புதிய சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 2,027 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 10 | 11 – 20 | 21 – 30

11.

சின்னத்தங்கம் முற்றத்திலிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்தாள். காலை உணவை முடித்துக்கொண்டு செல்லப்பர் வெளியே சென்றிருந்தார்.

கிணற்றடியில் உடுப்புகளைத் தோய்த்துக் கொண்டிருந்த பார்வதி தனது உடைகளைக் களைந்துவிட்டு, உட்பாவாடையை நெஞ்சுக்கு மேல் குறுக்காகக் கட்டிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக் குளிக்கத் தொடங்கினாள்.

இரவு வீசிய பலத்த காற்றினால் ஆடுகால்கள் ஆட்டங்கண்டு துலாவின் அச்சுலக்கை விலகியிருந்தது. அதனால் தண்ணீர் அள்ளும்போது துலா கிணற்றின் நடுப்பகுதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

பார்வதி மிதிப்பக்கமாகத் துலாக்கொடியை இழுத்து அதனைச் சரிப்படுத்த முயன்றாள். ஆனாலும் அவளால் அது முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கிணற்றுக்குள் வாளியைத் தாழ்க்கும் போது துலாவின் நுனி கிணற்றின் நடுப்பகுதியை நோக்கி விலகிக் கொண்டே இருந்தது.

முற்றத்திலிருந்தபடியே அதனைக் கவனித்த சின்னத்தங்கம், ”பிள்ளை அச்சுலக்கை விலகிப் போச்சு, கவனமாய் அள்ளு“ எனப் பார்வதியை எச்சரித்தாள்.

”தண்ணீர் அள்ளிறது கஷ்டமாயிருக்கு? ; மாணிக்கம் ;வந்தவுடனை துலாவை அரக்கச் சொல்ல வேணும்“.

”கவனமாய் அள்ளி நாலு வாளியைக் குளிச்சிட்டு வா பிள்ளை“.

”சவுக்காரம் போட்டிட்டன், இன்னும் இரண்டு வாளி அள்ளிக் குளிச்சிட்டு வாறன்“ எனக் கூறிக்கொண்டே மீண்டும் கிணற்றுக்குள் வாளியைத் தாழ்த்தாள் பார்வதி.

இம்முறை சற்று அதிகமாகவே துலா கிணற்றின் நடுப்பகுதிக்கு விலகிச் சென்றது. பார்வதி துலாக் கொடியை வலிந்து இழுத்தாள். அப்போது சவர்க்காரம் படிந்த அவளது கால்கள் கிணற்று மிதியிலிருந்து வழுக்கியது. அதனால் ஏற்பட்ட தடுமாற்றத்தினால் துலாக்கொடியைப் பற்றிக்கொண்டு பார்வதி கிணற்றுக்குள் தொங்கினாள்.

உக்கியிருந்த துலாக்கொடி அவளது பாரத்தைத் தாங்க முடியாது படீரென அறுந்தது.

”ஐயோ அம்மா “ என அலறியபடி அவள் கிணற்றுக்குள் வீழ்ந்தாள்.

துலாவின் அடிப்பகுதி பலத்த சத்தத்துடன் நிலத்திலே மோதியது.

”ஐயோ……. என்ரை ஐயோ…. பிள்ளை கிணற்றுக்கை… விழுந்திட்டாள்….“ என அலறியபடி கிணற்றடியை நோக்கி ஓடினாள் சின்னத்தங்கம்.

கிணற்றை அவள் எட்டிப் பார்த்தபோது பார்வதி தண்ணீருக்குள் மூழ்கித் திணறிக் கொண்டிருந்தாள்.

”ஐயோ…. என்ரை ஐயோ …. பிள்ளை கிணத்துக்குள்ளை…, ஓடியாருங்கோ ஐயோ…“
சின்னத்தங்கம் பலங்கொண்ட மட்டும் கத்தினாள்.

சின்னத்தங்கம் அலறுவதைக் கேட்ட மாணிக்கமும் பொன்னியும் வேகமாக ஓடி வந்தனர். தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், ஒழுங்கையால் சென்று கொண்டிருந்தவர்களும், சிறிது நேரத்தில் அங்கு வந்து கிணற்றைச் சூழ்ந்துகொண்டார்கள். வெளியே சென்ற செல்லப்பரும் பதறியபடி ஓடிவந்தார்.

கிணற்றில் தண்ணீர் அதிகமாகவே இருந்தது. பார்வதி கிணற்றின் அடியில் அமிழ்ந்துவிட்டாள்.

துலாக் கொடி அறுந்து கிணற்றுக்கள் கிடந்ததால் ஒருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. சிலர் கயிறு, ஏணி எடுத்து வருவதற்காக அயல் வீடுகளை நோக்கி ஓடினார்கள்.

அப்போது அங்கு ஓடிவந்த மாணிக்கம் ஒரு நொடிப்பொழுதில் நிலைமையை அவதானித்துக்கொண்டான். தாமதித்தால் பார்வதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமென அவனது உள்ளம் பதறியது. கிணற்றைச சுற்றி நின்றவர்களைத் தன் இருகைகளாலும் விலக்கித் தள்ளியபடி திடீரெனக் கிணற்றுக்குள் குதித்தான். மறுகணம் தண்ணீரில் சுழியோடி பார்வதியைத் தூக்கி மேல்தளத்துக்குக் கொண்டு வந்தான்.

பார்வதி மயக்கமுற்றிருந்தாள்.

ஏணி, கயிறு எடுக்கச் சென்றவர்கள் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

எல்லோருமாக ஏணியைக் கயிற்;றில் கட்டிக் கிணற்றுக்குள் இறக்கிவிட்டார்கள்.

பார்வதியைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட மாணிக்கம், ஏணியில் ஒவ்வொரு படியாக ஏறி மெதுவாக வெளியே வந்தான். அவளது உடல் கொடிபோல அவனது தோள்களிலே துவண்டு கிடந்தது.

அமபலவாணர், சின்னத்தம்பர் முதலியோரும் வாசிக சாலையிலிருந்த வேறு சிலரும் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தனர்.

வெளியே மாணிக்கம் பார்வதியைக் கொண்டு வந்ததும் செல்லப்பர் பதட்டத்துடன் மாணிக்கத்தின் தோள்;களிலிருந்த பார்வதியை இருகைகளாலும் ஏந்திக் கொண்டார். பார்வதியின் மயக்கம் இன்னமும் தெளியவில்லை.

பார்வதி கட்டியிருந்த பாவாடை நனைந்து அவளது உடலோடு ஒட்டியிருந்தது. அதனைக் கவனித்த அங்கிருந்த பெண்கள் சிலர் அவளை உடனே வீட்டினுள் கொண்டு செல்லும்படி செல்லப்பரிடம் கூறினர்.

பார்வதியை வீட்டினுள் தூக்கிச் சென்ற செல்லப்பர் அவளைக் குப்புறக் கிடத்தி, அவள் குடித்திருந்த தண்ணீரை வெளிப்படுத்த முயன்றார். அங்கிருந்த பெண்களும் அவருக்கு உதவி செய்தனர்.

சின்னத்தங்கம் பதறியபடி பார்வதியின் உடையைக் களைந்து, அவளுக்கு மாற்றுடை அணிந்து ஈரத்தைத் துவட்டினாள்.

சிறிது நேரத்திற்குப் பின் பார்வதி முனகியபடி கண்விழித்துப் பார்த்தாள்.

மாணிக்கம் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். அவனது உடையிலிருந்தும், கலைந்த கேசங்களிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. பார்வதிக்கு ஏதும் நடந்துவிடக் கூடாது என அவனது மனம் பிரார்த்தித்தது.

செல்லப்பர் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்ற அம்பலவாணர் அவரைப் பார்த்து, ”அம்மான், பார்வதிக்கு இன்னும் மயக்கம் தெளியேல்லையோ? நான் போய்க் கார் பிடிச்சுக் கொண்டு வரட்டோ? ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக…“ எனக் கவலையுடன் கேட்டார்.

”இல்லைத் தம்பி.. கார் ஒண்டும் பிடிக்கத் தேவையில்லை. பிள்ளைக்கு இப்ப கொஞ்சம் சுகம்“.

செல்லப்பர் அம்பலவாணிரிடம் கூறிய வார்த்தைகள் மாணிக்கத்துக்குப் பெரும் ஆறுதலை அளித்தது.

கிணற்றடியில் கூடி நின்றவர்க்ள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினார்கள்.

”வாடா, வந்து உடுப்பைக் மாத்து. நீயும் நல்லாய் விறைச்சுப் போனாய்“ பொன்னி மாணிக்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அப்போது அங்கு நின்றவர்கள் கதைத்த கதைகள் மாணிக்கத்துக்கு ஆத்திரத்தை ஊட்டியது.

”கிணத்துக்கை விழுந்தவளைத் தூக்க உவன் மாணிக்கனைத் தவிர உங்கை வேறை ஒரு தரும் இல்லையோ….?“

”கொடி பிடிச்சுக் கிணத்திலே தண்ணீர் அள்ளக் கூடாதவன், கிணத்துக்கை குதிச்செல்லோ தூக்கியிருக்கிறான்….“

”நாங்கள் ஏணியைக் கட்டி கிணத்துக்கை இறக்க முன்னம் அந்த கீழ்சாதிக்காரன் குதிச்சிட்டான்..“

”எல்லாம் உவர் செல்லப்பர் குடுத்த இடந்தான்.. அவனை எந்த நேரமும் வீட்டிலை அடுத்து வைச்சிருந்தால், அவனுக்குத் துணிவு வருந்தானே..“

மாணிக்கத்தின் உள்ளத்தில் சொல்லம்புகள் மாறிப்மாறிப் பாய்ந்தன.

”கிணத்துக்குள்ளை விழுந்தவளைக் காப்பாத்த ஒருத்தருக்கும் நெஞ்சுத் துணிவு இல்லை. இப்ப நியாயம் பேசினம்“.

மாணிக்கம் கொதித்தெழுந்தான்.

”டேய், பொத்தடா வாயை… நாங்கள் எங்களுக்குள்ளை கதைச்சால் உனக்கென்னடா…?“ மாணிக்கத்தை முறைத்துப் பார்த்தார் அங்கு நின்ற சின்னத்தம்பர்.

பொன்னி பதட்டத்துடன் ”கமக்காறன், நீங்க போங்கோ… அவன் கிடக்கிறான்…“ எனச் சின்னத்தம்பரைப் பார்த்துக் கூறிவிட்டு, ”வாடா நீ… வீண் கதை கதைக்காதை “ என மாணிக்கத்தைப் பிடித்து இழுத்து கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.

”உவன் வர வர மிஞ்சிக் கொண்டு போறான். உவனை விட்டு வைக்கப்படாது-“ சின்னத்தம்பர் கறுவிக்கொண்டு அந்த இடத்தை விட்டகன்றார்.

அங்கு நடந்த சம்பாஷணைகள் அனைத்தும் செல்லப்பரது காதிலும் விழத்தான் செய்தன.

12.

கிணற்றுக்குள் விழுந்ததில் பார்வதிக்குப் பெரிதாகக் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கால்கள் இரண்டும் விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தன? எங்கோ கற்பாறையில் அடிபட்டிருக்க வேண்டும். அவளால் எழுந்து நடமாட முடியவில்லை. படுத்தபடுக்கையாகவே கிடந்தாள். செல்லப்பர் வேலைக்குப் புறப்பட்டபோது சின்னத்தங்கம் அவரைத் தடுத்து, பார்வதிக்கு ஓரளவு குணமாகும்வரை வீட்டிலேயே தங்கும்படி வேண்டிக்கொண்டாள்.

பார்வதி கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்ததும் செல்லப்பரின் சகோதரி அன்னம்மா அங்கு வந்திருந்தாள். பார்வதியால் எழுந்து நடமாட முடியாததைப் பார்த்ததும் அவள் பகல் வேளைகளில் அங்கு தங்கி சின்னத்தங்கத்துக்கு உதவியாக வீட்டு வேலைகளைக் கவனித்தாள். பார்வதியின் வலியெடுத்த கால்களுக்கு அன்னம்மாதான் ஏதோ கைவைத்தியங்கள் செய்து ஒத்தடமும் கொடுத்தாள்.

இரண்டு நாட்களின் பின்புதான் பார்வதியால் ஓரளவு வெளியே எழுந்து நடமாடக் கூடியதாக இருந்தது.

அன்று பின்னேரம் துரைசிங்கம் முதலாளி செல்லப்பரைத்தேடி வந்தார். சில முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர் செல்லப்பரோடு பேச வேண்டியிருந்தது. அவர் அங்கு வந்தபோது சின்னத்தங்கம் வீட்டுத் திண்ணையிலிருந்து கிழிந்துபோன பனையோலைப் பெட்டியொன்றைப் “பொத்தி’ க்கொண்டிருந்தாள். செல்லப்பர் அவளோடு கதைத்துக்கொண்டு சார்மனைக் கதிரையில் படுத்திருந்தார்.

அன்னம்மா குசினியிலிருந்து அவர்களுக்கு இரவுச் சாப்பாடு தாயாரித்துக்கொண்டிருந்தாள். பொழுது படுவதற்கு முன்னரே, அவள் தனது வீட்டுக்குப் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகச் சமையலில் ஈடுபட்டிருந்தாள்.

துரைசிங்கம் முதலாளி அங்குவந்ததும் ”வாருங்கோ அண்ணை“ எனச் செல்லப்பர் அவரை வரவேற்றார்.

சின்னத்தங்கம் எழுந்து உள்ளே சென்று வெத்திலைத் தட்டை
எடுத்துவந்து திண்ணையில் வைத்தாள்.

”நான் உங்காலை சந்திப்பக்கம் போகவேணும். போற வழியிலை இங்கையும் ஒருக்கா எட்டிப்பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தன்…. எப்பிடி மகள் கிணத்திலை விழுந்ததிலை ஏதேன் அடிகிடி பட்டுப்போச்சோ ….î?“ எனக்கேட்டபடி செல்லப்பருக்குப் பக்கத்திலிருந்த கதிரையில் உடகார்ந்தார் துரைசிங்கம்; முதலாளி.

செல்லப்பர் பதில் கூறுவதற்கு முன் சின்னத்தங்கம் குறுக்கிட்டு, ”அதையேன் கேக்கிறாய் துரைசிங்கண்ணை, கண்ணிலே வந்தது புருவத்தோடை போனமாதிரி … பிள்ளை அருந்தப்பிலை தப்பிவிட்டாள். இன்னும் கொஞ்சநேரம் தண்ணீருக்கை இருந்திருந்தால் இண்டைக்கு பிள்ளை இங்காலை இல்லை…“ எனக் கூறினாள்.

”காலிலை கொஞ்சம் அடிப்பட்டுப் போச்சு“ என்றார் செல்லப்பர் அவளைத் தொடர்ந்து.

”ஓ.. உங்கடை கிணத்திலை தண்ணீர் கூடத்;தானே… அதுதான் கைகாலுக்குச் சேதமில்லாமல் மகள் தப்பிவிட்டாள்“ எனக் கூறிக்கொண்டே வெற்றிலைத் தட்டைக் கையிலெடுத்தார் துரைசிங்கம் முதலாளி.

”தம்பி வெத்திலையைப் போடாதையுங்கோ… இங்கை நான் தேத்தண்ணி கொண்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டு அன்னம்மா தேநீருடன் அங்கு வந்தாள்.

அப்போதுதான் அவளைக் கவனித்த துரைசிங்கம் முதலாளி ”இங்கை அன்னம்மா அக்காவும் உதவிக்கு வந்திருக்கிறா… பிறகென்ன“ எனச் சிரித்தப்படி கூறினார்.
தேநீரைத் துரைசிங்கம் முதலாளியின் அருகில் வைத்துவிட்டு அன்னம்மாவும் சின்னத்தங்கத்தின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

”மச்சாள்தான் எங்களுக்குப் பெரிய உதவி. … அவ இல்லாட்டில் எங்கடைபாடு பெருங் கஷ்டமாய்ப்போம.; முந்தியைப்போலை இப்ப என்னாலை ஓடியாடி வேலைசெய்யே லாது“ எனக் கூறினாள் சின்னத்தங்கம்.

”உங்களுக்கு இந்த நேரத்திலை செலவுக்கு ஏதும் காசுகீசு தேவையாயிருக்கும் …. இதிலை ஒரு ஐம்;பது ரூபாயிருக்கு… வச்சுக்கொள்ளுங்கோ“ எனக் கூறிக்கொண்டு துரைசிங்கம் முதலாளி ஒரு நோட்டை எடுத்துச் செல்லப்பரிடம் கொடுத்தார்.
”என்னத்துக்கண்ணை இதெல்லாம்“ எனக் கூறிய செல்லப்பர் பணத்தை வாங்கிச் சின்னத்தங்கத்திடம் கொடுத்தார்“.

”செல்லப்பர், நான் உன்னோடை ஒரு முக்கியமான விஷயம் கதைக்கத்தான் வந்தனான்“.

”என்னண்ணை அப்பிடியென்ன விஷயம், …அவசரமாய் எங்கையாலும் லொறிகொண்டு போக வேணுமோ…?“

”சா… அதுக்கில்லை … உவன் கோவிந்தன்ரை பெடியன் மாணிக்கனுக்கு நீ நல்லாய் இடங் குடுக்கிறாய.; என்னுடைய காதிலும் சிலபல கதையள் விழுகுது. அதைத்தான் உன்னட்டை ஒருக்காய் சொல்லி வைக்கலாமெண்டு வந்தனான்“.

”அப்பிடி நான் என்னண்ணை அவனுக்கு இடங்கொடுக்கிறன்….?

”அவங்களை வைக்க வேண்டிய இடத்திலைதான் வைக்கவேணும் இல்லாட்டில் தலையிலை ஏறிவிடுவங்கள்… அவன் மாணிக்கனுக்கு இந்த வீட்டிலை கூடின உரிமை இருக்கிற படியாலைதான் அவன் ஒரு வேளாளரையும் மதிக்கிறானில்லை“.

”இல்லையண்ணை நான் வெளியிடங்களுக்குப் போகேக்கை அவன்தான் இங்கை இவையளுக்கு உதவியாய் இருக்கிறவன். அதுக்காகத்தான் இங்கை வந்து போறவன்“.

”அதெல்லாஞ்சரி அவன் என்னோடையே றேட்டிலை கொளுவினவன்? நீ என்னட்டை வந்து, வீட்டிலை உதவிக்கு இருக்கிற பெடியன் எண்டு சொன்னபடியாலைதான் நான் அவனை விட்டு வைச்சிருக்கிறன். பிறகு பார்த்தால்;, முந்தநாள் சின்னத்தம்பர் ஆக்களோடும் எதிர்த்துக் கதைச்சானாம்…“

”இல்லை துரைசிங்கண்ணை, பிள்ளை கிணத்துக்கை விழுந்தவுடனை அவன் குதிச்சுத் தூக்கினத்துக்கு உவை நாலஞ்சுபேர் நொட்டையள் சொல்லிச்சினம் … அதுதான் அவனும் எதிர்துக் கதைச்சுப் போட்டான்“; என்றாள் சின்னத்தங்கம்.

”அது சரி, அந்த இடத்திலே நாலு வேளாளர் இருந்தவைதானே, அவையள் உங்கடை மகளைத் தூக்காமலோ விடப்போயினம் … எப்பிடியும் தூக்கி இருப்பினந்;தானே. அவன் ஏன் தூக்கினவன்?“

”ஆபத்து நேரத்திலை உதுகளைப் பாக்க முடியுமோ?“ சின்னத்தங்கம் தான் கூறினாள்.

”என்னதான் இருந்தாலும் கொடி பிடிச்சு அள்ளக் கூடாத ஒரு கீழ்சாதிக்கு கிணத்துக்கை குதிக்கிற அளவுக்குத் துணிவு வந்ததுக்குக் காரணம் நீங்கள் குடுத்த இடந்தான்.
ஊரிலை இதைப்பற்றி எக்கச்கமான கதையள் நடக்குது… இப்ப இரண்டு நாளாய் வாசிகசாலையிலும் இதுதான் கதை“.

”என்னண்ணை அப்பிடி என்ன கதைக்கினம்?“ எனக் கேட்டாள் சின்னத்தங்கம் பதட்டமாக.

”என்னட்டையும் வீட்டிலை ஒரு குமர் இருக்கு.. என்ரை வாயாலை நான் எப்பிடி அதுகளைச் சொல்லுறது? எதுக்கும் மாணிக்கனை இனிமேலெண்டாலும் இங்கை வர வேண்டாமெண்டு சொல்லி வைக்கிறதுதான் நல்லது“ என்றார் துரைசிங்கம்; முதலாளி.

அப்போது அன்னம்மா, ”ஊர் வாய்க்கு அவல் கிடைச்சா நல்லா மெல்லத்தான் செய்யும்? இந்த ஊரிலை ஒண்டெண்டால் பத்தெண்டுதான் சொல்லுவினம். அண்டைக்கு மாணிக்கன் குதிச்சுத் தூக்கியிராவிட்டால் இண்டைக்குப் பார்வதியை உயிரோடை பாக்கேலாது. அவன் தூக்கினதாலை இப்பென்ன அவளிலை ஏதோ ஒட்டிப்போச்சோ..“ என்றாள் படபடப்புடன்.

”அதில்லை அக்கா, நாளைக்கு கல்யாணஞ்செய்து வாழ வேண்டிய பிள்ளையைப்பற்றி வீண்கதையள் கிளம்பிறதுக்கு நாங்கள் இடங் குடுக்கப்பிடாது, அவ்வளவுதான் நான் சொல்லுவன்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.

”தம்பி, அப்பிடியொருத்தரும் அவளுக்கு மாப்பிளை குடுக்காட்டில் நான் குடுப்பன்“ என்றாள் ஆவேசமாக அன்னம்மா.

”அது சரி.. எனக்கு வேலை இருக்கு, நான் போவேணும். பூநகரியிலையிருந்து எரு ஏத்திறதுக்கு முந்தநாளே லொறி அனுப்பிறனெண்டு சொன்னனான். அச்சவாரமும் குடுக்கேல்லை. அதைப்பற்றித்தான் யோசினையாய் இருக்கு“ எனச் செல்லப்பரைப் பார்த்துக் கூறியபடி எழுந்திருந்தார் துரைசிங்கம் முதலாளி.

”அதுக்கேன் அண்ணை யோசிக்கிறாய,; ..? நாளைக்கே நான் போறன்“
எனக் கூறிக்கொண்டே செல்லப்பரும் எழுந்து துரைசிங்கம் முதலாளியை வழியனுப்பி வைத்தார்.

இதுவரை நேரமும் வெளியே நடந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வதி, கல்லாய் சமைந்திருந்தாள்.

13.

அன்னமார் கோயில் வேள்விக்கு இன்னும் பத்தே நாட்கள்தான் இருந்தன. கோவிந்தனும் அவனது இனத்தவர்களும் வருடாவருடம் வேள்வியை வெகு விமர்சையாகக் கொண்டாடுவார்கள். அன்னமார் அவர்களுடைய குலதெய்வம் அத்தெய்வத்திற்கு கேள்வியன்று பலியிடுவதற்காக ஆடு, கோழி முதலியவற்றை நேர்த்திவைத்து வளர்த்துவருவார்கள். ஊரிலுள்ள வேளாளர்களும் அன்னமாருக்கு நேர்த்திக்கடன் செய்வதுண்டு.

கேள்விக்குரிய ஆயத்தங்களை வெகு மும்முரமாகக் கோவிந்தன் செய்து கொண்டிருந்தான். வழக்கம்போல் இம்முறையும் பாடடுக்கச்சேரி, மேளக்கச்சேரி , சதுர்க்கச்சேரி, வாணவேடிக்கைகள் போன்றவற்றிற்கு ஒழுங்கு; செய்திருந்தான்.
கோவிந்தனது வீட்டிலிருந்து சற்றுத் தூரத்திலேதான் அன்னமார் கோயில் இருக்கிறது. பனை வடலிகள் நிறைந்த சூழலில் நன்றாகப் பருத்து விழுதுகள் விட்ட ஆலமரத்தின் கீழ் அன்னமார் குடிகொண்டிருக்கிறார். கோயிலைச் சுற்றியுளள் பகுதியில் கற்றாழை மரங்களும், நெருஞ்சி முட்புதர்களும் நிறைந்திருக்கும். இப்போது கோயிலைச் சுற்றியுள்ள பகுதியைத் துப்புரவு செய்து வேள்விக்கு வருபவர்கள் தங்குவதற்காக ஒரு தட்டிப் பந்தலும் போட்டிருந்தார்கள்.

வேள்வியன்று எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருப்பதற்குரிய ஒழுங்குகளையும் கோவிந்தன் செய்திருந்தான்.

வழக்கமாக செல்லப்பர், துரைசிங்கம் முதலாளி, சின்னத்தம்பர் முதலியோர்தான் வேள்வியை முகாமைக்கு நின்று நடத்தி வைப்பார்கள். அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்கென கோவிந்தன் போதியளவு சாராயமும் வாங்கியிருந்தான். வேள்விக்கு வருபவர்கள் தங்குவதற்கென கோவிந்தனது வீட்டு வாசலிலும் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது.

வீட்டு முற்றத்திலிருந்த தீட்டுக்கட்டையில் ஆடு பலியிடும் கத்தியை தீட்டிக் கூர்பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்தன். சற்று நேரத்திற்கு முன்னர்தான்; அவன் கொல்லன் பட்டறையிலிருந்து அக்கத்தியைத் “தோய்ந்து’ வாங்கிவந்திருந்தான்.

வேள்வியன்று, கோவிந்தன் உருக்கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்த கிடாய்களை ஒரே வெட்டில் அந்தக் கத்தியாலேதான் வெட்டிச் சாய்ப்பான்.

வீட்டுத் தாழ்வாரத்தில் கட்டியிருந்த கிடாய் ஆட்டுக்கு பிண்ணாக்கை ஊட்டிக் கொண்டிருந்தாள் பொன்னி. அந்தக் கிடாய் நன்றாகப் பருத்துக் கொழுத்து மினுமினுப்புடன் காட்சியளித்தது. கேள்வியன்று பலி கொடுக்கப்படும் முதற்கிடாய் அது.

”மாணிக்கனைக் காணேல்லை, எங்கை போட்டான்?“

தீட்டிய கத்தியை விரலினால் கூர்பார்த்தபடி பொன்னியிடம் கேட்டான் கோவிந்தன்.
”உங்கினைதான் நிண்டவன்? ஒருவேளை கோயிலடிப்பக்கம் போயிருப்பன்“ என்றாள் பொன்னி.

”இந்த முறை கேள்வியைப்பற்றி கமக்காறரவையோடு கதைச்ச பொழுது எல்லோரும் மாணிக்கனைப்; பற்றித்தான் குறை சொன்னவை. வேள்வி முடியுமட்டும் அவனைக் கண்டபடி வெளியிலை விடாதை. கமக்காறவை கறுவிக்கொண்டு திரியினம். தனிக்கையிலை வைச்சு அவனுக்கு அடி உதையிலும் விடுவினம்“.

அப்போது தட்டிப்படலையைத் திறந்துகொண்டு பொன்னியின் கூடப்பிறந்த சகோதரனான குட்டியன் அங்கு வந்தான். அவனது காதிலும் கோவிந்தன் கூறிய வார்த்தைகள் விழுந்தன.

”மச்சான், …அதைப்பற்றித்தான் உன்னோடை நானும் கதைக்க வேணுமெண்டு வந்தனான்“. எனக் கூறிக்கொண்டே திண்ணையில் அமர்ந்தான் குட்டியன்.

”என்ன குட்டியன் செய்யிறது. நீயும் எல்லா விஷயமும் கேள்விப்பட்டிருப்பாய். அவன் கமக்காறரவையோடை கொழுவிப்போட்டான். வேள்வி முடியுமட்டும் ஒரு கலம்பகமும் இல்லாமலிருந்தால்தான் வேள்வியை ஒழுங்காய் நடத்தலாம்“.

பொன்னி மௌனமாக இருந்தாள். அவளது உள்ளத்தில் சில நாட்களாக இனம்புரியாத பயங்கரம் குடிகொண்டிருந்தது. மாணிக்கத்துக்கு ஏதோ தீங்கு நடக்கப் போகிறதென அவளது உள்ளம் கூறிக்கொண்டேயிருந்தது. அநேகமாக வேள்வியன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் நடக்கலாம். அன்று கமக்காறவை மது போதையில் இருப்பார்கள். சந்தர்ப்பம் வரும்போது ஏதும் தீங்கு செய்து விடுவார்கள் என நினைத்துக் கலங்கிய வண்ணம் இருந்தாள்.

”செல்லப்பர் கமக்காரன் வீட்டுக்கு அடிக்கடி மாணிக்கம் போய்வாறதாலை தான் ஊரிலை வீண் கதையள் கிளம்புது. இப்பிடிப்பட்ட கதையள் வாறது கமக்காறாரவைக்கும் கூடாது? எங்கடை ஆக்களுக்கும் கூடாது. இதனாலை ஏதேன் கரச்சல் வந்தால் அது எல்லோரையுந்தான் பாதிக்கும்“.; எனக் கூறினான் குட்டியன்.

”நான் மாணிக்கனைச் செல்லப்பர் கமக்காறன் வீட்டுப் பக்கம் போக வேண்டாமெண்டு சொல்லிப் போட்டன். இப்ப அவன் அங்கை போறதில்லை“.

”மாணிக்கத்தை எங்கடை கட்டுப்பாட்டுக்குள்ளை கொண்டாறதெண்;டால், சுறுக்காய் அவனுக்குக் கலியாணத்தை முடிச்சு வைக்கிறதுதான் நல்லது. அப்பதான் அவனுக்கு நாலையும் யோசிச்சுப் பார்க்கிற தன்மைவரும்“.

”ஓம் தம்பி …. நீ சொல்லுறது சரி. அவனுக்கு கால்கட்டைப் போட்டால்தான் வீட்டோடை இருப்பன். எங்களுக்கும் உதவியாய்த் தோட்டம் துரவைப் பாப்பன்“; எனப் பொன்னி குட்டியனுக்குச் சார்பாகப் பேசினாள்.

”நீங்கள் இரண்டு பேரும் உதைப்பற்றிச் சொல்லமுன்னமே நான் மனசிலை ஒரு திட்டம் போட்டிட்டன். வேள்வியண்டைக்கே உன்ரை மேள் கண்மணியைக் கொண்டு அவனுக்கு ‘சோறு குடுப்பிச்சு’ப் போடவேணும்“. என்றான் கோவிந்தன்.

”கண்மணியை மாணிக்கத்துக்கு குடுக்கிறதெண்டு தானே முந்தியே நாங்கள் முடிவு செய்திருக்கிறம். ஆனால், திடீரெண்டு எப்பிடி மச்சான் கலியாணம் நடத்திறது? அவள் பெட்டையின்ரை நகையெல்லாம் அடைவிலை கிடக்கு, இந்தப் போகத்துக்கு வெங்காயங் கிண்டி வித்த பிறகுதான் ஏதேன் செய்ய வேணும்“ எனக் கூறினான் குட்டியன்.

”அப்ப சரி குட்டியன், உன்னுடைய வசதியைப்போலை செய்வம் … இப்ப ஒருக்கா கோயிலடிப்பக்கம் போக வேணும். அங்கை கொஞ்ச லையிருக்குது? நீயும் வாவன் இரண்டு பேருமாய்ப்போய் அதைச்செய்வம்“ எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்த கோவிந்தன், பொன்னியிடம் கத்தியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான்.

”நீ போ மச்சான்.. எனக்கு இன்னும் இரண்டு பனை இருக்கு? நேரத்தோடை சீவிப்போட்டு வாறன்“ எனக்கூறிவிட்டு குட்டியனும் புறப்பட்டான்.

மாணிக்கம் அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பினான். தூரத்தில் வரும்பொழுதே, குட்டியன் வீட்டுக்கு வந்துவிட்டுச் செல்வதை அவன் அவதானித்திருந்தான்.

”என்ன ஆச்சி … அம்மான் வந்திட்டு போறார். ;என்ன சங்கதி?“ எனத் தாயிடம் கேட்டான் மாணிக்கம்.

”உன்ரை விஷயமாய்த்தான் கொப்புவும் , கொம்மானும் கதைச்சுப் போட்டு போயினம்“.

”அப்பிடி என்ன ஆச்சி என்னைப்பற்றிக் கதைச்சவை?“

”கண்மணியைக் கொண்டு இந்த வேள்வியோடை உனக்குச் ‘சோறு குடுப்பிக்க’வேணுமெண்டு கொம்மான் சொல்லிப்போட்டுபோறார். அவையளும் எத்தனை நாளைக்கு அவளை வீட்டுக்கை வைச்சிருக்கிறது?“

”அது மட்டும் கடைசி வரைக்கும் நடக்காது ஆச்சி“ மாணிக்கத்தின் இந்தப் பதிலை பொன்னி சற்றும் எதிர் பார்க்கவில்லை. திகைத்து நின்றாள்.

”ஆச்சி நீங்கள் எல்லாரும் கமக்காறரவையின்ரை காணியிலை இருந்துகொண்டு அடிமைச் சேவகம் செய்யிறமாதிரி என்னாலை செய்ய முடியாது. எனக்கெண்டு சொந்தத்திலை காணி பூமி தேடிக்கொண்டுதான் நான் கலியாணம் செய்வன்“.

மாணிக்கத்தின் கூற்றில் உறுதி தொனித்தது.

14.

பார்வதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அவள் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்தவர்கள் அவளிடம் வந்து குசலம் விசாரித்துச் சென்றார்கள். ஆனால், மாணிக்கம் அதன்பின் ஒரு நாளாவது தன்னை வந்து பார்க்காதது அவளுக்குப் பெரும் வேதனையாக இருந்தது. எந்த நாளும் தவறாது வீட்டுக்கு வருபவன் ஏன் இப்படித் திடீரென வருவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்?

ஒருவேளை அப்புதான் துரைசிங்கம் முதலாளியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மாணிக்கத்தை வீட்டுப்பக்கம் வரவேண்டாமென கூறியிருப்பாரோ….? இருக்காது, அப்பு ஒரு போதும் நன்றியற்றதனமாக அப்படிக் கூறமாட்டார்.

பல வருடங்களாக நெருங்கிப்பழகிய மாணிக்கத்துக்கு இப்படித் திடீரென வராமல் இருப்பதற்கு எப்படித்தான் மனம் வந்தது? யார் என்ன கூறியிருந்தாலும் ஒருதடவை, ஒரேயொரு தடவையாவது இங்கு வந்து என்னைப் பார்க்கக் கூடாதா?

கிணற்றுக்குள்ளையே என்னைச் சாகவிட்டிருக்கலாம்… என்னைக் காப்பாற்றிவிட்டு ஏன் எனது மனதைச் சித்திரவதைப்படுத்த வேண்டும்? இப்படி வராமல் இருப்பதானால் என்னைக் ;காப்பாற்றாமலே இருந்திருக்கலாம்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியொன்று பார்வதியின் நினைவில் வந்தது.

அவள் அழகான கிளியொன்றை ஆசையோடு வளர்த்துவந்தாள். செல்லப்பர் ஒரு முறை கிளிநொச்சியிலிருந்து திரும்பி வரும்போது அந்தக் கிளியை அவளுக்காக வாங்கிவந்தார். அவள் அதற்கு உணவு ஊட்டுவாள? அதற்குப் பேசக் கற்றுக்கொடுத்துக் கொஞ்சி விளையாடுவாள்.

மாணிக்கம் அங்கு வரும் வேளைகளில் அது அவனைப் பெயர் சொல்லி அழைக்கும். பார்வதிதான் அதற்கு அவனது பெயரைச் சொல்லிக் கொடுத்தாள்.

மாணிக்கமும் பார்வதியும் கதைத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டால் அந்தக் கிளி “மாணிக்கம் – பார்வதி, மாணிக்கம்-; பார்வதி’ எனக் கத்திக்கொண்டே இருக்கும். அப்போது பார்வதி “சீ வாயை மூடு ‘என அதனைப் பொய்க்கோபத்துடன் கடிந்துகொள்வாள். அதற்கு, கிளியும் ‘சீ வாயை மூடு’ எனத் திருப்பிக் கூறும். அதைக் கேட்டு மாணிக்கம் வேடிக்கையாகச் சிரிப்பான்.

”சோடியைப் பிரிச்சு இப்படிச் சுதந்திரம் இல்லாமல் கிளியை அடைச்சு வைச்சிருக்கக் கூடாது“ என மாணிக்கம பார்வதியிடம்; அடிக்கடி கூறுவான்.

”அப்படியானால் இந்தக் கிளிக்கு ஒரு சோடியைப் பிடிச்சுத் தாவன்? இரண்டும் சேர்ந்து இருக்கட்டும்’ எனப் பார்வதி மாணிக்கத்திடம் வேண்டுவாள்.

ஒரு நாள் மாணிக்கம் அங்கு வந்திருந்த வேளையில் அந்தக் கிளி “மாணிக்கம் …மாணிக்கம் ‘என அழைத்துகொண்டே இருந்தது. கூண்டுக்குள் கையை விட்டு அதனை வெளியே எடுத்து, பட்டுப்போன்ற மிருதுவான இறக்கையை மெதுவாக வருடிக்கொடுத்தான் மாணிக்கம். அப்போது அவன் சற்றேனும் எதிர்பார்க்காத வகையில் அவனது விரல்களை அந்தக் கிளி பலமாக கொத்திக் குதறியது. ‘ஐயோ…’ என அவன் கையை உதறியபோது அது சுதந்திரமாக மேல்நோக்கிப் பறந்துவிட்டது. பார்வதிக்கு எப்படிச் சமாதானம் கூறுவதென்றே அவனுக்குப் புரியவில்லை.
அவன் எவ்வளவோ கூறியும் பார்வதியின் மனம் சாந்தமடையவில்லை. வேண்டுமென்றே கிளியைப் பறக்கவிட்டு விட்டதாக அவள் அவனைத் திட்டினாள்? கோபமாக ஏசினாள். வீட்டுக்கு வரவேண்டாமெனவும் கடிந்து கொண்டாள்.
பார்வதியின் ஏச்சுப் பேச்சுக்களைப் பொறுத்துக் கொண்டிருந்த மாணிக்கம், அவள் தன்னை வீட்டுக்கு வரவேண்டாமெனக் கூறியபோது ரோசத்துடன் விருட்டென எழுந்து சென்றுவிட்டான்.

அப்போது பார்வதி மிகவும் கலக்கமடைந்தாள். சற்று அளவுக்கு மீறித் தான் மாணிக்கத்தை ஏசிவிட்டதை உணர்ந்து வருத்தமடைந்தாள்.

மறுநாள் மாணிக்கம் அங்கு வராத போது, இனி ஒரு போதும் மாணிக்கம் வரமாட்டானோ என எண்ணி அவள் ஏங்கினாள்.

ஆனால் அடுத்தநாளே அவள் எதிர்பார்க்காத வேளையில் அவன் அவளிடம் வந்தான்.

“என்ன பார்வதி, என்னோடை கோவமோ?’ மாணிக்கம் அவளிடம் கேட்டான்.

“எனக்கொரு கோவமுமில்லை’ எனக் கூறிப் பார்வதி சிரித்தாள்.

பார்வதியின் சிந்தனை கலைந்தது.

வீட்டுக்கு வரவேண்டாமெனத் தான் கடிந்துகொண்ட போதுகூட, வருவதை நிறுத்திக்கொள்ளாத மாணிக்கத்துக்கு இப்போது மட்டும் இங்கு வராமல் இருப்பதற்கு எப்படி மனம் லந்தது எனப் பார்வதி சிந்தித்துப் பார்த்தாள். கிணற்றுக்குள் விழுந்தபோது மாணிக்கம் எப்படி என்னைத் தூக்கி யிருக்ககூடும? அப்போது நான் உட்பாவாடை மட்டுந்தான் அணிந்திருந் தேன். என்னைக் கட்டி அணைத்துத் தனது தோளில் சாய்த்துக் கொண்டுதான் மாணிக்கம் வெளியே தூக்கி வந்திருக்க வேண்டும். அந்தக் காட்சியை அங்கு நின்ற எல்லோரும்தானே பார்த்திருப்பார்கள். இதை நினைத்தபோது அவளுக்கு வெட்கமாக இருந்தது.

ஊரிலே ஏதேதோ கதைகள் உலாவுவதாகத் துரைசிங்கம் முதலாளி தந்தையிடம் கூறியது அவளுக்கு ஞாபகம் வந்தது. நிச்சயமாகத் தன்னையும் மாணிக்கத்தையும் இணைத்துத்தான் கதைகள் கிளம்பியிருக்கவேண்டுமென்பது பார்வதிக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் அவனுடன் நெருங்கிப் பழகி இருக்கிறாள். மற்றவர்கள் தயங்கிய போது, அவன் கிணற்றுக்குள் குதித்து அவளைக் காப்பாற்றி இருக்கிறான். பின்பு ஊரிலே கதைகள் கிளம்புவதற்குக் கேட்கவா வேண்டும?

கடந்த சில நாட்களாகக் கோவிந்தன் தான் அவளது மாட்டுக்கு ஓலைவெட்டிக் கொணர்ந்து போட்டுவிட்டுச் சென்றான். கூப்பன் அரிசி வாங்குவதற்கு பொன்னியைத்தான. அனுப்பிவைத்தாள் சின்னத்தங்கம்.

கோவிந்தனோ, பொன்னியோ, மாணிக்கத்தைப்பற்றி அவளிடம் எதுவும் கதைக்கவில்லை. பார்வதிக்கும் அவர்களிடம் மாணிக்கத்தைப்பற்றிக் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. மாணிக்கத்துடன் சேர்ந்து, தான் ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போன்ற உணர்வு அவளது மனதிலே தோன்றியிருந்தது.

வழக்கமாகப் பார்வதி இரவில் சின்னத்தங்கம் படுக்கும் அறையில்தான் நித்திரை செய்வாள். கடந்த இரண்டு நாட்களாக நித்திரையில் அவள் ஏதோ கனவுகண்டு புலம்புவதாகச் சின்னதங்கம் அவளிடம் கூறினாள். அதைக் கேட்டபோது அவளுக்கு மேலும் கலக்கமாக இருந்தது. ஒருவேளை மாணிக்கத்தின் பெயரைச் சொல்லி, தான் ஏதாவது நித்திரையில் உளறிவிட்டால் தாய்கூடத் தன்னைச் சந்தேப்படுவாளே என அவளுக்குப் பயமாக இருந்தது.

15.

வேள்விக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன. கோவிலையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் அலங்கரிப்பதில் மாணிக்கமும் வேறு சிலரும் முனைந்திருந்தனர். சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். கடந்த நான்கைந்து நாட்களாக அவர்கள் கோவிலின் சுற்றாடலிலேதான் தமது நேரத்தைக் கழித்தார்கள். மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி கூடிநின்று கும்மாளம் அடித்தார்கள். மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி கூடிநின்று கும்மாளம் அடித்தார்கள். ஆரவாரம் செய்து நிலத்திலே பரவியிருந்த மணலில் உருண்டு புரண்டார்கள்.

கோவிலின் பந்தற்கால்களுக்கு வர்ணக் கடதாசிகளைச் சுற்றி அழகுபடுத்திக் கொண்டிருந்தான் மாணிக்கம். திடீரென அவனது முதுகில் யாரோ அறைந்தார்கள். மாணிக்கம் திடுக்குற்றுத் திரும்பிப் பார்த்தான். அங்கு சிரித்த வண்ணம் அவனது நண்பன் கந்தசாமி நின்றுகொண்டிருந்தான். மாணிக்கத்திற்குத் தனது கண்களையே நம்பமுடியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டோடிய கந்தசாமி, இப்போதுதான் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறான். கந்தசாமியின் தோற்றம் மாணிக்கத்துக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. புத்தம் புதிய வேட்டி, உயர்ந்தரக சேட், கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரம், விரலில் பளபளக்கும் தங்கமோதிரம், அலையலையாக வாரிவிடப்பட்ட கிராப்பு, நாலு வருடங்களுக்குள் கந்தசாமியில் எவ்வளவோ மாற்றங்கள்.

”மாணிக்கம், அப்படி என்னடா பார்க்கிறாய்?“ திகைத்து நின்ற மாணிக்கத்தின் அருகே சென்று அவனது கைகளை அன்புடன் பற்றிக்கொண்டான் கந்தசாமி.

அங்கு நின்ற சிறுவர்கள் ஓடிவந்து கந்தசாமியை வளைத்துக்கொண்டார்கள். சிலர் அவனது உடைகளைத் தொட்டுப் பார்த்தார்கள். கந்தசாமி எல்லோரையும் பார்த்துப் பெருமையுடன் சிரித்தான். அங்கு நின்ற எல்லோருக்குமே அவன் ஒரு புத்தம்புது மனிதனாகக் காட்சியளித்தான்.

”எப்ப மச்சான் வந்தனி?“ -மாணிக்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கந்தசாமியிடம் கேட்டான்.

”காலமைதான் வந்தனான். வீட்டிலை சூட்கேஸை வைச்சிட்டு நேரே உன்னட்டைத்தான் வாறன்“.

”வா மச்சான,; ஆறுதலாய் இருந்து கதைப்பம்“ கந்தசாமியைக் கோவிலிலிருந்து சற்றுத் தூரத்திலுள்ள தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றான் மாணிக்கம். நன்பர்கள் இருவரும் அன்போடு அளவளாவினார்கள்.

கந்தசாமி தனது கதையை மாணிகத்திடம் கூறினான்.

யாருக்குமே சொல்லாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்ட கந்தசாமி, நேராக முத்தையன்கட்டுக்குச் சென்றான். முத்தையன்கட்டில் அப்போது போதியளவு கூலிவேலையும, கூலிக்கேற்ற் ஊதியமும் கிடைத்தன. காடாகக் கிடந்த இடமெல்லாம் செல்வம் கொழிக்கும் பூமியாக மாறிக் கொண்டிருந்த நேரமது. அரசாங்கத்தினர் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கினார்கள். தூர்ந்து போயிருந்த குளங்கள் வெட்டப்பட்டு நீர்ப்;பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன . சிலர் தாமாகவே காடுகளில் ஒரு பகுதியைப் பிடித்துத் தமக்குச் சொந்தமாக்கி அதனை விவசாய பூமியாக்கினர். அங்குள்ள சூழ்நிலைகளைப் பாhதத்தும் கந்தசாமியின் இளம் உள்ளத்தில் பலவகையான ஆசைகள் துளிர்த்தெழுந்தன. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்துத் தனக்கென காணியொன்றை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென அவன் ஆசைப்பட்டான்.

கந்தசாமி ஆவர்த்தோடு கடுமையாக உழைத்தான். மலைநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினரின் நட்பு அவனுக்குக் கிடைத்தது. அந்தக் குடும்பத்தில் செங்கமலம் என்ற இளநங்கையும் அவளது தாய் தந்தையருமாக மூவர் மட்டுமே; இருந்தனர். பல வருடங்களுக்குமுன்பு அங்கு வந்து குடியேறிய அவர்கள்,; கடினமான உழைப்பினால் தமக்கென ஒரு சிறிய வீட்டையும் ஐந்து ஏக்கர் காணியையும் சொந்தமாக்கி வைத்திருந்தனர்.

தனிக்கட்டையாக இருந்த கந்தசாமியின் தொடர்பால் அந்தக் குடும்பத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்கள் கந்தசாமியைத் தமது குடும்பத்தில் ஒருவனாகக் கருதினர். மகள் செங்கமலத்தின் இதயத்தில் கந்தசாமி சிறிது சிறிதாக இடம் பிடித்துக் கொண்டான். அந்த வருடமே கந்தசாமி அவர்களது நிலத்தில் மிளகாய்க் கன்றுகள் நாட்டினான். கந்தசாமியும் செங்கமலமும் கடினமாக உழைத்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செங்கமலத்தின் தாய் தந்தையர் செய்து கொடுத்தார்கள். அதிஷ்ட தேவதையின் பார்வை அவர்களது பக்கம் திரும்பியது. அந்த வருடத்தில் அவர்களுக்குப் பலமடங்கு இலாபமும் கிடைத்தது.

செங்கமலத்தின் தாய் தங்தையர்; தங்களது சகல சொத்துக்களையும் செங்கமலத்தையும் கந்தசாமியிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

கந்தசாமிக்கும், செங்கமலத்துக்கும் திருமணம் நடந்த மறுவருடம,; செங்கமலத்தின் தந்தை மலேரியாக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிர் துறந்தார். அதனால் கந்தசாமிக்குப் பொறுப்புக்கள் அதிமாகின.

இதுவரை காலமும் தனது தாய் தந்தையும் சகோதரர்களையும் விட்டுப் பிரிந்திருந்த கந்சாமிக்கு அவர்களையும் அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. அதனால் அவன் இப்போது ஊருக்கு வந்திருக்கிறான். கந்தசாமியின் கதையைக் கேட்ட மாணிக்கத்தின் மனதில் பலவகையான எண்ணங்கள் எழுந்தன. தானும் கச்தசாமியைப் போல் ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமென்ற ஆர்வம் அவனுள் துளிர்த்தது.

”மச்சான் நானும் முத்தையன் கட்டுக்கு வரட்டோ?“

மாணிக்கம் இப்படிக் கேட்டபோது அவனுள் இருந்த ஆசைகளைக் கந்தசாமியால் புரிந்துகொள்ள முடிந்தது. முத்தையன் கட்டிலிருந்த வேளைகளில், கந்தசாமி தனது நன்பன் மாணிக்கத்தைப் பற்றி அடிக்கடி நினைத்துக்கொள்வான். மாணிக்கம் முத்தையன் கட்டுக்கு வந்தால் வாழ்க்கையில் பெரிதும் முன்னேறி விடுவானென அவன் நினைத்திருக்கிறான். இப்போது மாணிக்கமே முத்தையன்கட்டுக்கு வர விரும்பியபோது கந்தசாமிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

”மாணிக்கம், நீ மட்டும் முத்தையன் கட்டுக்கு வந்தால் இரண்டே வருசத்திலை முன்னேறி விடுவாய், அதுக்கு வேண்டிய ஆர்வமும் உழைக்கிற சக்தியும் உனக்கிருக்கு“.
கந்தசாமி கொடுத்த உற்சாகம் மாணிக்கத்துக்கு மேலும் ஆர்வத்தை அதிகமாக்கியது.
கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்ச்சியினால் மாணிக்கம் மிகவும் விரக்தியடைந்திருந்தான். துரைசிங்கம் முதலாளியும் சின்னத்தம்பரும் தன்னுடன் தர்க்கித்துக்கொண்டதும் பார்வதியைக் கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றியதால் ஏற்பட்டிருந்த வீண் கதைகளும் அவனது மனதை அதிகம் பாதித்திருந்தன.
பார்வதியை அவன் சந்திக்கக் கூடானெக் கோவிந்தன் இட்ட கட்டளை அவனது மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. திடீரெனத் தாய் தந்தையரும் மாமனும் சேர்ந்து தனக்குத் திருமணம் முடித்து வைக்க தீர்மானித்திருப்பதும் அவனது மனதில் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இவை யாவற்றையும் மாணிக்கம் கந்தசாமியிடம் விபரமாகக் கூறினான்.

”மாணிக்கம் ஊரிலை நீ வீண் பகையெல்லாம் தேடி வைச்சிருக்கிறாய.; இந்த நிலைமையிலை நீ முன்னேற முடியாது? முன்னேறுவதற்கு இங்கை இருக்கிறவை விடவும் மாட்டினம். நீ என்னோடை முத்தையன் கட்டுக்கு வந்தால் உனக்கு வேண்டிய சகல வசதிகளையும் நான் செய்து தருவன். கமம் செய்யக்; காணிகூட நீ இலேசாய் பெற்றுக் கொள்ளளாம். கொஞ்சக் காலத்திலையே மற்றவர்கள் எல்லாம் மதிக்கக்கூடிய விதத்திலை நீ இந்த ஊருக்கு வரலாம்“.

கந்தசாமி மாணிக்கத்துக்கு ஆர்வமூட்டினான்.

”மச்சான், நான் யோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவுக்கு வரவேணும். நீ இப்ப என்னோடை கதைச்ச விஷயங்களை அவசரப்பட்டு ஒருத்தரிட்டையும் சொல்லிபோடாதை“ எனச் சிந்தனையுடன் கூறினான் மாணிக்கம்.

”சரி மாணிக்கம,; ஏதோ யோசிச்சு நல்ல முடிவுக்கு வா. நான் வீட்டை போட்டுப் பின்னேரமாய் வந்து உன்னைச் சந்திக்கிறன்“ எனக் கூறிவிட்டுப் புறப்பட்டான் கந்தசாமி.

கந்தசாமி சென்று நேரமாகிய பின்பும் மாணிக்கம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
கடந்த ஆறு நாட்களாக அவன் பார்வதியைச் சந்திக்கவில்லை. பார்வதியுடன் பழகிய காலத்திலிருந்து அவன் ஒருபோதும் இத்தனை நாட்கள் அவளைச் சந்திக்காமல் இருந்ததில்லை. ஒரு நாள் பார்வதியின் வீட்டுக்குச் செல்லாமல் இருந்தால்கூட பார்வதி ஏதாவது காரணத்தை வைத்துக்கொண்டு அவனை வரும்படி சொல்லியனுப்புவாள். இந்தத் தடவையும் அதுபோல அவள் தன்னை அங்கு வரும்படி அழைப்பாள்; எனத்தான் மாணிக்கம் நினைத்திருந்தான். ஆனால், பார்வதிகூடத் தன்னை அழைக்காதது அவனுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்தது.

பார்வதி என்னை அங்கு அழைக்காததற்கு காரணம் என்ன ? ஒரு வேளை கிணற்றுக்குள் விழுந்தபோது அவளது கைகால்கள் பலமாக அடிபட்டு எழுந்து நடமாடமுடியாத நிலையிலே அவள் இருக்கிறாளோ அல்லது தன்னைச் சந்திக்கக் கூடாதென அவளது தாய் தந்தையர்கள் அவளைக் கட்டுப்படுத்தி இருப்பார்களோ?

அவனது தாய் பொன்னி இப்போது செல்லப்பர் வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டு வேலைகளைக் கவனித்து வருகிறாள். பார்வதியைப்பற்றித் தாயிடம் கேட்டறிந்து கொள்ளலாமா என அவன் சில வேளைகளில் எண்ணுவான். ஆனாலும் தாய் தன்னைத் தவறாக எண்ணிக் கொள்வாளே என நினைத்து அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்வான்.

முத்தையன் கட்டுக்குச் சென்று கந்தசாமியைப் போல் தானும் வாழக்கையில் முன்னேறிவிட வேண்டுமென மாணிக்கம் தீர்மானித்துக் கொண்டான.; இதற்குத் தனது தாய் தந்தையர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தாய்தந்தையர்கள் தன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். தன்னைத் தூர இடத்திற்கு அனுப்புவதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். இப்போது மாமன் குட்டியனின் மகளைத் தனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கந்தாமியைப் போல் தானும் ஒருவருக்கும் சொல்லாமல் முத்தையன்கட்டுக்கு போவதுதான் நல்லது என அவனது மனம் சிந்தித்தது. ஆனாலும் தனது முடிவைப் பார்வதியிடம் கூறத்தான் வேண்டுமென அவன் தீர்மானித்துக்கொண்டான.; அவளைச் சந்தித்து தான் முத்தையன்கட்டுக்குப் போகப் போவதைப்பற்றி அவளிடம் கூறாமல் விட்டால், பின்பு அதனை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க நேரிடம் என அவனது உள்ளம் அஞ்சியது.

‘நான் முத்தையன் கட்டுக்குப் போகப் போவதைப் பற்றிக் கூறியதும் பார்வதி சந்தோஷப்படுவாளா…? இ;ப்போது என்னைச் சந்திக்கக்கூட விரும்பாத பார்வதி, நான் முத்தையன் கட்டுக்குப் போகப்போவதை அறிந்து சந்தோஷமடையத்தான் செய்வாள். நான் முத்தையன்கட்டுக்குச் சென்று விட்டால் என்னையும் பார்தியையும் இணைத்து ஊரிலே பரவியிருக்கும் கதைகள் யாவும் காலப் போக்கில் மறைந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்;. அதனால் பார்வதி நிச்சயமாக நான் ஊரைவிட்டுப் போவதை விரும்பத்தான் செய்வாள’.

‘ஏன் இப்படி எனது நினைவுகள் பார்வதியைப் பற்றியே சுற்றுகின்றன?“ அவளைப் பற்றி நினைப்பதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?’

‘ஒரு வேளை என்னை அறியாமலே எனது உள்ளம் பார்வதியை விரும்புகிறதா?’ மாணிக்கத்துக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

எப்படியும் பார்வதியைச் சந்தித்து அவளிடம் தனது முடிவைக கூறவேண்டும்; என்ற தீர்மானத்துடன் பர்வதியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் மாணிக்கம்.

16.

விடிந்தால் அன்னமார் கோயில் வேள்வி. முதன்நாள் மாலையிலிருந்தே கோவிந்தனும் அவனது இனத்தவர்களும் கோயிலில் வந்து கூடிவிட்டார்கள். அயற்கிராமங்களில் இருந்தும் பலர் வேள்விக்காக அங்கு வந்திருந்தனர். ஒலிபெருக்கியில் சினிமாப் பாடல்கள் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்சார வெளிச்சத்தினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இரவிரவாக மேளக் கச்சேரிகளும் சதுர்க் கச்சேரிகளும் நடந்துகொண்டிருந்தன.

துரைசிங்கம் முதலாளி, செல்லப்பர், சின்னத்தம்பர் முதலியோர் அங்குமிங்கும் ஓடித்திரிந்து காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சதுர்க் கச்சேரிக்கு வந்தவர்களுக்கும் மேளக் கச்சேரிக்கு வந்தவர்களுக்கும் சின்னத்தம்பர் சோடா, மதுபானம் போன்றவைகளைக் கொடுத்து உபசரித்தார். கச்சேரி நடக்கும்போது ஆரவாரம் செய்த சிறுவர்களை அதட்டியும், அங்கு வந்திருந்தவர்களை சபையில் ஒழுங்காக இருக்கச் செய்தும் துரைசிங்கம் முதலாளியும், செல்லப்பரும் ஒழுங்கை நிலைநாட்டினார்கள்.

கோவிந்தன் வேள்விக்குரிய ஆயத்தங்களையும், மற்றக்காரியங்களையும் கவனித்தான். வேள்வியைச் சிறப்பாக நடத்தி முடித்துவிட வேண்டுமென்பதிலேயே அவன் கருத்தாக இருந்தான்.

”கமக்காறா,; நீங்கள் களைச்சுப் போனியள், வீட்டுப்பக்கம் ஒருக்காய் போட்;டு வாருங்கோ“ எனக்கூறி அடிக்கடி துரைசிங்கம் முதலாளியையும் செல்லப்பரையும் தனது வீட்டுக்கு அனுப்பி அவர்களை ஏற்ற முறையில் கவனிக்க அவன் தவறவில்லை. அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் பொன்னி அவர்களுக்குத் தேவையான மதுவகைகளைக் கொடுத்து உபசரித்தாள்.

பொழுது விடிந்தபோது மேலும் பலர் கோயிலுக்கு வரத் தொடங்கினர். இரவு முழுவதும் கோயிலில் நின்றவர்கள் வேள்வி தொடங்க முதல் தத்தமது வீட்டுக்குச் சென்று திரும்புவதற்காகப் புறப்பட்டனர். துரைசிங்கம் முதலாளியும் தனது காரில் செல்லப்பரைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். போகும் வழியில் செல்லப்பரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்றார் துரைசிங்கம் முதலாளி.

செல்லப்பர் வீட்டு வாசலை அடைந்த போது, திண்ணையில சின்னத்தங்கம்; தலையில் இரு கைகளையும் வைத்தபடி சோகமே உருவாக இருந்தாள். அவளது தோற்றமும் கண்களிலே வழிந்தோடிய கண்ணீரும் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதைச் செல்லப்பருக்கு உணர்த்தியது. ”ஏனணை, விடிஞ்சதும் விடியாததுமாய் வீட்டு வாசலிலை தலையை விரிச்சுப் போட்டுக்கொண்டு இருக்கிறாய்?“ செல்லப்பர் எரிச்சலுடன் கேட்டார்.

”ஐயோ…. உவள் பிள்ளையைக் காணேல்லை“. சின்னத்தங்கம் இதைக் கூறும்போது பெரும் சோகத்துடன் அழுது புலம்பினாள்.

செல்லபப்ருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

”அவள் உங்கினைதான் எங்கையேன் நிப்பாள்? கொஞ்சம் பேசாமல் இரு“ எனக் கூறிவிட்டு ”பார்வதி ….பார்வதி“ எனச் சற்றுப் பலமான குரலில் கூப்பிட்டார் செல்லப்பர்.
”விடியத் தொடக்கம் கூப்பிடதிலை என்ரை தொண்டைத் தண்ணியும்; வத்திப் போச்சு? வளவு வாய்க்கால் கிணறுகட்டை எல்லாம் தேடிப் பாத்திட்டன். அவளைக்; காணேல்லை“.
செல்லப்பருக்குச் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. இதுவரை காலத்தில் பார்வதி வீட்டைவிட்டுத் தனியாக எந்த இடத்துக்கும் சென்றதில்லை. இப்போது அவள் எங்கே சென்றிருப்பாள் என அவரால் தீர்மானிக்க முடியவில்லை.

”முந்த நாள் மாணிக்கன் இங்கை வந்து அவளோடை தனிய இருந்து கதைச்சுப் போட்டுப் போனவன்? அதிலை இருந்து பிள்ளை ஏதோ யோசினையும் கவலையுமாய் இருந்தவள். அதுதான்… எனக்குச் சந்தேகமாய்க் கிடக்கு. தனது மனதிலே தோன்றியிருந்த சந்தேகத்தைக் கணவனிடம் கூறினாள் சின்னத்தங்கம்.
அதைக் கேட்டபோது செல்லப்பருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

”மாணிக்கன் வந்து அவளோட என்ன கதைச்சவன்?“

”என்னெண்டு எனக்குத் தெரியேல்லை …. இரண்டு பேரும் கிணத்தடியிலை கதைச்சுக்கொண்டு இருந்தவை. … மாணிக்கன்; போன பிறகு அவனோடை உனக்கு என்ன ; கதையெண்டு நான் அவளை ஏசினனான். அதிலை இருந்து அவள் ஒரே யோசினையாய் இருந்தவள். ஒழுங்காய்ச் சாப்பிடவும் இல்லை“.

”நீ ஏன் இதுகளை முன்னுக்கு என்னட்டைச் சொல்லேல்லை?“

“நீங்கள் எடுத்ததுக்கெல்லாம் எரிஞ்சு விழுவியள?; அதுதான் நான் ஒண்டும் பேசேல்லை“.

”தாயும் மேளுமாய் எல்லாத்தையும் மறைச்சு வைச்சுத்தானே இப்ப இந்த நிலைமை வந்திருக்கு? அவள் எங்கை போனாளோ, என்ன சங்கதியோ“ எனச் செல்லப்பர் சின்னத்தங்கத்தின்மேல் எரிந்து விழுந்தார்.

இரவு முழுவதும் கோயிலடிக்கு மாணிக்கம் வந்ததாகத் தெரியவில்லை. வீட்டிலும்; பொன்னி மட்டுந்தான் இருந்தாள். வேள்வி அமர்க்களத்தில் அவர் மாணிக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. மாணிகக்த்தைக் காணாததும் அவருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மாணிக்கந்தான் பார்வதியை எங்காவது அழைத்துச் சென்றிருப்பானோ? செல்லப்பர் தலையில் கை வைத்தப்படி திண்ணையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு என்னசெய்வது என்றே புரிய வில்லை உண்மையிலே பார்வதியை மாணிக்கம் அழைத்துச் சென்றிருந்தால் அதனால் ஏற்படக் கூடிய அவமானத்தை நினைத்தபோது அவர் மனம் வெதும்பியது.

துரைசிங்கம் முதலாளி அவரை அழைத்துச் செல்வதற்காக அங்கே வந்தபோது பார்வதியைக் காணவில்லை என்ற செய்தியையும், மாணிக்கனை ப் பற்றித்; தனது மனதிலே ஏற்பட்டிருந்த சந்தேகத்தையும் அவரிடம் கூறினார் செல்லப்பர். இந்த விசயத்தை துரைசிங்கம் முதலாளியிடம் சொல்லி ஆலோசனை கேட்பதைத் தவிர வேறுவழி எதுவும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.

”இரவு முழுவதும் மாணிக்கம் கோயிலடிப்பக்கம் வருகிறானோ என்டுதான் நான் கவனிச்சுக்கொண்டு இருந்தனான். அவன் அஙகை வரேல்லை. ஏதேன் கரச்சல் வருமெண்டுதான் கோயிலுக்கு வராமல் நிண்டிட்டான் எண்டு நினைச்சுப் பேசாமல் இருந்திட்டன். இப்பதான் தெரியுது, அவன் ஏன் அங்கை வரேல்லையெண்டு. அவ்வளவு துணிவு அவனுக்கு வந்திட்டுதோ …. அவனை உயிரோடை விட்டு வைக்கப்பிடாது“ என ஆத்திரத்துடன் கூறினார் துரைசிங்கம் முதலாளி.

”அண்ணை அவசரப்படாதை…. நல்லாய் விஷயத்தை ஆராய்ஞ்சு அறிய முன்னம் ஒண்டும் செய்யப்பிடாது. பிள்ளை இப்ப எங்கை போட்டாள் எண்டு ஒருக்காய்த் தேடிப் பாப்பம்“

”செல்லப்பா,; உனக்குப் பைத்தியமே… அவள் தனிய வெளிக்கிட்டு எங்கையன் போக முடியுமோ? மாணிக்கன்தான் அவளை எங்கையோ கூட்டிக்கொண்டு போட்டான்… நான் அப்பவே அவனை இங்கை எடுக்க வேண்டாமெண்டும் சொன்னனான். நீதான் அவனை அடி வீட்டுக்குள்ளை அடுத்து வைச்சிருந்தாய். இப்ப அவன் செய்த வேலையைப் பாத்தியே… கடைசியிலை மானம் கெட்டுப் போச்சு. இது உனக்கு மட்டுமில்லைச் செல்லப்பர், இந்த ஊருக்கே மரியாதைக் குறைவு“ என்றார் துரைசிங்கம் முதலாளி.

”துரைசிங்கண்ணை பதட்டப்படாதை. இப்ப என்ன செய்யலாமெண்டு யோசிச்சுச் சொல்லு“ என்றாள் சின்னத்தங்கம் கலையுடன்.

”இதிலை யோசிக்க என்ன இருக்கு, அவன் மாணிக்கனைத் தேடிப் பிடிச்சு நாலு உதை உதைச்சால் எல்லா விஷயமும் வெளியிலை வரும். கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் மாணிக்கம் இருக்கிற இடம் தெரியத்தானே வேணும். அவையள் சொல்லாட்டில், அவங்களை இண்டைக்கு வேள்வி நடத்த விடக்கூடாது. நீ காரிலை ஏறு, அவங்களை ஒருகை பாப்பம் “ துரைசிங்;கம் முதலாளி இப்படிக் கூறியதும் செல்லப்பரின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது.

”அண்ணை, இப்ப அங்கை வேள்வியிலை குழப்பம் பண்ணினால் ஊர் முழுதும் கதை பரவிப்போம். இரகசியமாய்த்தான் விசாரிச்சு அறியவேணும் “ எனக் கெஞ்சும் குரலில் கூறினார் செல்லப்பர்.

பார்வதியைக் காணவில்லையே என்ற கவலை துரைசிங்கம் முதலாளிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவரது பேச்சும் நடப்பும் மாணிக்கத்தைப் பழிவாங்குவதற்குக் கிடைத்து விட்ட சந்தர்ப்பத்தைப்; யபன் படுத்த வேண்டும் என்பதிலேயே இருந்தது.

பார்வதியைக் காணவில்லை என்ற செய்தியை தான் தெரியாத்தனமாக துரைசிங்கம் முதலாளியிடம் கூறிவிட்டேனோ எனச் செல்லப்பர் சிந்தித்துக் குழப்பமடைந்தார்;

”இனி யோசிச்சுக் கொண்டிருக்கிறதிலை பிரயோசனமில்லை. வேள்வி நடத்திற இடத்துக்குப் போனால் விஷயம் தெரியவரும்“ எனச் செல்லப்பரைத் துரிதப்படுத்தினார் துரைசிங்கம் முதலாளி. செல்லப்பர் தயக்கத்துடன் காரில் ஏறினார்.

துரைசிங்கம் முதலாளியின் கார் உறுமலுடன் புறப்பட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சின்னத்தங்கத்தின் நெஞ்சு ‘திக் திக்’கென்று அடித்துக்கொண்டது.

17.

அன்னமார் கோயிலில் சனக்கூட்டம் நிரம்பி வழிந்தது. பலி ஆடுகள் கோயிலின் முன்னால் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்தன. பலிகொடுக்கப்பட்ட ஆடுகளை இறைச்சிக்காக விலைக்கு வாங்க வந்தவர்களும், அவற்றை விலைபேசிக் கொடுப்பதற்காக வந்த சில தரகர்களும் அங்கே காணப்பட்டனர். அவர்களில் பலர் மது போதையுடன்தான் காட்சி அளித்தனர்.

கோயிலின் முன் பக்கத்தில் சிலர் நேர்த்தி வைத்துப் பொங்கிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி ஆரவாரித்துக் கொண்டு இருந்தனர். கோயில் வீதியில் மணிக்கடைக்காரரும், மிட்டாய்க்கடைக்காரும் துரிதமாக வியாபாரம் செய்தனர். ஒலி பெருக்கியின் சத்தத்தையும் மீறிக்கொண்டு பறை மேளம் அடிப்பவர்கள் ஒருவித லயத்துடன் உற்சாகமாகத் தமது வாத்தியத்தை முழங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கென விசேஷமாகப் பூசை செய்ய வந்த பூசாரி பூசைக்குரிய ஆயத்தங்கள் யாவற்றையும் செய்து முடித்துவிட்டு பொங்கல் முடியும்வரை காத்திருந்தார்.
பலி கொடுக்கப்படும் தலைக்கிடாயை கோவிந்தனும் அவனது உறவினர்களும் மேளவாத்தியங்களுடன் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அந்தக் கிடாய் நன்றாகக் கொழுத்துப் பருத்து மினுமினுப்புடன் காணப்பட்டது.

அதற்கு மாலை சூடி, பொட்டுப் போட்டு, பல விதமான அலங்காரங்கள்; செய்திருந்தார்கள். தலைக்கிடாய் கோயிலை வந்தடைந்தும் அங்கு நின்றவர்கள் பலர் அதனைச் சூழ்ந்து நின்று அதன் தோற்றத்தை விமர்சித்தனர்.

பூசைக்குரிய நேரம் வந்ததும் பொங்கியவர்கள் பிரசாதத்தைத் தெய்வத்தின் முன்னால் படைத்தார்கள்;. பூசாரி மந்திர உச்சாடனத்துடன்; பூசையை ஆரம்பித்தார். பறை மேளத்தின் ஒலி பலமாக அதிர்ந்தது. குட்டியன் சேமக்கலத்தை எடுத்து அடிக்கத் தொடங்கினான். ”அன்மாருக்கு அரோகரா, அன்னமாருக்கு அரோகரா“ என அங்கு நின்றவர்கள் பக்தியுடன் தலைமேல் கரம் குவித்து வணங்கினார்கள்.

பறை மேளத்தின் லயமும், சேமக் கலத்தின் நாதமும், மந்திர உச்சாடனமும் , அரோகராச் சத்தமும் கோவிந்தனது உளளத்தில் பக்தி உணர்வை ஏற்படுத்தின. அவனது உடல் அவனை அறியாமலே ஆட்டங்கண்டது. சிறிது நேரத்தில் அவன் உருக்கொண்டு ஆடத் தொடங்கினான். அவனது கரிய பருத்த தேகத்தில் ஆங்காங்கே விபூதிக் குறிகள் பட்டையாகத் தீட்டப்பட்டிருந்தன. அவனது நெற்றியிலே பெரிய சந்தனப் பொட்டும், அதன் நடுவில் குங்குமமும் இடப்பட்டிருந்தன. வேட்டியை மடித்துக் கொடுக்குக் கட்டி அரையிலே ஒரு சிவப்புத் துண்டையும் வரிந்து கட்டியிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. குடுமி அவிழ்ந்து கேசங்கள் கலைந்திருந்தன. பறை மேளம் அடிப்பவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனது ஆட்டத்துக்கு ஏற்ப தாளத்தை மாற்றி மேளத்தை ஓங்கி ஓங்கி அடித்தார்கள். இப்போது அங்கு நின்ற சிலருக்கும் உரு ஏற்பட்டு அவர்களும் கோவிந்தனோடு சேர்ந்து ஆடத் தொடங்கினார்கள். கோவிந்தன் கையிலிருந்த சங்கை எடுத்து இடையிடையே வாயில் வைத்து ஊதி ஒலியெழுப்பியபடி துள்ளித்துள்ளி உருவாடிக் கொண்டிருந்தான்.

துரைசிங்கம் முதலாளி காரை வேகமாக ஓட்டி வந்து கோயிலின் அருகே நிறுத்தினார். அவர் காரிலிருந்து இறங்கும்போது காரின் கதவைப் பலமாக அறைந்து சாத்திக்கொண்டு இறங்கினார். அவரைத் தொடர்ந்து செல்லப்பரும் காரை விட்டிறங்கினார். அவர்களைக்கண்டதும் அங்கு நின்ற சின்னத்தம்பரும், அம்பலவாணரும் அவர்களிடம் சென்றார்கள்.

”என்னண்ணை இவ்வளவு நேரம் பிந்திவாறியள்? பூசையெல்லாம் முடியப் போகுது“ என சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியைப் பார்த்துக் கேட்டார்.

”அதெல்லாஞ் சரி, உவன் மாணிக்கன் எங்கை? துரைசிங்கம் முதலாளி கேட்ட தொனியிலிருந்து ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென அங்கு நின்றவர்கள் ஊகித்துக்கொண்டார்கள்.

”அவனை இந்தப் பக்கம் காணேல்லை. என்ன சங்கதி?“ எனச் சின்னதம்பர் துரைசிங்கம் முதலாளிடம் விசாரித்தார்.

”நான் விஷயத்தைப் பிறகு ஆறுதலாய்ச் சொல்லுறன்.இப்ப மாணிக்கன் உங்கினை நிற்கிறானோ பாருங்கோ“

அங்கு நின்றவர்களுக்கு அப்போதுதான் மாணிக்கம் அங்கு வரவில்லை என்பது புரிந்தது. மாணிக்கத்தைக் கண்டீர்களா என ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டனர். அங்கே நின்ற எவருமே கோயிலடியில் மாணிக்கத்தைப் பார்த்ததாகக் கூறவில்லை.

வேள்வி அமர்க்களத்தில் யாருமே மாணிக்கத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை . துரைசிங்கம் முதலாளியும் ;செல்லப்பரும் கோயிலுக்கு வரமுன்பு கோவிந்தனது வீட்டுக்குச சென்றுவிட்டுத்தான் வந்தார்கள். அவர்கள் அங்கு சென்ற வேளையில் ஒருவருமே வீட்டில் இருக்கவி;ல்லை. எல்லோரும் கோயிலுக்கு வநதுவிட்டார்கள். ஒருவேளை மாணிக்கமும் பார்வதியும் வீட்டினுள்ளே இருப்பார்களோ என்ற சந்தேகத்தில் துரைசிங்கம் முதலாளி வீட்டின் முன் கதவை உதைத்துத் திறந்து உள்ளே சென்று பார்த்து விட்டுத்தான் அங்கிருந்து புறப்பட்டார்.

சின்னத்தம்பர் பொன்னியைத் தனியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்.

”எங்கையடி உன்ரை மேன் மாணிக்கன்?“

”அவன் இங்கினேக்கை தான் நிப்பன்“ பொன்னி பயந்தவாறு பதில் சொன்னாள். ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இப்போது இவர்களது கையில் மாணிக்கன் அகப்பட்டால் கொலையும் செய்துவிடுவார்களோ என அவளது மனம் பதறியது.

”அடியே, ஒண்டும் தெரியாத மாதிரி நடிக்காதை. உண்மையைச் சொல்லிப் போடு“. துரைசிங்கம் முதலாளி உறுமினார்.

”அன்னமாராணைச் சொல்லுறன் கமக்காறன், எனக்குத் தெரியாது. வேள்வி மும்முரத்திலை நாங்கள் அவனை எங்கை எண்டு கவனிக்கேல்லை. இங்கினேக்கைதான் நிப்பன் எண்டு நினைச்சுக் கொண்டு இருந்தனான்“. என நடுங்கியபடி கூறினாள் பொன்னி.

”உவளிட்டை என்ன கே;கிறது , வா துரைசிங்கண்ணை கோவிந்தனை நேரிலை கேப்பம்“ எனச் சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியை அழைத்துக்கொண்டு கோவிந்தன் நிற்கும் இடத்திற்குச் சென்றார். செல்லப்பரும் அம்பலவாணரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். அங்கு நின்றவர்களில் பலர் வேடிக்கை பார்ப்பதற்காக அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அப்போது கந்தசாமி பொன்னியிடம் ஓடி வந்தான்.

”என்னணை மாமி, உவையள் என்னவாம்?“ என அவளிடம் விசாரித்தான்.

”அவையள் மாணிக்கனை எங்கையெண்டு விசாரிக்கினம்? எங்கையடா மேனை அவன் உன்னோடைதானே இரண்டு நாளாய்க் கூடித்திரிஞ்சவன்“ எனக் கந்தசாமியிடம் கேட்டாள் பொன்னி.

”நானும் அவனைத்தான் தேடிக்கொண்டு திரியிறன் மாமி? அவன் எங்கை போட்டானெண்டு தெரியேல்லை“. எனக் கூறிய கந்தசாமி பொன்னியையும் அழைத்துகொண்டு கோவிந்தன் நிற்கும் இடத்திற்குச் சென்றான்.

கோவிந்தனது உரு உச்ச நிலையை அடைந்திருந்தது. பூசை முடிந்ததும் பலி எடுக்கும் கத்தியைப் பூசாரி அவனது கையில் கொடுத்தார். ஒரு கையில கத்தியுடனும், மறுகையில் சங்குடனும அவன்;; ஆடிக்கொண்டிருந்த விதம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது.

அவனருகே சென்ற துரைசிங்கம் முதலாளி ”கோவிந்தன்‰ எங்கையடா மாணிக்கன்?“ என அதட்டும் குரலில் கேட்டார்.

கோவிந்தனுக்கு சுற்றாடலில் என்ன நடக்கிறது என்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அவன் தொடர்ந்தும் ஆடிக்கொண்டே இருந்தான். அவனருகே செல்வதற்கு எல்லோருக்கும் அச்சமாக இருந்தது.

”கோவிந்தன் டேய் கோவிந்தன்” எனத் துரைசிங்கம் முதலாளி பலமாக அழைத்த போதும் அவன் பதிலேதும் கூறவில்லை.

குட்டியன் சேமக் கலத்தைப் பக்கத்தில் நின்ற ஒருவனிடம் கொடுத்து விட்டுத் துரைசிங்கம் முதலாளியின் அருகில் வந்து ,”என்ன கமக்காறன் என்ன சங்கதி ….. இந்த நேரத்திலை ஒரு குழப்பமும் செய்யாதையுங்கோ என்ன விஷயமெண்டாலும் என்னட்டைச் சொல்லுங்கோ நான் கவனிக்கிறன்“ எனப் பணிவான குரலில் கூறினான்.

”வாருங்கோ தனிமையான இடத்துக்கு போய்க் ;கதைப்பம்“; என துரைசிங்கம் முதலாளியைக் கார் நின்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார் செல்லப்பர். குட்டியனும், சின்னத்தம்பரும் , அம்பலவாணரும் அவர்களோடு சென்றார்கள்.

”மாணிக்கன் எங்கை?“

”சத்தியமாய்க் கமக்காறன் எனக்குத் தெரியாது. ஏன் என்ன விஷயம் சொல்லுங்கோ …. “ குட்டியன் பதட்டத்துடன் கேட்டான்.

”செல்லப்பற்றை மேளை இராத்திரித் தொடக்கம் காணேல்லை. மாணிக்கனையும் காணேல்லை. அதுதான் சந்தேகமாய் இருக்கு“ எனத் துரைசிங்கம் முதலாளி கூறினார்.

”அப்பிடியெண்டால், மாணிக்கன்தான் எங்கையாவது கூட்டிக்கொண்டு போயிருப்பன்“ என்றார் சின்னத்தம்பர்.

பறை மேளத்தின் சத்தம்; இப்போது ஓய்ந்திருந்தது. கோவிந்தன் மட்டும் உரு ஆடியபடி சங்கைப் பலமாக ஊதிக்கொண்டிருந்தான். போர்க் களத்திலே வெற்றி கண்டவர்கள் சங்கநாதம் ஒலிப்பதுபோல், கோவிந்தன் மீண்டும் மீண்டும் சங்கொலி எழுப்பிக் கொண்டிருந்தான்.

”பூம் …..பூம்…“ என அவன் எழுப்பிய ஒலி விண்ணில் அதிர்ந்தது.

துரைசிங்கம் முதலாளியும், சின்னத்தம்பரும் கூறிய வார்த்தைகள் குட்டியனுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

”ஐயோ கமக்காறனவை இதைப்பற்றி ஒருத்தருக்கும் சொல்லாதையுங்கோ, வெளியிலை தெரிஞ்சால் இது உங்களுக்குத்தான் மரியாதைக் குறைவு. வெளியூர் ஆக்களும் இங்கை வந்திருக்கினம் . வேள்வி எல்லாம் முடியட்டும் பிறகு பாப்பம்?
இப்ப ஒரு குழப்பமும் செய்யாமல் வீட்டுக்குப் போங்கோ“ என அவர்களைப் பார்த்துக் கைகளைக் கூப்பி மன்றாடினான் குட்டியன்.

அவன் கூறியதில் நியாயம் இருப்பதைச் செல்லப்பரும் அம்பலவாணரும் புரிந்து கொண்டனர்.

”குட்டியன் சொல்லுறதும் சரிதான்? இப்ப வாருங்கோ வீட்டைபோய் எல்லாம் யோசிச்சுச் செய்வம்“; என அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் செல்லப்பர். எல்லோரும் காரில் போய் அமர்ந்து கொண்டார்கள். கார் கோயிலிலிருந்து புறப்பட்டது.

18.

வேள்வி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. சின்னத்தங்கமும,; செல்லப்பரும் சோகமே உருவாகி இருந்தனர். இரண்டு நாட்களாக அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை. அழுதழுது சின்னத்தங்கத்தின் கண்கள் வீங்கிப்போயிருந்தன.

பார்வதி செய்த செயலை நினைத்தபோது செல்லப்பருக்கு ஒரு புறம் கவலையும், மறுபுறம் அவமானமும் அவரது மனதைப் பெரிதும் வேதனைப்படுத்தின. மாணிக்கமும் பார்வதியும் ஊரில் இல்லையென்ற செய்தி அவர்கள் இருவருஞ் சேர்ந்து ஊரை விட்டு ஓடிவிட்டார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது. துரைசிங்கம் முதலாளியும், அம்பலவாணரும் தமக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் பார்வதியைத் தேடினார்கள். ஆனாலும், எந்தவிதத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அம்பலவாணர் சின்னத்தங்கத்திற்கு அடிக்கடி வந்து ஆறுதல் கூறினார். சின்னத்தங்கத்தைத் தேற்றுவது எல்லோருக்குமே பெருஞ் சிரமமாக இருந்தது.

செல்லப்பரின் சகோதரி அன்னம்மா தனது வீட்டிலிருந்து உணவு சமைத்து வந்து செல்லப்பரையும் சின்னத்தங்கத்தையும் சாப்பிடும்படி வற்புறுத்தினாள். உண்மையில் பார்வதி மாணிக்கத்துடன் ஓடிவிட்டாள் என்ற செய்தி அன்னம்மாவையும் பெரிதும் கலக்கி இருந்தது. பார்வதி இப்படிச் செய்வாளென அவள் ஒரு போதும் எதிர்பார்க்க வில்லை.

அன்று துரைசிங்கம் முதலாளி ” மை போட்டுப’ பார்ப்பதற்கென ஒரு மாந்திரீகனைச் செல்லப்பர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் தனது சொந்தச் செலவிலேயே இவற்றையெல்லாம் செய்தார். மாந்திரீகன் மை போட்டுப் பார்ததுவிட்டு ”பிரச்சினைக் குரியவர்கள் பாழும் கிணற்றிலே குதித்துத் தமது உயிரை மாய்த்துக்கொண்டார்கள்“ எனக் கூறினான்.

இதைக் கேட்டதும் சின்னத்தங்கம் ‘ஐயோ’ என அழுது புலம்பி மூர்ச்சையாகி விட்டாள். செல்லப்பர் அதிர்ச்சியுடன் ஒன்றுமே பேசமுடியாது தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

அப்போது அங்கிருந்த அம்பலவாணர் , சின்னத்தங்கத்தின் மூர்ச்சையைத் தெளிவித்து ஆறுதல் கூறினார். மாந்திரீகன் கூறியதைத் துரைசிங்கம் முதலாளியால் நம்ப முடியவில்லை. தற்கொலை செய்வதனால் அவர்கள் ஊரைவிட்டே ஓடியிருக்க வேண்டிய அவசியமில்லை. மாணிக்கன் தற்கொலை செய்யக் கூடியவனும் இல்லை என என அவரது சிந்தனை ஓடியது.

மாந்திரீகனை அனுப்பிவிட்டு துரைசிங்கம் முதலாளியும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அம்பலவாணர், சாத்திரியார் ஒருவரை அழைத்து வந்தார். கண்காணாத இடத்தில் பார்வதியும் மாணிக்கமும் இருப்பதாகவும் , அவர்கள் இருக்குமிடம் வடக்குப் பக்கமாக உள்ளது, எனவும் சாத்தியார் கூறினார். அவர் கூறிய வார்த்தைகள் செல்லப்பருக்கும் சின்னத்தங்கத்துக்கும் சிறிது ஆறுதலை அளித்தன. துரைசிங்கம் முதலாளிக்கு எப்படியாவது மாணிக்கத்தையும் பார்வதியும் தான் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணமாகவே இருந்தது. மாணிக்கத்தையும் பார்வதியையும் தேடிபபிடிப்பதில் தான் அக்கறையாக இருப்பது ஊரிலுள்ளோருக்குத் தெரிந்த பின்பு அவர்களைத் தான் கண்டு பிடிக்காவிட்டால் அது தனது மதிப்புக்கும் செல்வாக்குக்கும் ஏற்படக்கூடிய இழுக்காகுமென அவர் கருதினார்.

கோவிந்தன் பெரிதும் கலக்கமடைந்திருந்தான். பொன்னி ஏந்நேரமும் அழுதவண்ணம் இருந்தாள். இரண்டு நாட்களாகத் தங்களுக்குத் தெரிந்த இடங்களிலெல்லாம் குட்டியனும் கோவிந்தனும் மாணிக்கத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவன் வந்தால் உடனே தங்களுக்குத் தகவல் தரும்படி அயற் கிராமத்திலுள்ள தமது இனத்தவர்களிடம்; சொல்லி வைத்தார்கள். மாணிக்கத்தைத் தேடுவதில் கந்தசாமியும் அவர்;களுக்கு ஒத்தாசையாக இருந்தான்.

கோவிந்தனது உறவினர்கள் அடிக்கடி அவனது வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார்கள். மாணிக்கம் பார்வதியை அழைத்துச் சென்றது தமது சமுதாயத்திற்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றியென இளம் சந்;ததியினர் கருதினார்கள். சாதி வெறி பிடித்த வெறியர்களின் முகத்தில் கரி பூசி விட்டதாகத் தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர். ஆனால,; வயதானவர்களோ இதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை எண்ணிப் பயந்தார்கள். கமக்காறர்கள் எல்லோருஞ் சேர்ந்துகொண்டு தங்கள் எல்லோரையுமே குடி எழுப்பி கமம் செய்யும் குத்தகைக் காணிகளையும் மறித்து விடவும் கூடுமெனச் சிந்தித்துக் கலக்கமடைந்தார்கள். துரைசிங்கம் முதலாளி இந்த விஷயத்தில் முழுமூச்சாக நிற்பது அவர்களுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது.

துரைசிங்கம் முதலாளி, அம்பலவாணர் , சின்னத்தம்பர் முதலியோர் ஒருபுறமாகவும் , கோவிந்தன் குட்டியன் முதலியோர் மறுபுறமாகவும் இரவு பகல் ஓயாது மாணிக்கத்தையும், பார்வதியையும் தேடுவதில் ஈடுபட்டனர்.

கந்தசாமி முத்தையன் கட்டுக்குப் போக வேண்டியிருந்தது. சிறிது நாட்கள் கழித்து மீண்டும் அங்கு வருவதாகக் கூறிவிட்டு அவன் புறப்பட்டான்.

19.

அது ஒரு சிறிய குளம். குளத்தில் சிறிதளவு தண்ணீர்தான் இருந்தது. கரையிலிருந்து சிறிது தூரத்தில் இரண்டு கொக்குகள் ஒன்றையொன்று அணைந்த வண்ணம் நீந்திக் கொண்டிருந்தன. ஒன்று மற்றையதைச் சீண்டிவிட்டு வேகமாக நீந்தக் தொடங்கியது. மற்றது அதைத் துரத்திப் பிடிப்பதற்காகப் பின்தொடர்ந்து வேகமாக நீந்தியது. பின்பு அவையிரண்டும் மேல் எழுந்து பறக்கத் தொடங்கின. சிறிது தூரம் உயரத்தில் பறந்துவிட்டு மீண்டும் குளத்தின் வேறொரு பகுதியில் இறங்கி அந்தக் கொக்குகள் இரண்டும் நீந்தத் தொடங்கின. ஒன்றையொன்;று சீண்டுவதும் பின்னர் துரத்திப பிடிப்பதுமாக அந்தக் காதற் பறவைகள் இரண்டும் களிப்புற்றிருந்தன. குளத்தின் கரையோரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டிருந்த மரக்கிளையொன்றில் அமர்ந்திருந்த பார்வதி, அந்தச் சோடிப்பறவைகளின் விளையாட்டைப் பார்த்து ரசித்த வண்ணம் தன்னை மறந்திருந்தாள்.

அது ஒரு காட்டுப் பிரதேசம். வாழ்நாளில் கண்டிராத பறவைகளையெல்லாம் பார்வதி அங்கு வந்த இரண்டு நாட்களில் கண்டு களித்தாள். எத்தனை எத்தனையோ விதமான புள்ளினங்களின் விதம் விதமான கீதங்களைக் ;கேட்டு மகிழ்ந்;தாள். குரங்குகள் மரங்களில் தாவி ஓடிப்பிடித்து அவளுக்கு வேடிக்கை காட்டின. அவள் அந்தப் பிரதேசத்துக்கு புதியவள் என்பதைப் புரிந்துகொண்டோ என்னவோ குரங்கொன்று அவளிடம் அழகு காட்டிவிட்டு பாய்ந்தோடியது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பார்வதிக்கு ஒரே வேடிக்கையாக இருந்தது.

கந்தசாமிக்குச் சொந்தமான காணி குளத்தின் அருகேதான் இருந்தது. பார்வதியும், மாணிக்கமும் அங்கு வந்த நேரத்திலிருந்து இயற்கைக் காட்சிகளில் இருவரும் தம்மை மறந்திருந்தனர். கந்தசாமியின் மனைவி செங்கமலத்தைச்; சிறிது நேரத்திலேயே பார்வதிக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. செங்கமலம் அவர்கள் இருவருக்கும் வேண்டிய எல்லாவசதிகளையும் செய்து கொடுத்தாள். பார்வதியும் மாணிக்கமும் தங்குவதற்கென தனியாக ஓர் அறை ஒதுக்கி கொடுத்தாள்.

மாணிக்கமும், பார்வதியும் யாருக்குமே தெரியாமல் முத்தையன்கட்டுக்கு வந்து சேர்வதற்கு கந்தசாமிதான் எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுத்தான். வேள்வி நடப்பதற்கு முதன்நாள் காலையில் அவன் திடீரென முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டு வந்து வேண்டிய ஒழுங்குகளைச் செய்தபின் மீண்டும் ஊருக்குத் திரும்பினான்.
பார்வதியும், மாணிக்கமும் அங்கு வருவார்கள் என்பதையும் அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளையும் அளிக்குமாறும் அவன் செங்கமலத்திடம் கூறியிருந்தான். அவர்கள் இருவரும் வேள்வியன்று புறப்பட்டு முத்தையன்கட்டுக்கு வந்து சேருவதற்குத்; தனது நம்பிக்கையான நண்பன் ஒருவனின் காரையும் ஒழுங்கு செய்திருந்தான். எல்லாமே அவனது திட்டத்தின்படி ஒழுங்காக நிறைவேறிவிட்டன.

பார்வதியும் மாணிக்கமும் அங்கு வந்த மறுநாளே பக்கத்துக் காணியில் உள்ளவர்கள் அவர்களிடம் வந்து அன்பாகக் கதைத்துவிட்டுச் சென்றார்கள். அங்குள்ளவர்களிடத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கவில்லை. எல்லோரும் சமமாகப் பழகினார்கள். இவையாவும் பார்வதிக்கும், மாணிக்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தன. சிறையிலிருந்து விடுதலையான கைதி ஒருவன் சுதந்திரமாக வெளியேவரும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியின் மன நிறைவோடு மாணிக்கம் பார்வதியுடன் அந்தப் பிரதேசம் முழுவதும் சுற்றிவந்தான். பாலை மரங்களில் நிறையப பழங்கள் பழுத்திருந்தன. அவற்றைப் பறித்துப் பார்வதிக்குக் கொடுத்துத் தானும் சுவைத்து மகிழ்ந்தான்.

கந்தசாமியின் தோட்டத்திலுள்ள மிளகாய்க் கன்றுகளில் பழங்கள் நிறைந்து எங்கும் செக்கச் செவேரெனக் காட்சி அளித்தன. அவற்றைப் பார்த்தபோது மாணிக்கத்திற்கு ஒரே உற்சாகமாக இருந்தது. அன்று பின்னே ரங்கூட யாரோ வியாபாரி ஒருவன் வந்து செங்கமலத்திடம் மிளகாய் வாங்கிச் சென்றான். இந்த வருடத்தில் எப்படியும் கந்தசாமிக்குப் பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத வருமானம் கிடைக்குமென மாணிக்கத்துக்கு மதி;ப்பிடக் கூடியதாக இருந்தது. கந்தசாமியின் காணியில் மேலும் இரண்டு ஏக்கருக்குக் குறையாத நிலம் செய்கை பண்ணப்படாமலே இருந்தது. அதை ஒட்டினாற்போல் இருந்த காட்டுப்பகுதியைத் துப்புரவு செய்து மேலும் நாலைந்து ஏக்கரை விவசாயப் பூமியாக மாற்றக் கூடியதாகவும் இருந்தது.

மாணிக்கத்தைச் செங்கமலம் ”அண்ணை, அண்ணை“ என வாயோயாமல் அழைத்து அவனுடன் கதைத்தாள்.

“அண்ணை, அடுத்த முறைச்செய்யைக்கு சும்மா கிடக்கிற காணியிலை நீங்களும் மிளகாய்க் கண்டுகள் வைச்சியளெண்டால் ஒரு பத்தாயிரத்துக்குப் பிழையில்லை“ என அவள் மாணிக்கத்துக்கு ஆர்வமூட்டினாள்.

வெற்றுநிலமாக இருந்த பகுதியை எவ்வாறு விவசாயக் காணியாக மாற்றவேண்டும் , எந்தப்பகுதியில் மிளகாய்க் கன்றுகள் நாட்டவேண்டும் , எங்கே வாய்க்கால் வெட்டவேண்டும், எங்கே வரம்பு கட்டவேண்டும் என்றெல்லாம் மாணிக்கம் சிந்தித்தான். தனது திட்டங்களை எல்லாம் பார்வதியிடம் கூறினான். அவன் கூறுவதையெல்லாம் பார்வதியும் ஆர்வத்துடன் கேட்டாள். சிலவேளைகளில் மாணிக்கமும் பார்வதியும் செங்கமலத்துக்கு உதவியாகக் கஙந்தசாமியின் தோட்டத்தில் வேலை செய்தார்கள்.
கந்தசாமி வேள்வி முடிந்தவுடன் ஊரிலிருந்து திரும்பி வருவதாக மாணிக்கத்திடம் கூறியிருந்தான். ஆனாலும் அவன் இதுவரை திரும்பி வராதது மாணிக்கத்திற்கு பெரும் யோசனையாக இருந்தது.

பார்வதியும் மாணிக்கமும் ; ஊரைவிட்டு ஓடிவரும்பொழுது கந்தசாமியும் கூடவே வந்தால் ஊரில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு நேராக முத்தையன்கட்டுக்குத் தேடிவந்துவிடுவார்கள் என்ற காரணத்தினாலேதான் கந்தசாமி ஊரில் தங்கிவிட்டான். அத்தோடு பார்வதியும் மாணிக்கமும் ஊரைவிட்டுப் புறப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் விஷயங்களைக் கந்தசாமி அறிந்து வருவதற்கும் வசதியாக இருக்குமென எண்ணி நண்பர்கள் இருவரும் திட்டமிட்டு, கந்தசாமி மட்டும் ஊரில் தங்கிவிட்டான்.
மாணிக்கத்துக்கு அடிக்கடி தாய் தந்தையரைப் பற்றிய எண்ணம் மனதில் எழுந்துகொண்டிருந்தது. அவர்கள் தன்னைக் காணாததால் மனந்துடித்துப் போவார்களே என நினைத்து அவன் கவலையடைந்தான். பார்வதியைக் கூட்டிவந்ததால் தனது தாய் தந்தையர்க்கும் இனத்தவருக்கும் கமக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தீங்கு இழைத்து விடுவார்களோ எனவும் இப்போது மாணிக்கத்தின் மனம் திகிலடைநத்து. கந்தசாமி ஊரிலிருந்து திரும்புவதற்கு கால தாமதம் ஏற்படுவது அவனுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது.

பார்வதியின் மனதிலும் தனது வீட்டைப்பற்றிய நினைவுகள் அடிக்கடி எழுந்தவண்ணம் இருந்தன. தன்னைக் காணாது தனது தாய் தந்தையர்கள் எவ்வாறெல்லாம் ஏங்குவார்களோஎன அவளது மனம் கவலையடைந்தது. தான் மாணிக்கத்துடன் ஓடிவந்ததனால் தாய்தந்தையரும் இனத்தவர்களும் அவமானமடைந்து என்னவெல்லாம் செய்வார்ளோ என அவள் ஏங்கினாள். தானும் மாணிக்கமும் முத்தையன் கட்டில் இருப்பதை ஊரிலுள்ளவர்கள் அறிந்தால் என்ன நேருமோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ஆனாலும், தான் மாணிக்கத்துடன் ஓடி வந்தது சரியான முடிவுதான் என அவளது மனம் திடமாக நம்பியது.

முத்தையன்கட்டுக்குப் புறப்படுவதற்கு முன் கிணற்றடியில் மாணிக்கம் அவளைச் சந்தித்போது அவளிடம் தனது தீர்மானத்தைக் கூறிய நிகழ்ச்சி பார்வதியின் நினைவில் வந்தது.

அப்போது அவள் கிணற்றடியில் உடுப்புத் தோய்க்கும் கல்லில் அமர்ந்தவாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

அவள் அங்கிருப்பதைக் கண்ட மாணிக்கம் அவளருகில் வந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும் பார்வதி கோபத்துடன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

“பார்வதி ……’

“……………’

”என்ன என்னோடை கோபமோ?“

”என்ரை கோவம் உ;னனையொண்டும் செய்யாது“

”ஏன் பார்வதி உப்பிடிச் சொல்லுறியள்? ”நான் கிணத்துக்குள்ளையிருந்து உங்களைத் தூக்கினது பிழையெண்டால் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ“

”நான் அதைப்பிழையெண்டு சொல்லேல்லை.. இவ்வளவு காலமும் என்னோடை பழகிப்போட்டுத் திடீரெண்டு ஏன் இங்கை வராமலிருப்பான் ? நான் நாலைஞ்சு நாளாய் நடக்கமுடியாமல் படுத்திருந்தன். ஒரு நாளெண்டாலும் வந்து பாக்க உனக்கு மனம் வரேல்லையோ?“

இப்படிக் கூறும்போது பார்வதியின் கண்கள் கலங்கின. குரலில் சோகத்தின் சாயல் இழையோடியது.

மாணிக்கம் கலகலவெனச் சிரித்தான்.

”இதுக்கேன் இவ்வளவு கோவம்? நீங்கள் என்னை வரச்சொல்லி யாரிட்டையெண்டாலும் சொல்லியனுப்பியிருந்தால் நான் வந்திருப்பன் தானே. உங்களுக்கு என்னை வரச்சொல்லியனுப்ப எண்ணம்; வரேல்லை. பிறகு நான் ஏன் வருவான“.

”அப்படியெல்லாம் சொல்லாதை மாணிக்கம். இவ்வளவு காலமும் நான் வரச்சொல்லியோ நீ இங்கை வந்தனி? இந்த நாலைஞ்சு நாளாய் நீ வருவாயெண்டு எதிர்பார்த்திருந்தன் … நீ வராததால் என்ரை மனம் எவ்வளவு வேதனைப்பட்டதெண்டு உனக்குத் தெரியுமோ….?

”நான் இங்கை வந்துபோறதாலை வீண் கதையெல்லாம் வருகுது. உங்களுக்கு என்னாலை கெட்ட பெயர் வாறதை நான் விரும்பேல்லை. அதனாலைதான் நான் வராமல் இருந்தனான்“.

”அப்பிடியெண்டால் இப்பவும் வராமல் இருந்திருக்கலாந்தானே“ இப்படிக் கூறிவிட்டுப் பார்வதி முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு விம்மினாள்.

”நான் இனிமேல் இங்கை வரமாட்டன் பார்வதி. இந்த ஊரை விட்டே போகப்போறன். உங்கடை கண்காணாத இடத்திலைபோய் இருக்கப்போறன்.“

”எனக்குக் கெட்டபெயரை ஏற்படுத்திப்போட்டு நீ மட்டும் கண்காணாத இடத்துக்குப்போய் நிம்மதியாய் வாழப்போறியோ?…நீ போறதாலை எனக்கு ஏற்பட்டிக்கிற கெட்;ட பெயர் நீங்கிவிடுமோ?“ இப்படிக் கூறியபோது பார்வதியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அவளது கண்களிலிருந்து பெருகும் கண்ணீரைத் துடைத்துவிடவேண்டுமென மாணிக்கத்தின் கைகள் துருதுருத்தன. ஆனாலும் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

”என்னுடைய நிலைமையிலை நான இந்த் ஊரைவிட்டு எங்கையாவது போறதுதான் நல்லதுபோலை எனக்குத் தெரியுது“.

”என்னை ஏன் கிணத்துக்கையிருந்து காப்பாத்தினனி மாணிக்கம்..? சாக விட்டிருக்கலாந்தானே… உயிரோடை வைச்சு ஏன் இப்படியெல்லாம் சித்திரவதை செய்யிறாய்?“ வார்த்தைகளை விம்மியபடி கூறினாள் பார்வதி.

”ஏன் இப்படியெல்லாம் பேசிறியள் பார்வதி… நான் இப்ப என்ன செய்யவேணும் சொல்லுங்கோ….“

”நீ போற இடத்துக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போ மாணிக்கம். இனிமேல் ஒரு நிமிசம்கூட உன்னைப் பிரிஞ்சு என்னாலை இந்த ஊரிலை இருக்கேலாது“.

பார்வதி அப்படிக் கூறுவாளென மாணிக்கம் எதிர்பார்க்கவில்லை. அவன் திடுக்கிற்று நின்றான். அவளுக்கு என்ன பதில் கூறுவதென்றே அவனுக்குத் தெரியவில்லை. எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது. அவன் மௌனமாக நின்றான்.

”மாணிக்கம் நீ என்னை இங்கை விட்டிட்டுப் போனால் நான் சத்தியமாய் இந்தக் கிணத்துக்கை குதிச்சு உயிரை விட்டிடுவன். என்னையும் நீ எங்கைவேணுமெண்டாலும் கூட்டிக்கொண்டு போ. நான் வரத்;தயாராய் இருக்கிறன“ எனக் கெஞ்சும் குரலில் கூறியபடி எழுந்து மாணிக்கத்தின் கைகளைப்பற்றிக் கொண்டாள்; பார்வதி.

”என்னோடை வாறதுக்கு நீங்கள் தயாராய் இருந்தால்- அதுக்குரிய துணிவு உங்களுக்கிருந்தால் கட்டாயம் நான் உங்களை கூட்டிக்கொண்டு போறன்“ எனக்கூறிய மாணிக்கம் பார்வதியின் பிடியிலிருந்து தன்னை மெதுவாக விலக்கிக் கொண்டான்.

”மாணிக்கம் நீ எப்ப என்னைக் கூப்பிட்டாலும் நான் உன்னோடை வரத்தயாராயிருக்கிறன்“ பார்வதி உறுதியுடன் கூறினாள்.

மாணிக்கம் அவளிடம் தனது திட்டங்கள் யாவற்றையும் விபரமாகக்; கூறினான். நண்பன் கந்தசாமியிடம் கலந்தாலோசித்துவிட்டு அவளை வந்து அழைத்துச் செல்வதாக வாக்களித்தான்.

வேள்விக்கு முதன்நாள் இரவு சின்னத்தங்கம் வீட்டினுள்ளே குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள.; மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்துத் திண்ணையில் விழித்திருந்தாள் பார்வதி. நடுச்சாமம் தாண்டியதும் வாக்களித்தபடியே மாணிக்கம் வந்து அவளை அழைத்துச் சென்றான்.

ஒழுங்கை முடக்கில் கந்தசாமியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கார் அவர்களுக்காகக்; காத்திருந்தது. அதில் இருவரும் ஏறிக்கொண்டு முத்தையன்கட்டுக்குப் புறப்பட்டார்கள்.

குளத்தங்கரையில் பறவைகளின் வேடிக்கைகளைப் பார்த்துத் தன்னை மறந்திருந்த பார்வதியின் கண்களைப்; பின்னாலிருந்து யாரோ திடீரெனப் பொத்தினார்கள். அப்படி உரிமையுடன் தனது கண்களைப் பொத்தக் கூடியவர் மாணிக்கமாகத்தான் இருக்கவேண்டும் என்ற துணிவுடன் பலமாக அந்தக் கைகளில் கிள்ளினாள் பார்வதி.

”ஆ…“ எனக் கைகளை இழுத்துக்கொண்டான் மாணிக்கம்.

காரணமின்றி இருவரும் கலகலவெனச் சிரித்தார்கள்;. மாலை மயங்கிய நேரம்? சோடிக்கொக்குகள் இரண்டும் ஒன்றையொன்று சீண்டியபடி இப்போது குளத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தன.

20.

“ஊரைவிட்டு ஓடிய காதலர்கள்’ என்ற தலைப்பில் அன்றைய தினசரியில் வெளியான செய்தியை சின்னதம்பர் பத்துத் தடவைகளுக்குக் குறையாமல் வாசித்துவிட்டார்; தனக்குத் தெரிந்தவர்கள் வாசிகசாலைக்கு வரும் போதெல்லாம் அவர் அந்தச் செய்தியை உரக்க வாசித்து விமர்ச்சித்துக்கொண்டிருந்தார். பத்திரிகையில் செய்தி வெளியான சங்கதி அறிந்ததும் அதனை வாசிக்கும் ஆர்வத்துடன் பலர் அங்கு வந்திருந்தனர். வழக்கத்துக்கு மாறாக அன்று காலை வாசிகசாலையில் அதிகமானோர் காணப்பட்டனர். துரைசிங்கம் முதலாளி, அம்பலவாணர் முதலியோரும் அங்கு வந்திருந்தார்கள்.

”அண்ணை, பேப்பரிலும் இந்தச் சங்கதி வெளிவந்திட்டுது. அதுவும் முன்பக்கத்திலை கொட்டை எழுத்திலை போட்டிட்டாங்கள். இனியென்ன எங்கடை ஊர்மானம் கொடி கட்டிப் பறக்கப்போகுது“ சின்னத்தம்பர் துரைசிங்கம் முதலாளியிடம் இப்படிக் கூறிவிட்டு, ஊர்மானம் போனதில் பெரிதும் கவலைப்படுபவர்போல முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டார்.

”ஓம் சின்னத்தம்பர், ஒரு குடும்பத்திலை நடந்த சங்கதியாலை இப்ப எல்லாருக்குந்தான் மரியாதைக்கேடு, நான் அப்பவே செல்லப்பரிட்டைச் சொன்னனான், மாணிக்கனை வீட்டிலை அடுக்கவேண்டாமெண்டு? அவர் கேட்டால் தானே. இப்ப அவன் பெட்டையையே கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்“. எனக் கூறியபடி துரைசிங்கம் முதலாளி வாசிகசாலைத் திண்ணையில் அமர்ந்தார்.

”அண்ணை, நீ செல்லப்பரைக் கூட்டிக்கொண்டு உவ்விடம் முழுதும் தேடித் திரிஞ்சாய். அப்பிடி உன்னாலை ஓடிப்போனவையளைக் கண்டுபிடிக்க முடியாமல் போச்சோ?“

”அப்பிடிச் சொல்லாதை சின்னதம்பர். நான் முன்னுக்கு வைச்ச காலை ஒரு நாளும் பின்னுக்கு வைக்கமாட்டன். என்னவிதப்பட்டும் உவன் மாணிக்கனைக் கண்டுபிடிச்சு முதுகுத் தோலை உரிக்காமல் விடமாட்டன்“.

”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் கொஞ்சமாவது விஷயம் தெரியத்தான் வேணும். அவையளை பிடிச்சு வெருட்டினால் விஷயம் தானே வெளியிலை வரும்“ என்றார் அம்பலவாணர் சிந்தனையுடன்.

”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் ஒருவேளை இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவையின்ரை ஆக்கள் ஒருதருக்கெண்டாலும் தெரியாமல் போகாது. உவங்கள் ;எல்லாரும் ஒத்து நிண்டு இந்த விஷயத்தை மறைக்கிறாங்கள். “ என்றார் சின்னத்தம்பர்.

”நாங்களும் எங்களுடைய ஒற்றுமையைக் காட்டுறதெண்டால் ஊரிலை இருக்கிற கீழ்ச்சாதிக் குடும்பங்கள் எல்லாத்தையும் குடியெழுப்ப வேணும், அவங்கள் தோட்டம் செய்யிற குத்தகைக் காணியளை மறிக்கவேணும். கள்ளுச் சீவிற பனையளை நிப்பாட்ட வேணும், அப்பதான் அவங்கள் உண்மையைச் சொல்லுவங்கள்“ என்றார் துரைசிங்கம் முதலாளி அகங்காரத்துடன்.

”நீ சொல்லுறதுதான் சரியண்ணை, நாங்கள் இப்பவே வெளிக்கிட்டு, எங்கடை ஆக்கள் எல்லாரிட்டையும் சொல்லி இவங்களுக்குக் குத்தகைக்குக் குடுத்த காணியளை மறிச்சுப்போடவேணும்“ என்றார் சின்னத்தம்பர்.

”இந்த விஷயத்திலை எங்கடை ஒற்றுமையை நாங்கள் காட்ட வேணும்“ என்றார் அம்பலவாணர் உற்சாகமாக.

அப்போது அங்கிருந்த பொன்னம்பல வாத்தியார், ”தம்பியவை, நாலையும் யோசிச்சுச் செய்யுங்கோ.. ஆத்திரத்திலை அறிவை இழக்கப்பிடாது, நீங்கள் இப்பிடிச் செய்யிறதாலை உங்களுக்குத்தான் நட்டம் வரும்“ எனக் கூறினார்.

”ஏன் வாத்தியார் அப்பிடிச் சொல்லுறியள் ? எனக் கேட்டார் சின்னத்தம்பர் சற்றுப்பலமான குரலில்.

”இவங்களோடை பகைத்தால் கூலி வேலைக்கு உங்களுக்கு ஆள் கிடையாது. நீங்கள்தான் பனையிலை ஏறிக்; கள்ளுச் சீவ வேண்டிவரும். உங்கடை தோட்டந்துரவைப் பார்க்கவும் ஆக்கள் இல்லாமல்போம்’ என்றார் பொன்னம்பல வாத்தியார் நிதானமாக.

அவர் கூறியதில் அர்த்தம் இருப்பதுபோல் அங்குள்ள பலருக்குத் தெரிந்தது.

”அப்ப வாத்தியார் இவங்கள் எங்கடை பெம்பிளையளைக் கலியாணம் முடிக்க, நாங்கள் விட்டிட்டு இருக்கிறதோ ..?“ என்றார் சின்னத்தம்பர் சற்றுக் கோபமாக.

”இதெல்லாம் சின்னத்தம்பர் காலமாற்றத்திலை நடக்கத்தான் செய்யும். அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் எங்கடை நிதானத்தை இழக்கப்பிடாது . தனிப்பட்ட ஒருத்தன்ரை விஷயத்துக்காக ஒரு சமூகத்தைப் பழிவாங்கப்பிடாது“.

”மாஸ்டர் சொல்லிறதும் சரிதான். நாங்கள் அவசரப்பட்டு ஒண்டும் செய்யப்பிடாது “ என்றார் அங்கிருந்த கந்தையா.

”எப்பிடி இருந்தாலும் இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்கத்தான் வேணும்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.

”துரைசிங்கண்ணை, உங்கடை காணியிலைதானே கோவிந்தன் கமம் செய்யிறான். உடனை காணியை மறிச்சுப் போடுங்கோ. பத்துநாள் தவணைக்குள்ளை உண்மை சொல்லாட்டில,; குடியிருக்கிற காணியிலையிருந்து எழுப்பிப் போடுங்கோ. இதுதான் இதுக்குச் சரியான வழி“ என முடிவாகக் கூறினார் சின்னத்தம்பர்.

எல்லோருக்குமே அது சரியான வழியாகத்தான் பட்டது. பொன்னம்பல வாத்தியார் இனி அவர்களோடு பேசுவதில் பிரயோசனமில்லை என நினைத்து மௌனமாக அவ்விடத்தை விட்டகன்றார்.

”சரி இதுவும் நல்ல யோசினைதான் , நான் இப்பவே போய் கோவிந்தனிட்டைச் சொல்லிக் காணியை மறிச்சுப் போடுறன்“ எனக் கூறிக்கொண்டு எழுந்திருந்தார் துரைசிங்கம் முதலாளி.

அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், சீட்டு விளையாடுவதற்;காக எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொண்டார்கள்.

”என்ன ஐஸே அம்பலவாணர் , நீர் உம்மைப் பார்வதி “லவ்’ பண்ணிறதாகச் சொன்னீர், அவள் கீழ்ச்சாதிக் காரனையெல்லோ “லவ்’ பண்ணியிருக்கிறாள்’ என்றார் சின்னத்தம்பர் கேலியாக.

பக்கத்திலிருந்த கந்தையா, ”அது பார்வதி இவரை லவ் பண்ணேல்லை. இவரல்லோ முன்னுக்கும் பின்னுக்கும் திரிஞ்சவர்“ எனக் கூறினார். அம்பலவாணர் இப்போது சின்னத்தம்பரிடம் வகையாக மாட்டிக்கொண்டார் அங்கிருந்தவர்கள் அவரைக் கேலிசெய்த போது அவருக்குப் பெரும் அவமானமாக இருந்தது. உண்மையில் பார்வதி தன்மேல் அன்பு வைத்திருப்பதாக அவர் நினைத்திருந்தார். அவள் மாணிக்கத்தோடு ஊரைவிட்டே ஓடிவிடுவாளெனஅவர் கனவிலும் கருதியதில்லை.

”காத்திருந்தவன்; பெண்டிலை நேற்று வந்தவன் கொண்டு போன கதை மாதரியெல்லோ முடிஞ்சுபோச்சு ‘ என்றார் சின்னத்தம்பர் அம்பலவாணரைச் சீண்டிவிடும் எண்ணத்துடன்.

எல்லோரும் பலமாகச் சிரித்தனர்.

”சும்மா விளல்;கதை பேசாதையுங்கோ , உப்பிடி யெண்டால் நான் ‘காட்ஸ்;’ விளையாட வரமாட்டான்“ என கையிலிருந்த சீட்டுக்களை நிலத்தில் வீசிவிட்டு கோபமாக எழுந்திருந்தார் அமபலவாணர்.

”ஐஸே, கோவப்படாதையும?; சும்மா விளையாட்டுக்கு தானே… “ எனக்கூறி அம்பலவாணரின் கைகளைப் பிடித்து அமர்த்தி சமாதானம் செய்தார் கந்தையா.

“காட்ஸ்’ விளையாட்டு ஆரம்பமாகியது.

– தொடரும்…

– புதிய சுவடுகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *