கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 18, 2021

9 கதைகள் கிடைத்துள்ளன.

முடிவிலியின் நிகழ்தகவு

 

 1. “அப்போ மனித பரிணாம வளர்ச்சி பற்றிய சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் தக்கன பிழைத்தல் கோட்பாடு தவறுண்ணு சொல்றீங்களா?” “அப்படி சொல்லவும் முடியாது. மனிதன் எப்படி தோன்றினான் என்று நிறைய பேர் அவங்கவங்க கொள்கைகளை உருவாக்கிச் சொன்னாங்க. அதில் டார்வின் அவரோட கருத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினார். அதை உலகம் ஏற்றுக் கொண்டது.” “என்னோட மனசுக்கு, நான் ஏற்றுக் கொண்ட கொள்கை, சரியாக இருக்குமென தோணுச்சு. அதான் அதை நீருபிக்க இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன்.


திக் திக் திக்

 

 “என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?” “என்ன‌.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு அப்படி ஒன்னும் கேக்கலையே..!” “என்னங்க சொல்றீங்க? அப்பறம் எனக்கு மட்டும் எப்படி கேட்டுச்சு..?”, என்று பயந்தபடியே கேட்ட மனைவியை நானும் பயந்தபடியே பார்த்தேன்… எனக்கு ஒரு பழக்கம்.. படுத்ததும் உடனே தூங்கிவிடுவது.. ராத்திரியில் என்ன நடந்தாலும் அது தெரியாது.. ஆனால்.. மனைவியின் பழக்கம்.. படுத்தவுடன் தான்… எல்லாவற்றையும் பற்றி அசை போடுவது.. அதில் நல்லது குறைவாகவே


அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

 

 அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம். தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர். ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம். அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது. அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள். ‘உடைஞ்சு போச்சு


கடத்தப்பட்ட குழந்தை

 

 ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தது கவனத்தை கவருவதாக இருந்தது. இருந்தால் அந்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கலாம், மென்மையான நீல கலரில் சட்டையும், அழுத்தமான நீலத்தில் ஸ்கர்ட்டும் உடைகள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு இவள் கண்டிப்பாய் உறவாய் இருக்க வாய்ப்பு இல்லை, அந்த பெண்ணும் மாநிறமாய் இருந்தாலும்


இதுவும் கடந்து போகும்!!!

 

 கிஷோர்….உன்னி….சிவா… மூன்று பேருக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது……… மூன்று பேரும் மேட்டுக் ‘ குடிமகன்கள்’ . மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தவர்கள்.. மூன்று பேரின் பெற்றோர்களும் அளவுக்கு அதிகமாகவே சொத்து வைத்துக் கொண்டு எப்படி மேலும் சம்பாதிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பவர்கள்.. மூவரும் பெற்றோருக்கு ஒரே வாரிசுகள்.விடுதி மாணவர்கள்…. சிறிய வித்தியாசங்கள்….. கிஷோர் மும்பைக்காரன்.தமிழ் குச் குச் மாலும்….உன்னி கோட்டயம்.. தமிழில் மலையாளம் கலந்து சம்சாரிக்க முடியும்.சிவா பக்கா சென்னைப் பையன்.. இந்த


கணக்கர் கடவுள்!

 

 இந்தியா…..ஆண்டு 1978…… இலங்கையிலிருந்து விமானத்தில் பயணித்த போது, விமானத்தின் ஜன்னல் வழியே தெரிந்த நீலக் கடலின் அழகை ரசிக்கும் மன நிலையில் நான் இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அப்பாவைப் பார்க்கப் போகிற சந்தோஷமும் இல்லை. மனம் நிறைய கவலையே நிறைந்து இருந்தது. அவசரப் பயணம் என்பதால் மதிப்புள்ள சாமான்கள் எதுவும் கொண்டு செல்ல வில்லை. கஸ்டம்சில் நேரம் எதுவும் வீணாகவில்லை. ஆனாலும் சென்னைக்கே உரித்தான ரௌடிகளின் மிரட்டல், விமான நிலையத்திலேயே ஆரம்பித்து விட்டது…. “அந்த ஆபிசர்


புத்தி பெற்றவர்கள்!

 

 வாசலில் உள்ள பெயர் பலகையை, ஒரு முறைக்கு இரு முறை நன்றாக உற்றுப் பார்த்து படித்து மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுதான் வசுமதி அந்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். ஐந்து நிமிடத்தில்….. நாற்பது வயது மதிக்கத்தக்க தணிகாசலம் கதவைத் திறந்து இவளைக் குழப்பமாகப் பார்த்தார். “நீ… நீங்கதானே நிர்மல் – விமல் கம்பெனி மேலாளர்..?” இவள் சற்றுத் தடுமாற்றத்துடனேயேக் கேட்டாள். “ஆமாம் !” – என்ற இவர் இன்னும் புரியாமல் அவளைப் பார்த்தார். “”உங்க கம்பெனியில் வேலை செய்யிற


தாயுமானவன்

 

 சிவனே என் சிவனே!!! அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துப்பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சிவராமன், பர்வதம் சொன்னபடி எல்லா சாமானும் கடைக்குப் போய் தானே வாங்கி வந்தார். பர்வதம், குழந்தைகள் இருக்கும்போது, இதெல்லாம் சுலபமா நடந்த்துடீ. இப்போ நாம செய்ய வேண்டியிருக்கும்போது, இயலாமையா இருக்கு. நீ கொஞ்சம் குறைச்சுக்ககூடாதா? வயசானது அந்த சிவனுக்குத் தெரியாதாடீ? என்று தன் இயலாமையை இறக்கி வெச்சார். காலையிலேயே


சமையல் சோம்பேறிகள்

 

 ஞாயிறு விடிகாலை… ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்திருந்தவளை விஸ்வநாத ஐயர் “கல்யாணி, பெரியப்பாவுக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வாயேன்…” என்றார். கல்யாணி பதில் பேசாமல் விறுவிறென கிச்சனுக்குள் நுழைந்து காபி மேக்கரில் காபி போட்டு, அவரின் மனைவிக்கும் சேர்த்து இரண்டு காபிகள் எடுத்து வந்தாள். கல்யாணி போட்டுக் கொடுத்த காபி சகிக்கவில்லை. விஸ்வநாத ஐயர் முகத்தைச் சுழித்துக் கொண்டார். எனினும், தம்பியின் மாட்டுப் பெண்ணாயிற்றே என்று வெறுப்புடன் குடித்து வைத்தார். இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஒரு