கதையாசிரியர் தொகுப்பு: செ.யோகநாதன்

17 கதைகள் கிடைத்துள்ளன.

புதிய நட்சத்திரம்

 

 “என்னை நல்லாப்பாருங்கோ …. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ …. என்னைப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் யோசிக்கிறிங்கள்? நீங்க சி. ஐ. டி. 686 என்ற படம் பார்க்கவில்லையோ? பார்த்தனீங்கள். எனக்குத் தெரியும். எனக்கு வயது கொஞ்சங்குறைவு தான் – அதாலை தான் மீசை இன்னும் கறுத்து வளரேல்லை. ஒருக்கால் மீசை வழிச்சனான் …. ஏன் இப்ப சிரிக்கிறீங்கள் …. ஓ ஓ …. எனக்கு உயரங்காணா தெண்டா நினைக்கிறீங்கள்….? எனக்கு இப்ப பதினெட்டு வயது


சின்ன மீன் பெரிய மீன்

 

 சரியான போஷாக்கின்மையே தன்னுடைய குழந்தைகளினதும், மனைவியினதும் நோய்க்கான ஒரே அடிப்படைக் காரணம் என்பதை சுந்தரேஸ்வரன் நன்றாகவே அறிவான். எனினும், அதற்கு மாறாக அவனால் எந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியவில்லை. எல்லாக் கடன்களையும் கழித்துவிட்டுப் பார்த்தால் அவனுக்கு கையிலே சம்பளமாக வந்து சேருவது முன்னூற்றி எட்டு ரூபா அறுபது சதங்கள் மட்டுமே. அவனது நான்கு குழந்தைகளும் ஓரமாக ஒதுங்கிப் போய்ப் படுத்திருந்தன. பொழுது இப்போதே இலேசாக விடியத் தொடங்பியிருந்தது. மனைவி ஆனந்தலோசனி கிணற்றடியிலே, கடுமையாக வந்த இருமலை லேசாக


மலர்கள்

 

 “அவர் வாழ்வைத் தந்தார் அவரே வாழ்வை எடுத்தார்” பாதிரியாரின் குரல் அமைதியினூடே வலிமையுடன் ஒலிக்கின்றது. வாழ்வின் அந்தியக் கனவுகளின் பிடிகளிலிருந்து விடுபட்டு அமைதியுடன் மரண நித்திரையுள் ஆழ்ந்து கிடக்கிறாள், ரோஸலின். தன் தாயின் தலைமாட்டிலே சிலையாகிச் செயலற்றிருக் கிறான் அல்பிரட். கண்களிற் சுரக்கும் நீர் எவ்வித தடை யுமின்றிக் கன்னங்களில் வழிந்து முழங்காலில் தெறித்துச் சுடுகின்றது. ரோஸலினின் தலை மாட்டின் இரு புறங்களிலும் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கின்றது. அந்த மெழுகு வர்த்திகளின் நடுவே ஒரு சிலுவை வைக்கப்பட்டிருக்கிறது. அல்பிரெட்


விநோதினி

 

 இதுவரை அப்படியான விநோதமான பூச்சியை அந்தப் பக்கத்திலேயே யாருமே காண வில்லை என்று சொன்னார்கள். எட்டுக் கால்கள், முதுகெல் லாம் அடர்ந்த கபில நிறம். தலையிலிருந்து கறுப்பு நிற மாக நீண்ட கூரான கொம்பு, நீலமான கண்கள். உஸ்உஸ் ஸென்று இரைச்சலை எழுப் பிற்று. சட்டென்று அதை கையிலே வைத்திருந்த பெட் டிக்குள் தந்திரத்தோடு தள்ளி மூடினாள் விநோதினி. – “இது கடுதாசிப் பெட்டியை யும் கிழித்துக் கொண்டு போய் விடும். இன்னொரு மரப்பெட்டிக் குள்ளை வைக்கிறது


இராஜகுமாரி

 

 அந்தப் பெண்ணின் குரல் எனது காதில் விழுந்ததும் திடுக்கிட்டுப் போனேன். இரண் டாவது முறையாக இப்போது அவளின் குரலைக் கேட்கின்றேன். கணீரென்ற கம்பீரமான குரல், சுற்றாடலையே சற்று அச்சுறுத்தி தன்னைக் கவனிக் கின்ற உணர்வை உண்டாக்கு கின்ற குரல். எவரையும் தன் சுட்டுவிரல் அசைவுக்குத் தலை யசைக்கிற விதத்தில் ஒலிக் கின்ற குரல். அதிக வார்த்தை கள் பேசமாட்டாள். நாலைந்து வார்த்தை களுக்குள்ளேயே சொல்ல வேண்டிய அனைத் துமே சொல்லப்பட்டு விட்டாற் போல கேட்கிறவர் முடிவு செய்து


நான் ஓர் தனி ஆள்

 

 நீலவானம் ஒரே லயத்தில் பளீரென்று விரிந்து கிடந் தது. துணுக்கு மேகமொன்று அபூர்வ மாக தெளிந்த நீலத்தி னுள் பளீச்சென்று அடையாளங் காட்டிற்று; முயற்குட்டியொன்று புல்வெளி யொன்றினுள் இலக் கற்று ஓடிக் கொண்டிருப்ப தனைப் போல. பாரதிக்கு அந்த மனநிலை யிலும் நிறைவான சிரிப்பொன்று இதயத்தினுள்ளே அவிழ்ந்து உதிர்ந்தது. தன் பூனைக் கண் களை இமைக்காமல் ஆகாயத் தையே பார்த்துக் கொண்டிருந் தாள். வடிவம் மாறுகின்ற பிஞ்சுமேகம் இப்போது இரண் டாக உடைந்து வெள்ளைக் கோழிகளாக அவளின்


பயம்

 

 எல்லாமே அவனுக்கு ஆச் சரியமாக இருந்தது. விட்டு விட்டு வீசுகின்ற காற்றிலேகூட தீவிரமான அசைவு செறிந்தி ருப்பதாக உணர்ந்தான். நிமிர்ந்த போது எதிரேயுள்ள மரம் அசைவற்று நின்றது. காகம் ஒற்றையாக மிரட்சி யோடு எங்கோ பார்த்து விட்டுப் பறந்தது. தூரத்திலே தலையில் மூட்டையொன் றுடனே தள்ளா டித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்த கிழவர் ஒரு வரை வேகமாகத் தாண்டிய வாறு பஸ்வண்டி வந்தது. நேரத் தைப் பார்த்தான் சிவசாமி. ஏழு மணி பத்து நிமிஷம். அந்த


புகை நடுவே…

 

 அலைகள் – மடார்மடா ரென்று சிதறி நுரைகளை உதறியபடியே கலைவதும் புரள்வதுமாக இருந்தன. வெளி றிட்ட வானத்திலே பொன்வண் ணம் மெதுவாகப் புரண்டு படியத் தொடங்கிய மாலைப்பொழுது. ஆட்கள் குறைவாகவே தெரிந் தனர். இராணுவ வண்டிகளும் சிப்பாய்களும் அடிக்கடி நெடு வீதியில் அலைவதைச் செல்வ ராசன் ஓரக்கண்ணால் பார்த் துக் கொண்டான். காற்றுக்காக நிற்பவன் போலத் தோற்ற மளிக்க முயன்றவனின் அருகே நடராசாவின் குரல் ஓயாமல் கேட்டது. ‘நீ சொன்னபடியே நான் எந்த இடத்திலும் நிற்க மாட்டன்.


ஆறுமுகம்

 

 மனப்பூர்வமான நட்பு என்பது சுயநலத்திற்கு அப்பாற் பட்ட ஒரு உன்னதமென்று, ஆறுமுகம் எனக்கு எழுதிக் கொடுத்த ஆட்டோ கிராபை நான் இன்னமும்பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆங்கிலத் தில் எழுதப்பட்ட வாசகம். மணி மணியான கையெழுத்து ஆறு முகத்தினுடையது. ஒவ்வொரு எழுத்தையும் சித்திரக்காரன் ஒருவனைப் போல – செதுக்கிச் செதுக்கி எழுதினாற் போன்ற அலங்காரத்துடன் – ஆறுமுகம் எழுதியிருந் தான். நான் எனது முதல் அரிச்சுவடி எழத்தாக ஆங்கில ‘ஏ’யைத்தான் எழுதி னேன் என்று ஆறுமுகம் சொன் னதும், அந்த


தீவுகள்

 

 “ரமணா என்ன யோசிச் சிட்டிருக்கே!” என்ற கோபா லின் குரலில் திடுக்கிட்டவன் போல நினைவு கலைந்து அவனைப் பார்த்தான் ரமணன். “வந்து ஒரு வாரமும் ஆகல்ல. ஒவ்வொரு நாளும் இப்படி யோசிச்சிட்டிருந்தா எப்படி? வீட்டு யோசனை தானே…” கோபாலின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் வெறுயைாகத் தலையை அசைத்தான் அவன். “சீக்கிரமாப் புறப்படணும்” என்று சொல்லியவாறே வெளியே அவசர அவசரமாகப் புறப்பட்டான் கோபால். ரமணன் மணியைப் பார்த்தான். எட்டு மணி. நாராயணன் இன்னமும் தூக்கத்திலிருந்து எழுந்