தங்கச் சிறு கோள்16 Psyche

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 58,715 
 

“தங்கத்திலே குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ,,,” என்பது போல் இந்த விலை உயர்ந்த உலோகத்தை உலகம் பூராவும் தேடி அலைகிறார்கள் செல்வந்தர்களும் இந்திய பெண்களும் . தங்கச்சுரங்கம் தொண்டி தங்கம் கிடைப்பதுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். சுமார் இருபது வெவ்வேறு தங்க தாதுக்கள் இருந்தாலும், அவை அனைத்தும் மிகவும் அரிதானவை. எனவே, இயற்கையில் காணப்படும் பெரும்பாலான தங்கம் பூர்வீக உலோக வடிவத்தில் உள்ளது. நதிக்கரை ஓரம். மலைகள். திறந்த வெளி போன்ற இடங்களில் கருவிகளை பாவித்து தங்க தாதுக்கள் இருக்கிறதா என்று முதலில் அகழ்வாராச்சி செய்து உர்ஜிதம் செய்த பின்னரே சுரங்கத்தை தோண்ட ஆரம்பிக்கிறார்கள். தேடுவதுக்கு ஒரு காலத்தில் விலை மிக்க மனித வளம் பாவிக்கப் பட்ட காலம் மாறி இப்பொது சுரங்க ரோபோக்கள் பாவிக்கப் படுகிறது . அகழ்வாராய்ச்சிக்கு உதவும் ரோபோக்களிலிருந்து, வாயுக்கள் மற்றும் பிற பொருட்களைக் கண்டறியும் கேமரா அமைப்புகளைக் கொண்ட ரோபோ சாதனங்கள் வரை மாறுபடும். மிக முக்கியமாக, சுரங்க ரோபோக்கள் மனிதர்களை தீங்கு விளைவிக்காமல் இருக்க பயன்படுத்தலாம். கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பற்ற பிற சுரங்க மைதானங்களை ஸ்கேன் செய்யும் போது இது அவசியம் தேவை .

இந்த ரோபோக்களை தயாரிப்பதில் பிரபல்யமான கனேடிய நிறுவனம் டால்டன் அண்ட் கம்பனி . இதன் உரிமையாளர் டால்டன் பிறந்தது ஸ்காட்லான்ட் .இவரின் தந்தை ஸ்மித் தங்கம், வைரம் ஆகியவற்றை தென் ஆபிரிக்காவில் தேடி அலைந்தவர் . அவரிடம் இருந்து சுரங்கம் தொண்டும் கலையை அவரின் மகன் டால்டன் கற்றவர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஸ்மித் குடும்பத்தோடு புலம் பெயர்ந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ ஆரம்பித்தார் .

****

தங்கம் முதன் முதலில் கனடாவில் 1823 ஆம் ஆண்டில் கிழக்கு கியூபெக்கில் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் 1850 களில், குறிப்பாக 1858 ஆம் ஆண்டில் ஃப்ரேசர் நதி கோல்ட் ரஷ், அல்லது கரிபூ கோல்ட் ரஷ் என்றும் அறியப்பட்டது

கனடாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய புவியியல் பகுதி 570 மில்லியன் ஆண்டுகள் முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கனடாவின் தங்கச் சுரங்கங்களில் பெரும்பாலானவை குறிப்பாக ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ளன. ஆகவே ஸ்மித் தன் மகன் டால்டன் பெயரில் ஒரூ நிறுவனத்தைஉருவாக்கி தனது தங்க தேடலை கனடாவில் தொடர்ந்தார் . அவரின் மறைவுக்குப் பின் தொழில் நுட்பத்தில் ஆர்வம் உள்ள ஸ்மித்தின் மகன் டால்டன் தனது நிறுவனத்தில் ஹார்ட்கோர் ரோபோ பயிற்சிகளையும் அகழ்வாராய்ச்சி முறைகளையும் உருவாக்கி மற்றவர்களுக்கு விண்வெளியில் பயன்படுத்தவிற்றார் . அவரின் நண்பர் ரோபேர்ட் என்பவர் நாசாவில் வேலை செய்பவர் . அவர் கனடா வந்திருந்த போது டால்டனிடம் “தங்க சிறுகோள்” (16 Psyche )பற்றி சொன்னார்

“ரோஇபேர்ட் விண் வெளியில் தங்க கோள் என்கிறாயே . என்னால் நம்ப முடியவில் . நீ ஒரு வான்வெளி விஞ்ஞானி இங்கு அந்த கோள் பற்றி விபரம் தேவை , சொல்ல முடியுமா .

“ எனக்கு தெரியும் உன் மறைந்த தந்தைக்கும் உனக்கும் தங்கத்தின் மீள் உள்ள ஆசை இன்னும் போகவில்லை என்று .

செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய சிறுகோள் பெல்ட்டில் சூரியனைச் சுற்றிவரும் உலோக விண்வெளிப் பாறை(16 Psyche )யைப் பார்வையிட ஒரு பணிக்கு நாசா சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. எதிர்கால விண்வெளி சுரங்கத் தொழிலுக்கு களம் அமைக்கும் அதே வேளையில், நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப நாட்களைப் பற்றிய இரகசியங்களை இந்த உலோக சிறுகோள் முதல் வெளிப்படுத்தலாம். மாசசூசெட்ஸ் அளவிலான சிறுகோள்(16 Psyche ) விலை மதிப்பற்ற உலோகங்கள் நிறைந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து சிறுகோள் 16 சைக்கின் தூரம் தற்போது 525,604,199 கிலோமீட்டர் ஆகும், இது 3.51 வானியல் அலகுகளுக்கு சமம். சிறுகோள் 16 சைக்கிலிருந்து ஒளி பயணிக்க 29 நிமிடங்கள் 13.2269 வினாடிகள் ஆகும் இந்த சிறு கோள் சுமார் 250 கி.மீ விட்டம் கொண்டது மற்றும் முழு சிறுகோள் பெல்ட்டின் 1% நிறை கொண்டது. இது ஒரு புரோட்டோபிளானட்டின் வெளிப்படும் இரும்பு மையமாக கருதப்படுகிறது, மற்றும் இது மிகப் பெரிய உலோக எம்-வகை சிறுகோள் ஆகும். சைக்கை இத்தாலிய வானியலாளர் அன்னிபலே டி காஸ்பரிஸ் 1852 இல் நேபிள்ஸில் இருந்து இந்த கோளை கண்டுபிடித்தார் மற்றும் கிரேக்க புராண உருவமான சைக் நினைவாக பெயரிடப்பட்டது. “16” என்ற முன்னொட்டு இது கண்டுபிடிப்பின் வரிசையில் பதினாறாவது சிறிய கிரகம் என்பதைக் குறிக்கிறது.

விண்கற்களின் உலோக வர்க்கம் பண்டைய கோள்களின் எச்சங்கள் என அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானி மற்றும் நாசாவின் சைக் மிஷனின் துணை முதன்மை ஆய்வாளர் கருத்து

அதிகாரப்பூர்வமாக (16) சைக் என அழைக்கப்படும் இந்த சிறுகோள் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு பொருளுடன் மோதிய பின்னர் அதன் வெளிப்புற அடுக்குகளை இழந்த ஒரு புதிய கிரகத்தின் மையமாக இருக்கலாம்

அழுத்தங்களும் வெப்பநிலையும் மிக அதிகமாக இருப்பதால் பூமியின் மையப்பகுதியைப் பார்வையிட நாங்கள் செல்ல முடியாது,” என்று அவர் கூறினார். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம், முக்கிய சிறுகோள் பெல்ட்டில் ஒரு தங்க கோள் இருக்கிறது என்று நாசா நினைக்கிறது .

சூரிய சக்தியில் இயங்கும் சைக் விண்கலம் விரைவில் ஏவப்பட்டு சில வருடங்களில் தங்ககோளை போய் சேரும். கோளின் மேற்பரப்பை சில மாதங்களுக்கு வரைபடமாக்கும் “, ராபர்ட் தங்க கோள் பற்றிய அறிவியல் சார்ந்த விபரத்தை தன் நண்பர் டால்டனுக்கு சொன்னார் ,

“ ராபர்ட் நீ சொல்வதை பார்த்தால் இந்த கோளில் தங்க மட்டுமல்ல விலை ஊயர்ந்த பிளாட்டினம், யுரேனியும் போன்றவை கூட இருகலாம் அல்லவா “

“ஏன் இருக்க முடியாது இந்த கோள் உன்னை போன்ற பணம் சம்பாதிக்க ஆர்வம் உள்ள துணிகர முதலீட்டாளர்களின் கவனத்தை நிட்சயம் ஈர்க்கும் அவர்கள் இதில் முதலீடு செய்து ஈடுபட்டால் அவர்களை டிரில்லியனர்களாக தங்க கோள் மாற்றக்கூடும் “ ராபர்ட் கூறினார்.

“ஆனால் சைக் என்ற தங்க கோள் ஏராளமான விலைமதிப்பற்ற உலோகத்தை வைத்திருந்தாலும் அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முடியுமா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் – இதுக்கு இதுவரை இல்லாத தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு தேவைப்படும் எனது நிறுவனம் இதுக்கு பொருத்தமன ரோபோவை தயாரிப்பதை பற்றி சிந்திக்க வேண்டும் “ டால்டன் சொன்னார்

“இவ்வளவு பெரிய தொகை மதிப்புள்ள அந்த தங்கத்தை பூமிக்கு கொண்டுவந்தால், தங்கத்தின் சந்தை மதிப்பு குறையும். ஆனால் இந்தியாவில் வாழும் பெண்கள் இதை வரவேற்பார்கள் ” என்றார் சிரித்தபடியே ராபர்ட் .

“ இதன் படி விண்வெளி சுரங்கத் தொழிலாளர்களே பிரபஞ்சத்தின் எதிர்கால அதிபர்கள் அடுத்த தங்க ரஷ், விண்வெளியில் ஆகும்” என்றார் சிரித்தபடியே டால்டன் .

( யாவும் உண்மையும் புனைவும் கலந்தது )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *