கதையாசிரியர் தொகுப்பு: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மரணமும் சில மனிதர்களும்…

 

 அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா தேடித் தேடிக் கொண்டந்து நட்டது தெரியுமே… பார் இப்ப அது காய்க்கிற நேரம் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லை…” நன்கு முற்றிப் பருத்திருந்த கொய்யாக்காய்களை நடுங்கும் விரல்களால் நயனியிடம் கொடுத்தபடி அவள் கைகளைத் தடவி அங்கலாய்த்தாள். “ என்ரை குஞ்சு, எப்பிடி வளந்திட்டாய்…? பாத்து எவ்வளவு காலம்…?” ராசாத்தி ஆவலோடு அக்காவின் மகளைப் பார்த்தாள். நெடுநாளின் பின்


ஒரு பிள்ளையாரின் கதை

 

 பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன் மன்றாடிச் சென்றிருப்பார்கள். அவர்களில் ஒருவரைக் கூட இன்று அயலில் காண முடியவில்லை. ஓ…வென்று வானம் பார்த்த வெறுவெளி. மனிதர்கால் படாமற் போனதால் குத்துச்செடிகள் ஆங்காங்கு பூமியைப் பிளந்து வானத்தை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு சிறிய ஓலையால் வேய்ந்த கொட்டிலில் பிள்ளையார் வெயிலையும் மழையையும் தன்னிச்சையாய் அனுபவித்தபடி விழித்துக் கொண்டிருந்தார். முன்னால் போடப்பட்ட திரைச்சீலை காற்றில் அலைந்து


விடுபடல்

 

 சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொருவரை ஏற்றிப் போயிற்று. இவள் ஏறவில்லை. சனங்கள் அதிக மென்றில்லை. ஏறியிருக்கலாம். ஏறவில்லை. அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு காத்திருந்தாள். இப்போது இன்னும் கொஞ்சம் பேர் புதிதாகச் சேர்ந்திருந்தனர். சற்றுத் தூரத்தில் மெல்லிய பையனொருவன் நடந்து வந்துகொண்டிருந்தான். பதினேழு, பதினெட்டு வயது இருக்கக்கூடும். இடையிடையே கண்ட ஞாபகம். வெள்ளைச் சீருடையோடு புத்தகப்பை கனக்க கண்களில்


பெண்

 

 இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான். இவள் அயர்ச்சியை மறந்து அவனை ஒரு கணம் பார்த்தாள். இது வரைக்கும் இப்படி நடந்ததில்லை. மணமான பிறகு ஒரு நாளுமே இப்படி வருத்தம் என்று வந்ததில்லை. மணமான முதல் மூன்று மாதங்களும் மகிழ்வின் உச்சக் கட்டங்களையே அனுபவித்த காலங்கள் அவை. இப்படி உடல் வருத்தத்தால் கடமைகள் பின் தள்ளப்பட்டு முகம் சுழிக்கப்படக்கூடிய இது மாதிரித் தருணங்கள்


வெளியில் வாழ்தல்

 

 “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும் நிறையச் சேர்க்கிறனான் தானை. இண்டைக்கு எனக்குக் குரும்பட்டி கிடைக்கேல்லை என்டவுடனே என்னைப் பழிக்கிறதே… “ம்… நான் தரமாட்டன்…” வேணு எனக்குப் பழிப்புக் காட்டுறான். எனக்கு வாய் கோணி ஒரு மாதிரிப் போச்சு. தலையைக் கவிட்டுக் கொண்டு நிக்கிறன். நெடுக உப்பிடித்தான். எப்பவும் நான்தான் தலையைக் கோணிக் கொண்டு நிக்க வேண்டி வாற… இஞ்சே உங்களுக்கு அலுப்பாக்