமானது இதன் இரகசியத்தை நான் கண்டு பிடித்து உலகை அழிவில் இருந்து காப்பாற்றுகிறேன் அம்மா . உன் ஆசி எனக்குத் தேவை” என்று கூறிய படியே .. தாயின் காலில் விழுந்துஆசி பெற்ற பின் வெளவால் மனிதன் ஹரி புது ஆடை ஆணிந்து புலனாய்வுக்கு புறப்பட்டான்.

*****

வெளவால் மனிதன் ஹரி முதலில் குறி வைத்து சென்றது சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் துறைமுக நகரமான வூஹானுக்கு

பாதிக்கப்பட்டவர்களில் பலர் நகரத்தின் ஹுவானன் கடல் உணவு மொத்த சந்தையில் வேலை செய்தனர், செய்திகளின் படி இங்கு வேலை செய்த ஒருவரில் கொரோனா நோய் ஆரம்பித்தது இந்த சந்தை ஜனவரி 1 ஆம் தேதி மூடப்பட்டது. வெளவால் மனிதன் பறந்து சென்று பல கட்டிடங்ளை பார்த்தா ன் . எல்லா கட்டிடங்களும் ஒரு கட்டிடத்தை தவிர மூடி இருந்தன. அந்த கட்டிடத்தில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அந்த கட்டிடத்தின் சிறு ஓட்டை வழியே அந்த பெரிய அறைக்குள் சத்தம் போடாமல் உள்ளே போக வௌவால் மனிதன் ஹரியால் முடிந்தது அது ஒரு உயிரியல ஆராய்ச்சி கூடம் என்று அறிய அவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. கூட்டுக்குகள் சுண்டெலிகள். பன்றி குட்டிகள், பாப்புகள,, பூனை, நாய் , குரங்குகள் இருந்தன வௌவால்கள் இருந்தன நான்கு விஞ்சானிகள் உடல் முழுவதும் பிற கிரகவாசிகள் போன்ற தொற்றதில் ஆடை அணிந்து ஆராச்சியில் ஈடுபட் டு. கொண்டிருந்தனர் அப்போது ஹரி கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்து. மூன்று வௌவால்களை வைத்து பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர் அவர்கள் பேசியது குறியிடப் பட்ட சீன மொழி ( coded chinese language) வெளவால் மனிதனுக்கு அது தெரியும், அவன உலகத்தில் பல நாடுகளுக்கு பறந்து சென்று வந்தவன் .

அவர்களின் பேசியது “ நாம் கண்டு பிடித்த இந்த உயிரியல் ஆயுதம் மிகவும் சக்தி வாய்ந்து . கண்ணுக்குக் தெரியாது. ஆணு ஆயுதத்தை விட திறமை உள்ளது இனி பல தேசங்கள் எமது சீன தேசத்தை நம்பி வாழவேண்டும் . இந்த உயிரியல் ஆயுதத்தை பாவித்து முழு உலக நாடுகளயும் எமக்கு கீழ் விரைவில் கொண்டு வரலாம் . இதுக்கு தடுப்பு மருந்து எங்களிடம்உண்டு. இந்த கொரோன வைரசை தடுக்கு மருந்தை எமது தேசம் மட்டுமே உற்பத்தி செய்யும் . பக்டோரிகள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன இதெல்லம் உயர் மட்டத்தில் இருந்து வந்த கடளை படியே செய்கிறோம்”

அவர்களின் பேச்சினை தனது செல்பியில் பதிவு செய்து அங்கு நிற்காமல்

அறைக்கு வெளியே பறந்து சென்றான் ஹரி . தாயிடம் வௌவால் மனிதன் நடந்ததை சொல்லி அந்த பதிவு உரை யாடலை போட்டுக் காட்டினான்

“அட பாவிகளா. இந்த ஆயுதத்தை பாவித்து உலகையே ஆக்கிரமிக்க பாக்கிறீர்களா . உண்மையில் நீங்கள் தான் பயங்கரவாதிகள் . தம்பி இது வட்ஸ் அப்பிளும், முக நூல் . இன்போக்ராம் ஆகியவற்றில் விளம்பரம். செய். ஊடகங்களுக்கு செய்தியை கொடு உலகத்தை காப்பாற்று “ என்றாள் தாய் .

(யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *