கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 23, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

பால் வண்ணம் கண்டேன்

 

 உள்ளே வரலாமா..?..! குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார்கள் சிவசங்கரனும் அவரது மனைவி பாக்கியலெட்சுமியும். வாசலில் ஒல்லியான சற்று உயரமான சிவந்த மேனியாள் கயல்விழியும், அரும்பு மீசை இளைஞனும் நின்று கொண்டிருந்தனர். புருவ நெளிவுடன் யார் இவர்கள் என்ற கேள்வி கனையுடன் …ம், வாங்க என்று ஒரு சேரக் குரலில் அழைத்தார்கள். கயல்விழியும், இளைஞனும் அருகே வந்தார்கள். கயல்விழி இருவரின் காலைத் தொட்டு நமஸ்கரித்தாள். புன்முறுவலுடன் நிமிர்ந்த அவளை உட்காரம்மா, என்று பாக்கியலெட்சுமி சொல்லி முடிப்பதற்குள் அருகில் இருந்த


உதவி

 

 நாகராஜன் வழக்கம் போல் செல்லும் ஆசிரமத்துக்கு, காலையில் வருபவர் அன்று மதியம் வந்திருந்தார். மாதம் தவறாமல் ஆசிரமத்திற்கு வந்து கொடுக்கும் பணம் பத்தாயிரத்தையும், ஆசிரம நிர்வாகியிடம் கொடுத்தார். அவர் கொடுத்துவிட்டு, எப்போதும் ஆசிரமத்திலுள்ள குழந்தைகளிடமும், முதியோர்களிடம் உரையாடி விட்டுதான் செல்வார். அன்றும் அதே போல் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்குள்ள காவலாளியிடம் ஒரு பையன் வருவதும், வந்து ஏதோ கேட்பதுமாக இருந்தான், அதை நாகராஜன் கவனித்துக் கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் ஆசிரமத்தில் மீதமிருந்த சாப்பாட்டை


பிரிவில் சந்திப்போம்

 

 அமைதியாகத்தான் இருந்தது. உறவினர்கள் வரும் வரை அந்தக்குடியிருப்பு பகுதி , அதில் வசித்த வயது அறுபதைக் கடந்த தம்பதியருக்கு வாரிசு என்று யாரும் இல்லை, அது பற்றிய அவர்கள் கவலையும் கொண்டதில்லை அனைவரிடமும் அன்பு காட்டிப் பழகுவார்கள் , சொந்த ஊர் நாகப்பட்டினம் , மனைவியின் சொந்தங்கள் இங்கு வசிப்பதால் துணைக்கு ஆகட்டுமே என்று சொந்த ஊரை விட்டு, வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகைக்கு வீடெடுத்து இங்கே வசிக்கின்றனர் வந்த ஒரு வருடத்தில் எல்லாரிடமும் சகஜமாக பழகும்


முன்பதிவு

 

 தானும், மனைவி மேகலாவும் வேலைக்கு சென்று வருவதால் தன்னுடைய அப்பாவை சரிவர கவனிக்க முடியவில்லை என்ற ஒரு குறை ராகவனுக்கு உண்டு. மேலும், அவனது மனைவி மேகலாவுக்கும் தற்போதைய நவீன யுக மருமகள்களை போல (விதி விலக்காக தனது மாமனாரை அப்பா போல நடத்தும் மருமகள்களும் உண்டு ) மாமனாரை தங்கள் கூடவே வைத்துக்கொள்வது எட்டிக்காயாக கசந்தது. இதன் காரணமாக மாமனாரை நேரிடையாகவும், மறைமுகமாகவும் குறை சொல்லிவந்தாள். மேலும் சமீப காலமாக ராகவனிடம் மாமாவை எங்காவது முதியோர்


காற்றின் ரூபம்

 

 தொலைபேசி ஒலி எழும்ப, காவல் ஆய்வாளர் விக்ரம் ”ஹலோ யாரு பேசுறது?” “சார் நான் சுலூரிருந்து பேசுறேன். இங்க ஒரு டேட் பாடி கிடக்குது சார். நீங்க உடனே வரணும்” என தொலைபேசியின் மறுபுறத்திலிருந்து குரல். “சரி நீங்க யாரு? உங்க பேர் என்ன?” ஆய்வாளரியின் அடுத்த கேள்விக்கு, “சார் என் பேரு சரவணன். நான் ஒரு கார் மெக்கானிக்” என பதில் சொல்ல “சரி இந்த டைம்ல உங்களுக்கு அங்க என்ன வேலை” அடுத்த கேள்வியை


துல்லியமாய் ஒரு தாக்குதல்

 

 செல்போன் ஒலித்தது. ரிங் டோனில் ஒரு காஸ்மிக் ஒலி கேட்டது. “சந்திரசேகர் ஹியர்…” என்றார். “ஒரு திருத்தம். விஞ்ஞானி சந்திரசேகர்…” என்றது மறுமுனை குரல். “இருக்கலாம். இதை நான் பொது வெளியில் சொல்லக் கூடாது…” “உங்களை நான் சந்திக்க வேண்டும்…” “ஏதாவது திருமணப் பத்திரிகை கொடுப்பதாக இருந்தால் வீட்டுக்கே வரலாம். அப்போது நான் வேட்டி கட்டியிருப்பேன். விஞ்ஞானியாக இருக்க மாட்டேன்…” “நான் விஞ்ஞானியைத்தான் சந்திக்க வேண்டும்…” “அது முடியாது…” “தேசத்தின் பாதுகாப்பு பற்றிய விஷயம். நீங்கள் நான்


ரயில்

 

  வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் ஆகாயத்தின் முழு நீலம், ஒரு சமயம் அதில் அடித்த பஞ்சைப் போன்ற வெண்மேகம், ஒரு சமயம் அத்தனையையும் மறைக்கும் புகைப்படலம். இத்தனைக்குமிடையில், அத்தனையினதும் நடு நாடி போல், அலுப்பற்று ஒரே நிதானமான வேகத்தில்,


பெரிய மனசு..!

 

 அழைத்த கைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே… “யாரு நந்தினியா..?? “- எதிர்முனையில் டாக்டர் சந்திரசேகரனின் குரல் கேட்டது. “ஆமாம் டாக்டர் ! ” “உனக்கும் உன் வீட்டுக்காரருக்கு நல்ல சேதி..” “சொல்லுங்க டாக்டர் …? ” “நீங்க…. தத்தெடுக்க பிறந்த பெண் குழந்தை வேணும்ன்னு கேட்டீங்கல்லே. பொறந்த குழந்தை கையில இருக்கு. கணவன் , மனைவி…நீங்க ரெண்டு பேரும் உடனே வந்தீங்கன்னா… கையோட எடுத்துக் போகலாம்..” அவ்வளவுதான் ! நந்தினிக்கு மகிழ்ச்சியில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.


ஒரு ரூபாய் எங்கே போச்சு!!

 

 ராமும் சோமுவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.இருவரும் ஒரே பள்ளிக் கூடத்தில் எட்டாவது படித்து வந்தார்கள்.இருவரும் பள்ளிகூடத்திலே கால் பந்து விளையாடிக் கொண்டு வந்தார்கள்.இருவரும் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ராமு தான் அந்தப் பள்ளிகூடத்தின் Goal keeper. சனிக் கிழமை,ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் அவர்கள் இருவரும் காலி யாக இருந்த கார்பரேஷன் மைதானத்தில் இருந்த கால் பந்து மைதானத்தில் கால் பந்து ஆடிப் பழகி வருவார்கள்.சோமு பல கோணங்களில் நின்றுக் கொண்டு கால் பத்தை உதைப்பான்.ராமு


தடுக்கி விழுந்தவன்

 

 குணசீலன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். படிப்பின் நடுவே மூன்று வருடங்கள் தோல்வியுற்றதால், அவனைப் பார்ப்பதற்கு கல்லூரியில் படிப்பவன் போலக் காணப்படுவான். அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் யூனிபார்ம் போட்டுக்கொண்டு பள்ளிக்கு அரை டிராயரில் வருவார்கள். ஆனால் இவன் அதே யூனிபார்மில் முழு டிரவுசர் அணிந்து கொள்வான். முற்றிய விடலைப் பருவம் என்பதால் அவனின் முகத்தில் ஏராளமான பருக்களும், மீசையும் தாடியும் காணப்படும். வீட்டிற்கு தெரியாமல் புகை பிடிப்பான். டீன் ஏஜ் துடிப்புகள் அவனிடம் அதிகம். வீட்டிற்கு