கதையாசிரியர் தொகுப்பு: விமலா ரமணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

பிறந்த நாள்

 

 வீடு முழுவதும் அலங்காரத் தோரணங்கள். வண்ண வண்ண பலூன்கள். கலர் விளக்குகள் கண் சிமிட்ட.. “ஹேப்பி பர்த் டே டு நேத்ரா’ என்கிற ஆங்கில தர்மாகோல் வாசகங்கள் பளிச்சிட… “ஓ இன்று நேத்ராவின் பிறந்த நாள்’. கற்பகத்தின் மகள் நேத்ரா. பன்னிரண்டாம் ஆண்டு பிறந்த நாள். குறிஞ்சி மலர் பூத்தது போல் பூத்த மலர் நேத்ரா. கண் மலர் கற்பகத்தின் கண்ணம்மா மலர். அந்த ஹாலின் நடுமையத்தில் தலைக்கு மேலே கலர் காகிதங்கள். மின் விசிறி காற்றுக்கு


காதல் மொழி விழியா? விலையா?

 

 ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. இவள் ஊமைப் படம் போல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படி ஓயாமல் என்ன பேசுவார்கள்? காதல் என்று ஒன்று வந்து விட்டால் அர்த்தமற்றுச் சிரிக்கத் தோன்றுமோ? அபத்தமாகப் பேசுவதைக் கூட ரசித்துச் சிரிக்கத் தோன்றுமோ? திரும்பினாள். தலையில்


ஒரே ஒரு தடவை

 

 அம்மா”ஏதோ வேலையாக இருந்த சீதா திரும்பினாள். கிடார் வகுப்பிலிருந்து சரவணன் வீடு திரும்பி இருந்தான். “”காபி கொண்டு வரட்டுமா?” “”வேண்டாம்மா. இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னு கேளு” “”யாரையாவது லவ் பண்றியா?” “”போம்மா நீ. ஒரு அம்மா தன் பையன் கிட்டே கேக்கற கேள்வியா இது? அதுக்கும் மேலே” “”அதுக்கும் மேலே மேலே எனக்கு உத்தரம் தான் தெரியுது.” ”சரி நானே சொல்றேன். எங்க மாஸ்டர் இருக்கார் இல்லை”” “”உம்” “”ரகுவரன் ஸார்” “”உம்”


பெரிய தண்டனை

 

 சேது ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பார்த்தான். அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். ஏன்,என்னவாயிற்று? “”என்ன ஆச்சு ஸார்?” அங்கே நின்று கொண்டு யாருடனோ பேசிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான். “”வேதநாயகம் ஸார் இறந்து போயிட்டார்” சேது ஸ்தம்பித்துப் போனான். கைப் பையிலிருந்த கல்யாண அழைப்பிதழ் அவனைப் பார்த்துச் சிரித்தது. தன் திருமணத்திற்குப் பத்திரிகை கொடுத்து அழைக்க வந்தவன் இவன். ஆனால் அதற்குள் வேதநாயகத்திற்கு வேறொரு இடத்திலிருந்து அழைப்பு வந்துவிட்டதா? இனி? கூடிக் கூடி பேசியபடி ஜனங்கள் நின்றிருந்தனர்.


தாயாகி வந்ததொரு தனிக் கருணை!

 

 “”என்ன பானு சொல்றே? உன்னாலே சென்னை வர முடியாதா?” அசோக் கோபம் பாதி, வேதனை பாதியாகக் கேட்டான். நகப் பூச்சு போட்டுக் கொண்டிருந்த பானு நிதானமாகச் சொன்னாள். “”ஆமா உங்கம்மாவுக்கு சிஷ்ரூசை செய்ய நான் வேலையை மாத்திக்க முடியாது” கோபத்தை அடக்கிக் கொண்டு அசோக் சொன்னான். “”சேர்ந்து இருந்தா சிஷ்ரூஷையா?” “”இதோ பாருங்க அசோக் வீணான ஆர்க்யூமெண்ட் வேண்டாம். என்னால என் வேலையை சென்னைக்கு மாத்திக்க முடியாது” “”கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கலாம்னு சொன்னியே?” “”நீங்க கூடத் தான்