கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2021

110 கதைகள் கிடைத்துள்ளன.

உள்ளுக்குள் உள் உள்ளேன்!

 

 ‘சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி!…..’ சினிமா பாட்டு வரிகள் கேட்கும் போதெல்லாம் முகந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் வழிந்தோடும். ‘அடி தாங்கும் உள்ளம் இனி இடி தாங்குமா?….இடி போல பிள்ளை வந்தால் அடி தாங்குமா?……ஒரு நாளும் நான் இது போல் அழுதவன் அல்ல…அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல?’ கேட்டு கேட்டு மனதில் பதிந்த பாட்டு, சும்மா இருக்கும் பொழுதும் நினைவில் வந்து வாட்டியது. ….இப்படியே கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் உருண்டோடியது. மகன் பிரகாஷ்…திருமணமாகி


லச்சுமியின் கனவு கனிந்தது

 

 சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள். ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ…. தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி. லச்சுமி


தனி ஒருவனுக்கு…

 

 “..தோலிருக்கச் சுளை வாங்கிகளின் தத் துவச்சிருஸ்டியான “சுரண்டல் வித்தை” என்னும் நித்திய தரித்திர நாராயண னின் ஆசீர்வாதம், தின்ற வயிறு பாதி தின்னாத வயிறு மீதியாக “அநித்தியம்” என்ற இந்தப் பூலோக வாழ்க் கையில் அந்த இரண்டு ஜீவன்களும் உழன்று கிடந்தன.” – எஸ். அகஸ்தியர் “களவெடுப்பியோ ?” “இல்லை” “பொய் சொல்லுவியோ?” “சொல்லேல” “அடுத்தவீடு போவியோ?” “போகேல்ல” “கூடுவாரத்துகளோட திரிவியோ?” “இல்ல, திரியல்ல” செப்பமான சம்பல் அடி. பொடியன் மிதிபட்ட நாக்கிளிப் புழவாட்டம் சுருண்டு கீழே


இந்தக் கொரோனாவால!

 

 அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று தட்டி எழுப்புவதுபோல் ஓசையெழுப்பியது. இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டபடி மெல்லக் கண்விளித்தான் ரிசி. இரண்டு பெரிய படுக்கை அறைகள், நன்கு விசாலமான வரவேற்பறை அதையொட்டி நவீன திறந்த சமையலறை, அத்தோடு பள பளவென்றிருக்கும் குளியலறை. புதிதாகக் கட்டிய இரண்டடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கிறது ரிசி வாங்கிக் குடிபுகுந்த இந்த வீடு.


வாடகை வீடு

 

 நாமதான் இந்த மாத கடைசியிலே வீட்டைக் காலி பண்றதாகச் சொல்லிட்டோம் இல்ல, பின்னே ஏன் அவசரமா காலி பண்ணச் சொல்லி நெருக்குறாங்க? எனக் கேட்டாள் ஜெயந்தி. அவங்க அவசரம் அவங்களுக்கு. என்றார் ராமலிங்கம். என்ன அவசரமாக இருந்தாலும் என்ன? நாம முன்னேயே சொல்லியாச்சு. நம்ம பசங்க பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறதனாலேதான் நம்ம கிராமத்து வீட்டைப் பூட்டி போட்டுவிட்டு இங்கே வாடகைக்கு வந்தோம், தேர்வுகள் முடிந்தவுடன் காலி செய்திடுவோம் என சொல்லிட்டோம் இல்ல, பின்ன சீக்கிரமா போங்கன்னா என்ன