கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

உருப் பெறாத மனிதன்

 

 நானும் என் மகளும் குளத்தில் குளித்துவிட்டு வருகிறோம். என் ஐந்து வயது மகள் குளத்தில் நீந்தும் குதூகல அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒரு கிராமத்திற்கு வந்திருக்கிறாள். வெகு நாட்கள் கழித்து என் தாத்தா வீட்டிற்கு வந்திருக்கிறோம். ஆம் தாத்தா வீடுதான். பாட்டி வீடு என்று சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. பாட்டி எங்களோடு இப்போது இல்லை. இந்த வீட்டில்தான் பாட்டி தன் வாழ்வு முழுவதையும் வாழ்ந்தாள். எங்களைப் போல்


காலம் மறைத்த மக்கள்

 

 முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் இரண்டாவது கதை இது. கேஸ்பக்கில் சிக்கிய தன் முதலாளியின் மகனை மீட்க வேண்டித் தேடுதல் வேட்டைக்குக் கிளம்பும் ஒரு வேலைக்காரன் அங்கு ஆதி காலத்தில் பூமியில் இருந்த மனிதர்கள்


சாயம்

 

 கந்தவேலுக்கு சிறு பரப்பில் வேளாண் நிலங்கள் இருப்பினும் நெசவுதான் முழுநேர தொழில். வீட்டின் எதிரில் உள்ள கொட்டகையில் ஆறு விசைத்தறிகள் அமைத்திருக்கிறார். அனைத்திலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஊரில் பெரும்பகுதியினர் நெசவை நம்பியே இருக்கின்றனர். ஓரிரு சாயப் பட்டறைகளும் உள்ளன. அவினாசியிலிருந்து சற்று தொலைவில்தான் சொக்கம்பட்டி உள்ளது. ஊரின் கிழக்கே உள்ள தன் தென்னந்தோப்பிற்கு அருகிலேயே கந்தவேலுவின் வீடு அமைந்திருக்கிறது. அவரது மனைவி தனலட்சுமி கால்நடைகளையும், விவசாயத்தையும் கவனித்துக் கொள்கிறார். வீட்டின் பின்புறம் பராமரிக்கப்படும் மூன்று கறவை மாடுகளில்


அன்பை மட்டுமே தேடும் மனம்

 

 ஒரு பிரபலமான நகரத்தில் ஒரு கம்பனியில் டேவிட் என்பவர் அலுவலகம் பணியில் வேலைப்பார்த்து வந்தார். அவர் மனதில் இருக்கும் சில காயங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேலைப் பார்த்து வந்தார். அந்த சூழ்நிலையில் மகேஷ் என்பவர் அலுவலக பணிக்கு சேர்ந்தார். நாளடைவில் இவர்கள் இருவரும் நண்பர்களானார்கள். மீண்டும் அலுவலக பணிக்கு தேவன், வேல் என்ற பெயருடன் இருவர் சேர்ந்தார்கள். இவர்கள் நால்வர்களும் ஒற்றுமையுடனும், சந்தோஷத்துடனும், தனது பணிகளை செய்து வந்தார்கள் . டேவிட் என்பவரின் காயங்கள் நாளடைவில் மறந்து


கொல்லி மலையின் வசந்தம் ஹோட்டல்

 

 ஒடைக்காடு என்ற ஊரில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள். ஒடைக்காடு என்ற பெயருக்கு ஏற்ப பச்சைப்பசேல் என்றிருந்த காட்டினுள் அழகிய ஓடை ஒன்று சலசலத்து ஓடும் அந்த காட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதால்தான் மாதவன் மஃப்டியில் வந்து அங்கு தங்கும்படி மேலிடத்து உத்தரவு. அந்த ஊரில் வசந்தம் ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சொல்லவே தினமும் அங்கு சென்று சாப்பிடுவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது.. வசந்தம் ஹோட்டலை முத்துவேலும் அவரது மனைவி திருப்பதியும் நடத்திவந்தார்கள். அவர்களது ஒரே


கவிதாவும் கயல்விழியும்

 

 திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயிலின் திருக்குளம் மிகப்பெரியதாக பார்க்க அழகாக இருந்தது. பாசி படிந்திராத படித்துறையும், பெருத்த அலைகள் இல்லா தெளிந்த நீரும், காணப்பெறுவது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. காலம் போன காலத்தில் குளம் நிறைந்து இருப்பதும், அதில் இருக்கும் மீன்கள் எந்த அடக்கு முறைக்கும் ஆளாகாமல் உடலை வளைத்து, நீட்டி சுதந்திரமாக நீந்தும் காட்சியும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. கழிந்த பொழுதில் வேண்டும் வேண்டும் என்னும் வேட்கையுடன் இறைவனைத் தேடி பிரார்த்தனை செய்து பேறுப்பெற்ற முகிற்குழலி, நன்றிக்கடன்


கஜேந்திர கன பாடிகள்.!

 

 நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .! அம்மா ஞானம் .! அப்பா அம்மாவின் ஒரே புள்ளையாண்டான் நான்.! அப்ப உத்யோகமா இருந்த பள்ளிக்கூடத்தில்தான் நானும் படிச்சேன்.! ஆனா சொந்த ஊரு மேலக்கோட்டைன்னு ஒரு கிராமம்..! தஞ்சாவூர் பக்கத்துல…. “மேப்புல தேடாதீங்க.. கிடைக்காது..” அவ்வளவு சி்ன்ன கிராமமா இருந்தாலும்.. கிராமம்னு சொன்னா உங்க கற்பனையில உதிக்கிற மாதிரி ஆறு, வாய்க்கா, தோப்பு,தொரவு ..ஒரு குட்டி


பட்டா..!

 

 மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார். “வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம் ஏகாம்பரம். “உட்காருங்க…”எதிர் இருக்கையைக் காட்டினார். சந்திரசேகரன் தான் கொண்டு வந்த மஞ்சள் பையை மேசை மீது வைத்தார். “என்ன விஷயம்…?” “என் பட்டாவுல சிக்கலிருக்கு…” “என்ன சிக்கல்…? ” “என் பக்கத்துல உள்ள புறம்போக்கு நில எண்ணும் என் பட்டாவுல சேர்ந்திருக்கு..” “அப்படியா…?”கர்ணத்திற்கு அதிர்ச்சி ! “ஆமாம் சார். அது ஒரு காலத்துல அரசாங்கக் குளம்.


நாம வேண்டிண்டதே தானே அவ…

 

 15-8-1947 சுதந்திர நாளன்று அன்று பிறந்தவன் ஏகாம்பரம்.அவன் பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான்.அன்று அவன் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது.பள்ளி முதல்வர் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டு பள்ளி மாணவர்களுக்கு ‘சாக்லெட்’ கொடுத்து விட்டு ஒரு சின்ன உரை ஆற்றினார். “பள்ளி மானவர்களே,இன்று சுதந்திர நாள்.நம் இந்தியா சுதந்திரம் அடைந்து ஆறு வருஷங்கள் ஆகி விட்டது.நீங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா சுதந்திரம் அடைந்து பிறகு நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்.நீங்கள் எல்லோரும் வெள்ளைகாரர்களின்


மன அழகு

 

 சென்னை. காலை எட்டரை மணி. அலுவலகம் செல்வதற்கு முன், நான் ஈஸிஆர் ரோடில் என் பைக்கை நிறுத்திவிட்டு சங்கீதா ஹோட்டலுக்குள் நுழைந்தேன். ஒரு ஒதுக்குப்புறமான டேபிளில் நான் மட்டும் அமர்ந்து அமைதியாக காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் எதிரே வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் மொபைலில் பேசிக்கொண்டே வந்து அமர்ந்தார். அங்கு வந்த ஹோட்டல் பையனிடம், இடது கையினால் தோசை என்பதுபோல வட்டமாக சுற்றிக் கண்பித்தபடியே தன் பேச்சைத் தொடர்ந்தார். “சாதா தோசையா?” “ஆம்” என்று