மனதை மாற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 6,172 
 

டேய் குமார், இன்னைக்கு முதல் நாள் ஸ்கூல் க்கு போற சீக்கிரம் எழுந்துருடா,என சீதா வின் குரல் கேட்க எழுந்தான் குமார். போடா போய் குளிச்சிட்டு பல் தேச்சிட்டு வா என அவனது தந்தை ரவி கூற..குமார் இன்னும் ஒரு நிமிஷம் கழிச்சு எழுப்பிருக்கலாமா என அரை தூக்கத்துடன் கூறிக்கொண்டே பாத்ரூம்க்கு சென்றான்.

குமார் பாத்ரூமில் இருந்து ஒரு டவலை கட்டிக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தான் .டேய் குமார் சாமீ போட்டோ முன்னாடி புதுத்துணி வெச்சுருக்க சாமிய கும்பிட்டு போட்டுட்டு வா என சீதா சொல்ல ஒரு குஷியுடன் துணியை உடுத்திக்கொண்டு வந்தான் குமார் .

ரவி கோவை மாநகரில் குப்பை அல்லும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறான் .ரவிக்கோ நான் தான் படிக்கவில்லை தன் குழந்தையாவது ஒரு பெரிய பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்பது அவனது கனவு.அந்த கனவு நினைவானது.நினைத்தார் போலேயே குமாரை ஒரு பெரிய பள்ளியில் சேர்த்து விட்டான்.

குமார் வா சாப்பிடலாம் என சீதா கூப்பிட உணவுண்ண அமர்ந்தான்..

சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சீதா, ‘நீ நல்ல படிச்சு ஒரு பெரிய ஆளா வரணும்’ என சொல்லிக்கொண்டே குமார்க்கு பிடித்த தக்காளி சட்னியை ஊற்ற குமாரும் சாப்பிட்டு கொண்டே சரி மா என சொல்ல, கையை கழுவிவிட்டு பள்ளிக்கு தனது தந்தை உடன் டிவிஎஸ் 5௦ இல் சென்றான்.

அது பெரிய பள்ளி என்பதால் மற்ற மாணவர்கள் அவர்களது தந்தை உடன் பெரிய பெரிய கார்களில் வந்து இறங்கினர்.

குமாரிடம் ரவி நம்ப இந்த மாறி காரில் வரலைனு வருத்தப்படறிய என கேட்க இல்லை என குமார் பதில் கூறினான்.தனது பையினை எடுத்து கொண்டு வண்டியை விட்டு கீழே இறங்கி ரவிக்கு டாட்டா காட்டிவிட்டு பள்ளிக்குள் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்தான் .

அனைத்து மாணவர்களும் சரி சமமாக அமர வைக்கபட்டு இருந்தனர் .பெல் அடிக்க முதல் நாள் வகுப்புகள் தொடங்கின. குமார் மூன்றாவது வரிசையில் அமர்ந்து இருந்தான் …

ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து குட் மார்னிங் சொல்லி விட்டு அமர்ந்தனர்.ஒவ்வொருவராக தனித்தனியா எழுந்து நின்று உங்க பேரு,உங்க அப்பா பேரு,அம்மா பேரு,உங்க அப்பா என்ன வேலை செய்யறாரு உங்க அம்மா என்ன வேலை செய சொல்லுங்க என ஆசிரியர் கூற ஒவொரு குழந்தைகளும் எழுந்து சொல்ல ஆரம்பித்தன ஒவ்வொரு குழந்தைகளும் தனது தந்தை ஒரு என்ஜினியர் என்றும் டாக்டர் என்றும் கூறி விட்டு அமர்ந்தன .குமாரும் எழுந்து தனது தந்தை பெயர் ரவி என்றும் தாயின் பெயர் சீதா என்றும் தனது தாய் தந்தை இருவரும் குப்பை அல்லும் தொழிலாளி என்றும் கூற மொத்த வகுப்பில் உள்ளவர்களும் சிரித்தனர்.

அத்தனை நேரம் மகிழ்ச்சியுடன் இருந்த குமாரின் முகம் வாடி கூனி குறுகி நின்றான் .ஆசிரியர் சிரிக்க கூடாது என கூற சத்தம் குறைந்தது.அந்த ஆசிரியர் கூட குமாரை கீழ்த்தரமாக தான் நினைத்தார். அன்று முழு நாள் முழுவதும் பல ஆசிரியர் வந்து கேட்க இதே போல் தான் நடந்தது .பள்ளி முடிந்து பெல். சத்தம் கேட்டதும் வேகமாக வெளியே சென்றான் குமார்.

அங்கே அவனது தந்தை ரவி அவனுக்க காத்திருந்தார்,ரவிக்கோ பெருமை தன் மகன் முதல் நாள் வகுப்பை முடித்து வந்தது. போலாமா என ரவி கேட்க போலாம் என பதில் கூற இருவரும் வண்டியில் வீட்டிற்க்கு புறபிட்டனர் .ஸ்கூல் எப்படி போச்சு என கேட்க நல்ல இருந்தது அப்பா என சோகமாக பதில் கூற ஏன்டா சோகமா இருக்க என ரவி கேட்க ஒண்ணுமில்ல பா என குமார் பதில் சொன்னான்

இருவரும் வீட்டை அடைந்தனர் . குமாரை வீட்டில் இறக்கிவிட்டு ரவி குமார் சாப்பிடுவதற்காக பொருள் வாங்க கடைக்கு சென்றதும், சோகமாக வீட்டில் உள்ள ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தான் குமார்.

வீட்டின் உள்ளே டிவி பார்த்து கொண்டே இரவு சமையலுக்கு காய்கறி வெட்டி கொண்டு இருந்தால் சீதா..

சீதா ஸ்கூல் நல்லா இருந்ததா என குமாரிடம் கேட்க சோகமாக இருந்தான் ஏன்டா என்ன ஆச்சு டீச்சர் ஏதும் திட்டுனாங்கள,இல்ல அடிச்சாங்கள என கேட்க இல்ல என குமார் கூற இனி அந்த ஸ்கூல்க்கு போக மாட்டேன் மா என குமார் கூற ஏன்டா என சீதா கேட்க பள்ளியில் நடந்தவற்றை குமார் கூறி கொண்டு இருந்த அந்த சமயத்தில் ரவி வீட்டினுள் நுழைய இது அவன் காதில் கேட்டதும்

உள்ளே நுழையாமல் நடப்பவற்றை கேட்டு மனம் வருந்த நின்றான் .

சீதா அவனை இதுக்கெல்லாம அழுகறது,, அம்மா இருக்க அப்பா இருக்காரு இதுக்கெல்லாம் அழ கூடாது என சமாதானப்படுத்தி படுக்கை அறையில் படுக்க வைத்தாள். நடந்தவை தனது கணவனுக்கு தெரிந்தால் வருத்தபடுவார் என்று எண்ணி அதை அவரிடம் சொல்ல கூடாது என முடிவு எடுத்தாள்.

நடப்பவற்றை கவனித்து அதன் பின் ரவி வீட்டினுள் நுழைந்தான் ரவி. சீதாவிடம் ரவி, குமார் எங்கே என கேட்டான்.

அதற்கு சீதா வந்த களைப்பில் தூங்கிட்டான் என்று கூற ரவியும் சோகமாக அதே நாற்காலியில் அமர்ந்தான்.

ஏங்க இப்படி சோகமா இருக்கீங்க, என சீதா ரவியிடம் கேட்க, அதற்கு ரவி மனிதனின் வாழ்கைய பாத்தியா?. குப்பையை போடரவங்களை கௌரவமாகவும், அதை எல்லாம் சுத்தம் செய்ற நம்பள கீழ்த்தரமாகவும் பாக்குற ஒரு கேவலமான உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்.

சரி விடுங்க என சீதா கூற, இத்தன நாளா அடுத்தவங்க என்ன கேவலமா பாக்குறப்ப கூட எனக்கு எதுவும் பெருசா தெரில இன்னைக்கு என் பையன் மனசு இவ்ளோ பாதிக்கப்பட்டிருக்கிறத பாக்கும் போது என் மனசு வாடுது. இவர்கள் வருத்தப்படுவதை குமார் அரை தூக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் விடிந்தது. சீதா குமாரிடம், நேத்து மாறி கிண்டல் பண்ணாங்கன நீ அழக்கூடாது , அப்பா மாதிரி பயப்படாம இருக்கணும் என புத்திமதி சொல்லி பள்ளிக்கு ரவியுடன் அனுப்பி வைத்தாள். ரவிக்கு ஒரு முக்கியமான வேலை இருந்ததால் ,கால் மணி நேரத்துக்கு முன்னதாகவே குமாரை பள்ளிக்கு அழைத்து சென்றான். பள்ளியின் வாசலில் இறக்கி விட்டுவிட்டு அழக்கூடாது, நல்லா படிக்கணும் என கூற அதற்கு குமார் சரி பா என கூறி விட்டு பள்ளிக்குள் நுழைந்தான்.

வகுப்பறையின் வாசலின் முன் சில மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அவன் அவர்களை கடந்து செல்லும் போது அவனை கிண்டல் செய்தனர் .குமார் அவர்களிடம் குப்பையா போடறவங்கள கௌரவமாகவும், அதை சுத்தம் செய்ற எங்கள கீழ்த்தரமாகவும் பாக்குற ஒரு கேவலமான உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு சொல்ல, அதனால உங்க கிட்ட நான் பேச விரும்புல என கூறி கொண்டே உள்ளே நுழைந்தான். அப்பொழுது அவ்வழியே ரௌண்ட்ஸ் வந்த பள்ளியின் முதல்வர், குமார் பேசுவதின் அர்த்தத்தை புரிந்து கொண்டு சென்றார். இவர் சென்றதை மாணவர்கள் கவனிக்கவில்லை

தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்க அன்று பள்ளியில் prayer நடந்தது. தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் பள்ளியின் முதல்வர் உரையாற்ற வந்தார். நான் உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறேன் என சொல்லி குமாரின் கதையை ஒரு குட்டி கதையாக சித்தரித்து கூறி கதையின் முடிவில் குப்பை போடறவங்கள கௌரவமாகவும், அதை சுத்தம் செய்றவங்கள கீழ்த்தரமாகவும் பாக்குற ஒரு கேவலமான உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்னு சொல்லி முடித்தார். அவர் கூறிய அந்த வார்தைகள் பள்ளியில் உள்ள ஆசிரியருக்கும், அந்த பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் மனதில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது.

அந்த பள்ளி ஆசிரியர்களும் குமாரை கீழ்த்தரமாக நினைத்துவிட்டோமே என மனம் வருந்த, தேசிய கீதம் பாட அன்றைய prayer முடிந்தது .

அனைத்து மாணவர்களும் வகுப்பறையினுள் நுழைந்தனர், வகுப்புகள் தொடங்கின. குமாரை கிண்டல் செய்த மாணவர்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டனர்.சரி பரவலா விடுங்கடா நம்ப நண்பர்கள் ஆகி விடலாம் என குமார் கேட்க சரி என மற்றவர்கள் பதில் கூற அவர்களின் நட்பு பெருகியது.

பள்ளி முடிந்து மற்ற மாணவர்களுடன் உடன் சேர்ந்து குமார் சிரித்து பேசி வெளியே வருவதை பார்த்து ரவி என்ன சிரிச்சிட்டு வர்ரான் என ஆச்சிரியப்பட்டான். பாய் குமார் என சொல்லிவிட்டு அவனது நண்பர்கள் செல்ல, ரவியும் குமாரும் பைக்கில் ஏறி புறப்பட்டனர்.

போகும் வழியில் குமார் நீ எப்டி அவுங்க கிட்ட பிரன்ட் ஆனா என கேட்க அதற்கு அதெல்லாம் அப்படிதான் பா என குமார் பதில் சொல்ல என்னமோ சொல்றான் என தன மனதுக்குள்ளே ரவி நினைத்து கொண்டான்

அடுத்த நாள் முதல் பள்ளியில் அனைத்து மாணவர்களும் தங்களது குப்பைகளை தாங்களே எடுத்து குப்பை தொட்டியில் போட்டனர் ஆசிரியர் ஒருவர் தவறுதலாக போட்ட குப்பையை கூட ஒரு குழந்தை எடுத்து குப்பை தொட்டியில் போட்டது. அந்த பள்ளியில் வேலை செய்யும் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *